9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/02/2019
Term 3 Full Study Material 2019
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர்கொள்வதோடு தொடர்புடையது?
காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.
கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.
கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமன்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேணாடம்.
2.
மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.
மக்கள்தொகையியல்
புற வடிவமைப்பியல்
சொல்பிறப்பியல்
நிலநடுக்கவரைவியல்
3.
நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்
முறைக்குறியீடுகள்
இணைப்பாய புள்ளிகள்
வலைப்பின்னல் அமைப்பு
திசைகள்
4.
வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்
இராமநாதபுரம்
கோயம்புத்தூர்
சென்னை
வேலூர்
5.
இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
கம்பு
கேழ்வரகு
சோளம்
தென்னை
6.
1896 இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.
நான்கு
ஐந்து
மூன்று
ஆறு
7.
73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.
1992
1995
1997
1990
8.
எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது
உருட்டாலைகள்
பஞ்சுக் கடைசல் இயந்திரம்
ஸ்பின்னிங் மியூல்
இயந்திர நூற்புக் கருவி
9.
சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?
எப்.டி. ரூஸ்வெல்ட்
ஆண்ட்ரூ ஜேக்சன்
வின்ஸ்டன் சர்ச்சில்
உட்ரோ வில்சன்
10.
தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்
இயல்பறிவு
மனித உரிமைமைகள்
உரிமைமைகள் மசோதா
அடிமைத்தனத்தை ஒழித்தல்
11.
_____ மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.
12.
பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் _____________ ஆவார்.
13.
பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் ________________ ஆவர்.
14.
________ உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கபடும் முறையை மாற்றியமைத்தது.
15.
சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்தியதால் _________ கில்லட்டினால் கொல்லப்பட்டார்.
16.
புவன் (BHUVAN), அறிவியல் அறிஞர்கள், கொள்கை வகுப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக அதிக அளவில் பயன்படுகிறது என்பதை நியாயப்படுத்துக.
17.
கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.
18.
இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக;
19.
வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
20.
ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.
21.
ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.
22.
1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.
23.
நிலநடுக்கத்தின்போது கண்ணாடிச் சில்லுகளுடன் கூடிய கட்டடங்களிலிருந்து விலகியிருக்கவேண்டும். ஏன் ?
24.
பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.
25.
ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?
26.
தொலை நுண்ணுர்வின் கூறுகள் யாவை?
27.
நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?
28.
பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை?
29.
இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.
30.
செப்டம்பர் படுககொலை பற்றி ஒரு குறிப்பு வரைக.
31.
பிரெஞ்சு புரட்சியின்போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?
32.
உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிருப்பு வகைகளை பற்றி எழுதுக
33.
ஜப்பானில் மிக அதிக அடர்த்தியில் நிலநடுக்க வலை காணப்பட்டாலும் இந்தோனேசியாவில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஏன்?
34.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?
35.
வரையறு.
அ) மக்கள்தொகை வளர்ச்சி
ஆ) மக்கள்தொகை கணக்கெடுப்பு
இ) வளம் குன்றா வளர்ச்சி
36.
உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப் பணிகள் யாவை?
37.
இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான காரணங்களைளைக் கூறு.
38.
ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகறை எழுதுக.
39.
ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை.
40.
நிலவரைபடப் புத்தகத்தைக் (Atlas) கொண்டு தமிழ்நாடு புறவரி நிலவரைபடத்தில் கீழ்க்காண்பவைகளைக் குறிக்கவும்.
அ) சென்னை நகரின் அட்ச, தீர்க்க பரவல்.
ஆ)10°வ, மற்றும் 78°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
இ)11°வ, மற்றும் 76°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
ஈ) கன்னியாகுமரியின் அட்சதீர்க்க பரவல்.
41.
கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
1. ஒரு பெருநகரம்.
2. சதுர கி.மீ.-ரில் 7857 மக்கள் வாழும் ஒரு மாவட்டம்.
3. மன்னார் வளைகுடா.
4.பாக் நீர்ச் சந்தி.
1.
(c)
கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமன்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
2.
(a)
மக்கள்தொகையியல்
3.
(a)
முறைக்குறியீடுகள்
4.
(c)
சென்னை
5.
(d)
தென்னை
6.
(a)
நான்கு
7.
(a)
1992
8.
(b)
பஞ்சுக் கடைசல் இயந்திரம்
9.
(b)
ஆண்ட்ரூ ஜேக்சன்
10.
(a)
இயல்பறிவு
11.
( )
பெர்லின் குடியேற்ற நாட்டு
12.
( )
செயல் அலுவலர்
13.
( )
பிரதம மந்திரி
14.
( )
ஜான் லவுடன் மெக்ஆடாமல் வடிவமைக்கப்பட்ட சாலை அமைக்கும் முறை
15.
( )
ஹெர்பர்ட்
16.
புவன்:
1. புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'புவி' என்று பொருள்.
2. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (ISRO) 2009 ஆம் ஆண்டு இலவச இணையதளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
3. இதன் மூலம் இந்திய தொலைநுண்ணுணர்வு செயற்கைக்கோளானது சில வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் பதிமங்களை ஆராய இயலும்.
4. இந்த செயற்கைக் கோள் படங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஏழு செயற்கைக்கோள்களின் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் அடங்கும்.
5. புவன் மூலம் ஒருவர் விரும்பிய இடங்களையோ அல்லது உலகின் எந்தப்பகுதியையோ அட்ச. தீர்க்கப் பரவலைக் கொண்டு ஆராய்ந்து அறியலாம்.
புவனின் நன்மைகள்:
1. புவன் தனது முப்பரிமாண அமைவு மூலம், புவி உண்மையாகவே அண்டவெளியில் சுழல்வதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.
2. மாணவர்கள், அறிவியல் மற்றும் பல்வேறு இடங்களின் வரலாறு போன்ற பலவகையான பாடங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
3. இயற்கை வளங்கள். பேரிடர்கள் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிப்பதில் மிகவும் உறுதுணையாக உள்ளது.
4. ஆட்சியாளர்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உதவுகிறது.
17.
கிராமக் குடியிருப்புகள்:
முதன்மைத் தொழில்களான வேளாண்மை, வனத்தொழில், கனிமத் தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகிறது.
இவை நிலைத்த நிரந்தரக் குடியிருப்புகளாகும்.
இவைகளின் தனித்தன்மை அதைச் சுற்றியிருக்கும் பரந்த பசுமையும் மாசற்ற சுற்றுச் சூழலும் ஆகும்.
கிராமக் குடியிருப்பு வகைகள்:
1. செவ்வகவடிவக் குடியிருப்புகள்
2. நேர்கோட்டுக் குடியிருப்புகள்
3. வட்டவடிவ அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள்
4. நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள்
6. T வடிவ. Y வடிவ, சிலுவை வடிவ (அ) குறுக்கு வடிவ குடியிருப்புகள்
7. மூலக்கரு வடிவக் குடியிருப்புகள்
1. செவ்வக வடிவக் குடியிருப்புகள்:
சம வெளிப் பகுதிகளிலும் , பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும்.
இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் வெல்லும்.
2. நேர்க்கோட்டு குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப்பாதை ,ஆற்றங்கரை மற்றும் அணைக்கட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.
3. வட்ட வடிவ குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள் குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன .
4. நட்சத்திர வகை குடியிருப்புகள்:
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது கப்பியிடப்படாத சாலை அமைப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன,
இவை நட்சத்திர வடிவத்தில் எல்லா திசைகளிலும் பரவிக் காணப்படும்.
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள் :
ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.
6. T வடிவ Y வடிவ சிலுவை வடிவ குறுக்கு வடிவக் குடியிருப்புகள் :
T வடிவ குடியிருப்புகள் மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் வளர்ச்சியடையும்.
Y வடிவக் குடியிருப்புகள் இரண்டு சாலைகள் காணப்படுகிறது.
குறுக்கு வடிவக் குடியிருப்புகள் நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படுகின்றன.
7. முலக்கரு வடிவக் குடியிருப்புகள் :
இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிய கூடியதாகவும் இருக்கும்.
கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ ஆழ்ந்து மசூதி , கோவில் தேவாலயங்களைச் சுற்றியுள்ள அமைந்திருக்கும்.
18.
மணி : மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுவது ஏன்?
ரவி : பிறப்பு, இறப்பு மற்றும் இடம் பெயர்தலின் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது.
மணி : இடப்பெயர்வு என்றால் என்ன?
ரவி : ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மனிதர்கள். விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெயரும் நிகழ்வு இடப்பெயர்வு ஆகும்.
மணி : மனிதர்கள் ஏன் இடம் பெயர்கின்றனர்?
ரவி : மனிதர்கள் வேலை. கல்வி, திருமண வாழ்வு மற்றும் பல காரணங்களுக்காக பெயர்கின்றனர்.
மணி : இடப்பெயர்வு எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?
ரவி : பிறப்பிடம் அடிப்படையிலும் வாழிடம் அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.
மணி : தமிழ்நாட்டின் இடப்பெயர்வு பற்றி சற்று விளக்கமாக கூறுங்களேன்?
ரவி : 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடியாகும்
அவர்களில் 3.13 கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்களாவர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களைவிட மக்களின் நகர்வு கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
பெண்களில் 53% என்றும் ஆண்களில் 23% என்றும் கணக்கிடப்பட்டுள்ளன.
மணி : பெண்களின் இடப்பெயர்வு அதிகமாக இருக்கக் காரணம் என்ன?
ரவி : திருமணமும் திருமணம் சார்ந்ததும் பெண்களின் இடப்பெயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
மணி : தமிழ்நாட்டில் எங்கு அதிக இடப்பெயர்வு நிகழ்கின்றது?
ரவி : சென்னை மாவட்டம்.
மணி : வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றி கூறுங்களேன்?
ரவி : தமிழ்நாட்டின் மொத்த இடப் பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
அவர்களில் 20% சிங்கப்பூரிலும் 18% ஐக்கிய அரபு எமிரேட்டிலும், 16% சவுதி அரேபியா மற்றும் 13% பேர் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.
மேலும் மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா. குவைத், கத்தார். ஓமன் ஆகிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.
மணி : உலகில் எந்த இரு நாடுகளுக்கிடையே இடப்பெயர்வு அதிகம் நிகழ்கிறது?
ரவி : மெக்ஸிகோ அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
மணி : தமிழ்நாட்டின் இடப்பெயர்தல் அளவை எவ்வாறு குறைக்கலாம்?
ரவி : ஏழ்மையை அகற்றுதல்.
வளர்ச்சித் திட்டங்கள்.
மற்றும் பாதுகாப்பு அளித்தல் மூலம் இடம் பெயர்தலைக் குறைக்கலாம்.
19.
1. தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
2. நிலத்தடி நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்கவல்லது.
3. நிலத்தடியிலிருந்து நீரை எடுக்கும் அளவும் மழைப் பொழிவின் போது நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவும் சமமாக இருந்தால் துன்பமில்லை.
4. மாறாக நிலத்தடி நீரை எடுக்கும் அளவு கூடக்கூட நீர்மட்டம் கீழே செல்லும். ஒன்று நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறவும் வாய்ப்புண்டு.
5. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தொடர்ந்து கண்காணிக்கிறது.
6. நீர் பயன்பாடு அளவைக் கொண்டு ஊராட்சி ஒன்றியங்களை இவ்வாரியம் வகைப்படுத்தியுள்ளது.
7. தமிழகத்தில் 139 ஒன்றியங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துகின்றன.
8. 136 ஒன்றியங்களில் மட்டுமே நிலத்தடி நீரின் அளவு குன்றாமலும் தரம் குறையாமலும் உள்ளன.
9. தமிழக வேளாண்மை நிலத்தடி நீரை நம்பியுள்ளதால், அதன் பயன்பாட்டைச் சீர் செய்வது மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும்.
20.
ஆப்பிரிக்கா காலனியாதல் :
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதிவரை சகாராவிற்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறியப்படாமலே இருந்தன.
(ii) ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளும் ஆய்ந்தறியப்படாமலே இருந்தன.
(iii) 1875க்குப் பின்னர், ஐரோப்பியரின் ஊடுருவலும் குடியேற்றங்களை நிறுவுதலும் பெருமளவில் நடைபெறத் தொடங்கியது.
(iv) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் குடியேற்ற நாட்டு மாநாட்டில் ஆப்பிரிக்காவைப் பல ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிப்பதென முடிவு மேற்கொள்ளப்பட்டது.
(v) இவ்வாறு முக்கியமான ஐரோப்பிய நாடுகளிடையே போர் ஏற்படாமல் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகளை ஏற்படுத்துவது சுமுகமாக நடைபெற்றது.
(vi) 1881க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
(vii) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு எனவும் அறியப்படுகிறது.
(viii) மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத்துடன் தொடாபுடைய பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே இம்மாநாடு கூடியது.
கனத்து
(ix) காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகல் கூட்டிய இம்மாநாட்டில் போர்த்துகலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
(x) பெர்லின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டம் காங்கோ நதியின் வடிநிலம் பொதுவானதெனவும் அங்கு வணிக கப்பல்களைச் செலுத்துவதற்கான உரிமை அனைத்து நாடுகளுக்கு உண்டு எனவும் பிரகடனப்படுத்தியது.
21.
ஒற்றையாட்சி முறை :
ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
ஒற்றை ஆட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தபடுகின்றன.
1. சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
2. அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
3. ஒற்றை ஆட்சிமுறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
4. ஒற்றை ஆட்சிமுறை குறைந்த செலவுடையது
5. அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்
6. ஒற்றுமை சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.
22.
பிரெஞ்சு தத்துவஞானிகளின் பங்களிப்பு :
(i) பிரெஞ்சு தத்துவஞானிகளான வால்டேர், மாண்டெஸ்கியூ, ரூசோ ஆகியோர் பிரான்ஸின் நிலைமைகளை விமர்சித்தனர்.
(ii) வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார்.
(iii) கான்டீட் (Candide) வால்டேரின் புகழ்பெற்ற நூலாகும்.
(iv) அவருடைய புகழ்பெற்ற மேற்கோள்கள் "முட்டாள்தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்தவர்களால் உன்னை அக்கிரமங்களைச் செய்ய வைக்க முடியும்
(v) வால்டேரின் சமகாலத்தவரும் மகத்தான எழுத்தாளருமான ஜூன் ஜேக்ஸ் ரூசோ ஆவார்.
(vi) அவருடைய அரசியல் கருத்துக்கள் மக்கள் புதிய முடிவுகள் எடுப்பதில் பெரும்பங்கு வகித்தது.
(vii) பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களை தயார் செய்ததில் இவரின் முக்கிய பங்கு வகித்தது.
(viii) இவர் எழுதிய நூல் "சமூக ஒப்பந்தம்” (Social Contract) அதில் அவரின் புகழ்பெற்ற கூற்று "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான்' என்பதாகும்.
(ix) மாண்டெஸ்கியூவில் 'பாரசீக மடல்கள்', 'சட்டத்தின் சாரம்' என்னும் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
(x) இவர் 'அதிகாரப் பிரிவினை' எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.
(xi) எந்த ஒரு அரசின் அதனுடைய மூன்று உறுப்புகளான சட்டம் இயற்றுதல், சட்டத்தைச் செயல்படுத்துதல், நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகக் பிரிக்கப்பட்டுள்ளதோ அவ்வரசில் தனிமனிதச் சுதந்திரம் சிறப்பாக பாதுகாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
23.
கண்ணாடிப் பொருள்கள் உடைந்து சிதறிப் பறந்து விழுந்து உடலின் மீது கடுமையான காயங்களை ஏற்படுத்தும். இதனால் உயிரிழப்பு ஏற்படலாம்.
24.
பிறப்பு வீதம்:
ஒரு ஆண்டில் 1000 பேருக்கு உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் ஆகும்.
இறப்பு வீதம்:
ஒரு ஆண்டில் உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளில் ஒரு வயதிற்குட்பட்ட இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பு விகிதமாகும்.
25.
1. ஏழை மக்கள் கிராமப்புறங்களில் நிலவி வரும் தங்களது துயர நிலையிலிருந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொள்ளும் உத்தியாக இடப் பெயர்வை மேற்கொள்கின்றனர்.
2. சற்று வசதி வாயப்பு உடைய மக்கள் தங்களது வாழ்நிலையை மேம்படுத்துவதற்காக இடம் பெயர்தலை மேற்கொள்கின்றனர்.
26.
தொலை நுண்ணுர்வின் கூறுகள் :
(i) ஆற்றல் மூலம் (Energy Source)
(ii) அனுப்பும் வழி (Transmission Path)
(iii) இலக்கு (Target)
(iv) உணர்விகள் (Sensor)
27.
ஒரு நிலவரைபடத்தில் தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோட்டுச்சட்டம்,
நிலவரைபடக் குறிப்பு மற்றும் முறைக்குறியீடுகள் ஆகிய கூறுகளைக் கொண்டிருக்கும்.
28.
1. மழைப் பொழிவு
2. நீர் இருப்பு
3. கால நிலை
4. சந்தை விலை
29.
இந்தியாவைக் காலனி நாடாக்கிய செயல்பாட்டை மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம்.
(i)முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம்.
(ii) இரண்டாம் கட்டம் : தொழில்துறை முதலாளித்துவம்.
(iii) மூன்றாம் கட்டம் : நிதி மூலதன முதலாளித்துவம்.
30.
(i) சுவிட்சர்லாந்து நாட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டதால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் அரச ஆதரவாளர்களை மாரட் என்பவரின் தலைமையில் வேட்டையாடினர்.
(ii) செப்டம்பர் மாதம் 2ஆம் நாள் தொடங்கி மூன்று நாட்களில் மாற்றுக் கருத்துடைய எதிரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,500 நபர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
(iii) பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் இது 'செப்டம்பர் படுகொலை' என அழைக்கப்படுகிறது.
31.
(i)விவசாயிகள் அரசுக்கு டெய்லே (நிலவரி), காபெல்லே (உப்பு வரி) போன்ற வரிகளைச் செலுத்தினர்.
(ii) மேலும் சாலைகள் அமைத்தல் போன்ற பொதுப் பணிகளுக்கு ‘கார்வி' எனப்படும் இலவச உழைப்பையும் வழங்கினர்.
32.
1. செவ்வக வடிவக் குடியிருப்புகள் - சாலைப் பகுதிகளில்
2. நேர்க்கோட்டுக் குடியிருப்புகள் - சாலையோரங்களில்
3. அரைவட்ட வடிவக் குடியிருப்புகள் - குளத்தைச் சுற்றி
4. குறுக்கு வடிவக் குடியிருப்புகள் - மூன்று சாலை சந்திக்கும் இடம்
33.
இந்தோனேசியா, ஜப்பானைவிட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
34.
1. தயார் நிலை
2. மட்டுப்படுத்துதல்
3. மீட்பு
4. திட்டமிடல்
5. தடுத்தல்
6. புனர்வாழ்வு
7. மறுசீரமைப்பு
35.
அ) மக்கள் தொகை வளர்ச்சி:
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பையே மக்கள் தொகை வளர்ச்சி என்கிறோம்.
ஆ) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு:
1. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசாங்கம் மக்கள் தொகை பற்றி கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைச் சேகரிக்கின்றது.
2. இக்கணக்கெடுப்பு மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு விகிதம் மற்றும் தொழில் போன்ற விவரங்களைப் பதிவு செய்கிறது.
3. ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின்படி ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
4. உலகின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கி.மு (பொ.ஆ.மு) 3800 ல் பாபிலோனில் நடந்தது.
இ) வளம் குன்றா வளர்ச்சி:
1. வளம் குன்றா வளர்ச்சி என்பது எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகும்.
2. வளம் குன்றா வளர்ச்சியை அடைவதற்கு பொருளாதார வளர்ச்சி. சமுதாயக் கூறுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கியமான அடிப்படைக் காரணிகளை ஒன்றிணைப்பது அவசியமாகும்.
3. இக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதன்மூலம் தனிமனிதன் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யமுடியும்.
36.
1. கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்
2. சந்தைகளையும், திருவிழாக்களையும் நடத்துதல்
3. மரங்களை நடுதல்
4. விளையாட்டு மைதானகளைப் பராமரித்தல்
5. வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள்,
6. இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்.
7. பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கட்டுப்படுத்துதல்.
37.
தொழிற்புரட்சியின் வருகையைத் தொடர்ந்து, உலகின் தொழிற்பட்டறையாக இங்கிலாந்து மாறியது. வேளாண்மை உற்பத்தியில் பொதுவான வீழ்ச்சி காணப்பட்டது. இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து தொழில் நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர். மக்கள்தொகை அதிகரிப்பு, இடப்பெயர்ச்சி. நகரமயமாக்கம் ஆகியன முக்கிய காரணங்கள் ஆகும்.
38.
| ஒற்றையாட்சி முறை | கூட்டாட்சி முறை |
| 1. இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வது ஒற்றை ஆட்சி முறையாகும். |
அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி ஆகும். |
| 2. அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தப்படுகின்றன. |
அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் படுகின்றன. |
| 3. சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது. | மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது. |
| 4.மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கக் கூடும். |
மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது. |
| 5. குறைந்த செலவுடையது. | அதிகச் செலவினம் கொண்டது. |
| 6.அரசியலமைப்புத் திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும். | மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப எளிதில் மாற்றி அமைக்க முடியாது. |
| 7. பெரும்பாலும் ஒரே குடியுரிமை | இரட்டைக் குடியுரிமை |
| 8. துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது. | கூட்டாட்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை. |
39.
| ஒற்றையாட்சி முறை | கூட்டாட்சி முறை |
| ஒரேயொரு அரசு அல்லது துணைக் குழுக்கள் |
இரண்டு நிலையில் அரசாங்கம் |
| பெருபாலும் ஒரே குடியுரிமை | இரட்டைக் குடியுரிமை |
| துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது |
கூட்டாச்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை |
| அதிகாரப் பகிர்வு இல்லை | அதிகாரப் பகிர்வு |
| மையப்படுத்தப்பட்ட அதிகாரம் | அதிகாரப் பரவல் |
40.
அ) 13.067o வடக்கு , 80.238o கிழக்கு
ஆ) மதுரை
இ) கோயமுத்தூர்
ஈ) 8.08o வடக்கு மற்றும் 77.54o கிழக்கு.
41.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards