9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
9th Revision Test model
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஆஸ்பிரின் ஒரு _______ ஆகும்
2.
டைபாய்டு காய்ச்சல் _____________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
3.
திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.
4.
ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .
5.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.
6.
காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
7.
மனித காது செயல்படும் விதத்தினை படத்துடன் விவரி.
8.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
9.
நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவு நீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?
10.
புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?
11.
கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.
12.
காற்றழுத்தமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை விவரிக்கவும்.
13.
கூற்று: மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு என்பது மண்ணில்லாமல் நீரிலேயே தாவரங்களை வளர்ப்பதாகும்
காரணம்: தாவரங்களுக்குத் தேவை யான நீர், தாது உப்புகள், பொதிய ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்படுமானால் மண்ணில்லாச் சூழலிலும் நன்கு வளர்ந்து நல்ல விளை ச்சலைத் தரும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
14.
கூற்று: எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்க முடியும்.
காரணம்: நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத்தடுக்கின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
15.
கூற்று: ஒரு கொள்கலனில் நிலையாக உள்ள திரவத்தின் பரப்பின் மீது புவிஈர்ப்பினால் செயல்படும் விசை எப்பொழுதும் கிடைத்தளத்தில் செயல்படும்.
காரணம்: நிலையாக உள்ள பாய்மத்தின் மீது செயல்படும் விசை பரப்பிற்கு குத்தாக இருக்கும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
16.
கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
17.
அதிர்வடையும் இசைக்கலவை ஒன்று ஏற்படுத்தும் அதிர்வுகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரை அலைநீளம் எதைக் குறிக்கும்?

BD
AB
AE
DE
18.
கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது?
யூட்ரிலஸ் பெட்டிடா
யூட்ரிலஸ் ஜெனியா
பெரியோனிக்ஸ் எக்ஸ்காவட்டஸ்
லாம்பிட்டோ மாரிட்டி
19.
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்.
ஆவியாதல்
குளிர்வித்தல்
பதங்கமாதல்
உட்செலுத்துதல்
20.
ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்
நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை
தாக்கப்பட்ட உறுப்பு
அ மற்றும் ஆ
ஏதுமில்லை
21.
வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனென்னில்,
அதன் கடினத் தன்மை
அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
அதன் சீரான வடிவம்
அது நீரில் கரைவதில்லை
22.
ஒரு பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்படும் காற்றானது மிதப்பு விசையை உண்டாக்குகிறது. இந்த மிதப்பு விசைபலூனின் எடையைவிட அதிகமாகும். எனவே பலூன் மேலெழும்புகிறது.
அ) பலூன் மேலெழும்பும் போது, அதன் அடர்த்தியில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?
ஆ) பலூன் மிதப்பதற்கான நிபந்தனைகள் யாவை ?
இ) மிதப்பு விசை _______________ ன் அடர்த்தியைப் பொறுத்தது.
23.
சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.
24.
பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள, கோளின் சுழற்சிக் காலத்தைக் கணக்கிடவும்.
25.
100 கி எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரில் மிதக் கிறது எனில் அதன் தோற்ற எடையைக் கண்டுபிடி.
26.
காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?
27.
சுற்றுக்காலம் வரையறு
28.
நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?
29.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
30.
கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?
31.
திசைவேகம்
32.
வீச்சு
33.
அழுத்தங்கள்
34.
Keyboard
35.
Software
36.
WHO
37.
ORS
38.
சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?
39.
பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்த அறிவியலறிஞரின் பெயர் என்ன ? ஏதேனும் நோய் உயிர்பொருளின் பெயர்களை உன்னால் கூறமுடியுமா?
40.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக
41.
நீயும் உனது நண்பணும் நிலவில் இருக்கிறீர்கள் .உனது நண்பன் ஏற்படுத்தும் ஒலியை உன்னால் கேட்கமுடியுமா?
42.
கீழ்காண்பவனவற்றை வரையறு
நோய் எதிர்ப்பு தடுப்பூசி
1.
( )
காய்ச்சல் நிவாரணி
2.
( )
சால்மோனெல்லா டைஃபி
3.
( )
அடர்த்தி
4.
(b)
5.
(a)
6.
தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும் .இது கழிவை அழித்து நலத்தை உருவாகும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
கலத்தல் (compounting ) : வைக்கோலுடன் மாட்டுச்சானம் , போன்ற பல வகையான கரிமப் பொருட்கள் மற்றும் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 500C வெப்ப நிலையில் ஒரு வாரத்திற்கு வைத்து பாதுகாக்கப்படுகிறது.
காளான் வித்து (spawn - ஸ்பான்) - ஸ்பான் என்பது காளான் விதையாகும் நோய்நுண்மை நீக்கப்பட்ட நிலையில் பூஞ்சை உடலங்களை தானியங்களில் வைத்து வளர்ப்பதன் மூலம் இது பெறப்படுகிறது.எவ்வாறு பெறப்பட்ட விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
உறையிடுதல் (Casing) : விதை கலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றது.இது காளான் வளர்வதற்கு உதவிபுரிகின்ற்து.மேலும் இது ஈரப்பதத்தை வழங்கி , வெப்ப நிலையை சீராக்குகின்றது.
பொருத்துதல் (pinning): உடலானது சிறிய மொட்டுவிடத் தொடங்கி காளானாக வளர்கின்றது.குண்டுசி போல் காணப்படும் இந்த வெண்மையான மொட்டுக்களுக்கு ஊசிகள் என்று பெயர்.
அறுவடை செய்தல்: காளான்கள் 15 முதல் 230C வெப்பநிலையில் நன்றாக வளரும் இவைகள் ஒரு வாரத்தில் வளரக்கூடியவை.இது அறுவடை செய்யத் தேவையான வளர்ச்சி ஆகும்.மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
பதப்படுத்துதல் : நிறம் மாறுதல் , எடை குறைதல் மற்றும் சுவை இழப்பு ஆகியன அறுவடைக் காலத்தில் காணப்படும் முக்கியப் பிரச்சினையாகும்.இவற்றைத் தவிர்க்க கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தலாம்.
i) குளிர்வித்தல் ii) உலர்த்துதல், iii) கலனில் அடைத்தல் iv) வெற்றிட குளிர்வித்தல் v) காமா கதிர்வீச்சு மற்றும் 150C வெப்பநிலையில் சேமித்தல்
.
7.

மனித காது செயல்படும் விதம் :
i. செவியின் வெளிப்பகுதி செவிமடல் என்று அழைக்கப்படுகிறது. இது சுற்றுப்புறத்திலிருந்து ஒலியைச் சேகரிக்கின்றது.
ii. சேகரிக்கப்பட்ட ஒலியானது, வெளிச் செவிக்குழாய் மூலம் செவிக்கு உள்ளே செல்கிறது.
iii. வெளிச் செவிக் குழாயின் முடிவில், செவிப்பறை (tympanic) உள்ளது.
iv. காற்று ஊடகத்தில் ஒரு நெருக்கமானது உண்டாகும்போது செவிப்பறையின் பகுதியிலுள்ள வெளிப் அழுத்தமானது அதிகரித்து, செவிப்பறையானது உட்புறம் தள்ளப்படுகிறது.
v. அதுபோலவே, காற்று ஊடகத்தில் ஒரு நெகிழ்ச்சி உண்டாகும்போது செவிப்பறையானது, வெளிப்புறம் தள்ளப்படுகிறது.
vi. இவ்வாறாக செவிப்பறையானது அதிர்வடைகின்றது.
vii. இந்த அதிர்வானது. நடுச்செவியிலுள்ள மூன்று எலும்புகளால் (சுத்தி, பட்டை மற்றும் அங்கவடி பலமுறை பெருக்கமடைகிறது.
viii. அலையிலிருந்து பெறப்பட்டு பெருக்கமடைந்த அழுத்தவேறுபாடானது. நடுச்செவியிலிருந்து உட்செவிக்குக் கடத்தப்படுகிறது.
ix. உட்செவியினுள் கடத்தப்பட்ட அழுத்த வேறுபாடானது. காக்ளியா (Cochlea) மூலம் மின்சைகைகளாக மாற்றப்படுகின்றது.
X. இந்த மின் சைகைகள் காது நரம்பு வழியே மூளைக்கு செலுத்தப்படுகின்றன.
xi. மூளையானது அவற்றை ஒலியாக உணர்கின்றது.
8.
வட்ட வடிவமான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளியில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உட்புறக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெளிப்புற சூரிய மண்டலத்தில் ஒப்பீட்டளவில் சூரியனை மெதுவாகச் சுற்றிவரும் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வெளிப்புறக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
(i) புதன்:
சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். மற்ற எந்த கோள்களையும் விட சூரியனை இது வேகமாகச் சுற்றி வருகின்றது - இதன் சுற்றுக்காலம் 87.97 புவி நாள்களாகும். ஆனால், இது தன்னைத்தானே சுழல எடுத்துக் கொள்ளும் சுழற்சிக்காலம் மிக அதிகம். அதாவது, புதனில் ஒரு நாள் என்பது 58.65 புவி நாள்களாகும்.
(ii) வெள்ளி:
கிட்டத்தட்ட பூமியின் அளவையொத்த ஒரு சிறப்புக்கோள் வெள்ளி. நம் சூரியமண்டலத்தில் காண்ப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது வெள்ளி ஆகும். நிலவிற்குப் பிறகு, வானத்தில் தெரியும் மிகப்பிரகாசமான வான்பொருள் இதுவே. இதில் ஒரு நாள் என்பது அதனுடைய ஒரு ஆண்டை விட நீண்டது. வெள்ளியில் ஒரு நாள் என்பது 243 புவி நாள்களாகவும் ஒரு ஆண்டு என்பது 224.7 புவி நாள்களாகவும், உள்ளது. மற்ற கோள்களைப்போல் அல்லாமல், இது எதிர்த் திசையில் சுழல்வதால், இங்கு சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. வெள்ளியை நாம் வெறும் கண்ணால் எளிதில் காணலாம். அது கிழக்கு அல்லது மேற்குத் திசையில் கீழ்வானத்தில் தெரியும்.
(iii) பூமி:
சூரிய மண்டலத்திலுள்ள. கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியானது, சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365.25 நாட்களாகவும், அதன் சுழற்சிக்காலம் 23.93 மணியாகவும் உள்ளது. பூமியின் சுழற்சி அச்சானது அதன் சுற்றுத்தளத்திற்கு செங்குத்தாக அமைந்திருப்பதில்லை. மாறாக, சற்று சாய்வுடன் உள்ளது. இவ்வாறு சாய்ந்துள்ளதால்தான், பூமியில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப்பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.
(iv) செவ்வாய்:
புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. இங்கு ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 விநாடியாகவும், ஒரு வருடம் என்பது 686.96 புவி நாள்கள், கிட்டத்தட்ட 687 நாள்களாகவும் உள்ளது.
(v) வியாழன்:
வியாழன் கோளானது, பெருங்கோள் என அழைக்கப்ப்டுகின்றது. கோள்களிலேயே மிகப்பெரியது இதுவே. இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும். மற்ற கோள்களையெல்லாம் விட மிக வேகமாக இது சுழல்வதால், வியாழனின் ஒரு நாள் என்பது 9 மணி 55 நிமிடங்கள் 30 வினாடிகளாக உள்ளது. அங்கு ஒரு வருடம் என்பது 11.862 புவி வருடங்கள் ஆகும்.
(vi) சனி:
வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரும் வாயுக்கோளாகும். இது மிக வேகமாக சுழல்கின்றது. சனியின் வருவதால் இதன் சுற்றுக்காலம் 59.46 புவி ஆண்டுகளாகவும் இருக்கின்றது. குறைந்தபட்சம் சனியின் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.
(vii) யுரேனஸ்:
யுரேனஸ் கோளானது ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். இது சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் ஆகும். இது மிகவும் சாய்ந்து சூழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் சுற்றுக்காலம் 84 புவி ஆண்டுகள் மற்றும் சுழற்சிக்காலம் 17.2 மணி நேரமாகும். இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.
(viii) நெப்டியூன்:
இக்கோளானது பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளுட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன . அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.
9.
மழைநீர் சேகரிப்பு தவிர , நீரை மறுசுழற்சி செய்வதும் நீரைப் பாதுகாப்பதற்கான முக்கியமான உத்தியாகும்.
மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன் தரக்கூடிய நோக்கங்களுக்காக , மீண்டும் பயன்படுத்துவதே நீர் மறுசுழற்சி ஆகும்.விவசாயம் மற்றும் இயற்கைப் பாசனகள் , தொழிற்சாலைச் செயல்முறைகள் கழிவறைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் நிலத்தடி நீரின் அளவினை அதிகப்படுத்துதல் ஆகியவற்றின் இவை பயன்படுகின்றன.
நீர் மறுசுழற்சி நிலைகள்:
பழைய நீர்ச்சுத்திகரிப்பு முறைகள் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை உள்ளடக்கியவை ஆகும். இவற்றின் மூலம் திண்மங்கள், கரிமப் பொருள்கள் மற்றும் சத்துக்கள் ஆகியன கழிவு நீரிலிருந்து நிக்கப்படுகின்றன,கழிவு நீர்ச் சுத்திகரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளை உள்ளடக்கியதாகும்.
முதல் நிலை சுத்திகரிப்பு:
முதல் நிலை சுத்திகரிப்பு என்பது கழிவுநிரை தற்காலியமாக தொட்டிகளில் சேர்த்து வைத்தல் ஆகும் இவ்வாறு செய்வதன் மூலம் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய், உயவுப் பொருட்கள் போன்ற மிதக்கும் பொருட்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகின்றன. கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.மீதி உள்ள நீர்மம் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு அனுப்பப்படுகின்றது.
இரண்டாம் நிலை சுத்திகரிப்பு : இதன் மூலம் கழிவு நீரில் கரைந்திருக்கும் மக்கும் (உயிரிகளால் சிதைவுறும்) கரிமப் பொருள்கள் நிக்கப்படுகின்றன.இச்செயல் முறை உயிர்வழி வாயுவின் (O2) முன்னிலையில் கற்று நுண்ணுயிரிகளால் நடத்தப்படுகிறது, (உயிரியல் ஆக்ஸீஜனேற்றம்) கழிவு நீரிலுள்ள நுண்ணுயிரிகள் வீழ்படிவதால் முறையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால் உயிரியல் திண்மங்களைப் பிரிந்தவுடன் மீதி உள்ள நீரானது மூன்றாம் கட்ட சுத்திகரிப்புத் தொட்டிக்கு திறந்துவிடப்படுகிறது.
மூன்றாம் நிலை சுத்திகரிப்பு:
மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட சுத்திகரிப்பு என்பது கடைசி கட்ட கழிவுநீர் சுத்திகரிப்பாகும். நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிர்கள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதலை இது உள்ளடக்கியதாகும்.இந்நிலையில் கழிவுநீரில் உள்ள நுண்ணிய கூழ்மத்துகள்கள் வேதியில் முறையில் உறையச் செய்யும் பொருள்களான படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து , விழ்படிவாக்கப்பட்டுசுத்திகரிக்கப்படுகின்றன.
10.
| வயது | தடுப்பு மருந்து | மருந்தளவு |
| பிறந்த குழந்தை | பிசிஜி | 1 வது ஊட்டம் |
| 15 ஆம் நாளில் | வாய்வழியே போலியோ மருந்து | 1 வது ஊட்டம் |
| 6வது வாரம் | டிபிடீ மற்றும் போலியோ | 1 வது ஊட்டம் |
| 10வது வாரம் | டிபிடீ மற்றும் போலியோ | 1 வது ஊட்டம் |
| 14வது வாரம் | டிபிடீ மற்றும் போலியோ | 1 வது ஊட்டம் |
| 9-12 வது மாதங்கள் | தட்டம்மை | 1 வது ஊட்டம் |
இந்த அட்டவணையானது குழந்தைகள் தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக எந்த வயது குழந்தைக்கு எந்த தடுப்பு மருந்தினை வழங்குதல் வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே இந்த அட்டவணையைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
11.
ஆக்ஸிஜனேற்றம் (ஆக்ஸிஜனோடு வினை புரிதல்): உயர் வெப்பநிலையில் காரப்பனானது ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றனது. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்களும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆக்ஸைடுகளையும் நீராவியையும் உருவாக்குகின்றன. அவற்றோடு வெப்பமும் தீச்சுடரும் வெளிப்படும். இதற்கு எரிதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
2C(s) + O2(g) ➝ 2 CO(g) + வெப்பம்
C(s) + O2(g) ➝ CO2(g) + வெப்பம்
CH4(g) + 2O2(g) ➝ CO2(g) + 2H2O(g) வெப்பம்
நீராவியுடன் வினை: கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடையும் ஹைட்ரஜனையும் தருகிறது. இந்த கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.
C(s) + H2O(g) ➝ CO(g) + H2(g)
கந்தகத்துடன் வேதி வினை: உயர்வெப்பநிலை கந்தகத்துடன் இணைந்து கார்பன் டைசல்ஃபைடை உருவாக்குகிறது.
C(s) + S(g) ➝ CS2(g)
உலகத்துடன் வேதி வினை: உயர் வெப்ப நிலையில் கார்பன் சில உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளை உருவாக்குகிறது.
W(s) + C(g) ➝ WC2(s)
12.
வளிமண்டல அழுத்தத்தை அளக்க காற்றழுத்தமானி என்னும் கருவி பயன்படுகிறது. இத்தாலிய இயற்பியலாளர், டாரிசெல்லி என்பவர் முதன்முதலாக பாதரச காற்றழுத்தமானியை உருவாக்கினார். ஒரு முனை திறந்தும் ஓர் முனை மூடியும் உள்ள நீண்ட கண்ணாடிக்கு குழாயில் பாதரசம் நிரப்பப்பட்டு தலைகீழாக ஒரு கொள்கலனில் வைக்கப்பட்ட ஒரு அமைப்பை இது கொண்டுள்ளது. தலைகீழாகக் கவிழ்க்கும் போது, திறந்திருக்கும் முனையை கட்டை விரலால் மூடி, பாதரசம் உள்ள கொள்கலனில் கவிழ்க்க வேண்டும். காற்றழுத்தமானியில் உள்ள பாதரசம் வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்தை சமன்செய்து இயங்குகிறது. காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் போது, கொள்கலனில் உள்ள பாதரசம் கண்ணாடிக் குழாயினுள் தள்ளப்படுகிறது. காற்றின் அழுத்தம் குறையும் போது, குழாயினுள் உள்ள பாதரசம் வெளியேற்றப்படுகிறது. குழாயின் மூடிய முனைக்கு உள்ளே உள்ள பாதரசத்திற்கும் இடையே காற்று இல்லாமல் வெற்றிடமாக உள்ளது. வெற்றிடம் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்த இயலாது. ஆகையால் குழாயில் உள்ள பாதரசம் வளிமண்டலத்தின் அழுத்தத்தைத் துல்லியமாக வழங்குகிறது. இக்கருவியை ஆய்வகத்திலோ அல்லது வானிலை மையத்திலோ பயன்படுத்தலாம்.

13.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
14.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
15.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
16.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
17.
(a)
BD
18.
(a)
யூட்ரிலஸ் பெட்டிடா
19.
(c)
பதங்கமாதல்
20.
(c)
அ மற்றும் ஆ
21.
(b)
அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
22.
அ) பாலுன் மெலெழும்பும் போது காற்றின் அடர்த்தி குறைகிறது.
ஆ) பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட காற்றின் எடையைக் காட்டிலும் பலூனின் எடை குறைவாக உள்ளபோது அது மிதக்கிறது.
இ) பாய்மத்தி
23.
அ) காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்படி அழுத்தப்பட்டாலும் நீரில் மூழ்கிவிடப்படாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் விழுந்தவர் அதைப் பற்றிக் கொண்டால், முக்கிவிடாமல் மிதந்து கரையை அடைந்து விடலாம். எனவே அந்த வழிப் போக்கர் காற்று நிரப்பட்ட ரப்பர் குழாயைப் பயன்படுத்தினார்
ஆ) காற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைக் காட்டிலும் குறைவு, எனவே காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்பொழுதும் நீரில் மிதக்கும்.
இ) சரியான நேரத்தில் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் அருகில் உள்ளவரை உதவிக்கு அழைத்தனர். வழிப்போக்கர் காற்றடைத்த ரப்பர் குழாய் தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிந்திருந்தார். இதனால் அந்த மனிதன் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றப்பட்டான்.
24.
பூமியிலிருந்து கோள்களின் உயரம்(h) = 400 கி.மீ
= 400 \(\times\) 103 மீ
= 400000 மீ
புவியின் விட்டம் (R) = 6370 கி.மீ
= 6370 \(\times\) 103மீ
= 6370000 மீ
ஈர்ப்பியல் மாறிலி (G) = 6.67 \(\times\) 10-11 நி.மீ 2 கி.கி-2
புவியின் நிறை (M) = 5.972 \(\times\) 1024 கி.கி
செயற்கை கோளின் வேகம்
\((v) =\sqrt{\frac{G M}{(R\ +\ h)}} \\ (v) =\sqrt{\frac{6.67\ \times\ 10^{-11}\ \times\ 5.972\ \times\ 10^{24}}{6370000\ +\ 400000}} \\ =\sqrt{\frac{39.83\ \times\ 10^{13}}{6770\ \times\ 10^{3}}} \\ =\sqrt{5.8 \times 10^{7}} \)
\(=10^{3} \sqrt{58}\)
= 7620 மீ /வி
கோள்களின் சுழற்சிக்காலம்
\((T) =2 \pi \frac{(R+h)}{v} \\ =2 \times \frac{22}{7} \times \frac{6370000+400000}{7620} \\ =\frac{44}{7} \times \frac{6770000}{7620} \\ =\frac{297880000}{53340} \)
= 5584 வினாடிகள்
= 93 நிமிடம் (60 வினாடி = 1நிமிடம்)
கோள்களின் சுழற்சிக்காலம் (T) = 93 நிமிடம்
25.
மரக்கட்டையின் எடை = 100 கி
மிதக்கும் பொருளின் மேல் நோக்கு விசையானது மிதக்கும் பொருளின் எடைக்கு சமமானது. எனவே அதன் மேல் நோக்கு விசையானது =100 கிராம்
எனவே அதன் தோற்ற எடை = 0
(மிதக்கும் பொருளின் எடை - மிதக்கும் பொருளின் மேல்நோக்கு விசை)
= 100 - 100
= 0 கிராம்
26.
1) சமையலறை அல்லது உணவுத் தோட்டங்கள்
2) வணிகத் தோட்டங்கள்
3) செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்
27.
புவியை ஒருமுறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம் சுற்றுக் காலம் எனப்படும்.

28.
1) தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்.
2) நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்.
3) நீரின் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டிருத்தல்
4) நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்.
29.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
30.
கார்பன் அலோகத் தன்மை வாய்ந்தது. எனவே இவை நீரில் கரைந்து அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை.
31.
மீட்டர் / விநாடி
32.
சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி
33.
காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி
34.
உள்ளீட்டு கருவி
35.
Geogebra
36.
World Health Organization
உலக சுகாதார நிறுவனம்
37.
Oral rehydration solutions
வாய் வழி நீர்ப்போக்கு கரைசல்
38.
சுதாவிற்கு தீக்காயம் பட்டவுடன் வலி நிவாரணிகளைப் பயன்படுத்த வேண்டும். இவை உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல் எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மங்கள் ஆகும். எனவே இந்த வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
39.
அலெக்சாண்டர் ஃபிளமிங்
மற்ற எதிர் உயிர்ப்பொருள்கள்: ஸ்ட்ரெப்டோமைசின், எரித்ரோமைசின், பேசிட்ரோசின், செபலோஸ்ப்ராய்ன்
40.
கக்குவான் இருமல், காசநோய்
41.
நாம் நிலவில் இருக்கும்போது என் நண்பன் ஏற்படுத்தும் ஒலியை என்னால் கேட்க முடியாது.
42.
நோய் எதிர்ப்பு தடுப்பூசி என்பவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ அல்லது அவற்றின் விளை பொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் அல்லது சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் ஊசியாகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards