11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
Higher Secondary First Year Important Questions
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
2.
பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
3.
இந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.
4.
சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக:
5.
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்
6.
"வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.
7.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
8.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
9.
முதலாம் முகம து ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.
10.
சோழர் ஆட்சியில் நிலவிய சமூக, சமய, பண்பாட்டுச் சூழலைப் பதிவு செய்க
11.
கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக
12.
இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?
13.
பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
14.
குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கை ஆய்வு செய்க .
15.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
16.
மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.
17.
சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
18.
சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?
19.
தொடக்க புதிய கற்காலப்பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.
20.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
1.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
2.
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பெளத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பெளத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பெளத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பெளத்த சங்கம்:
தலைமை தாங்கியவர் உபாலி. இடம். ராஜகிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும். ஆனாந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பெளத்த சங்கம்:
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பெளத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும் இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பெளத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோடரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பெளத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பெளத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
3.
1. மேய்ச்சல் சுமூக மக்கள், வேளாண்மை செய்வோம், வேட்டையாடிகள் -உணவு சேகரிப்பவர்கள், வணிகர்கள் போன்ற பல குழுக்கள் சிந்து பகுதியில் வசித்தனர்.
2. இத்தகைய மக்கள் இக்கால கட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து-காஷ்மீர் வரையிலும், குஜராத்திலிருந்து அருணாசலப்பிரதேசம் வரையிலும் பரவி இருக்கலாம்.
3. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து நாகரிகமும் செழிப்புற்றிருந்த பொது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்து கொண்டிருந்தன.
4. இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும்(கேரளா) இலங்கையிலும் வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்தனர்.
5. படகு போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை.
6. தென்னிந்தியாவின் வடபகுதி குறிப்பாக கர்நாடக, ஆந்திரப்பிரதேசம் ஆகியவை புதிய கற்கால பண்பாடுகளுடன் மேய்ச்சல் மற்றும் கலப்பைச் சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டு வந்தன.
7. புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர் -கங்கைச்சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதியிலும், மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவி இருந்தபோது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்பு கால பண்பாடு நிலவியது.
8. இவ்வாறு இந்தியா ஹரப்பா நாகரீக காலத்தில் பல்வேறு பண்பாடுகளில் கலவை நிலப்பகுதியாக விளங்கியது.
4.
1. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நர மயமாக்கத்தின் வெளிப்பாடு சிந்து நாகரிகமாகும்.
2. சிந்து நாகரிகம் வடமேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான பண்பாட்டு முறைமையாக இருந்தபோது, ஏராளாமான பண்பாடுகள் இந்தியாவின் வேறு,வேறு பகுதியில் இருந்தன.
3. சிந்து எழுத்துக்களின் பொருளை இன்னும் கண்டறிய முடியவில்லை.
4. தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருங்கால தாழிகளில் மெல்லிய கீரல்களாக எழுதப்பட்டுள்ள வாசகங்களும் சில இடங்களின் பெயர்களும் சிந்து நாகரிகத்திற்கு தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன் வைக்கப்படுகின்றன.
5. தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் இடைக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்தற்குப் பல தொல்லியல் சான்றுகள் சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம் பெயர்ந்திருக்கலாம்.
6. பழந்தமிழகத்தைச் சேர்ந்த ஊர்களான அரிக்கமேடு, கீழடி, உறையூர் போன்றவை இந்தியாவில் நடந்த இரண்டாம் நகர மயமாக்கத்தின் பகுதிகள் ஆகும்.
7. இந்த தமிழக ஊர்கள் சிந்து நகரங்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளன.
5.
வேலூர் கலகத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை:
ஆங்கிலேயர் தங்கள் படைப்பிரிவில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கு ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகம் செய்தார்.
தலைப்பாகையின் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் சிப்பாய்களுக்கு அருவருப்பைத் தந்தது.
ஏனெனில் அது மிருகத்தோலில் செய்யப் பட்டிருந்தது.
வெறுப்பின் உச்சகட்டமாக சீருடையின் முன் பக்கத்தின் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
மீசை, சாதி அடையாளங்கள், கடுக்கன் ஆகியவை அணியக் கூடாது என்று ஆணையிட்டனர். இது சிப்பாய்களை கோபமுறச் செய்தது.
புரட்சியின் போக்கு:
முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் வேலூரில் 4 ஆம் ரெஜிமண்டிள் 2-ஆம் படைப் பிரிவினர் தலைப்பாகை அணிய மறுத்தனர்.
இந்தப் பிரச்சனையின் வீரர்கள் தண்டிக்கப்பட்டனர்.
இந்த புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜமாலுதீன். இவர் திப்புவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரே வேலூர் கோட்டையிலுள்ள வீரர்களிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஜூலை 10-ஆம் நாள் காலை 2 மணி அளவில் வீரர்கள் புரட்சிக்கு வித்திட்டனர்.
புரட்சியாளர்கள் ஒரே நேரத்தில் ஐரோப்பியர்கள், மற்றும் ஐரோப்பியர்கள் குடியிருப்புகள் என அனைத்தையும் தாக்கினர்.
இதில் 13 அதிகாரிகள் 82 கீழ் நிலை இராணுவ வீரர்கள் இறந்தனர். 91 - பேர் காயமடைந்தனர்.
கோட்டைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு ஆற்காட்டிலிருந்த கில்லஸ்பிக்கு கடிதம் அனுப்பினார்.
வேலூர் கோட்டைக்கு காலை 9 மணிக்கு வந்தடைந்தார் கில்லஸ்பி.
பீரங்கியால் கோட்டைக் கதவு தகர்க்கப்பட்டு உள்ளே நுழைந்தனர். இதில் கில்லஸ்பி காயமடைந்தார்.
கில்லஸ்பியின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் புரட்சியாளர் சிலர் தப்பியோடினர்; சிலர் சரணடைந்தனர்.
பல கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இவ்வாறு வேலூர் புரட்சி ஒரு முடிவுக்கு வந்தாலும் அது 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு வித்திட்டுச் சென்றது.
6.
1.ஷெர்ஷா தனது அரசை மையப்படுத்தப்பட்ட அரசாக மாற்றினார்.
2. நெகிழ்வுத் தன்மை கொண்ட வருவாய் முறையைப் பின்பற்றினார்.
3. நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு எவ்வாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
4. சில பகுதிகளில் ஜாகீர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன.
5. வேறுபல இடங்களில் மொத்த வேளாண் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வாரியாக வசூலிக்கப்பட்டது.
6. ஷெர்ஷா விவசாயிகளிடம் கொண்டிருந்த அதே அக்கறையை வர்த்தகர்களிடமும் கொண்டிருந்தார்.
7. வணிகத்தை ஊக்குவிப்பதற்காக வணிக வரிகளை எளிமைப்படுத்தினார்.
வணிகமும், வர்த்தகமும்:
1. வணிகத்தையும் வர்க்கத்தையும் மேம்படுத்தும் பொருட்டு உறுதியான சாலை வசதி முறையை ஷெர்ஷா பராமரித்தார்.
2. பழைய சாலைகள் புதுப்பிக்கபட்டதோடு புதிய சாலைகளும் அமைக்கப்பட்டன.
3. அனைத்துச் சாலைகளிலும் 'சராய்' எனப்படும் சாத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப் பட்டன.
4. இவ்வேற்பாடுகள் விறுவிறுப்பான வணிகத்திற்கு உத்தரவாதம் அளித்தன.
5. ஷெர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன.
6. இத்தகைய சராய்கள் தங்களுக்கு அருகே நகரங்கள் உருவாவதையும் உறுதி செய்தன.
7. மிகவும் புகழப்படும் அக்பர், தோடர்மால் ஆகியோரின் நிதிநிர்வாக முறை பெருமளவில் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையினை அடித்தளமாகக் கொண்டதாகும்.
7.
(i) இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையுமே 1833 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் வலியுறுத்தியது.
(ii) ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை (Rhuggee) சடங்கு முறையாக கொள்ளையடிப்பதையும் கொலை செய்வதையும் வழக்கமாகத் கொண்டிருந்தவர்கள்)அழிக்கவும் சதி முறையை ஒழிக்கவும் , கல்வி மேம்பாட்டுக்காகப் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்கப் பாடுபட்டார்.
(iii) கல்கத்தா மருத்தவக் கல்லூரியை 1835 இல் துவக்கினார்.இக்கல்லூரியின் மாண்வர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844 ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பபட்டர்கள்.
(iv) 1845 இல் பம்பாயில் கிராண்ட் மருத்தவக் கல்லூரி நிறுவப்பட்டது.தாம்சன் பொறியியல் கல்லூரி 1947 ஆம் ஆண்டு ரூர்க்கியில் தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் 1849 இல் பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது.
(v) மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக 1835 ஆம் ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார்.அவர் கல்விக்குழுமத்தின் உள்நாட்டுக் கல்வி மீது மதிப்பிருக்கவில்லை.
(vii) மெக்காலே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்துப் பரிந்துரைத்தால் அரசு ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.
8.
1.நில வருவாய் தான் முக்கிய வருவாயாக இருந்தது.
2.நிலத்தின் உற்பத்தித்திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
3.சரியான புள்ளி விவரத்துடன் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.
4.செளத் மற்றும் சர்தேஷ்முகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்களாக இருந்தன.
5.சுங்கம், கலால் வரி, வனப் பொருட்களின் விற்பனை ஆகியன மூலமாகவும் வருவாய் கிடைத்தது.
6.தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
7.கிராம மக்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
8.கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
9.பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டு வரி.
10.எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்காக வருடாந்திர கட்டண வரி.
11. விதவைகள் நிலவரி, நதிக்கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி.
12. வாரிசு உரிமை வரி.
13.குதிரை விற்பதற்கான வரி மற்றும் பல.
14. மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளருக்கும் வரி விதித்தது.
15. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது.
9.
(i) முதலாம் முகமது சிறந்த அரசு முறைநிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரசு முறைநிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரசுமுறையைப் பின்பற்றிச் சிறப்பாக இவர் செய்த நிர்வாக முறை பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.
(ii) அவர் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அதன்படி,
1. வகில் உஸ்சுல்தானா : படைத்தலைவர்; அரசருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்.
2. வசீர் குல்: மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற் பார்வையிடுபவர்.
3. அமீர் இஜூம்லா : நிதியமைச்சர்.
4. வசீர் இஅஷ்ரப் வெளியுறவு அமைச்சர், அரசு விவகாரத்துறை அமைச்சர், அரசு விழாக்களை முன்னின்று நடத்தும் பொறுப்புடையவர்.
5. நசீர்: நிதித்துறை இணையமைச்சர்.
6. பேஷ்வா: அரசப் படைகளின் பொறுப்பாளர்.
7. கொத்வால்: காவல்துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி.
8. சதர் இஜஹான்: தலைமைநீதிபதி; சமய அறநிலையத்துறை அமைச்சர்.
(iii) வழிப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
(iv) நிறுவன மற்றும் புவியியல் ரீதியாக முகமது ஷா ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே அவர் அரசுக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கியது.
10.
(i) சோழர் ஆட்சிக்காலத்தில் சமூகம் பெரும் அளவில் வேளாண்மையைச் சார்ந்திருத்தமையால் சமூக மதிப்பையும், அதிகாரப்படி நிலைமையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணமாக வேளாண்மை விளங்கியது.
(ii) சமூகத்தில் உயர் தகுதி நிலையில் இருந்தோர் 'பிரம்மதேய கிழார்' எனப்படும் நில உரிமையாளர்கள் ஆவார்.
கிராமங்களின் உடைமையாளர்கள்:
(i) வேளாண்மை கிராமங்களின் உடைமையாளர்கள் அடுத்த படி நிலையில் இருந்தனர்.
(ii) அரசர்கள் தீவிர சைவர்கள். இராஜராஜனுக்கு 'சிவ பாத சேகரன்' எனப் பட்டப்பெயரே உண்டு.
(iii) சைவ சித்தானத்தின் அடிப்படையிலான "சிவஞானபோதம்" மெய்கண்டரால் எழுதப்பட்டது.
(iv) நம்பியாண்டார் நம்பி, சைவ சமய நூல்களை மீட்டெடுத்து திருமுறை என்ற பெயரில் தொகுத்து வழங்கினார்.
(vi) கடவுளுக்குத் தொண்டு செய்ய பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டனர். அவர்களுக்கு இசையும், நடனமும் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பண்பாடு:
(i) கோயில்கள் சிறந்த பண்பாட்டு கூடங்களாகத் திகழ்ந்தன. கலை, கட்டிடக்கலை, ஓவியம், கல்வி, மக்கள் தொண்டு சமூகப்பணி என பண்முக செயல்பாட்டுக்களமாக இவை விளங்கின.
(ii) தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற சோழர்கால கோயில்கள் சிறந்த பண்பாட்டு கூடங்களாகத் திகழ்ந்தன,
பண்பாட்டு பரவல்:
(i) சோழர்களின் கடற்படை வாணிபத்தில் சிறந்து விளங்கிய ஸ்ரீ விஜயா, கெடா (கடாரம்) பகுதிகளை வென்றதன் மூலம் சீன அரசுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்பட வழிவகுத்தது.
(ii) இவர்களின் கடல் கடந்த படையெடுப்புகளின் காரணமாக இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நமது தமிழ் பண்பாட்டின் இந்துமத வழிபாட்டின் தாக்கத்தினை அறிய முடிகிறது.
11.
| கஜினி முகமது | கோரி முகமது |
|---|---|
| 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கஜினியின் ஆட்சியாளர் | 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கோரியின் ஆட்சியாளர் |
| 2. கஜினியின் படையெடுப்புகள் கொள்ளை அடிக்கும் நோக்கம் கொண்டவை | 2. கோரிமுகமது தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார். |
| 3. படைவீரர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் | 3. அடிமைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 4. சிறந்த போர்திறமை பெற்றவர். இந்தியாவில் போர் தொடுத்த 17 முறையும் வென்றார். | 4. குஜராத் போர், முதலாம் தரைன் போர் பயங்கர தோல்வியை சந்தித்தது. |
| 5. போரில் ஈடுபட்ட வீரர்கள் பிற மதத்தினரை வெட்டிக் கொல்வதன் மூலம் தனது மதப்பற்றினை வெளிப்படுத்தினார். | 5. ஜிகாத் என்னும் மதத்தின் பெயரால் போர் நடத்தினார். |
| 6. காவல் அரண்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. | 6. நவீன பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார். |
| 7. படைவீரர்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. | 7. ஏற்கனவே பயிற்சி பெற்ற படை வீரர்களாக இருந்தனர். |
| 8. இவரது கால முக்கிய படையெடுப்பு 1025ல் சோம்நாத் நகர கோயில்கள் படையெடுப்பு ஆகும். | 8. இவரது கால முக்கிய படையெடுப்புகள் 1வது, 2வது தரைன் படையெடுப்புகளாகும். |
| 9. இந்துக் கோயில்களைக் கொள்ளை அடித்தனர். | 9. இவர் முக்கிய நகரங்களையும், கோட்டைகளையும் தாக்கினர். |
| 10. கொள்ளை அடிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. புதிய அரசை உருவாக்க விரும்பவில்லை. | 10. கோரிமுகமது தான் வென்ற பகுதிகளை ஒருங்கிணைந்து புதிய அரசை உருவாக்க எண்ணினார். தனது விசுவாசமிக்க அடிமை குத்புதீன் ஐபக் தலைமையில் புதிய ஆட்சியினை உருவாக்கினார். |
12.
பாரசீக தொடர்பு பண்டைய இந்தியாவின் காலை, எழுத்து முறை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எழுத்து முறை:
1.மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்தை காந்தாரப்பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார்.
2.இது ஆக்கி மீனைட் பேரரசில் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும். அராமிக் போலவே கரோஷ்டியும் வலதுபுறம் இருந்து இடதுபுறமாக எழுதப்படும் எழுத் முறையாகும்.
நாணயம்: 1.பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும். நாணயத்திற்க்கான சொல்லான "கார்சார்" பாரசீக டாரியாஸின் கல்வெட்டுக் கட்டளைகளைப் பார்த்து உருவாக்கப் பட்டிருக்கலாம்.
கட்டிடக்கலை:
1. மெளரியக் கலைகளும் கட்டிடக் கலைகளும் பாரசீகத் தாக்கத்துக்கான அடையாளங்களை கொண்டுள்ளன. மெளரியத் தூண்களான அசோகர் தூண்கள் ஆக்கிமினைட் பேரரசில் காணப்படும் தூண்களை ஒத்துள்ளன. தூண்களின் முகத்தில் உள்ள மணி போன்ற உச்சி குறிப்பாக சாரநாத் தூணின் சிங்க உச்சி, ராம்பூர்வால் தூணின் மணி உள்ளவை ஆக்கிமினைட் தூண்களில் காணப்படும் உச்சிகளை ஓத்தே உள்ளன.
13.
பாலர்களின் அரசு கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது. முதல் மன்னர் கோபாலர் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் தர்ம பாலர் (பொ.ஆ.770-815)
தர்மபாலரும் பௌத்தமும்:
பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார்
பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா என்னும் பௌத்த மடலாயத்தை நிறுவினார். அது பௌத்த மத கோட்பாட்டை போதிக்கும் சிறந்த மையமாக உருவானது
சோமபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றும் பீகார் - ஓடாண்டபுரியில் ஒரு பௌத்த மடலாயத்தையும் காட்டினார்
ஹரிஷபத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.
தேவபாலரும் பௌத்தமும்
பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராய் இருந்தார்
சுவரணதீப் அரசன் பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடலாயத்தை பராமரிப்பதற்காக 5 கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
இவரது ஆட்சியில் நாளாந்தா பௌத்தமதக் கொள்கையை போதிக்கும் முதன்மையான மையமாக திகழ்ந்தது.
பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானபிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார்
பாலர் வம்ச ஆட்சி காலத்தில் வங்காளம் பௌத்த மடலாயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.
14.
வணிகர்கள்:
"சிரேஷ்டி", "சார்ந்தவஹா" என்ற இரு வேறுபட்ட வகைகளை சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.சிரேஷ்டி என்பவர் ஒரே இடத்தில தங்கி இருந்து வாணிபம் செய்பவர் ஆவார். சார்த்தவஹா என்பவர் ஊர் ஊராக சென்று வாணிபம் செய்பவராக இருந்தார்.
வணிகக்குழுக்கள்:
குப்தர் காலத்தில் பொருள்களின் உற்பத்தி, அதிகரிப்பு வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் வணிகர் குழுக்களின் பங்கு அதிக அளவு இருந்தது. இக்குழுக்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இருந்தன. இவர்களது சட்டதிட்டங்கள் அரசாங்கம் மதித்தது. இந்த வணிக குழுக்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறித்து "நாரத ஸ்மிருதி" "பிருகஸ்பதி ஸ்மிகுதி" போன்ற நூல்கள் விளக்குகின்றன.
ஒரு குழுவில் ஒரு குழுத்தலைவர் மற்றும் ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவைக் குறிப்பிடுகின்றன. குழுச்சட்டங்கள் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் தகராறு களின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குழு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் நலன்கள்:
பயணிகளின் நலன்களுக்காக நிழல் குடை, விடுதிகள், சாத்திரங்கள் கோயில்கள், தோட்டங்கள், மட்பாண்டங்கள் ஏற்படுத்தி தரும் கொடைநடவடிக்கைகளிலும் வணிகக் குழுக்கள் ஈடுபட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்புகளில் வணிகக் குழுக்களின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
மேலும் வணிகத்தில் அதிகலாபம் ஈட்டுவதற்காக பானம் கடனாக பெறப்பட்டது அதிக வட்டிக்கு விடப்பட்டதற்கு குறிப்புகள் இக்கால சான்றுகளில் காணப்படுகின்றன.
இவ்வாறு குப்தர் கால வணிகக்குழுக்கள் தங்களது பங்களிப்பினை வணிகத்தில் செலுத்தி வாணிபம் பெறுக உதவி செய்தது.இதன் மூலம் குப்தர்களின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்தது.
15.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
16.
சங்க காலத்தில் மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடி சூடிய அரசர்களாக சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெறுவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சோழர்:
1. தமிழகத்தின் மத்திய வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர்.
2. அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும்.
3. இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்ட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
(திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது).
4. மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கீயத் துறைமுகமாகவும் திகழ்ந்தது.
5. சோழரின் சின்னம் புலி ஆகும்.
சேரர்:
1. மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர்.
2. வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன.
3. சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங்காண்கின்றனர்.
4. சேரர்களின் சின்னம் வில்அம்பு ஆகும்.
பாண்டியர்:
1. மதுரையிலிருந்து ஆண்டர். தாமிரபரணி நதி வங்காள விரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியச் துறைமுகமாகும்.
2. இது முத்துக்குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகவும். கொற்கை பெரிப்ளஸின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3. பாண்டியரின் சின்னம் மீன்.
4. மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர்.
17.
மகாவீரர் மறைவிற்குப்பின் 500 ஆண்டுகள் கழித்து சுமார் பொ.ஆ. 79-82ல் சமணத்தில் திகம்பரர்கள் என இரு பிரிவுகள் தோன்றின.
திகம்பரர்கள்:
மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு சென்றார்கள். அவர்கள் திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் உடைகள் ஏதுமின்றி இருந்தார்கள்)
ஸ்வேதாம்பரர்கள்:
ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தவர்கள் ஸ்வே தாம்பரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளை ஆடையை உடுத்தினார்கள். இந்த பிரிவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது.
பாடலிபுத்திர மாநாடு:
பத்ரபாகு மரணமடைந்த பிறகு ஸ்தூலபுத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். 12 அங்கங்களைக் கொண்ட சமண நெறிமுறைகளை தொகுத்தது.
18.
1. இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு . 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமான சிந்து நாகரிகம் எனப்படும்.
2. இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால் அது ஹரப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
3. ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்க கால ஹரப்பா, முதிர்ச்சி அடைந்த ஹரப்பா, பிற்கால ஹரப்பா என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
4.ஒரு நகரப் பண்பாட்ற்க்கான கூறுகள் முதிர்ச்சி பெட்ரா ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.
5. சிந்து சமவெளியை சுற்றிலும் அகழ்வாய்வு செய்து பல இடங்களில் நாகரீக அடையாளம் கிடைத்தாலும் முதன் முதலில் ஹரப்பா என்ற இடத்தில் இந்நாகரிக அடையாளம் கிடைத்தால் இது ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது.
19.
புதிய கற்கால பதொடக்கம்:
1. வேளாண்மை, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றின் தொடக்கமாக புதிய கற்காலம் அமைந்தது.
பரவல்:
புதிய கற்கால பண்பாட்டின் பழைமையான சான்றுகள் எகிப்தின் செழுமை பிறப்பகுதி, மெசபடோமியா, சிந்து பகுதி, கங்கைப்பள்ளத்தாக்கு, சீனா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
காலம் : பொ.ஆ.மு. 10,000-5,000
வேளாண்மை:
1. தாவரங்களையும், விலங்குகளையும் பழக்கப்படுத்தியதின் மூலம் உணவு தானியங்கள் கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும் அளவில் அதிகரித்தன.
2. ஆறுகளின் மூலம் படியும் செம்பலான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தனியா உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
புதிய கற்கால புரட்சி :
1. பெரிய கிராமங்கள் தோன்றின. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது. பழம்பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தி மிக முக்கியமான காரணமாகும். நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
2. எனவே இக்காலத்தின் பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதியகற்கால புரட்சி எனப்படுகின்றன.
20.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards