9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
9th Std Revision Test Model Qeustion
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பண்டைய காலப் பணம் என்பது யாது?
2.
உயிரினப் பன்மை என்றால் என்ன?
3.
நீரியல் சுழற்சி என்றால் என்ன?
4.
மதஎதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
5.
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
6.
கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.
7.
சீனப் பெருஞ்சுவர்.
8.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.
9.
அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?
10.
பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.
11.
ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.
12.
குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?
13.
அடிப்படை உரிமைகள் யாவை?
14.
நகரமயமாதலுக்கு உதவிய காரணிகள் யாவை?
15.
சவானா - தூந்திரா
16.
கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்
17.
உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது
18.
கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.
19.
இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.
20.
கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?
சமத்துவ உரிமை
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
கல்வியின் மீதான உரிமை
சுதந்திர உரிமை
21.
கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?
கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கடல் அகழி
கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடலடிச்சமவெளி, கடல் அகழி
கடலடிச்சமவெளி,கண்டச்சரிவு,கண்டத்திட்டு,கடல் அகழி
கண்டச்சரிவு,கடலடிச்சமவெளி,கண்டத்திட்டு,கடல் அகழி
22.
உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு
சூழ்நிலை மண்டலம்
பல்லுயிர்த் தொகுதி
சுற்றுச்சூழல்
இவற்றில் ஏதுவும் இல்லை
23.
சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________
அமெரிக்க டாலர்
பவுண்டு
24.
'ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்தவர்.
ரஃபேல்
மைக்கேல் ஆஞ்சலோ
அல்புருட் டியுரர்
லியானார்டோ டாவின்சி
25.
ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.
நாகப்பட்டினம்
அஜந்தா
கோழிக்கோடு
ஜஹோல்
26.
ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.
அப்பாசித்து வம்சம்
உமையது வம்சம்
சசானிய வம்சம்
மங்கோலியா வம்சம்
27.
கிரேக்கர்களின் மற்றோரு பெயர் _____ஆகும்.
ஹெலனிஸ்டுகள்
ஹெலனியர்கள்
பீனிசியர்கள்
ஸ்பார்ட்டன்கள்
28.
i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் சோழர்கள் வடித்தனர்.
ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவமான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.
அ) i) சரி ii) தவறு
ஆ) i), ii) ஆகிய இரண்டும் சரி
இ) i), ii) ஆகிய இரண்டும் தவறு
ஈ) i) தவறு ii) சரி
29.
(i) ரோமப் பேரரசர் மார்க்ஸ் அரலியஸ் ஒரு கொடுங்கோலன்.
(ii) ரோமுலஸ் அரிலிஸ் ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
(iii) பேபியஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
(iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும் (iii) சரி
ஈ) (iv) சரி
30.
கண்டச்சரிவு
31.
குரோசியோ நீரோட்டம்
32.
சர்கோசா கடல்
33.
கிரேட் பேரியர் ரீப்
34.
ரியால்
35.
உப்பு
36.
நாணய சுழற்சி
37.
அமெரிக்க டாலர்
1.
1. தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.
2. இவை பண்டைய காலப் பணம் அல்லது புராதன பணம் என்று அழைக்கப்படுகின்றன.
2.
உயிரினப்பன்மை என்பது ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதாகும். இது காலநிலை. நிலத்தோற்றம் மற்றும் மனிதச் செயல்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
3.
புவியின் நீரானது, நிலைத்த தன்மையற்ற, நகரும் தன்மையுடையதாகும். புவியின் மீது மேலும், கீழும் நீரின் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவதே நீரியல் சுழற்சி எனப்படும்
4.
(i) பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கம், கத்தோலிக்க திருச்சபைக்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது.
(ii) ஊழல்களைக் கடுமையான முறையில் கையாண்டதுடன், பதவிகளின் விற்பனையையும் தடை செய்தனர்.
(iii) கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியது.
(iv) மேலும், புனித மறைநூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கமளிக்க முடியுமென்றும் அது அறிவித்தது.
(v) இயேசு சபைக்கு அதிகாரப்பூர்வமான அனுமதியையும் அது வழங்கியது. கத்தோலிக்க திருச்சபைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீர்திருத்தம் 'எதிர் மத சீர்திருத்தம்' என்று அறியப்பட்டது.
5.
(i) ஹன் பேரரசு மீண்டும் ஒருமுறை பட்டு வணிக வழித்தடத்தை வணிகத்திற்காக திறந்துவிட்டது. பெருமளவிலான ஏற்றுமதிப் பண்டங்கள், முக்கியமாகப் பட்டு, ரோமப் பேரரசை சென்றடைந்தன.
(ii) வடபகுதியில் பண்பாட்டில் பின் தங்கிய ஆட்சியாளர்களின் கைவினைஞர்களும், கால்நடை மேய்ப்பர்களும் குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், குதிரையில் பயணிப்போர் பாதங்களை வைத்துக் கொள்வதற்கான அங்கவடி, போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல். மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும் செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.
6.
(i) ரோமானியப் பேரரசர்களில் ஒருவரான கான்ஸ்டன்டைன் கிறித்தவராக மாறினார்.
(ii) இதனால் கிறித்தவம் ரோமானியப் பேரரசின் அரசு மதமாயிற்று.
7.
(i)கி மு. (பொ.ஆ.மு) 8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலப் பகுதியில் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சுவர்களை எழுப்பிக் கொண்டன.
(ii) சின் அரசவம்சத்தின் காலத்தில் தனித்தனியாக இருந்த பல சுவர்கள் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 5000 கிலோ மீட்டர் நீளமுடைய பெருஞ்சுவர் உருவானது.
(iii)இச்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
8.
1. பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது.
2. பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது.
3. இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
4. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்படத் தொடங்கியது. 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.
5. இது 1949 இல் நாட்டுடைமையாக்கப்பட்டது. அச்சடித்த பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது.
6. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
9.
| S.No | அடிப்படை உரிமைகள் | வாழ்க்கை அனுபவம் (சொந்த அனுபவத்தை எழுதவும்) |
| 1. | சமத்துவ உரிமை | நான் வாழும் இடத்தில் முழு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன். |
| 2. | சுதந்திர உரிமை | நான் மதுரையில் பிறந்தேன். இப்பொழுது சேலத்தில் வசிக்கிறேன். |
| 3. | சுரண்டனுக்கு எதிரான உரிமை | சிற்றுண்டி சாலை நடத்தும் ஒருவர் எங்கள் குடும்ப நண்பர். அவர் 14 வயது உடைய பையனுக்கோ பெண்ணுக்கோ வேலை கொடுத்தால் நான் சண்டையிடுவேன். |
| 4. | சமயம் மற்றும் மதத்ச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை |
நாங்கள் எல்லோரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். ஆனாலும் நாங்கள் புனித ஆலயம், குருத்துவார் ஆகிய இடங்களுக்குச் செல்கிறோம். |
| 5. | சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமை | நான் இப்பொழுது ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன். வெளிநாட்டிற்கு சென்று பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று கனவோடும் இலட்சியத்தோடும் உள்ளேன். |
| 6. | அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை | எதிர்காலத்தில் நான் எனது தங்கை யாழினிக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். |
10.
1. மிகப்பரந்த உவர் நீரைக் கொண்ட பெருங்கடல்கள். நீர்க்கோளத்தில் பெரும்பங்கை தன்னுள் கொண்டுள்ளது.
2. சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக புவியின் மீது பெருங்கடல்கள் உருவாகி இருக்கலாம் எனப் புவி அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
3. தொடக்க காலத்தில் புவி, நீர் இல்லாத கோளாக இருந்தது என்பதை நம்பமுடியாமல் இருந்தது.
4. காலப்போக்கில் புவி குளிரத் தொடங்கிய போது புவியின் உட்பகுதியில் இருந்த நீராவி வெளியேறி வளிமண்டலத்தை அடைந்து மேகங்களாக உருவாகி இடைவிடாத மழையைப் பொழிந்தன.
5. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெய்த இந்த மழை பள்ளங்களை நிரப்பி நாளடைவில் பெருங்கடல்களை உருவாக்கின.
6. அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களைக் கொண்டிருப்பதால் கடல்களும், பெருங்கடல்களும் புவிக்கோளத்தின் வளகிண்ணமாக கருதப்படுகின்றன.
11.
ஏதென்ஸின் எழுச்சி:
(i) ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக குழு ஆட்சியும். கொடுங்கோலாட்சியும் அகற்றப்பட்டு மக்களாட்சி முறை நிறுவப்பட்டது.
(II) ஏதென்சில் சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், சுதந்திர மக்கள் (Freemm) பங்கேற்கும் மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.
(iii) நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
(iv) இம்முறை சமூகத்தின் மேல்தட்டு மக்களால் வெறுக்கப்பட்டது. அவர்கள் மக்களாட்சியைக் கும்பலின் ஆட்சி எனக் கருதினர்.
(v) பல கிரேக்க நகர அரசுகளின் வரலாறு பணம்படைத்த நிலப்பிரபுக்கள் மக்களாட்சியை எதிர்த்து நடத்திய தொடர் போராட்டங்களாகவே அமைந்தது.
(vi) இவற்றில் விதிவிலக்காக இருந்தது ஏதென்ஸ் மட்டுமே. அங்கு மக்களாட்சிமுறை 200 ஆண்டுகள் நீடித்தது.
வளர்ச்சி:
(i) ஏதென்ஸ் நகர் பெரிகிளிஸ் என்னும் மாபெரும் தலைவரைப் பெற்றிருந்தது. அவர் முப்பதாண்டு காலம் அதிகாரத்தில் இருந்தார்.
(ii) இவருடைய ஆட்சியின் போது ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் ஒன்றுக்கெதிராக மற்றொன்று தொடர்ந்து போர் செய்தன. இப்போர்கள் பெலப்போனேசியப் போர்கள் என அறியப்பப்பட்டன.
(iii) ஸ்பார்டாவோடு பகைமை, அந்நகர அரசு செய்த இடையூறுகள் ஆகியவை இருந்தபோதிலும் அவற்றையும் மீறி ஏதென்ஸ் பிரமிக்கச் செய்யும் கட்டடங்களைக் கொண்ட உன்னதமான நகரமாக மாறியது.
(iv) மாபெரும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் அந்நகரத்தில் இருந்தனர். ஆகவே வரலாற்று அறிஞர்கள் இக்குறிப்பிட்ட காலத்தைப் 'பெரிகிஸிசின் காலம்' என அழைக்கின்றனர்.
கொடைகள்:
(i) புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று அறிஞர்களான ஹெரோடோட்டசும், அவர் பின்வந்த தூசிடைடிசும் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.
(ii) பெரிகிளிசின் சகாப்தத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களுள் மகத்தானவர் சாக்ரடீஸ் ஆவார்.
(iii) பிளாட்டோ, அரிஸ்டாட்டில், டெமோகிரைட்ஸ். எபிகியூரஸ் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.
(iv) பிளாட்டோவின் சீடரான அரிஸ்டாட்டில், இயற்பியல் உலகம், சமூக உலகம் பற்றிய கண்டுணர்ந்த அனுபவ அறிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
12.
1. குழந்தைகள் அனைவரும் அடிப்படை மனித உரிமைகள் கொண்ட தனிநபர்கள் என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள்.
2. குழந்தைகள் கடத்தப்படுதல், விற்பனை செய்தல் நடைபெற ஏழ்மை, பாவினப்பாகுபாடு மற்றும் சிதறிய குடும்பங்கள் ஆகியன முக்கியக் காரணங்களாகும்.
3. மேலும் குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல். பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக கடத்தல் அல்லது விற்பனை செய்யப்படுகின்றனர்.
4. எனவே இதுபோன்ற தொல்லைகளிலிருந்து பாதுகாக்க குழந்தைகள் மீது சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது.
13.
1. சமத்துவ உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்க்கான உரிமை
5. சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
6. அரசமைப்புச் சட்ட வழி தேர்வுகளுக்கான உரிமை
14.
(i)நகரங்களும் சிறுநகரங்களும் தங்களின் வெவ்வேறான பொருளாதாரப் பங்கினைப் பூர்த்தி
செய்தன. பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, நிதி மற்றும் வங்கிச் சேவைகள்
ஆகியவற்றின் மையங்களாகத் திகழ்ந்தன.
(ii) போக்குவரத்துச் சாலைகள் சந்திக்கின்ற இடங்களில் அமைந்திருந்தன. இச்சாலைகள் இந்நகரங்களை நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைத்தன.
(iii) சிறுநகரங்கள் உள்ளூர் சந்தை மையங்களாகச் செயல்பட்டு அருகேயிருந்த கிராம உட்பகுதிகளை இணைத்தன. நாட்டின் தலைநகரங்களும் (எடுத்துக்காட்டாக டெல்லி, ஆக்ரா) பிராந்திய நகரங்களும் (பாட்னா, அகமதாபாத், லக்னோ) அரசியல் மற்றும் நிர்வாக மையங்களாகச் செயல்பட்டன.
15.
| சவானா | தூந்திரா |
| சவானா பல்லுயிர்த் தொகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் சஹாராவின் தென்பகுதி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகின்றன. |
தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி ஆசியா, கனடா, ஐரோப்பா இவற்றின் வடபகுதி மற்றும் கிரீன்லாந்து ஆர்டிக். அண்டார்டிகா ஆகிய தொகுதியின் கீழ் வருகின்றன. |
| இங்கு பொதுவாக வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதோடு மிதமான மழைப்பொழிவையும் பெறுகிறது. எனவே இங்கு வளரும் புற்கள் உயரமாகவும் கூர்மையாகவும் காணப்படுகின்றன. |
இங்கு குளிர்காலம் நீண்ட கடுங் குளிரையும். கோடை காலம் மிதமானகுளிரையும் கொண்டிருக்கும் இங்கு காணப்படும் மிகக் குறைந்த வெப்பநிலையின் காரணமாக குறுகியகால பருவத்தாவரங்கள் மட்டுமே இங்கு காணப்படும். |
| இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் கால்நடை மேய்த்தல் ஆகும். |
இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியனவாகும். |
16.
| கடலடிச் சமவெளி | கடலடிப் பள்ளம் |
| ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி என்பது ஆழ்கடலில் காணப்படும் கடலடிச் சமவெளி ஆகும். | பெருங்கடலின் மிக ஆழமான பகுதி கடலடிப் பள்ளம் அல்லது அகழி ஆகும். |
| இச்சமவெளிகள் ஆறுகளினால் கொண்டு வரப்பட்ட களிமண், மணல் மற்றும் வண்டல்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த படிவுகளால் ஆனது. |
படிவுகள் ஏதும் இல்லாததினால், பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் 'V' வடிவத்தில் காணப்படுகின்றன. |
17.
உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இது தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்றச் சூழ்நிலைக் கொண்டுள்ளது.
18.
கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களாகும். நியூபவுண்ட்லாந்தில் உள்ள 'கிராண்ட் பாங்'க் பகுதி சிறந்த எடுத்துக்காட்டாகும்.
19.
வெப்பமடைதலும், குளிர்தலும் நிலத்தைவிட கடலில் மெதுவாக நடைபெறும். வெப்பமண்டலப் பகுதிகளில் ஆவியாதல் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாகக் காணப்படுகிறது. உவர்ப்பியத்தின் அளவு வெப்ப மண்டலப் பகுதியில் அதிகமாகவும், நிலக்கோடு மற்றும் துருவப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளன.
20.
(b)
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
21.
(a)
கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கடல் அகழி
22.
(a)
சூழ்நிலை மண்டலம்
23.
(a)
அமெரிக்க டாலர்
24.
(a)
ரஃபேல்
25.
(d)
ஜஹோல்
26.
(a)
அப்பாசித்து வம்சம்
27.
(b)
ஹெலனியர்கள்
28.
ஈ) i) தவறு ii) சரி
29.
ஈ) (iv) சரி
30.
இரண்டாம் நிலை நிலத்தோற்றம்
31.
ஜப்பான் கடற்கரையோரம்
32.
வட அட்லாண்டிக் பெருங்கடல்
33.
ஆஸ்திரேலியா
34.
சவுதி அரேபியா
35.
பணத்தின் மாற்று
36.
85%
37.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards