9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/02/2019
3rd Term SA Test Model 2019
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.
மக்கள்தொகையியல்
புற வடிவமைப்பியல்
சொல்பிறப்பியல்
நிலநடுக்கவரைவியல்
2.
நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்
முறைக்குறியீடுகள்
இணைப்பாய புள்ளிகள்
வலைப்பின்னல் அமைப்பு
திசைகள்
3.
2015 ஆம் ஆண்டுல் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்
7%
75%
23%
9%
4.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்
ஆகஸ்டு - அக்டோபர்
செப்டம்பர் - நவம்பர்
அக்டோபர் - டிசம்பர்
நவம்பர் - ஜனவரி
5.
ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ____________
ஒப்பந்தத் தொழிலாளர் முறை
அடிமைத்தனம்
கடனுக்கான அடிமை ஒப்பந்தம்
கொத்தடிமை
6.
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
பல்வந்ராய் மேத்தா குழு
அசோக் மேத்தா குழு
GVK ராவ் மேத்தா குழு
LM சிங்வி மேத்தா குழு
7.
பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________
ஜெரோண்டியர்
ஜேக்கோபியர்
குடியேறிகள்
அரச விசுவாசிகள்
8.
சிலுவை வடிவக் குடியிருப்புகள்
9.
சென்னை
10.
நிலவரைபடங்களை உருவாக்கும் அறிவியல் கலை
11.
மாபெரும் ரயில்வே ஊழியர் போராட்டம்
12.
மாவட்ட ஊராட்சி
13.
சட்டத்தின் சாரம்
14.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
1. (i) எந்த வகைப் பயன்பாடு மிக அதிக நபர்கள் இறப்பதற்குக் காரணமாகிறது
(ii) உங்களால் எதாவது மூன்று காரணங்களைக் குறிப்பிடமுடியுமா?
(iii) இதைச்சார்ந்த சாலை விதிகள் என்ன என்பதைக் குறிப்பிட முடியுமா?
2. பாதசாரிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்?
15.
திசைகள்-தகுந்த படம் வரைந்து விளக்குக.
16.
நிலநடுக்கத்தின் போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
17.
இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?
18.
வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.
19.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
20.
1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.
21.
நிலநடுக்கத்தின்போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏன்?
22.
இந்தியாவில் ஒவ்வொருநாளும் எத்தனை ஆண்கள் பெண்கள் தீவிபத்தினால் இறக்கின்றனர்?
23.
முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.
24.
கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.
25.
இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக
26.
புவிமாதிரி மற்றும் நிலவரைபடம்
27.
நிலைவரைபடம் என்றால் என்ன?
28.
உணவுப்பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.
29.
ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
30.
பாஸ்டைல் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?
31.
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
32.
கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?
33.
கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. ஐரோப்பாவின் அதிக மக்களடர்த்திப் பகுதி.
2. ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்.
3. பாக் வளைகுடா.
4. நீரியக்க விசை தொழில் நுட்பத்தைத் தடை செய்த நாடு.
5. இங்கிலாந்து – கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடு.
6. டென்மார் டென்மார்க் – மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு.
7. ஹாவாங்கோ ஆறு.
34.
டவுன்ஷெண்ன்ட் சட்டம்
அ) இச்சட்டத்தை அறிமுகப்பப்படுத்தியவர் யார்?
ஆ) எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது?
இ) குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன் எதிர்த்தனர்?
ஈ) பாஸ்டன் வணிகர்கர்கள் ஆங்கிலேய பொருட்களை ஏன் எதிர்த்தனர்?
1.
(a)
மக்கள்தொகையியல்
2.
(a)
முறைக்குறியீடுகள்
3.
(a)
7%
4.
(c)
அக்டோபர் - டிசம்பர்
5.
(c)
கடனுக்கான அடிமை ஒப்பந்தம்
6.
(c)
GVK ராவ் மேத்தா குழு
7.
(a)
ஜெரோண்டியர்
8.
T வடிவ குடியிருப்பு
9.
வெளி குடியேற்றம் அதிகம்
10.
நிலவரைபடக் கலையியல்
11.
அமெரிக்கா
12.
மாவட்ட ஆட்சியர்
13.
மான்டெஸ்கியூ
14.
1. அ) இருசக்கர வாகன ஓட்டிகள்
ஆ) i) தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது.
ii) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது.
iii) கைபேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவது.
iv) அதிவேகம்
v) வளைவில் பிற வாகனங்களை முந்திச் செல்ல முயல்வது.
இ) i) தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுதல்
ii) சாலைக்குறியீடுகளை அறிந்து வாகன ஓட்டுதல்
iii) சாலைக்குறியீடுகளை அறிந்து வாகனம் ஓட்டுதல்
iv) மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்துதல்
2. பாதசாரிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?
i) நடைமேடையைப் பயன்படுத்துவது.
ii) சாலையைக் கடப்பதற்கென குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டும் கடப்பது.
iii) சாலையின் இடது புறத்தில் செல்வது.
iv) சாலையில் முன்னும் பின்னும் வரும் வாகனங்களைப் பற்றி அறிந்து கொள்வது.
15.
திசைகள் :
1. பொதுவாக வரைபடங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.
2. ஒரு நிலவரைபடத்தில் வடக்குத்திசை எப்போதும் புவியின் வடதுருவத்தை நோக்கியே உள்ளது.
3. நீ வடதுருவத்தைப் பார்த்து நின்றால் உனது வலக்கை கிழக்குத் திசையையும், இடக்கை மேற்கு திசையையும் உன் பின்புறம் தெற்குத் திசையையும் காட்டும்.
4. இவை அடிப்படைத் திசைகளாகும்.
5. பொதுவாக நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.
6. அடிப்படைத் திசைகளை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் வாக்கியம்.
16.
1. நிலநடுக்கத்தின் போது நான் கட்டடத்திற்குள் இருந்தால் மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு. ஒரு கையால் தலையை மூடிக் கொள்ளவும். அறையில் எந்த மரச்சாமான்களும் இல்லையெனில், அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
2. அறையின் மூலையில் மேசையின் அடியில் அல்லது கட்டினுக்கு அடியில் அமர்ந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்,
3. கண்ணாடிச் சன்னல். வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
4. நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும். அதன்பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.
17.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இடம் பெயர்தல் சார்ந்து பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இடம் பெயர்தலின் அளவை குறைத்தல்:
1. அதிக அளவிலான இடம் பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினைப் பிரதிபலிக்கிறது.
2. எனவே கிராமப்புறங்களின் மீது அரசின் கவனம் இருத்தல் வேண்டும்.
3. ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித் திட்டங்கள் அதிக அளவிலான இடம் பெயர்தலைக் குறைப்பதற்கு உதவியாக அமையும்.
இடம் பெயர்ந்து நகர்தலைத் திசை திருப்புதல்:
1. பெரு நகரங்கள் நோக்கி குவியும் இடம் பெயர்தலைத் திசைமாற்றி அமைத்திடும் கொள்கைகள் நல்ல முடிவுகளாகும்.
2. நிலப்பரப்பு சார்ந்த குடிபெயர்தலால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்கு நகர்ப்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமான உத்திகளாக அமைகின்றன.
18.
1. தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை.
2. தமிழகம் தனது தேவைக்கான நீரை வடகிழக்கு மற்றும் தேன்மேற்குப் பருவ மழைகளிலிருந்து பெறுகிறது.
3. தென்மேற்கு பருவமழைப் பொழிவு அபரிமிதமாக இருந்தால் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள கர்நாடக அணைகள் நிரம்பி விட்டால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர் பெருகும்.
4. தமிழகத்திற்கு பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்கு பருவ மழையாகும்.
5. வடகிழக்குப் பருவமழை நீரை நீர்த்தேக்கங்களிலும், கண்மாய்கள் மற்றும் ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
6. தமிழக வேளாண்மைக்கான நீரை கால்வாய்கள், ஏரிகள், குளங்கள். கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.
7. தமிழக வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
8. இந்த ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
19.
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம் :
(i) கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இங்கிலாந்தில் ஒரு பெரிய நிலப்பிரபு ஆவார்.
(ii) இந்தியாவிலும் நிலப்பிரபுக்களை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
(iii) இடைத்தரகர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்த காரன்வாலிஸ் அவர்களை நிலப்பிரபுக்களைப்போல் நடத்தினார்.
(iv) ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் உருவாக்கப்பட்டனர்.
(v) நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய இவர்கள் தங்கள் சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்கவும், வாரிசாக நிலங்களைப் பெறவும் உரிமை பெற்றனர்.
(vi) விவசாயிகள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
(vii) கம்பெனி அரசு ஜமீன்தார்களுடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொண்டு குத்தகைதாரர்களுடன் தங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ள ஜமீன்தார்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது.
(viii) வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.
(ix) ரயத்துவாரி முறை என்பது தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறையாகும்.
(x) இம்முறையின்படி விவசாயி நிலத்தின் உரிமையாளர் ஆவார், அவரே வரி செலுத்துவார்.
(xi) நிலவரியை ஒரு விவசாயி முறையாகச் செலுத்தும்வரை நிலம் அவருக்குச் சொந்தமானதாக இருக்கும். நிலவரி செலுத்தத் தவறினால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும் ஏனைய உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.
xii) நிலத்தில் தனிச்சொத்துரிமை எனும் கோட்பாட்டை ரயத்துவாரிமுறை அறிமுகம் செய்தது, தனிநபருக்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. தனது நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான தனது உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார்.
xiii) ஆங்கில அரசு வேளாண்மையை வணிகமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றியது.
xiv) விவசாயி தன்னுடைய வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய பன்னாட்டுச் சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. வேளாண் பொருள்களுக்கான தேவை வீழ்ச்சியுற்றபோது விவசாயிகள் துயரங்களுக்கு உள்ளாயினர்.
ஆப்பிரிக்காவில் காலனி அசிங்
20.
பிரெஞ்சு தத்துவஞானிகளின் பங்களிப்பு :
(i) பிரெஞ்சு தத்துவஞானிகளான வால்டேர், மாண்டெஸ்கியூ, ரூசோ ஆகியோர் பிரான்ஸின் நிலைமைகளை விமர்சித்தனர்.
(ii) வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார்.
(iii) கான்டீட் (Candide) வால்டேரின் புகழ்பெற்ற நூலாகும்.
(iv) அவருடைய புகழ்பெற்ற மேற்கோள்கள் "முட்டாள்தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்தவர்களால் உன்னை அக்கிரமங்களைச் செய்ய வைக்க முடியும்
(v) வால்டேரின் சமகாலத்தவரும் மகத்தான எழுத்தாளருமான ஜூன் ஜேக்ஸ் ரூசோ ஆவார்.
(vi) அவருடைய அரசியல் கருத்துக்கள் மக்கள் புதிய முடிவுகள் எடுப்பதில் பெரும்பங்கு வகித்தது.
(vii) பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களை தயார் செய்ததில் இவரின் முக்கிய பங்கு வகித்தது.
(viii) இவர் எழுதிய நூல் "சமூக ஒப்பந்தம்” (Social Contract) அதில் அவரின் புகழ்பெற்ற கூற்று "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான்' என்பதாகும்.
(ix) மாண்டெஸ்கியூவில் 'பாரசீக மடல்கள்', 'சட்டத்தின் சாரம்' என்னும் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
(x) இவர் 'அதிகாரப் பிரிவினை' எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.
(xi) எந்த ஒரு அரசின் அதனுடைய மூன்று உறுப்புகளான சட்டம் இயற்றுதல், சட்டத்தைச் செயல்படுத்துதல், நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகக் பிரிக்கப்பட்டுள்ளதோ அவ்வரசில் தனிமனிதச் சுதந்திரம் சிறப்பாக பாதுகாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
21.
நிலநடுக்கத்கதால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதனால் மின்தூக்கி செயல் இழந்துவிடும். மின்தூக்கி நகரும் பாதை அடைக்கப்பட்டு கதவுகள் இறுக்கமாக மூடிக்கொள்வதால் நம்மால் அங்கிருந்து வெளியேற முடியாது. அதனால் நாம் படிக்கட்டை உபயோகப்படுத்த வேண்டும்.
22.
1. ஆண்கள் - 21 சதவீதம்
2. பெண்கள் - 42 சதவீதம்
23.
முதல்நிலைத் தொழில்கள்: முதல் நிலைத் தொழில் என்பது மூலப் பொருல்களை பூமியிலிருந்து பயன்பாட்டிற்கு செய்யப்படும் தொழில். இதன் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், மீன்பிடித்தல், கால்நடைகளை மேய்த்தல், மரங்களை வெட்டி எடுத்தல் மற்றும் வேளாண்மை செய்தல் ஆகிய தொழில்கள் அடங்கும்.
இரண்டாம் நிலைத் தொழில்கள்: இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப் பொருட்கள் முடிவுற்ற பொருள்களாக மாற்றம் செய்யப்படுகின்றன. (எ.கா) இரும்பு, எஃகு தொழிற் சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள்.
24.
கிராமக் குடியிருப்பு: கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ அல்லது மசூதி, கோவில், தேவாலயங்களைச் சுற்றியோ அமைந்திருக்கும். இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிவடையக் கூடியதாகவும் இருக்கும்.
நகரக் குடியிருப்பு: நகரம் பொதுவாகக் கிராமத்தை விட பெரியதாகவும், பெருநகரத்தை விடச் சிறியதாகவும் இருக்கும்.
25.
1. வேலை
2. கல்வி
3. தொழில்
4. திருமணம்
5. வணிகம்
26.
1. புவிமாதிரி என்பது ஒரு முப்பரிமாண உருண்டை ஆகும். ஆனால் நிலவரைப்படம் என்பது இரு பரிமாண வடிவம் கொண்டது.
2. புவிமாதிரி பூமி முழுவதையும் காட்டுகிறது. ஆனால் நிலவரைபடம் பூமி முழுவதையும், அல்லது ஒரு பகுதியை மட்டும் காட்டக் கூடியது.
3. புவிமாதிரியானது விரிவான பட அமைப்புக் காட்டக் கூடியது. நிலவரைபடம் இடங்களைப் பற்றிய குறிப்பான தகவல்களைத் தரக்கூடியது.
27.
ஒரு நிலவரைபடம் என்பது காகிதம் / துணி அல்லது ஏதேனும் தட்டையான பரப்பில் புவியின் மேற்பரப்பின் முப்பரிமாண வடிவத்தைச் சிறிய வடிவில் காட்டுவதாகும். நிலவரைபடம் ஒரு புவியியலாளரின் அடிப்படைக் கருவியாகும்.
28.
உணவுப் பயிர்கள்:
நெல், மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு
உணவல்லாத பயிர்கள்:
தென்னை. பருத்தி, காப்பி, தேயிலை. கரும்பு
29.
(i) ஜூலு பூர்வக்குடிகள் தங்களின் போர்த் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள்.
(ii) புகழ் பெற்ற போராளிகளான சாக்கா ஜூலு போன்றவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டவர்கள். (iii) ஜூலு பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் அப்பகுதிகளைப் பதிமூன்று தலைமையுரிமைப் பகுதிகளாகப் பிரித்தனர். ஜூலுக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவேயில்லை. அவர்கள் தென்னாப்பிரிக்காவில் இனப்பாகுபாட்டிற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலம் போராட நேர்ந்தது.
30.
(i) அரசால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடி தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை கலைந்து செல்வதில்லை என உறுதியேற்றதைத் தொடர்ந்து நெருக்கடி முற்றியது.
(ii) அரசர் இவர்களைக் கலைக்கப் படைகளைப் பயன்படுத்த முயன்றார். அவருடைய வீரர்களே அவரது ஆணைகளுக்குப் பணிய மறுத்தனர்.
(iii) இதனைத் தொடர்ந்து தனது நாட்டு மக்களைச் சுட்டுத்தள்ளுவதற்காக அரசர் லூயி அயல்நாட்டுப் படைகளைத் தருவிப்பதற்கான சதி ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
(iv) இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 1789 ஜூலை 14இல் பாரிஸ் நகரில் கிளர்ச்சியில் இறங்கினர்.
(v) அவர்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து அங்கே சிறைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர். இது பாஸ்டில் சிறையின் வீழ்ச்சி புரட்சியில் முக்கியத் திருப்பு முனையாகும்.
31.
அ) மூன்று அடுக்கு அமைப்பு
ஆ) கிராம சபை
இ) தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்
ஈ) நிதி ஆணையத்தினை நிறுவுதல்
உ) மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு
ஊ) பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு
எ) மாவட்ட திட்டக் குழுக்களை அமைத்தல்.
32.
1. உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்.
2. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
3. மிகப்பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.
4. அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
5. மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது.
6. பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.
33.
34.
அ) இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சார்லஸ் டவுன்ஷெண்ட்
ஆ) 1767- ஆம் ஆண்டு
இ) டவுன்ஷெண்ட் 1767 இல் இறக்குமதிப் பண்டங்களின் மீதான புதிய வரிகளை அறிமுகம் செய்தார்.
ஈ) பாஸ்டனைச் சார்ந்த வணிகர்கள் இங்கிலாந்துப் பொருட்களைப் புறக்கணிக்கும் வகையில் இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்தனர்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards