9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/01/2019
Unit 3 Important Short Answers
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.
2.
தள்ளு காரணிகள் மற்றும் ஈர்ப்புக் காரணிகள்.
3.
பெருநகரம் மற்றும் மிகப்பெருநகரம்.
4.
கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.
5.
குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்
6.
பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.
7.
பசுமை குடில் விளைவு என்றால் என்ன?
8.
அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.
9.
தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.
10.
ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?
11.
இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?
12.
இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக
13.
பெரிய அளவை நிலவரைபடம் மற்றும் சிறிய அளவை நிலவரைபடம்
14.
புவிமாதிரி மற்றும் நிலவரைபடம்
15.
தொலை நுண்ணுர்வின் கூறுகள் யாவை?
16.
தொலை நுண்ணுர்வு-வரையறு.
17.
நிலஅளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக.
18.
நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?
19.
நிலைவரைபடம் என்றால் என்ன?
20.
புவியை குறித்துக்காட்டுவதற்கான முறைகள் யாவை?
21.
பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?
22.
நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக.
23.
நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?
24.
பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை?
25.
ஒற்றையாட்சி முறை
26.
நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி.
27.
ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை.
28.
சுனாமிக்குப் பிறகு என்ன செய்யவேண்டும்?
29.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?
30.
பேரிடர் முதன்மை மீட்புக் குழு என்பவர் யாவர்?
31.
கொள்ளை நோய் என்றால் என்ன?
32.
மக்கள் அடர்த்தி என்றால் என்ன?
33.
புவியியல் தகவல் அமைப்பு மற்றும் உலக அமைவிட கண்டறியும் தொகுதி
34.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
35.
கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?
36.
கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
37.
ஆழிப் பேரலையை எவ்வாறு எதிர்கொள்வாய்?
38.
நிலநடுக்கத்தின் போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
39.
ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
1.
முதல்நிலைத் தொழில்கள்: முதல் நிலைத் தொழில் என்பது மூலப் பொருல்களை பூமியிலிருந்து பயன்பாட்டிற்கு செய்யப்படும் தொழில். இதன் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், மீன்பிடித்தல், கால்நடைகளை மேய்த்தல், மரங்களை வெட்டி எடுத்தல் மற்றும் வேளாண்மை செய்தல் ஆகிய தொழில்கள் அடங்கும்.
இரண்டாம் நிலைத் தொழில்கள்: இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப் பொருட்கள் முடிவுற்ற பொருள்களாக மாற்றம் செய்யப்படுகின்றன. (எ.கா) இரும்பு, எஃகு தொழிற் சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள்.
2.
மக்களைப் புதிய வாழ்விடத்தை நோக்கி வலிந்து இடம் பெயரச் செய்யும் காரணிகள் தள்ளுக்காரணிகள் எனப்படும். ஈர்ப்பின் காரணமாக புதிய வாழ்விடத்தை நோக்கி மக்கள் இடம் பெயரச் செய்வன ஈர்க்கும் காரணிகள் ஆகும்.
3.
பெருநகரம்: பெருநகரங்களில் நகரங்களைவிடப் பெரியதாகவும், மிக அதிகப் பொருளாதார நடவெடிக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
இஃ து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (உ.ம்) கோயம்புத்தூர்
மாநகரம் பத்து லட்சத்திலிலிருந்து 50 லட்சம் வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (உ.ம்) மதுரை மாநகரம்.
மிகப் பெருநகரம்: மிகப் பெரு நகரம் 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (உ.ம்) சென்னை மாநகரம்.
4.
கிராமக் குடியிருப்பு: கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ அல்லது மசூதி, கோவில், தேவாலயங்களைச் சுற்றியோ அமைந்திருக்கும். இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிவடையக் கூடியதாகவும் இருக்கும்.
நகரக் குடியிருப்பு: நகரம் பொதுவாகக் கிராமத்தை விட பெரியதாகவும், பெருநகரத்தை விடச் சிறியதாகவும் இருக்கும்.
5.
குடியேற்றம்: ஓர் இடத்தில் குடியிருக்கும் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குடியேற்றம் ஆகும். இறப்பு மற்றும் குடியேற்றம் காரணமாக குடியேற்றங்களில் மக்கள் தொகை குறையும்.
குடியிறக்கம்: குடியிறக்கம் என்பது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது குடி இறக்கம் ஆகும். பிறப்பு மற்றும் குடி இறக்கம் காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது.
6.
பிறப்பு வீதம்:
ஒரு ஆண்டில் 1000 பேருக்கு உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் ஆகும்.
இறப்பு வீதம்:
ஒரு ஆண்டில் உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளில் ஒரு வயதிற்குட்பட்ட இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பு விகிதமாகும்.
7.
1. பசுமைக்குடில் வாயுக்களான கார்பன் - டை - ஆக்ஸைடு, மீத்தேன். நீர்மூகை கூறுகள், குளோரோ ஃபுளோரோ கார்பன், கார்பன் மோனாக்சைடு. ஒளிப்பட வேதியல் தனிமங்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்றவை வளிமண்டலத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றாமல் தக்க வைக்கிறது.
2. இவை மேலும் வளி மண்டலத்தின் வெப்ப ஏற்புத்திறன் அதிகரிக்கவும் காரணமாகின்றன.
3. உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலம் பாதிக்கப்படுதல், கடல் மட்டம் உயருதல். கடலோர நிலப்பகுதிகளைக் கடல் ஆட்கொள்ளுதல், பனிக்கட்டி உருகுதல் போன்றவை ஏற்படுகின்றன.
4. உலக வெப்பமயமாதல் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
8.
அதிக மக்களடர்த்தியுள்ள பகுதிகள்:
1. கிழக்கு ஆசியா
2. தெற்கு ஆசியா
3. வடமேற்கு ஐரோப்பா
4. வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி
குறைந்த மக்களடர்த்தியுள்ள பகுதிகள்:
1. மத்திய ஆப்பிரிக்கா
2. வடக்கு ரஷ்யா
3. மேற்கு ஆஸ்திரேலியா
4. கனடா
9.
1. சிங்கப்பூர் - 20%
2. சவுதி அரேபியா - 16%
3. ஐக்கிய அரபு எமிரேட் - 18%
4. ஐக்கிய அமெரிக்க நாடுகள் - 13%
10.
1. ஏழை மக்கள் கிராமப்புறங்களில் நிலவி வரும் தங்களது துயர நிலையிலிருந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொள்ளும் உத்தியாக இடப் பெயர்வை மேற்கொள்கின்றனர்.
2. சற்று வசதி வாயப்பு உடைய மக்கள் தங்களது வாழ்நிலையை மேம்படுத்துவதற்காக இடம் பெயர்தலை மேற்கொள்கின்றனர்.
11.
1. இந்தியாவிலும் தமிழகத்திலும் திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
2. இந்தியாவில் 70% பெண்கள். தமிழ்நாட்டில் 51% பெண்கள் திருமணத்திற்காகவே இடம் பெயர்ந்துள்ளனர்.
12.
1. வேலை
2. கல்வி
3. தொழில்
4. திருமணம்
5. வணிகம்
13.
பெரிய அளவை நிலவரைப் படம்: சிறிய பகுதியை அதிக விவரங்களுடன் காட்ட முடியும்.
சிறிய அளவை நிலவரைப் படம்: ஒரு பெரிய பகுதியைக் குறைவான விவரங்களுடன் காட்ட முடியும்.
14.
1. புவிமாதிரி என்பது ஒரு முப்பரிமாண உருண்டை ஆகும். ஆனால் நிலவரைப்படம் என்பது இரு பரிமாண வடிவம் கொண்டது.
2. புவிமாதிரி பூமி முழுவதையும் காட்டுகிறது. ஆனால் நிலவரைபடம் பூமி முழுவதையும், அல்லது ஒரு பகுதியை மட்டும் காட்டக் கூடியது.
3. புவிமாதிரியானது விரிவான பட அமைப்புக் காட்டக் கூடியது. நிலவரைபடம் இடங்களைப் பற்றிய குறிப்பான தகவல்களைத் தரக்கூடியது.
15.
தொலை நுண்ணுர்வின் கூறுகள் :
(i) ஆற்றல் மூலம் (Energy Source)
(ii) அனுப்பும் வழி (Transmission Path)
(iii) இலக்கு (Target)
(iv) உணர்விகள் (Sensor)
16.
தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும். 'தொலை' என்பது தூரத்தையும் 'நுண்ணுணர்தல்' என்பது தகவல்களைச் சேகரிப்பதையும் குறிக்கும்.
17.
(i) சங்கிலி (Chain)
(ii) பட்டகக் காந்தவட்டை (Prismatic compass)
(iii) சமதள மேசை (Plane Table)
(iv) LDLLLDI60fl (Dumpy level)
(v) HL860 LDLLID (Abney level)
(vi) சாய்வுமானி (Clinometer)
(vii) தியோடலைட் (Theodalite)
(viii) மொத்த ஆய்வு நிலையம் (Total station)
(ix) உலகளாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை (GNSS) ஆகியவை ஆகும்.
18.
ஒரு நிலவரைபடத்தில் தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோட்டுச்சட்டம்,
நிலவரைபடக் குறிப்பு மற்றும் முறைக்குறியீடுகள் ஆகிய கூறுகளைக் கொண்டிருக்கும்.
19.
ஒரு நிலவரைபடம் என்பது காகிதம் / துணி அல்லது ஏதேனும் தட்டையான பரப்பில் புவியின் மேற்பரப்பின் முப்பரிமாண வடிவத்தைச் சிறிய வடிவில் காட்டுவதாகும். நிலவரைபடம் ஒரு புவியியலாளரின் அடிப்படைக் கருவியாகும்.
20.
1. நில வரைபடங்கள்
2. தொலை நுண்ணுணர்வு
3. உலக அமைவிடத்தைக் கண்டறியும் கருவி (GPS)
4. புவியியல் தகவலமைப்பு (GIS)
5. உலகளாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை (GNSS)
6. வலை நிலவரைபடங்கள் (Weh Maps)
21.
பயிர்களின் விளைச்சல் பயிரிடப்படும் பரப்பளவு மட்டுமின்றி பயிர்களின் உற்பத்தித் திறனையும் சார்ந்து இருக்கிறது.
22.
| ஆண்டு | நெல் உற்பத்தித் திறன் |
| 1965-66 | 1409 கிலோ |
| 1975-76 | 2029 கிலோ |
| 1985-86 | 2372 கிலோ |
| 2014-15 | 4429 கிலோ |
23.
1. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தொடர்ந்து கண்காணிக்கிறது.
2. இத்தொடர் கண்காணிப்பின் அடிப்படையில் நீர் பயன்பாடு அளவைக் கொண்டு ஊராட்சி ஒன்றியங்களை இவ்வாரியம் வகைப்படுத்தியுள்ளது.
24.
1. மழைப் பொழிவு
2. நீர் இருப்பு
3. கால நிலை
4. சந்தை விலை
25.
1. ஒற்றையாட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
2. ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப் படுத்தப்படுகின்றன.
3. இது சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
4. ஒற்றையாட்சி முறை குறைந்த செலவுடையது.
5. ஒற்றையாட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
6. அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
26.
| அதிபர் மக்களாட்சி முறை | நாடாளுமன்ற ஆட்சி முறை |
| குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் |
பெரும்பான்மை பெற்ற கட்டையின் தலைவர் பிரதம மந்திரியாவார் |
| அதிபரே அதிகாரம் படைத்தவர் | மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்தது. |
| அதிகாரப் பிரிவினை | அதிகாரப் பிரிவினை மையப்படுத்தப்படாமல் இருப்பது |
| சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள் | தனித்தனியாக சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள் |
| மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார். |
அரசின் தலைவர் -குடியரசுத் தலைவர் |
| அரசாங்கத்தின் தலைவரும் அதிபரே |
அரசாங்கத்தின் தலைவர் - பிரதம அமைச்சர் |
| தனிநபர் தலைமை | கூட்டுத் தலைமை |
| மகா சபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்க மாட்டார். |
கூட்டு மற்றும் தனித்தனியாக பொறுப்புகள். |
27.
| ஒற்றையாட்சி முறை | கூட்டாட்சி முறை |
| ஒரேயொரு அரசு அல்லது துணைக் குழுக்கள் |
இரண்டு நிலையில் அரசாங்கம் |
| பெருபாலும் ஒரே குடியுரிமை | இரட்டைக் குடியுரிமை |
| துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது |
கூட்டாச்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை |
| அதிகாரப் பகிர்வு இல்லை | அதிகாரப் பகிர்வு |
| மையப்படுத்தப்பட்ட அதிகாரம் | அதிகாரப் பரவல் |
28.
1. ஆழிப் பேரலை தொடர்பான அண்மைச் செய்திகளை வானொலி அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
2. நமக்கு காயம் ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து முதலுதவி பெறவேண்டும்.
3. காயமடைந்த அல்லது சிக்கிக்கொண்ட பிற நபர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
4. ஆழிப்பேரலையிலிருந்து யாரையாவது மீட்கவேண்டுமென்றால் சரியான உபகரணங்களுடன் கூடிய வல்லுநர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்
5. சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள், முதியோர். ஊனமுற்றோர். போக்குவரத்து வசதியில்லாதவர்களுக்கு உதவி செய்திட வேண்டும்.
6. எரிவாயு கசிவை உணர்ந்தால் உடனடியாக சன்னல்களைத் திறந்துவிட்டு விட்டு அனைவரையும் வெளியேறச் செய்ய வேண்டும்.
29.
1. தயார் நிலை
2. மட்டுப்படுத்துதல்
3. மீட்பு
4. திட்டமிடல்
5. தடுத்தல்
6. புனர்வாழ்வு
7. மறுசீரமைப்பு
30.
1. காவலர்கள்
2. தீயணைப்புத் துறையினர்
3. அவசர மருத்துவக் குழுக்கள்
31.
1. திடீரெனத் தோன்றும் போரினாலும். கொள்ளையர்களின் எதிர்பாராத் தாக்குதலாலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும்.
2. இதனைப்போன்று திடீரெனத் தோன்றும் நோய்களாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும். இவ்வகை நோய்களை கொள்ளை நோய் என்பர்.
3. 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 'பிளேக்" என்ற கொள்ளை நோயினால் 30 முதல் 60 சதவீதம் மக்கள் இறந்தனர்.
32.
1. ஒரு சதுர கி.மீ நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்கள் அடர்த்தி என்கிறோம்.
2. மிகப்பரந்த நிலப்பரப்பில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதை குறைந்த மக்களடர்த்தி என்கிறோம்.
3. குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதை அதிக மக்களடர்த்தி என்கிறோம்.
33.
புவியியல் தகவல் அமைப்பு:
புவியியல் தகவல் அமைப்பு 1950 இல் வால்டா டாப்ளர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ரோஜர் டாம்லின்டன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பொது மக்கள் செலவுக்காக புவி தகவல் தொகுதி கூகுள் நிலவரைப்படம் , யாகூ நிலவரைப்படம் மற்றும் கூகுள் புவி மாதிரி போன்றவற்றை முதன்மை எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம். மிக முக்கிய முலப் பொருள் இட அமைப்பு ஆகும். வரைபடத்தில் நமக்கு அறிமுகமில்லாத ஓர் இடத்தை அறிந்து கொள்ள அறிமுகமான ஒருமுக வரியிலிருந்து இணைப்பு ப் பெற்று தகவல்களை ஒருங்கிணைக்கலாம். ஒரு பகுதியின் ஒவ்வொரு வகையின் தரவுகளும் ஒரு வரைபடத்தின் தனித்தனி அலகுகளாகச் சேகரித்து வகைப்பட்டுள்ளது.GIS இல் அடுக்குகள் தேவையெனில் பயன்படுத்தவும் தேவை இல்லை எனில் அதை நிக்கவும் செய்யலாம். எடுத்துகாட்டாக மருத்துவமனை , பள்ளிக்கூடம், நீர்நிலைகள் , பூங்காக்கள் ,மற்றும் ஏ.டி.எம் தரவின் இணைப்பைப் பயன்படுத்தி கணினியால் ஒருவரை படத்தை உருவாக்க முடியும்.நிலவரைப் படங்கள் பிரச்சனைக்கூரிய இடங்களைச் சுட்டிக்காட்ட முடியும், வள மேலாண்மை , தகவல் தொடர்பு மற்றும் நகரவட்டார திட்டமிடலுக்குப் பயன்படுகிறது.தேவைகளை திட்டமிடவும் உள்ளாட்சி அமைப்புகளின் வரி விதித்தல் மற்றும் திட்டமிடுதலுக்கு உதவுகிறது.
உலக அமைவிட கண்டறியும் தொகுதி:
ஜி.பி.எஸ் (G.P.S) நமது வாகனங்களிலும் இது கை பேசிகளிலும் இல்லாவிட்டால் எதையோ தொலைத்தது.போன்ற உணரும் அளவிற்கு இன்றியமையாததாக உள்ளது ஜி.பி.எஸ் என்பது உலகின் முதல் மற்றும் தற்போது அதிகம் உபயோகிக்கப்படும் ஜி.என்.எஸ்.எஸ் ஆகும்.இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையினால் உருவாக்கப்பட்டது.1995 இல் முழு உபயோகத்திற்கு வந்தது.நவ்ஸ்டார் என்பது 20,350 கிலோ மீட்டர் நிலப்பரப்பிற்கு மேல் சுற்றி வரும் 6 வெவ்வேறு சுற்றுப்பாதையில் 24 அமெரிக்கா செயற்கைக் கோள்களின் வலைப்பின்னலாகும்.ஒவ்வொரு செயற்கைகோளும் , தொடர்ச்சியான உலகளாவிய தகவல் தொடர்புக்காக ஒரு நாளில் இருமுறை புவியைச் சுற்றி வருகின்றது.ஜி.பிஎஸ் கருவிகள் எல்லா அளவிலும் வடிவிலும் கிடைக்கின்றன. பெரும்பாலானவை கைப்பேசி அளவிலேயே கிடைக்கின்றன. கைகளில் வைத்து கொண்டே , கப்பல்கள் , விமானங்கள் , சரக்கு வண்டிகள் மற்றும் கார்களில் பயன்படுத்தியோ உபயோகிக்கலாம்.
34.
1. பேரூராட்சி
2. நகராட்சி
3. மாநகராட்சி
35.
1. குடிநீர் வழங்குதல்
2. தெரு விளக்குகளைப் பராமரித்தல்
3. சாலைகளைப் பராமரித்தல்
4. கிராம நூலகங்களைப் பராமரித்தல்
5. சிறிய பாலங்களைப் பராமரித்தல்
6. வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
7. வடிகால் அமைப்புகளைப் பராமரித்தல்
8. தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்
9. தெருக்களைச் சுத்தம் செய்தல்
10. இடுகாடுகளைப் பராமரித்தல்
11. பொதுக் கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்
36.
1. சொத்து வரி
2. தொழில் வரி
3. வீட்டு வரி
4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
5. நில வரி
6. கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்
37.
1. முதலில் நீங்கள் இருக்கும் வீடு, பள்ளி,பணிபுரியுமிடம் அடிக்கடி சென்று வருமிடம் போன்றவை கடலோர ஆழிப் பேரலை பாதிப்பிற்குட்பட்ட இடங்களா எனக் கண்டறியவும்.
2. ஆழிப் பேரலை பாதிப்புள்ளாகும் உங்கள் வீடு, பள்ளி. பணிபுரியுமிடம், அடிக்கடி சென்று வருமிடம் போன்றவற்றிலிருந்து வெளியேறும் வழியைத் திட்டமிடவும்.
3. ஆழிப் பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்து கொள்ள உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
4. ஆழிப் பேரலையைப் பற்றி குடும்பத்துடன் கலந்துரையாடவும். ஆழிப் பேரலையின் போது என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
5. ஆழிப் பேரலையைப் பற்றி முன்கூட்டியே கலந்துரையாடுவது அவசர நிலையில் ஆழிப் பேரலைப் பற்றிய பயத்தைக் குறைக்கவும் மதிப்புமிக்க நேரத்தைச் சேமிக்கவும் உதவும்.
38.
1. நிலநடுக்கத்தின் போது நான் கட்டடத்திற்குள் இருந்தால் மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு. ஒரு கையால் தலையை மூடிக் கொள்ளவும். அறையில் எந்த மரச்சாமான்களும் இல்லையெனில், அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
2. அறையின் மூலையில் மேசையின் அடியில் அல்லது கட்டினுக்கு அடியில் அமர்ந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்,
3. கண்ணாடிச் சன்னல். வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
4. நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும். அதன்பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.
39.
1. நில நடுக்கம், கடலுக்கடியில் ஏற்படும் நிலச்சரிவு. எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப்பேரலையாகும்.
2. ஆழிப்பேரலையானது 10 - 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 800 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடியது.
3. இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கி உயிர்ச்சேதத்தையம் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards