9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
SECOND SUMMATIVE EXAM 2018 ( Half Yearly Exam )
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அந்நியச் செலாவணி என்றால் என்ன?
2.
நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
3.
பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
4.
உயிர்கோளம் என்றால் என்ன?
5.
நீரியல் சுழற்சி என்றால் என்ன?
6.
'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?
7.
புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.
8.
சீனப் பெருஞ்சுவர்.
9.
கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை?
10.
புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் குறித்து ஆராய்க.
11.
மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?
12.
போக்சா (POCSO) -வரையறு.
13.
அடிப்படை உரிமைகள் யாவை?
14.
'கடல் உவர்ப்பியம்' என்றால் என்ன?
15.
பட்டு வளர்ப்பு என்றால் என்ன?
16.
விஜய நகர அரசை உருவாக்கியவர் யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
17.
வெப்பமண்டல தாவரங்கள் - பாலைவனத்தாவரங்கள்
18.
உற்பத்தியாளர் - சிதைப்பவர்
19.
ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி
20.
கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்
21.
சமூகம், மதம் பண்பாடு
அ) இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த அம்சம் எது?
ஆ) ‘கில்டு’ என்றால் என்ன?
இ) சைவ இயக்கங்கள் சிலவற்றை குறிப்பிடுக.
ஈ) அக்பரின் அவையிலிருந்த இசை விற்பன்னர் யார்?
22.
ஹன் பேரரசு
அ) ஹன் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?
ஆ) ஹன் பேரரசின் தலைநகரம் எது?
இ) ஹன் பேரரசின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
ஈ) ஹன் பேரரசின் புகழ்பெற்ற வலிமை வாய்ந்த அரசர் யார்?
23.
ஏப்ரல் 1, 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டம் ________
24.
பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுவை______
25.
கி.பி.1453 ல் கான்ஸ்டாண்டிநோபிளை ____ கைப்பற்றினர்
26.
______ ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்
27.
_________ என்பது ஜப்பானின் முந்தையப் பெயர் ஆகும்.
28.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
i. மாநில மனித உரிமை ஆணையம் 1993ல் நிறுவப்பட்டது.
ii. இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
iii. இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்
iv. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.
i மற்றும் ii சரி
i மற்றும் iii சரி
i, ii மற்றும் iii சரி
ii, iii மற்றும் iv சரி
29.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _________
20 நாட்கள்
25 நாட்கள்
30 நாட்கள்
35 நாட்கள்
30.
கடல் நிரோட்டங்கள் உருவாகக் காரணம்.
புவியின் சுழற்சி
வெப்பநிலை வேறுபாடு
உவர்ப்பிய வேறுபாடு
மேற்கண்ட அனைத்தும்
31.
உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு
சூழ்நிலை மண்டலம்
பல்லுயிர்த் தொகுதி
சுற்றுச்சூழல்
இவற்றில் ஏதுவும் இல்லை
32.
"தொண்ணூற்றைந்து கொள்கைகள்" களை எழுதியவர் யார்?
மார்ட்டின் லூதர்
ஸ்விங்லி
ஜான் கால்வின்
தாமஸ்மூர்
33.
கிருஷ்ணதேவராயர் _______ன் சமகாலத்தவர்.
பாபர்
ஹீமாயுன்
அக்பர்
ஷெர்ஷா
34.
நிலப்பிரபுத்துவம் ________மையமாகக் கொண்டது.
அண்டியிருத்தலை
அடிமைத்தனத்தை
வேளாண் கொத்தடிமையை
நிலத்தை
35.
கிரேக்கர்களின் மற்றோரு பெயர் _____ஆகும்.
ஹெலனிஸ்டுகள்
ஹெலனியர்கள்
பீனிசியர்கள்
ஸ்பார்ட்டன்கள்
36.
மரியானா அகழி
37.
தான்சேன்
38.
முதல் சோகுனேட்
39.
பிளாட்டோ
40.
அமெரிக்க டாலர்
1.
1. நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது.
2. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது.
3. உள்நாட்டில், அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி என அழைக்கப்படுகிறது.
4. உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
5. இந்த மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உலக வணிகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.
2.
1. தமிழகத்தின் கிழக்குக் கடல் வழியாக மிளகு மற்றும் நறுமணப் பொருள்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் மென்மையான பருத்தி ஆடைகள் போன்ற பொருள்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
2. இவற்றில் மிளகு மற்றும் நறுமணப் பொருள்கள் அதிகம் இடம்பெற்றதால் இந்த வணிகப்பாதை நறுமணப்பாதை என்று அழைக்கப்படுகிறது.
3.
(i) வெப்ப மண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
(ii)வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி.
(iii)பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி.
(iv)மிதவெப்பமண்டல புல்வெளி பல்லுயிர்த் தொகுதி.
(v) தூந்திரப் பல்லுயிர்த்தொகுதி.
4.
உயிர்க்கோளம் (Biosphere) புவியின் நான்காவது கோளமாகும். புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இக்கோளம் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளத்தை உள்ளடக்கியதாகும். இது தாவர இனங்கள், விலங்கினங்கள் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
5.
புவியின் நீரானது, நிலைத்த தன்மையற்ற, நகரும் தன்மையுடையதாகும். புவியின் மீது மேலும், கீழும் நீரின் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவதே நீரியல் சுழற்சி எனப்படும்
6.
(i) அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே அல்லது புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்குமிடையே, தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும்.
(ii) இது கொலம்பியப் பரிமாற்றம் (Columbian Exchange) என்று அறியப்படுகிறது.
7.
1. புனித சோபியா ஆலயம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும்.
2. அக்கால ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான இத்தேவாலயம் அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.
3. கான்ஸ்டான்டிநோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றியபோது இத்தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.
8.
(i)கி மு. (பொ.ஆ.மு) 8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலப் பகுதியில் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சுவர்களை எழுப்பிக் கொண்டன.
(ii) சின் அரசவம்சத்தின் காலத்தில் தனித்தனியாக இருந்த பல சுவர்கள் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 5000 கிலோ மீட்டர் நீளமுடைய பெருஞ்சுவர் உருவானது.
(iii)இச்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
9.
கடல் வளங்கள்:
கடல் நீர் மற்றும் கடலின் அடிப்பகுதியில் காணப்படக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை நாம் கடல் வளங்கள் என்கிறோம்.
வகைகள்:
(i) கடல் வளங்கள் உயிரியல் வளங்கள், கனிம வளங்கள் மற்றும் ஆற்றல் வளங்கள் என
வகைப்படுத்தப்பட்டுள்ளன.
(ii) மீன்கள், பிளாங்டன், கடற்புற்கள் மற்றும் பவளப் பாறைகள் போன்றவகைள் உயிரியல் வளங்களாகும்.
(iii) பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உலோகத் தாதுக்கள், மணல் மற்றும சரளைக் கற்கள் போன்றவை கனிம வளங்களாகும்.
(iv) எரிசக்தி, கனிமங்கள், ஓத ஆற்றல், அலை ஆற்றல் போன்றவைகள் ஆற்றல் வளங்களாகும்.
தாக்கங்கள் :
(i) கடல் வளங்கள் சமூகத்தின் நீடித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. (ii) பலதரப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உணவு, மருத்துவம், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தொழில் துறைகளில் பயன்படுகின்றன.
(iii) ஆற்றல், கனிம வளம் மற்றும் நீர் ஆகியவற்றின் உலகத்தேவைகள் உயிரற்ற கடல் வளங்களையே அதிகம் சார்ந்துள்ளன.
10.
(i) புதிய நிலப்பரப்புகள், புதிய கடல்வழிப்பாதைகளின் கண்டுபிடிப்புகளின் விளைவாக ஐரோப்பாவின் பொருளாதார மையம். போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தது.
(ii) ஸ்பானியர்களின் புதிய உலகக் கண்டுபிடிப்பு மெக்ஸிகோவையும் தென் அமெரிக்காவையும் வெற்றி கொள்வதற்கு இட்டுச் சென்றது.
(iii) கரும்பின் அறிமுகம், தென் அமெரிக்காவிலும் கரீபியன் தீவுகளிலும் கரும்புத் தோட்டங்கள் அமைய வழிவகுத்தது. ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்யவேண்டி நேர்ந்தது.
(iv) காம்பியா, செனகல், கோரீ, எல்மினா, காங்கோ ஆகிய நாடுகள் ஆப்பிரிக்காவில் அடிமை
வர்த்தகத்தின் முக்கியமான மையங்களாக மாறின.
(v) அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண வர்த்தகமாக ஆகியது.
(vi) ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அடிமைகளை ஐரோப்பிய நாடுகள் விலை கொடுத்து வாங்கின.
(vii) இதற்குப் பதிலாக அமெரிக்காவிலிருந்து அவை சர்க்கரை மற்றும் பிற கச்சாப் பொருட்களைப்
பெற்றன. இந்த வர்த்தகத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் அளவற்ற லாபம் ஈட்டின.
(viii) புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் வணிகப்புரட்சிக்கு இட்டுச் சென்றன. இந்த வணிகப் புரட்சியின் தலையாய அம்சங்கள் வங்கிகள், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகியவையே இவ்வணிகப் புரட்சியின் சிறப்பு அம்சங்களாகும்.
(ix) 'மெர்கண்டலிசம்' என்பது அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பில் வணிகரீதியில் லாபத்தையே குறியாகக் கொண்ட ஏகபோக வர்த்தகம் ஆதிக்கம் செலுத்தும்.
(x) புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் விளைவாக, பதினேழாம் நூற்றாண்டு பல்வேறு கிழக்கிந்திய நிறுவனங்களின் உருவாக்கத்தைக் கண்டது. ஆங்கிலக் கிழக்கிந்தியக்கம்பெனி, டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் ஃப்ரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி போன்றவை அத்தகைய நிறுவனங்களாகும்.
(xi) இந்தியாவுக்கு ஒரு புதிய கடல்வழியைக் கண்டுபிடித்ததற்குப் பின்னர் போர்ச்சுகீசியர்கள், கிழக்கிந்திய நறுமணப்பொருள் வர்த்தகத்தில் அராபியர்கள், எகிப்தியர்கள், பெனீசியர்கள் ஆகியோரின் போட்டிகளை படைபலத்தைக் கொண்டு முறியடித்துவிட்டு தங்களுடைய ஏகபோகத்தை நடைமுறைப்படுத்தினர்.
(xii) ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் வர்த்தக ஆதிக்கத்தை செலுத்தி மாபெரும் செல்வத்தை குவித்தது.
11.
மங்கோலியர்கள்:
(i)மங்கோலியர்கள் ஆசிய ரஷ்யாவின் ஸ்டெப்பிஸ் மேய்ச்சல் நிலப்பகுதியிலிருந்து ஐரோப்பாவிற்குள் நாடோடிகளாக வந்தவர்கள்.
(ii)அவர்கள் கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.
(iii)போர்த்திறன் கொண்ட அவர்கள் செங்கிஸ்கான் எனும் மகத்தான தலைவனை உருவாக்கினார்கள்.
சீனாவில் மங்கோலிய ஆட்சி :
(i)சுங் வம்சத்தவர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, யுவான் வம்சத்தினர் என்ற பெயரில் மங்கோலியர்கள் சீனாவில் தங்கள் ஆட்சியை நிறுவினர்.
(ii)பாரசீகத்தையும் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவையும் விட்டுவைக்கவில்லை. கி.பி. (பொ.ஆ). 1252 - இல் மாபெரும் 'கான்' ஆக மங்குகான் குப்ளேகானை சீனாவின் ஆளுநராகப் பணியமர்த்தினார்.
(iii)யுரேசியாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை பரவியிருந்த மங்கோலியரின் ஆதிக்கம், சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இதர வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்புவதற்கு உதவியது.
(iv)பெய்ஜிங்கிலிருந்த மங்கோலியரின் அரச சபை மார்க்கோபோலோ போன்ற வெளிநாட்டவரிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்த போதிலும் விவசாயிகள் தொடர்ந்து வறுமையில் வாடினர்.
(v)சில மதம் சார்ந்த அமைப்புகளும் ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின. முடிவில் 'சிகப்பு தலைப்பாகைகள்' என்ற அமைப்பின் தலைவரான சூ யுவான் சங், தலைநகர் பெய்ஜிங்கைக் கைப்பற்றி கி.பி. (பொ .ஆ) 1369 இல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
12.
1. போக்சா சட்டம் என்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமாகும்.
2. இது ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது
3. இது குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
4. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வழிவகை செய்கிறது.
5. மேலும் பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவினை ஈடுகட்டும் வகையில் அபராதமும் இச்சட்டத்தின் படி விதிக்கப்படுகிறது.
13.
1. சமத்துவ உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்க்கான உரிமை
5. சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
6. அரசமைப்புச் சட்ட வழி தேர்வுகளுக்கான உரிமை
14.
கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் விகித அளவு உவபர்ப்பியம் எனப்படும். இது ஆயிரத்தின் பகுதியாக அளவிடப்படுகிறது.
15.
(i) மல்பெரி பட்டுப்பூச்சிகளை வளர்த்துப் பட்டு உற்பத்தி செய்யும் முறை பட்டுவளர்ப்பு எனப்படும். இது பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.
(ii) ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அளவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியாக வங்காளம் திகழ்ந்துள்ளது.
16.
(i) ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜய நகர அரசு உருவாக்கப்பட்டது.
2. சங்கம வம்சம், சாளுவ வம்சம் மற்றும் துளுவ வம்சம், இவ்வரசை ஆட்சி புரிந்தனர்
17.
| வெப்பமண்டலத் தாவரங்கள் | பாலைவனத் தாவரங்கள் |
| வெப்பண்டலக் காடுகள் பல்வேறு விதமான உயிரினங்களின் வாழ்விடமாகவும், முதன்மைத் தொழில் நடைபெறும் இடமாகவும் உள்ளது. | பாலைவனப் பகுதிகளில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 25 செ.மீட்டருக்கும் குறைவாக உள்ளது. |
| இப்பகுதிகள் மிக அடர்ந்த காடுகளைக் கொண்டிருப்பதால் பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. |
மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும் வறண்ட காலநிலையின் காரணமாக இங்கு தாவரங்கள் அரிதாக வளர்கின்றன. |
| இங்கு குடியிருப்புகள் சிதறிக் காணப்படுகின்றன. | இங்கு வாழும் மக்கள் மேய்ச்சல் நிலங்களைத் தேடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயாவர். |
| உணவு சேகரித்தல், மீன் பிடித்தல். மரம் வெட்டுதல். இடமாற்று விவசாயம் போன்றவை இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமாகும். |
இங்கு வாழும் மக்கள் உணவு சேகரித்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். |
| ரப்பர், மூங்கில்,எபோனி போன்றவை இங்கு காணப்படும் முக்கிய மரங்களாகும். |
வறட்சியைத் தாங்கக்கூடிய முட்புதர்கள், குறுங் காடுகள் மற்றும் பனை போன்ற தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. |
18.
| உற்பத்தியாளர் | சிதைப்பவர் |
| சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத்தாமே உற்பத்தி செய்து கொள்ளக் கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும். | இவ்வுரினங்களில் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாதவை ஆகும். |
| இவை தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன. | இவை சா று ண் ணி க ள் என்று அழைக்கப்படுகின்றன. |
| இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. | இவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு |
| தாவரங்கதாவரங்கள், பாசி, பாக்டீரியா போன்றவை எடுத்துக்காட்டாகும். | பூஞ்சைகள்,காளான்கள் போன்றவை உதாரணங்களாகும். |
19.
| ஓத மின்சக்தி | நீர் மின்சக்தி |
| 1. கடல் ஓதங்களினால் நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு ஓத மின்சக்தி என்று பெயர். |
1. ஆறுகளில் வரும் நீரை அணைக்கட்டுகளில் தேக்கி வைத்து நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது நீர் மின்சக்தி எனப்படுகிறது. |
| 2. இந்தியாவில் காம்பே வளைகுடா கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவன சதுப்புநிலப்பகுதிகள் ஓத சக்தி உற்பத்தி செய்ய சாத்தியக் கூறுகள் நிறைந்த மண்டலங்களாக அறியப்பட்டுள்ளன. |
2.தமிழ்நாட்டில் அமராவதி, பவனிசாகர். குந்தா,மேட்டூர், பாபநாசம் போன்றவை முக்கிய நீர்மின் உற்பத்தி நிலையங்களாகும், |
20.
| கடலடிச் சமவெளி | கடலடிப் பள்ளம் |
| ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி என்பது ஆழ்கடலில் காணப்படும் கடலடிச் சமவெளி ஆகும். | பெருங்கடலின் மிக ஆழமான பகுதி கடலடிப் பள்ளம் அல்லது அகழி ஆகும். |
| இச்சமவெளிகள் ஆறுகளினால் கொண்டு வரப்பட்ட களிமண், மணல் மற்றும் வண்டல்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த படிவுகளால் ஆனது. |
படிவுகள் ஏதும் இல்லாததினால், பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் 'V' வடிவத்தில் காணப்படுகின்றன. |
21.
(அ) இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த அம்சம் சாதிமுறை.
(ஆ) ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்து வருபவர் அத்தொழில் சார்ந்த குழுவில் அல்லது அமைப்பில் உறுப்பினராக சேர்வது கில்டு முறையாகும்.
(இ) சைவசித்தாந்தம், வீரசைவம், வரக்கிரி சம்பிரதாய.
(ஈ) அக்பரின் அவையிலிருந்த இசை விற்பன்னர் தான்சேன்.
22.
அ) ஹன் பேரரசைத் தோற்றுவித்தவர் லீயு-பங்.
ஆ) ஹன் பேரரசின் தலைநகரம் சாங்-அன்.
இ) ஹன் பேரரசின் புதிய தலைநகரம் லுவோயாங் Luoyang அமைந்துள்ளது.
ஈ) ஹன் பேரரசின் புகழ்பெற்ற வலிமை வாய்ந்த அரசர் வு-தை என்பவராவார்.
23.
( )
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்
24.
( )
நுகர்வோர்கள்
25.
( )
உதுமானியத் துருக்கியர்
26.
( )
புனித சோபியா ஆலயம்
27.
( )
யமட்டோ
28.
(d)
ii, iii மற்றும் iv சரி
29.
(c)
30 நாட்கள்
30.
(d)
மேற்கண்ட அனைத்தும்
31.
(a)
சூழ்நிலை மண்டலம்
32.
(a)
மார்ட்டின் லூதர்
33.
(a)
பாபர்
34.
(a)
அண்டியிருத்தலை
35.
(b)
ஹெலனியர்கள்
36.
பசிபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி
37.
அக்பரின் அரச சபை
38.
காமகுரா
39.
தத்துவ ஞானி
40.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards