11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/12/2018
+1 Full Test Question Model
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
வாங்குபவரையும் விற்பவரையும் ஒருங்கினைக்கும் பனியினை மேற்கொள்வர்
தரகர்
கழிவு முகவர்
விற்பனை முகவர்
இருப்பு வைத்திருப்பவர்
2.
செலுத்தல் சம நிலை உள்ளடக்கியது
நடப்பு கணக்கு
முதல் கணக்கு
பெறுதல் செலுத்தல் கணக்கு
நடப்பு கணக்கு மாற்றும் முதல் கணக்கு
3.
நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது
இங்கிலாந்து
அமெரிக்கா
சுவிஸ்
இந்தியா
4.
வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?
1978
1979
1980
1981
5.
ஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்
அகற்றீட்டு முகவர்
அனுப்புகை முகவர்
கழிவு முகவர்
தன் பொறுப்பு முகவர்
6.
வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும்
இறக்குமதி
ஏற்றுமதி
மறு ஏற்றுமதி
மீண்டும் ஏற்றுமதி
7.
உலக வங்கி அமைந்திருப்பது
வாஷிங்டன் DC
நியுயார்க்
டோக்கியோ
ஹாங்காங்க்
8.
இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது
முழுவதும் வரி விதியிற்குட்பட்டது
முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது
வருமானம் கருதப் படுவதில்லை
மறைமுக வரி
9.
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
10.
உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது
10
20
25
50
11.
கூட்டாண்மை பதிவு
கட்டாயம்
விருப்பத்தின் பேரில்
அவசியமில்லை
இவற்றில் ஏதுமில்லை
12.
நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.
நிதி மேலாண்மை
வங்கி
பண மேலாண்மை
இவற்றில் ஏதுமில்லை
13.
எது சிறந்த நீண்ட கால மேலாண்மையை குறித்து இயங்குகிறது.
பெயர்ச்சியியல்
வழங்கல் வழி சங்கிலி மேலாண்மை
தேவை
அளிப்பு
14.
நிலையான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் பணியாளர்களின் நெறிமுறை நடத்தை என்பது ________
நன் நடத்தை
நெறிமுறை நடத்தை
மோசமான நடத்தை
சரியாக முடிவெடுத்தல்
15.
16.
பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?
பணம் திருப்பத் திட்டாவணம்
மருத்துவ கோருரிமை
கப்பல் சார் காப்பீடு
காஸ்கோ காப்பீடு
17.
மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?
தொடர்வண்டி
சாலை
கடல்
விமானம்
18.
இளவருடன் செய்யும் ஒப்பந்தம்
செல்தகு ஒப்பந்தம்
செல்லாத ஒப்பந்தம்
தவிர்தகு ஒப்பந்தம்
மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்
19.
அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____
பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்
பொதுக் பண்டகக் காப்பகங்கள்
இந்திய உணவுக் கழகம்
தானியங்கி பண்டகக் காப்பகங்கள்
20.
அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது
கெளடில்யர்
சாணக்கியர்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?
22.
"முத்ரா" வங்கி பற்றி சிறு குறிப்பு வரைக.
23.
தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?
24.
மின்னணு வங்கியியல் என்றால் என்ன?
25.
இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.
26.
அமெரிக்க வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக
27.
நிறுமத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை விவரி
28.
தனி உரிமையியலின் வகைகள் யாவை?
29.
வரையறாப் பொறுப்பு என்றால் என்ன?
30.
பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.
31.
பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.
32.
ஏற்பு என்றால் என்ன?
33.
பணிக்கு ஏற்ற தொகையைப் பெற கோரிக்கைவிடக் கூடிய சூழ்நிலைகள் யாவை?
34.
ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் குறியீட்டு எண் பெறுதல் பற்றி எழுதுக.
35.
சிறப்பங்காடிகள் என்றால் என்ன?
36.
மாநில சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் குறிப்பு வரைக.
37.
இறக்குமதி என்றால் என்ன?
38.
மைய வங்கி பற்றிச் சுருக்கமாக விளக்குக.
39.
பன்னாட்டு வணிகத்திற்கான இரண்டு காரணங்களைக் கூறுக.
40.
சமூக அதிகாரம் என்பதன் பொருள் தருக?
41.
போக்குவரத்து -வரையறு.
42.
உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?
43.
சுற்றாடும் சில்லறை வியாபார அமைப்புகளின் வகைகளை விவரி.
44.
அமெரிக்க வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?
45.
வழங்கல் வழியினைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
46.
வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக.
47.
ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.
48.
பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?
49.
பல்வேறு வகையான மதிப்பீடு செய்யப்படும் நபர்களைப்பற்றி விவரி.
50.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்கள் -வரையறை தருக
51.
குறிப்பு வரைக
அ) உரிமையாளர் நிதி
ஆ) கடனாக பெறப்பட்ட நிதிகள்.
52.
53.
தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி
54.
நிறைவேற்றுதல் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?
1.
(a)
தரகர்
2.
(d)
நடப்பு கணக்கு மாற்றும் முதல் கணக்கு
3.
(a)
இங்கிலாந்து
4.
(c)
1980
5.
(b)
அனுப்புகை முகவர்
6.
(a)
இறக்குமதி
7.
(b)
நியுயார்க்
8.
(b)
முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது
9.
(b)
குடியரசுத் தலைவர்
10.
(c)
25
11.
(b)
விருப்பத்தின் பேரில்
12.
(a)
நிதி மேலாண்மை
13.
(a)
பெயர்ச்சியியல்
14.
(d)
சரியாக முடிவெடுத்தல்
15.
(d)
16.
(c)
கப்பல் சார் காப்பீடு
17.
(d)
விமானம்
18.
(b)
செல்லாத ஒப்பந்தம்
19.
(c)
இந்திய உணவுக் கழகம்
20.
(a)
கெளடில்யர்
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பின்வரும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்தல், திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு, தடையுத்தரவிற்கான வழக்கு, பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு
(i) ஒப்பந்தத்தை ரத்து செய்தல் (Recission of Contract):
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒருவர் ஒப்பந்தத்தை மீறும் பொழுது மற்றவர் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதிக் கொள்ளலாம். மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தின் தீமைக்குள்ள அணைத்து கடமைகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். (.க) M என்பவர் N என்பவருக்கு குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், ஆனால் N அந்த நாளில் பணத்தை அளிக்க மறுக்கிறார்.
(ii) திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு (Claim for Specific Performance):
சில சமயங்களில் இழப்பீடுகள், ஒப்பந்த முறிவிற்கான போதுமான ஓர் தீர்வாக இருக்காது.இச்சமயங்களில் நீதிமன்றம் ஒப்பந்த அவரது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆணையிடலாம். ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
(iii) தடையுத்தரவிற்கான வழக்கு:
ஒரு குறிப்பிட்ட செயலை ஒரு நபர் செய்யாதிருக்குமாறு தடைப்படுத்தும் வகையில் அமையும் நீதிமன்றத்தின் ஆணை தடையுத்தரவு ஆகும், ஒரு நபர் ஒரு செயலை செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்த நிலையில், அச்செயலைச் செய்யாதிருக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறபிக்கலாம். பின்வரும் வழக்குகளில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் இருந்தால் (2) செல்லாத ஒப்பந்தமாக இருந்தால் அல்லது (3) செல்லாத ஒப்பந்தம் என கண்டுபிடித்தால்.
(iv) பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு:
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு நபர் வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் மற்றொரு நபர் ஒப்பந்தத்தை மீறுவதால் பணிகி ஏற்ற தொகை என்ற கூற்று எழுகிறது. " எவ்வளவு ஈட்டப்பட்டதோ அவ்வளவு" என்ற சொல்லின் பொருள் பணிக்கு ஏற்ற தொகை எனப்படுகிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டு மறுபகுதி நிறைவேற்றப்பட முடியாமல் தடை 'ஏற்பட்டால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை முடிந்த நபருக்கு இழப்பீடு வகை செய்கிறது.
(v) ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு:
இழப்பீடு என்பது ஒப்பந்தம் மீறுகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில் தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது இழப்பீடு பெரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்த சட்டம் 1872ன் பிரிவு 73, ஒப்பந்தத்தை மீறும் நபர் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்புள்ளது. இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளன, அவை சாதாரண இழப்பீடுகள், சிறப்பு இழப்பீடுகள் பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள் மற்றும் பெயரளவு இழப்பீடுகள்.
22.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நிதித்தேவைகளை பூர்த்தி செய்யவும், புதிய தொழில் தொடங்குபவர்களை சந்திக்கும் நிதி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டுடனும், ரூ. 3ஆயிரம் கோடி கடன் உத்திரவாத நிதியுடனும் மத்திய அரசால் "குறுந்தொழில் பிரிவுகள் வளர்ச்சி மற்றும் மறுநிதி அளிப்பு முகமை" (முத்ரா வங்கி) தொடங்கப்பட்டது. குறுந்தொழில் முனைவோர் தங்களின் புதிய தொழிலைத் தொடங்கவும், தொழிலை மேம்படுத்தும் நிலையில் நிதி நாடுவோர், தொழிலை மேம்படுத்தவும், தொழிலை அடுத்த வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்வோர் தங்களின் தொழிலை விரிவுப்படுத்தி கொள்ளவும் முத்ரா வங்கி கடன்களை வழங்குகிறது.
23.
தங்கம், எண்ணெய், கலப்பை, துணி ஆகியவை வியாபாரம் செய்யப்பட்டதாக அழகர்மலை, புகளர், மாங்குளம் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் காணப்படும் தமிழ்- பிராமி கல்வெட்டுகள் விளக்குகின்றன.
24.
தற்போது அனைத்து வங்கிகளும் வங்கி பரிவார்த்தைக்கான நேரம் மற்றும் செலவை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை இணையம் மூலம் வழங்குகின்றன.
(i) தேசிய மின்னணு நிதி [பரிமாற்றம் (NEFT)
(ii) உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்புகள் (RTGS)
(iii) மின்னணு தீர்வக சேவைகள் (Electronic Clearing System)
(iv) கூட்டிணைப்பு வங்கியியல் தீர்வுகள்.
(v) இணைய வங்கியியல்
(vi) கைபேசி வங்கியியல்
(vii) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்.
25.
(i) உள்ளூர் தொழில்களுக்கு அபாயம் : பன்னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தி உள்நாட்டுத் தொழில்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துகிறது.
(ii) வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை மாற்றுதல்: வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கு மாறுவதன் மூலம் இந்த நாடுகளின் தொழில் முன்னேற்றம் தடைபடும்.
(iii) ஏழை மக்களுக்கு நன்மையில்லை: பணக்காரர்களால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்க முடிகிறது.
(iv) தனிமனித சுதந்திற்கு அபாயம்: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்காமல் தடை ஏற்படுகிறது.
(v) உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு: உள்நாட்டு மக்களுக்கு கணிசமான அளவில் வேலைவாய்ப்பு பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதில்லை.
(vi) வலுவான தகுதி நிலையை தவறாக பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் பேரளவு பொருளாதார நிறுவனங்கள் ஆகும்.
(vii) இயற்கை வளங்களைச் சுயநலத்திற்குப் பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு இயற்கை வளங்களை தன சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.
(viii) அயல் நாட்டின் சுயநல வளர்ச்சிப் போக்கு: பன்னாட்டு நிறுமங்களின் கலாச்சாரத்தால் உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
(ix) உள்நாட்டு தொழில், மற்றும் பொருளாதார முன்னேற்றம் புறக்கணிப்பு: உள்நாட்டு வணிகம் முன்னேற்றம் ஏற்படுவதில்லை.
26.
(i) அமெரிக்க வைப்பு இரசீதுகள் அமெரிக்க டாலரில் மட்டும் குறிப்பிடப்படும்.
(ii) அமெரிக்க குடிமக்களாக இருக்கிற முதலீட்டாளருக்கு மட்டுமே வெளியிடப்படும்.
(iii) வெளியிடும் வைப்பக வங்கி அமெரிக்காவில் இருக்க வேண்டும்.
27.
(i) பேரளவு மூலதனம்:
தனியார் வணிகம் மற்றும் கூட்டாண்மையை காட்டிலும் நிறுமத்திற்கு பேரளவு மூலதனத்தைத் திரட்ட இயலும். பேரளவு மூலதனம் என்பது பெரிய அளவு மூலதனத்தை திரட்டி அவற்றை பெரிய தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும்.
(ii) வரையறுக்கப்பட்ட பொறுப்பு:
பங்குதாரர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டதாகும். பங்குதாரரின் இடர் என்பது பங்குகளின் முகமதிப்பில் செலுத்தப்படாத தொகைக்கு மட்டுமே பொறுப்பாகும்.
(iii) பங்குகள் மாற்றம்:
இரண்டு தனிப்பட்ட நபர்கள் இடையே பங்குகள் மாற்றம் என்பது எளிது. ஆகவே முதலீடு என்பது எளிமையான ஒன்றாகும். ஒரு பங்குதாரர் பங்குகளை எளிதாக வாங்கவும், விற்று பணமாக்கவும் முடியும்.
28.
(i) தனி உரிமையியல் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுவது அவை,
(ii) தயாரிப்பு பொருள் அல்லது வர்த்தகப் பெயர் தனி உரிமையாக்கல், வணிக வடிவமைப்பு தனி உரிமை.
29.
தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாது. அதன் விளைவாக அவரது வியாபாரக் கடன்களை செலுத்த தொழிலின் சொத்துக்கள் போதுமானதாக இல்லையென்றால் தன சொந்த சொத்துக்களிலிருந்தும் கடனீந்தோருக்குச் செலுத்த வேண்டும். எனவே அவரின் பொறுப்பு முதலீட்டுத் தொகையுடன் நின்று விடாமல், தன் சொந்த சொத்திற்கு ஈடாகிறது. இதனையே வரையறாப் பொறுப்பு என்கிறோம்.
30.
(i) வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்பட்டு காப்பீடு வேளாண்மை காப்பீடு ஆகும்.
(ii) நெல்,கோதுமை,கரும்பு எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
31.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) சரக்கை பெற்று கொண்டதற்கான ஒரு அத்தாட்சி மட்டுமல்லாது சரக்கை பெறுவதற்கான அதிகாரத்தை தரும் ஆவணமாகும். | சரக்கை பெற்று கொண்டவதற்கான ஒரு அத்தாட்சி ஆகும். |
| (iii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iv) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
| (v) பண்டகச் சான்ராணையை மேலெழுதி கொடுப்பதன் மூலம் பொருட்களை பண்டக காப்பிலிருந்து பெற்று கொள்ளலாம். | இந்த இரசீதையும் பொருட்களின் உரிமையாளர் கடிதத்தையும் இணைத்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். |
32.
ஏற்பு 2 (b) (Acceptaince) முன்மொழிதல் யாருக்கு செய்யப்பட்டதோ அவரே ஏற்றுக்கொள்வதாகக் கூறியவுடன் அவ்வாறு செய்யப்பட்ட முன்மொழிதல் ஏற்றுக்கொள்ளப்ப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
33.
(i) ஒரு ஒப்பந்தம் செல்லாதது என கண்டுபிடிக்கப்படும் பொழுது.
(ii) கைமாறு கருதாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் ஏதேனும் செய்யப்படும் பொழுது.
(iii) ஒரு நபர் முழு ஒப்பந்தத்தையும்நிறைவேற்ற தவறுதல் அல்லது நிறைவேற்றாமல் விட்டு விடும் பொழுது.
(iv) ஒரு ஒப்பந்தம் பிரித்தளிக்ககூடியதாக இருந்தால்
(vi) ஒரு ஒப்பந்தம் மோசமாக நிறைவேற்றப்பட்டால்.
34.
ஏற்றுமதியாளர் குறியீட்டு எண் பெற அயல்நாட்டு வணிக பொது இயக்குனரின் மண்டல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்றுமதியாளர்கள் தான் அனுப்பும் அனைத்து கப்பலீடு ஆவணங்களிலும் இந்த குறியீட்டு எண்ணை குறிப்பிட வேண்டும். ஆனால் சொந்த பயன்பாட்டுக்கோ அல்லது வேளாண்மை பயன்பாட்டுக்கோ பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டால், இந்த எண்ணை குறிப்பிட வேண்டியதில்லை.
35.
தேவையான பொருட்கள் அனைத்தும் பல்வேறு தரம், ரகம், விலைவாரியாகப் பிரித்து வைத்து விற்பனை செய்யும் ஒரு பேரளவு சில்லறை பண்டகசாலை சிறப்பங்காடி எனப்படும்.
36.
மாநில சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் (தமிழ்நாடு) 2017-ன் கீழ் மாநில அரசால் சுமர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் வரியாகும்.
37.
உள்நாட்டுத் தேவைக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்குவதே இறக்குமதி வியாபாரம் ஆகும். உதாரணமாக, இந்தியா வளைகுடா நாடுகளிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் கூறலாம்.
38.
ஒரு நாட்டின் பண மற்றும் வங்கிக் கட்டமைப்பின் உச்சநிலையாகவும், தேசிய பொருளாதார நலனுக்காகவும் சிறந்த முறையில் செயல்படும் வங்கி அந்த நாட்டின் மைய வங்கி எனப்படும். என டிகாக் அவர்கள் இலக்கணம் வகுத்துள்ளார்.
39.
(i) உபரியான வளங்களைக் கொண்டுள்ள நாடுகள் அந்த வளங்களை பற்றாக்குறையாக உள்ள நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு பன்னாட்டு வணிகம் அவசியமாகிறது.
(ii) வளர்ந்த நாடுகள் மேம்பட்ட தொழில் நுட்பத்தின் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளை குறைவான விலைக்கு உற்பத்தி செய்கின்றன. வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளினால் அவ்வாறு உற்பத்தி செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக அயல் நாட்டு வணிகம் அவசியமாகிறது.
40.
தொழில் செய்பவர்களிடம் கணிசமான அளவு சமுதாய அதிகாரம் உள்ளது.அவர்கள் மேற்கொள்ளும் செயல் நடவடிக்கைகள் மக்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதாக அமைகிறது.நாட்டின் மேம்பாடு கருதி வேலைவாய்ப்பு,பொருளாதார முன்னேற்ற அளவு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் வருமானத்தை பகிர்ந்தளித்தல் போன்றவற்றை தீர்மானிக்கும் உயர் பொறுப்பு , தொழில் நிறுமங்களுக்கு உண்டு.
41.
கே.கே.செக்சேனா அவர்கள் "ஒரு இருட்டறையில் மெழுகுவர்த்தியின் ஒளிபரவுவது போல் போக்குவரத்து அந்தந்த பகுதிகளில் தனது பணியைச் செய்கிறது" என்று வரைவிலக்கணம் தந்துள்ளார்.
42.
உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) உறுப்பு நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
(ii) உறுப்பு நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு உலகின் பல்வேறு வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்துதல்
(iii) பன்னாட்டு வணிகத்தில் ஒரு ஒருங்கிணைந்த மேலும் நிறைவேற்றத்தக்க மற்றும் நீடித்த வர்த்தக முறையை ஊக்குவிக்கிறது
(iv) பன்னாட்டு அளவில் சரக்குகள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல்
(v) முழு வேலைவாய்ப்பு மற்றும் நீடித்த நிலையான வருமானம் ஆகியவற்றை உறுதி செய்தல்
(vi) சுற்றுசூழலை பாதுகாத்தல்
43.
சுற்றாடும் சில்லறை வியாபார அமைப்புகளை பின்வருமாறு பிரிக்கலாம். சுமை தூக்கி மற்றும் கூவி விற்கும் வியாபாரிகள், சாலை ஒர வியாபாரிகள் சந்தை வியாபாரிகள, இடம் பெயர் வியாபாரிகள்.
(i) சுமை தூக்கி மற்றும் கூவி விற்கும் வியாபாரிகள்: பொருள்களை தம் தலையிலோ அல்லது முதுகிலோ தூக்கிக் கொண்டு வீடு வீடாக நடந்து சென்று வியாபாரம் செய்பவர்கள் சுமை தூக்கி வியாபாரிகள் என அழைக்கப்படுவர். ஏதேனும் ஒரு வசதியுடன் வண்டியில் பொருட்களை வைத்து, பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம் குடியிருப்பிகள் மற்றும் பொது இடங்களுக்குச் சென்று கூவி விற்பனை செய்பவர்கள் கூவி விற்கும் வியாபாரிகள் எனப்படுவர்.
(ii) சாலை ஓர வியாபாரிகள்: வீதிகள் குறுக்கிடும் இடங்களின் ஓரங்களிலும் நடைபாதைகளிலும் தற்காலிகமாக பூ, பழம், காய்கறி, புத்தகங்கள் போன்றவற்றை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் சாலை ஒர வியாபரிகள் எனப்படுவர்.
(iii) சந்தை வியாபாரிகள்: ஒரு குறிப்பிட்ட நாளிலோ அல்லது தேதியிலோ அல்லது கிழமைகளிலோ நடைபெறும் சந்தைகளுக்கு சென்று விற்பவர்கள் சந்தை வியாபாரிகள் எனப்படுவர். எடுத்துக்காட்டு: பொள்ளாச்சி,இராணிப்பேட்டை மற்றும் மணப்பாறை ஆகிய இடங்களில் நடைபெறும் வாரச் சந்தைகள் குறைந்த விலை உடைய, ஒரு குறிப்பிட்ட வகையான அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை மட்டும் இவர்கள் வியாபாரம் செய்வர்.
(iv) இடம் பெயர் வியாபாரிகள்: மக்கள் நெருக்கம் மிகுந்த வியாபாரம் நடக்கும் இடங்களில் தற்காலிகமாக கடை வைத்து, சில நாட்கள் மட்டும் தங்கி இருந்து விற்பனை செய்பவர்கள் இடம் பெயர் வியாபாரிகள் எனப்படுவர். மேலும் இவர்கள் இடம் விட்டு இடம் சென்று வீட்டு உபயோகப் பொருட்களான துணிகள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காலணிகள் ஆகியவற்றை விற்பது மற்றும் பழுது பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.
44.
(i) அமெரிக்க வைப்பு இரசீதுகள் அமெரிக்க டாலரில் மட்டுமே குறிப்பிடப்படும்.
(ii) அமெரிக்கக் குடிமக்களாக இருக்கிற முதலீட்டாளருக்கு மட்டுமே வெளியிடப்படும்.
(iii) வெளியிடும் வைப்பக வங்கி அமெரிக்காவில் இருக்க வேண்டும்.
(iv) அமெரிக்க வைப்பு இரசீதை வெளியிட அமெரிக்கப் பிணையங்கள் மற்றும் மாற்றக இயக்கத்தின் (Securities and Exchange Commission) சம்மதத்தைப் பெற வேண்டும்.
45.
பொருட்களை விநியோகிக்க ஏற்ற வழங்கல் வழிகளை தீர்மானிக்கும் காரணிகள் பின் வருமாறு.
(i) பொருட்களின் தன்மைகள்: பருவகால உற்பத்தியில் பொருட்களை குறுகிய வழங்கல் வழி மூலமே விநியோகிக்க முடியும். நுகர்வோரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் குறைந்த தரம் கொண்ட பொருட்கள் நேரடியாக நுகர்வோருக்கு அளிக்கப்படுகிறது. அதிக அளவில் தேவைப்படும் மருந்துப் பொருட்கள் குறுகிய வழங்கல் வழி மூலம் வழங்கப்படுகிறது. பூக்கள், பால் முதலிய விரைவில் அழியும் தன்மையுடைய பொருட்களின் ஆயுள் மிகவும் குறைவு என்பதால், வை விரைவாக நுகர்வோரைச் சென்றடைய வேண்டும். குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் போன்ற தொழில் நுட்பம் சார்ந்த பொருள்களுக்கு விற்பனைக்கு முன்னும் பின்னும் ஆலோசனைகள் தேவைப்படுவதால் அவை உற்பத்தியாளரால் நேரடியாகவோ குறைந்தபட்ச இடைநிலையர் வாயிலாகவோ விநியோகிக்கப்பட வேண்டும்.
(ii) சந்தையின் தன்மைகள்: பொருள்களுக்கான சந்தையின் அளவு வழங்கல் வழியைத் தீர்மானிக்கிறது. பொருட்கள் அதிகமான புவியியல் பரப்பில் விநியோகிக்கப்பட வேண்டுமானால், அதிக எண்ணிக்கையிலான இடைநிலையர்கள் வேண்டும். குறைந்த பரப்பளவில் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டுமானால் இடைநிலையர்கள் இன்றி நேரடியாகவே விநியோகிக்கலாம்.
(iii) நுகர்வோர் எண்ணிக்கை: சில வடிக்கையாளர்களால் மட்டும் பெருமளவுப் பொருட்கள் வாங்கப்படுமானால் மையப்படுத்தப்பட்ட விநியோக முறையே போதுமானது பெருமளவு நுகர்வோரால் குறைந்த அளவுப் எண்ணிக்கையிலான இடைநிலையர்கள் தேவைப்படுவர்.
(iv) இடைநிலையர் காரணி: இடைநிலையர்களின் எண்ணிக்கையும் வழங்கல் வழியைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும். இடைநிலையர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவர்களின் கழிவு தொகையும் அதிகரிக்கும். இதனால் பொருளின் விற்பனை விலையும் அதிகரிக்கும். எனவே குறைந்த எண்ணிக்கையிலான இடைநிலையர்கள் மட்டுமே பொருட்களை விநியோகிக்கப் பயன்படுத்த வேண்டும்.
(v) தயாரிப்பாளர் திறன்: தயாரிப்பாளர் நிதி வசதியும் வழங்கல் வழியைத் தீர்மானிக்கிறது. நிதி வளம் நிறைந்த உற்பத்தியாளர், உயர் தொழில் நுட்ப வழங்கல் வழியினை உருவாக்கி பொருட்களின் அடக்கவிலையைக் குறைக்கிறார். பெரும் நகரங்கள் மற்றும் நகரங்களில் தனது சொந்த கிளைகளை நிறுவி அதன் மூலம் அதிக எண்ணிக்கையான பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
(vi) வழங்கல் வழியின் செலவும் நேரமும்: இடைநிலையர் வழங்கும் தரமான சேவையுடன் வழங்கல் வழியின் செலவினமும் தொடர்புடையது. சாதாரணப் பொருட்கள் சிக்கனமான விலையில் உரிய நேரத்தில் நுகர்வோரை சென்றடைய வேண்டும்.
(vii) பொருளுக்கான சேவைகளின் தேவை: நிறுவுதல்,இயக்கிக் காண்பித்தல் முதலான சேவைகள் தேவைப்படும் இந்திய சாதனங்கள் போன்றவற்றை விநியோகிக்க குறைந்த அளவிலான வழங்கல் வழி தான் உகந்தது. உற்பத்தியாளரால் அல்லது அவரால் பயிற்சி அளிக்கப்பட்ட தொழில் நுட்ப வல்லுனர் தேவையான தொழில்களுக்கு குறைந்த வழங்கல் வழியே போதுமானது.
(vii) பொருளின் வாழ்க்கை சுழற்சி: ஏற்கனவே சந்தையில் நன்கு அறிமுகப்படுத்தப்பட்ட பொருள்களுக்கு, சாதாரண வழங்கல் வழியே போதுமானது. ஆனால் சந்தையில் புதிதாக அறிமுகமாகும் பொருள்களுக்கு அனுபவம் உலா இடைநிலையர்கள் மூலம் சந்தையிடப்பட வேண்டும்.
46.
47.
பின்வருமான ஏற்றுமதி வணிகத்தின் நடைமுறைகளாகும்.
(i) வியாபார தகவல் வினவல்: ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரிடமிருந்தோ அல்லது அவரின் முகவரிடமிருந்தோ பொருட்களை இறக்குமதி செய்வதற்கான எழுத்து மூலமான விசாரணையைப் பெறுகிறார்.
(ii) சரக்காணை பெறுதல் மற்றும் ஏற்றுமதி ஆணையை உறுதிப்படுத்துதல்: இறக்குமதியாளர் வியாபார விசாரணைக்குப் பிறகு சரக்கை வாங்குவதற்கான சரக்கணையை தானோ அல்லது தனது முகவர் மூலமோ ஏற்றுமதியாளருக்கு அனுப்பி வைக்கிறார்.
(iii) நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்தல்: அயல் நாட்டில் உள்ள இறக்குமதியாளரைப் பற்றியும் அவரின் பணம் செலுத்தும் திறன் பற்றியும் ஏற்றுமதியாளர் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவே அவர் இறக்குமதியாளரை நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்து தருமாறு கோருகிறார்.
(iv) ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் குறியீட்டு ஏன் பெறுதல் : ஏற்றுமதியாளர் குறியீட்டு எண் பெற அயல்நாட்டு வணிக பொது இயக்குநரின் மண்டல அலுவலகத்திற்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
(v) உறுப்பினர் சான்று பெறுதல்: ஏற்றுமதியாளர் அரசு வழங்கும் ஏற்றுமதி தொடர்பான சலுகைகளை பெற வேண்டுமெனில் ஏற்றுமதி வளர்ச்சிக் குழுவிடம் உறுப்பினர் சான்று பெற வேண்டும்.
(vi) பொருட்களை உற்பத்தி செய்தல்/கொள்முதல் செய்தல்/ கட்டுமம் செய்தல்: ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் குறிப்பிட்ட பொருட்களை தொழிற்சாலையிலிருந்தோ அல்லது சந்தையிலிருந்தோ தருவித்துக்கொள்ள வேண்டும். இறக்குமதியாளர் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பொருட்கள் கட்டுமம் செய்யப்பட வேண்டும்.
(vii) ஏற்றுமதி ஆய்வு சான்று: பொருட்கள் கட்டுமம் செய்யப்பட்ட பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி ஆய்வு முகாமைக்கு விண்ணப்பித்து சான்று பெற வேண்டும்.
(vii) பொருட்களை காப்பீடு செய்தல்: ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்புவதற்கு முன் உரிய நிறுவனத்தில் காப்பீடு செய்ய வேண்டும்.
(ix) தோற்றுவாய் சான்றிதழ் : இறக்குமதி வணிக நடைமுறையில் தோற்றுவாய் சான்று மிக முக்கிய ஆவணமாகும். இச்சான்று ஏற்றுமதி செய்யப்படும் பொருள் குறிப்பிட்ட நாட்டில் தான் உற்பத்தி செய்யப்பட்டது என்ற உறுதி மொழியை விளம்புகிறது.
(x) வணிக தூதுவர் இடாப்பு : இறக்குமதியாகும் சரக்கின் மதிப்பு சரியானது தான் என்று சான்று பகரக்கூடிய ஆவணமே வாணிகத் தூதுவர் இடாப்பு ஆகும். இறக்குமதி நாடு சுங்க அதிகாரிகள் சரக்கு கட்டுமத்தை திறந்து பார்க்காமலே இடாப்பில் குறிப்பிட்ட மதிப்பின் அடிப்படையில் சுங்கத் தீர்வை விதிப்பர்.
(xi) அனுப்புகை முகவரி அமர்த்துதல் : ஏற்றுமதியாளர் ஏற்றுமதி ஆய்வு சான்று பெற்ற பிறகு சரக்கை அனுப்ப சுங்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். பொதுவாக இந்த அனுமதிபெறும் பணிக்காக தன் சார்பாக அனுப்புகை முகவரி நியமிக்கிறார்.
(xii) துறைமுகத்திற்கு சரக்கை அனுப்புதல் மற்றும் முகவருக்கு தகவல் தருதல்: ஏற்றுமதியாளர் சரக்கைத் துறைமுகத்திற்கு இரயில் அல்லது லாரி மூலம் அனுப்பி விட்டு, அதற்குரிய இரயில் ரசீது லாரி இரசீதை அனுப்புகை முகவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
(xiii) அனுப்புகை முகவர் பின்பற்ற வேண்டிய சுங்க நடைமுறைகள்: துறைமுக நகரத்தில் சரக்கைப் பெற்றுக் கொள்ளுதல், கப்பலிடு ஆணை பெறுதல், கப்பல் வாடகை முறி ஏற்பாடு செய்தல்.
(xiv) சரக்கை அகற்றுதல் தொடர்பான சுங்க நடைமுறைகள்: துறைமுகக் கட்டணம் செலுத்துதல் சரக்கை அனுப்ப அனுமதி பெறுதல், கப்பல் தலைவர் இரசீது பெறுதல், கப்பல் தலைவர் இரசீது பெறுதல், கப்பல் இரசீது பெறுதல்.
(xv) வாணிக இடாப்பைத் தயாரித்தல் மற்றும் வங்கியில் ஆவணங்களை தாக்கல் செய்தல் : இறக்குமதியாளருடன் செய்து கொண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்றுமதியாளர் ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள் தொடர்பாக வாணிக இடாப்பைத் தயாரிக்கிறார். அதன் பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தன்னுடைய வங்கிக்கு அனுப்பி வைக்கிறார்.
(xvi) பணம் செலுத்தப் பெறுதல்: மாற்றுச்சீட்டு மூலம் பணம் செலுத்தப் பெறல் (அ) செலுத்தகைக்குப் பிறகு ஆவணங்கள் ஒப்படைத்தல் (ஆ) ஏற்புக்குப் பிறகு ஆவணங்கள் ஒப்படைத்தல், வங்கி சான்று மூலம் பணம் செலுத்தப் பெறல்.
48.
நிலவியல் சிறப்பு தேர்ச்சி: உலக நாடுகள் அனைத்தும் தாங்கள் கொண்டுள்ள இயற்கை வளங்கள், மனித ஆற்றல், தொழில்நுட்பம், மூலதனம் ஆகியவை அடிப்படையில் வேறுபடுகின்றன. சில நாடுகளில் கனிம வளங்கள், நீர் மின்சக்தி, உலோக வளங்கள் போன்றவை அதிகமாகவும் வேறு சில நாடுகளில் முன்னேறிய உற்பத்தி தொழில்நுட்பம், திறமையான மக்கள் தொகை, மூலதன கருவிகள் ஆகியவை அதிகமாகவும் இருக்கும். எனவே, தன்னிடம் உபரியாக உள்ள வளங்களை மற்ற நாடுகளுக்கு கொடுத்து அங்கிருந்து பற்றாக்குறையான வளங்களைப் பெற்று கொள்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது.
(ii) வளங்களை தேவையான அளவிற்குப் பயன்படுத்துதல்: எந்த நாடு தன்னால் திறமையாக பொருட்களை தயாரிக்க இயலவில்லையோ அது மற்ற நாடுகளிலிருந்து அதாவது திறமையாக பொருட்களைத் தயாரிக்கக்கூடிய நாடுகளிலிருந்து உபரியாக உள்ள பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற கோட்பாட்டின்படிதான் பன்னாட்டு வணிகம் செயல்பட்டு வருகிறது. இது அந்நாட்டின் வளங்களை தேவையான அளவிற்கு பயன்படுத்த உதவுகிறது.
(iii) பொருளாதார வளர்ச்சி: வளரும் நாடுகள் இயந்திரம், தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதன் மூலமாக விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் குறைந்த பொருளாதார வளர்ச்சியில் இருந்து அதிக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் காரணமாக இருந்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் கூட பன்னாட்டு வணிகத்தின் இறக்குமதி செய்து முடிவற்ற பொருட்களாக ஏற்றுமதி செய்து விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கும்.
(iv) வேலைவாய்ப்பை உருவாக்குதல்: வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு மற்றும் வளர்ச்சிக்கும் பன்னாட்டு வணிகம் உதவுவதால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிகிறது. மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பையும், அனுப்புகை மற்றும் அகற்றீட்டு முகவர்கள், தேவைக் குறிப்பீட்டகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் புற ஒப்படைப்பு முகமைகள் போன்றவற்றிற்கும் மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
(v) வாழ்க்கைத் தரம் மேம்படுதல்: உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பல்வேறுவிதமான பொருட்கள் அல்லது சேவைகளை பன்னாட்டு வணிகத்தின் மூலம் மக்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடிகிறது. நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
(vi) விலை சமனிலைப்படுத்தல்: உலகச் சந்தையில் தினந்தோறும் விலை மாற்றம் அடையக்கூடிய பல்வேறு பொருட்களின் விலையை பன்னாட்டு வணிகம் சமப்படுத்துகிறது. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்டப் பொருட்களின் விலை உள் நாட்டில் உயருகிறதோ அப்பொழுது மற்ற நாடுகளிலிருந்து அப்பொருட்களை இறக்குமதி செய்து விலையைச் சமன் செய்கிறது. அதே போன்று குறிப்பிட்ட பொருள்களின் விலை குறையும் போதெல்லாம் அந்த பொருள்களை அதிக அளவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் விலையை நிலைப்படுத்துகிறது. உலக நாடுகளில் பொருட்களின் விலை அதிக ஏற்றத்தாழ்வாக இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
(vii) அதிக இலாபத்திற்கான வாய்ப்பு: அதிகமாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருட்களை பன்னாட்டு சந்தையில் பல்வேறு நாடுகளுக்கும் அதிக விலையில் விற்பனை செய்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. ஏதன் பயனாக அதிக இலாபத்தை ஈட்ட முடிகிறது.
(viii) முழுத் திறனையும் பயன்படுத்துதல்: பன்னாட்டு வணிகம் உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அதிக அளவில் சரக்கு மற்றும் பொருட்களை உலகச் சந்தையில் விற்பதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் அந்நிறுவனங்கள் தன்னுடைய இயந்திரம் மற்றும் தொழில் நுட்பத்தை முழுமையான அளவில் பயன்படுத்துகிறது.
(ix) பன்னாட்டு அமைதி: உலக நாடுகள் தனித்தனியே இயங்கினாலும் பன்னாட்டு வணிகத்தினால் மற்ற நாடுகளையும் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிறது. கலாச்சாரம், கருத்துகள் மற்றும் பரஸ்பர புரிந்துணருந்தல் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. பன்னாட்டு வணிகம் உலக மக்களிடையே கலாச்சார சமூக உறவுகளை வளர்க்க உதவுகிறது. ஒட்டு மொத்தமாக உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.
49.
(i) மதிப்பீட்டிற்குரியவர்: பிரிவு 2(7) "சட்டத்தின் கீழ் யாரால் வருமான வரி அல்லது ஏதேனும் பிற பணத்தொகை செலுத்தப்படத்தக்கதாக உள்ளதோ, அந்நபர் மதிப்பீட்டிற்குரியவராவார்" மேலும் தன்னுடைய வருமானம் அல்லது நட்டம் அல்லது தனக்கு வரவேண்டிய பாக்கித் தொகை ஆகியவற்றிற்காக வருமான வரிச்சட்டத்தின் கீழ் வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு உட்பட்ட ஒவ்வொரு நபரும் மதிப்பீட்டிற்குரியவர் என்ற சொல்லில் அடங்குவர். வருமான வரிச் சட்டம் மூன்று வகையான மதிப்பீட்டிற்குரியவர்களை கண்டுணர்ந்துள்ளது.
(ii) சாதாரண மதிப்பீட்டிற்குரியவர்கள்: இச்சட்டத்தின் கீழ் வட்டி, வரி அல்லது அபராதம் போன்ற ஏதேனும் தொகையை செலுத்த வேண்டிய நபர்.
(iii) பிரிதி நிதித்துவ மதிப்பீட்டிற்குரியவர்: மற்றவரின் வருமானத்தின் மதிப்பீட்டிற்கு பொறுப்பேற்கும் ஒரு நபர், பிரிதிநிதித்துவப் மதிப்பீட்டிற்குரியவர் எனப்படுகிறார். (எ.கா.) மைனர் ஒருவரின் பாதுகாவலர்.
(iv) தவறிழைத்த மதிப்பீட்டிற்குரியவர் : வருமான வரிச் சட்டத்தின் கீழ், தமது சட்டக் கடமை எதையேனும் நிறைவேற்றத் தவறியவர் தவறிழைத்த மதிப்பீட்டிற்குரியவராவார் (எ.கா) தமது பணியாளர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை அளிக்கும் எஜமானர் ஒருவர், அச்சம்பளத்தில் இருந்து உரிய வரியை பிடித்தம் செய்தல் வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை எனில், அவர் தவறிழைத்த மதிப்பீட்டிற்குரியவர் என அழைக்கப்படுவார்.
50.
(i) குறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில்துறையில் ரூ 25. இலட்சத்திரகுள்ளும் சேவைத்தொழில் துறையில் ரூ 10 இலட்சத்திரகுள்ளும் முதலீடு செய்திருந்தால் அது குறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(ii) சிறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 25 இலட்சத்துக்கு மேல் 5 கோடிக்கு மிகாமல் சேவைத் தொழில் துறை உபகரணங்கலில் ரூ 10 இலட்சத்துக்கு மேல் ரூ 2 கோடிக்கு மிகாமல் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(iii ) நடுத்ததர தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 10 கோடிக்கு மிக்காமலும் சேவை தொழில் துறையில் உபகரணங்களில் ரூ 2 கோடிக்கு மேல் ரூ 5 கோடிக்கு மிகாமலும் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனம் என்று அழைக்கப்டும்
51.
உரிமையாளர் நிதி:
(i) நிறுவனங்களின் உரிமையாளரால் வழங்கப்படும் நிதி உரிமையாளர் நிதி எனப்படும். உரிமையாளர் என்பவர் ஒரு தனி மனிதராகவோ, நிறுவனத்தின் கூட்டாளிகளாகவோ அல்லது நிறும பங்குதாரர்களாகவோ இருக்கலாம். இது தனி நபர் முதல் கூட்டாளிகள் முதல், அல்லது பங்குகள் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் குறிக்கிறது.
(ii) இருத்திவைக்கப்பட்ட இலாபத்தை தொழிலில் மறுமுதலீடு செய்தல்(லாபமறு உழவு) உரிமையாளர் நிதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
(iii) தொழில் நிறுவனங்களின் வாழ்நாளில் இந்த நிதி திருப்பித் தரப்பட வேண்டியதில்லை. நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் உரிமையை உரிமையாளர் நிதி வழங்குகிறது.
கடனாகப் பெறப்பட்ட நிதிகள் :
கடனாகப் பெறப்பட்ட நிதிகள் என்பது கடன் அல்லது புற மூலங்களினால் பெறப்பட்ட நிதிகளைக் எடுத்துக்காட்டாக, கடன் பத்திரங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன், பொது வைப்பு, தொழில் கடன், குத்தகை நிதி, வணிகத் தாள், கடன் வசூல் முகமை, முதலியவற்றைக் கூறலாம்.
(i) இந்தக் கடன்களை குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்தப்பட்ட வேண்டும்.
(ii) கடனாளி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒப்புக்கொண்ட, வட்டியைச் செலுத்துவதற்குச் சட்டப்படி கடமைப்பட்டவர் ஆவார்.
(iii) பத்திரங்கள், நிலம், கட்டிடம், சரக்கிருப்பு, வாகனங்கள், இயந்திரம், நிலைச்சொத்து ஆவணங்கள் போன்றவற்றைப் பிணையமாக வைத்து நிதி பெறப்படுகிறது.
52.
53.
தொழிலின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) பொருளாதார நோக்கங்கள் : தொழில்கள் பொருளாதார நோக்கம் என்பது லாபம் ஈட்டுவதே ஆகும். மேலும் இலாபம் ஈட்டுவதற்கு நுகர்வோரை உருவாக்குதல், புதிய நுட்பங்களை கண்டுபிடித்தல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் போன்ற நோக்கங்களே மிக முக்கியமானதாகும்.
(ii) சமூக நோக்கங்கள் : சமூக நலனைப் பேணுவது என்பது சில தொழிலமைப்புகளை, அரிய வகைகளை சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். எந்த தொழில் நடவடிக்கைகளையும் சமுதாயத்திற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது.
(iii) நிறுவனம் நோக்கங்கள்: தொழிலமைப்பின் மிக முக்கிய நோக்கம் தொடர்ந்து செயல்பாடுகள் மூலம் மயமாக்கம், நுகர்வோருக்கு தரமான பொருள்களை வழங்குதல் நுகர்வோருக்குத் திருப்திப்படுத்துவதில் ஆகியன மூலமாக அமையலாம்.
(iv) மனித நோக்கங்கள்: தொழிலமைப்பு தன்னுடைய பணியாளர் நலன் மற்றும் எதிர்காலத் தேவையை நிறைவேற்றக் கூடிய வகையில் செயல்பட வேண்டும். மேலும் இயலாதவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், நலம் காக்க உதவ வேண்டும். பணியாளர்கள், பொருளாதார, சமூக உளவியல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவையாக அமைய வேண்டும்.
(v) தேசிய நோக்கங்கள்: தொழில் நிறுவனம், ஓரு நாட்டினுடைய மிக முக்கிய அங்கமாக கருதப்படுவதால் அவை நாட்டின் நோக்கங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுகிறது. கடமை வகையில் தன்னுடைய குறிக்கோளை அமைத்துத் தெளிவு வேண்டும். ஒரு நாட்டின் நோக்கம் என்பது மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தல், அரசிற்கு வருவாய் ஈட்டுதல், சரக்கு மற்றும் சேவை உற்பத்தியில் தன்னிறைவு அடைதல், சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவை மிக முக்கியமானதாகும். எனவே ஒரு தொழில் அமைப்பு தன்னுடைய குறிக்கோளை நிர்ணயம் செய்யும் போது மேற்கூறிய நோக்கங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
54.
நிறைவேறிய ஒப்பந்தம் (Executed contact): ஒபபந்தப்படி அவரவர்களின் கடைமையை முடிக்கும்போது அவ்வொப்பந்தம் நிறைவேறிய ஓப்பந்தமாகும்.உதாரணமாக வியாபாரி ஒருவர் ரொக்கத்திற்கு தொலைக்காட்சி ஒன்றை விற்கிறார் இதில் விற்பவர், வாங்குபவர் ஆகிய இருவரும் தங்கள் கடைமை நிறைவேற்றி உள்ளார்கள்.
நிறைவேற்றப்பட்ட வேண்டிய ஒப்பந்தம் (executory contact) : ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இரு நபரிகளிடையே கடமைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட வேண்டிய ஒப்பந்தமாகும்.எடுத்துக்காட்டு A என்பவர் B என்பவருக்கு ரூ 20,000க்கு கட்டில் ஒன்று செய்து தர ஒப்புக்கொள்கிறார்.எனினும் A இன்னும் கிட்டிலைத் தயார் செய்யவில்லை என்றும் B என்பவர் அதற்கான தொகையை செலுத்தவில்லை என்று வைத்துக்கொள்ளுவோம். அது நிறைவேற்றப்பட்ட வேண்டிய ஒப்பந்தமாகும்
ஒரு தலை ஒப்பந்தம் (Unilatral contact) : இதில் ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களின் ஒருவர் மட்டுமே தன வாக்குறுதி அல்லது கடமையை நிறைவேற்றிய பிறகு மற்றொரு நபர் தனது கடமையை நிறைவேற்றுகிறார். எடுத்துக்காட்டாக x என்பவர் பொருட்களை எடுத்துவருவதாக ரூ 10,000) y என்பவருக்கு தருவதாக
கூறுகின்றார். y என்பவர் பொருட்களை கொண்டு வந்த பிறகு x என்பவர் பணத்தை தருகிறார்.இதில் y பொருட்களை கொண்டு வரும் பொழுதே ஒப்பந்தம் உருவாகின்றது
இருதலை ஒப்பந்தம் (bilateral contact) : ஒப்பந்தம் ஒன்று உருவாகும் பொழுது இரு தரப்பினரும் தங்கள் கடமைகளை ஆற்ற வேண்டியிருப்பின் அத்தகைய ஒப்பந்தம் இரு தலை ஒப்பந்தம் எனப்படுகிறது. எடுத்துக்காட்டக R என்பவர் ரூ10,00,000 மதிப்புள்ள மகிழ்வுந்தை விற்பனை செய்ய s க்கு வாக்குறுதி அளிக்கின்றார். S என்பவர் பதிலுக்கு பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards