9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/12/2018
2nd Term Important Questions
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் யாவை?
2.
"உயிரினப் பன்மை இழப்பு" என்பதன் பொருள் கூறுக.
3.
'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?
4.
கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?
5.
கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.
6.
இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?
7.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.
8.
அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?
9.
பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.
10.
ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.
11.
அரசமைப்புத்தீர்வு வழிகளுக்கான உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
12.
மனித உரிமை என்றால் என்ன?
13.
'கடல் உவர்ப்பியம்' என்றால் என்ன?
14.
நகரமயமாதலுக்கு உதவிய காரணிகள் யாவை?
15.
உற்பத்தியாளர் - சிதைப்பவர்
16.
ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி
17.
உற்பத்தியாளர்கள், தர்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
18.
கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.
19.
வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
20.
இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு _________
தென் சூடான்
தென் ஆப்பிரிக்கா
நைஜீரியா
எகிப்த்
21.
'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________
அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்திய பெருங்கடல்
அண்டார்டிக் பெருங்கடல்
22.
மழைக்காடுகள் பல்லுயிர்க் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்
மிக அதிகப்படியான ஈரப்பதம்
மிக அதிகமான வெப்பநிலை
மிக மெல்லிய மண்ணடுக்கு
வளமற்ற மண்
23.
பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம்_________
தங்கம்
இரும்பு
24.
வில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தார்.
சூரியனே பிரபஞ்சத்தின் மையம்
பூமியே பிரபஞ்சத்தின் மையம்
புவியீர்ப்பு விசை
இரத்தத்தின் சுழற்சி
25.
_________பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.
பாமினி
விஜயநகர்
மொகலாயர்
நாயக்கர்
26.
ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.
அப்பாசித்து வம்சம்
உமையது வம்சம்
சசானிய வம்சம்
மங்கோலியா வம்சம்
27.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.
முதலாம் இன்னசென்ட்
ஹில்ட்பிராண்டு
முதலாம் லியோ
போன்டியஸ் பிலாத்து
28.
அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
ஆ) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.
இ) மகமுத் கவான் அலாவுதீன் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.
ஈ) போர்ச்சுக்கீயர்கள் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினர்.
29.
(i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.
(ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
(iii) விர்ஜில் எழுதிய 'ஆனெய்ட்' ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.
(iv) ஸ்பார்ட்டகஸ், ஜூலியஸ் சிஸரைக் கொன்றார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும் (iv) சரி
ஈ) (iii) சரி
30.
அதிக மழை
31.
சர்கோசா கடல்
32.
கிரேட் பேரியர் ரீப்
33.
மரியானா அகழி
34.
ரியால்
35.
ஏ.டி.எம்
36.
நாணய சுழற்சி
37.
அமெரிக்க டாலர்
1.
உணவுப் பொருள்கள், கைவினைப் பொருட்கள் விலங்குகள், தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள், தோல், மணிகள், ஓடுகள், புகையிலை, உப்பு, சோழிகள் மற்றும் அடிமைகள் என்பனவாகும்.
2.
மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு உயிரினப்பன்மையின் இழப்பு என்கிறோம்.
3.
(i) அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே அல்லது புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்குமிடையே, தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும்.
(ii) இது கொலம்பியப் பரிமாற்றம் (Columbian Exchange) என்று அறியப்படுகிறது.
4.
(i) ரோம் மற்றும் கார்த்தேஜ் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற மூன்று போர்கள் பியூனிக் போர்கள் என அழைக்கப்படுகின்றன.
(ii) ஹன்னிபால் என்ற தளபதியை கார்த்தேஜ் பியூனிக் போருக்கு அனுப்பிவைத்தது. ரோமின் படையைத் தோற்கடித்த அவர் இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார்.
(iii) ரோம் படைக்கு தலைமையேற்றிருந்த பாபியஸ், மனம் தளரவில்லை. இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் அவரைத் தோற்கடித்தார்.
(iv) ரோமானியப் படைகளால் பின் தொடரப்பட்ட ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார்.
5.
(i) ரோமானியப் பேரரசர்களில் ஒருவரான கான்ஸ்டன்டைன் கிறித்தவராக மாறினார்.
(ii) இதனால் கிறித்தவம் ரோமானியப் பேரரசின் அரசு மதமாயிற்று.
6.
திருச்சபையானது படிப்பறிவில்லா தனது உறுப்பினர்கள் மீது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது.
திருச்சபையிலிருந்து விலக்கிவைப்பது, மதவிலக்கு செய்வது எனும் இரண்டு கருவிகளைத் திருச்சபை தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.
7.
1. பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது.
2. பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது.
3. இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
4. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்படத் தொடங்கியது. 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.
5. இது 1949 இல் நாட்டுடைமையாக்கப்பட்டது. அச்சடித்த பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது.
6. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
8.
| S.No | அடிப்படை உரிமைகள் | வாழ்க்கை அனுபவம் (சொந்த அனுபவத்தை எழுதவும்) |
| 1. | சமத்துவ உரிமை | நான் வாழும் இடத்தில் முழு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன். |
| 2. | சுதந்திர உரிமை | நான் மதுரையில் பிறந்தேன். இப்பொழுது சேலத்தில் வசிக்கிறேன். |
| 3. | சுரண்டனுக்கு எதிரான உரிமை | சிற்றுண்டி சாலை நடத்தும் ஒருவர் எங்கள் குடும்ப நண்பர். அவர் 14 வயது உடைய பையனுக்கோ பெண்ணுக்கோ வேலை கொடுத்தால் நான் சண்டையிடுவேன். |
| 4. | சமயம் மற்றும் மதத்ச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை |
நாங்கள் எல்லோரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். ஆனாலும் நாங்கள் புனித ஆலயம், குருத்துவார் ஆகிய இடங்களுக்குச் செல்கிறோம். |
| 5. | சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமை | நான் இப்பொழுது ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன். வெளிநாட்டிற்கு சென்று பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று கனவோடும் இலட்சியத்தோடும் உள்ளேன். |
| 6. | அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை | எதிர்காலத்தில் நான் எனது தங்கை யாழினிக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். |
9.
1. மிகப்பரந்த உவர் நீரைக் கொண்ட பெருங்கடல்கள். நீர்க்கோளத்தில் பெரும்பங்கை தன்னுள் கொண்டுள்ளது.
2. சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக புவியின் மீது பெருங்கடல்கள் உருவாகி இருக்கலாம் எனப் புவி அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
3. தொடக்க காலத்தில் புவி, நீர் இல்லாத கோளாக இருந்தது என்பதை நம்பமுடியாமல் இருந்தது.
4. காலப்போக்கில் புவி குளிரத் தொடங்கிய போது புவியின் உட்பகுதியில் இருந்த நீராவி வெளியேறி வளிமண்டலத்தை அடைந்து மேகங்களாக உருவாகி இடைவிடாத மழையைப் பொழிந்தன.
5. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெய்த இந்த மழை பள்ளங்களை நிரப்பி நாளடைவில் பெருங்கடல்களை உருவாக்கின.
6. அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களைக் கொண்டிருப்பதால் கடல்களும், பெருங்கடல்களும் புவிக்கோளத்தின் வளகிண்ணமாக கருதப்படுகின்றன.
10.
ஏதென்ஸின் எழுச்சி:
(i) ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக குழு ஆட்சியும். கொடுங்கோலாட்சியும் அகற்றப்பட்டு மக்களாட்சி முறை நிறுவப்பட்டது.
(II) ஏதென்சில் சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், சுதந்திர மக்கள் (Freemm) பங்கேற்கும் மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.
(iii) நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
(iv) இம்முறை சமூகத்தின் மேல்தட்டு மக்களால் வெறுக்கப்பட்டது. அவர்கள் மக்களாட்சியைக் கும்பலின் ஆட்சி எனக் கருதினர்.
(v) பல கிரேக்க நகர அரசுகளின் வரலாறு பணம்படைத்த நிலப்பிரபுக்கள் மக்களாட்சியை எதிர்த்து நடத்திய தொடர் போராட்டங்களாகவே அமைந்தது.
(vi) இவற்றில் விதிவிலக்காக இருந்தது ஏதென்ஸ் மட்டுமே. அங்கு மக்களாட்சிமுறை 200 ஆண்டுகள் நீடித்தது.
வளர்ச்சி:
(i) ஏதென்ஸ் நகர் பெரிகிளிஸ் என்னும் மாபெரும் தலைவரைப் பெற்றிருந்தது. அவர் முப்பதாண்டு காலம் அதிகாரத்தில் இருந்தார்.
(ii) இவருடைய ஆட்சியின் போது ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் ஒன்றுக்கெதிராக மற்றொன்று தொடர்ந்து போர் செய்தன. இப்போர்கள் பெலப்போனேசியப் போர்கள் என அறியப்பப்பட்டன.
(iii) ஸ்பார்டாவோடு பகைமை, அந்நகர அரசு செய்த இடையூறுகள் ஆகியவை இருந்தபோதிலும் அவற்றையும் மீறி ஏதென்ஸ் பிரமிக்கச் செய்யும் கட்டடங்களைக் கொண்ட உன்னதமான நகரமாக மாறியது.
(iv) மாபெரும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் அந்நகரத்தில் இருந்தனர். ஆகவே வரலாற்று அறிஞர்கள் இக்குறிப்பிட்ட காலத்தைப் 'பெரிகிஸிசின் காலம்' என அழைக்கின்றனர்.
கொடைகள்:
(i) புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று அறிஞர்களான ஹெரோடோட்டசும், அவர் பின்வந்த தூசிடைடிசும் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.
(ii) பெரிகிளிசின் சகாப்தத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களுள் மகத்தானவர் சாக்ரடீஸ் ஆவார்.
(iii) பிளாட்டோ, அரிஸ்டாட்டில், டெமோகிரைட்ஸ். எபிகியூரஸ் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.
(iv) பிளாட்டோவின் சீடரான அரிஸ்டாட்டில், இயற்பியல் உலகம், சமூக உலகம் பற்றிய கண்டுணர்ந்த அனுபவ அறிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
11.
1. அடிப்படை உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தினால் உத்திரவாதம் தரப்பட்டவை.
2. ஒரு குடிமனின் அடிப்படை உரிமைகள் மறுக்கும்போது, அரசமைப்பு தருகின்ற அரசமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.
3. நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இது நீதிப் பேராணை என்று அழைக்கப்படுகிறது.
4. ஒரு செயல் அரசமைப்பு சட்டத்தின்படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்காக சரியான தீர்வுகள் அரசமைப்பு சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.
5. இவ்வுரிமை அனைத்து உரிமைகளுக்கும் பாதுகாப்பாகவும், காவலாகவும் அமைகின்றது.
12.
1. ஐ.நா.சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது.
2. இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்.
3. எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
13.
கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் விகித அளவு உவபர்ப்பியம் எனப்படும். இது ஆயிரத்தின் பகுதியாக அளவிடப்படுகிறது.
14.
(i)நகரங்களும் சிறுநகரங்களும் தங்களின் வெவ்வேறான பொருளாதாரப் பங்கினைப் பூர்த்தி
செய்தன. பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, நிதி மற்றும் வங்கிச் சேவைகள்
ஆகியவற்றின் மையங்களாகத் திகழ்ந்தன.
(ii) போக்குவரத்துச் சாலைகள் சந்திக்கின்ற இடங்களில் அமைந்திருந்தன. இச்சாலைகள் இந்நகரங்களை நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைத்தன.
(iii) சிறுநகரங்கள் உள்ளூர் சந்தை மையங்களாகச் செயல்பட்டு அருகேயிருந்த கிராம உட்பகுதிகளை இணைத்தன. நாட்டின் தலைநகரங்களும் (எடுத்துக்காட்டாக டெல்லி, ஆக்ரா) பிராந்திய நகரங்களும் (பாட்னா, அகமதாபாத், லக்னோ) அரசியல் மற்றும் நிர்வாக மையங்களாகச் செயல்பட்டன.
15.
| உற்பத்தியாளர் | சிதைப்பவர் |
| சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத்தாமே உற்பத்தி செய்து கொள்ளக் கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும். | இவ்வுரினங்களில் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாதவை ஆகும். |
| இவை தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன. | இவை சா று ண் ணி க ள் என்று அழைக்கப்படுகின்றன. |
| இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. | இவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு |
| தாவரங்கதாவரங்கள், பாசி, பாக்டீரியா போன்றவை எடுத்துக்காட்டாகும். | பூஞ்சைகள்,காளான்கள் போன்றவை உதாரணங்களாகும். |
16.
| ஓத மின்சக்தி | நீர் மின்சக்தி |
| 1. கடல் ஓதங்களினால் நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு ஓத மின்சக்தி என்று பெயர். |
1. ஆறுகளில் வரும் நீரை அணைக்கட்டுகளில் தேக்கி வைத்து நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது நீர் மின்சக்தி எனப்படுகிறது. |
| 2. இந்தியாவில் காம்பே வளைகுடா கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவன சதுப்புநிலப்பகுதிகள் ஓத சக்தி உற்பத்தி செய்ய சாத்தியக் கூறுகள் நிறைந்த மண்டலங்களாக அறியப்பட்டுள்ளன. |
2.தமிழ்நாட்டில் அமராவதி, பவனிசாகர். குந்தா,மேட்டூர், பாபநாசம் போன்றவை முக்கிய நீர்மின் உற்பத்தி நிலையங்களாகும், |
17.
சூழ்நிலை மண்டலத்தில் நமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும். இவை நிலத்திலும், நீரிலும் காணப்படுகின்றன (எ.கா) தாவரங்கள், பாசி, பாக்டீரியா
18.
கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களாகும். நியூபவுண்ட்லாந்தில் உள்ள 'கிராண்ட் பாங்'க் பகுதி சிறந்த எடுத்துக்காட்டாகும்.
19.
வட அரைக்கோளத்தில் நில பகுதிகள் அதிகம் காணப்படுகிறது. எனவே அப்பகுதி நில அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகிறது.
தென் அரைக்கோளப் பகுதிகளில் நீரின் அளவு அதிகம் காணப்படுகிறது. அப்பகுதியில் அண்டார்டிகா கண்டம் பணியாலானது. அதனால் அப்பகுதி நீர் அரைக்கோளம் என்று அழைக்கப்படுகிறது.
20.
(b)
தென் ஆப்பிரிக்கா
21.
(c)
இந்திய பெருங்கடல்
22.
(d)
வளமற்ற மண்
23.
(a)
தங்கம்
24.
(d)
இரத்தத்தின் சுழற்சி
25.
(b)
விஜயநகர்
26.
(a)
அப்பாசித்து வம்சம்
27.
(d)
போன்டியஸ் பிலாத்து
28.
அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
29.
ஈ) (iii) சரி
30.
கடலில் உவர்ப்பியம் குறைவு
31.
வட அட்லாண்டிக் பெருங்கடல்
32.
ஆஸ்திரேலியா
33.
பசிபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி
34.
சவுதி அரேபியா
35.
தானியங்கி இயந்திரம்
36.
85%
37.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards