11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/12/2018
11th Biology Model Test-II
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தைராய்டு சுரப்பியின் அமைப்பைக் குறிப்பிடுக.
2.
தசைச்செயலிழப்பு நோயைப் பற்றி குறிப்பு எழுதுக.
3.
வளர்ச்சி ஹார்மோன் பணிகளைக் குறிப்பிடுக.
4.
ஹைபோதலாமஸின் செயல்பாடுகளை எழுதுக.
5.
தலாமஸின் செயல்பாடுகளை எழுதுக.
6.
வேலைக்காரத்தேனீ தனது வாழ்நாளில் செய்யும் பல பணிகள் யாவை?
7.
நியூரானின் செல் உடல்பகுதியைப் பத்தி குறிப்பிடுக.
8.
குழல்களில் சுரத்தல் நிலையை விளக்குக.
9.
எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி என்றால் என்ன?
10.
பொட்டாசியம் மற்றும் அதன் அறிகுறியினை எழுதுக
11.
ஒளி வினையின் உயிர் ஆற்றல் அளவீட்டினை எழுதுக.
12.
ஒளிக்காலத்ததூண்டல் பற்றி எழுதுக.
13.
கற்றைசார் கேம்பியம் மற்றும் கற்றையிடைக் கேம்பியத்திற்கு இடையேயான வேறுபாட்டை எழுதுக?
14.
கனிமங்களின் உள்ளெடுப்பு என்றால் என்ன?
15.
சைலம் வரையறு.
16.
பாஸ்ட் நார்கள் அல்லது சைலத்திற்கு வெளியே அமைந்த நார்கள் பற்றி எழுதுக.
17.
அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.
18.
ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பின் ஈடுகட்ட தவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.
19.
உருமாறும் தன்மை என்றால் என்ன?
20.
EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.
21.
ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ) (ஆ) எனப்பெயரிட்டார். 'அ' கட்டையின் வயது 50, 'ஆ' கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக் கட்டை நீடித்து உழைக்கும்?ஏன்?
22.
கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?
23.
தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. AB யின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.
24.
மண்புழு உரத்தின் பயன்களை எழுதுக.
25.
சம நீளச் சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது?
26.
தைராய்டு சுரப்பியின் அசினி பற்றி எழுதுக.
27.
லிம்பிக் மண்டலம் ஏன் உணர்ச்சி மூளை எனப்படுகிறது? அதன் பகுதிகளைக் கூறு?
28.
பிளாஸ்மாவிலிருந்து பெளமானின் உட்பகுதிக்குள் நுழையும் கரைபொருட்கள் எதிர்கொள்ளும் மூன்று வடிகட்டல் தடை காரணிகளின் பெயர்களை குறிப்பிடுக.இரத்தத்திலுள்ள எவ்வகை பகுதிப்பொருட்கள் இந்த சிறுநீரக படலங்களால் வெளியேற்றப்படுகின்றன?
29.
கேஸ்ட்ரின் பணி யாது?
30.
தானியங்கு நரம்பு செல் திரள் பற்றி குறிப்பு வரைக.
31.
அனிச்சை வில் என்றால் என்ன>
32.
கீழ் நோக்கு கற்றைகள் என்றால் என்ன?
33.
ஹைப்போதலாமஸ் என்பது யாது?அது இவற்றை இணைகிறது.?
34.
அறுவடை செய்தல் என்றால் என்ன?
35.
உட்கருவை உள்ளே நுழைப்பது எவ்வாறு?
36.
உள்நாட்டு நீர் நிலைகள் யாவை?
37.
காரையெலும்பு என்றால் என்ன? அதனுடைய முக்கியத்துவம் என்ன?
38.
வெளிச்செல் நியூரான்கள் - ஒரு குறிப்பு வரைக.
39.
வெண்மை நிறத் தசையிழைகள் -வரையறு.
40.
சறுக்கும் இழை கோட்பாட்டை விளக்குக.
41.
வடிபிளவுகள் என்பது யாது?
42.
மெடுல்லரி பிரமிடுகள் என்பது யாது?
43.
பெரும்பான்மை நைட்ரஜன் கழிவுப் பொருட்களாக இருப்பவை யாவை?
44.
கிராப்ஸ் சுழற்சி பற்றி எழுதுக.
45.
கிளைக்காலைசிஸ் என்றால் என்ன?
46.
லைக்கன்கள் பற்றி எழுதுக.
47.
அமைனோ மாற்றம் பற்றி எழுதுக.
48.
முழு வளர்ச்சி மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தினை அட்டவணைப்படுத்துக.
49.
சாந்தோஃபில்கள் பற்றி எழுதுக.
50.
துளைக்கட்டை மற்றும் துளைகளற்ற கட்டைகளுக்கிடையேயான வேறுப்பாட்டினை எழுதுக.
51.
சவ்வூடு பரவல் திறன் என்றால் என்ன?
52.
கூட்டுத்திசு என்றால் என்ன?
53.
தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?
54.
சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?
55.
நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்?
56.
ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?
57.
MOET தொழில்நுட்பத்தின் பயன்களை விவரி
58.
சார்கோமியரிலுள்ள தசையிழைகளின் பெயர்களைக் கூறுக
59.
அண்ட உருவாக்கத்தில் ஈஸ்ட்ரோஜன் பங்கைக் குறிப்பிடுக.
60.
சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?
61.
மனிதரில் கார்னியா மற்றும் சிகிக்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை.ஏன்?
62.
வறட்சி நிலையில் தாவரங்கள் எதிர்கொள்ளும் சேயலியல் விளைவுகள் யாவை?
1.
ஓரிணைக் கதுப்புகள் கொண்ட, வண்ணத்துப்பூச்சி வடிவம் கொண்ட தைராய்டு சுரப்பி மூச்சுக் குழலைச் சுற்றிக் குரல்வளைக்குக்கீழ் அமைந்துள்ளது. தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும். இதன் பக்கக் கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் எனும் மையத் திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதுப்புகளால் ஆனது. நுண்கதுப்புகள் அசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை.
2.
(i) தசைகளின் செயல்பாடுகள் குறைவது அல்லது முற்றிலும் முடங்கிப்போகும் நிலை தசைச் செயலி ழப்பு எனப்படும்.
(ii) தசைகளில் அளவு சுருங்குவதால் தசைகள் பலமிழந்து விடுகின்றன
(iii) நீண்ட காலமாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தசைகளைத் தொடர்ந்து பய்னபடுத்துவதால் அவை வலுவிழக்கின்றன.
3.
வளர்ச்சி ஹார்மோன் அனைத்துத் திசுக்களின் வளர்ச்சியையும், வளர்சிதை மாற்றசெயல்களையும் மேம்படுத்துகின்றது. இது கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் செல்களில் புரத உற்பத்தி விகிதத்தை உயர்த்துகின்றது. இது குருத்தெலும்பு உருவாக்கம்மற்றும் எலும்பு உருவாக்கம் ஆகியவற்றைத் தூண்டுவதுடன் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாதுப்புக்களை உடலில் நிறுத்திக் கொள்ளச் செய்கின்றது. அடிப்போஸ் திசுக்களில் உள்ள கொழுப்பு அமிலங்களை விடுவித்துச் செல்களின் ஆற்றல் தேவைக்கான குளுக்கோஸ் பயன்பாட்டு வீதத்தைக் குறைக்கின்றது. இவ்வாறாக, குளுக்கோஸை நம்பியுள்ள மூளை போன்ற திசுக்களுக்காக அதனைச் சேமிக்கின்றது.
4.
உடலின் சீரான உள் சமநிலை பேணல் இதன் முதன்மைப்பணியாகும். மேலும் உடல், வெப்பம், பசி மற்றும் தாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மையங்களும் ஹைபோதலாமிக் ஹார்மோன்களைச் சுரக்கக் கூடிய நரம்புசார் சுரப்பு செல்களும் ஒரு குழுவாக உள்ளன. திருப்தி/திகட்டல் மையமாகக் ஹைபோதலாமஸ் செயலாற்றுகிறது.
5.
சாம்பல் நிற்ப் பகுதியாக உள்ள இப்பிறப்பு மூளைத்தண்டு, முகுளம் மற்றும் பெருமூளை ஆகியவற்றிக்கிடையேயான தூண்டல்களை அடுத்தடுத்துக்கடத்தும் மையமாகச் செயல்புரிகிறது. தலாமஸினுள், செய்திகள் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்படுகிறது. மேலும் கற்றல் மற்றும் நினைவாற்றலில் தலாமஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சி மற்றும் இயக்குச் செயல்களை ஒருங்கிணைக்கும் மையமாகத் தலாமஸ் விளங்குகிறது.
6.
தன் வாழ்நாளின் முதல் பகுதியில் இராயல் ஜெல்லி சுரத்தல், இளம் உயிரிகளுக்கு உணவூட்டுதல், இராணி தேனீயை உணவுண்ண செய்தல், இராணி தேனீயையும் ஆண் தேனீயையும் பாதுகாத்தல், தேன்மெழுகைச் சுரந்து தேன் கூட்டினை உருவாக்குதல், தேன் கூட்டினை சுத்தப்படுதல், குளிரூட்டுதல், படைவீரராக செயல்பட்டு தேன்கூட்டினை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் செவிலித் தேனீயாக பணியாற்றுகின்றன. மறுபாதியான கடைசி 3 வாரத்தில் தேன், மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் நீர் போன்றவற்றைத் தேடி சேகரிக்கின்றன.
7.
செல் உடலில் பல கிளைகளைக் கொண்ட குட்டையான இழைகள் காணப்படுகின்றன. இவை டென்ட்ரைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை நரம்பு தூண்டல்களை செல் உடலை நோக்கி அனுப்புகின்றன. செல் உடல் மற்றும் டென்ட்ரைட்டுகளில் சைட்டோபிளாசம் காணப்படுகிறது. மேலும் நிஸ்ஸல் துகள்களைக் கொண்ட என்டோபிளாசா வலையம் உள்ளது.
8.
ஹைட்ரஜன், பொட்டாசியம், அம்மோனியா, கிரியாட்டினின் மற்றும் கரிம அமிலங்களாகியவை புற நுண்குழல்களை சுற்றியுள்ள இரத்த நுண் நாளது தொகுப்பிலிருந்து குழலில் உள்ள வடித்திரவத்தினுள் செல்கின்றன. அண்மைய சுருண்ட நுண்குழலில் அதிகஅளவில் நீர் உறிஞ்சப்படுகிறது. ஹென்லே வளைவில் சோடியம் அயனிகளும் நீரும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. பிறகு தாழ்உப்படர்வு தன்மை கொண்ட திரவம் சேய்மை சுருள் நுண்குழலை அடைகின்றது.அதில் யூரியா மற்றும் உப்புகள் ஆகியவை புற நுண்குழல் இரத்த நாளங்களிருந்து சேய்மை சுருள் குழலின் செல்களுக்குள் வந்து சேர்கின்றன. இந்நிலையில் உள்ள சிறுநீரில் வடித்திரவம் அதிகமான உயர் உப்படர்வு தன்மை கொண்ட சிறுநீர் உருவாகிறது. குழலில் உள்ள வடித்திரவதில் வெளிவிடப்படுகிற ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ஒரு சோடியம் அயனி குழல் செல்களினால் உறிஞ்சப்படுகிறது. இவ்வாறு சுரக்கப்பட்ட ஹைட்ரஜன், பை கார்பனேட்டுகள், பை பாஸ்பேட்டுகள் மற்றும் அம்மோனியா ஆகியவற்றுடன் இணைந்து கார்பானிக் அமிலம் (H2CO3) மற்றும் பாஸ்பாரிக் அமிலமாக (H3PO4) மாறுகிறது. திரவத்திலுள்ள ஹைட்ரஜன் அயனி இவ்வாறு நிலைப்படுத்தப்பட்டதால் அவை மீள உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது.
9.
கிளைக்காலைசிஸ், இணைப்பு வினை மற்றும் கிரப்ஸ் சுழற்சி ஆகியவற்றின் சுவசாத் தளப்பொருட்கள் ஆக்சிஜனேற்றத்தின் போது பல் படிநிலைகளில் இறுதியில் ஒடுக்க நிலையுள்ள இணை நொதிகளான NADH+H+FADH2 ஆகியவை உருவாகின்றன. இந்த ஒடுக்க இணை நொதிகள் மைட்டோகாண்ட்ரியத்தின் உட்சவவிற்கு கடத்தப்பட்டு மீண்டும் அங்கு ஆக்சிஜனேற்ற நிலையிலான இணை நொதிகலாக மாறி, எலக்ட்ரான்களையும், புரோட்டான்களையும் உண்டாக்குகின்றன.
10.
பொட்டாசியம் (K):
(i) செல்லின் சவ்வூடுபரவல் திறன் மற்றும் விறைப்பழுத்தத்தை கட்டுப்படுத்தி இலைத்துளை மூடி, திறக்க உதவுதல், புளோயத்தில் நடைபெறும் கடத்தல் செயல், நொதிகளின் செயல்பாடு மற்றும் அயனி பரிமாற்றம் மூலம் அயனி சமநிலையயை உண்டாக்குதல் ஆகியவை இதன் பணிகளாகும்.
(ii) K அயனிகளாக உள்ளெடுக்கப்படுகிறது.
பற்றாக்குறை அறிகுறிகள் :
(i) விளிம்பு பச்சைய சோகை, நைவுப் புண்கள் (Necrosis), கேம்பிய செயல்பாடு குறைதல், முனை ஆதிக்கப் பாதிப்பு, தானியங்களில் நீரோட்ட தலைசாய்வு மற்றும் இலைவிளிம்பு சுருள்தல்.
11.
(i) ஒரு எலக்ட்ரானை வெளியேற்ற நிறமி அமைப்பிற்கு இரு குவாண்டம் ஒளி ஆற்றல் தேவைப்படுகிறது.
(ii) நீரிலிருந்து PS I க்கு எலக்ட்ரான்களை கடத்துவதற்கு ஒரு குவாண்டம் ஒளி ஆற்றல் தேவைப்படுகிறது.
(iii) இரண்டாவது குவாண்ட ஒளி ஆற்றலானது PS I லிருந்து NADP+ க்கு எலக்ட்ரான்களைக் கடத்தத் தேவைப்படுகிறது.
12.
24 மணி நேர சூழற்சியில் போதுமான ஒளிக் கால அளவு ஒரு தூண்டல் சுழற்சி என கருதப்படுகிறது. தாவரங்கள் மலர்தலுக்காக ஒன்று அல்லது மேற்பட்ட தூண்டல் தேவைப்படலாம். தழை மொட்டு மலர் மொட்டாக மாற்றப்பட தேவைப்படும் தூண்டல் சுழற்சியே ஒளிக்காலத்ததூண்டல் எனப்படுகிறது.
13.
| கற்றைசார் கேம்பியம் | கற்றையிடைக் கேம்பியம் |
| (i) சைலம் மற்றும் ஃபுளோயத்திற்கு இடையில் காணப்படும். |
இரு வாஸ்குலார் கற்றைகளுக்கிடையே காணப்படும். |
| (ii) புரோகேம்பியத்தில் இருந்து தோன்றுகிறது. | மெடுல்லா கதிர்களிருந்து தோன்றுகிறது. |
| (iii) தோற்றத்தில் இது முதல்நிலை ஆக்குத்திசுவின் ஒரு பகுதியாகும் |
தோற்றம் முதலே இது இரண்டாம் நிலை அக்குத்திசுவின் ஒரு பகுதியாகும். |
14.
கனிமங்கள் நிலக்கரைசலின் கரைநிலை அல்லது மண்ணின் கூழ்மத் துகளுடன் இணைந்த நிலை என இரு வகையான அமைப்பில் காணப்படுகின்றன.
கனிமங்களின் உள்ளெடுப்பு நீரின் உள்ளெடுப்புடன் சேர்ந்தே நடைபெறுகிறது என முற்காலத்தில் தவறுதலாகக் கருதப்பட்டது. ஆனால் கனிமங்களின் உள்ளெடுப்பும் நீரின் உள்ளெடுப்பும் ஒன்றையொன்று சாராத இரு தனித்தனிச் செயல்களாக உள்ளன.
கனிமங்கள் வேர்தூவிகளால் மட்டும் உறிஞ்சப்படுவதில்லை, வேரின் புறத்தோல் அடுக்காலும் (எபிபிளமா) உள்ளெடுக்கப்படுகிறது.
15.
(i) வாஸ்குலத் தாவரங்களில் நீரைக் கடத்துகின்ற முதன்மையான திசு சைலம் ஆகும். சைலம் என்ற சொல்லை C. நகேலி (1858) அறிமுகப்படுத்தினார். இது "சைலோஸ் கட்டை" (GK, Xylos-wood) என்ற கிரேக்கச் சொல் ஆகும்.
(ii) புரோகேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் முதலாம் நிலை சைலம் (primary xylem) என்றும் வாஸ்குலக் கேம்பியத்திலிருந்து உண்டாகும் சைலம் இரண்டாம் நிலை சைலம் (secondary xylem) என்றும் அழைக்கப்படுகின்றன.
16.
பாஸ்ட் நார்கள் அல்லது சேலத்திற்கு வெளியே அமைந்த நார்கள் (Bast fibres or extra xylary fibres):
(i) இவ்வகை நார்கள் ஃபுளோயத்தில் காணப்படுகின்றன. இயற்கையான பாஸ்ட் நார்கள் வலிமையானவை.
(ii) செல்லுலோஸினால் ஆனவை. சணல் (Jute), புளிச்சக்கீரை, ஆளி விதைதாவரம் (flax), சணல்பை (hemp) போன்ற தாவரங்களில் ஃபுளோயம் அல்லது வெளிப்புறப் பட்டையிலிருந்து கிடைக்கிறது.
17.
(i) ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்களில் CO2 இல்லாதபோது O2 அதிகரிக்கும் போது நடைபெறும் அதிகப்படியான சுவாசம் ஒளிச்சுவாசம் எனபப்டுகிறது. C2 சுழற்சியின்போது RUBISCO-வின் கார்பாக்சிலேஸ் செயல் ஆக்ஸிஜினேஸ் செயலாக மாறுகிறது.
(ii) C2 சுழற்சியானது பசுங்கணிகம், பெர்ராக்ஸிசோம் மற்றும் மைட்டோகாண்டரியம் என மூன்று செல் நுண்றுப்புகளில் நடைபெறுகிறது. பசுங்கணிகத்தில் RUBP யானது 2C-பாஸ்போகிளைக்கோலேட் மற்றும் பாஸ்போகிளிசரிக் அமிலமாக மாறுகிறது.
(iii) இதற்கு RUBISCOநொதி பயன்படுகிறது. இவ்வினையில் முதலில் உருவாகும் பொருள் 2C பொருளாக இருப்பதால் இச்சுழற்சிக்கு C2 சுழற்சி என்று பெயர்.
18.
நிலை I: இலையிடைத் திசுக்கள்:
இலை இடைத்திசு செல்களின் ஸ்ட்ரோமாவில் CO2, PEP-யால் நிலைப்படுத்தப்பட்டு ஆக்சலோ அசிட்டிக் அமிலம் உருவாகிறது.

இவ்வாறு தோன்றிய ஆக்சலோ அசிட்டிக் அமிலம் (OAA), மாலிக் அமிலம் அல்லது ஆஸ்பார்டிக் அமிலமாக மாற்றமடைகிறது. இவற்றுள் மாலிக் அமிலம் பின்னர் பிளாஸ்மோடெஸ்மேட்டா வழியாகக் கற்றை உறை செல்களுக்கு கடத்தப்படுகிறது.
நிலை II கற்றை உறைசெல்கள்:
மாலிக் அமிலமானது கார்பன் நீக்க வினையின் மூலம் 3 கார்பன் பொருளான பைருவிக் அமிலம் மற்றும் CO2 வை உருவாக்குகிறது. இதில் வெளியேற்றப்பட்ட CO3 வானது RUBP வுடன் இணைந்து கால்வின் சுழற்சியை தொடர்கிறது. எது இரண்டாம் நிலை CO2 நிலைநிறுத்தமாகும். இதன் முடிவில் உருவாக்கப்படும் கார்போஹைட்ரேட்டானது ஃபுளோயத்திற்கு கடத்தப்படுகிறது. பைருவிக் அமிலம் இலையிடத்திசுவிற்கு கடத்தப்படுகிறது.
\(\underset { (5C) }{ RUBP } +{ CO }_{ 2 }\overset { Rubisco }{ \longrightarrow } \underset { (3C) }{ 2PGA } \).
19.
தாவரங்களில் சூழ்நிலை அல்லது வளர்ச்சி நிலைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு உறவை அமைப்புகள் தோன்றுகிறது.இத்தகைய திறனுக்கு உருமாறும் தன்மை (பிளாஸ்டிசிடி என்று பெயர்). எடுத்துக்காட்டு ஹெட்டிரோ∴பிலி (ஈருவ இலை ) காணப்படும் தாவரங்கள் பருத்தி மற்றும் கொத்தமல்லி இத்தகைய தாவரங்களில் இளந்தவரா இலையின் உருவ அமைப்பும் அதே தாவரத்தின் முதிர்ந்த தாவர இலையின் உருவ அமைப்பும் வேறுபாட்டுக் காணப்படுகிறது.
மற்றொரு எடுத்துக்காட்டாக ரனன்குலஸ் (Butercup) எனும் தாவரத்தில் சூல்நிலைக்குத் தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய இலைகள் உருவாகிறது, இத்தாவரத்தில் நீரில் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் , நீர் பரப்பிற்கு மேல் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் வேறுபடுகிறது. இத்தகைய ஹெட்டிரோ∴பிலி உருமாறும் (Plasticity) தன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
20.
I.பாஸ்பரிகரண வினை
நொதி:ஹெக்சோகைனேஸ்
II.ஃபாஸ்பேட் நீக்கம் வினை
நொதி:ஃபாஸ்ஃபாஃபோகிளிசரேட் கைனேஸ்
நொதி: பைருவேட் கைனேஸ்
21.
(i) இரண்டாம் நிலை சைலம் சாற்றுக் கட்டை, வைரக்கட்டை எனவும் வேறுபடுத்தப்படுகிறது. மரங்களில், கட்டையின் வெளிறிய வெளிபகுதி சாற்றுக் கட்டை அல்லது அல்பர்னம் (Alburnm) எனப்படும்.
(ii) கட்டையின் அடர்நிறமான மையப்பகுதி வைரக் கட்டை அல்லது டியூரமென் (Duramen) எனப்படும். சாற்றுக் கட்டை நீரைக்கடத்தும் வேளையில், வைரக்கட்டைகள் நீர் கடத்துவதை நிறுத்துகிறது.
(ii) ஏனென்றால் வைரக்கட்டையில் சைலக்குழாய்கள் டைலோஸ்கலால் அடைக்கப்படுவதால்,நீர் அதன் வழியாகக் கடுத்தப்படுவத்தில்லை. டைலோஸ்களாலும் அதன் உட்பொருட்களாலும் வைரக்கட்டையை வண்ணமுடையதாகவும், இறந்ததாகவும் மற்றும் கடினமான பகுதியாகவும் மாற்றுகிறது.
(iv) பொருளாதார அடிப்படையில் காணும் போது பொதுவாகச் சாற்றுக்கட்டையை விட, வைரக்கட்டையிலிருந்து பெறப்படும் மரக்கட்டை மிகவும் நீடித்து உழைப்பையும் அதிக நுண்ணுயிரிகள் பூச்சி எதிர்ப்புத் திறனையும் கொண்டது.
22.
1. கட்டையின் அடர்நிறமான மையப்பகுதி வைரக்கட்டை அல்லது டியூரமென் எனப்படும்.
2. சாற்றுக்கட்டை நீரைக்கடத்தும் வேளையில், வைரக்கட்டைகள் நீர் கடத்துவதை நிறுத்துகிறது.
3. ஏனென்றால் வைரக்கட்டையில் சைலக்குழாய்கள் டைலோஸ்களால் அடைக்கப்படுவதால், நீர் அதன் வழியாகக் கடத்தப்படுவதில்லை.
4. டைலோஸ்களாலும் அதன் உட்பொருட்களாலும் வைரக்கட்டையை வண்ணமுடையதாகவும், இறந்ததாகவும் மற்றும் கடினமான பகுதியாகவும் மாற்றுகிறது.
23.
(i) குறைப்பாட்டு கனிமங்கள்
(ii) துத்தநாகம் மாலிப்டினம்
(iii) பற்றாக்குறை அறிகுறிகள்/ நோய்கள்
சிற்றிலை நோய் டர்னிக், பீட்ரூட்டில் பழுப்பு மையக் கருக்கல் னாய் மற்றும் ஆப்பிளின் உள்திசு தக்கை நோய்
(iv) காலிப்ளவர் மற்றும் முட்டைகோஸின் சாட்டை வால் நோய்
24.
I. மண்புழு உரமானது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெரும் அளவில் கொண்டுள்ளது.
II.மண்ணிள் இயல்புத் தன்மை, காற்றோட்டம், நீரைத்தேக்கி வைக்கும் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தி மண் அரிப்பைத் தடுக்கிறது.
III. அதிக ஊட்டச்சத்து கொண்ட சூழல் நட்பு முறை சீர்த்திருத்தத்தை மண்ணுக்கு அளிக்கும் பொருளாக மண்புழு உரம் உள்ளது. மாடித்தோட்டம் அமைப்பதற்கும் உதவுகிறது.
IV.விதை முளைத்தலைத் தூண்டி தாவர வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
25.
1. இவ்வகை சுருக்கத்தை போது தசையின் நீளத்தில் மாற்றமடைவதில்லை.
2. ஆனால் இழுவிசையில் மாற்றம் ஏற்படுகின்றது.
3. இதனால் இங்கு உருவாக்கப்படும் விசையிலும் மாற்றம் ஏற்படுகின்றது.
4. எ. கா. சுவரைக் கைகளால் தள்ளுதல், அதிக எடையுடைய பையைத் தாங்குதல்.
26.
தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப் பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும்
இதன் பக்க கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் எனும் மையத் திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதிப்புகளால் ஆனது.
நுணக்கதுப்புகள் காசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை.(ஒருமையில் - அசினஸ்)
அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்ம கிளைகோபுரத கலவையால் நிரம்பியுள்ளது.
27.
1. பெருமூளையின் உட்பகுதியில் லிம்பிக் மண்டலம் உள்ளது.
2. நுகர்ச்சி குமிழ், சிங்குலேட் கைரஸ், மாமில்லரி உறுப்பு, அமிக்தலா, ஹிப்போகாம்பஸ் மற்றும் ஹைப்போதலாமஸ் ஆகியவை லிம்பிக் மண்டலஉறுப்புகள் ஆகும்.
3. இன்பம், வலி, கோபம், பயம், பாலுணர்வு மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் இப்பகுதி முதன்மைப் பங்கு வகிக்கிறது.
4. இதனால் மண்டலத்தை உணர்ச்சி மூளை என்றும் அழைப்பர். ஹிப்போகேம்பசும் அமிக்தலாவும் நினைவாற்றல் பணியில் முக்கியப் பங்காற்றுகின்றன.
28.
குளோமருலார் நுண்குழல்களின் எண்டோதீலியம் ஃபேசல் லாமினா மற்றும் பௌமானின் எபிதீலியம் ஆகியவை பிளாஸ்மாவில் இருந்து பௌமானின் உட்படுத்திக்குள் நுழையும் கரைபொருட்கள் எதிர்கொள்ளும் மூன்று வடிகட்டல் தடை காரணிகளாகும்.
யூரியா, கிரியாட்டின் போன்ற பகுதிப்பொருட்கள் இந்தச் சிறுநீரக படலங்களால் வெளியேற்றப்படுகின்றன.
29.
கேஸ்ட்ரின் இரைப்பை சுரப்பிகளைத் தூண்டி ஹைட்ரோகுளோரிக் அமிலம் (ர்ஊஐ) மற்றும் பெப்ஸினோஜனைத் தூண்டுகின்றது.
30.
இச்செயல் திரளில் முன் நரம்பு செல் திரள் நியூரானின் அக்ஸான்களும் பின் நரம்பு செல்திரள் நியூரான்களின் உடல்பகுதியும் அடங்கியுள்ளன.
31.
ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்கு எதிராக அதிவேகமாகத் திட்டமிடாத தொடர்செயல்கள் தன்னிச்சையாகவே நடைபெறுகின்றன. இவ்வாறான அனிச்சை செயல்பாட்டில் பங்கேற்கிற நரம்பு சார் அமைப்புகளின் தொகுப்பே அனிச்சை வில் எனப்படும்.
32.
மூளையிலிருந்து தண்டுவடத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நரம்புகளுக்கான இயக்கத் தூண்டல்களைக் கொண்டுவரும் கீழ் நோக்கு கற்றைகள் ஆகும்.
33.
மூளையின் கீழ்ப்புற நீட்சியாக பிட்யூட்டரி சுரப்பியின் தண்டுப் பகுதியில் முடியும் ஒரு கூம்பு வடிவ அமைப்பு ஹைப்போதலாமஸ் ஆகும். இது நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லச் சுரப்பி தொகுப்பை இணைகிறது.
34.
ஓம்புயிரி தாவரத்திலிருந்து நன்கு உருவான அரக்கினை சேகரித்தல் அறுவடை செய்தல் எனப்படும்.
35.
உட்கருவை உள்ளே நுழைக்க சிப்பியை மேஜை மீது வலது பக்க ஓடு மேலே இருக்கும்படி பொருத்திட வேண்டும். மேன்டில் மடிப்புகளை மெதுவாக விலக்கி பாதம் மற்றும் உடல் பகுதியை வெளிப்படுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து பாதத்தின் எபிதீலியத்தில் மெலிதாக கீறி உடல் பகுதியில் சிறிய கால்வாய் அமைத்து உட்கருவுடன் திசு ஒட்டு செய்யப்பட வேண்டும். இது உட்கரு படுக்கையாகச் செயல்படுகிறது.
36.
ஆறுகள், கால்வாய்கள், நீரோடைகள், ஏரிகள், வெள்ள நீர் ஈரநிலங்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், தாங்கல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் மற்றும் நன்னீ ர் மீன்வளர்ப்புக்கு உருவாக்கப்பட்ட குளங்கள் ஆகியவை உள்நாட்டு நீர் நிலைகள் ஆகும்.
37.
1. காரையெலும்பு இரு வளைவுகளைக் கொண்ட நீண்ட எலும்பாகும்.
2. இவை படுக்கைவாட்டில் அமைந்து அச்சுச் சட்டகத்தையும் இணையுறுப்புச் சட்டகத்தையும் இணைக்கின்றன.
38.
மைய நரம்பு மண்டலத்திலிருந்து இயக்கு தூண்டல்களை செயல்படு இயக்கு தூண்டல்களை செயல்படு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்பவை.
39.
மையோகுளோபின் இல்லாத தசையிழைகள் வெளிர் நிறமாக உள்ளன. எனவே இதற்கு வெண்மை நிறத் தசையிழைகள் என்று பெயர்.
40.
1. இக்கோட்பாட்டின் படி குறிப்பிட்ட நீளமுடைய ஆக்டின் மற்றும் மையோசின் இழைகள் ஒன்றின் மீது ஒன்றாக இழைகிறது.
2. இதன் விளைவாகத் தசைச்சுருக்கம் ஏற்படுகின்றது.
3. இந்நிகழ்வின்போது ஆற்றலைப் பயன்படுத்தப்படும் விசை ஒரு பளுவை நகர்த்தவோ அல்லது எதிர்க்கவோ பயன்படுகின்றது.
41.
போடோ சைட்டுகள் பாதைவடிவ நீட்சிகளில் முடிகின்றன. இந்நீட்சிகள் கிளாமருலஸின் அடிப்படை சவ்வில் ஒட்டிக்கொண்டுள்ளன. இந்நீட்சிகளுக்கு இடையே உள்ள திறப்புகளுக்கு வடிபிளவுகள் என்று பெயர்.
42.
மெடுல்லா பகுதி, சில கூம்பு வடிவ திசு தொகுப்புகளினால் பிரிக்கப்பட்டுள்ளன. இத்திசுத் தொகுப்புகளுக் மெடுல்லரி பிரமிடுகள் அல்லது சிறுநீரக பிரமிடுகள் என்று பெயர்.
43.
அம்மோனியா, யூரியா மற்றும் யூரிக் அமிலம் ஆகியவையே பெரும்பான்மை நைட்ரஜன் கழிவுப்பொருட்களாகும்.
44.
இணைப்பு வினையில் உருவான இரண்டு மூலக்கூறு அசிட்டைல் CoA வானது கிரப்ஸ் சுழற்சியில் நுழைகின்றன. இது ஜெர்மனி நாட்டின் உயிர் வேதியியலார் சர் ஹான்ஸ் அடால்ப் கிராப்ஸ் (Sir Adolf Krebs) அவர்களால் கண்டறியப்பட்டதால் இப்பெயர் பெற்றது. TCA சுழற்சிக்கு தேவையான நொதிகளில் சக்சினேட் டிஹைட்ராஜினேஸ் என்ற நொதி மட்டும் மைட்டோகான்ட்ரியத்தின் உட்சவ்வில் காணப்படுகிறது.
45.
கிளைக்காலைசிஸ் என்பது 6-கார்பன் கொண்ட குளுக்கோஸ் இரண்டு மூலக்கூறு 3-கார்பன் கொண்ட பைருவிக் அமிலமாக உடையும் நிகழ்வு தொடர்வினைகள் ஆகும்.கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சிக்குத் தேவையான நொதிகள் அனைத்தும் சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.
46.
லைக்கன்கள் (Lichens)
(i) ஆல்காக்களும் பூஞ்சைகளும் இணைந்த கூட்டுயிர் வாழ்க்கையாகப் இது உள்ளது.
(ii) ஆல்காக்கள் உணவை தயாரிப்பதற்கும் பூஞ்சைகள் நீரை உறிஞ்சுவதற்கும் மற்றும் உடலை அமைப்பை ஏற்ப்படுவதற்கும் உதவுகிறது.
47.
அமைனோ மாற்றம் (Transamination):
(i) குளுட்டாமிக் அமிலத்திலுள்ள அமினோ தொகுதியானது பிற கீட்டோ அமிலத்தின் கீட்டோ தொகுதிக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி அமினோ மற்றம் எனப்படும்.
(ii) குளுட்டாமிக் அமிலமானது முதன்மையான அமினோ அமிலமாகச் செயல்பட்டுப் பிற கீட்டோ அமிலங்களை அமினோ அமிலங்களாக அமினோ மாற்றம் மூலம் நடைபெறுகிறது.
(iii) இந்நிகழ்விற்கு டிரான்ஸ் அமினேஸ் நொதி மற்றும் பைரிடாக்ஸல் பாஸ்பேட் என்ற துணை நொதி (வைட்டமின் B6 பைரிடாக்ஸின் வழித்தோன்றல்) ஆகியவை தேவைப்படுகின்றன.
48.
| முழு வளர்ச்சி வீதம் | ஒப்பீட்டு வளர்ச்சி வீதம் |
|---|---|
| குறிப்பிட்ட காலத்தில் ஒரு தாவர உறுப்பு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை இது குறிக்கிறது. | குறிப்பட்ட காலத்தில் ஒரு தாவரத்தில் இரு நிலைகளில் உள்ள ஓர் உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை ஓப்பிட்டு அளவிடுதலை இது குறிக்கிறது |
49.
(i) மஞ்சள் நிறமிகளான (C40H56O2) இவை கரோடினை போன்றவை ஆனால் கூடுதலாக ஆக்ஸிஜன் பெற்றவை.
(ii) லியூட்டின் நிறமியானது இலையுதிர் கால இலைகளின் மஞ்சள் நிறமாற்றத்திற்கு காரணமாக உள்ள சாந்தோஃபில் நிறமி.
50.
துளைக்கட்டை மற்றும் துளைகளற்ற கட்டை
| துளைக்கட்டை (அல்லது) வன்கட்டை எடுத்துக்காட்டு. மோரஸ் |
துளைகளற்ற கட்டை (அல்லது) மென்கட்டை எடுத்துக்காடு. பைனஸ் |
| (i) ஆஞ்சியோஸ்பெர்ம்களில் பொதுவானது. | ஜிம்னோஸ்பெர்ம்களில் பொதுவானது. |
| (ii) துளைகளுடையது: ஏனெனில் இது வெசல்களைக் கொண்டுள்ளது | துளைகளற்றது: ஏனெனில் இது வெசல்கள் அற்றது. |
51.
சவ்வூடு பரவல் திறன் (Osmotic potential ) என்பது ஒரு கரைசலில் உள்ள கரைப்பான் துகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதமாகும். சவ்வூடுபரவல் அழுத்தமும் சவ்வூடுபரவல் திறனும் சமமாகும் எனினும் சவ்வூடுபரவல் திறன் எதிர்மறை அளவிழும் சவ்வூடுபரவல் அழுத்தம் நேர்மறை அளவிலும் இருக்கும்.
52.
(i) ஒரு குறிப்பிட்ட பணியினை மேற்கொள்ளப் பல்வேறு வகையான செல்களின் ஒரு கூட்டமைப்பே கூட்டுத்திசு எனப்படும்.
(ii) இது ஒரு வகைப்படும். அவை சைலம் மற்றும் ஃபுளோயம்.
53.
தரச-சர்க்கரை கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் ஹேன்ஸ் (1940) என்பவரால் காப்பு செல்லில் பபஸ்பாரிலேஸ் நொதி(phosphorylase) கண்டறியபட்டது.
பகலில் பபஸ்பாரிலேஸ் நொதி தரசத்தினை நீராற்பகுத்து சர்க்கரையாக மாற்றி ph- அளவை உயர்த்துவதால் உட்சவ்வூடூபரவல் நடைபெற்று இலைத்துளை திறக்கிறது.
இரவில் இதற்கு எதிரான செயல் நடைபெறுகிறது.

54.
சில சதைப்பற்றுள்ள தாவரங்களான ஒபன்ஷியா, பிரையோஃபில்லம் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் பகுதியாக ஆக்சிஜனேற்றமடைந்து கரிமஅமிலமாகக் குறிப்பாக மாலிக் அமிலமாக மாறுவதால் இத்தாவரங்களின் சசுவாசித்தில் CO2வெளியிடுவதில்லை ஆனால் O2பயன்படுத்தப்படுகிறது. இதில் சுவாச ஈவு மதிப்பு சுழியாக உள்ளது.
55.
(i) நைட்ரஜன் சுழற்சி சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சுழற்சியாகும். இப்புவியின் உயிரிங்கள் நைட்ரஜன் சுழற்சியைப் பெரிதும் சார்ந்துள்ளன. வளிமண்டலத்தில் நைட்ரஜனானது (N2) என்ற தனி நைட்ரஜனாக உள்ளது.
(ii) இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியவாக மாற்றும் செயல் முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர்.
56.
ஸ்கிலிரன்கைமா செல்கள் புரோட்டா பிளாசமற்ற இறந்த செல்களாகும். இச்செல்கள் நீண்டோ அல்லது குட்டையாகவோ லிக்ளினால் ஆன இரண்டாம் நிலை சுவர்களைக் கொண்டு காணப்படும்.
57.
1. இந்தத் தொழில் நுட்பம் பசுவினம், ஆட்டினம் மற்றும் எருமையினங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
2. இத்தொழில் நுட்பம் அதிக பால் உற்பத்தி செய்யும் பெண் பசுக்களையும் அதிக இறைச்சி தரும் ஆண் காளைகளையும் குறைந்த காலத்தில் உருவாக்கப் பயன்படுகின்றது.
58.
1. தடித்த இழைகள்
2. மெல்லிய இழைகள்
59.
பருவம் எய்தும் போது பெண் இன உறுப்புகளின் முதிர்ச்சி மற்றும் இரண்டாம் நிலை பால்பண்புகள் வளர்ச்சியில் ஈஸ்ட்ரோஜன் பங்காற்றுகிறது.
ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோனுடன் இணைந்து மார்பக வளர்ச்சியை மேம்படுத்துவதுடன் மாதவிடாய் சுழற்சியையும் துவங்குகின்றது.
60.
சிறுநீரக தமனி சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த குழையாகும்.
எடுத்துச்செல்லப்படும் இரத்தம் தமனி இரத்தம் ஆகும்.
61.
இத்திசுவில் இரத்தக் குழாய்கள் இல்லாததே இதற்க்கு காரணம் ஆகும்.
62.
வறட்சி என்ற சொல் போதியளவு மழை இல்லாத காலங்களில் மண்ணில் நீரின் அளவு குறைந்து தாவரங்களும் நீர் பாற்றாக்குறையின் காரணமாக பாதிக்கப்படுதலை குறிக்கும்.
வறட்சியின் விளைவுகள்:
1. செல்களின் வளர்ச்சி மற்றும் செல்சுவர் கூறுகளின் உற்பத்தி குறைவதால் செல்கள் அளவில் சிறிதாகின்றன.
2. நைட்ரஜன் நிலைநிறுத்தம் மற்றும் அதன் ஒடுக்கம் ஆகியவை சில நொதிகளின் குறைவான செயல்பாடுகளால் குறைகின்றன.
3. அப்சிக் அமிலம் உற்பத்தி அதிகரித்து இலைத்துளை சாதனங்கள் மூடுவதால் நீராவிப்போக்கு வீழ்ச்சியடைகின்றது.
4. புரோட்டோகுளோரோஃபில் உற்பத்தி தடைபடுவதால் ஒளிச்சேர்க்கை வீழ்ச்சியடைகின்றன.
5. சுவாசித்தல் மற்றும் உணவுப் பொருட்கள் இடப்பெயர்ச்சி குறைதல்,நீர் இழப்பதால் நொதிகளின் செயல்பாடுகள் அதிகரித்தல், இதைத் தொடர்ந்து RNA மற்றும் புரதங்கள் சிதைக்கப்படுகின்றன.
6.. கார்போஹைட்ரேட் இடப்பெயர்வு பாதிக்கப்படுவதால் முதிர்ந்த இலைகள் வாடுகின்றன.
7. இதைத் தொடர்ந்து இலை மூப்படைதல் நிகழ்கிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards