11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/02/2019
HSC First Year 3rd Revision Exam 2019
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
_____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை
தரகர்
தன் பொறுப்பு முகவர்
பண்டகசாலை வைத்திருப்பவர்
கழிவு முகவர்
2.
ஒரு நாட்டில் குடியிருப்போருக்கும் மற்றொரு நாட்டில் குடியிருப்போருக்கும் இடையே நடைபெறும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அறிக்கை
செலுத்தல் சம நிலை
வாணிப சம நிலை
பெறுதல் செலுத்தல் அறிக்கை
கணக்கியல் அறிக்கை
3.
ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர்
ராபர்ட் ஓவென்
H ,C கால்வெர்ட்
டால்மாக்கி
லம்பேர்ட்
4.
உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
கிராம சேமிப்பு
வணிகச் சேமிப்பு
தொழிற்துறை வளர்ச்சி
விவசாய வளர்ச்சி
5.
6.
வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும்
இறக்குமதி
ஏற்றுமதி
மறு ஏற்றுமதி
மீண்டும் ஏற்றுமதி
7.
உலக வங்கி அமைந்திருப்பது
வாஷிங்டன் DC
நியுயார்க்
டோக்கியோ
ஹாங்காங்க்
8.
இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது
முழுவதும் வரி விதியிற்குட்பட்டது
முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது
வருமானம் கருதப் படுவதில்லை
மறைமுக வரி
9.
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
10.
குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
2004
2007
2006
2008
11.
கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம்
நிறுமப் பதிவாளர்
கூட்டுறவுப் பதிவாளர்
கூட்டாண்மைப் பதிவாளர்
மாவட்ட அட்சியர்
12.
கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.
பங்காதாயம்
இலாபம்
வட்டி
இவை எதுவும் இல்லை
13.
பெயர்ச்சியியல் அரசாங்கம் தன் ஆதிக்கத்தை எதன் வழியாக செயலாக்குகிறது.
சட்டங்கள் வழியாக
செலவுகளை குறைத்தல்
போக்குவரத்து வழியாக
பகிர்ந்தளித்தல் வழியாக
14.
நெறிமுறைகளுக்கான தேவைகள் ______
உயர்மட்ட மேலாண்மை
நடுத்தர அளவிலான மேலாளர்கள்
மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்
மேற்கண்ட அனைத்தும்
15.
இவர்களில் யார் வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கோர முடியாது?
வாக்குறுதி பெறுபவர்
கூட்டு வாக்குறுதி அளித்தவர்கள்
ஒரு வாக்குறுதி பெறுபவர் மரணத்தின் போது, அவரது சட்ட பிரதிநிதி
ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்
16.
பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?
பணம் திருப்பத் திட்டாவணம்
மருத்துவ கோருரிமை
கப்பல் சார் காப்பீடு
காஸ்கோ காப்பீடு
17.
______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.
வழிச் சீட்டு
சரக்கு குறிப்பு
சார்ட்டர்
ஒப்பந்த இரசீது
18.
செல்லுபடியாகக்கூடிய ஏற்பு
அறுதியிட்டுக் கூறுதல்
தகுதியற்றது
அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது
நிபந்தனையுடையது.
19.
அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____
பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்
பொதுக் பண்டகக் காப்பகங்கள்
இந்திய உணவுக் கழகம்
தானியங்கி பண்டகக் காப்பகங்கள்
20.
_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்
பால்பன்
வாஸ்கோடகாமா
அக்பர்
அலாவுதீன் கில்ஜி
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?
22.
சுய உதவிக் குழுவின் செயல்பாடுகளை எடுத்துக் கூறுக.
23.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்
24.
தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் (NEFT) -விளக்குக.
25.
இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.
26.
அமெரிக்க வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக
27.
உள்நாட்டு வியாபாரத்தின் வகைகள் யாவை?விளக்குக.
28.
அரசு நிறுமம் என்றால் என்ன?
29.
தனி உரிமையியலின் வகைகள் யாவை?
30.
தனியாள் வணிகத்திற்கு சில உதாரணங்களை கூறு
31.
பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.
32.
குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?
33.
இந்திய ஒப்பந்தச் சட்டம் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன . அவை யாவை
34.
ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?
35.
சரக்கு அனுப்புகை தொடர்பான ஆவணங்கள் யாவை?
36.
தானியங்கி விற்பனை எந்திரங்கள் என்றால் என்ன?
37.
மாநில சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் குறிப்பு வரைக.
38.
சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?
39.
40.
பங்குதாரர்கள் என்று யாரை அழைக்கலாம்?
41.
போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.
42.
உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?
43.
சில்லறை வியாபாரிகளின் வகைகளை விவரி
44.
அமெரிக்க வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?
45.
நுகர்வோர்களுக்குச் சில்லறை வியாபாரிகளுக்கு ஆற்றிடூம் சேவைகள் யாவை?
46.
47.
ஏற்றுமதி ஆணை நிலையத்தின் பணிகளை விளக்கி எழுதுக.
48.
பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?
49.
பல்வேறு வகையான மதிப்பீடு செய்யப்படும் நபர்களைப்பற்றி விவரி.
50.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்கள் -வரையறை தருக
51.
ஏதேனும் ஐந்து தனிநபர் முதலீட்டு வழிகளை விளக்குக.
52.
உற்பத்தித்தொழில், வணிகம் மற்றும் வியாபாரம். ஓர் ஒப்பீடுசெய்க.
53.
பொருளாதாரச் செயல்பாடுகளும் மற்றும் பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகளும் உள்ள வேறுபாடுகாளை விவரி
54.
செல்லுபடியின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?
1.
(b)
தன் பொறுப்பு முகவர்
2.
(a)
செலுத்தல் சம நிலை
3.
(a)
ராபர்ட் ஓவென்
4.
(a)
கிராம சேமிப்பு
5.
(b)
6.
(a)
இறக்குமதி
7.
(b)
நியுயார்க்
8.
(b)
முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது
9.
(b)
குடியரசுத் தலைவர்
10.
(c)
2006
11.
(c)
கூட்டாண்மைப் பதிவாளர்
12.
(c)
வட்டி
13.
(d)
பகிர்ந்தளித்தல் வழியாக
14.
(d)
மேற்கண்ட அனைத்தும்
15.
(d)
ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்
16.
(c)
கப்பல் சார் காப்பீடு
17.
(a)
வழிச் சீட்டு
18.
(c)
அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது
19.
(c)
இந்திய உணவுக் கழகம்
20.
(a)
பால்பன்
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பின்வரும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்தல், திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு, தடையுத்தரவிற்கான வழக்கு, பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு
(i) ஒப்பந்தத்தை ரத்து செய்தல் (Recission of Contract):
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒருவர் ஒப்பந்தத்தை மீறும் பொழுது மற்றவர் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதிக் கொள்ளலாம். மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தின் தீமைக்குள்ள அணைத்து கடமைகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். (.க) M என்பவர் N என்பவருக்கு குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், ஆனால் N அந்த நாளில் பணத்தை அளிக்க மறுக்கிறார்.
(ii) திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு (Claim for Specific Performance):
சில சமயங்களில் இழப்பீடுகள், ஒப்பந்த முறிவிற்கான போதுமான ஓர் தீர்வாக இருக்காது.இச்சமயங்களில் நீதிமன்றம் ஒப்பந்த அவரது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆணையிடலாம். ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
(iii) தடையுத்தரவிற்கான வழக்கு:
ஒரு குறிப்பிட்ட செயலை ஒரு நபர் செய்யாதிருக்குமாறு தடைப்படுத்தும் வகையில் அமையும் நீதிமன்றத்தின் ஆணை தடையுத்தரவு ஆகும், ஒரு நபர் ஒரு செயலை செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்த நிலையில், அச்செயலைச் செய்யாதிருக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறபிக்கலாம். பின்வரும் வழக்குகளில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் இருந்தால் (2) செல்லாத ஒப்பந்தமாக இருந்தால் அல்லது (3) செல்லாத ஒப்பந்தம் என கண்டுபிடித்தால்.
(iv) பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு:
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு நபர் வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் மற்றொரு நபர் ஒப்பந்தத்தை மீறுவதால் பணிகி ஏற்ற தொகை என்ற கூற்று எழுகிறது. " எவ்வளவு ஈட்டப்பட்டதோ அவ்வளவு" என்ற சொல்லின் பொருள் பணிக்கு ஏற்ற தொகை எனப்படுகிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டு மறுபகுதி நிறைவேற்றப்பட முடியாமல் தடை 'ஏற்பட்டால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை முடிந்த நபருக்கு இழப்பீடு வகை செய்கிறது.
(v) ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு:
இழப்பீடு என்பது ஒப்பந்தம் மீறுகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில் தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது இழப்பீடு பெரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்த சட்டம் 1872ன் பிரிவு 73, ஒப்பந்தத்தை மீறும் நபர் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்புள்ளது. இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளன, அவை சாதாரண இழப்பீடுகள், சிறப்பு இழப்பீடுகள் பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள் மற்றும் பெயரளவு இழப்பீடுகள்.
22.
சுய உதவிக் குழுவின் செயல்பாடுகள்:
(i) உறுப்பினர்களின் முடிவு எடுக்கும் திறனை மேம்படுத்துகிறது.
(ii) உறுப்பினர்களுக்கு எழுத்தறிவு குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கிறது.
(iii) வசதியற்றோருக்கு நிதி பரிமாற்றங்களில் திறன் பெற வாய்ப்பு அளிக்கிறது.
(iv) சரியான கணக்குகளை உறுதிபடுத்தப் பல ஏடுகளும், பதிவேடுகளும் பராமரிக்கப்படுதல்.
(v) தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் தேவையான பயிற்சி அளித்தல்.
(vi) ஆண்டு தோறும் தகுதி பெற்ற தணிக்கையாளரிடம் ஆண்டுத் தணிக்கைக்காகக் கணக்குகளைச் சமர்பித்தல்.
(vii) குழு உறுப்பினர்களுக்கு அனுமதிக்கக்கூடிய கடன் தொகையைத் தீர்மானித்தல்.
23.
பல பொருள்கள் விற்குமிடம் அங்காடி என அழைக்கப்பட்டுள்ளது.
பகலில் நடப்பதை நாளங்காடி எனவும்
இரவில் நடப்பதை அல்லங்காடி எனவும் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் மதுரை ஒரு இரு பெரு நியாமத் எனப்படும் தூங்காநகரம் எனக் குறிப்பிடுகிறார்.
அதாவது இடைவெளியின்றி 24 மணி நேரமும் வியாபாரம் நடந்ததாகக் கூறுகிறார்.
24.
(i) இது 2005 இல் இந்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்டது.இந்த மின்னணு நிதி பரிமாற்றத்தின் கீழ் மொத்த நிதி பரிமாற்ற நேரங்களில் இந்தியா முழுவதும் தீர்க்கப்படுகின்றன.
(ii) NEFT செயல்படுத்தப்பட்ட கிளை வங்கிகளில் கணக்குகளைப் பராமரிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் NEFT முறையைப் பயன்படுத்தத் தகுதியுடையவையாகும்.
(iii) பரிவர்த்தனைகள் உண்மையான நேர அடிப்படையில் நடைபெறுவது இல்லை.
(iv) ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், காலை 8.00 மணியிலிருந்து இரவு 7.30 மணி முடிய 23 தீர்வுகள் மட்டுமே ஒரு நாளில் அனுமதிக்கப்படுகின்றன.
(v) NEFT பரிமாற்றங்கள் ஞாற்றுக்கிழமைகளில் மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்படுவதில்லை.
25.
(i) உள்ளூர் தொழில்களுக்கு அபாயம் : பன்னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தி உள்நாட்டுத் தொழில்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துகிறது.
(ii) வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை மாற்றுதல்: வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கு மாறுவதன் மூலம் இந்த நாடுகளின் தொழில் முன்னேற்றம் தடைபடும்.
(iii) ஏழை மக்களுக்கு நன்மையில்லை: பணக்காரர்களால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்க முடிகிறது.
(iv) தனிமனித சுதந்திற்கு அபாயம்: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்காமல் தடை ஏற்படுகிறது.
(v) உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு: உள்நாட்டு மக்களுக்கு கணிசமான அளவில் வேலைவாய்ப்பு பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதில்லை.
(vi) வலுவான தகுதி நிலையை தவறாக பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் பேரளவு பொருளாதார நிறுவனங்கள் ஆகும்.
(vii) இயற்கை வளங்களைச் சுயநலத்திற்குப் பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு இயற்கை வளங்களை தன சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.
(viii) அயல் நாட்டின் சுயநல வளர்ச்சிப் போக்கு: பன்னாட்டு நிறுமங்களின் கலாச்சாரத்தால் உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
(ix) உள்நாட்டு தொழில், மற்றும் பொருளாதார முன்னேற்றம் புறக்கணிப்பு: உள்நாட்டு வணிகம் முன்னேற்றம் ஏற்படுவதில்லை.
26.
(i) அமெரிக்க வைப்பு இரசீதுகள் அமெரிக்க டாலரில் மட்டும் குறிப்பிடப்படும்.
(ii) அமெரிக்க குடிமக்களாக இருக்கிற முதலீட்டாளருக்கு மட்டுமே வெளியிடப்படும்.
(iii) வெளியிடும் வைப்பக வங்கி அமெரிக்காவில் இருக்க வேண்டும்.
27.
உள்நாட்டு வியாபாரத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை
(i) மொத்த வியாபாரம்
(ii) சில்லறை வியாபாரம்
(i) மொத்த வியாபாரம்
மொத்த வியாபாரம் என்பது பொருட்களை உற்பத்தி செய்பவரிடம் மொத்தமாக வாங்கிச் சில்லறை வியாபாரிகளுக்கு குறைந்த அளவில் விற்கும் நடைமுறை வணிகச் செயலாகும்.
(ii) சில்லறை வியாபாரம்
சில்லறை வியாபாரம் என்பது மொத்த வியாபாரியிடம் பொருட்களை வாங்கி நுகர்வோருக்கு சிறிய அளவில் பொருட்களை வழங்கும் நடைமுறை வணிகச் செயலாகும்.
28.
(i) பொதுத்துறை நிறுவனங்களை 1956 ஆம் ஆண்டு இந்திய நிறுமச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் அது அரசு நிறுமம் எனப்படும். இவ்வகை நிறுமங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமானது.
(ii) 1956-ஆம் ஆண்டு இந்திய நிறுமச்சட்டம் பிரிவு 617 அரசு நிறுமங்கள் என்பது 51% க்கு மேலாக (செலுத்தப்பட்ட மூலதனம்) மத்திய அரசு, மத்திய (அ) மாநில அரசு, பகுதி மத்திய அரசு மற்றும் பகுதி ஒன்றுக்கும் மேற்பட்ட மாநில அரசு வைத்திருந்தால், அது அரசு நிறுமங்கள் ஆகும்.
(iii) (எ.கா.) இந்திய இரும்பு எஃகு ஆணையம், இந்திய எண்ணெய்க்கு கழகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், பாரத மிகு மின் நிறுவனம் ஆகும்.
29.
(i) தனி உரிமையியல் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுவது அவை,
(ii) தயாரிப்பு பொருள் அல்லது வர்த்தகப் பெயர் தனி உரிமையாக்கல், வணிக வடிவமைப்பு தனி உரிமை.
30.
(i) குறைந்த மூலதனம் : இனிப்பு கடை, பெட்டிக்கடை
(ii) விரைவான முடிவு: பங்குதாரர், மருத்துவர்.
(iii) குறைந்த இடர்பாடு: ஊர்தி பழுது பார்க்கும் தொழில், சில்லறை விற்பனை நிலையம்.
31.
(i) வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்பட்டு காப்பீடு வேளாண்மை காப்பீடு ஆகும்.
(ii) நெல்,கோதுமை,கரும்பு எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
32.
(i) பொருட்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் குளிரூட்டப்பட்ட பண்டக சாலைகளில் சேமிக்கப்படுகின்றன.
(ii) பழங்கள், காய்கறிகள்,முட்டை,வெண்ணெய்,மீன் மற்றும் இறைச்சி போன்ற விரைவில் அழுக்கக்கூடிய பொருட்களை சேமித்து வைப்பதற்காக இந்த பண்டக சாலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iii)சரியான தரத்தில் குளிரூட்டப்பட்டு சேமிக்கப்படும் பொருட்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
33.
இந்திய ஒப்பந்தச் சட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பொது ஒப்பந்தங்கள், சிறப்பு ஒப்பந்தங்கள்.
34.
ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் அனைவரும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தமது கடமைகளைச் செய்ய தவறுதல் ஒப்பந்த மீறுகை எனப்படும்.
35.
கப்பல் துணைதலைவர் இரசீது, கப்பல் சீட்டு ஆணை, கப்பல் இரசீது, கடல்சார் காப்பீட்டு திட்டாவணம், வணிக தூதுவர் இடாப்பு, இரயில் ரசீது 1 லாரி ரசீது.
36.
தானியங்கி விற்பனை எந்திரம் என்பது எந்திரம் வழியாக பொருள்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்கும் எந்திரம் ஆகும். இது நாணயங்கள், அட்டைகள் அல்லது வில்லைகளைக் கொண்டு இயக்கக்கூடியது. உதாரணம் தானியங்கி ஆவின் பாலகம்.
37.
மாநில சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் (தமிழ்நாடு) 2017-ன் கீழ் மாநில அரசால் சுமர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் வரியாகும்.
38.
(i) கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சேவைத் தொழில்கள் பல நூற்றாண்டாக இருந்து வருகின்றன.
(ii) உலக வர்த்தகத்தில் சேவைத் தொழில்கள் 1970 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
(iii) உலகப் பொருளாதாரத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த துறையாகச் சேவைத் துறை உருவாகியுள்ளது.
39.
40.
எவர் ஒருவர், சொந்த மூலதனம் கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கி அதில் ஏற்படும் இடர்களை ஏற்கின்றாரோ,அவரே தொழிலின் உரிமையாளர் ஆவார் அல்லது பங்குதாரர் ஆவார்.எவர் ஒருவர் நிறுமத்தின் பங்குகளை வாங்குகிறாரோ அவரும் பங்குதாரர் ஆவர்.
41.
(i) உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது : பொருளின் உற்பத்தி நோக்கம் நுகர்வு ஆகும்.பயனுள்ள போக்குவரத்து முறை காலம் மற்றும் இட வசதிகளை உருவாக்குவதன் மூலம் பொருட்களின் தேவை மற்றும் பொருட்களின் மதிப்பு குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(ii) பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது : மூலப் பொருட்கள்,எரிபொருள்,உழைப்பு மற்றும் முடிந்த தயாரிப்புகள் மற்றும் மூலதன பயன்பாடு மற்றும் தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது போன்றவைகளுக்கு உதவுகிறது.
42.
உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) உறுப்பு நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
(ii) உறுப்பு நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு உலகின் பல்வேறு வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்துதல்
(iii) பன்னாட்டு வணிகத்தில் ஒரு ஒருங்கிணைந்த மேலும் நிறைவேற்றத்தக்க மற்றும் நீடித்த வர்த்தக முறையை ஊக்குவிக்கிறது
(iv) பன்னாட்டு அளவில் சரக்குகள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல்
(v) முழு வேலைவாய்ப்பு மற்றும் நீடித்த நிலையான வருமானம் ஆகியவற்றை உறுதி செய்தல்
(vi) சுற்றுசூழலை பாதுகாத்தல்
43.
சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சுற்றாடும் அல்லது சில்லறை வியாபாரிகள், நிலையிட பேரளவு சில்லறை வியாபார அமைப்புகள், இவற்றை ஒவ்வொன்றையும் மேலும் பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். அவையாவன:
(i) சுற்றாடும் /நடைபாதை வியாபாரிகள்: சுமை தூக்கி மற்றும் கூவி விற்கும் வியாபாரிகள், தெரு வியாபாரிகள், சந்தை வியாபாரிகள், இடம் பெயர் வியாபாரிகள்.
(ii) நிலையிட சிற்றளவு சில்லறை வியாபாரிகள்: தெருக்கடை வியாபாரிகள், பொதுப் பண்டக சாலைகள், குறிப்பிட்ட வகைப் பண்டக சாலைகள், சிறப்பு பண்டக சாலைகள், இரண்டம் தர பொருட்கள் விற்போர்.
(iii) நிலையிட பேரளவு சிலரை வியாபார அமைப்புகள்: துறைவாரிப் பண்டக சாலைகள் மடங்குக் கடைகள், சிறப்பங்காடிகள் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், வாடகைக் கொள்முதல் முறை மற்றும் தவணை விற்பனை முறை, அஞ்சல்வழி விற்பனை, தானியங்கி விற்பனை எந்திரங்கள், வணிக வளாகங்கள், தொலைத்தொடர்பு வழி சந்தை தளவிற்பனை.
44.
(i) அமெரிக்க வைப்பு இரசீதுகள் அமெரிக்க டாலரில் மட்டுமே குறிப்பிடப்படும்.
(ii) அமெரிக்கக் குடிமக்களாக இருக்கிற முதலீட்டாளருக்கு மட்டுமே வெளியிடப்படும்.
(iii) வெளியிடும் வைப்பக வங்கி அமெரிக்காவில் இருக்க வேண்டும்.
(iv) அமெரிக்க வைப்பு இரசீதை வெளியிட அமெரிக்கப் பிணையங்கள் மற்றும் மாற்றக இயக்கத்தின் (Securities and Exchange Commission) சம்மதத்தைப் பெற வேண்டும்.
45.
சில்லறை வியாபாரிகள் நுகர்வோர்களுக்கு பின்வரும் சேவைகளை அளிக்கின்றனர்.
(i) தொடர்பு அளிப்பு: சில்லறை வியாபாரிகள் பல்வேறு தயாரிப்பாளர்களின் பல்வேறு வகைப் பொருட்களை வாங்கி, ஒன்று திரட்டி, நுகர்வோருக்கு விற்பதற்காக எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்கிறார். இதனால் வாங்குபவர் தனக்குத் தேவைப்படும் பொருட்களை தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் அளவுகளில் தொடர்ந்து வாங்க முடிகிறது.
(ii) புதிய பொருட்கள் குறித்த தகவல்கள்: ஒரு சில்லறை வியாபாரி தனது தனியாள் விற்பனை மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலமும், திறம்படப் பொருட்களைக் காட்சிப்படுத்துதல் மூலமும் சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருட்கள் குறித்து தகவல்களை பரப்புகிறார்.
(iii) கடன் வசதிகள்: சில வேளைகளில் சில்லறை வியாபாரிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதி அளிப்பதன் மூலம் அவர்களின் அன்றாட செயல்பாட்டிற்கு உதவுகின்றார்.
(iv) தேர்ந்தெடுத்து வாங்க வசதியளித்தல்: சில்லறை வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் பல்வேறு வகைகளை ஒன்றுதிரட்டி வைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை மனநிறைவுடன் தேர்ந்தெடுத்து வாங்க வசதி அளிக்கிறார்.
(v) இதர சேவைகள்: வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று வழங்குகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின் சேவைகளை அளிக்கிறார்கள். தமது வாடிக்கையாளர்களுக்கு ரொக்க கழிவு வழங்குதல் போன்ற பணிகளையும் சில்லறை வியாபாரிகள் செய்து வருகின்றனர்.
46.
47.
பணிகள்:
(i) உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கான சந்தையை கண்டறிதல்.
(ii) இறக்குமதியாளர் அல்லது அவரது முகவரை கண்டறிந்து ஏற்றுமதி செய்வதற்கான பதிலை பெறுதல்.
(iii) சரக்கின் வடிவத்தை சந்தை தேவை, தரம், சரக்கை அளிப்பவரின் திறனுக்கு ஏற்றவாறு நிறுவுதல்.
(iv) சரக்கை அனுப்ப போக்குவரத்தை தெரிவு செய்வதற்கு முன் அதன் விலை சேவையின் தரம், பாதுகாப்பை கருத்தில் கொள்ளுதல்.
(v) சரக்கை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப தயார் செய்தல்.
(vi) சரக்கை வாங்குபவரின் கடன் செலுத்துத்திறனை அறிதல்
(vii) சரக்கை காப்பீடு செய்தல்
(viii) வணிக நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் மற்றும் சரக்கு மற்றும் சேவைக்கான தொகை செலுத்துதல்.
(ix) பன்னாட்டு வணிகம் தொடர்புடைய ஆவணங்களை தயாரித்தல்.
(x) கோருரிமைகளை தீர்வு செய்தல்.
48.
நிலவியல் சிறப்பு தேர்ச்சி: உலக நாடுகள் அனைத்தும் தாங்கள் கொண்டுள்ள இயற்கை வளங்கள், மனித ஆற்றல், தொழில்நுட்பம், மூலதனம் ஆகியவை அடிப்படையில் வேறுபடுகின்றன. சில நாடுகளில் கனிம வளங்கள், நீர் மின்சக்தி, உலோக வளங்கள் போன்றவை அதிகமாகவும் வேறு சில நாடுகளில் முன்னேறிய உற்பத்தி தொழில்நுட்பம், திறமையான மக்கள் தொகை, மூலதன கருவிகள் ஆகியவை அதிகமாகவும் இருக்கும். எனவே, தன்னிடம் உபரியாக உள்ள வளங்களை மற்ற நாடுகளுக்கு கொடுத்து அங்கிருந்து பற்றாக்குறையான வளங்களைப் பெற்று கொள்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது.
(ii) வளங்களை தேவையான அளவிற்குப் பயன்படுத்துதல்: எந்த நாடு தன்னால் திறமையாக பொருட்களை தயாரிக்க இயலவில்லையோ அது மற்ற நாடுகளிலிருந்து அதாவது திறமையாக பொருட்களைத் தயாரிக்கக்கூடிய நாடுகளிலிருந்து உபரியாக உள்ள பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற கோட்பாட்டின்படிதான் பன்னாட்டு வணிகம் செயல்பட்டு வருகிறது. இது அந்நாட்டின் வளங்களை தேவையான அளவிற்கு பயன்படுத்த உதவுகிறது.
(iii) பொருளாதார வளர்ச்சி: வளரும் நாடுகள் இயந்திரம், தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதன் மூலமாக விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் குறைந்த பொருளாதார வளர்ச்சியில் இருந்து அதிக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் காரணமாக இருந்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் கூட பன்னாட்டு வணிகத்தின் இறக்குமதி செய்து முடிவற்ற பொருட்களாக ஏற்றுமதி செய்து விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கும்.
(iv) வேலைவாய்ப்பை உருவாக்குதல்: வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு மற்றும் வளர்ச்சிக்கும் பன்னாட்டு வணிகம் உதவுவதால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிகிறது. மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பையும், அனுப்புகை மற்றும் அகற்றீட்டு முகவர்கள், தேவைக் குறிப்பீட்டகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் புற ஒப்படைப்பு முகமைகள் போன்றவற்றிற்கும் மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
(v) வாழ்க்கைத் தரம் மேம்படுதல்: உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பல்வேறுவிதமான பொருட்கள் அல்லது சேவைகளை பன்னாட்டு வணிகத்தின் மூலம் மக்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடிகிறது. நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
(vi) விலை சமனிலைப்படுத்தல்: உலகச் சந்தையில் தினந்தோறும் விலை மாற்றம் அடையக்கூடிய பல்வேறு பொருட்களின் விலையை பன்னாட்டு வணிகம் சமப்படுத்துகிறது. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்டப் பொருட்களின் விலை உள் நாட்டில் உயருகிறதோ அப்பொழுது மற்ற நாடுகளிலிருந்து அப்பொருட்களை இறக்குமதி செய்து விலையைச் சமன் செய்கிறது. அதே போன்று குறிப்பிட்ட பொருள்களின் விலை குறையும் போதெல்லாம் அந்த பொருள்களை அதிக அளவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் விலையை நிலைப்படுத்துகிறது. உலக நாடுகளில் பொருட்களின் விலை அதிக ஏற்றத்தாழ்வாக இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
(vii) அதிக இலாபத்திற்கான வாய்ப்பு: அதிகமாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருட்களை பன்னாட்டு சந்தையில் பல்வேறு நாடுகளுக்கும் அதிக விலையில் விற்பனை செய்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. ஏதன் பயனாக அதிக இலாபத்தை ஈட்ட முடிகிறது.
(viii) முழுத் திறனையும் பயன்படுத்துதல்: பன்னாட்டு வணிகம் உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அதிக அளவில் சரக்கு மற்றும் பொருட்களை உலகச் சந்தையில் விற்பதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் அந்நிறுவனங்கள் தன்னுடைய இயந்திரம் மற்றும் தொழில் நுட்பத்தை முழுமையான அளவில் பயன்படுத்துகிறது.
(ix) பன்னாட்டு அமைதி: உலக நாடுகள் தனித்தனியே இயங்கினாலும் பன்னாட்டு வணிகத்தினால் மற்ற நாடுகளையும் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிறது. கலாச்சாரம், கருத்துகள் மற்றும் பரஸ்பர புரிந்துணருந்தல் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. பன்னாட்டு வணிகம் உலக மக்களிடையே கலாச்சார சமூக உறவுகளை வளர்க்க உதவுகிறது. ஒட்டு மொத்தமாக உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.
49.
(i) மதிப்பீட்டிற்குரியவர்: பிரிவு 2(7) "சட்டத்தின் கீழ் யாரால் வருமான வரி அல்லது ஏதேனும் பிற பணத்தொகை செலுத்தப்படத்தக்கதாக உள்ளதோ, அந்நபர் மதிப்பீட்டிற்குரியவராவார்" மேலும் தன்னுடைய வருமானம் அல்லது நட்டம் அல்லது தனக்கு வரவேண்டிய பாக்கித் தொகை ஆகியவற்றிற்காக வருமான வரிச்சட்டத்தின் கீழ் வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு உட்பட்ட ஒவ்வொரு நபரும் மதிப்பீட்டிற்குரியவர் என்ற சொல்லில் அடங்குவர். வருமான வரிச் சட்டம் மூன்று வகையான மதிப்பீட்டிற்குரியவர்களை கண்டுணர்ந்துள்ளது.
(ii) சாதாரண மதிப்பீட்டிற்குரியவர்கள்: இச்சட்டத்தின் கீழ் வட்டி, வரி அல்லது அபராதம் போன்ற ஏதேனும் தொகையை செலுத்த வேண்டிய நபர்.
(iii) பிரிதி நிதித்துவ மதிப்பீட்டிற்குரியவர்: மற்றவரின் வருமானத்தின் மதிப்பீட்டிற்கு பொறுப்பேற்கும் ஒரு நபர், பிரிதிநிதித்துவப் மதிப்பீட்டிற்குரியவர் எனப்படுகிறார். (எ.கா.) மைனர் ஒருவரின் பாதுகாவலர்.
(iv) தவறிழைத்த மதிப்பீட்டிற்குரியவர் : வருமான வரிச் சட்டத்தின் கீழ், தமது சட்டக் கடமை எதையேனும் நிறைவேற்றத் தவறியவர் தவறிழைத்த மதிப்பீட்டிற்குரியவராவார் (எ.கா) தமது பணியாளர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை அளிக்கும் எஜமானர் ஒருவர், அச்சம்பளத்தில் இருந்து உரிய வரியை பிடித்தம் செய்தல் வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை எனில், அவர் தவறிழைத்த மதிப்பீட்டிற்குரியவர் என அழைக்கப்படுவார்.
50.
(i) குறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில்துறையில் ரூ 25. இலட்சத்திரகுள்ளும் சேவைத்தொழில் துறையில் ரூ 10 இலட்சத்திரகுள்ளும் முதலீடு செய்திருந்தால் அது குறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(ii) சிறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 25 இலட்சத்துக்கு மேல் 5 கோடிக்கு மிகாமல் சேவைத் தொழில் துறை உபகரணங்கலில் ரூ 10 இலட்சத்துக்கு மேல் ரூ 2 கோடிக்கு மிகாமல் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(iii ) நடுத்ததர தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 10 கோடிக்கு மிக்காமலும் சேவை தொழில் துறையில் உபகரணங்களில் ரூ 2 கோடிக்கு மேல் ரூ 5 கோடிக்கு மிகாமலும் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனம் என்று அழைக்கப்டும்
51.
(i) பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) : இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்புகளில், இது மிகப்பாதுகாப்பான நீண்டகால முதலீட்டு வாய்ப்பாகும். இதற்கு முழுமையான வருமாவரி விலக்கு உண்டு. இந்த வருங்கால வைப்பு நிதி கணக்கை வங்கி அல்லது அஞ்சலகத்தில் ஆரம்பிக்கலாம். இதில் செலுத்தப்படும் தொகை 15 ஆண்டுகளுக்கு முன்பாகத் திரும்பப்பெற முடியாது. பணத்தின் கூட்டு வட்டியைப் பெற முடியும்.
(ii) பரஸ்பர நிதிகள் (Mutual Fund) :பரஸ்பர நிதி என்பது நிதிநிறுமங்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு பரஸ்பர நிதித்திட்டங்கள் மூலமாக திரட்டி பணத்தை, பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அவை ஈட்டும் இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் ஏற்பாடு ஆகும். இதன் மூலம் சாதாரண மக்கள் மறைமுகமாக பங்குச் சந்தையில் பங்கு பெறும் வாய்ப்பை பெறுகின்றனர்.
(iii) அசையாச் சொத்தில் முதலீடு செய்தல்: அசையாச் சொத்தில் முதலீடு செய்தல் என்பது இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் முதலீட்டு துறையாகும். ஒரு வீட்டு மனை (Plot) அல்லது அடுக்குமாடி குடியிருப்பு (Flat) வாங்குவது என்பது, மிகச் சிறந்த தனி மனித முதலீட்டிய முறைகளில் ஒன்றாக விளங்குகிறது. ஒரு நிலப்பிரிவு அமைந்துள்ள இடம் மற்றும் அங்குள்ள பிற அடிப்படை வசதிகளைப் பொறுத்து அசையாச் சொத்தின் மதிப்பு பல மடங்கு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
(iv) விலையுயர்ந்த உலோகங்களில் முதலீடு செய்தல்: தங்கம், வெள்ளி, பிளாட்டினம் வழிகளில் ஒன்றாகும். சந்தை நிலைக்கேற்றார்போல், உலோகங்களின் மதிப்பு மெதுவாக ஆனால் உறுதியாக அதிகரித்து கொண்டு இருக்கிறது. இவ்வகை முதலீட்டில், முதலீட்டாளர்கள் எந்தவித நட்டமும் இல்லாமல் அவற்றை உடனடியாக பணமாக மாற்றிக் கொள்ள இயலும்.
52.
தொழில் முதலீடுகளின் அடிப்படையில் உற்பத்தித் தொழில்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன. குறுத்தொழில்கள், சிறு தொழில்கள், நடுத்தரத் தொழில்கள், பெருந்தொழில்கள்.|
(i) குறுத்தொழில்கள்:
குறுகிய காலத்தில் செய்து முடிக்கும் தொழில்கள் குறுத்தொழில்கள் ஆகும்.
(ii) சிறு தொழில்கள்:
சிறிய அளவிலான தொழில்கள் சிறு தொழில்கள் என அழைக்கப்படும்.
(iii) நடுத்தரத் தொழில்கள்:
பெரிய அளவிலான தொழில் எனலாம்.
53.
| பொருளாதாரத் செயல்பாடுகள் | பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள் |
|
வரை விலக்கணம் :வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணம், |
மகிழ்ச்சி, அன்பு, இரக்கம் உணர்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள் ஆகும். (எகா). தாய் தன குடும்பத்திற்கு உணவு சமைப்பது. |
| நோக்கம் : இலாபம் ஈட்டுவது அல்லது நிதி சார்ந்த ஆதாயம் அடைவது ஒன்றே நோக்கம் ஆகும்.(எகா) ஒரு வழக்கறிஞர் தன பணியைச் செய்வது. | சமூக உளவியல், உணர்வுரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகும்.(எகா) கோவிலுக்கு செல்வது. |
| பணத்தின் அடிப்படையில் அளவிடல்: அனைத்து பொருளாதாரச் செயல்பாடுகளையும் பணமதிப்பின் அடிப்படையில் அளவிடலாம். (எகா. ஒரு மருத்துவர் ஆலோசனைக் கட்டணம் ரூ.500 வசூலித்தல். | பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகளை பணத்தின் அடிப்படையில் அளவிட முடியாது. இவைகள் எண்ணம் உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகும். (எகா.) ஒரு அரசு சாரா அமைப்பு ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக உடைகள் வழங்குவதை கூறலாம். |
|
உறவு: பொருளாதார நடவடிக்கைகள் செல்வத்தை உருவாக்குவதுடன் தொடர்புடையவை.(எ.கா) ராம் என்பவர் சொந்தமாக வீடு வாங்குவதற்கு தனது ஊதியத்தின் ஒரு பகுதியை சேமித்து வருவது. |
பொருளாதாரச் சார்பற்ற நடவடிக்கைகள் செல்வத்தை உருவாக்குவதில்லை.(எ.கா) நன்கொடையாகப் பெற்ற பணத்தை அறக்கொடை பணிகளுக்கு செலவிடுவது. |
| கால அளவு: பொருளாதார நடவடிக்கைகள் திரும்ப திரும்பத் நிகழும் தன்மை கொண்டவை. (எ.கா) குல்பி ஐஸ்கீரிம் விற்பவர் நாள்தோறும் மாலை வேளைகளில் விற்பார். | இவை தொடர்ந்து நிகழாது, நேரம் கிடைக்கும் போது நிகழும். (எ.கா) ஆதரவற்றோர் இல்லம் சென்று பார்த்தல். |
| உருவாகக் கரணம்: பொருளாதார நடவடிக்கைகள் மனித விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்படுகிறது. | பொருளாதாரச் சார்பற்ற நடவடிக்கைகள் உணர்வு பூர்வமாக மகிழ்ச்சியினை அனுபவிக்க செய்யப்படுகிறது. |
54.
செல்தகு ஒப்பந்தம் (valid contact): சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய ஓர் உடன்படிக்கை சட்டப்படி செல்தகு ஒப்பந்தம் ஆகும்.எடுத்துக்காட்டு S என்பவர் தன்னுடைய மகிழ்வுந்தை ரூ 5,00,000-க்கு T என்பருக்கு விற்பனை செய்ய ஒப்புகொள்கிறார்.அதேபோல T என்பரும் மகிழ்வுந்தை வாங்க ஒப்புக்கொள்கிறார்.இது ஒரு செல்தகு ஒப்பந்தமாகும்.
செல்லாத ஒப்பந்தம் 2(j) (void contact) : சட்டத்தால் நடைமுறைப்படுத்த முடியாத ஓப்பந்தம் செல்லாத ஓப்பந்தம் ஆகும்/செல்லக்கூடிய ஓப்பந்தத்தின் இன்றியமையாத கூறுகள் இதில் இல்லை .எடுத்துக்காட்டு கடத்தல் பொருட்கள் வாங்க அல்லது விற்க மேற்கொள்ளும் ஓப்பந்தம் செல்லாத ஓப்பந்தமாகும்.
தவிர்க்கும் ஓப்பந்தம் 2(j) (voidable contact) : உடன்பாட்டில் ஈடுபட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் விருப்பமபடி, ஆனால் மருதரப்பினரின் விருப்பமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.இந்த ஓப்பந்தம் வலுக்கட்டாயம் , தகாத செல்வாக்கு , மோசடி திரித்து கூறுதல் அல்லது தவறு ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் தவர்க்கு ஓப்பந்தங்களாகின்றன.
சட்டத்துக்கு முரணான ஒப்பந்தம் (Illegal contact ) : இது சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஓப்பந்தமாகும்.சட்டத்தை மீறுகிற தன்மையுடைய அல்லது ஒழுக்ககேடான அல்லது அடிப்படை பொது கொள்கை விதியை மீறுகிற ஓப்பந்தம்.சட்டத்துக்கு முரணான ஓப்பந்தமாகும். சட்டத்துக்கு முரணான ஓப்பந்தம் செல்லா ஓப்பந்தம் செல்லாத ஓப்பந்தம் ஆகும்,ஆனால் செல்லாத ஓப்பந்தம் எல்லாம் சட்டத்துக்கு முரணான ஓப்பந்தம் அல்ல.
அ) சட்டத்துக்குமுரணான ஓப்பந்தம் போன்று செல்லாத ஓப்பந்ததிற்கு அந்த மாதிரியான தண்டனைகள் இல்லை.
ஆ) சட்டத்திற்கு முரணான ஓப்பந்தம் தொடக்கத்தலிருந்தே அவை செல்லாத ஓப்பந்தங்கள் ஆகும்.சில சமயங்களில் செல்தகு ஓப்பந்தங்கள் ஆகும்சில சமயங்களில் செல்தகு ஓப்பந்தங்கள் பின்னர் செல்லாத ஓப்பந்தங்களாக மாறலாம்.
நடைமுறைப்படுத்த முடியாத ஓப்பந்தங்கள் Unenforceable contact : இது சட்டத்தால் செயல்படுத்த முடியாத குறைபாடுடை ய ஓப்பந்தங்கள் ஆகும்.எடுத்துக்காட்டக எழுத்து வடிவின்மை ,முறையான முத்திரைகள் இன்மை போன்றவை.நடைமுறைப்படுத்த முடியாத ஓப்பந்தங்கள் அதிலுள்ள நபர்களால் செல்லக்கூடிய ஓப்பந்தம் ஆகலாம் ஆனால் இதை நீதிமன்றமானது கட்டயப்படுத்த முடியாது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards