9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 9th Standard Social Science Tamil Medium Important questions 2019-2020 )
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
சமூகச் சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
சட்ட சமத்துவம்
2.
உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு
கனடா
இந்தியா
அமெரிக்க ஐக்கிய
சீனா நாடுகள்
3.
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்
நாடாளுமன்றம்
மக்கள்
அமைச்சர் அவை
குடியரசு தலைவர்
4.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்ஸ்
வாட்டிகன்
5.
முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
சிறுகுழு ஆட்சி
மதகுருமார்களின் ஆட்சி
மக்களாட்சி
தனிநபராட்சி
6.
மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.
புத்தர்
மகாவீரர்
லாவோட்சே
கன்ஃபூசியஸ்
7.
வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது
மஹாஜனபதங்கள்
கனசங்கங்கள்
திராவிடம்
தட்சிணபதா
8.
_______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது
இடைப்பட்ட திரள் மேகங்கள்
இடைப்பட்ட படை மேகங்கள்
கார்படை மேகங்கள்
கீற்றுப்படை மேகங்கள்
9.
அனைத்து வகை மேகங்களும் _______________ ல் காணப்படுகிறது
கீழடுக்கு
அயன அடுக்கு
இடையடுக்கு
மேலடுக்கு
10.
_______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
சூரியன்
சந்திரன்
நட்சத்திரங்கள்
மேகங்கள்
11.
_______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
வெளியடுக்கு
அயன அடுக்கு
இடையடுக்கு
மீள் அடுக்கு
12.
________ உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.
ஹீலியம்
கார்பன் – டை ஆக்சைடு
ஆக்சிஜன்
மீத்தேன்
13.
காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?
கரிகாலன்
முதலாம் இராஜராஜன்
குலோத்துங்கன்
முதலாம் இராஜேந்திரன்
14.
கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?
ஆசியா
தக்காண பீடபூமி
குலு பள்ளத்தாக்கு
மெரினா கடற்கரை
15.
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________
கடல் அலை அரித்தல்
ஆற்று நீர் அரித்தல்
பனியாறு அரித்தல்
காற்றின் படியவைத்தல்
16.
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்
பனியாறு
காற்று
கடல்அலைகள்
நிலத்தடி நீர்
17.
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது
வானிலைச் சிதைவு
அரித்தல்
கடத்துதல்
படியவைத்தல்
18.
கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
19.
பின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்
பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்
சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்
பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்
20.
சுமேரியரின் எழுத்துமுறை ______ ஆகும்
பிக்டோகிராபி
ஹைரோகிளிபிக்
சோனோகிராம்
க்யூனிபார்ம்
21.
புவி அதிர்வு உருவாகும் புள்ளி _____________ என்று அழைக்கப்படுகிறது.
மேல்மையம்
கீழ்மையம்
புவி அதிர்வு அலைகள்
புவி அதிர்வின் தீவிரம்
22.
புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும்
மடிப்பு
பிளவு
மலை
புவிஅதிர்வு
23.
பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு _____________ .
புவிமேலோடு
கவசம்
கருவம்
மேற்கண்ட எதுவுமில்லை
24.
புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.
கருவம்
வெளிக்கரு
கவசம்
மேலோடு
25.
கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை .
26.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
பிறைநிலப் பகுதி
ஸோலோ ஆறு
நியாண்டர் பள்ளத்தாக்கு
27.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
கொரில்லா
சிம்பன்ஸி
உராங் உட்டான்
பெருங்குரங்கு
28.
கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
29.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
30.
சுண்ணாம்பு பாறைப் பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?
31.
மழைப்பொழிவின் வகைகள் யாவை?
32.
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ந்தும், வறட்சியாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?
33.
வெப்பத்தை அளக்கும் அளவைகள் யாவை?
34.
அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?
35.
மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.
36.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
37.
தமிழ் அரசர்கள் மௌரிய அரசின் அதிகாரத்துக்கு உட்படாமல் இருந்தார்கள் – இந்தக் கூற்றுக்கு உன் விளக்கம் என்ன?
38.
காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடு.
39.
இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக
40.
சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.
41.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக
42.
விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு
43.
சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
44.
நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக
45.
இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிலைமைகளை விளக்குக
46.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு
47.
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு
48.
காற்று படியவைத்தல் செயலினை விவரி.
49.
புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.
50.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
51.
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
52.
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக
53.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக
1.
(a)
சமூகச் சமத்துவம்
2.
(b)
இந்தியா
3.
(a)
நாடாளுமன்றம்
4.
(d)
வாட்டிகன்
5.
(d)
தனிநபராட்சி
6.
(b)
மகாவீரர்
7.
(a)
மஹாஜனபதங்கள்
8.
(a)
இடைப்பட்ட திரள் மேகங்கள்
9.
(a)
கீழடுக்கு
10.
(a)
சூரியன்
11.
(c)
இடையடுக்கு
12.
(c)
ஆக்சிஜன்
13.
(a)
கரிகாலன்
14.
(b)
தக்காண பீடபூமி
15.
(a)
கடல் அலை அரித்தல்
16.
(d)
நிலத்தடி நீர்
17.
(a)
வானிலைச் சிதைவு
18.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை
19.
(c)
சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்
20.
(d)
க்யூனிபார்ம்
21.
(b)
கீழ்மையம்
22.
(b)
பிளவு
23.
(b)
கவசம்
24.
(b)
வெளிக்கரு
25.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை .
26.
(b)
பிறைநிலப் பகுதி
27.
(b)
சிம்பன்ஸி
28.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
29.
1. சர்வாதிகரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை நமக்கு இருக்காது. ஏனென்றால் சர்வாதிகாரி என்பவர் சகல அதிகாரங்கள் கொண்டுள்ளவராக இருப்பார்.
2. அத்தகைய நாட்டில் பொதுமக்களின் கருத்துக்கு எந்தவித முக்கியத்துவம் இருக்காது. அவர்களின் கருத்து மதிக்கப்படாது.
30.
சுண்ணாம்பு பாறையில் கால்சியம் கார்பனேட் அதிக அளவில் உள்ளது. அது நீரில் கரையக்கூடியது. ஆகவே கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து விடுகிறது.
31.
(i) வெப்பச் சலன மழைப்பொழிவு (Conventional Rainfall)
(ii) சூறாவளி மழைப் பொழிவு(Cyclonic Rainfall (or) Front and Rain fall)
(iii) மலைத் தடுப்பு மழைப் பொழிவு Orographic Rainfall)
ஆகியன மழைபொழிவின் பல்வேறு வகைகள் ஆகும் .
32.
துருவ உயரழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த வறண்ட காற்றுகள் துருவக் கீழைக் காற்றுகள் எனப்படுகின்றன. இவை வட அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்த காற்றுகளாகும்.
33.
வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு ஆகும். இது ஃபாரன்ஹீட் மற்றும் செல்சியஸ் போன்ற அலகினால் அளக்கப்படுகிறது.
34.
(i) பிம்பிசாரரின் புதல்வரான அஜாதசத்ரு பொ.ஆ.மு. 493இல் தனது தந்தையைக் கொன்றுவிட்டு அரியணை ஏறினார்.
(ii) இராணுவ வெற்றிகளின் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையை இவரும் பின்பற்றினார்.
(iii) மகதத்தின் தலைநகரான ராஜகிருஹக் கோட்டையை வலுப்படுத்திய அதே வேளையில் கங்கைக்கரையில் பாடலிகிராமத்தில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்.
35.
மும்மணிகள் (திரி - ரத்னார் என்று அழைக்கப்படும். சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகள்
1.நன்னம்பிக்கை
2. நல்லறிவு
3. நன்னடத்தை
நன்னம்பிக்கை : மகாவீரரின் போதனைகளில், ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்
நல்லறிவு : கடவுள் இல்லை, உலகம் படைத்தவன் இன்றியே இயங்கி வருகிறது. அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்பது.
நன்னடத்தை : இது மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பதைக் குறிப்பது.
அவையாவன.
1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தலாகாது.
2. நேர்மையுடன் இருப்பது
3.கருணை
4. உண்மையுடன் இருப்பது
5. பிறருடைய உடைமைகளுக்கு ஆசைப்படாமல் வாழ்வது.
36.
(i) கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
ii) ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலை கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
(iii) மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருட்களும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின.
(iv) தங்கம், வெள்ளி, செம்பு,உள்ளிட்ட உலோகங்கள் இறக்குமதி ஆயின.
37.
தற்காலத்திய ஒடியா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படும் அசோகரது கல்வெட்டுகள் தமிழகத்திலும் கேரளத்திலும் காணப்படவில்லை. எனவே மௌரியர்களின் மேலாட்சிக்கு உட்படாத சுதந்திரமான ஆட்சியாளர்களாகத் தமிழக வேந்தர்கள் விளங்கினார்கள். இதை அசோகரின் கல்வெட்டுச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.
38.
காற்று அரித்தலால் உருவாக்கப்படும் நிலத் தோற்றங்கள் காளான் பாறை (Mushroom Rock), இன்சல்பர்க் (Inselberg), மற்றும் யார்டங் (Yardarg) போன்றவையாகும்.
39.
இந்தியாவில் உள்ள சுண்ணாம்புப் பாறை பிரதேசங்கள்:
(i)மேற்கு பீஹார் - குப்ததாம் குகைகள்.
(ii)உத்தர்காண்ட் - ராபர்ட் குகை மற்றும் தப்கேஷ்வர் கோவில்.
(iii)மத்தியப்பிரதேசம் - பச்மாரி மலைகள், பாண்டவர் குகைகள்
(iv)சத்திஸ்கர் (பஸ்தர்) - குடும்சர் குகைகள்.
(v)அந்திர பேரதேசம் (விசாகப்பட்டினம்) - போரா குகைகள்.
40.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனபெருஞ்சுவர் வடக்கிலிருந்து ( மங்கோலியர்களிடமிருந்து ) வரும் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட மிகப்பெரும் முயற்சியாகும்.குவின் ஷி ஹீவாங் படையெடுப்புகளைத் தடுப்பதற்காக அதற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த ஏராளமான பழைய கோட்டைச் சுவர்களை இணைத்தார்.
41.
i.எகிப்தியர், கட்டடக் கலையிலும் பல்வேறு கலை வண்ணங்களிலும் சிறப்பு உடையவர்கள்.
ii. எகிப்தில் காணப்படும் எண்ணற்ற சிற்பங்கள், ஓவியங்கள், படைப்புகள், எகிப்தியர்களின் கலை ஆற்றலுக்கு சான்றாகும்.
பிரமிடு:
i.பாரோக்களின் சமாதிகளாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் பிரமிடுகள் ஆகும்.
ii.கெய்ரோவிற்கு அருகில் உள்ள பிரமிடுகள், கிஸா பிரமிடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ஸ்பிங்க்ஸ்:
i.உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று ஸ்பிங்க்ஸ்
ii.இவற்றின் பிரம்மாண்டமான சிலை சிங்க உடலும் மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம்.
42.
விலங்குகளைப் பழக்குதல் இணங்கிவாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உருவாகி இருக்கலாம்.நாய்கள் தான் முதலில் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் பொ.ஆ .மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன. சுமேரிய நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுத்தப்படன. புதிய கற்கால மெஹர்கரில் ஆடுகள், மாடுகள் பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
43.
இன்றைய நவீன வாழ்விற்கான அடித்தளம் தொல்பழங்காலத்தில் இடப்பட்டு,நமது முன்னோர்களின் அறிவாற்றலால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டதாகும். தொல்பழங்கால மக்கள் உருவாக்கிய செய்பொருட்கள், மொழிகள் ஆகியவற்றின் வழியாக அவர்கள் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது .
எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் புலனாற்றல்களால் அறிவையும்,புரிதலையும் பெறும் மனதின் செயல்பாடு அறிவாற்றல் என்று சொல்லப்படுகிறது. இது மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது.
44.
வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும். இவை நிலவும்காற்று' அல்லது நிலையான காற்று (Prevailing Winds) எனவும் அழைக்கப்படுகிறது. 'வியாபாரக்காற்றுகள்' (Trade Winds) 'மேலைக்காற்றுகள் (westerlies) மற்றும் 'துருவகீழைக்காற்றுகள்' (Polar Easterlies) கோள் காற்றுகள்' ஆகும்.
அ) வியாபாரக்காற்றுகள்:
(i) வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று 'வியாபாரக்காற்று' எனப்படும்.
(ii) இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும், அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன. வியாபாரிகளின் கடல்வழி பயணத்திற்கு இக்காற்றுகள் உதவியாக இருந்ததால் இக்காற்று 'வியாபாரக்காற்று' என அழைக்கப்படுகின்றது.
(iii) இக்காற்று பெருங்கடல்களில் பயணிக்கும்போது அதிக ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கண்டங்களின் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெறுகின்றன. மேலும் இக்காற்று மேற்கு நோக்கி நகரும் போது வறண்டுவிடுவதால் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவைத் தருவதில்லை.
ஆ) மேலைக்காற்றுகள்:
(i) மேலைக் காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட, தென்அரைக்கோளங்களின் வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.
(ii) இவை வட அரைக்கோளத்தில் தென்மேற்கிலிருந்து, வடகிழக்காகவும், தென்அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காகவும் வீசுகின்றன.
(iii) மேலைக் காற்றுகள் மிகவும் வேகமாக வீசக்கூடியவை, எனவே, இக்காற்றுகள் 40" "கர்ஜிக்கும் நாற்பதுகள்" எனவும் 50° அட்சங்களில் "சீறும் ஐம்பதுகள் எனவும் 60° அட்சங்களில் "கதறும் அறுபதுகள்" எனவும் அழைக்கப்படுகிறது.
இ) துருவ கீழைக்காற்றுகள்:
(i) துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த, வறண்ட காற்றுகள் துருவ கீழைக்காற்றுகள் எனப்படுகின்றன.
(ii) இவை வடஅரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தென்அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்தக் காற்றுகளாகும்
45.
1. ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின் பலன்கள் கிடைக்கச் செய்ய அதிகாரம் அளித்தல்.
2. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும். பொதுச் சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
3. மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூகத் தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்.
4. மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பாரபட்சமற்ற, திறமை மிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்.
5. பொது மக்களின் கருத்து வலுவாக இருத்தல்.
6. மக்களிடையே சகிப்புத்தன்மையும் மத நல்லிணக்கமும் நிலவுதல்.
7. அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்,
8. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
9. வலுவான பொறுப்பு மிக்க எதிர்க் கட்சி இருத்தல்.
46.
தத்துவமும், இலக்கியமும்:
(i) லாவோ ட் சு கன்பூசியஸ், மென்சியஸ், மோ டி தாவோ சின் போன்ற தத்துவ ஞானிகளும்,சீனக் கவிஞர்களும் நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள்.
(ii) இராணுவ உத்தியாளரான சன் ட்டி 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்.
(iii) 'தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ்' (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
(iv) மஞ்சள் பேரரசரின் 'கேன்ன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) எ நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத் முறைப்படுத்தப்பட்டது.
(v) லாவோட்சு கி.மு.(பொ.ஆ.மு. 604 -52) சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாள இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். 'ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கு மூலகாரணம்' என்று இவர் வாதிட்டார்.
(vi) கன்பூசியஸ் கி.மு. பொ.ஆ.மு 551 -497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி, அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர்திருத்துவதை வலியுறுத்தினார்.
(vii) மென்சியஸ் மு. முபா. ஆமு - 372 -289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.
47.
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்
1. மனிதத்தன்மை
2. நேர்மை
3. நன்னடத்தை
4. மெய்யறிவு
5. நம்பகத்தன்மை
(i) மெய்யறிவு குடும்பத்திலிருந்து தான் வளரும் என்றார் கன்பூசியஸ்.
(ii) ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்க தனிநபர் தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார். அவரைப் பொறுத்தவரை மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல், முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
(iii) கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார்.
(iv) குழந்தைகள் பெற்றோருக்கும், மனைவி கணவனுக்கும் கீழ்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும், "உத்தரவு தவறு என்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், دو ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்' என்று தெளிவாக கூறினார்.
(v) 'ஒரு அரசுக்கு மூன்று விசயங்கள் அவசியமானவை, நாட்டில் போதுமான உணவு, இராணுவத் தளவாடங்கள் மற்றும் மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்” என்றார்.
48.
மணல் குன்று, பர்கான் மற்றும் காற்றடி வண்டல் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஆகும்.
மணல் மேடு (Sand dune):
பாலைவனங்களில் வீசும் மணல்புயல் மிக மிக அதிக அளவில் மணலைக் கடத்துகின்றன. காற்றின் வேகம் குறையும்போது கடத்தப்பட்ட படிவுகள் மிக அதிக அளவில் குன்று போல் படிய வைக்கப்படுகின்றது. இவ்வாறு குன்று அல்லது மேடாகக் காணப்படும் நிலத் தோற்றம் மணல்மேடு எனப்படுகிறது. மணல் மேடுகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(i)பர்கான் (Barchan):
பிறை வடிவத்தில் தனித்துக் காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் என அழைக்கப்படுகின்றன. அவை காற்று வீசும் பக்கத்தில் மென் சரிவையும், காற்று வீசும் திசைக்கு எதிர் பக்கத்தில் வன் சரிவையும் கொண்டிருக்கும்.
(ii) குறுக்கு மணல்மேடு (Transverse dune):
குறுக்கு மணல்மேடுகள் சமச்சீரற்ற வடிவத்தில் காணப்படும். காற்று வேகமாகவும், மிதமாகவும் மாறி, மாறி ஒரே திசையில் வீசும் போது குறுக்கு மணல் மேடுகள் உருவாகின்றன.
(iii) நீண்ட மணல் மேடுகள் (Longiitudinal dune):
நீண்ட மணல் மேடுகள் குறுகிய மணற் தொடர்களாக நீண்டு காணப்படும். இம்மணற் தொடர்கள் காற்று வீசும் திசைக்கு இணையாகக் காணப்படும் இவை சகாராவில் செய்ப்ஸ் ( Seifs ) என்று அழைக்கப்படுகிறது.
(iv) காற்றடி வண்டல் (Loess):
பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான மற்றும் நுண்ணியப் படிவுகளே காற்றடி வண்டல் எனப்படும். காற்றடி வண்டல் காணப்படும் இடங்கள் - வடக்கு மற்றும் மேற்கு சீனா, அர்ஜென்டைனாவின் பாம்பாஸ், உக்ரைன் மற்றும் வட அமெரிக்காவில் மிசிசிபி பள்ளத்தாக்கு.
49.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்களை உருவாக்குவதிலும், மறு உருவாக்கம் செய்வதிலும் இரண்டு முதன்மைச் செயல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை, அகச் செயல்முறைகள் மற்றும் புறச்செயல்முறைகள் ஆகும்.
அ) அகச்செயல்முறைகள்:
(i) புவியின் உட்பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயல்படும் விசைகளே 'அகச்செயல் முறைகள்' எனப்படுகின்றன.
(ii) இவ்விசைகள் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன.
(iii) புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவிமேலோட்டின் கீழ் காணப்படும் பொருள்கள் வெளித்தள்ளப்படுகின்றன. இச்செயல்பாட்டில் புவியின் உள்ளே உள்ள கதிர்வீச்சு முக்கியப் பங்காற்றுகின்றது.
ஆ) புவிப்புறச் செயல்முறைகள்
(i) இச்செயல் முறைகள் புவியில் உள்ள பொருள்களின் மீது அழுத்தத்தையும், மறு உருவாக்கத்தையும் ஏற்படுத்தி புவிமேற்பரப்பில் உள்ள பொருள்களின் மீது மாற்றத்தை உண்டாக்குகின்றன. இவை 'புவிப்புறச் செயல்முறைகள்' எனப்படுகின்றன.
(ii) புவியின் மேற்பரப்பில் செயல்படும் இயற்கைக் காரணிகளான ஆறுகள், பனியாறுகள், காற்று, அலைகள் போன்ற விசைகள் 'புவிப்புறச் செயல்முறை' காரணிகள் எனப்படுகின்றன. இக்காரணிகள் நிலத்தின் மேற்பரப்பினை அரித்து தாழ்நிலச் சமவெளிகளில் படிய வைத்து அவற்றை உயர்த்துகின்றன.
50.
அ) விவசாயம் (அல்லது) வேளாண்மை:
1. இரும்புக் கால மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டார்கள்.
2.ஆடு மாடுகளையும் வளர்த்தார்கள்.
3.தினையும் நெல்லும் பயிரிடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் தான் பாசன நிருவாகம் மேம்பட்டது.
4.ஏனெனில் பல பெருங்கற்கால இடங்கள், நதிகள், குளங்களுக்கு அருகே இருந்தன ஆற்றுப்படுகைகளில் பாசன தொழில்நுட்பம் வளர்ந்தது.
ஆ) மட்பாண்டங்கள்:
1.தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமான சான்று மட்பாண்டங்களாகும்.
2.இரும்புக்கால, சங்ககால மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களை மட்பாண்டங்களுக்குப்
பயன்படுத்தினார்கள்.
3.மட்பாண்டங்கள் சமையல், பொருள்களைச் சேமிப்பதற்கு, சாப்பிடுவதற்கு எனப் பயன்படுத்தப்பட்டன.
4.கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கறுப்பாகவும் வெளியே சிவப்பாகவும் காணப்படும். வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும்.
இ) உலோகக் கருவிகள்:
1.பெருங்கற்காலக் கல்லறைகளில் ஈமப் பொருட்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள்
வைக்கப்பட்டுள்ளன.
2.வாள், குறுவாள் போன்ற கருவிகள், கோடரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
3.இப்பொருட்களில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரம் அல்லது கொம்பாலான கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது.
4.இரும்புக் கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடுதலுக்கும், உணவு சேகரிப்பதற்கும், போர்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.
5. வெண்கலக் கிண்ணங்கள், விலங்கு, பறவை உருவங்களால் அணிவேலைப்பாடு செய்யப்பட்ட கலங்கள், வெண்கலத்திலான முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
51.
52.
| நேரடி மக்களாட்சி | மறைமுக மக்களாட்சி |
|---|---|
| பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவு எடுக்கக் கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். | பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே மறைமுக மக்களாட்சி என்றழைக்கப்படுகிறது. |
| (எ.கா.) பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து | (எ.கா.) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து |
53.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards