11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/02/2019
HSC +1 Third Revision Question and Answer 2019
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வினையூக்க அமினோவாக்கம் பற்றி எழுதுக.
2.
வளிமண்டல அழுத்தம் பற்றி எழுதுக.
3.
இலை நீர்ச்சுரப்பிகள் அல்லது ஹைடதோடுகள் பற்றி எழுதுக.
4.
வேறுபடுத்து:DNA மற்றும் RNA.
5.
ஆண் மற்றும் பெண் தவளைகளில் காணப்படும் பால்வழி வேறுபாடுகள் யாவை.
6.
அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.
7.
இரத்தக் கொள்ளளவு கட்டுப்பாட்டில் சிறுநீரகங்கள் எவ்வாறு பங்கேற்கின்றன.உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு கிடையே உள்ள தொடர்பு யாது?
8.
நெஃப்ரானின் உட்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன?நெஃப்ரானின் வெளிச்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன?சுயநெறிப்படுத்தல் நடைபெறவில்லை என கருத்தில் கொள்க.
9.
ஒருவரின் உணவில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் விளைவுகள் யாவை?
10.
வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.
11.
கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக
12.
புதிதாக இடப்பட்ட முட்டைகள் அடைகாத்ததலுக்குத் தேர்ந்தெடுத்தல் _____
சில்க்கி
பண்ணைக்கோழி வளர்ப்பு முறை
சிறந்த முட்டையிடும் கோழிகளைத் தேர்ந்தெடுத்தல்
முட்டைகளைத் தேர்ந்தெடுத்தல்
13.
தடித்த இழைகள் _________ என்னும் புரத்தாலானது.
மையோசின்
தடித்த இழைகள்
மீரோமையோசின்
கோளவடிவ
14.
பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.
வீரிய சுவாசம்
செல்லின் ஆற்றல் நிலையம்
பைருவேட்
ஈஸ்ட்
15.
ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு _____ எனபப்டும்.
செல்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
16.
தாவரங்களின் விதை உறக்கம்______.
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
வளமான விதைகளை உருவாக்குதல்
வீரியத்தை குறைகிறது
விதைச்சிதைவை தடுக்கிறது
17.
பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:
| 1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு | (i) Mo |
| 2. சாட்டை வால் நோய் | (ii) Zn |
| 3. பழுப்பு மையக் கருக்கல் நோய் | (iii) Cu |
| 4. சிற்றிலை நோய் | (iv) B |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (ii) | (iv) | (i) |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (i) | (iv) | (ii) |
| 1 | 2 | 3 | 4 |
| (i) | (iii) | (ii) | (iv) |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (iv) | (ii) | (i) |
18.
தவறான ஜோடியைக் கண்டுபிடி
| சாயம் | ஏற்கும் பொருள் |
|---|---|
| 12 K 1 | தரசம் |
| சாயம் | ஏற்கும் பொருள் |
|---|---|
| சூடான் | லிப்பிடுகள் |
| சாயம் | ஏற்கும் பொருள் |
|---|---|
| டால்யூடின் நீலம் | சைலம் |
| சாயம் | ஏற்கும் பொருள் |
|---|---|
| கோமாஸ்சி அடர் நீலம் | செல்சுவர் |
19.
கீழ்க்கண்ட தொகுதியை அதில் காணப்படும் விலங்குகளின் பண்புகளோடு சரியாக பொருத்தவும்.
| தொகுதி | கழிவு நீக்க உறுப்பு | |
|---|---|---|
| I | கணுக்காலிகள் | a. தொண்டை சுரப்பி |
| II | பிளாட்டிஹெல்மின்தஸ் | b. நெஃப்ரீடியம் |
| III | மெல்லுடலிகள் | c. பச்சை சுரப்பி |
| IV | ஆஸ்ஹெல்மின்தஸ் | d. சுடர் செல்கள் |
| I | II | III | IV |
| a | b | c | d |
| I | II | III | IV |
| b | c | a | d |
| I | II | III | IV |
| c | d | b | a |
| I | II | III | IV |
| d | a | b | c |
20.
உயர்தாவர விலங்கு செல்களில் காணப்படும் ஆற்றல் மையமான மைட்டோக்காண்டிரியாவுக்கு பாக்டிரீயாவில் காணப்படும் இணையான அமைப்பு எது?
வெளியுறை
பாலிரைபோசோம்
பிளாஸ்மிட்
மீசோசோம்கள்
21.
குடலுறிஞ்சிகளின் உள்ள லாக்டியல் நாளம் உட்கிரகிப்பது
குளுக்கோஸ்
அமினோ அமிலங்கள்
கொழுப்பு அமிலங்கள்
வைட்டமின்கள்
22.
கீழே தரப்பட்டுள்ள இணையில் எது முழுமையான நாளமில்லாச் சுரப்பி இணையாகும்?
தைமஸ் மற்றும் விந்தகம்
அட்ரினல் மற்றும் அண்டகம்
பாராதைராய்டு மற்றும் அட்ரினல்
கணையம் மற்றும் பாராதைராய்டு
23.
24.
சரியான இணைகளை உருவாக்குக
| வரிசை –I | வரிசை –II |
| P) சிறுகுடல் | i) மிகப்பெரிய தொழிற்சாலை |
| Q) கணையம் | ii) நீரை உட்கிரகித்தல் |
| R) கல்லீரல் | iii) மின்பகு பொருட்களைக் கடத்துதல் |
| S) பெருங்குடல் | iv) செரிமானம் மற்றும் உட்கிரகித்தல் |
| P | Q | R | S |
| iv | iii | i | ii |
| P | Q | R | S |
| iii | ii | i | iv |
| P | Q | R | S |
| iv | iii | ii | i |
| P | Q | R | S |
| ii | iv | iii | i |
25.
கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.
உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல்
பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள்
பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு
மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை
26.
கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?
பைசம் சாட்டிவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன
அடான்சோனியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.
நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.
ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.
27.
28.
தோலில் காணப்படும் உணர் வேற்பிகளை விளக்குக.
29.
கிரப்ஸ் சுழற்சியினை விளக்குக. (விளக்கம் (அல்லது) வரைபடம்)
30.
கரப்பான் பூச்சியின் சுற்றோட்ட மண்டலத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.
31.
பாக்டீரியாவின் பொருளாதார முக்கியத்துவம் யாது?
32.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
33.
தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக
34.
நவீன மூலக்கூறுக்கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?
35.
லில்லியேசி குடும்பத் தாவரங்களை சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?
36.
கன்ஜங்க்டிவா என்பது யாது?
37.
தட்பப்பதனத்தின் என்றால் என்ன?
38.
நாளொன்றுக்கு சுரக்கப்படும் உமிழ்நீரின் அளவு யாது?
39.
இணைந்த சூலினி நான்கறை சூலக அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.
40.
ஏழு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார்?அதில் உள்ள ஏழு பெரும் பிரிவுகள் யாவை?அதில் உள்ள பெரும் பிரிவுகளைக் கூறு.
41.
42.
பல்லுயிர்தன்மை என்றால் என்ன?
43.
கீழ் வருவனவற்றைப் பெயரிடுக
i) தேன்கூட்டின் மிகப்பெரியத் தேனீ
ii) சில ஆண் தேனீக்களுடன் புதிய கன்னி இராணித் தேனீ கூட்டைவிட்டுப் பறந்து செல்லுதல்.
44.
சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் விளைவு யாது?மற்றும் அது எங்கே உருவாகிறது?
45.
முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை (hyper polarised) பெறுகிறது.ஏன்?
46.
ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?
1.
(i) குளுட்டாமேட் அமினோ அமிலானது அம்மோனியாவுடன் வினைபுரிந்து குளுட்டாமைன் எனும் அமைடினை உருவாக்குகிறது.
(ii) குளுட்டாமைன்-கீட்டோகுளூட்டாரிக் அமிலத்துடன் வினைபுரிந்து இரண்டு மூலக்கூறு Formula குளுட்டோமேட்டை உருவாக்குகிறது.
2.
வளிமண்டல அழுத்தம்:
குறைந்த வளி மண்டல அழுத்தத்தில் நீராவிப்போக்கின் வீதம் அதிகரிக்கிறது.மலைப்பகுதியில் குறைந்த வளி மண்டல அழுத்தம் நிலவுவதால் அங்கு நீராவிப்போக்கின் வீதம் அதிகமாக இருக்க வேண்டும்.
ஆனால் அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை இதனை ஈடுசெய்வதால் நீராவிப்போக்கின் வீதம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
3.
(i) பொதுவாக உயர்தாவரங்களில் காணப்படும் ஒரு வகையான புறத்தோல் துளைகள் நீர்க்சுரப்பிகள் எனப்படும்
(ii) இவைகள் இலைத்துளையின் மறுபாடடைந்த அமைப்பு ஆகும். பொதுவாக இவைகள் இலையின் நுனி அல்லது விளிம்பு பகுதியிலும் குறிப்பாக இலையின் பற்கள் போன்ற விளிம்பு பகுதியிலும் காணப்படுகின்றன.
4.
| வ.எண் | DNA | RNA |
|---|---|---|
| 1. | டியாக்ஸிரைபோஸ் சர்க்கரை காணப்படுகிறது. | ரைபோஸ் சர்க்கரை காணப்படுகிறது. |
| 2. | அடினைன்,குவானைன், சைட்டோசின் ,தையமின் ஆகிய நைட்ரஜன் காரங்கள் காணப்படுகிறது. |
அடினைன்,குவானைன், சைட்டோசின் ,யுராசில் நைட்ரஜன் காரங்கள் காணப்படுகிறது. |
| 3. | இரண்டு சங்கிலியால் ஆனது. | ஒரே சங்கிலியால் ஆனது. |
5.
| வ.எண் | ஆண் தவளை | பெண் தவளை |
|---|---|---|
| 1 | ஓரிணைய குரல்பையை உள்ளது. | குரல்பை கிடையாது |
| 2 | குரல்பையின் மூலம் கரகர ஒலியை ஏற்படுத்துகிறது | ஒலி ஏற்படுத்துவதில்லை |
| 3 | முன்னங்கால் முதல் விரலின் கீழே கலவித் திண்டு காணப்படுகிறது. | கலவித்திண்டு கிடையாது |
6.
(i) ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்களில் CO2 இல்லாதபோது O2 அதிகரிக்கும் போது நடைபெறும் அதிகப்படியான சுவாசம் ஒளிச்சுவாசம் எனபப்டுகிறது. C2 சுழற்சியின்போது RUBISCO-வின் கார்பாக்சிலேஸ் செயல் ஆக்ஸிஜினேஸ் செயலாக மாறுகிறது.
(ii) C2 சுழற்சியானது பசுங்கணிகம், பெர்ராக்ஸிசோம் மற்றும் மைட்டோகாண்டரியம் என மூன்று செல் நுண்றுப்புகளில் நடைபெறுகிறது. பசுங்கணிகத்தில் RUBP யானது 2C-பாஸ்போகிளைக்கோலேட் மற்றும் பாஸ்போகிளிசரிக் அமிலமாக மாறுகிறது.
(iii) இதற்கு RUBISCOநொதி பயன்படுகிறது. இவ்வினையில் முதலில் உருவாகும் பொருள் 2C பொருளாக இருப்பதால் இச்சுழற்சிக்கு C2 சுழற்சி என்று பெயர்.
7.
இரத்தத்தின் ஆஸ்மோலாரிட்டி மூலம் கொள்ளளவை சிறுநீரகங்கள் கட்டுப்படுத்துகின்றன.
உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு இடையே உள்ள தொடர்பு ஊடுகலப்பு நிலைகள் மூலம் நிர்வகிக்கிறது.
8.
நெஃப்ரானின் உட்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் குறைவு தோன்றும்.
நெஃப்ரானின் வெளிச்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் அடர்வு உருவாகும்.
9.
1. இரத்த சோகையினால் பாதிக்கப்படுவார்.
2. இரும்புச் சத்து ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இன்றியமையாததாகும்.
3. இதன் பற்றாக்குறைவினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.
4. இதனால் அனீமியா அல்லது இரத்தச் சோகை ஏற்படும்.
10.
| வரம்பற்ற கிளைத்தல் | வரம்புடைய கிளைத்தல் | |
| 1. | இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு தடையின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று பல பக்கவாட்டுக் கிளைகளை உருவாக்குகிறது. |
இவ்வகை தண்டு கிளைத்தலில் நுனி மொட்டு சிலகால வளர்ச்சிக்குப் பிறகு நின்றுவிடுகிறது. பின்னர் தாவரத்தின் வளர்ச்சியானது பக்க ஆக்குத்திசுக்களின் மூலமாகவோ, மொட்டுகளின் மூலம் நடைபெறுகிறது. |
| 2. | எ.கா. பாலியால்தியா, ஸ்வைடீனியா, ஆன்டியாரிஸ் | எ.கா. சைகஸ். |
11.
| வ.எண் | திரள் கனி | கூட்டுக்கனி |
| 1 | ஓர் தனிமலரின் இணையாத சூலகங்கள் உருவாக்குகிறது. ஒவ்வொரு தனி சூலகமும் ஒரு எளிய சிறுகனியாக மாறுகிறது. |
ஒரு முழு மஞ்சரியும் அதைத் தாங்கும் மஞ்சரிக் காம்பும் சேர்ந்து உருவாகும் |
| 2 | எ.கா: மக்னோலியா, ராஸ்பெர்ரி, அன்னோனா, பாலியால்தியா | எ.கா: அன்னாசி, பலா, மல்பெரி, ஃபைகஸ். |
12.
(d)
முட்டைகளைத் தேர்ந்தெடுத்தல்
13.
(a)
மையோசின்
14.
(a)
வீரிய சுவாசம்
15.
(b)
எளியத்திசு
16.
(a)
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
17.
(b)
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (i) | (iv) | (ii) |
18.
(d)
| சாயம் | ஏற்கும் பொருள் |
|---|---|
| கோமாஸ்சி அடர் நீலம் | செல்சுவர் |
19.
(c)
| I | II | III | IV |
| c | d | b | a |
20.
(d)
மீசோசோம்கள்
21.
(c)
கொழுப்பு அமிலங்கள்
22.
(c)
பாராதைராய்டு மற்றும் அட்ரினல்
23.
(c)
24.
(a)
| P | Q | R | S |
| iv | iii | i | ii |
25.
(b)
பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள்
26.
(b)
அடான்சோனியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.
27.
(c)
28.
தோல் ஒரு மிகப்பெரிய தொடு உணர்வு உறுப்பாகும்.
தோல் பரப்பு முழுவதும் பரவியுள்ள மில்லியன் கணக்கான நுண் உணர்வேற்பிகள், தொடுதல், அழுத்தம், வெப்பம், குளிர்ச்சி, வலி ஆகிய உணர்வுகளை அறிய உதவுகிறது.
விரல் நுனிகளில் இவ்வுணர்வேற்பிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் அப்பகுதி அதிக உணர்வுகளை கண்டறிகிறது.
எபிடெர்மிஸ் அடுக்கில் ஆழ்பகுதியிலுள்ள மென்மையான தொடுதல்களை உணரக்கூடியவை மெர்கெல் வட்டுகள் ஆகும்.
மயிர்க்கால்களைச் சுற்றியுள்ள நுண்பைகளில் உள்ள உணர்வேற்பிகளும் மெல்லிய தொடுதலை உணரக்கூடியவை.
மீஸ்னரின் துகள்கள்: தோல் பாப்பில்லாக்களின் எபிடெர்மல் அடுக்கின் கீழ் அமைந்துள்ள இவை மென்மையான அழுத்தங்களை உணரக்கூடியவை.
முடிகளற்ற தோல் பகுதிகளான விரல்முனைகள் மற்றும் பாதங்களின் இவை அதிகமுள்ளன.
பாசினியன் துகள்கள்: முட்டை வடிவம் கொண்ட இவை டெர்மிஸ் பகுதியின் ஆழ்பகுதியில் பரவலாக உள்ளன. அழுத்தத்தால் ஏற்படும். அதிர்வுகளை இவை உணர்கின்றன.
மேலும் வலி, கடினத்தன்மை, வெப்பம் மற்றும் வேறுபட்ட தொடுப்பரப்புகளை உணரும் தன்மையைத் தருகின்றன.
ரஃபினி முனைகள்: தொடர் அழுத்தத்தை உணரும் இவை டெர்மிஸ் அடுக்கில் உள்ளன.
கிராஸ் முனைக்குமிழ்கள்: இவை வெப்பத்தை உணரும் வெப்ப உணர்வேற்பிகள் ஆகும்.
29.

விளக்கம்
தளப்பொருள்
நொதி
ATP, NADH2, FADH2
30.
1. திறந்த வகை ரத்த ஓட்ட மண்டலம்.
2. இரத்த நாளங்கள் சரியாக வளர்ச்சியடையாமல் உள்ளது.
3. இதன் உடற்குழி முழுவதும் நிறமற்ற இரத்தமான
ஹீமோலிம்ப் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.
4.இதன் உள்ளுறுப்புகள் அனைத்தும் உடற்குழியிலுள்ள ஹீமோலிம்பில் மிதக்கின்றன.
5. ஹீமோலிஃம்பில் பிளாஸ்மா மற்றும் செல் விழுங்கும் தன்மையுடைய இரத்தச் செல்கள் உள்ளன.
6. தசையாலான இதயம் குழல் அமைப்பில் உள்ளது.
7. இதயம் மார்புப்பகுதி முதல் வயிற்று பகுதி வரை நீண்டுள்ளது.
8. இதயம் 13 அறைகளை கொண்டுள்ளது.
9. ஒவ்வொரு அறையில் இரண்டு புறங்களிலும் ஆஸ்டியா எனும் துளைகள் காணப்படுகின்றன.
10. உடற்குழியிலுள்ள ஹீமோலிம்ப் ஆஸ்தியாக்கள் மூலம் இதயத்திற்குள் நுழைந்து மீண்டும் மேல்நோக்கி உள்குழிகளில் செலுத்தப்படுகிறது.
11. ஒவ்வொரு கண்டத்திலும் இதயத்தின் இரண்டு பக்கங்களிலும் ஒரு ஜோடி முக்கோண வடிவ அலரிதசைகள் (13 இணைகள்) காணப்படுகிறது.
12. இத்தசைகளின் இயக்கமே இரத்த ஓட்டத்திற்கு காரணமாகிறது.
13. மேலும் இதன் உணர்கொம்பு நீட்சியின் அடியிலுள்ள துடிக்கும்பை இரத்தத்தை பாய்ச்சுகிறது.
31.
பாக்டீரியாவின் பொருளாதார முக்கியத்துவம்
| செயல்பாடுகள் | பாக்டீரியா | பயன்கள் |
|---|---|---|
| 1.மண்வளம் | ||
| அம்மோனியாவாக்கம் | பேசில்லஸ் ரமோசஸ் பேசில்லஸ் மைக்காய்டஸ் |
தாவரம்,விலங்கு போன்றவை இருந்த பின்பு. அவைகளின் உடல்களிலிருக்கும் சிக்கலான புரதங்களை அம்மோனியாவாகவும் பின்பு அம்மோனிய உப்புக்களாகவும் மாற்றுகின்றன. |
| நைட்ரஜனக்கம் | நைட்ரோபாக்டர் நைட்ரசோமோனாஸ் |
அம்மோனிய உப்புக்களை நைட்ரேட், நைட்ரேட்டாக மாற்றுகின்றன. |
| நைட்ரஜனை நிலைப்படுத்துதல் |
1.அஸட்டோபாக்டர் 2.கிளாஸ்ட்டிரிடியம் 3.ரைசோபியம் |
(i) வளிமண்டல நைட்ரஜனை கரிம நைட்ரஜனாக மாற்றுகின்றன. |
| 2.உயிர்எதிர்ப்பொருள் | ||
| ஸ்ட்ரெப்டோமைசின் | ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ் |
சிறுநீர்க் குழாய் தொடர்பான நோய்கள், எலும்புருக்கி நோய், மூளைச்சவ்வு பாதிப்பு(Meningitis), நிமோனியா காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்துகின்றது. |
| ஆரியோமைசின் | ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோபேசியன்ஸ் |
கக்குவான் இருமல்,கண் சம்பந்தப்பட்ட தொற்றுதல் நோய்களுக்கு மருந்தாகப்பயன்படுகிறது. |
| குளோரோமைசிட்டின் | ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே |
டைப்பாய்டு காய்ச்சலைக் குணப்படுத்த பயன்படுகிறது. |
| பேசிட்ராசின் | பேசில்லஸ் லைக்கனிபார்மிஸ் |
மேக நோய்க்கு (Syphilis) மருந்தாகப் பயன்படுகிறது. |
| பாலிமிக்ஸின் | பேசில்லஸ் பாலிமிக்ஸா | சில வகை பாக்டீரிய நோய்களை குணப்படுத்தப்படுகின்றது. |
| 3.தொழிற்சாலை | ||
| 1.லாக்டிக் அமிலம் | 1.ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ் 2.லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ் |
பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றன. |
| 2.வெண்ணெய் | 1.ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ் 2.லியுக்கோனாஸ்டாக் சிட்ரோவோரம் |
பாலில் உள்ள வெண்ணெய், பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் யோகார்ட்டாக மாற்றுகின்றன. |
| 3.பாலாடைக்கட்டி | 1.லாக்டோபேசில்லஸ் அசிடோஃபோபஸ் 2.லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ் |
|
| 4.தயிர் | லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ் | |
| 5.யோகார்ட் | லாக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் | |
| 6.வினிகர் (அசிட்டிக் அமிலம்) | அசிட்டோபாக்டர் அசிட்டை | வெல்லப்பாகிலிருந்து (Molasses) பெறப்பட்ட எத்தில் ஆல்கஹாலை நொதித்தல் விளைவு வழி வினிகர் (அசிட்டிக் அமிலம்) தயாரிக்க உதவுகிறது. |
| 7.ஆல்கஹால்,அசிட்டோன் (i) பியூட்டைல் ஆல்கஹால் (ii) மீத்தைல் ஆல்கஹால் |
கிளாஸ்ட்டிரியம் அசிட்டோபியூட்டிலிக்கம் |
காற்றுணா சுவாச பாக்டீரியங்கள் வெல்லப்பாகிலிருந்து நொதித்தல் வழி அசிட்டோன், ஆல்கஹாலை தயாரிக்க உதவுகிறது. |
| 8.நார்களைப் பிரித்தெடுத்தல் | கிளாஸ்ட்டிரியம் டெர்ஷியம் | நார் தரும் தாவரங்களிலிருந்து நார்களைப் பிரிந்தெடுக்கப்படும் செயலுக்கு நார் பிரித்தல் (Retting) என்று பெயர். |
| 9.வைட்டமின்கள் | ஈஸ்ட்ரிச்சியா கோலை | மனிதனின் குடற்பகுதியில் உயிர் வாழ்ந்து அதிக அளவு வைட்டமின் K, வைட்டமின் B கூட்டுப்பொருளை உற்பத்தி செய்கின்றன. |
| கிளாஸ்ட்டிரியம் அசிட்டோபியூட்டிலிக்கம் |
சர்க்கரைப் பொருளிலிருந்து நொதித்தல் மூலம் வைட்டமின் B2 பெறப்படுகிறது. | |
| 10.தேயிலை மற்றும் புகையிலை நறுமணமேற்றுதல் | மைக்கோகோகஸ் கேண்டிசன்ஸ்,பேசில்லஸ் மெகாதீரியம் | நொதித்தல் மூலம் புகையிலை,தேயிலை பதப்படுத்தப்பட்டு நறுமணமும் சுவையும் மேம்படுத்தப்படுகிறது. |
32.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகள்:
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலைத் தண்டு | ஒருவிதையிலைத் தண்டு |
| 1. | பபுறத்தோலடித்தோல் | கோலங்கைமா செல்களானது. | ஸ்கிலிரங்கைமா செல்களானது. |
| 2. | அடிப்படைத்திசு | புறணி, அகத்தோல், பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படுகிறது. |
வேறுபடாத, தொடர்ச்சியான பாரங்கைமா திசுவால் ஆனது. |
| 3. | தரசு அடுக்கு | காணப்படுகிறது | காணப்படவில்லை. |
| 4. | மெடுல்லா கதிர்கள் | காணபப்டுகிறது | காணப்படவில்லை. |
| 5. | வாஸ்குலக் கற்றைகள் | (i) ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை. (ii) ஒரு வளையமாக அமைந்துள்ளன. (iii) இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுகிறது. |
(i) ஒருங்கமைந்தவை மற்றும் மூடிய வை. (ii) அடிப்படைத்திசுவில் சிதறிக் காணப்படுகிறது. (iii) இரண்டாம் நிலை பொதுவாக நடைபெறுவதில்லை. |
33.
| வ.எண் | குருத்தெலும்பு மீன்கள் | எலும்பு மீன்கள் |
|---|---|---|
| 1. | கடலில் வாழும் | கடல்நீர் மற்றும் தண்ணீரில் வாழும். |
| 2. | அகச்சட்டகம் குருத்தெலும்பால் ஆனது | அகச்சட்டகம் எலும்பால் ஆனது |
| 3. | பிளகாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது | கேனாய்டு, சைக்ளாய்டு அல்லது டீனாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது. |
| 4. | அக மற்றும் புற அமைப்பில் சமச்சீரற்ற தன்மை | கதிர் வடிவ உடல் அமைப்புடையது |
| 5. | இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. | நான்கு இணை இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. |
| 6. | செவுள்மூடி கிடையாது | செவுள்மூடி உண்டு |
| 7. | கழிவுப் பொருள்-யூரியா | அம்மோனியா |
| 8. | குட்டி ஈனக்கூடியவை | முட்டையிடுபவை |
| 9. | அகக்கருவுருவுதல் நடைபெறுகிறது | புறக்கருவுருவுதல் நடைபெறுகிறது |
| 10. | எ.கா. ஸ்கோலியோடான், ட்ரைகான் | லேபியா (ரோகு) கட்லா |
34.
1. புதிய தொழில் நுட்பங்களின் வளர்ச்சி, பாரம்பரிய வகைப்பாட்டுக் கருவியிலிருந்து மூலக்கூறு அளவிலான வகைபாட்டுக் கருவிகளை உருவாக்க உதவியுள்ளன. அதிகத் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை இம்முறைகளின் சிறப்பம்சங்களாகும். கீழ்கண்ட முறைகள் வகைப்பாட்டியலில் பயன்படுத்துகின்றன.
2. ஒரு உயிரியின் டி.என்.ஏ வில் உள்ள குறுகிய மரபுக் குறியீடுகளை வைத்துக் கொண்டு அவ்வுயிரினம் குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்ததா என்று அறிய டி.என்.ஏ வரிக்குறியீடு (DNA barcoding) தொழில் நுட்பம் உதவுகிறது.
3. ஒரு மரபு குழுமத்தில் உள்ள ஜீன்களுக்கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை, டி.என்.ஏ வரிசை அமைப்பு மூலம் கண்டறிய, டி.என்.ஏ கலப்பு ஆக்கம் (DNA hybridization) எனும் தொழில் நுட்பம் உதவுகிறது.
4. டி.என்.ஏ வில் உள்ள சிறப்பு அமைப்புகளை அறிந்து ஒப்பிடுவதன் மூலம், உயிரியை அடையாளம் காண, டி.என்.ஏ கைரேகை தொழில் நுட்பம் (DNA Finger printing) உதவுகிறது.
5. ஒத்தமைவு டி.என்.ஏ மூலக்கூறுகளின் வரிசை அமைப்பில் உள்ள வேற்றுமைகளை, டி.என்.ஏ மாதிரிகளைப் பல துண்டங்கள் ஆக்குவதன் மூலம் அறிய இயலும். இம்முறைக்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வு (Restriction Fragment Length polymorphisms analysis) என்று பெயர்.
6. ஒற்றை ஜீனையோ அல்லது ஜீனின் பகுதியையோ பாலிமரஸ் சங்கிலி வினையை (PCR) பயன்படுத்தி, பெருக்கி பின் அதனை வகைபாட்டுக் கருவியாக பயன்படுத்தலாம்.
35.
| வ.எண் | பொதுப் பண்புகள் | குடும்பம் : சொலானேசி | குடும்பம் : லில்லியேசி |
|---|---|---|---|
| 1. | வளரியல்பு | பெரும்பாலும் ஒரு பருவச் சிறுகொடிகள் புதர் செடிகள், சிறிய மரங்கள் | பெரும்பாலும் பல பருவச் சிறு செடிகள் |
| 2 | வேர் | கிளைத்த ஆணிவேர் தொகுப்பு | வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பு |
| 3. | தண்டு | மென்மையானது (அ ) கடைத்தன்மை கொண்டது, நிமிர்ந்து பின்னுக் கொடிகள் (அ) ஊடுருவி வளர்பவை | தரைக்கீழ் குமிழ் தண்டு , சில வற்றின் மட்டநிலத்தண்டு |
| 4. | இலை | மாற்றிலை யடுக்கமைவு , தனியிலை அரிதாக இதற்கு வடிவ கூட்டிலைகள் , இலையடிச் செதிலற்றது.எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு | வேரண்மை இலைகள் காலைன் மாற்றிலை யடுக்கமைவு எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு இலையடிச் செதில் அற்றது |
| 5. | மஞ்சரி | இலைக்கோண (அ ) நுனி சைம்கள் (அ ) தனி மலர் , தேளுறு (அ )ரைபிடியம் (அ) சைமோஸ் (அ ) அம்பெல் லேட் சைம் | தனித்த (அ)கிளைத்த ரெசிமோஸ் (அ ) ஸ்பைக் (அ ) கூட்டு ரசிம் |
| 6 | மலர் | பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது , பூக்காம்பு டையது, இரு பால் மலர் இரு பூவிதழ் அடுக்குடையது | காம்புடையது. பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது,இரு பால் மலர் மூவங்கமலர் சூலக மேல் மலர் |
| 7 | புல்லிவட்டம் (அ ) பூவிதழ் வட்டம் | புல்லிகள் 5,அரிதாக 4(அ ) இணைந்த புல்லி , தொடு இதழமைவு நிலைத்த புல்லி | பூவிதழ்கள் - 6 இணையாதவை அரிதாக இணைந்தவை தோடு (அ )தழுவு இதழமைவு |
| 8 | அல்லிவட்டம் | அல்லிகள் 5 இணைந்த அல்லிகள் சூழல் இதழமைவு , சக்கர வடிவம் (அ ) மணி வடிவம் (அ ) புனல் வடிவம் தொடு (அ ) திருகு இதழமைவு | காணப்படுவதில்லை |
| 9 | மகரந்தத்தாள் வட்டம் | மகரந்தத்தாள் 5, அல்லி ஒட்டிவை சம நீளமற்ற மகரந்தக் கம்பிகளையுடை மகரந்தபை இரு அறைகளை உடைவை | மகரந்தத்தாள் 6 பூவிதழுக்கு எதிராக அமைந்துள்ளது.மகரந்தப்பை இரு மடல்கள் உடையது.நீள வாக்கில் வெடிப்பவை வெளி உள் நோக்கியது |
| 10 | கனி | வெடிகனி (அ ) சதைக்கனி | அறைவழி வெடிகனி (அ ) சதைகனி (அ ) தடுப்புச் சுவர் வழி வெடிகனி |
36.
கண் கோளத்தின் வெளிப்புறத்தை சுற்றி காணப்படும் மெல்லிய கோழைப்படலத்தாலான பாதுகாப்பு உறை கன்ஜங்க்டிவா எனப்படும்.
37.
ஒளிக் கால அளவை தவிர மலர்தலை உண்டாக்க சில தாவரங்களின் ஆரம்பகால வளர்நிலையின் போது குறைந்த அளவு வெப்பநிலை ஏற்பு ஒன்று தேவைப்படுகிறது. இரு பருவ மற்றும் பல பருவ தாவர சிற்றினங்களில் வெப்ப நிலைக்கு 0'C முதல் 50C) உட்படுத்தி மலர்தல் தூண்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தட்பப்பதனம் (vernalization) எனப்படும்.
38.
1000 - முதல் 1500 மி.லிட்டர்.
39.
40.
ருகிரோ 2015 ஆம் ஆண்டு
1.ஆர்க்கிபாக்டீரியங்கள்
2.யுபாக்டீரியங்கள்
3.புரோட்டோசோவா
4.குரோமிஸ்டா
5.பூஞ்சைகள்
6.பிளாண்டே
7.அனிமேலியா
41.
42.
பல்வேறு வகைப்பட்ட சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் வாழ்வது பல்லுயிர்தன்மை எனப்படும்.
43.
அ) இராணி தேனீ
ஆ) சில ஆண் தேனீக்களுடன் புதிய கன்னி இராணித் தேனி கூட்டைவிட்டுப் பறந்து செல்லுதல் கலவிப்பறப்பு எனப்படும்.
44.
சிறுநீரகத்தின் மீது ஆல்டோஸ்டிரோனின் சேய்மை சுருள் நுண் குழல் மற்றும் சேகரிப்பு நாளத்தில் சோடியம் அயனி மீள உறிஞ்சப்படுத்தல், பொட்டாசியம் அயனி வெளியேற்றம் மற்றும் நீர் உறிஞ்சப்படுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
அது அட்ரீனல் கார்டெக்ஸில் இருந்து உருவாகிறது.
45.
மின்னழுத்தம் இயல்பான அளவான அளவையும் தாண்டி, அளவிற்குச் செல்லும் போது அதிக எதிர்மறைத் தன்மையுடைகிறது. எனவே, முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை பெறுகிறது.
46.
கால்சியம் மற்றும் சிலிகான் முட்களாலோ அல்லது ஸ்பாஞ்சினாலோ அல்லது இரண்டும் கலந்தோ ஆன சட்டகம் உடலுக்கு உறுதுணையாக உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards