9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/08/2019
சமூக அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா?
2.
பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.
3.
சூறாவளிகளை வகைப்படுத்து.
4.
மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?
5.
வெயிற்காய்வு என்றால் என்ன?
6.
வளிமண்டலம் - வரையறு?
7.
சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.
8.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.
9.
வெப்பச்சூறாவளி மற்றும் மித வெப்பச் சூறாவளி
10.
வானிலை மற்றும் காலநிலை
11.
நீண்ட மணல்திட்டு மற்றும் மணல் திட்டு
12.
கல்விழுது மற்றும் கல்முளை
13.
கவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை
14.
விலகும் எல்லை மற்றும் இணையும் எல்லை
15.
கருவம் மற்றும் மேலோடு
1.
உடைந்த பாறைகள் வானிலைச் சிதைவுக்கு உட்பட்டு மண்ணாக மாறுகிறது. சிதைவடைந்த நுண்ணிய பாறைத் துகள்கள் மற்றும் சிதைந்த உயிரினங்களின் (Humans) கலவையே மண்ணாகும்.
2.
காற்றின் செயல்பாடுகளான அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் பாலைவனம் பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணியாக காற்று விளங்குகிறது.
3.
1. சைக்ளோன் எனும் சொல் ஒரு கிரேக்க சொல்லாகும். இதற்கு சுருண்ட பாம்பு என்று பொருளாகும்.
2. அதிக அழுத்தமுள்ள பகுதியிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிகளுக்கு சுழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளி என்று அழைக்கப்படுகிறது.
வகைகள்:
i) வெப்பச் சூறாவளிகள்
ii) மிதவெப்பச் சூறாவளிகள்
iii) கூடுதல் வெப்பச் சூறாவளிகள்
4.
(i) நீராவியிலிருந்து பெறப்பட்ட உப்புத்துகள்கள், புகை போன்றவற்றின்மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிவதன் மூலம் மேகங்கள் உருவாகின்றன.
(ii) சில நேரங்களில் வெப்பக்காற்றும் ஈரப்பதம் நிறைந்தக் காற்றும் ஒன்றிணையும் போதும் மேகங்கள் உருவாக்கப்படுகின்றன.
(iii) வளிமண்டலத்தில் கண்களுக்கு புலப்படும்படியாக மிதந்து கொண்டிருக்கும் குளிர்ந்த நீர்த்திவலைகளே மேகங்களாகும்.
5.
சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பம் குறுகிய அலைகளாக புவியை வந்தடைகிறது. இதனை வெயிற்காய்வு அல்லது கதிர்வீச்சு என்கிறோம்.
6.
(i) புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்றுப் படலம் வளிமண்டலம் என அழைக்கப்படுகிறது.
(ii) புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.
(iii) வாயுக்கள். நீராவி மற்றும் தூசுகள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன.
7.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் வடக்கிலிருந்து (மங்கோலியர்களிடமிருந்து) வரும் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட மிகப்பெரும் முயற்சியாகும். கின் ஷி ஹுவாங் படையெடுப்புகளைத் தடுப்பதற்காக அதற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த ஏராளமான பழைய கோட்டைச் சுவர்களை இணைத்தார்.
8.
பெருங்கற்கால ஈமச் சின்னங்கள்:
1.டோல்மென் எனப்படும் கற்திட்டை,
2. சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்.
3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்,
4. தாழி.
5. பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்,
6. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
9.
| வ.எண் | வெப்பச்சூறாவளி | மித வெப்பச் சூறாவளி |
|---|---|---|
| 1 | வெப்பச் சூறாவளிகள் வெப்ப மண்டலங்களுக்கு இடையேயான காற்றை / ஒருமுகப்படுத்தும் பகுதிகளில் (Inter Tropical | Convergence Zones(ITCZ) உருவாகின்றன. | 35° முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர்காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன. |
| 2 | இவை நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் உருவாகின்றன | மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது. |
| 3 | இவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் | சூறாவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பசிபிக் பெருங்கடலில் டைபூன்கள் (Typhoons) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் / ஹரிக்கேன்கள் (Hurricanes) என்றும் | பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேக்யுஸ் (Baguios) என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி | (Willy Willies) என்றும் அழைக்கப்படுகிறது | இச்சூறாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி, வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப் பகுதி வரை பரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று 'மேற்கத்திய இடையூறு காற்று (Western Disturbance) என்று அழைக்கப்படுகிறது. |
10.
| வ.எண் | வானிலை | காலநிலை |
|---|---|---|
| 1 | ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வளிமண்டல மாற்றத்தைப் பற்றி அறிவது 'வானிலை' ஆகும். | நீண்ட காலத்திற்கு மிகப் பரந்த நிலப்பரப்பில் ஏற்படும் வானிலையின் சராசரியே காலநிலையாகும். |
| 2 | ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக்கூடியதாக உள்ளது. | ஏறக்குறைய மாறுதலுக்கு உட்படாமல் இருக்கிறது. |
| 3 | ஒரே நாளில் ஓர் இடத்தில் காலை நேரத்தில் வெப்பமாகவும் நண்பகலில் மழைப் பொழிவும் என வேறுபட்ட வானிலை நிகழ்வுகள் ஏற்படும். |
ஓரிடத்தில் ஒரே வகையான காலநிலை காணப்படும். |
| 4 | வானிலை ஆராய்ச்சி மையங்களில் ஒவ்வொரு நாளும் வானிலை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. | வானிலைத் தகவல்களின் சராசரியே காலநிலை ஆகும். |
| 5 | வானிலையைப் பற்றிய படிப்பு வானிலையியல் ஆகும். | காலநிலை பற்றிய படிப்பு காலநிலையியல் ஆகும். |
11.
| நீண்ட மணல்திட்டு | மணல் திட்டு |
| மணல் திட்டின் ஒருமுறை நிலத்தோடு இணைந்தும் மறுமுனை கடலை நோக்கி நீண்டும் காணப்படும். | கடற்கரையில் மணற் படிவுகளால் ஆன நீண்ட நிலத்தோற்றமே மணல் திட்டு எனப்படும். |
| நீண்ட மணல் திட்டுகள் பொதுவாக ஓத பொங்கு முகங்களில் காணப்படும். | இம்மணல் திட்டு பெரும்பாலும் கடற்கரைக்கு இணையாகக் காணப்படும். |
12.
| கல்விழுது | கல்முளை |
| இது நிலத்தடி நீர் படிவுகள் நிலத் தோற்றமாகும். | இது நிலத்தடி நீர் படிவ நிலத் தோற்றமாகும். |
| குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீராவியாகும் போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சியளிக்கும். இது கல்விழுது என்று அழைக்கப்படுகிறது. | கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல் நோக்கி வளர்வது கல்முளை எனப்படுகிறது. |
13.
| கவச எரிமலை | கும்மட்ட எரிமலை |
| அதிக பிசுபிசுப்புடன் கூடிய பாறைக்குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தோடி கேடயம் போன்ற வடிவத்தில் மென் சரிவுடன் காணப்படும். | சிலிகா அதிகமுள்ள எரிமலை குழம்பு அதிகப் பிசுபிசுப்புடன் வெளியேறும். நீண்ட தூரத்திற்கு பரவ முடியாமல் எரிமலை வாய்க்கு அருகிலேயே வட்ட வடிவத்தில் படிந்து சிறு குன்று போலக் காணப்படும். |
| எ.கா. - மௌனலோவா எரிமலை - ஹவாய்த் தீவு | எ.கா. - பாரிக் கியூட்டன் எரிமலை - மெக்சிகோ |
14.
| விலகும் எல்லை | இணையும் எல்லை |
| புவித்தட்டுகள் ஒன்றை விட்டு ஒன்று விலகும் போது மேக்மா எனப்படும் பாறைக்குழம்பு புவிக் கவசத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. | புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது சில நேரங்களில் கீழ்நோக்கு சொருகுதல் நிகழ்வு நடைபெறும். இப்பகுதியை புவித்தட்டுகள் அமிழ்தல் மண்டலம் என்கிறோம். |
15.
| கருவம் (core) | மேலோடு (crust) |
| புவியின் கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படும். | நாம் வாழும் புவியின் மேல் அடுக்கு புவி மேலோடு எனப்படும். |
| இவ்வடுக்கு நைஃப் (NIFE) என்று அழைக்கப்படும். | இவ்வடுக்கு சியால் (SIAL) என்று அழைக்கப்படும். |
| இதில் நிக்கலும் (NI) இரும்பும் (FE) அதிகம் காணப்படும். | இதில் சிலிகா (SI) மற்றும் அலுமினியம் (Al) அதிகம் காணப்படும். |
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards