9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
IX- STD Term 3 Model Question
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இயற்கைப் பணம் என்றால் என்ன?
2.
தொழிலாளர் நலனுக்காக பி.ஆர்.அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?
3.
"உயிரினப் பன்மை இழப்பு" என்பதன் பொருள் கூறுக.
4.
'நீர்கோளம்' பொருள் கூறுக.
5.
'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?
6.
புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.
7.
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
8.
சிலுவைப் போர்களின் தாக்கம்.
9.
பணத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
10.
உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.
11.
கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக் குறிப்பு வரைக.
12.
உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.
13.
குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை?
14.
மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுக.
15.
வெப்பமண்டல தாவரங்கள் - பாலைவனத்தாவரங்கள்
16.
உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.
17.
உற்பத்தியாளர்கள், தர்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
18.
கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.
19.
வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
20.
கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?
சமத்துவ உரிமை
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
கல்வியின் மீதான உரிமை
சுதந்திர உரிமை
21.
பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______
அதிகரிக்கும்
குறையும்
ஒரே அளவாக இருக்கும்
மேற்கண்ட எதுவுமில்லை
22.
வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்
உற்பத்தியாளர்கள்
சிதைப்போர்கள்
நுகர்வோர்கள்
இவர்கள் யாரும் இல்லை
23.
ஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.
யென்
யுவான்
24.
கீழ்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
கரும்பு
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
அரிசி
கோதுமை
25.
விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் ________.
தெளலதாபாத்
டெல்லி
மதுரை
பிடார்
26.
ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.
அப்பாசித்து வம்சம்
உமையது வம்சம்
சசானிய வம்சம்
மங்கோலியா வம்சம்
27.
_________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
அக்ரோபொலிஸ்
ஸ்பார்ட்டா
ஏதென்ஸ்
ரோம்
28.
(i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.
(ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.
(iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.
(iv) ரோமும் கார்த்தேஜீம் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும் (iv) சரி
ஈ) (iv) சரி
29.
கண்டச்சரிவு
30.
அதிக மழை
31.
உயர் ஓதம்
32.
சர்கோசா கடல்
33.
ரியால்
34.
உப்பு
35.
நாணய சுழற்சி
36.
அமெரிக்க டாலர்
37.
கூற்று(கூ): கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.
காரணம்(கா): இந்தியாவில் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.
அ) கூற்று சரி; காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று தவறு; காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் தவறானவை.
ஈ) கூற்று சரி; காரணம் கூற்றை விளக்கவில்லை.
1.
1. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.
2. இவை புராதனப் பணம் என்று அழைக்கப்பட்டன.
3. படிப்படியாகத் தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக ஏற்கப்பட்டன.
4. இதையொட்டி இந்த இரு உலோகங்கள் நாடுகளுக்கு இடையிலான பண்ட மாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன. இவையே இயற்கையான பணம் என்று அழைக்கப்பட்டன.
2.
1. தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
2. தொழிற் சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
3. இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலங்கள் அமைத்தல்.
4. தொழிலாளர்கள் காப்பீட்டுக் கழகம்.
5. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.
6. நிலக்கரி மற்றும் மைக்கா சுரங்கத்தின் வருங்கால வைப்புநிதி ஆகியனவாகும்.
3.
மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு உயிரினப்பன்மையின் இழப்பு என்கிறோம்.
4.
நீர்க்கோளம் புவியில் காணப்படும் நீரின் பல்வேறு நிலைகளை உள்ளடக்கியது. புவியின் அனைத்து
நீர் நிலைகளையும் தன்னுள் கொண்டது நீர்க்கோளம் ஆகும்.
5.
(i) அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே அல்லது புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்குமிடையே, தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும்.
(ii) இது கொலம்பியப் பரிமாற்றம் (Columbian Exchange) என்று அறியப்படுகிறது.
6.
1. புனித சோபியா ஆலயம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும்.
2. அக்கால ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான இத்தேவாலயம் அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.
3. கான்ஸ்டான்டிநோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றியபோது இத்தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.
7.
(i) ஹன் பேரரசு மீண்டும் ஒருமுறை பட்டு வணிக வழித்தடத்தை வணிகத்திற்காக திறந்துவிட்டது. பெருமளவிலான ஏற்றுமதிப் பண்டங்கள், முக்கியமாகப் பட்டு, ரோமப் பேரரசை சென்றடைந்தன.
(ii) வடபகுதியில் பண்பாட்டில் பின் தங்கிய ஆட்சியாளர்களின் கைவினைஞர்களும், கால்நடை மேய்ப்பர்களும் குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், குதிரையில் பயணிப்போர் பாதங்களை வைத்துக் கொள்வதற்கான அங்கவடி, போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல். மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும் செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.
8.
(i)சிலுவைப் போர்கள் நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது.
(ii) மத்திய தரைக்கடல் பகுதியில் வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாகத் தோன்றின.
(iii)வலிமைவாய்ந்த நிலப்பிரபுக்கள் அழிந்து போனது ஒருவகையில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெறுவதற்கு காரணமாயிற்று.
(iv) போப்பாண்டவரும் அவருடைய ஆட்சிமுறையும் தங்கள் செல்வாக்கையும் மரியாதையும் இழக்க நேர்ந்ததாகும்.
9.
1. பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் உதவி வருகிறது.
2. பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமாகவும். ஒரு கணக்கின் அலகாகவும் மதிப்புச் சேமிப்பாகவும் செயல்பட வேண்டும்.
3. ஒரு நாட்டின் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குப் பணம் தடையின்றி ஏற்கப்பட வேண்டும்.
4. ஒரு நாட்டில் அனைத்து நுகர் பொருள்கள், தயாரிப்புகள். சேவைகள் என அனைத்திற்குமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட்ட அலகாக இருக்க வேண்டும்.
5. எடுத்துக்காட்டாக ஒரு புத்தகத்தின் விலை 750 என்றால் அப்புத்தகத்தின் விலை 50 பண அலகுகளுக்கு இணையானது என்று பொருள்.
6. ஒரு நாட்டில் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.
10.
1. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனமானது, வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் கலந்து கொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டதாகும்.
2. இது 1948 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்டதாகும்.
3. மனித உரிமைகள் வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும். மேலும் இது அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும்.
4. அடிப்படை மனித உரிமைகள் உலகளவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.
5. மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன.
6. இது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல். சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.
7. இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.
8. ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் சம உரிமையோடும் பிறக்கின்றனர்.
9. இந்த பேரறிக்கையின் விளக்கமானது சட்டபூர்வமாகப் பிணைக்கப்பட்ட ஆவணம் அல்ல என்ற போதிலும் இது அரசியல் மற்றும் அறநெறிசார் முக்கியத்துவம் உடையது.
10. மேலும் இதில் இடம் பெற்றுள்ள பெரும்பான்மையான உத்திரவாதங்கள் இக்காலத்தில் தரம்மிக்க விதிமுறைகளாக நிலைபெற்று விளங்குகின்றன.
11.
கண்டத்திட்டு:
(i) நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு
எனப்படுகிறது. பெரும்பாலும் இப்பகுதிகள் மென்சரிவைக் கொண்ட சீரான கடற்படுகையாகும்.
(ii) கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற் புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகள் உலகின் செழிப்பான மீன்படித்தளங்களுள் ஒன்றாக உள்ளது. (எ.கா.) நியூபவுண்ட்லாந்தில் உள்ள 'கிராண்ட் பாங்க்' (The Grand Bank).
(iii) கண்டத்திட்டுகள் மிக அதிக அளவு கனிமங்களையும் எரிசக்தி கனிமங்களையும் கொண்டுள்ளது. இப்பகுதி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கும் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் சிறந்த இடமாக விளங்குகின்றது. (எ.கா) அரபிக் கடலில் அமைந்துள்ள மும்பை.
கண்டச்சரிவு:
(i) கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன்சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதியே கண்டச்சரிவாகும். இது கண்ட மேலோட்டிற்கும், கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகின்றது.
(ii) கடலடிப் பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுவது இப்பகுதியின் சிறப்பம்சங்களாகும்.
(iii) சூரிய ஒளி மிகக் குறைந்த அளவே ஊடுருவிச் செல்வதால் வெப்பநிலை மிகக்குறைவாகவே உள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களில் வளர்சிதை மாற்றம் மெதுவாகவே நடைபெறுகிறது.
12.
ரோமானிய மரபின்படி கி.மு. 509ல் எட்ரஸ்கன்கள் அகற்றப்பட்ட பின்னர் ரோமக் குடியரசை நிர்வகித்தவர்கள் பாட்ரீசியன் என்றழைக்கப்பட்ட செல்வந்த நிலப் பிரபுக்களாவர். செனட்டர்களும், கான்சல்களும் நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாதாரர். ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். பணம் படைத்தவர்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர். கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில் தான் அடிமைகளின் கிளர்ச்சி அதிகம் நடந்தன. ரோமானியர் ஆட்சி காலத்தில் அதிக அளவில் ஆடம்பர பொருட்களான பட்டு, வாசனைத் திரவியங்கள், மிளகு, விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவை கீழ்த்திசை நாடுகளிலுருந்து வந்து குவிந்தன. கோவில்கள், கலையரங்குகள், திறந்த வெளி விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கால்வாய்கள், குளியலிடங்கள், வட்டரங்குகள், சந்தைகள், பெரிய நகரங்கள் ஆகியன இக்காலத்தில் எழுதப்பட்டன. அகஸ்டஸ்கி.மு 27ல் அரசரானார். அவர் தன்னைப் பேராசன் என அழைத்துக் கொண்டார். பணம் படைத்தோர் ஏழைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக விளையாட்டுகளை ஏற்பாடு செய்தனர். சண்டைக்காட்சி வீரர்களை மோதவிட்டு யாரேனும் ஒருவர் கொல்லப்படுகின்ற வரையிலான கட்டாயச் சண்டைகளை மக்கள் கூடுகின்ற அரங்குகளில் நடத்தினர்.
அகஸ்டஸில் காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். பிளினி என்பவர் அறிவியல் கலைச் கலைஞ்சயத்தை எழுதினார். அதனை அவர் "இயற்கை வரலாறு" என அழைத்தார். செனிக்கா என்பவர் அறிவியல் தொடர்பான களைக் களஞ்சியத்தை உருவாக்கினார். அவர் தன்னுடைய "ஓட்ஸ்" என்னும் நூலில் ஹேரெஸ், எப்பியூக்கியசின் தத்துவங்களை நியாயப்படுத்துவதையும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இருக்க வேண்டிய மனோதைரியம் பற்றி ஸ்டாய்க் தத்துவம் முன் வாய்த்த கருத்துகளையும் இணைத்து புதிய தத்துவத்தை உருவாக்கினார். லிவி ஒரு சிறந்த உரைநடையாளர் ஆவர். மிகச் சிறந்த வரலாற்று அறிஞர் டேசிடஸ் ஆவர். வெர்ஜில் எழுதிய ஏனெயிட் ரோமானிய ஏகாதிபதியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. இக்காலத்தில் ரோமானியச் சட்டம் மேலங்கியை வளர்ச்சி அடைந்தது. மார்க்ஸ் அரிலியஸ் ஒரு தத்துவ அறிஞர் ஆவர். சீனாவிற்கு ஒரு தூதுக் குழுவை அமைத்து ஒரு ஆசிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானியப் பேராசர் இவரே ஆவர்.
13.
ஐ.நா. சபை 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்று கொண்டது.
1. வாழ்வதற்கான உரிமை
2. குடும்பச் சுழலுக்கான உரிமை
3. கல்விக்கான உரிமை
4. சமூகப் பாதுகாப்பு உரிமை
5. பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
6. விற்பது அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை
7. குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டளுக்கெதிரான உரிமை
14.
(i) கி.பி. (பொ. ஆ) 1300 களின் தொடக்கப் பத்தாண்டுகளில் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும். படைத் தளபதியுமான மாலிக்கபூரின் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
(ii) தென்னக படையெடுப்பில் மாலிக்காபூர் 1306 இல் முதலில் தேவகிரியைப் பிடித்துக் கொண்டான்.
(iii) பின்னர் 1310-ல் தென்னக மேற்குக் கடற்கரைப் பட்டினமான துவாரசமுத்திரத்தைத் தாக்கி கைப்பற்றினார்.
15.
| வெப்பமண்டலத் தாவரங்கள் | பாலைவனத் தாவரங்கள் |
| வெப்பண்டலக் காடுகள் பல்வேறு விதமான உயிரினங்களின் வாழ்விடமாகவும், முதன்மைத் தொழில் நடைபெறும் இடமாகவும் உள்ளது. | பாலைவனப் பகுதிகளில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 25 செ.மீட்டருக்கும் குறைவாக உள்ளது. |
| இப்பகுதிகள் மிக அடர்ந்த காடுகளைக் கொண்டிருப்பதால் பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. |
மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும் வறண்ட காலநிலையின் காரணமாக இங்கு தாவரங்கள் அரிதாக வளர்கின்றன. |
| இங்கு குடியிருப்புகள் சிதறிக் காணப்படுகின்றன. | இங்கு வாழும் மக்கள் மேய்ச்சல் நிலங்களைத் தேடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயாவர். |
| உணவு சேகரித்தல், மீன் பிடித்தல். மரம் வெட்டுதல். இடமாற்று விவசாயம் போன்றவை இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமாகும். |
இங்கு வாழும் மக்கள் உணவு சேகரித்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். |
| ரப்பர், மூங்கில்,எபோனி போன்றவை இங்கு காணப்படும் முக்கிய மரங்களாகும். |
வறட்சியைத் தாங்கக்கூடிய முட்புதர்கள், குறுங் காடுகள் மற்றும் பனை போன்ற தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. |
16.
| உயர் ஓதம் | தாழ் ஓதம் |
| புவி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது, சூரியன் மற்றும் சந்திரனின் கூட்டு ஈர்ப்பு விசையானது கடலின் மேற்பரப்பு அலைகளை வலுவடையச் செய்து உயர் அலைகளை உருவாக்குகின்றன. இவ்வுயரமான அலைகள் உயர் ஓதங்கள் எனப்படுகின்றன. | புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன. இவ்வுயரம் குறைவான அலைகள், தாழ் ஓதங்கள் எனப்படுகின்றன. |
17.
சூழ்நிலை மண்டலத்தில் நமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும். இவை நிலத்திலும், நீரிலும் காணப்படுகின்றன (எ.கா) தாவரங்கள், பாசி, பாக்டீரியா
18.
கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களாகும். நியூபவுண்ட்லாந்தில் உள்ள 'கிராண்ட் பாங்'க் பகுதி சிறந்த எடுத்துக்காட்டாகும்.
19.
வட அரைக்கோளத்தில் நில பகுதிகள் அதிகம் காணப்படுகிறது. எனவே அப்பகுதி நில அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகிறது.
தென் அரைக்கோளப் பகுதிகளில் நீரின் அளவு அதிகம் காணப்படுகிறது. அப்பகுதியில் அண்டார்டிகா கண்டம் பணியாலானது. அதனால் அப்பகுதி நீர் அரைக்கோளம் என்று அழைக்கப்படுகிறது.
20.
(b)
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
21.
(b)
குறையும்
22.
(b)
சிதைப்போர்கள்
23.
(a)
யென்
24.
(b)
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
25.
(a)
தெளலதாபாத்
26.
(a)
அப்பாசித்து வம்சம்
27.
(c)
ஏதென்ஸ்
28.
இ) (ii) மற்றும் (iv) சரி
29.
இரண்டாம் நிலை நிலத்தோற்றம்
30.
கடலில் உவர்ப்பியம் குறைவு
31.
அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்
32.
வட அட்லாண்டிக் பெருங்கடல்
33.
சவுதி அரேபியா
34.
பணத்தின் மாற்று
35.
85%
36.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
37.
அ)கூற்று சரி; காரணம் கூற்றை விளக்குகிறது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards