11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/12/2018
11th model Question Paper
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
_____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை
தரகர்
தன் பொறுப்பு முகவர்
பண்டகசாலை வைத்திருப்பவர்
கழிவு முகவர்
2.
அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது
அலுவல் சார்ந்த மூலதனம்
தனியார் மூலதனம்
வங்கி மூலதனம்
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
3.
நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது
இங்கிலாந்து
அமெரிக்கா
சுவிஸ்
இந்தியா
4.
உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
கிராம சேமிப்பு
வணிகச் சேமிப்பு
தொழிற்துறை வளர்ச்சி
விவசாய வளர்ச்சி
5.
6.
மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது
வெளிநாட்டு வியாபாரம்
உள்நாட்டு வியாபாரம்
மறு ஏற்றுமதி வியாபாரம்
வியாபாரம்
7.
உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
மேலாண்மைக்குழு
பொதுக்குழு
நிர்வாகக்குழு
பொதுச்சபை
8.
ஐந்து தலைப்புகளின் கீழ்வரும் வருமானத்தின் கூடுதல் என்பது
முழு மொத்த வருமானம்
மொத்த வருமானம்
ஊதிய வருமானம்
வியாபார வருமானம்
9.
10.
குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
2004
2007
2006
2008
11.
கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம்
நிறுமப் பதிவாளர்
கூட்டுறவுப் பதிவாளர்
கூட்டாண்மைப் பதிவாளர்
மாவட்ட அட்சியர்
12.
கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.
பங்காதாயம்
இலாபம்
வட்டி
இவை எதுவும் இல்லை
13.
மின்னணு வலைப்பின்னல்கள் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் _______ என அழைக்கப்படுகிறது.
மின்னணு வணிகம்
இணையதளம்
வலைதளம்
வர்த்தகம்
14.
பின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை
ஒரு வெளியீட்டின் குறியீடு
பணியாளர்களின் ஈடுபாடு
இணக்க வழிமுறைகளை நிறுவுதல்
இவற்றில் எதுவும் இல்லை.
15.
16.
பின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல
கடன் நிதி அளிப்பு
இடர் பகிர்வு
மூலதன திரட்டுதல் உதவி
மட்டுப்படுத்துதல்
17.
வான்வழி அனுப்பீட்டு ரசீது __________அசல் பாகங்களில் தயாரிக்கப்படுகிறது
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
18.
செல்லுபடியாகக்கூடிய ஏற்பு
அறுதியிட்டுக் கூறுதல்
தகுதியற்றது
அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது
நிபந்தனையுடையது.
19.
பண்டகக் காப்பகம் ______ தடையை நீக்குகிறது.
ஆள்சார்
காலத் தடை
இடர்ப்பாட்டு தடை
அறிவுத் தடை
20.
பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்
அங்காடி
சந்தை
நாளங்காடி
அல்லங்காடி
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?
22.
"முத்ரா" வங்கி பற்றி சிறு குறிப்பு வரைக.
23.
தமிழ்- பிராமி கல்வெட்டுகளில் காணப்படும் பண்டைய வியாபாரத்தை பற்றிய செய்திகள் யாவை ?
24.
வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.
25.
இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.
26.
பன்னாட்டு நிதியின் முக்கியத்துவம் யாது?
27.
அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?
28.
தனி உரிமையியலின் வகைகள் யாவை?
29.
தனியாள் வணிகத்தில் இரகசியத்தன்மை எப்படி காப்பாற்ற இயலும்?
30.
பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.
31.
குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?
32.
இந்திய ஒப்பந்தச் சட்டம் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன . அவை யாவை
33.
ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?
34.
சரக்கு அனுப்புகை தொடர்பான ஆவணங்கள் யாவை?
35.
தொலைபேசிச் சந்தையிடுகை என்றால் என்ன?
36.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?
37.
திரு .விக்ரம் என்பவர் தான் நடத்தி வரும் பின்னலாடை தொழிற்சாலைக்குக் தேவையான பஞ்சினை வெளிநாட்டில் இருந்து வாங்குகிறார் .இது எவ்வகை வியாபாரத்திற்கு எடூத்துகாட்டு?
38.
வங்கியின் பொருளை எழுதுக.
39.
இறக்குமதி வியாபாரம் என்றால் என்ன?
40.
தொழில் முறை நன்னெறி பொறுப்புணர்வு என்றால் என்ன?
41.
போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.
42.
உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?
43.
துறைவாரிப் பண்டக சாலையின் நன்மைகளை விளக்குக.
44.
45.
மொத்த வியாபாரிகளின் பணிகள் யாவை?
46.
மூலதன கணக்கின் கட்டமைப்பை விளக்குக
47.
48.
பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?
49.
நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.
50.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்குக
51.
52.
உற்பத்தித் தொழில் வணிகம் மற்றும் வியாபாரம் ஓர் ஒப்பிடூ செய்க
53.
தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி
54.
ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
1.
(b)
தன் பொறுப்பு முகவர்
2.
(d)
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
3.
(a)
இங்கிலாந்து
4.
(a)
கிராம சேமிப்பு
5.
(b)
6.
(c)
மறு ஏற்றுமதி வியாபாரம்
7.
(b)
பொதுக்குழு
8.
(b)
மொத்த வருமானம்
9.
(c)
10.
(c)
2006
11.
(c)
கூட்டாண்மைப் பதிவாளர்
12.
(c)
வட்டி
13.
(a)
மின்னணு வணிகம்
14.
(a)
ஒரு வெளியீட்டின் குறியீடு
15.
(d)
16.
(c)
மூலதன திரட்டுதல் உதவி
17.
(c)
மூன்று
18.
(c)
அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது
19.
(b)
காலத் தடை
20.
(a)
அங்காடி
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பின்வரும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்தல், திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு, தடையுத்தரவிற்கான வழக்கு, பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு
(i) ஒப்பந்தத்தை ரத்து செய்தல் (Recission of Contract):
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒருவர் ஒப்பந்தத்தை மீறும் பொழுது மற்றவர் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதிக் கொள்ளலாம். மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தின் தீமைக்குள்ள அணைத்து கடமைகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். (.க) M என்பவர் N என்பவருக்கு குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், ஆனால் N அந்த நாளில் பணத்தை அளிக்க மறுக்கிறார்.
(ii) திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு (Claim for Specific Performance):
சில சமயங்களில் இழப்பீடுகள், ஒப்பந்த முறிவிற்கான போதுமான ஓர் தீர்வாக இருக்காது.இச்சமயங்களில் நீதிமன்றம் ஒப்பந்த அவரது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆணையிடலாம். ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
(iii) தடையுத்தரவிற்கான வழக்கு:
ஒரு குறிப்பிட்ட செயலை ஒரு நபர் செய்யாதிருக்குமாறு தடைப்படுத்தும் வகையில் அமையும் நீதிமன்றத்தின் ஆணை தடையுத்தரவு ஆகும், ஒரு நபர் ஒரு செயலை செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்த நிலையில், அச்செயலைச் செய்யாதிருக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறபிக்கலாம். பின்வரும் வழக்குகளில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் இருந்தால் (2) செல்லாத ஒப்பந்தமாக இருந்தால் அல்லது (3) செல்லாத ஒப்பந்தம் என கண்டுபிடித்தால்.
(iv) பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு:
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு நபர் வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் மற்றொரு நபர் ஒப்பந்தத்தை மீறுவதால் பணிகி ஏற்ற தொகை என்ற கூற்று எழுகிறது. " எவ்வளவு ஈட்டப்பட்டதோ அவ்வளவு" என்ற சொல்லின் பொருள் பணிக்கு ஏற்ற தொகை எனப்படுகிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டு மறுபகுதி நிறைவேற்றப்பட முடியாமல் தடை 'ஏற்பட்டால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை முடிந்த நபருக்கு இழப்பீடு வகை செய்கிறது.
(v) ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு:
இழப்பீடு என்பது ஒப்பந்தம் மீறுகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில் தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது இழப்பீடு பெரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்த சட்டம் 1872ன் பிரிவு 73, ஒப்பந்தத்தை மீறும் நபர் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்புள்ளது. இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளன, அவை சாதாரண இழப்பீடுகள், சிறப்பு இழப்பீடுகள் பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள் மற்றும் பெயரளவு இழப்பீடுகள்.
22.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நிதித்தேவைகளை பூர்த்தி செய்யவும், புதிய தொழில் தொடங்குபவர்களை சந்திக்கும் நிதி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டுடனும், ரூ. 3ஆயிரம் கோடி கடன் உத்திரவாத நிதியுடனும் மத்திய அரசால் "குறுந்தொழில் பிரிவுகள் வளர்ச்சி மற்றும் மறுநிதி அளிப்பு முகமை" (முத்ரா வங்கி) தொடங்கப்பட்டது. குறுந்தொழில் முனைவோர் தங்களின் புதிய தொழிலைத் தொடங்கவும், தொழிலை மேம்படுத்தும் நிலையில் நிதி நாடுவோர், தொழிலை மேம்படுத்தவும், தொழிலை அடுத்த வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்வோர் தங்களின் தொழிலை விரிவுப்படுத்தி கொள்ளவும் முத்ரா வங்கி கடன்களை வழங்குகிறது.
23.
தங்கம், எண்ணெய், கலப்பை, துணி ஆகியவை வியாபாரம் செய்யப்பட்டதாக அழகர்மலை, புகளர், மாங்குளம் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் காணப்படும் தமிழ்- பிராமி கல்வெட்டுகள் விளக்குகின்றன.
24.
முதன்மை செயல்பாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.வைப்புகளை ஏற்றல்,கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல், கடனை உருவாக்குதல்.
வைப்புக்களை ஏற்றல்:
இன்றைய தினம் வங்கிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுகொண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காகக் கூடுதல் வசதிகளை வைப்புக் கணக்குகளுக்கு வழங்குகின்றன.பெரிய அளவிலான வைப்பு கணக்குகளை கேட்பு வைப்புகள் மற்றும் கால வைப்புகளாக வகைப்படுத்தலாம்.
(i) கேட்பு வைப்புகள்: இந்த வைப்புகள் எந்த நாளிலும் கேட்கும்போது திருப்பி அளிக்கப்பட வேண்டும்.இது சேமிப்பு வைப்புக்கள் மற்றும் நடப்பு வைப்புகளை உள்ளடக்கியது.
(ii) சேமிப்பு வைப்புகள்: பொதுமக்கள் இந்தக் கணக்கில் தங்கள் சேமிப்புகளை வைப்புகள் செய்யலாம்.ஒரு தனிநபரின் பெயரிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் இந்தக் கணக்கினைத் தொடங்கலாம்.
(iii) நடப்பு வைப்புகள்: நடப்பு வைப்பு கணக்கு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.தனிநபர்கள் கூட இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.|
(iv) கால வைப்புகள்: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்புச் செலுத்துகின்ற வகையில் உள்ள நிலையான வைப்புகள்,தொடர் வைப்புகள் அடங்கும்.
(v) நிலையான வைப்புகள்: ஒரு தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வட்டிக்கு வைப்பு செய்வதைக் குறிக்கும்.நிலையான வைப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
(vi) தொடர் வைப்புகள்: ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு வருடத்திற்கோ அல்லது இந்து வருடங்களுக்கோ அல்லது ஒப்பு கொள்ளப்பட்ட காலத்திற்கோ வைப்பு செய்வதைக் குறிக்கும்.
கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் முன் பணம்:
வங்கி மேல் வரைப் பற்று,ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டுகளை தள்ளுபடி செய்தல்.
கடன்கள்: குறுகிய கால மற்றும் நடுத்தரக் காலக் கடன்களை வணிக வங்கிகள் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்குகின்றது.வீட்டுக் கடன், நுகர்வோர் கடன், வாகனக் கடன், கல்விக் கடன்,நகைக் கடன்,இரண்டாம் நிலை பணிகள், முகமைப் பணிகள்,பொதுப்பயன்பாட்டுப் பணிகள்.
25.
(i) உள்ளூர் தொழில்களுக்கு அபாயம் : பன்னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தி உள்நாட்டுத் தொழில்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துகிறது.
(ii) வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை மாற்றுதல்: வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கு மாறுவதன் மூலம் இந்த நாடுகளின் தொழில் முன்னேற்றம் தடைபடும்.
(iii) ஏழை மக்களுக்கு நன்மையில்லை: பணக்காரர்களால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்க முடிகிறது.
(iv) தனிமனித சுதந்திற்கு அபாயம்: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்காமல் தடை ஏற்படுகிறது.
(v) உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு: உள்நாட்டு மக்களுக்கு கணிசமான அளவில் வேலைவாய்ப்பு பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதில்லை.
(vi) வலுவான தகுதி நிலையை தவறாக பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் பேரளவு பொருளாதார நிறுவனங்கள் ஆகும்.
(vii) இயற்கை வளங்களைச் சுயநலத்திற்குப் பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு இயற்கை வளங்களை தன சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.
(viii) அயல் நாட்டின் சுயநல வளர்ச்சிப் போக்கு: பன்னாட்டு நிறுமங்களின் கலாச்சாரத்தால் உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
(ix) உள்நாட்டு தொழில், மற்றும் பொருளாதார முன்னேற்றம் புறக்கணிப்பு: உள்நாட்டு வணிகம் முன்னேற்றம் ஏற்படுவதில்லை.
26.
(i) பன்னாட்டு நிதியில் பல்வேறு நாடுகளின் நாணய ஒப்பீட்டு மதிப்புக்களையும் மற்றும் அதன் மாற்று விகிதங்களையும் நிர்ணயிப்பதில் உதவி புரிகிறது.
(ii) இது பல்வேறு நாடுகளின் பணவீக்க வீதங்களை ஒப்பிட்டு, எந்த நாட்டுப் பாத்திரங்களில் முதலீடு செய்வது என்ற முடிவுகளை முதலீட்டாளர்கள் எடுக்க உதவுகிறது.
(iii) இது பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலைமைகளை அறிந்து கொள்வதற்கும் மற்றும், சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்வதற்கும் உதவுகிறது.
(iv) பன்னாட்டு நிதி அறிக்கை அமைப்பின் (IFRS) மூலம் பல்வேறு நாடுகளின் நிதி அறிக்கைகளை ஒப்பாய்வு செய்ய உதவுகிறது.
(v) இது பன்னாட்டு நிதி அமைப்புக்களின் அடிப்படை கட்டமைப்புகளைப் அறிந்து கொள்ளவும் மற்றும் அவற்றிடையே சீர்நிலையைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.
(vi) பன்னாட்டுப் பணவியல் நிதியம், உலக வங்கி போன்ற நிதி அமைப்புகள், பல்வேறு நாடுகளிடையே எழும் நிதி சார்ந்த பிரச்சனைகளில் தலையிட்டு அவற்றை சுமுகமாக தீர்க்க உதவுகின்றன.
27.
ஒரு நிறுமம் இந்தியாவிற்கு அப்பால் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் தொழிலிடம் உள்ள நிறுமம் அயல்நாட்டு நிறுமம் எனப்படும். இந்தியாவில் நிருமத்தை அமைப்பதற்குப் பின்வரும் ஆவணங்களை கண்டிப்பாக 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவைகள்
(i) சாசனத்தின் சான்றிதழ் நகல் அல்லது கூட்டுருவாத்தின் சான்றிதழ் (அ) அமைப்பு முறையேடு மற்றும் சங்க நடைமுறை வழிகள் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
(ii) நிறுமம் பதிவு அலுவலகம் உள்ள இடம்
(iii) இயக்குநர் மற்றும் செயலரின் பட்டியல்.
(iv) இந்தியாவின் தலைமை வியாபார அலுவலகத்தின் முகவரி.
(v) நிறுமச் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கிய இந்திய குடிமகனின் பெயர் மற்றும் முகவரி.
28.
(i) தனி உரிமையியல் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுவது அவை,
(ii) தயாரிப்பு பொருள் அல்லது வர்த்தகப் பெயர் தனி உரிமையாக்கல், வணிக வடிவமைப்பு தனி உரிமை.
29.
தனியாள் வணிகத்தில் அவர் ஒருவரே உரிமையாளராதலால் தனது தொழில் பற்றி ரகசியங்களை எளிதாக காப்பாற்றலாம்.
30.
(i) வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்பட்டு காப்பீடு வேளாண்மை காப்பீடு ஆகும்.
(ii) நெல்,கோதுமை,கரும்பு எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
31.
(i) பொருட்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் குளிரூட்டப்பட்ட பண்டக சாலைகளில் சேமிக்கப்படுகின்றன.
(ii) பழங்கள், காய்கறிகள்,முட்டை,வெண்ணெய்,மீன் மற்றும் இறைச்சி போன்ற விரைவில் அழுக்கக்கூடிய பொருட்களை சேமித்து வைப்பதற்காக இந்த பண்டக சாலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iii)சரியான தரத்தில் குளிரூட்டப்பட்டு சேமிக்கப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
32.
இந்திய ஒப்பந்தச் சட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பொது ஒப்பந்தங்கள், சிறப்பு ஒப்பந்தங்கள்.
33.
ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் அனைவரும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தமது கடமைகளைச் செய்ய தவறுதல் ஒப்பந்த மீறுகை எனப்படும்.
34.
கப்பல் துணைதலைவர் இரசீது, கப்பல் சீட்டு ஆணை, கப்பல் இரசீது, கடல்சார் காப்பீட்டு திட்டாவணம், வணிக தூதுவர் இடாப்பு, இரயில் ரசீது 1 லாரி ரசீது.
35.
விற்பவர்கள் அப்பொருள்களை வாங்கும் திறன் மிக்கவர்களை தொலைபேசியிலோ அல்லது கைபேசியிலோ தொடர்பு கொண்டு பொருள்கள் அல்லது சேவைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பர். விருப்பமுள்ள வாடிக்கையாளர் பின் நேரடியாக விற்பனையக்கத்திற்கு சென்று வாங்குவதையே தொலைபேசி சந்தையிடுதல் என்கிறோம்.
36.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017ன் கீழ் ஒரு மாநிலத்திற்குள்ளே அளிக்கபப்டும் சரக்குகள் மீது மத்திய அரசால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரியாகும்.
37.
திரு. விக்ரம் என்பவர் தான் நடத்தி வரும் பின்னலாடைத் தொழிற்சாலைக்குத் தேவையான பஞ்சினை வெளிநாட்டிலிருந்து வாங்குவதால், இது இறக்குமதி வியாபாரம் ஆகும். உள்நாட்டு தேவைக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்குவதே வியாபாரம் ஆகும்.
38.
1949 ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, முதலீடு செய்வதற்கோ, கடன் வழங்குவதற்கோ, கேட்ட உடன் அல்லது காசோலை, வரையோலை அல்லது பணவிடை மற்றுமுள்ள முறைகளில் திரும்பக் கொடுப்பதற்கோ பொதுமக்களிடமிருந்து வைப்பு தொகைகளை பெற்றுக் கொள்ளும் செயல் வங்கியியல் எனப்படும்.
39.
ஒரு நாட்டினுடைய வியாபார நிறுவனம் சரக்கு மற்றும் சேவைகளை மற்ற நாட்டிலுள்ள வியாபார நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் அதுவே ஏற்றுமதி வியாபாரம் எனப்படும். ஏற்றுமதி வியாபாரம் என்பது உள்நாட்டிலிருந்து சரக்கு மற்றும் சேவைகளை அயல்நாட்டிற்கு விற்பனை செய்வதாகும்.
40.
இது சமுதாயத்தால் எதிர்க்கப்படும் ஒரு வகை பொறுப்பாகும்.ஆனால் இப்படிப்பட்ட பொறுப்புகள் சட்டத்தில் குறிப்பிடப்படாதவையாகும்.(எ.கா) ஒரு நிறுவனம் தனது பொருட்கள் குறித்த விளம்பரம் மேற்கொள்ளும்போது,அத்தகைய விளம்பரம் மத உணர்வுகள் மற்றும் மக்களின் கண்ணியம் மதிக்கத்தக்க வகையில் இருத்தல் வேண்டும்.இத்தகைய பொறுப்புகளை தொழில் அமைப்புகள் தானே விருப்பப்பட்டு கடைபிடிக்க வேண்டும்.
41.
(i) உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது : பொருளின் உற்பத்தி நோக்கம் நுகர்வு ஆகும்.பயனுள்ள போக்குவரத்து முறை காலம் மற்றும் இட வசதிகளை உருவாக்குவதன் மூலம் பொருட்களின் தேவை மற்றும் பொருட்களின் மதிப்பு குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(ii) பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது : மூலப் பொருட்கள்,எரிபொருள்,உழைப்பு மற்றும் முடிந்த தயாரிப்புகள் மற்றும் மூலதன பயன்பாடு மற்றும் தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது போன்றவைகளுக்கு உதவுகிறது.
42.
உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) உறுப்பு நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
(ii) உறுப்பு நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு உலகின் பல்வேறு வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்துதல்
(iii) பன்னாட்டு வணிகத்தில் ஒரு ஒருங்கிணைந்த மேலும் நிறைவேற்றத்தக்க மற்றும் நீடித்த வர்த்தக முறையை ஊக்குவிக்கிறது
(iv) பன்னாட்டு அளவில் சரக்குகள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல்
(v) முழு வேலைவாய்ப்பு மற்றும் நீடித்த நிலையான வருமானம் ஆகியவற்றை உறுதி செய்தல்
(vi) சுற்றுசூழலை பாதுகாத்தல்
43.
(i) மகிழ்வுடன் வாங்குதல்: ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான அனைத்து வகைப் பொருட்களையும் வாங்க வெவ்வேறு இடங்களுக்குச் செல்லாமல் ஒரே கூரையின் கீழ் வாங்கி கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளரின் நேரமும் உழைப்பும் மிச்சப்படுத்தப்படுகின்றன.
(ii) சிறந்த சேவைகள்: ஓய்வறைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு அரங்கங்கள் தொலைபேசி மூலம் வரும் ஆணைகளை ஏற்றல் மற்றும் வீட்டுக்கே சென்று பொருட்களை விநியோகம் செய்தல் போன்ற அதிகபட்ச சேவைகளையும் வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு இது வழங்குகிறது.
(iii) மைய இட அமைவு: பொதுவாக துறைவாரிப் பண்டக சாலைகள் நகரின் மையப் பகுதியில் தான் அமைந்திருக்கும். ஆகவே நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் நுகர்போர் எளிதாக வந்து செல்ல முடிகிறது.
(iv) இடைநிலையர்கள் நீக்கம்:
தயாரிப்பாளர்களிடமிருந்து பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து சொந்த பண்டகக் காப்பகங்களில் சேர்த்து வைத்து விற்பனை செய்வதால் முகவர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் உள்ளிட்ட இடைநிலையர்கள் தவிர்க்கப்படுகின்றன .அதனால் விலை குறைவாக தரமானப் பொருட்களை வாங்க முடிகிறது.
(v) பேரளவு செயல்பாட்டினால் உண்டாகும் சிக்கனங்கள்: துறைவாரிப் பண்டக சாலைகள் பெரிய அளவில் ஏற்படுத்தப்படும் ஒரு அமைப்பு ஆகும்.அதாவது பொருட்களை பேரளவில் கொள்முதல் செய்வதால் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தரமான பொருட்களை குறைந்த விலையில் பெற முடிகிறது.
44.
45.
மொத்த வியாபாரியின் பணிகள் பின்வருமாறு:
(i) பொருட்களை ஒன்றாகத் திரட்டல்: உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்து மொத்த வியாபாரிகள் பலவகைப்பட்டப் பொதுப் பொருட்களை வாங்கி ஒன்று திரட்டுகின்றனர்.
(ii) பொருட்களை இருப்பு வைத்தல்: உற்பத்தியாளரிடம் வாங்கிய பொருட்களை விற்பனை வரையில் அதன் தரம் குறையாமலும், எளிதில் அழிந்துவிடும் தன்மையுடைய பொருட்களான பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை கெடாமல் இருக்க குளிர்பதன முறையில் 'சேமக் காப்பு' செய்கின்றனர்.
(iii) மொத்த வியாபாரி நாடெங்கிலும் உள்ள சில்லறை வியாபாரிகளுக்குப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் திறம்பட விநியோகிக்கும் பணியையும் மேற்கொள்கிறார்.
(iv) நிதிவசதி அளித்தல்: மொத்த வியாபாரி உற்பத்தியாளருக்கும் அல்லது தயாரிப்பாளருக்கும் முன் பணம் அளிப்பதன் மூலம் நிதி வசதி நல்குகிறார். அதுபோலவே சில்லறைவியாபாரிகளுக்கு கடன் விற்பனை செய்வதன் மூலம் இரு முறையிலும் நிதி வசதி அளிப்பவராக செயல்படுகிறார்.
(v) இடர் ஏற்பு: பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட உடன் வாங்கி அவற்றை தமது பொறுப்பில் பண்டகக் காப்பு செய்வதால், விலைவீழ்ச்சி, பொருள் கெட்டுப் போதல், பொருட்களின் அழிவு, இருப்பு வைப்புதலால் ஏற்படும் பிற இழப்புகள், பொருட்களின் தேவையில் ஏற்படும் மாற்றம், சில்லறை வியாபாரிகளுக்கு கடன் விற்பனை செய்வதனால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றை மொத்த வியாபாரியே ஏற்றுக் கொள்கிறார்.
(vi) தரப்படுத்துதல், சிப்பம் கட்டுதல் மற்றும் கட்டுமம் செய்தல்: தரம், வகை, வடிவு, கசிவு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ப உற்பத்திப் பொருட்களை மொத்த வியாபாரிகள் பிரித்து வகைப்படுத்தி வைக்கின்றனர். பொருட்களைக் கட்டுமம் செய்தல்,வணிகக் குறியிடுதல் போன்ற பணிகளையும் மொத்த வியாபாரிகள் செய்கின்றனர்.
(vii) சந்தை நிலவரங்களைத் தருதல்: மொத்த வியாபாரிகள் பயனுள்ள சந்தை நிலவரங்களைக் கண்டறிந்து உற்பத்தியாளர்கள் அல்லது தயாரிப்பாளர்களுக்கு அவற்றை வழங்கி வருகிறார்கள். சந்தையில் விற்பனைக்குள்ள பொருட்களின் தரம், அவற்றின் வகைகள், நுகர்வோர் விருப்பம், சுவை, நாகரிகப் பாங்கு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்றனர்.
(viii) போக்குவரத்து வசதி அளித்தல்: மொத்த வியாபாரி உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை மொத்தமாக வாங்கி, தமது பண்டக சாலையில் இருந்து தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் போக்குவரத்து வசதி அளிக்கிறார். பெரும்பாலான மொத்த வியாபாரிகள் சொந்த வாகனங்கள் மூலம் பொருட்களை தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் இடப்பயன்பாட்டினை உருவாக்குகிறார்.
46.
மூலதனக் கணக்கில் மூன்று இனங்கள் உள்ளன. தனியார் மூலதனம் (Private Capital), வங்கி மூலதனம்(Banking Capital),அலுவல் சார்ந்த மூலதனம் (Offical Capital)
தனியார் மூலதனம் : தனியார் மூலதனம் அயல்நாட்டு முதலீடுகள், நீண்ட காலக் கடன்கள் மற்றும் அயல்நாட்டு நாணய வாய்ப்பு ஆகியவற்றைக் உள்ளடக்கியது
வங்கி மூலதனம் ; அந்தியச் செலாவணியைக் கையாள அதிகாரம் கொண்ட வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் வெளிப்புற நிதி சார்ந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அளவு, வங்கி மூலதனத்தில் அடங்குகிறது
அலுவல்சார்ந்த மூலதனம்: அலுவல்சார்ந்த மூலதனத்தில் அயல்நாட்டு நாணயம், அரசிடம் உள்ள சிறப்பு எடுப்பு உரிமைகள் போன்ற வகைகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் சொத்துகள் போன்றவை அடங்குகின்றது
47.
48.
நிலவியல் சிறப்பு தேர்ச்சி: உலக நாடுகள் அனைத்தும் தாங்கள் கொண்டுள்ள இயற்கை வளங்கள், மனித ஆற்றல், தொழில்நுட்பம், மூலதனம் ஆகியவை அடிப்படையில் வேறுபடுகின்றன. சில நாடுகளில் கனிம வளங்கள், நீர் மின்சக்தி, உலோக வளங்கள் போன்றவை அதிகமாகவும் வேறு சில நாடுகளில் முன்னேறிய உற்பத்தி தொழில்நுட்பம், திறமையான மக்கள் தொகை, மூலதன கருவிகள் ஆகியவை அதிகமாகவும் இருக்கும். எனவே, தன்னிடம் உபரியாக உள்ள வளங்களை மற்ற நாடுகளுக்கு கொடுத்து அங்கிருந்து பற்றாக்குறையான வளங்களைப் பெற்று கொள்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது.
(ii) வளங்களை தேவையான அளவிற்குப் பயன்படுத்துதல்: எந்த நாடு தன்னால் திறமையாக பொருட்களை தயாரிக்க இயலவில்லையோ அது மற்ற நாடுகளிலிருந்து அதாவது திறமையாக பொருட்களைத் தயாரிக்கக்கூடிய நாடுகளிலிருந்து உபரியாக உள்ள பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற கோட்பாட்டின்படிதான் பன்னாட்டு வணிகம் செயல்பட்டு வருகிறது. இது அந்நாட்டின் வளங்களை தேவையான அளவிற்கு பயன்படுத்த உதவுகிறது.
(iii) பொருளாதார வளர்ச்சி: வளரும் நாடுகள் இயந்திரம், தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதன் மூலமாக விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் குறைந்த பொருளாதார வளர்ச்சியில் இருந்து அதிக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் காரணமாக இருந்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் கூட பன்னாட்டு வணிகத்தின் இறக்குமதி செய்து முடிவற்ற பொருட்களாக ஏற்றுமதி செய்து விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கும்.
(iv) வேலைவாய்ப்பை உருவாக்குதல்: வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு மற்றும் வளர்ச்சிக்கும் பன்னாட்டு வணிகம் உதவுவதால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிகிறது. மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பையும், அனுப்புகை மற்றும் அகற்றீட்டு முகவர்கள், தேவைக் குறிப்பீட்டகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் புற ஒப்படைப்பு முகமைகள் போன்றவற்றிற்கும் மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
(v) வாழ்க்கைத் தரம் மேம்படுதல்: உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பல்வேறுவிதமான பொருட்கள் அல்லது சேவைகளை பன்னாட்டு வணிகத்தின் மூலம் மக்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடிகிறது. நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
(vi) விலை சமனிலைப்படுத்தல்: உலகச் சந்தையில் தினந்தோறும் விலை மாற்றம் அடையக்கூடிய பல்வேறு பொருட்களின் விலையை பன்னாட்டு வணிகம் சமப்படுத்துகிறது. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்டப் பொருட்களின் விலை உள் நாட்டில் உயருகிறதோ அப்பொழுது மற்ற நாடுகளிலிருந்து அப்பொருட்களை இறக்குமதி செய்து விலையைச் சமன் செய்கிறது. அதே போன்று குறிப்பிட்ட பொருள்களின் விலை குறையும் போதெல்லாம் அந்த பொருள்களை அதிக அளவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் விலையை நிலைப்படுத்துகிறது. உலக நாடுகளில் பொருட்களின் விலை அதிக ஏற்றத்தாழ்வாக இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
(vii) அதிக இலாபத்திற்கான வாய்ப்பு: அதிகமாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருட்களை பன்னாட்டு சந்தையில் பல்வேறு நாடுகளுக்கும் அதிக விலையில் விற்பனை செய்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. ஏதன் பயனாக அதிக இலாபத்தை ஈட்ட முடிகிறது.
(viii) முழுத் திறனையும் பயன்படுத்துதல்: பன்னாட்டு வணிகம் உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அதிக அளவில் சரக்கு மற்றும் பொருட்களை உலகச் சந்தையில் விற்பதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் அந்நிறுவனங்கள் தன்னுடைய இயந்திரம் மற்றும் தொழில் நுட்பத்தை முழுமையான அளவில் பயன்படுத்துகிறது.
(ix) பன்னாட்டு அமைதி: உலக நாடுகள் தனித்தனியே இயங்கினாலும் பன்னாட்டு வணிகத்தினால் மற்ற நாடுகளையும் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிறது. கலாச்சாரம், கருத்துகள் மற்றும் பரஸ்பர புரிந்துணருந்தல் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. பன்னாட்டு வணிகம் உலக மக்களிடையே கலாச்சார சமூக உறவுகளை வளர்க்க உதவுகிறது. ஒட்டு மொத்தமாக உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.
49.
(i) எந்த விதமான பயனையும் நேரடியாக திரும்பப் பெறும் எதிர்பார்ப்பற்ற, அரசால் சமுத்தப்படும் ஓர் கட்டாயக் கட்டணமே வாரியாக. அதாவது, மக்களால் அரசுக்கு அளிக்கப்படும் ஓர் கட்டாயக் கட்டணம் அல்லது பங்களிப்பே வரியாகும்.
(iiஒரு நபர் வரிக் கட்ட வேண்டிய நிலையில் இருப்பார் எனில், அவ்வரியைக் கட்ட வேண்டியது அவரது சட்டக் கடமையாகும்.
(iii) அரசனுடைய மிக முக்கிய வருவாய் வரியின் மூலமாகவே ஈட்டப்படுகிறது. இவ்வரி வருவாயானது குடிமக்களின் நலதிட்டங்களுக்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
(iv) சிறந்த ஓர் வரைமுறை, மக்களின் பணிபுரிதல் சேமித்தல் மற்றும் முதலீடு செய்தல் ஆகியவற்றில் உள்ள வர்களின் விருப்பம் தகுதி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. இல்லையெனில், அது வணிகம், தொழில் மற்றும் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையே பாதித்து விடும்.
வரிகளின் வகைகள்:
இந்தியாவில் வரிகள் பின்வரும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பபட்டுள்ளது.
நேர்முக வரி:
(i) வருமான வரி
(ii) நிறும வரி
(iii) சொத்து வரி
(iv) அன்பளிப்பு வரி (நன்கொடை வரி)
(v) பண்ணை வரி
(vi) பயன்கள் வரி
நேர்முக வரிகள்:
நேர்முக வரிகள் என்பது யார் மீது விதிக்கப்படுகிறது அவரே அவ்வரியைச் செலுத்துவதாகும். அதாவது நேர்முக வரியில் வரிதாக்கமும் , வரி நிலைப்பாடும் ஒருவர் மீதே விழுகின்றன. இவ்வாறு, வரித் தாக்கமும், வரி நிலைப்பாடும் ஒருவர் மீதே விழும் வகையைகி சார்ந்த வரிகள் நேர்முக வரிகள் எனப்படும் அதாவது தனி நபரின் வருமானம் அல்லது அவரின் செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு அவரால் செலுத்தப்படும் வரியாகும் இந்தியாவில் அனைத்து நேரடி வரிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மறைமுக வரிகள்:
(i) மறைமுக வரிகளின் கீழ், வரித்தாக்கமும், வரிநிலைப்பாடும் வேறுபட்ட நபர்களின் மீது விழுகின்றன. இவை யார் மீது விதிக்கப்படுகின்றனவோ அவர்களால் சுமக்கப்படுவதில்லை. இவை மற்றவர்களுக்கு மாற்றி அளிக்கப்படுகின்றன.
(ii) அதாவது சரக்கு மற்றும் சேவைகளை வழங்கும் விற்பனையாளர் மீது வரி விதிக்கப்பட்டு அவற்றை வாங்குபவரால் செலுத்தப்படும் வரியே மறைமுக வரியாகும். உதாரணம் சரக்கு சேவை வரி (GST).
50.
(i) அதிக வேலை வாய்ப்புகள் : பெரிய வர்த்தக நிறுவனங்களை காட்டிலும் இந்நிறுமங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன.இத்தகைய நிறுமங்கள், பெரும்பாலும் உள்ளரில் கிடைக்கும் உழைப்பாற்றலை நம்பி இருப்பதால் நாட்டில் உள்ள ஏராளமனா மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறது
(ii) குறைந்த உற்பத்தி செலவு : இம்மாதிரியான நிறுமங்களைநடத்தப்பயிற்சி பெற்ற அல்லது அதிக ஆற்றல் படைத்த தொழிலாளார்களா அல்லது தொழில் கல்வி பயின்ற உழைப்பாளர்களோ தேவைப்படுதில்லை,இன்
நீருவனங்கள் குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை நியமிப்பாதல் உற்பத்தி செலவுகள் வெகுவான குறைகிறது.இதன் விளைவாக பெரிய அளவிலான நிர்வனங்களை விட இவற்றால் குறைந்த செல்வில் உற்பத்தியை மேற்கொள்ள முடிகிறது
(iii) குறைந்த முதலிடு : இவற்றைக் தொடங்குவதற்கு பேரளவு முதல் தேவைப்படுவதில்லை.இவைகளின் உரிமையாளைர்கள் உள்ளரில் இருப்பதால் தனக்கு அருகாமையில் உள்ள உள்ளரில் வளங்களை பயன்படுத்திக் கொள்கின்றார்.கைவினை பொருட்கள் மற்றும் பரம்பரியத் குடும்பத் தொழில்களை ஊக்குகின்றன.இந்த நிறுவனங்கள் சிற்று மற்றும் பேரூரில் உள்ள உள்ளூர் தொலைமுனைவோர் மற்றும் சுயதொழில் செய்பர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன
(iv) விரைந்து முடிவெடுத்தல்: இவற்றின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொழில் படிப்பு பயின்ற மேலார்களைப் பணியமரத்த வேண்டிய அவசியம் இல்லை.பெருபாலும் இந்த நிறுவன அவற்றின் உரிமை யாளர்களே நிர்வாகம் செய்கினற்னர்.
பங்களிப்பு உதவி: பெரிய உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதரி பாகங்கள் மற்றும் பிற பொருட்களை தயாரித்து கொடுத்து பேரளவு உற்பத்திக்கு துணை புரிவதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன
(vi) சமுதாயத்தில் பொருளாதார சமநிலைய உருவாகுதல்: வருமானம் மற்றும் வளங்கள்ஒரு சிலரிடம் குவிவதைத் தடுத்து அவற்றைப் பரவலகுவதன் மூலம் சமுத்தியதில் பின்திங்கிய நிலையில் இருப்போரையும் இலாபம் மகிந்த தொழில் துறையில் பங்கு பெறச் செய்வதன் மூலம் சீரான பொருளாதாரப் பகிர்வுக்கு வலி வகை செய்கிறது
(vii) அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி:இந்நிறுவனங்களின் வளிர்ச்சிய ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவில் தொழில் ரீதியாக பின்தங்கியுள்ள பகுதிகளை வளர்ச்சி அடையச் செய்யலாம்.இதன் மூலம் நாடு முழுவதும் , சீரான தொழில் வளர்ச்சியை பெற இயலும்.இவை உள்ளுர்களிலேய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதால் மற்றும் பேரூர்களில் வசிக்கும் மக்கள் நகர்ப்புறம் நோக்கி வேலைக்காக இடம் பெயர்வது தடுக்கப்படுகிறது
(viii)சுய வேலைவாய்ப்பு உருவாக்கி , சுய சார்பு மேம்படுத்துதல்: இத்துறையானது தொழில் முனைவோர்கலை உருவாக்குவதில் பெரும் பங்குகாற்றுகின்றன. இது சமுதாயத்தில் சுயவேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் சுயசார்பை ஊக்குவிக்கிறது. தன் மூலம் தனிநபர் வருமானம் வெகுவான உயர்ந்து நாட்டின் பொருளாதர வளர்ச்சி அதிகரிக்கிறது
51.
52.
| உற்பத்தி தொழில் | வணிகம் | வியாபாரம் |
| 1. பொருள்: உற்பத்தி தொழில் என்ற சொல் பிரித்து எடுத்தல், மறு உற்பத்தி மாற்றுதல் பயனுள்ள பொருட்களை தயாரித்தல் போன்ற செயல்களைக் குறிக்கின்றது. |
வணிகம் என்ற சொல் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவதை குறிக்கின்றது. | வியாபாரம் என்ற சொல் பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்முதல் மற்றும் விற்பனையைக் குறிக்கின்றது. |
| 2.உள்ளடக்கம்: கச்சா பொருட்கள் பகுதியாக முடிவுற்ற பொருட்களை முழு இறுதிப் பொருளாக மாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. | வியாபாரம் மற்றும் அதன் தொடர்புடயவற்றை உள்ளடக்கிறது. | பொருட்கள் மற்றும் சேவை பரிமாற்றம் இவற்றை உள்ளடக்கியது. |
| 3.முதல்: பொதுவாக உற்பத்தி தொழிலுக்கு அதிக முதலீடு என்பது தேவைப்படுகிறது. | வணிகத்திற்கு முதல் குறைந்த அளவே தேவைப்படுகிறது. | போதுமான சரக்கிருப்பை வைத்திருக்கவும் கடன் அளிக்கவும் போதுமான முதல் தேவைப்படும். |
| 4. இடர்பாடு: அதிக இடர்பாட்டைக் கொண்டது. | குறைவான இடர்பாட்டை கொண்டது. | குறைவான இடர்பாட்டை கொண்டது |
| 5. பரிமாணம்: பொருட்கள் மற்றும் சேவையின் வழங்கல் அளிப்பு பக்கத்தை பிரதிபலிக்கிறது. | பொருட்கள் மற்றும் சேவையின் தேவை பக்கத்தை பிரதிபலிக்கிறது. | இது அளிப்பு மற்றும் தேவை பக்கத்தை பிரதிபலிக்கிறது. |
| 6. பயன்பாடு உருவாக்கம் : பொருட்களின் உருவத்தையும் வடிவத்தையும் மாற்றி அமைப்பதால் இது உருவப்பயன்பாட்டை உருவாக்குகிறது. | பொருட்களைத் தயாரிப்பாளரிடமிருந்து நுகர்வோருக்கு செல்வதன் மூலம் இடர் பயன்பாட்டை உருவாக்குகிறது. | பரிவர்த்தனை மூலம் உடைமைப் பயன்பாட்டை உருவாக்குகிறது. |
53.
தொழிலின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) பொருளாதார நோக்கங்கள் : தொழில்கள் பொருளாதார நோக்கம் என்பது லாபம் ஈட்டுவதே ஆகும். மேலும் இலாபம் ஈட்டுவதற்கு நுகர்வோரை உருவாக்குதல், புதிய நுட்பங்களை கண்டுபிடித்தல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் போன்ற நோக்கங்களே மிக முக்கியமானதாகும்.
(ii) சமூக நோக்கங்கள் : சமூக நலனைப் பேணுவது என்பது சில தொழிலமைப்புகளை, அரிய வகைகளை சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். எந்த தொழில் நடவடிக்கைகளையும் சமுதாயத்திற்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது.
(iii) நிறுவனம் நோக்கங்கள்: தொழிலமைப்பின் மிக முக்கிய நோக்கம் தொடர்ந்து செயல்பாடுகள் மூலம் மயமாக்கம், நுகர்வோருக்கு தரமான பொருள்களை வழங்குதல் நுகர்வோருக்குத் திருப்திப்படுத்துவதில் ஆகியன மூலமாக அமையலாம்.
(iv) மனித நோக்கங்கள்: தொழிலமைப்பு தன்னுடைய பணியாளர் நலன் மற்றும் எதிர்காலத் தேவையை நிறைவேற்றக் கூடிய வகையில் செயல்பட வேண்டும். மேலும் இயலாதவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், நலம் காக்க உதவ வேண்டும். பணியாளர்கள், பொருளாதார, சமூக உளவியல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவையாக அமைய வேண்டும்.
(v) தேசிய நோக்கங்கள்: தொழில் நிறுவனம், ஓரு நாட்டினுடைய மிக முக்கிய அங்கமாக கருதப்படுவதால் அவை நாட்டின் நோக்கங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுகிறது. கடமை வகையில் தன்னுடைய குறிக்கோளை அமைத்துத் தெளிவு வேண்டும். ஒரு நாட்டின் நோக்கம் என்பது மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தல், அரசிற்கு வருவாய் ஈட்டுதல், சரக்கு மற்றும் சேவை உற்பத்தியில் தன்னிறைவு அடைதல், சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவை மிக முக்கியமானதாகும். எனவே ஒரு தொழில் அமைப்பு தன்னுடைய குறிக்கோளை நிர்ணயம் செய்யும் போது மேற்கூறிய நோக்கங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
54.
| அடிப்படை | ஒப்பந்தம் | உடன்படிக்கை |
|---|---|---|
| வரை விலக்கணம் | சட்டத்தால் நடைமுறைப் படுத்தப்படும் உடன்படிக்கை யாகும். | உடன்பாடு என்பது மறுபயன் உருவாக்கும் ஒவ்வொரு உறுதிமொழியும் உறுதிமொழிகளின் ஒவ்வொரு தொகுதியும் . |
| செயலாக்கத் தன்மை | அனைத்து ஒப்பந்தங்களும் செயல் படுத்த முடியும் | அனைத்து உறுதிமொழிகளும் செயல் படுத்த முடியாது. |
| பரஸ்பர உறவு | ஒப்பந்தம் என்பது உடன்படிக்கை உள்ளடக்கியது | உடன்படிக்கையில் எல்லா ஒப்பந்தம் உள்ளடக்கியது அல்ல. |
| செல்லக்கூடியது | சட்டத்திற்கு உட்பட்ட உடன்படிக்கை மட்டுமே ஒப்பந்தமாகும் | சட்டத்திற்கு உட்பட்ட அல்லது உட்பாதவையும் உடன்படிக்கை ஆகும் |
| சட்டபுர்வமான கடமை | அனைத்து ஒப்பந்தங்களும் சட்டப்பூரவமான கடமை உள்ளன. | சட்டப்பூரவமான கடமையானது .அனைத்து உடன் படிக்கையிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards