9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
IX- STD Term 3 Model Question
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?
கடல் நீர்
கண்ணாடி
உலர்ந்த காற்று
மனித இரத்தம்
2.
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
டார்ஸெட்
ஷகிவால்
சிவப்பு சிந்தி
3.
தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக் டீரியாக்கள் நைட்ரஜன் சுழற்சியில் _________ க்கு காரணமாக உள்ளன .
அமோனியாவாதல்
நிலைப்படுத்துதல்
நைட்ரேட்டாதல்
நைட்ரேட் வெளியேற்றம்
4.
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________ தாக்கும்.
குடலினை
நுரையீரலினை
கல்லீரலினை
நிணநீர் முனைகளை
5.
ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.
மாற்றியம்
புறவேற்றுமை வடிவம்
சங்கிலித் தொடராக்கம்
படிகமாக்கல்
6.
மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் _________ ஆகும்.
7.
எச் 1 என் 1 (H1 N1 ) வைரஸ் ____________ ஐ உருவாக்குகிறது.
8.
திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.
9.
பன்னாட்டு வின்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்
10.
ஒரு பொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
11.
பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.
12.
SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக
13.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
14.
உயிர்க்கோளத்தில் காணப்படும் நீர் நிலைகளில், உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே காணப்படும் செயல்பாடுகளை விளக்குக.
15.
பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
16.
பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.
17.
சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது?
18.
திரவமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை படத்துடன் விவரி.
19.
கூற்று: விலங்குகளிலிருந்து உணவுப் பொருள் தயாரித்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
காரணம்: பால் செயல்முறைத் திட்டம் மற்றும் நீலப் புரட்சியால் உணவு தயாரித்தல் அதிகரித்துள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
20.
கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
21.
கூற்று: ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன் மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, தண்டவாளம் பூமியில் புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
காரணம்: அழுத்தமானது அது செயல்படும் பரப்புடன் நேர்விகிதத் தொடர்புடையது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
22.
கூற்று: ஒரு கொள்கலனில் நிலையாக உள்ள திரவத்தின் பரப்பின் மீது புவிஈர்ப்பினால் செயல்படும் விசை எப்பொழுதும் கிடைத்தளத்தில் செயல்படும்.
காரணம்: நிலையாக உள்ள பாய்மத்தின் மீது செயல்படும் விசை பரப்பிற்கு குத்தாக இருக்கும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
23.
ஒரு பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்படும் காற்றானது மிதப்பு விசையை உண்டாக்குகிறது. இந்த மிதப்பு விசைபலூனின் எடையைவிட அதிகமாகும். எனவே பலூன் மேலெழும்புகிறது.
அ) பலூன் மேலெழும்பும் போது, அதன் அடர்த்தியில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?
ஆ) பலூன் மிதப்பதற்கான நிபந்தனைகள் யாவை ?
இ) மிதப்பு விசை _______________ ன் அடர்த்தியைப் பொறுத்தது.
24.
சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.
25.
புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்திலும், சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ள செயற்கைக் கோளின் வேகத்தைக் கணக்கிடவும். R – 6370 கிமீ எனக் கொள்க .
(குறிப்பு: மணி நேரத்தை வினாடிகளில் மாற்றியபின் கணக்கிடவும்)
26.
100 செமீ-3 பருமனளவு கொண்ட ஒரு பொருள் நீர்க் குவளையில் முழுவதுமாக மூழ்கியுள்ள து. நீர் மற்றும் குவளையின் எடை நீரில் மூழ்குவதற் குமுன் 700 கிராம் எனில், நீரில் மூழ்கியுள்ளபோது நீர் மற்றும் குவளையின் எடையைக் கண்டுபிடி
27.
AYUSH பற்றி நீ அறிவது என்ன?
28.
துணைக்கோள் என்றால் என்ன ? துணைக்கோளின் இரு வகைகள் யாவை ?
29.
உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.
30.
வேதிச்சிகிச்சை என்றால் என்ன?
31.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?
32.
வீச்சு
33.
மீயொலி
34.
வீச்சு
35.
LINUX
36.
Keyboard
37.
DPT
38.
WHO
39.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன ? இதைத்தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
40.
பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்த அறிவியலறிஞரின் பெயர் என்ன ? ஏதேனும் நோய் உயிர்பொருளின் பெயர்களை உன்னால் கூறமுடியுமா?
41.
அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி எவ்வாறு நமது செவிகளை வந்தடைகிறது?
42.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பிளாஸ்மிடு
1.
(b)
கண்ணாடி
2.
(a)
ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
3.
(d)
நைட்ரேட் வெளியேற்றம்
4.
(b)
நுரையீரலினை
5.
(a)
மாற்றியம்
6.
( )
மின்பகுப்புக்கலம்
7.
( )
பன்றிக்காய்ச்சல்
8.
( )
அடர்த்தி
9.
(a)
10.
(a)
11.
பசுமாடுகளும் எருமை மாடுகளும் இந்திய கால்நடைக்குள் அடங்கியுள்ளன.பால் உணவு, தோல் மற்றும் போக்குவரத்திற்காக அவை வளர்க்கப்படுகின்றன.அவை இரண்டு வித சிற்றினங்களாகக் காணப்படுகின்றன.அவையாவன .போஸ் இண்டிகஸ் (இந்திய பசுக்களும் , காளைகளும் மற்றும்)போஸ் புபாலிஸ் (எருமைகள் ). இந்தவகைக் கால் நடை விலங்கினங்கள் பாலிற்காகவும் , வயல் வேலைகளுக்காவும் வளர்க்கப்படுகின்றன.இவ்விலங்குகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பால் உற்பத்தி இனங்கள் : பால் உற்பத்தி இனங்கள் பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.[பசுக்கள் (பால் சுரக்கும் பெண் இனம்) அதிகளவு பல தருபவையாகும் (கறவை விலங்குகள் )
இழுவை இனங்கள் : இவவகை இனமாடுகள் வேளாண்மைப் பயன்பாடுகளாகியா உழுதல், பாசனம் , வண்டியிழுத்தல்.அம்ரித்மகால் , காங்கேயம் , உம்பளச் சேரி, மாலவி , சிரி மற்றும் ஹல்லி கார் போன்ற இனங்கள் இவற்றில் அடங்கும் ,இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் , பசுக்கள் குறைந்தளவே பாலினைக் கொடுப்பவையாக இருக்கின்றன.
இரு பயன்களையும் தரும் இனங்கள் : இந்த வகை இனங்கள் பால் உற்பத்தியாகவும் பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காவும் பயன்படுகின்றன,இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால்விரும்பி வளர்க்கப்படுகின்ற்ன. ஏனெனில் இவைகளின் பசுக்கள் அதிகளவு பால் சுரப்பவையாக உள்ளன.இவற்றின் சிறப்பாக இழுவை வேலைகளை செய்பவையாகப் பயன்படுகின்றன.
12.
(i) சோனார் (SONAR) என்ற சொல்லின் விரிவாக்கம் Sound Navigation And Ranging என்பதாகும். சோனார் என்ற கருவியானது மீயொலி அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியிலுள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றைக் கணக்கிட பயன்படுகிறது. இதில் மீயொலிகளைப் பரப்பக்கூடிய சாதனமும், மீயொலிகளை உணரக்கூடிய உணர்வியும் உள்ளன. அவை படகு மற்றும் கப்பல்களுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. பரப்பியானது மீயொலிகளை உருவாக்கி பரப்புகிறது. இவ்வலைகள் நீருக்குள் பயணித்து, கடலின் அடித்தளத்தில் உள்ள பொருட்களின் மீது (அதாவது கடல் படுகை, மீன்களின் கூட்டம்) பட்டு எதிரொலிப்படைந்து மீண்டும் வரும் பொழுது உணர்வியினால் உணரப்படுகிறது. உணர்வியானது மீயொலிகளை மின்சார சைகைகளாக மாற்றமடையச் செய்கின்றது. அவற்றிலிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. நீரில் ஒலியின் திசைவேகம் மற்றும் பரப்பப்பட்ட ஒலிக்கும், பெறப்பட்ட எதிரொலிக்கும் இடையே உள்ள கால இடைவெளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, அதன் மூலம் நீருக்குள்ளிருந்து மீயொலி அலைகளை எதிரொலித்த, பொருளின் தொலைவைக் கணக்கிடலாம்.
(ii) பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை 't' எனவும், நீரின் வேகத்தை 'v' எனவும் கொண்டால், மீயொலியானது கடந்த தொலைவு 2d=vxt ஆகும். இவ்வாறு பொருள்களின் தொலைவைக் கண்டறியும் முறை எதிரொலி நெருக்கம் (echo-ranging) எனப்படும். கடலின் ஆழத்தை அறியவும், நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள், நீர்முழ்கிக் கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றை இடம் கண்டறிவதற்கு இந்த முறையானது பயன்படுகின்றது.
13.
வட்ட வடிவமான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளியில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உட்புறக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெளிப்புற சூரிய மண்டலத்தில் ஒப்பீட்டளவில் சூரியனை மெதுவாகச் சுற்றிவரும் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வெளிப்புறக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
(i) புதன்:
சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். மற்ற எந்த கோள்களையும் விட சூரியனை இது வேகமாகச் சுற்றி வருகின்றது - இதன் சுற்றுக்காலம் 87.97 புவி நாள்களாகும். ஆனால், இது தன்னைத்தானே சுழல எடுத்துக் கொள்ளும் சுழற்சிக்காலம் மிக அதிகம். அதாவது, புதனில் ஒரு நாள் என்பது 58.65 புவி நாள்களாகும்.
(ii) வெள்ளி:
கிட்டத்தட்ட பூமியின் அளவையொத்த ஒரு சிறப்புக்கோள் வெள்ளி. நம் சூரியமண்டலத்தில் காண்ப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது வெள்ளி ஆகும். நிலவிற்குப் பிறகு, வானத்தில் தெரியும் மிகப்பிரகாசமான வான்பொருள் இதுவே. இதில் ஒரு நாள் என்பது அதனுடைய ஒரு ஆண்டை விட நீண்டது. வெள்ளியில் ஒரு நாள் என்பது 243 புவி நாள்களாகவும் ஒரு ஆண்டு என்பது 224.7 புவி நாள்களாகவும், உள்ளது. மற்ற கோள்களைப்போல் அல்லாமல், இது எதிர்த் திசையில் சுழல்வதால், இங்கு சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. வெள்ளியை நாம் வெறும் கண்ணால் எளிதில் காணலாம். அது கிழக்கு அல்லது மேற்குத் திசையில் கீழ்வானத்தில் தெரியும்.
(iii) பூமி:
சூரிய மண்டலத்திலுள்ள. கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியானது, சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365.25 நாட்களாகவும், அதன் சுழற்சிக்காலம் 23.93 மணியாகவும் உள்ளது. பூமியின் சுழற்சி அச்சானது அதன் சுற்றுத்தளத்திற்கு செங்குத்தாக அமைந்திருப்பதில்லை. மாறாக, சற்று சாய்வுடன் உள்ளது. இவ்வாறு சாய்ந்துள்ளதால்தான், பூமியில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப்பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.
(iv) செவ்வாய்:
புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. இங்கு ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 விநாடியாகவும், ஒரு வருடம் என்பது 686.96 புவி நாள்கள், கிட்டத்தட்ட 687 நாள்களாகவும் உள்ளது.
(v) வியாழன்:
வியாழன் கோளானது, பெருங்கோள் என அழைக்கப்ப்டுகின்றது. கோள்களிலேயே மிகப்பெரியது இதுவே. இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும். மற்ற கோள்களையெல்லாம் விட மிக வேகமாக இது சுழல்வதால், வியாழனின் ஒரு நாள் என்பது 9 மணி 55 நிமிடங்கள் 30 வினாடிகளாக உள்ளது. அங்கு ஒரு வருடம் என்பது 11.862 புவி வருடங்கள் ஆகும்.
(vi) சனி:
வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரும் வாயுக்கோளாகும். இது மிக வேகமாக சுழல்கின்றது. சனியின் வருவதால் இதன் சுற்றுக்காலம் 59.46 புவி ஆண்டுகளாகவும் இருக்கின்றது. குறைந்தபட்சம் சனியின் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.
(vii) யுரேனஸ்:
யுரேனஸ் கோளானது ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். இது சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் ஆகும். இது மிகவும் சாய்ந்து சூழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் சுற்றுக்காலம் 84 புவி ஆண்டுகள் மற்றும் சுழற்சிக்காலம் 17.2 மணி நேரமாகும். இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.
(viii) நெப்டியூன்:
இக்கோளானது பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளுட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன . அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.
14.
ஆவியாதல்: ஆவியாதல் என்பது தண்ணீர் ஆவியாக மாறும் ஒரு வகையாகும்.இங்கு நீரானது கொதிநிலையை அடைவதற்கு முன் வாயுவாக மாற்றப்படுகிறது.பூமியின் மேற்பரப்பு பெருங்கடல்கள் , ஏரிகள் , குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
பதங்கமாதல் : பதங்கமாதல் என்பது திட நிலையில் இருந்து ஒருபொறுக்க திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும்.வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
நீராவிப்போக்கு (Transpiration) : தாவரங்களில் காணப்படும் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் (இலைத்துளை , பட்டைத்துளை முதலியன ) மூலம் தாவரங்கள் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு வெளியிடும் நிகழ்வு நீராவிப்போக்கு என அழைக்கப்படுகின்றன.
குளிர்வித்தல்: நீராவியாக உள்ள நீரை வாயுநிலைக்கு மற்றும் நிகழ்வு குளிர்வித்தல் என்று அழைக்கப்படுகிறது. இது நீராவிப்போக்கிற்கு எதிரான நிகல்வாகும்.உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாக காணப்படுவதால் அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகின்றது.இந்த நீர்த்திவலைகள் அருகருகே வரும்பொழுது மேகங்களும் பனிமூட்டங்களும் உருவாகின்றன.
மழைப் பொழிவு: காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்றுசேர்ந்து பெரிய நீர்த்திவலைகளாக மாறி மழையாக பொழிகின்றன.தூறல் மழை , பனி , ஆலங்கட்டி மழை ஆகியன மழைப்பொழிவில் அடங்கும்.
தரைமேல் வழிந்தோடும் நீர்: மழைப்பொழிவு ஏற்பட்டவுடன் பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது. இந்த நீர் ஒன்றாக இணைந்து கால்வாய்கள் , ஆறுகள் , ஏரிகள் , குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகிறது.
ஊடுருவல்: மழை நீரானது வழிந்தோடியவுடன் சில பகுதி நீரானது மண்ணுள் உட்புகுகின்றது. இது மண்ணிற்குள் ஆழமாகச் சென்று நிலத்தடி நீரை அதிகரிக்கின்றது.
உள் வழிந்தோடல்: மழை நீரின் மற்றோரு பகுதியானது நுண்ணிய அல்லது உடைந்த பாறைகளின் உள்ளே பாய்ந்து செல்கின்றது.
15.
வைரஸ்கள் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
(i) தாவர வைரஸ்கள்:
இவை தாவரங்களைத் தாக்கி நோயினை உருவாக்குகின்றன. எ.கா: புகையிலை மொசைக் (பல வண்ண) வைரஸ், காலிபிளவர் மொசைக் வைரஸ், உருளைக்கிழங்கு வைரஸ்.

(ii) விலங்கு வைரஸ்கள்:
இவ்வகை வைரஸ்கள் விலங்குகளைத் தாக்கி நோயுண்டாக்குகின்றன. எ.கா: அடினோ வைரஸ், ரெட்ரோவைரஸ் (எச்.ஐ.வி) இன்புளுயன்சா வைரஸ்.

(iii) பாக்டீரியா வைரஸ் (பாக்டீரியோஃபேஜ்கள்): இவைகள் பாக்டீரியாவினைத் தாக்கி பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்கள் ஆகும்.
எ.கா: பாக்டீரிய அழிப்பு வைரஸ்.(T4)

16.
| உணவுச் சேர்க்கை வகைகள் |
செயல்பாடு | உதாரணம் |
| உணவு பதப்படுத்துதல் |
நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவைப் பாதுகாக்கின்றன. |
வினிகர், சோடியம், பென்சோயேட், பென்சாயிக் அமிலம், சோடியம் நைட்ரைட் |
| நிறமிகள் | உணவிற்கு இனிய நிறத்தைக் கொடுக்கின்றன. |
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயனின், குர்குமின் |
| செயற்கை இனிப்பூட்டிகள் |
உணவில் இனிப்புச் சுவையை கூட்டுகின்றன |
சாக்கரீன், சைக்லமேட் |
| சுவையூட்டிகள் | உணவு வகைகளின் சுவையை மேம்ப்படுத்துகின்றன. |
மோனோசோடியம் குளுட்டமேட், கால்சியம் டைகுளுட்டமேட் |
| எதிர் ஆக்சிஜனேற்றிகள் |
ஆக்சிஜினேற்றத்தைத் தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன. இதய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. |
வைட்டமின் C, வைட்டமின் E, கரோட்டின் |
17.
சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களாகவோ இணைவதாகும். சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பனாகும். கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளை சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றது.


18.

(i) ஒரு திரவத்தின் அடர்த்தியை அல்லது ஒப்படர்த்தியை நேரடியாக அளப்பதற்குப் பயன்படும் கருவி திரவமானி எனப்படும். மிதத்தல் தத்துவத்தின் அடிப்படியில் திரவமானிகள் வேலைசெய்கின்றன. ஒரு திரவத்தில் மூழ்கியுள்ள பகுதியினால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடையானது திரவமானியின் எடைக்குச் சமமாக இருக்கும்.
(ii) திரவமானியானது அடிப்பகுதியில் கோள வடிவத்திலான குடுவையையும் மேற்பகுதியில் மெல்லிய குழாயையும் கொண்ட நீண்ட உருளை வடிவ தண்டைக் கொண்டுள்ளது. குழாயின் அடிப்பகுதியானது பாதரசம் அல்லது காரீயக் குண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது திரவமானியானது, மிதப்பதற்கும் திரவங்களில் செங்குத்தாக நிற்பதற்கும் உதவுகிறது. மேலே உள்ள மெல்லிய குழாயில் அளவீடுகள் உள்ளதால், திரவத்தின் ஒப்படர்த்தியை நேரடியாக அளக்கமுடிகிறது.
(iii) சோதிக்க வேண்டிய திரவத்தினை கண்ணாடிக் குடுவையில் நிரப்ப வேண்டும். திரவமானியை அத்திரவத்தில் மெதுவாக செலுத்தி, மிதக்கவிட வேண்டும். குழாயின் அளவீடுகள் திரவத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவு, திரவத்தின் ஒப்படர்த்தியாகும்.
(iv) திரவமானிகளை பல்வேறு பயன்பாட்டிற்கு ஏற்றபடி அளவுத்திருத்தம் (Calibration) செய்து பாலின் அடர்த்தியைக் கண்டறியும் பால்மானி (Lactometer), சர்க்கரையின் அடர்த்தியைக் கண்டறியும் சர்கரைமானி (Saccharometer) மற்றும் சாராயத்தின் அடர்த்தியைக் கணக்கிடும் சாராயமானி (Alcoholometer) போன்றவை உருவாக்கப்படுகின்றன.
19.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
20.
விடை: ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
21.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
22.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
23.
அ) பாலுன் மெலெழும்பும் போது காற்றின் அடர்த்தி குறைகிறது.
ஆ) பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட காற்றின் எடையைக் காட்டிலும் பலூனின் எடை குறைவாக உள்ளபோது அது மிதக்கிறது.
இ) பாய்மத்தி
24.
அ) காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்படி அழுத்தப்பட்டாலும் நீரில் மூழ்கிவிடப்படாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் விழுந்தவர் அதைப் பற்றிக் கொண்டால், முக்கிவிடாமல் மிதந்து கரையை அடைந்து விடலாம். எனவே அந்த வழிப் போக்கர் காற்று நிரப்பட்ட ரப்பர் குழாயைப் பயன்படுத்தினார்
ஆ) காற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைக் காட்டிலும் குறைவு, எனவே காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்பொழுதும் நீரில் மிதக்கும்.
இ) சரியான நேரத்தில் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் அருகில் உள்ளவரை உதவிக்கு அழைத்தனர். வழிப்போக்கர் காற்றடைத்த ரப்பர் குழாய் தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிந்திருந்தார். இதனால் அந்த மனிதன் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றப்பட்டான்.
25.
செயற்கைக் கோள் நிலை கொண்டுள்ள
உயரம் (h) = 36000 கி.மீ
= 36,000 \(\times\) 103 மீ
=36000000 மீ
செயற்கைக் கோளின் சுழற்சிக்காலம் (T) = 24 மணிநேரம்
= 24 \(\times\) 60 \(\times\) 60 வினாடி
= 86400 வினாடி
புவியின் விட்டம் (R) = 6370 கி.மீ
= 6370 \(\times\) 103 மீ
= 6370000 மீ
செயற்கைக் கோளின் வேகம் (V) = ?
v = \(\frac {2\pi (R +h)}{T}\)
= 2 \(\times\) \(\frac {22}{7}\) \(\times\) \(\frac{6370000+36000000} {86400}\)
= 2 \(\times\) \(\frac {22}{7}\) \(\times\) \(\frac{(637+3600)} {86400}\times10\)4
=\(\frac{44} {7}\times\frac {4237} {86400}\times10\)4
செயற்கைக் கோளின் வேகம் (v) = 3082 மீ /வி
26.
பொருளின் பருமனளவு cc =100 \(\times\) 10-6m3
m =\(\rho V\)
அலுமினியத்தின் அடர்த்தி =\(\rho \) = 2700 Kg m-3 எனக் கொள்க.
W = mg =\(\rho\)Vg = 2700 \(\times\) 100 \(\times\) 10-6 \(\times\) 9.8
= 2.646 N
பொருள் நீரில் மூழ்கியுள்ள போது எடை = 1000 kg-3
=2.646-g(1000 \(\times\) 100 \(\times\) 10-6)
=2.646 - 0.98
=1.666N
மூழ்குவதற்கு முன் நீர் மற்றும் குவளையின் எடை = 900 \(\times\) 10-3Kg force
=900 \(\times\) 10-3 kg \(\times\) 9.8
= 8.82 N
எனவே மூழ்கிய பின் நீர் மற்றும் குவளையின் எடை = 8.82 + 1.666N
= 10.486 N
= \(\frac { 10.486 }{ 9.8 } \) = 1.07 kg
= 1070 g
மூழ்கியுள்ள போது நீர் மற்றும் குவளையின் எடை = 1070 g.
27.
அநேக மருத்துவ முறைகளான ஆயுர்வேத, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) போன்ற மருத்தவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பய்னபடுத்தப்படுகின்றன. இவ்வகை மருந்துகள் தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன.
28.
ஒரு சுற்றுப் பாதையில் சூரியமண்டலத்திலுள்ள கோள்களை சுற்றி வரும் பொருள் துணைக்கோள் எனப்படும்.
துணைக்கோள்கள் இரண்டு வகைப்படும். அவை ,
1. இயற்கையான துணைக்கோள்
2. செயற்கைக்கோள்
29.
பள்ளி மற்றும் வீடுகளில் நீரைச் சேமித்தல்:
i) வாறல் குளிர்பான்களில் (Showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
ii) குறைவாக நீர் வரக்கூடிய குடிநீர்க்குழாய்களைப் (tap) பயன்படுத்திட வேண்டும்.
iii) மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
iv) குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரிசெய்தல்.
v) முடிந்தவரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.
vi) நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
30.
மனித உடலின் செல்களைப் பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் அழித்து ஒரு சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக சில கரிமச்சேர்மங்களைப் பயன்படுத்துவதையே வேதிச்சிகிச்சை என்கிறோம்.
31.
i) பயன்படுத்திய பின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகள் குறுகியகாலம் மற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ii) இவை கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி நீர் நிலைகளை பாதிக்கின்றன.
iii) இவ்வகை நெகிழிகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேட்டை உண்டுபணணுகின்றன. எனவே இவை ஆபத்தானவை.
32.
மீட்டர்
33.
20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி
34.
சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி
35.
இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்
36.
உள்ளீட்டு கருவி
37.
Diphtheria Pertussis Tetanus
டிப்தீரியா; பெர்டுசிஸ், டெட்டானஸ் (மூன்று நோய் தடுப்பு)
38.
World Health Organization
உலக சுகாதார நிறுவனம்
39.
ரோட்டா வைரஸ் என்ற நுண்ணுயிரி வாந்தி பேதியினை ஏற்படுத்துகிறது.
சுற்றுப்புறம், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றைச் சுகாதாரமாக வைத்துக் கொள்வது இதைத் தடுக்கும் முறையாகும்.
40.
அலெக்சாண்டர் ஃபிளமிங்
மற்ற எதிர் உயிர்ப்பொருள்கள்: ஸ்ட்ரெப்டோமைசின், எரித்ரோமைசின், பேசிட்ரோசின், செபலோஸ்ப்ராய்ன்
41.
பொருளொன்று அதிர்வடையும் போது பொருளுக்கு அருகிலுள்ள துகளானது தனது சமநிலைப் புள்ளியிலிருந்து விலக்கப்படுகிறது. இத்துகள் அருகிலுள்ள துகள் மீது ஒரு விசையினைச் செலுத்தி காரணமாக அருகிலுள்ள துகள் தனது ஓய்வு நிலையிலிருந்து நகர்ந்து செல்கிறது. அருகிலுள்ள துகளை இடப்பெயர்ச்சி அடையச் செய்தபின்னர் முதல் துகள் தனது பழைய நிலையை அடைகிறது. ஒலியானது நம் செவியை அடையும் வரை இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
42.
பாக்டீரியா செல்லில் காணப்படும் சிறிய வட்டமான குரோமோஸோமல் டி.என்.ஏ பிளாஸ்மிடு எனப்படுகிறது. இது சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards