9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 9th Standard Tamil Medium Mathematics Important Question 2019-2020 )
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
1500 குடும்பங்களில் அவர்கள் வீட்டிலுள்ள பணிப்பெண்கள் (maids) பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுப் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:
| பணிப் பெண்கள் வகை | பகுதி நேரம் மட்டும் | முழுநேரம் மட்டும் | இரண்டு வகை பணிப்பெண்கள் |
|---|---|---|---|
| குடும்பங்களின் எண்ணிக்கை | 860 | 370 | 250 |
சமவாய்ப்பு முறையில் ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்படும்போது, அக்குடும்பம் (i) இரு வகைப் பணிப்பெண்களும் வைத்திருக்க (ii) பகுதி நேரப் பணிப்பெண் வைத்திருக்க (iii) பணிப்பெண் வைத்திருக்காமல் இருக்க நிகழ்தகவு காண்க.
2.
அணி I மற்றும் அணி II ஆகிய இரு அணிகளும் 10 முறை 20 ஓவர் மட்டைப் பந்து (cricket) ஆடுகின்றனர். ஒவ்வோர் ஆட்டத்திலும் அவர்கள் எடுத்த ஓட்டங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:.
| ஆட்டம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அணி I | 200 | 122 | 111 | 88 | 156 | 184 | 99 | 199 | 121 | 156 |
| அணி II | 143 | 123 | 156 | 92 | 164 | 72 | 100 | 201 | 98 | 157 |
அணி I வெற்றி பெறுவதற்கான ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவு என்ன?
3.
42 நபர்கள் பணி செய்யும் ஓர் அலுவலகத்தில் 7 பணியாளர்கள் மகிழுந்து பயன்படுத்துகிறார்கள், 20 பணியாளர்கள் இரு சக்கர வண்டி பயன்படுத்துகிறார்கள். மீதி 15 பணியாளர்கள் மிதிவண்டி பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவைக் கண்டறிக.
4.
A(−1,3), B(1,−1) மற்றும் C(5,1) ஆகியன ஒரு முக்கோணத்தின் முனைப்புள்ளிகள் எனில் A வழியே செல்லக் கூடிய நடுக்கோட்டின் நீளத்தைக் காண்க.
5.
பின்வரும் புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.
(i) (2,−4), (−3,−7) மற்றும் (7,2)
(ii) (−5,−5), (1,−4) மற்றும் (−4,−2)
6.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
a3+b3-3ab+1
7.
காரணிப்படுத்துக. x3 - x
8.
கீழ்க்காண்பவற்றைச் சுருக்குக:
(i) \(\sqrt{63}-\sqrt{175}+\sqrt{28}\)
(ii) \(2\sqrt[3]{40}+3\sqrt[3]{625}-4\sqrt[3]{320}\)
9.
மதிப்பு காண்க :
(i) \(81^{5\over4}\)
(ii) \(64^{-2\over3}\)
10.
பின்வரும் கணங்களுக்கு A∪B, A∩B, A–B மற்றும் B–A காண்க.
A = {x : x ∈N, x ≤ 10} மற்றும் B={x : x ∈W, x < 6}
11.
பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க. x + 3 = 0
12.
கீழ்க்காணும் எண்களுக்கு இடையே உள்ள எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க.
(i) 0.3010011000111… மற்றும் 0.3020020002…
(ii) \(\frac { 6 }{ 7 } \) மற்றும் \(\frac { 12 }{ 13 } \)
(iii) \(\sqrt { 2 } \) மற்றும் \(\sqrt { 3 } \)
13.
n(A) = 36, n(B) = 10, n(A∪B)=40, மற்றும் n(A′)=27 எனில், n(U) மற்றும் n(A∩B) காண்க.
14.
எவை நாற்கரம் அல்ல.

15.
சுற்று வட்டம் வரைக. இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் சமபக்கங்களின் நீளங்கள் 6 செ.மீ
16.
P = { x : –3 ≤ x ≤ 0, x \(\in \) Z} மற்றும் Q = 210 என்ற எண்ணின் பகாக் காரணிகளின் தொகுப்பு, இவை இரண்டும் சமான கணங்களா?
17.
பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்?(–7, 3)
18.
(1,−6) மற்றும் (−5,2) ஆகியன ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப் புள்ளிகள் மற்றும் அதன் நடுக்கோட்டு மையம் (−2, 1) எனில் முக்கோணத்தின் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.
19.
கொடுக்கப்பட்ட படத்தில் இருக்கும் அமைத்துக் கோடுகளின் சாய்வுகளைக் காண்க.
20.
P = {x : x∈W மற்றும் 0 < x < 10} Q = {x : x = 2n+1, n∈W மற்றும் n < 5} மற்றும் R = {2, 3, 5, 7, 11, 13} எனில் P −(Q ⋂ R) = (P − Q) U (P − R) என்பதைச் சரிபார்க்க.
21.
பகுதியை விகிதப்படுத்திச் சுருக்குக \({2\sqrt{6}-\sqrt{5}\over 3\sqrt{5}-2\sqrt{6}}\)
22.
வென்படங்களைப் பயன்படுத்தி \(A\cup (B\cap C)=\left( A\cup B \right) \cap (A\cup C)\) என்பதைச் சரிபாக்க.
23.
பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளை வகுத்து ஈவு மற்றும் மீதியைக் காண்க (x3 + 3x2 – 31x +12)÷(x–4)
24.
வடிவங்களின் பெயர்களை வலப் பக்கத்திலுள்ள படங்களுடன் பொருத்துக.
| சாய் சதுரம் | ![]() |
| பட்டம் | ![]() |
| இணைகரம் | ![]() |
| சரிவகம் | ![]() |
| செவ்வகம் | ![]() |
25.
A(3,1) , B(6,4) மற்றும் C(8,6) என்ற புள்ளிகள் ஒரு கோடமையும் புள்ளிகள் என நிறுவுக.
26.
''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக இருக்க நிகழ்தகவு.
\(\frac { 1 }{ 10 } \)
\(\frac { 2 }{ 10 } \)
\(\frac { 3 }{ 10 } \)
\(\frac { 4 }{ 10 } \)
27.
ஒரு பகடையானது ______ இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.
சிறியதாக
சீரானதாக
ஆறு முகம் கொண்டதாக
வட்டமாக
28.
ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முயற்சி
எளிய நிகழ்ச்சி
கூட்டு நிகழ்ச்சி
விளைவு
29.
ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
பட்டறி நிகழ்தகவு
தொண்மை நிகழ்தகவு
(1) மற்றும் (2) இரண்டும்
(1)வும் அல்ல (2) வும் அல்ல
30.
0-க்கும் மற்றும் 1-க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சமவாய்ப்பு மாறி
முயற்சி
எளிய நிகழ்ச்சி
நிகழ்தகவு
31.
\(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } ↑ \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) எனில், இங்கு a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு _______.
தீர்வு இல்லை
இரண்டு தீர்வுகள்
ஒரு தீர்வு
எண்ணற்ற தீர்வுகள்
32.
2x + 3y = k என்பதன் தீர்வு (2, 3) எனில், k இன் மதிப்பைக் காண்க.
12
6
0
13
33.
(−5,1) மற்றும் (2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டை Y-அச்சு உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?
1:3
2:5
3:1
5:2
34.
(6,4) மற்றும் (1, −7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?
2:3
3:4
4:7
4:3
35.
மாறிலிக் கோவையின் படி ______.
3
2
1
0
36.
ax2+ bx+c என்ற ஈருறுப்புக் கோவையின் காரணிகள் (x + 5) மற்றும் (x - 3) எனில், a, b மற்றும் c இன் மதிப்புகள் ______.
1,2,3
1,2,15
1,2,-15
1,-2,15
37.
( 2-3x) இன் பூச்சியம் ________
3
2
2/3
3/2
38.
வட்ட நாற்கரத்தின் ஒரு கோண அளவு 750 எனில், எதிர் கோணத்தின் அளவு ______.
1000
1050
850
900
39.
படத்தில் PQRS மற்றும் PTVS என்ற இரண்டு வட்ட நாற்கரங்களில் ㄥQRS = 800 எனில், ㄥTVS = ______.
800
1000
700
900
40.
வட்ட நாற்கரம் ABCD யில் ㄥA = 4x, ㄥC = 2x எனில், x இன் மதிப்பு______.
300
200
150
250
41.
படத்தில் வட்டமையம் O மற்றும் ∠ACB = 400 எனில் ㄥAOB=__________.
800
850
700
650
42.
கொடுக்கப்பட்ட வெண்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது
Z−(XUY)
(XUY)⋂Z
Z−(X⋂Y)
ZU(X⋂Y)
43.
கீழ்காண்பவற்றில் எது சரி?
A − B = A ⋂ B
A − B = B − A
(A U B)' =A' U B'
(A ⋂ B)' =A' U B'
44.
ஒரு செவ்வக வடிவ வீட்டு மனையின் நீளம் மற்றும் அகலங்கள் முறையே 5 x 105 மற்றும் 4 x 104 மீட்டர் எனில், அதன் பரப்பளவு என்ன?
9 x 101மீ2
9 x 109மீ2
2 x 1010மீ2
20 x 1020மீ2
45.
\((2\sqrt{5}-\sqrt{2})^2\) இன் சுருங்கிய வடிவம் ______.
\(4\sqrt{5}+2\sqrt{2}\)
\(22-4\sqrt{10}\)
\(8-4\sqrt{10}\)
\(2\sqrt{10}-2\)
46.
பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?
\(\sqrt{8\over 18}\)
\({7\over 3}\)
\(\sqrt{0.01}\)
\(\sqrt{13}\)
47.
Q1,Q2, Q3, Q4 என்பன கார்ட்டீசியன் தளத்தின் நான்கு காற்பகுதிகள் எனில்,\({ Q }_{ 2 }\cap { Q }_{ 3 }\) என்பது ______.
\({ Q }_{ 1 }\cup { Q }_{ 2 }\)
\({ Q }_{ 2 }\cup { Q }_{ 3 }\)
வெற்றுக் கணம்
x-அச்சின் குறைப் பகுதி.
48.
\(\frac { 1 }{ 3 } \) ஐ எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணால் பெருக்கினால் அதன் தசம விரிவு ஓர் இலக்கத்தோடு முடிவுறு தசம விரிவாக அமையும்?
\(\frac { 1 }{ 10 } \)
\(\frac { 3 }{ 10 } \)
3
30
49.
n என்பது ஓர் இயல் எண் எனில் \(\sqrt { n } \) என்பது _______ .
எப்போதும் ஓர் இயல் எண்
எப்போதும் ஒரு விகிதமுறா எண்
எப்போதும் ஒரு விகிதமுறு எண்
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்
50.
புள்ளி (0, –7) ________ இல் அமையும்.
x-அச்சின் மீது
இரண்டாம் காற்பகுதியில்
y-அச்சின் மீது
நான்காம் காற்பகுதியில்
51.
புள்ளி (–3,5) ________ ஆவது காற்பகுதியில் அமையும்.
I
II
III
IV
52.
X = {x : x = 4(n – 1), n ∈ N} மற்றும் Y = {y : y = 3n – 2n – 1, n ∈ N}, எனில் X∪Y என்பது
W
X
Y
N
53.
கணம் A = {x, y, z} எனில், A இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின் எண்ணிக்கை _____.
8
5
6
7
54.
U ={x | x ∈ N, x < 10} மற்றும் A = {x | x ∈ N, 2 ≤ x < 6} எனில் (A′)′ என்பது ____.
{1, 6, 7, 8, 9}
{1, 2, 3, 4}
{2, 3, 4, 5}
{ }
55.
சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் சமமெனில் அந்தச் சாய்சதுரம் ஒரு _______.
இணைகரம் ஆனால் செவ்வகம் அல்ல
செவ்வகம் ஆனால் சதுரம் அல்ல
சதுரம்
இணைகரம் ஆனால் சதுரம் அல்ல
56.
பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
(ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க
57.
புள்ளிகள் (3, 5) மற்றும் (8, 10) ஆகியவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.
58.
\(A=\{ y:y=\frac { a+1 }{ 2 } ,a\epsilon W\) மற்றும் \(a\le 5\} \) \(B=\{ y:y=\frac { 2n-1 }{ 2 } ,n\epsilon W\)மற்றும் n<5} மற்றும் \(C=\left\{ -1-\frac { 1 }{ 2 } ,1,\frac { 3 }{ 2 } ,2 \right\} \)எனில் \(A-(B\cup C)=(A-B)\cap (A-C)\)எனக்காட்டுக.
59.
ஒரு பொதுவான அடிப்பக்கத்தையும் ஒரு சோடி இணை கோடுகளுக்கு இடையேயும் அமைந்துள்ள முக்கோணம் மற்றும் இணைகரத்தின் பரப்புகள் 1 : 2 என்ற விகிதத்தில் அமையும் என நிறுவுக.
1.
(i) மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை n(S)=1500
n(A) = 860 (பகுதி நேர பணிப்பெண்கள்)
n(B) = 370 (முழு நேரம் மட்டும்)
n(A⋂B) = 250 இரண்டும்
இருவகை பணிப்பெண்களும் வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை \(P(n(A⋂B))=\frac {n(A⋂B) }{ n(S) } =\frac { 250 }{ 1500 } =\frac { 1 }{ 6 } \)
(ii) பகுதிநேரப் பணிப்பெண்கள் வைத்திருக்கும் நிகழ்வு \(P(A )=\frac { n(A) }{ n(S) } =\frac { 860 }{ 1500 } =\frac { 43 }{ 75 } \)
(iii) மொத்த குடும்பங்கள் n(S) = 1500
பணிப்பெண்கள் வைத்திருக்காமல் இருக்கும் நிகழ்வு n(C)=1500-(860+370+250) = 1480
=1500-1480=20
பணிப்பெண்கள் வைத்திருக்காமல் இருக்கும் நிகழ்தகவு \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 20 }{ 1500 } =\frac { 1 }{ 75 } \)
2.
இந்தச் சோதனையில் ஒவ்வொரு முயற்சியிலும் அணி I ஆனது அணி II ஐ எதிர்கொள்கிறது. அணி I வெற்றி பெறுவதற்கான நிலையைக் கருதுவோம்.
இங்கே மொத்தம் 10 முயற்சிகள் உள்ளன. அவற்றில் அணி I முதலாவது, ஆறாவது மற்றும் ஒன்பதாவது ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. அணி I வெற்றி பெறுவதற்கான ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவு = \(\frac { 3 }{ 10 } \) அல்லது 0.3
3.
மொத்த வேலையாட்கள் = 42
ஒப்பீட்டு நிகழ்வெண்:
மகிழுந்து பயன்படுத்துவோருக்கான நிகழ்தகவு = \(\frac { 7 }{ 42 } =\frac { 1 }{ 6 } \)
இரு சக்கர வண்டி பயன்படுத்துவோருக்கான நிகழ்தகவு = \(\frac { 20 }{ 42 } =\frac { 10 }{ 21 } \)
மிதிவண்டி பயன்படுத்துவோருக்கான நிகழ்தகவு = \(\frac { 15 }{ 42 } =\frac { 5 }{ 14 } \)
இந்த எடுத்துக்காட்டில் நிகழ்தகவுகளின் மொத்தக் கூடுதல் 1ஐ விட அதிகமாகவில்லை என்பதைக் கவனிக்கவும்.\(\frac {1}{6}+\frac {10}{21}+ \frac {5}{14} = \frac {7}{42}+\frac {20}{42}+\frac {15}{42}= 1\)
4.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A( -1, 3), B( 1, -1) மற்றும் C(5,1)
A வழியே செல்லக்கூடிய நடுக்கோடு AD
BC யின் நடுப்புள்ளி L\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
\(\left( \frac { 1+5 }{ 2 } ,\frac { -1+1 }{ 2 } \right) =\left( \frac { 6 }{ 2 } ,\frac { 0 }{ 2 } \right) \)=(,0)
A(-1,3) மற்றும் D(3,0) x1=3, y1=0, x2=-1, y2=3
தொலைவு d =\(\sqrt { ({ x }_{ 2 }-{ x }_{ 1 })^{ 2 }({ y }_{ 2 }-{ y }_{ 1 })^{ 2 } } \)
நடுக்கோட்டின் நீளம் AD =\(\sqrt { (-1-)^{ 2 }+(3-0)^{ 2 } } \)
=\(\sqrt { (-4)^{ 2 }+3^{ 2 } } =\sqrt { 16+9 } =\sqrt { 25 } \)=5 அலகுகள்.
நடுக்கோட்டின் நீளம் AD =5 அலகுகள்

5.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(2,-4), (-3,-7) மற்றும் (7,2) என்க.
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் G (x, y)
\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 3 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 3 } \right) \)
(x1,y1)=(2,-4), (x2,y2)=(-3,-7), (x3,y3)=(7,2)
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்
G(x,y)=\(G\left( \frac { 2-3+7 }{ 3 } ,\frac { -4-7+2 }{ 3 } \right) \)
=\(G\left( \frac { 6 }{ 3 } ,\frac { -9 }{ 3 } \right) \)
=G(2,-3)
(ii) (-5, -5), (1, -4) மற்றும் D(-4, -2)
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(-5,-5), (1,-4) மற்றும் (-4,-2) என்க.
(x1,y1)=(-5,-5), (x2,y2)=(1,-4), (x3,y3)=(-4,-2)
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்
G(x,y) =G\(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 3 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 3 } \right) \)
=\(G\left( \frac { -5+1-4 }{ 3 } ,\frac { -5-4-2 }{ 3 } \right) \)
=\(G\left( \frac { -8 }{ 3 } ,\frac { -11 }{ 3 } \right) \)
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் \(G\left( \frac { -8 }{ 3 } ,\frac { -11 }{ 3 } \right) \).
6.
(a +b +1)(a2 +b2 +1−ab −b −a)
7.
x3-x = x(x2-1)
= x(x2-12)
= x(x+1)(x-1)
8.
(i) \(\sqrt{63}-\sqrt{175}+\sqrt{28}=\sqrt{9\times 7}-\sqrt{25\times 7}+\sqrt{4\times 7}\)
\(=3\sqrt{7}-5\sqrt{7}+2\sqrt{7}\)
\(=(3\sqrt{7}+2\sqrt{7})-5\sqrt{7}\)
\(=5\sqrt{7}-5\sqrt{7}\)
=0
(ii) \(2\sqrt[3]{40}+3\sqrt[3]{625}-4\sqrt[3]{320}\)
\(=2\sqrt[3]{8\times 5}+3\sqrt[3]{125\times5}-4\sqrt[3]{64\times 5}\)
\(=2\sqrt[3]{2^3\times 5}+3\sqrt[3]{5^3\times5}-4\sqrt[3]{4^3\times 5}\)
\(=2\times 2 \sqrt[3]{5}+3\times 5\sqrt[3]{5}-4\times 4\sqrt[3]{5}\)
\(=4\sqrt[3]{5}+15\sqrt[3]{5}-16\sqrt[3]{5}\)
\(=(4+15-16)\sqrt[3]{5}=3\sqrt[3]{5}\)
9.
(i) \(81^{5\over4}=(\sqrt[4]{81})^{5}=(\sqrt[4]{3}^4 )^5\) = 35 =3 x 3 x 3 x 3 x 3 = 243
(ii) \(64^{-2\over3}={1\over 64^{2\over3}}={1\over (\sqrt[3]{64})^2}={1\over4^2}\) (எப்படி?) =\({1\over16}\)
10.
A={ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}
B={0, 1, 2, 3, 4, 5}
A∪B={0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}
A∩B= {1, 2, 3, 4, 5}
A-B= {6, 7, 8, 9, 10,}
B-A= {0}
11.
x = -3
12.
(i) 0.3010011000111… மற்றும் 0.3020020002…
0.301202200222....
0.301303300333....
(ii) \(\frac{6}{7}\) மற்றும் \(\frac{12}{13}\)
\(\frac{6}{7}=0 . \overline{857142} \ldots \quad \frac{12}{13}=0 . \overline{923076}\)
இரு விகிதமுறா எண்கள் 0.8616611666111.....
0.871771177711.....
(iii) \(\sqrt { 2 } \) மற்றும் \(\sqrt { 3 } \)

\(\sqrt { 2 } \) = 1.414.....
\(\sqrt { 3 } \) = 1.732.....
\(\therefore\) இரு விகிதமுறா எண்கள் 1.515511555.... , 1.616611666......
13.
n(A) = 36, n(B) = 10, n(A∪B) = 40, n(A′) = 27
(i) n(U) = n(A) + n(A′) = 36 + 27 = 63
(ii) n(A∩B) = n(A) + n(B) – n(A∪B) = 36 + 10 – 40 = 46 – 40 = 6.
14.
நாற்கரம் அல்ல
15.


படி 1 : கொடுக்கப்பட்ட அளவுகளுக்கு Δ ABC வரைக.
படி 2 : எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (AB மற்றும் AC) மைக்குத்துக் கோடுகள் வரைக. அவை வெட்டிக்கொள்ளும் புள்ளி S, சுற்றுவட்ட மையம் ஆகும்.
படி 3 : Sஐ மையமாகவும், SA = SB = SCஐ ஆரமாகவும் கொண்டு A, B மற்றும் C வழியே செல்லும் ஒரு சுற்றுவட்டம் வரைக.
சுற்றுவட்ட ஆரம் = 4.3 செ.மீ.
16.
P = {–3, –2, –1, 0}, 210 இன் பகாக் காரணிகள் 2,3,5 மற்றும் 7 எனவே, Q = {2, 3, 5, 7} n(P) =4 மற்றும் n(Q) = 4. ஆகையால், கணம் P மற்றும் கணம் Q ஆகியவை சமான கணங்கள்.
17.
x -ஆயத்தொலை குறை மதிப்பு மற்றும் y – ஆயத்தொலை மிகை மதிப்பு. எனவே , (–7,3) என்ற புள்ளி II ஆவது காற்பகுதியில் அமையும்
18.
ஒரு முக்கோணத்தின் மூன்று முனைப் புள்ளிகள் A(1, –6), B(–5, 2) மற்றும் C(x3 , y3) என்க.
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் (-2, 1) ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் பெறுவது,
\(\frac { { x }_{ 1 }+{ x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 3 } \)=-2
\(\frac { 1-5+{ x }_{ 3 } }{ 3 } \)=-2
−4 + x3 = −6
x3 = −2
\(\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 3 } \)=1
\(\frac { -6+2+{ y }_{ 3 } }{ 3 } \)=1
−4 + y3 = 3
y3 = 7
எனவே மூன்றாவது முனைப் புள்ளி (-2, 7) ஆகும் .
19.
AB இன் சாய்வு = \(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { 3 }{ 5 } \)

EF இன் சாய்வு =\(\frac { 4 }{ 7 } \)
PQ இன் சாய்வு = வரையறுக்கப்படாதது
RS இன் சாய்வு =0.
20.
கணங்கள் P, Q மற்றும் R ஐப் பட்டியல் முறையில் எழுதுவோம்.
P = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9}, Q = {1, 3, 5, 7, 9}
மற்றும் R = {2, 3, 5, 7, 11, 13}
முதலில் (Q\( \cap \)C) = {3, 5, 7}
P - (Q\( \cap \)R) = {1, 2, 4, 6, 8, 9} .......(1)
அடுத்து P - Q = {2, 4, 6, 8} மற்றும் P-R = {1, 4, 6, 8, 9}
ஆகவே, (P - Q)U(P - R) = {1, 2, 4, 6, 8, 9}
(1) மற்றும் (2) லிருந்து, P - (Q \( \cap \) R) = (P - Q) U (P - R) என்பது சரிபார்க்கப்பட்டது.
21.
\({2\sqrt{6}-\sqrt{5}\over 3\sqrt{5}-2\sqrt{6}}\)
\(=\frac{2 \sqrt{6}-\sqrt{5}}{3 \sqrt{5}-2 \sqrt{6}} \times \frac{3 \sqrt{5}+2 \sqrt{6}}{3 \sqrt{5}-2 \sqrt{6}} \)
\(=\frac{6 \sqrt{30}+4 \times 6-3 \times 5-2 \sqrt{30}}{9 \times 5-4 \times 6} \)
\(=\frac{4 \sqrt{30}+24-15}{45-24}=\frac{9+4 \sqrt{30}}{21} \)
22.
L.H.S \(A\cup (B\cap C)\)

(2) மற்றும் (5) லிருந்து,
\(A\cup (B\cap C)=\left( A\cup B \right) \cap (A\cup C)\) என நிரூபிக்கப்பட்டது.
23.
ஈவு : x2+7x–3
மீதி : 0
24.

25.
தொலைவு வாய்பாட்டின் படி
\(AB=\sqrt { \left( 6-3 \right) ^{ 2 }+\left( 4-1 \right) ^{ 2 } } =\sqrt { 9+9 } =\sqrt { 18 } =3\sqrt { 2 } \)
\(BC=\sqrt { \left( 8-6 \right) ^{ 2 }+\left( 6-4 \right) ^{ 2 } } =\sqrt { 4+4 } =\sqrt { 8 } =2\sqrt { 2 } \)
\(AC=\sqrt { \left( 8-3 \right) ^{ 2 }+\left( 6-1 \right) ^{ 2 } } =\sqrt { 25+25 } =\sqrt { 50 } =5\sqrt { 2 } \)
\(AB+BC=3\sqrt { 2 } +3\sqrt { 2 } =5\sqrt { 2 } =AC\)
ஆகவே , தரப்பட்டுள்ள புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் அமைகின்றன.
26.
(c)
\(\frac { 3 }{ 10 } \)
27.
பகடை சீரானதாக இருக்கும் பொழுது விளைவுகள் சமவாய்ப்பு உடையனவாக இருக்கின்றன.
28.
சமவாய்ப்பு சோதனையின் முடிவு, விளைவு என அழைக்கப்படுகிறது. (வரையறை)
29.
(a)
பட்டறி நிகழ்தகவு
30.
(d)
நிகழ்தகவு
31.
\(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } \neq \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) ; ஒரே தீர்வு
32.
2x + 3y = k
2(2) + 3(3) = k
= 4 + 9 = 13
33.
\(\left(\frac{m x_2+n x_1}{m+n}, \frac{m y_2+n y_1}{m+n}\right)\) பிரிவுச் சூத்திரப்படி
x அச்சுத் தொலைவு = 0
\(\frac{\mathrm{m}(2)+(-5) \mathrm{n}}{\mathrm{m}+\mathrm{n}} =0 \)
\(\frac{\mathrm{m}}{\mathrm{n}} =\frac{5}{2} \)
\(\mathrm{~m}: \mathrm{n} =5: 2 \)
BD ன் நடுப்புள்ளி (3, 4)
34.
\(\left(\frac{m x_2+n x_1}{m+n}, \frac{m y_2+n y_1}{m+n}\right)\) பிரிவுச் சூத்திரப்படி
y அச்சுத் தொலைவு = 0
\(\left(\frac{m (1)+n (6)}{m+n}, \frac{m (-7)+n (4)}{m+n}\right)\)
\(\therefore \frac{m(-7)+n(4)}{m+n}=0 \)
\(\Rightarrow -7 m+4 n=0 \)
\(\therefore m: n=4: 7 \)
35.
(d)
0
36.
p(-5) = a(-52) + b(-5) + c = 25a - 5b + c = 0 ....(1)
p(+3) = a(+32) + b(3) + c = 9a + 3b + c = 0 ....(2)
25a - 5b = 9a + 3b
25a - 9a = 3b + 5b
16a = 8b
a/b = 8/16 = 1/2
a = 1 b = 2 என (1) ல் பிரதியிட
25(1) - 5(2) = -c
25 - 10 = 15 = -c
c = -15
37.
2 - 3x = 0 ⇒ 3x = 2
x = 2/3
38.
180o - 75o = 105o
39.
படத்தில் ∠QRS = 100o
∠TPS = 180o - 100o = 80o
(∵ PQRS ஓர் வட்ட நாற்கரம்)
∠TVS = 180o - 80o = 100o
40.
4x + 2x = 180o
6x = 180o
x = 30o
41.
ㄥAOB = 2ㄥACB = 2 x 40o = 80o
42.
(c)
Z−(X⋂Y)
43.
(d)
(A ⋂ B)' =A' U B'
44.
l = 5 x 105
b = 4 x 104
பரப்பளவு = l x b
5 x 105 x 4 x 104
= 20 x 105+4
= 20 x 109 = 2.0 x 101 x 109 = 2 x 1010மீ2
45.
\((2 \sqrt{5}-\sqrt{2})^2=4 \times 5-2 \times 2 \sqrt{5} \times \sqrt{2}+2 \)
\(20-4 \sqrt{10}+2=22-4 \sqrt{10} \)
46.
(i) \(\sqrt{8\over 18} =\sqrt{4\over 9} = 2/3\) ஒரு விகிதமுறு எண்
(2) 7/3 ஒரு விகிதமுறு எண்
(3) \( \sqrt{0.01} = \sqrt{1\over 100} = 1/10\) ஒரு விகிதமுறு எண்
(4) \( \sqrt{13}\) ஒரு விகிதமுறா எண்
(∵ முடியுறா சூழல் தன்மைக்கொண்டது)
47.
(c)
வெற்றுக் கணம்
48.
\(\frac { 1 }{ \not 3 } \times \frac {\not 3}{10} = 1/10 = 0.1\)
49.
(d)
ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா எண்
50.
(c)
y-அச்சின் மீது
51.
(b)
II
52.
(b)
X
53.
A = {x, y, z}
A ன் உட்கணங்கள் = {x},{y},{z}, {x, y}, {y, z}, {x, z}, {x, y, z}, { }
54.
U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 }
A = {2, 3, 4, 5}
A' = {1, 6, 7, 8, 9}
(A')' = U - A' = {2, 3, 4, 5}
55.
(c)
சதுரம்
56.
நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் = 1184 ஆகவே n = 1184
(i) E1 என்பது கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E1) = 233, அதாவது r1 = 233
P(E1) = \(\frac { { r }_{ 1 } }{ n } =\frac { 233 }{ 1184 } \)
(ii) E2 என்பது அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E2 ) = 1069 , அதாவது , r2 = 106
P(E2) = \(\frac { { r }_{ 2 } }{ n } =\frac { 106 }{ 1184 } \)
ஆகவே அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு
P(E'2) = 1 - P(E2)
= 1 - \(\frac { 106 }{ 1184 } \) = \(\frac { 1078 }{ 1184 } \)
57.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(3, 5), B(8, -10) என்க. மேலும் புள்ளி P(x,y) ஆனது கோட்டுத்துண்டு AB ஐ 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி என்க.
பிரிவுச் சூத்திரத்தின்படி,
P(x, y)=P\(\left( \frac { m{ x }_{ 2 }+n{ x }_{ 1 } }{ m+n } ,\frac { m{ y }_{ 2 }+n{ y }_{ 1 } }{ m+n } \right) \)
இங்கு, x1 = 3, y1 = 5, x2 = 8, y2 = −10 மற்றும் m = 3, n = 2
ஆகையால், P(x, y) = P\(\left( \frac { 3(8)+2(3) }{ 3+2 } ,\frac { 3(-10)+2(5) }{ 3+2 } \right) \)
= P\(\left( \frac { 24+6 }{ 5 } ,\frac { -30+10 }{ 5 } \right) \)=P(6, -4)
58.

a = {0, 1, 2, 3, 4, 5}
\(\Rightarrow \quad y=\frac{a+1}{2}=\frac{0+1}{2}=\frac{1}{2}\)
\(\begin{aligned}
y & =\frac{1+1}{2}=\frac{2}{2}=1 \\
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2+1}{2}=\frac{3}{2} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{3+1}{2}=\frac{4}{2}=2
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{4+1}{2}=\frac{5}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{5+1}{2}=\frac{6}{2}=3
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \mathrm{A} & =\left\{\frac{1}{2}, 1, \frac{3}{2}, 2, \frac{5}{2}, 3\right\} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{B} & =\left\{y: y=\frac{2 n-1}{2}, n \in \mathbb{W}, n<5\right\} \\
\end{aligned}\)
n = {0, 1, 2, 3, 4}
\(\Rightarrow\) \(\begin{aligned}
y & =\frac{2 \times 0-1}{2}=\frac{-1}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 1-1}{2}=\frac{1}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 2-1}{2}=\frac{3}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 3-1}{2}=\frac{5}{2} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 4-1}{2}=\frac{7}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \mathrm{B} & =\left\{-\frac{1}{2}, \frac{1}{2}, \frac{3}{2}, \frac{5}{2}, \frac{7}{2}\right\} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{C} & =\left\{-1,-\frac{1}{2}, 1, \frac{3}{2}, 2\right\} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{B} \cup \mathrm{C} & =\left\{-1,-\frac{1}{2}, \frac{1}{2}, 1, \frac{3}{2}, 2, \frac{5}{2}, \frac{7}{2}\right\} \\
\end{aligned}\)
A - (BUC) = {3} .............(1)
A - B = {1, 2, 3}
\(\begin{aligned}
\mathrm{A}-\mathrm{C} & =\left\{\frac{1}{2}, \frac{5}{2}, 3\right\}
\end{aligned}\)
(A - B) \(\cap\) (A - C) = {3} ...........(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(A-(B\cup C)=(A-B)\cap (A-C)\) என நிரூபிக்கபட்டது.
59.
தரவு :
\(\Delta\)ABE, இணைகரம் ABCD ஒரே அடிப்பக்கத்தையும் l1, l2 என்ற இணைகோடுகளுக்கும் இடையிலும் அமைந்துள்ளது.
நிருபிக்க வேண்டியது:
\(\Delta\) ABE -ன் பரப்பு = \(\frac{1}{2}\) இணைகரம் ABCD -ன் பரப்பு.

நிரூபணம் :
\(\Delta\)ABE - ன் பரப்பு = \(\frac{1}{2}\)\(\times\) அடிப்பக்கம் \(\times\) குத்துயரம்
\(\begin{aligned}
& =\frac{1}{2} \times \mathrm{AB} \times \mathrm{EF}
\end{aligned}\)
\(\begin{aligned}
& =\frac{1}{2} \times \mathrm{AB} \times h
\end{aligned}\) ......(1)
இணைகரம் ABCD-ன் பரப்பு = \(\frac{1}{2}\)\(\times\)(இணைப்பக்கங்களின் கூடுதல்) \(\times\) உயரம்
\(=\frac{1}{2} \times(\mathrm{AB}+\mathrm{CD}) \times h=\frac{1}{2} \times(\mathrm{AB}+\mathrm{AB}) \times h\)
[\(\because\) ABCD ஓர் இணைகரம்] (எதிர்பக்கங்கள் சமம்)
= \(\frac{1}{2}\) \(\times\) 2AB \(\times\) h = AB \(\times\) h .......(2)
(1), (2) லிருந்து \(\Delta\) ABE - ன் பரப்பு = \(\frac{1}{2}\) இணைகரம் ABCD -ன் பரப்பு என நிரூபிக்கப்பட்டது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards