11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/02/2019
11-STD REVISION TEST 2019
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
இருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________
குறிப்பேட்டுப் பதிவுகள்
பேரேட்டுக் கணக்குகள்
இறுதிக் கணக்குகள்
இலாபநட்டக் கணக்குகள்
2.
கணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________
தற்கால தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட மாற்றம்
சந்தையில் ஏற்பட்ட நிறைவுப் போட்டி
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
3.
ரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு.
ரூ 8,000
ரூ 8,500
ரூ 500
ரூ 16,500
4.
விதிகளைத் தெரியாமலோ அல்லது மீறியோ தவறாகப் பதிவு செய்வதால் ஏற்படும் பிழைகள் _________________ எனப்படும்.
விதிப்பிழைகள்
செய்பிழைகள்
பிழைகள்
இவற்றில் எதுவுமில்லை
5.
குறிப்பேட்டிலுள்ள பதிவினை இணைக்கக் கூடிய பேரேட்டுப் பகுதி _______.
பே.ப.எ.பத்தி
கு.ப.எ.பத்தி
விவரப் பத்தி
குறிப்புப் பத்தி
6.
கணினி அமைப்பானது ________ முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
7.
நிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழிக்கப்படுகிறது?
இலாபத்திலிருந்து
முதலிலிருந்து
எடுப்பிலிருந்து
கை ரொக்கத்திலிருந்து
8.
நிகர இலாபம்.
முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்
9.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?
அணுகக் குறிமுறை
தொடர்ச்சியான குறிமுறை
தொகுப்புக் குறிமுறை
மதியயோட்டுக் குறிமுறை
10.
நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
ஓர் நடப்புச் சொத்து
ஓர் நீர்மைச் சொத்து
புலனாகும் சொத்து
புலனாகாச்சொத்து
11.
வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்
வருவாயினச் செலவுகள்
முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்
நீள்பயன் வருவாயினச் செலவுகள்
முதலினச் செலவுகள்
12.
அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
கொள்ள்முதல் கணக்கு
அறைகலன் கணக்கு
அதியமான் கணக்கு
இவை ஏதுமில்லை
13.
நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?
இலாப நட்டக் கணக்கு
நிலைச் சொத்து கணக்கு
தேய்மானக் கணக்கு
வங்கி கணக்கு
14.
பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது
வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்
பற்றுக் குறிப்பு
வரவு குறிப்பு
இடாப்பு
ரொக்க இரசீது
16.
பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?
இருப்பு முறை
மொத்தத் தொகை முறை
மொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை
(அ), (ஆ) மற்றும் (இ)
17.
ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
கூட்டுதல்
எடுத்தெழுதுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்புக் கட்டுதல்
18.
இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு
முக்கியத்துவ மரபு
பண மதிப்பீட்டுக் கருத்து
முன்னெச்சரிக்கை மரபு
நிகழ்வு தீர்வு / கருத்து
19.
சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?
பேரேட்டில் விற்பனைக் கணக்கு
பேரேட்டில் கொள்முதல் கணக்கு
பேரேட்டில் முதல் கணக்கு
பேரேட்டில் ரொக்கக் கணக்கு
20.
பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது
நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
21.
தேய்மானம் என்றல் என்ன?
22.
தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?
23.
"இரட்டைதன்மை கருத்து" பற்றி குறிப்பு வரைக.
24.
வன்பொருள் என்றால் என்ன?
25.
முதலின வரவு என்றால் என்ன?
26.
தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?
27.
பகுதி விடுபிழை என்றால் என்ன?
28.
கொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன?
29.
பின்வருனவற்றிக்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.
(அ) சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்.
(ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்.
30.
ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?
31.
கீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.
| அ] | ரொக்கக் க/கு | ப |
| அறைகலன் க/கு | ||
| ஆ] | வாடகை க/கு | ப |
| ரொக்கக் க/கு | ||
| இ] | வங்கி க/கு | ப |
| ரொக்கக் க/கு | ||
| ஈ) | தமிழ்ச் செல்வி க/கு | ப |
| விற்பனை க/கு |
32.
31.12.2007 ற்கான கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து திரு.கெளதம் அவர்களின் வங்கி சரிகட்டும் பட்டயலைத் தயாரிக்கவும்.
[அ] ரொக்க ஏட்டின்படி இருப்பு ரூ 12,500
[ஆ] அளித்த காசோலைகளில் இதுவரை செலுத்துகைக்கு முன்னிறுத்தப்படாதவை ரூ 1,900
[இ] வங்கியில் செலுத்திய காசோலைகளில் வசூலித்து வரவு வைக்கப்படாதவை ரூ 1,200
[ஈ] வங்கி செலுத்திய காப்பீட்டுக் கட்டணம் ரூ 500
[உ] வாடிக்கையாளர் நேரடியாக வங்கிக்கு செலுத்தியது ரூ 800
[ஊ] வங்கி வசூலித்த முதலீடு மீதான வட்டி ரூ 200
[எ] வங்கிக் கட்டணம் ரூ 100
33.
பின்வரும் சாய்ஃப் என்பவரின் இருப்பாய்விலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| நிலம் | 40,000 | கொள்முதல் திருப்பம் | 15,000 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 3,300 |
| இயந்திரம் | 66,000 | முதல் | 1,50,000 |
| கொள்முதல் | 1,30,000 | விற்பனை | 2,20,000 |
| கூலி | 35,000 | கடனீந்தோர் | 60,000 |
| வட்டி கொடுத்தது | 13,000 | ||
| ரொக்கம் | 2,300 | ||
| கடனாளிகள் | 80,000 | ||
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 15,000 | ||
| அலுவலக வாடகை செலுத்தியது | 12,700 | ||
| அறைகலன் | 3,000 | ||
| எடுப்புகள் | 5,000 | ||
| விற்பனைத் திருப்பம் | 10,000 | ||
| 4,52,000 | 4,52,000 |
இறுதிச் சரக்கிருப்பு ( 31.12.2017) ரூ. 14,500.
34.
மனோஜின் 2016, மார்ச் 31 ஆம் நாளளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
| பற்று இருப்பு | ரூ | வரவு இருப்பு | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் |
25,000 | பயணச் செலவுகள் | 500 |
| சம்பளம் | 5,600 | எழுதுபொருள் செலவு | 75 |
| காப்பீடு | 200 | வாடகை | 650 |
| அளித்த தள்ளுபடி | 400 | கடன்மீது வட்டி | 225 |
| பெற்ற தள்ளுபடி | 300 | பழுதுபார்ப்புச் செலவுகள் | 125 |
| பெற்ற கழிவு | 100 | அலுவலகச் செலவுகள் | 55 |
| விளம்பரம் | 450 | பொது செலவுகள் | 875 |
| அச்சு செலவுகள் | 375 | தபால் செலவுகள் | 175 |
சரிக்கட்டுதல்கள்:
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 400
(ii) முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ 50
(iii) கழிவுப் பெற வேண்டியது ரூ 100
35.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரிதாளைக் கொண்டூ நேர்க்கோட்டு முறையில் தேய்மானத்தைக் கணக்கிடவும்
| A | B | C | D | E | F | |
|---|---|---|---|---|---|---|
| 1 | Asset | Cost of purchase | Installation charge | Transportation charge | Salvage value | Life in years |
| 2 | Machinery | 200000 | 20000 | 5000 | 25000 | 10 |
| 3 | Furniture | 50000 | 4000 | 2000 | 5000 | 8 |
36.
சுதா நிறுமத்தின் வங்கி அறிக்கையானது 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று ரூ 10,000 மேல்வரைப்பற்றினை காட்டியது. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க.
(அ) 2017 டிசம்பர், 30 அன்று வங்கியில் செலுத்திய காசோலை ரூ15,000 வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்படவில்லை.
(ஆ) 2017 டிசம்பர், 31 அன்று வங்கியால் பற்று வைக்கப்பட்ட நீண்டகால கடன் மீதான வட்டி ரூ 500. ஆனால் சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்பட்படவில்லை.
(இ) 2017 டிசம்பர், 24 அன்று ரூ 550-க்கான காசோலை விடுக்கப்பட்டு வங்கியரால் செலுத்தப்பட்ட ரூ 505 என ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியில் பதியப்பட்டது.
(ஈ) 2017 டிசம்பர், 27 அன்று விடுத்த காசோலை ரூ 200 இரு முறை ரொக்க ஏட்டில் பதியப்பட்டது.
(உ) ரொக்க வைப்பு ரூ 2,598 வங்கியால் ரூ 2,589 எனப் பதியப்பட்டது.
(ஊ) பணம் வைப்பு இயந்திரம் வாயிலாக 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று வாடிக்கையாளரால் செலுத்தப்பட்ட ரூ 2,000 சுதா நிறுமத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.
(எ) மேல்வரை மேல்வரை மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ.600 சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.
(ஏ) 2017 டிசம்பர், 29 அன்று விடுத்த இரு காசோலைகள் முறையே ரூ 500 மற்றும் ரூ 700 -இல் முதல் காசோலை மட்டுமே 2017 டிசம்பர், 31 -க்கு முன் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
37.
ஜனவரி 1, 2016 அன்று ரூ. 25,000க்கு சொத்து ஒன்று வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட வேண்டும். அச்சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 1,000. கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கப்பெறுகின்றன. தேய்மான விகிதம் கணக்கிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
38.
பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
(i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
(ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
(iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
(iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
(v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.
39.
கீழ்க்காணும் பதிவுகளைத் திருத்துக
| விவரம் | பே.ப. எ | பற்று ரூ | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | கொள்முதல் க/கு | ப | 5,000 | ||
| ரொக்கக் க/கு | 5,000 | ||||
| (ரொக்கம் செலுத்தி அறைகலன் வாங்கியது) | |||||
| ஆ | நிலா க/கு | ப | 8,000 | ||
| ரொக்கக் க/கு | 8,000 | ||||
| (நிலாவுக்கு சம்பளம் கொடுத்தது) | |||||
| இ | குறளமுது க/கு | ப | 2,000 | ||
| ரொக்கக் க/கு | 2,000 | ||||
| (குறளமுதுக்கு வாடகை கொடுத்தது) | |||||
| ஈ | ரொக்கக் க/கு | ப | 9,000 | ||
| விற்பனைக் க/கு | 9,000 | ||||
| (ரொக்கத்திற்கு அறைகலன் விற்றது) | |||||
| உ | ரொக்கக் க/கு | ப | 6,0000 | ||
| கோதைமலர்க/கு | 6,000 | ||||
| (கோதைமலருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது) |
40.
ராஜா என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து அவற்றைப் பேரேட்டில் எடுத்து எழுதுக.
| 2018 மார்ச் 1 | செந்தில் என்பவருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.9,000 |
| 5 | முரளி என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது | 4,500 |
| 9 | ரொக்க விற்பனை | 6,000 |
| 18 | மணியிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது | 3,200 |
| 23 | முரளியின் கணக்கு முழுவதுமாக தீர்க்கப்பட்டு அவரிடமிருந்து தொகை பெறப்பட்டது |
4,000 |
41.
பின்வரும் விபரங்களைக் கொண்டு நாலந்தா புத்தகக் கடையின் துணை ஏடுகளை தயார் செய்யவும்.
| 2017 | |
| டிசம்பர் 1 | உமாதேவியிடமிருந்து கடனுக்கு வாங்கியது |
| ஒன்று ரூ. 80 வீதம் 100 வணிகப் புள்ளியியல் புத்தகங்கள் | |
| ஒன்று ரூ. 150 வீதம் 100 கணக்குப்பதிவியல் புத்தத்தகங்கள் | |
| டிசம்பர் 7 | ஸ்ரீதேவியிடம் கடனுக்கு விற்றது |
| ஒன்று ரூ. 90 வீதம் 240 வணிகப்புள்ளியியல் புத்தகங்கள் | |
| ஒன்று ரூ. 170 வீதம் 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள் | |
| டிசம்பர் 10 | சுபாவிடமிருந்து வாங்கியது |
| ஒன்று ரூ. 80 வீதம் 40 பொருளாதாரம் புத்தகங்கள் | |
| கழிக்க: வியாபாரத்தள்ளுபடி 15% | |
| டிசம்பர் 15 | சேதமடைந்திருந்த 10 கணக்குப்பதிவியல் புத்தகங்களை உமாதேவியிடம் திருப்பி, இதற்கு பணம் பெறப்படவில்லை |
| டிசம்பர் 18 | டிசம்பர் 18 குப்தாவிற்கு கடனுக்கு விற்றது |
| ஒன்று ரூ. 95 வீதம் 200 பொருளாதாரம் புத்தகங்கள் | |
| டிசம்பர் 26 | சுபாவிற்கு 5 பொருளாதாரம் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன |
42.
சோழன் என்பவரது முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவுசெய்க.
| 2017 ஏப்ரல் | ரூ | |
| 1 | சோழன் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | 50,000 |
| 2 | வங்கியில் நடப்புக் கணக்கு துவங்கியது | 32,000 |
| 10 | ரொக்க விற்பனை | 14,000 |
| 11 | வங்கியில் ரொக்கம் செலுத்தியது | 10,000 |
| 19 | அலுவலகத் தேவைக்காக கணிப்பொறி காசோலை மூலம் வாங்கியது | 24,000 |
| 22 | வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது | 9,000 |
| 25 | காசோலை மூலம் சரக்குகள் வாங்கியது | 7,600 |
| 27 | வங்கி மேல்வரைப் பற்றிற்கான வட்டி, வங்கி எடுத்துக்கொண்டது | 350 |
| 28 | அலுவலக பணியாளர்கள் சம்பளத்தை மின்னணு தீர்வை முறை மூலம் செலுத்தியது | 30,000 |
| 30 | வீட்டுச் செலவினங்களுக்காக ரொக்கம் எடுத்துக் கொண்டது | 6,500 |
43.
சென்னையிலுள்ள அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.12.2017ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| கட்டடம் | 20,000 | போக்குவரத்து செலவுகள் | 3,500 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000 | சம்பளம் | 5,600 |
| கடனாளிகள் | 20,000 | முதல் | 40,000 |
| வங்கி ரொக்கம் | 16,800 | அறைகலன் | 10,000 |
| காப்பீடு செலுத்தியது | 1,600 | மோட்டார் வாகனம் | 5,000 |
| வாடகைப் பெற்றது | 5,000 | புனையுரிமை | 2,000 |
| நன்கொடை அளித்தது | 2,500 | நற்பெயர் | 3,000 |
| பெற்றக் கடன் | 42,000 |
44.
வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.
| (i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள் | ரூ 20,000 |
| (ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு | ரூ 5,000 |
| (iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது | ரூ 2,000 |
| (iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு | ரூ 500 |
| (v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது | ரூ 1,500 |
| (vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது | ரூ 1,000 |
| (vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது | ரூ 100 |
45.
31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.
| ரூ | |
|---|---|
| தொடக்க சரக்கிருப்பு | 5,700 |
| கொள்முதல் | 1,58,000 |
| கொள்முதல் திருப்பம் | 900 |
| விற்பனை | 2,62,000 |
| விற்பனை திருப்பம் | 600 |
இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.
46.
கணக்கியலின் நோக்கங்கள் யாவை?
47.
வாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.
48.
தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
49.
கீழ்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறிக
| விவரம் | ||
|---|---|---|
| i) | ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 10,000 |
| ii) | செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 5,000 |
| iii) | விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 1,000 |
| iv) | வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது | 500 |
| v) | வங்கி பற்றுவைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி | 1,000 |
| vi) | வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 |
50.
விதிப்பிழையைப் பற்றிய குறிப்பை எடுத்துக்காட்டுடன் எழுதவும்.
51.
2017 ஏப்ரல் மாதத்திற்கான பின்வரும் நடவடிக்கைகளை பிரதீப் என்பவரின் தனிப்பத்தி ஏட்டில் பதியவும்.
| ஏப்ரல் | ரூ | |
| 1 | வணிகம் ரொக்கத்துடன் துவங்கியது | 27,000 |
| 5 | ரொக்கத்திற்கு சரக்குகள் வாங்கியது | 6,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்குகள் விற்றது | 11,000 |
| 13 | ரொக்கம் வங்கியில் செலுத்தியது | 5,000 |
| 14 | சங்கீதாவிற்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 9,000 |
| 17 | பிரீத்தி என்பவருக்கு கடனாகச் சரக்கு விற்றது | 13,000 |
| 21 | ரொக்கம் செலுத்தி எழுதுபொருள் வாங்கியது | 200 |
| 25 | முருகனுக்கு ரொக்கம் செலுத்தியது | 14,000 |
| 26 | ரொக்கமாக கழிவு கொடுத்தது | 700 |
| 29 | அலுவலக தேவைக்காக வங்கியிலிருந்து எடுத்தது | 4,000 |
| 30 | காசோலை மூலம் வாடகை செலுத்தியது | 3,000 |
52.
53.
ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.
54.
நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?
1.
(c)
இறுதிக் கணக்குகள்
2.
(c)
இவை இரண்டும்
3.
(a)
ரூ 8,000
4.
(a)
விதிப்பிழைகள்
5.
(b)
கு.ப.எ.பத்தி
6.
(a)
மூன்று
7.
(b)
முதலிலிருந்து
8.
(b)
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
9.
(a)
அணுகக் குறிமுறை
10.
(d)
புலனாகாச்சொத்து
11.
(d)
முதலினச் செலவுகள்
12.
(c)
அதியமான் கணக்கு
13.
(b)
நிலைச் சொத்து கணக்கு
14.
(d)
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
(c)
இடாப்பு
16.
(d)
(அ), (ஆ) மற்றும் (இ)
17.
(d)
இருப்புக் கட்டுதல்
18.
(c)
முன்னெச்சரிக்கை மரபு
19.
(d)
பேரேட்டில் ரொக்கக் கணக்கு
20.
(d)
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
21.
காலப்போக்கு மற்றும் பயன்பாடு காரணமாக நிலைச்சொத்துக்களின் மதிப்பில் உண்டாகும் படிப்படியான குறைவே தேய்மானம் எனப்படும்.
22.
1. முந்தைய ஆண்டு விற்பனையாகாமல் எஞ்சியுள்ள சரக்கிருப்பு நடப்பாண்டின் தொடக்கச் சரக்கிருப்பாகும்.புதிதாக தொடங்கப்படும் வணிகத்தில் தொடக்கச் சரக்கிருப்பு இருப்பதில்லை.
2. தொடக்க சர்க்கிருப்பு அந்த ஆண்டில் விற்பனைச் செய்ய்ப்படுவதால் தொடக்கச் சரக்கிருப்பின் அடக்க விலை வியாபராக்கணக்கில் சேர்க்கப்படுகிறது
23.
1. இக்கருத்தின்படி ஒவ்வொரு நடவடிக்கையும் அல்லது நிகழ்வும் இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்கும்.உதாரணமாக ஒரு நிறுவனம் ஒரு சொத்தை வாங்கும்போது அதற்கான மறுபயனை ரொக்கமாக செலுத்த வேண்டும்.இதில் சொத்து என்ற பலன் பெரும் போது ரொக்கம் என்ற பலன் தரப்படுகிறது.
2 இக்கருத்து, ஒவ்வொரு பற்றுத் தன்மைக்கும் தொடர்புடைய மற்றும் நிகரான வரவு இருப்பதாய் உணர்த்துகிறது.இதுவே இரட்டைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குகிறது.
3. இக்கருத்திலிருந்தே அடிப்படை கணக்கியல் சமன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.அதாவது முதல் பொறுப்புகள் - சொத்துக்கள்.
24.
கணினியின் இயற்கூறுகளை உள்ளடக்கியது அதன் வன்பொருளாகும். முழுமையான கணினி அமைப்பை உருவாக்குவதற்கான உள்ளீட்டு சாதனங்கள் மற்றும் வெளியீட்டு சாதனங்களையும் வன்பொருள் கொண்டிருக்கும்.
25.
(i) வருவாயினத்தைச் சாராத வரவுகள் அனைத்தும் முதலின வரவு எனப்படும்.
(ii) இது திரும்பத் திரும்ப நிகழாதத் தன்மையுடையது. பெறப்பட்ட தொகை பொதுவாக கணிசமானதாக இருக்கும்.
(iii) இவ்வகை வரவுகள் இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
26.
கீழ்கண்டவைகள் தேய்மானம் கணக்கிடுவதற்கான பல்வேறு முறைகள்:
(i) நேர்க்கோட்டு முறை அல்லது நிலைத்தவணை முறை அல்லது ஆரம்ப அடக்கவிலை முறை.
(ii) குறைந்து செல் மதிப்பு முறை அல்லது குறைந்து செல் இருப்பு முறை
(iii) ஆண்டுகளின் இலக்கங்களின் கூட்டுத்தொகை முறை
(iv) இயந்திர மணி நேர வீத முறை
(v) வெறுமையாதல் முறை
(vi) ஆண்டுத் தொகை முறை
(vii) மறுமதிப்பீட்டு முறை
(viii) ஈடு நிதி முறை
(ix) காப்பீட்டு முனைம முறை
27.
கணக்காளர் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்யத் தவறினால் அது பகுதி விடு பிழையாகும்.இந்தப் பிழை பொதுவாக பேரேட்டில் எடுத்து எழுதும் போது நிகழும். இப்பிழை ஒரு கணக்கை மட்டுமே பாதிக்கும்.
28.
1. கொள்முதல் திருப்ப ஏடு ஒரு துணை ஏடாகும். இதில், ஏற்கனவே கொள்முதல் செய்து பெறப்பட்ட சரக்குகளை, ரொக்கம் உடனடியாக பெறாமல் சரக்கு அளித்தவருக்கே திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.
2. சரக்குகள் அளித்தவருக்கே திரும்பச் செல்வதால், வெளித்திருப்பம் எனப்படுகின்றன.
3. இந்த ஏடு வெளித்திருப்ப ஏடு அல்லது வெளிச்செல் திருப்ப குறிப்பேடு என்று அழைக்கப்படுகிறது.
29.
சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்:
கடனீந்தோருக்கு ரொக்கம் செலுத்தியது ரூ.20,000
1. கடனீந்தோர் பணம் செலுத்தியது - பொறுப்புகள் குறையும்
2. ரொக்கம் வெளிசெலுத்தல் - சொத்துக்கள் குறையும்
ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்:
1. இயந்திரம் உள்வருகிறது - சொத்து அதிகரித்தல்
2. ரொக்கம் வெளிச்செல்கிறது - சொத்துக்கள் குறையும்
30.
(1) குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னரோ சரியாக தொகையை திரும்பச் செலுத்தும் நபர்களுக்கு கலங்க கூடிய தள்ளுபடி ரொக்கத் தள்ளுபடி ஆகும்.
(2) கடனீந்தோருக்கு தள்ளுபடி அளித்தது (நட்டம்) என்றும் மற்றும் கடனை திரும்பச் செலுத்தும் கடனாளிக்கு தள்ளுபடி பெற்றது (ஆதாயம்) என்றும் எடுத்துக் கொள்ளப்டுகிறது.
31.
அ) அறைகலன் விற்றது.
ஆ) வாடகை செலுத்தியது.
இ) வங்கியில் செலுத்தியது
ஈ) தமிழ்ச் செல்வி என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது.
32.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி இருப்பு | 12,500 | |
| கூட்டுக: | ||
| அளித்த காசோலைகளில் இதுவரை | ||
| செலுத்துகைக்கு முன்னிறுத்தப்படாதவை | 900 | |
| வாடிக்கையாளர் நேரடியாக வங்கியில் செலுத்தியது | 800 | |
| வங்கி வசூலித்த முதலீடு மீதான வட்டி | 200 | 1,900 |
| 14,400 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்திய காசோலைகளில் | ||
| வசூலித்து வரவு வைக்கப்படாதவை | 1,200 | |
| வங்கியில் செலுத்திய காப்பீட்டுக் கட்டணம் | 500 | |
| வங்கிக் கட்டணம் | 100 | 1,800 |
| செல்லேட்டின்படி வங்கி இருப்பு | 12,600 |
33.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 | விற்பனை | 2,20,000 | ||
| கொள்முதல் | 1,30,000 | கழிக்க : விற்பனை திருப்பம் | 10,000 | 2,10,000 | |
| கழிக்க : கொள்முதல் திருப்பம் | 15,000 | 1,15,000 | இறுதிச் சரக்கிருப்பு | 14,500 | |
| கூலி | 35,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | |||||
| (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றுவது ) | 34,500 | ||||
| 2,24,500 | 2,24,500 | ||||
| வட்டி கொடுத்தது | 13,000 | மொத்த இலாபம் கீ/கொ | 34,500 | ||
| அலுவலக வாடகை | 12,700 | ||||
| நிகர இலாபம் | |||||
| (முதல் கணக்கிற்கு மாற்றுவது ) | 8,800 | ||||
| 34,500 | 34,500 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துக்கள் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 1,50,000 | நிலம் | 40,000 | ||
| கூட்டுக : நிகர இலாபம் | 8,800 | இயந்திரம் | 66,000 | ||
| 1,58,800 | ரொக்கம் | 2,300 | |||
| கழிக்க : எடுப்புகள் | 5,000 | 1,53,800 | கடனாளிகள் | 80,000 | |
| செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 7,000 | பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு | 15,000 | ||
| கடனீந்தோர் | 60,000 | அறைகலன் | 3,000 | ||
| இறுதி சரக்கிருப்பு | 14,500 | ||||
| 2,20,800 | 2,20,800 |
34.
| விவரம் | தொகை ரூ. |
தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
தொகை ரூ. |
|---|---|---|---|---|---|
| சம்பளம் | 5,600 | மொத்த | |||
| இலாபம் | 25,000 | ||||
| கூட்டுக: | |||||
| கொடுபட | பெற்ற | ||||
| வேண்டியது | 400 | 6,000 | தள்ளுபடி | 300 | |
| காப்பீடு | 200 | பெற்ற கழிவு | 100 | ||
| பெற | |||||
| அளித்த | 400 | வேண்டிய | 100 | 200 | |
| தள்ளுபடி | கழிவு | ||||
| விளம்பரம் | 450 | ||||
| அச்சு செலவுகள் | 375 | ||||
| பயணச் | |||||
| செலவுகள் | 500 | ||||
| எழுது பொருள் | |||||
| செலவு | 75 | ||||
| வாடகை | 650 | ||||
| கழிக்க: | |||||
| முன்கூட்டிச் | |||||
| செலுத்தியது | 50 | 600 | |||
| கடன் மீது வட்டி | 225 | ||||
| பழுதுபார்ப்புச் | |||||
| செலவுகள் | 125 | ||||
| அலுவலக | |||||
| செலவுகள் | 55 | ||||
| பொதுச் | |||||
| செலவுகள் | 875 | ||||
| தபால் | |||||
| செலவுகள் | 175 | ||||
| நிகர இலாபம் | 15,445 | ||||
| 25,500 | 25,000 |
35.
செயல்முறை
(i) MS-Excel ல் புதிய விரிதாளை திறக்கவும்
(ii) எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உள்ளீடு செய்யவும்
(iii) அறை G1ல் ‘Total Cost’ எனவும் அறை H1 ல் ‘ Annual Depreciation’ எனவும் உள்ளீடு செய்யவும்
(iv) அறை G2 ல் கீழ்க்கண்ட சூத்திரத்தின்படி ம�ொத்த அடக்கவிலையை கணக்கிடவும்
= sum (B2: D2), அறை G3ல் இந்த சூத்திரத்தை நகலெலெடுக்கவும்
(v) அறை H2ல் கீழ்க்கண்ட சூத்திரத்தின்படி ஆண்டுத் தேய்மானத்தைக் கணக்கிடவும்
=SLN (G2,E2,F2)
அறை H3ல் இந்த சூத்திரத்தை நகலெலெடுக்கவும்
| A | B | C | D | E | F | G | H | |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | Asset | Cost of purchase | Installation charge | Transportation charge | Salvage value | Life in years | Total cost | Annual depreciation |
| 2 | Machinery | 200000 | 20000 | 5000 | 25000 | 10 | 225000 | 20,000 |
| 3 | Furniture | 50000 | 4000 | 2000 | 5000 | 8 | 56000 | 6,375 |
36.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று (பற்று இருப்பு) | 10,000 | |
| கூட்டுக: | ||
| காசோலை விடுத்தது ரொக்க ஏட்டில் இருமுறை பதியப்பட்டது | 200 | |
| வங்கியில் செலுத்தியது ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 2,000 | |
| முன்னிலைப்படுத்தப்படா்படாத காச�ோலை | 700 | 2,900 |
| 12,900 | ||
| கழிக்க: | ||
| செலுத்திய வங்கியால் வரவு வைக்கப்பட்படவில்லை | 15,000 | |
| நீண்டகால கடன் மீதான வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 500 | |
| விடுத்த காசோலையின் தொகை ரொக்க ஏட்டில் குறைவாகப் பதியப்பட்டது (550 – 505) | 45 | |
| ரொக்க வைப்பு வங்கி அறிக்கையில் குறைவாக பதியப்பட்டது (2598 – 2589) | 9 | |
| வங்கி மேல்வரைப்பற்று மீதான வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 600 | |
| 16,154 | ||
| ரொக்க ஏட்டின் படி சாதகமான இருப்பு | -3,254 |
37.

\(={25000-1000\over 10}={24000\over 10}\)
=ரூ. 2,400

\(={2400\over 25000}\times 100=\) 9.6%
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2016 ஜனவரி 1 | இயந்திரம் க/கு | ப | 25000 | ||
| வங்கி க/கு | 25000 | ||||
| (இயந்திரம் வாங்கியது ) | |||||
| டிசம் 31 | தேய்மானம் க/கு | ப | 2400 | ||
| இயந்திரம் க/கு | 2400 | ||||
| (தேய்மானம் நீக்கியது) | |||||
| டிசம் 31 | இலாபநட்டக் க/கு | ப | 2400 | ||
| தேய்மானம் க/கு | 2400 | ||||
| (தேய்மானம் இலாபநட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| 2017 டிசம் 31 | தேய்மானம் க/கு | ப | 2400 | ||
| இயந்திரம் க/கு | 2400 | ||||
| டிசம் 31 | இலாபநட்டம் க/கு | ப | 2400 | ||
| தேய்மானம் க/கு | 2400 | ||||
| (தேய்மானம் இலாபநட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
38.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000. | வருவாயினச் செலவு |
| (ii) | வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000. | முதலினச் செலவு |
| (iii) | முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000. | முதலினச் செலவு |
| (iv) | கழிவுப் பெற்றது ரூ 30,000. | வருவாயினச் செலவு |
| (v) | புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400. | முதலினச் செலவு |
39.
| விவரம் | பே.ப. எ | பற்று ரூ | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | அறைகலன் க/கு | ப | 5,000 | ||
| கொள்முதல் க/கு | 5,000 | ||||
| (அறைகலன் வாங்கியது தவறாககொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஆ | சம்பளக் க/கு | ப | 8,000 | ||
| நிலா க/கு | 8,000 | ||||
| (நிலாவுக்கு சம்பளம் செலுத்தியது தவறாக நிலா கணக்கில் பற்று வைத்தது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| இ | வாடகை க/கு | ப | 2,000 | ||
| குறளமுது க/கு | 2,000 | ||||
| (குறளமுதுக்கு வாடகை செலுத்தியது தவறுதலாக குறளமுது கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| ஈ | விற்பனைக் க/ கு | ப | 9,000 | ||
| அறைகலன் க/கு | 9,000 | ||||
| (ரொக்கத்திற்கு அறைகலன் விற்றது தவறாக விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| உ | கோதைமலர் க/கு | ப | 6,0000 | ||
| விற்பனைக் க/கு | 6,000 | ||||
| (கோதைமலருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது தவறாக கோதைமலர் கணக்கில் வரவு வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது.) |
40.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2018 | தொடக்கக் க/கு | ப | 9,000 | ||
| மார்ச் 1 | விற்பனை க/கு (ரொக்க விற்பனை) |
9,000 | |||
| 5 | முரளி க/கு | ப | 4,500 | ||
| விற்பனை க/கு (கடன் விற்பனை) |
4,500 | ||||
| 9 | ரொக்கக் க/கு | ப | 6,000 | ||
| விற்பனை க/கு (ரொக்க விற்பனை) |
6,000 | ||||
| 18 | கொள்முதல் க/கு | ப | 3,200 | ||
| மணி க/கு (கடன் கொள்முதல்) |
3,200 | ||||
| 23 | ரொக்கக் க/கு | ப | 4,000 | ||
| அளித்த தள்ளுபடி க/கு | ப | 500 | |||
| முரளி க/கு (முரளியின் கணக்கு தீர்க்கப்பட்டது) |
4,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | விற்பனை க/கு | 9,000 | 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 19,000 | ||
| 9 | விற்பனை க/கு | 6,000 | |||||
| 23 | முரளி க/கு | 4,000 | |||||
| 19,000 | 19,000 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 19,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 19,500 | 2018 மார்ச் 1 | ரொக்கக் க/கு | 9,000 | ||
| 5 | முரளி க/கு | 4,500 | |||||
| 9 | ரொக்கக் க/கு | 6,000 | |||||
| 19,500 | 19,500 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 19,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | விற்பனை க/கு | 4,500 | 2018 மார்ச் 23 | ரொக்கக் க/கு | 4,000 | ||
| 23 | அளித்த தள்ளுபடி | 500 | |||||
| 4,500 | 4,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 18 | மணி க/கு | 3,200 | 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 3,200 | ||
| 3,200 | 3,200 | ||||||
| 2018 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 3,200 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 3,200 | 2018 மார்ச் 18 | கொள்முதல் க/கு | 3,200 | ||
| 3,200 | 3,200 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 3,200 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 23 | முரளி க/கு | 500 | 2018 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 500 | ||
| 500 | 500 | ||||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 500 |
41.
| நாள் | விவரம் | உள்வரு இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 டிச 1 | உமாதேவி | ||||
| 100 வணிகப் புள்ளியியல் புத்தகங்கள் ரூ. 80வீதம் | 8,000 | ||||
| 100 கணக்குப் பதிவியல் புத்தகங்கள் ரூ. 150 வீதம் | 15,000 | 23,000 | |||
| டிச10 | சுபா | ||||
| 40 பொருளாதாரம் புத்தகங்கள் ரூ. 80வீதம் | 3,200 | ||||
| கழிக்க: வியாபாரத் தள்ளுபடி 15% | 480 | 2,720 | |||
| கொள்முதல் க/கு ப | 25,720 | ||||
| நாள் | விவரம் | ப.கு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | |||||
| 2017 டிச 15 | உமாதேவி | |||||
| 10 கணக்குப் பதிவியல் புத்தகங்கள் ரூ.150 வீதம் | 1,500 | சேதமடைந்தது | ||||
| 26 | சுபா | |||||
| 5 பொருளாதாரம் புத்தகங்கள் ரூ.80 வீதம் | 480 | |||||
| கழிக்க: 15% வியாபாரத் தள்ளுபடி | 72 | 408 | ||||
| கொள்முதல் திருப்பக் க/க வ | 1,908 | |||||
| நாள் | விவரம் | வெளிச்செல் இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 டிச 7 | ஸ்ரீதேவி | ||||
| 240 வணிக்கப்புள்ளியியல் புத்தகங்கள் ரூ.90வீதம் | 21,600 | ||||
| 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள் ரூ.170 வீதம் குப்தா | 42,500 | 64,100 | |||
| டிச 18 | 200 பொருளாதாரம் புத்தகங்கள் ரூ.95 வீதம் | 19,000 | |||
| விற்பனைக் க/கு வ | 83,100 | ||||
42.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | ||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அளித்த தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | பெற்ற தள்ளுபடி |
ரொக்கம் | வங்கி | ||||||||
| 2017 ஏப் 1 | சோழன் முதல் க/கு | 50,000 | 2017ஏப் 2 | வங்கி க/கு | 'எ' | 32,000 | |||||||
| 2 | ரொக்க க/கு | 'எ' | 32,000 | 11 | வங்கி க/கு | 'எ' | 10,000 | ||||||
| 10 | விற்பனை க/கு | 14,000 | 19 | கணிப்பொறி க/கு | 24,000 | ||||||||
| 11 | ரொக்க க/கு | 'எ' | 10,000 | 22 | ரொக்க க/கு | 'எ' | 9,000 | ||||||
| 22 | வங்கி க/கு | 'எ' | 9,000 | 25 | கொள்முதல் க/கு | 7,600 | |||||||
| 30 | இருப்பு கீ/கொ | 28,950 | 27 | வங்கி மேல்வரைப் பற்றிற்கான வட்டி | 350 | ||||||||
| 28 | சம்பளம் | 30,000 | |||||||||||
| 30 | எடுப்புகள் க/கு | 6,500 | |||||||||||
| 30 | இருப்பு கீ/இ | 24,500 | |||||||||||
| - | 73,000 | 70,950 | - | 73,000 | 70,950 | ||||||||
| மே 1 | இருப்பு கீ/கொ | 24,500 | மே 1 | இருப்பு கீ/கொ | 28,950 | ||||||||
43.
| வ. எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | கட்டடம் | 20,000 | ||
| 2 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000 | ||
| 3 | கடனாளிகள் | 20,000 | ||
| 4 | வங்கி ரொக்கம் | 16,800 | ||
| 5 | காப்பீடு செலுத்தியது | 1,600 | ||
| 6 | வாடகைப் பெற்றது | 5,000 | ||
| 7 | நன்கொடை அளித்தது | 2,500 | ||
| 8 | பெற்றக் கடன் | 42,000 | ||
| 9 | போக்குவரத்துச் செலவுகள் | 3,500 | ||
| 10 | சம்பளம் | 5,600 | ||
| 11 | முதல் | 40,000 | ||
| 12 | அறைகலன் | 10,000 | ||
| 13 | மோட்டார் வாகனம் | 5,000 | ||
| 14 | புனையுரிமை | 2,000 | ||
| 15 | நற்பெயர் | 3,000 | ||
| மொத்தம் | 90,000 | 90,000 |
44.
| நடவடிக்கைகள் | சொத்துக்கள் | வங்கிக்கடன் ரூ |
முதல் ரூ |
(பொ) | ||||
|---|---|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
வங்கி ரூ |
சரக்கிருப்பு ரூ |
கடனாளிகள் ரூ |
முன்கூட்டி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ |
||||
| இருப்பு கீ/கொ | +20,000 | +70,000 | +15,000 | +1,05,000 | ||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +15,000 | +1,05,000 | ||||
| (i) கடன் கொள்முதல் | +20,000 | +20,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +35,000 | +1,05,000 | +20,000 | |||
| (ii) திருப்பிய சரக்கு ரொக்கம் பெறவில்லை | -5,000 | -5,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +30,000 | +1,05,000 | +15,000 | |||
| (iii) கடனுக்கு சரக்கு விற்றது | -1,600 | +2,000 | +400 | |||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +28,400 | +2,000 | +1,05,000 | +15,000 | ||
| (iv) விற்பனைத் திருப்பம் ரூ 400 ரொக்கம் செலுத்தவில்லை | +400 | -500 | -100 | |||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +28,800 | +1,500 | +1,05,300 | +15,000 | ||
| (v) வாடிக்கையாளர் பணம் வைப்பு இயந்திரம் மூலம் பணம் செலுத்தியது | +1,500 | -1,500 | ||||||
| சமன்பாடு | +20,000 | +71,500 | +28,800 | +1,05,000 | +15,000 | |||
| (vi) இணைய வங்கி மூலம் காப்பீட்டு முனைமம் செலுத்தியது | -1,000 | -1,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,500 | +28,800 | +1,04,300 | +15,000 | |||
| (vii) முன்கூட்டி செலுத்திய காப்பீடு | +100 | |||||||
| சமன்பாடு | +20,000 | +70,500 | +28,800 | +1,04,400 | +15,000 | |||
45.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 5,700 | விற்பனை | 2,62,000 | ||
| கொள்முதல் | 1,58,700 | கழிக்க : திருப்பம் | 600 | 2,61,400 | |
| கழிக்க : திருப்பம் | 900 | 1,57,100 | சர்க்கிருப்பு | 86,000 | |
| மொத்த இலாபம் கீ/கொ | 1,84,600 | ||||
| (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட வேண்டியது ) | |||||
| 3,47,000 | 3,47,400 |
46.
கணக்கியலின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) நிதி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முறையான பதிவேடுகளை வைத்திருத்தல்.
(ii) வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.
(iii) வணிக நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் நிலைமை அறிதல்
(iv) பல்வேறு பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல்களை வழங்குதல்.
(v) நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும்,
(vi) நிறுவனத்தின் கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீர்மைத்தன்மையை அறிதல்.
47.
வாரக் கடன்:
1. கடன் விற்பனைக்குப் பின், வாடிக்கையாளர் அல்லது கடனாளிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய தொகை, நிச்சியமாக கிடைக்கப் பெறாது என தெரிய வந்தால் அதனை வாராக் கடன் என கருதலாம்.
2. இது வியாபாரத்திற்கு ஒரு இழப்பாகும். இதனை இலாபத்தை கணக்கிடுவதற்கு முன்பாக உள்ள செலவாகக் கருத வேண்டும்.
வாராஐயக்கடன் ஒதுக்கு:
1. எதிர்காலத்தில் வரக்கடனால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய இலாபம் கணக்கிடுவதற்கு முன் உருவாக்கப்படும் ஒரு தொகையை வாரா ஐயக்கடன் ஒதுக்கு எனப்படும்.
2. பற்பல கடனாளிகள் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாராஐயக்கடன் ஒதுக்கு, அதற்கான ஆண்டின் இறுதியில் ஏற்கனவே போக்கெழுதப்பட்ட வாராக் கடனைக் கழித்த பிறகு கணக்கிட வேண்டும்.
கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு:
1. கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு இலாபம் கணக்கிடுவதற்கு முன் உள்ள ஒரு செலவாகக் கருதப்படுவதால், இலாப நட்டக்கணக்கில் பற்று செய்யப்படுகிறது.
2. பற்பல கடனாளிகள் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு என உருவாக்கப்படுகிறது.
3. வாராக்கடன் மற்றும் வாராஐயக்கடன் ஒதுக்கு ஆகியவற்றை பற்பல கடனாளிகளிலிருந்து கழித்த பிறகு இத்தள்ளுபடியைக் கணக்கிட வேண்டும்.
48.
(i) தேய்வு மற்றும் உராய்வு
1. சாதாரணமாக புலனாகும் நிலைச் சொத்தை பயன்படுத்தும்போது அதன் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. அது தேய்வு மற்றும் உராய்வு என்று அழைக்கப்படுகிறது.
2. தேய்வு ஏற்படும்போது நிலைச் சொத்தின் மதிப்பு விகிதாச்சாரப்படி குறைகிறது.
(ii) காலப்போக்கு
காலப்போக்கு காரணமாக ஒரு சில சொத்துகளை பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தாவிட்டாலும், அவற்றின் பயன்பாட்டு நிலை குறையும்.
(iii) வழக்கொழிவு
1. நவீன பதிலி சொத்துகளின் வருகையால், சொத்துகளின் மதிப்பு குறைவது வழக்கொழிவு எனப்படும்.
2. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான செயல்முறைகள் காரணமாக இது ஏற்படுகிறது.
(iv) நோக்கத்திற்கு போதுமானதாக இல்லாமல் இருப்பது:
1. தேவைக்கான நோக்கத்திற்கு போதுமானதாக இல்லாமல் இருக்கும் போது, அச்சொத்தின் பயன்பாடு நிறுத்தப்படுகிறது.
2. நிறுவனத்தின் திறனை விரிவாக்கம் செய்யும் போது இச்சொத்துகளின் திறன் போதுமானதாக இல்லாமல் போகலாம்.
(v) பராமரிப்பின்மை
1. சொத்துகள் சரிவர பராமரிக்கப்படும் போது அச்சொத்தின் வாழ்நாள் அதிகரிக்கிறது.
2. சொத்துகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றால், அதிக அளவு தேய்மானத்திற்கான வாய்ப்புகள் உண்டு.
(vi) அசாதாரணமான காரணிகள்
1. தீ விபத்து, இயற்கைச் சீற்றங்கள் போன்ற அசாதாரண காரணிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில், நிலைச் சொத்தின் பயன்பாடு குறையலாம்.
2. இது சொத்துகள் நீக்கப்படும் நிலைக்கும் கொண்டு செல்லலாம்.
49.
டிசம்பர் 31, 2017-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல்
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 10,000 | |
| கூட்டுக: செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 5,000 | |
| வங்கி பற்று வைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி | 1,000 | |
| வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 | 6,300 |
| 16,300 | ||
| கழிக்க: விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது |
1,000 | |
| வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக பெற்றது | 500 | 1,500 |
| வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று | 14,800 |
50.
நடவடிக்கைகளை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யும்போது அடிப்படை கணக்கியல் விதிகளை தவறாக பின்வற்றுவதால் ஏற்படும் பிழையே விதிப்பிழை எனப்படும்.
விதிபிழை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள்.
1. சொத்து வாங்கியதை கொள்முதல் ஏட்டில் பதிவு செய்தல்
உதாரணம் - அன்பரசி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுமம் ரூ.10,000 மதிப்புள்ள இயந்திரத்தை கடனுக்கு வாங்கியது, கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டது.
2. சொத்து விற்றதை விற்பனை ஏட்டில் பத்தி பதிவு செய்தல் உதாரணம்
பழைய அறைகலன் ரூ.500 க்கு கடனுக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்டது.
3. ஒரு முதலினச் செலவை வருவாயினச் செலவாகப் பாவித்தல்
உதாரணம்
அ. கூடுதல் அறை கட்டுவதற்கான செலவு ரூ.3,000 பழுதுபார்ப்புச் செலவு கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
ஆ. புதிய இயந்திரம் நிறுவுவதற்காகச் செலுத்திய கூலி ரூ.600 கூலிக்கு கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
4. ஒரு வருவாயினச் செலவை முதலின்ச் செலவாகப் பாவித்தல்
இயந்திரம் பழுதுபார்க்கச் செலுத்திய ரூ.2,000 இயந்திரக் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
51.
பிரதீப் என்பவரது ஏடுகளில்
| நா ள் |
பெறுதல்கள் | பே.ப.எ | தொகை ரூ | நாள் | செலுத்துதல்கள் | பே.ப. எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | 2017 | ||||||
| ஏப் 1 | பிரதீப் முதல் க/கு | 27,000 | ஏப்ரல் 5 | கொள்முதல் க/கு | 6,000 | ||
| 10 | விற்பனை க/கு | 11,000 | 13 | வங்கி க/கு | 5,000 | ||
| 14 | விற்பனை க/கு | 9,000 | எழுதுபொருள் க/கு | 200 | |||
| 29 | வங்கி க/கு | 4,000 | முருகன் க/கு | 14,000 | |||
| கழிவு க/கு | 700 | ||||||
| இருப்பு கீ/இ | 25,100 | ||||||
| 51,000 | 51,000 | ||||||
| மே 1 | இருப்பு கீ/கொ | 25,100 |
52.
53.
ஆள்சார் கணக்கு:
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்குகள் எனப்படும்.இது தனி நபர், சட்டமுறை அமைப்பு, பிரதி நிதிதித்துவ அமைப்பு எனப் பிரிக்கப்படுகிறது.
(a) தனிநபர் கணக்கு:
தனி மனிதர் சார்புடைய கணக்குகளாகும்.எ.கா: ரமேஷ் கணக்கு, ராதா கணக்கு.
(b) சட்டமுறை ஆள்சார் கணக்கு:
ஆட்களின் குழு அல்லது அமைப்பு அல்லது சங்கம் சார்புடைய கணக்குகளாகும்.
எ.கா: வங்கி க/கு HMT Ltd., க/கு காப்பீட்டுக் கழகம். கணக்கு போன்றவை.
(iii) பிரதிநிதித்துவ அமைப்பு
இது இயற்கை அல்லது செயற்கை தன்மையுடைய நபரையோ அல்லது குழுவையோ குறிக்கிறது.
எ.கா.: கொடுப்பட வேண்டிய சம்பளக் கணக்கு, முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு கணக்கு போன்றவை.
54.
குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எடுத்தெழுதப்படும் முறைகள்:
(i) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கை காண்க. அக்கணக்கு எகனாவே துவங்கப்படவில்லை என்றால் அப்பேரேட்டை துவக்க வேண்டும். கணக்கின் பெயரை மேல்பகுதியில் நடுவில் எழுதவேண்டும்.
(ii) கணக்கின் பற்றுப்பக்கத்தில் நாள் பத்தியில் நடவடிக்கை நிகழ்ந்த நாளைக்கு குறிப்பிட வேண்டும்.
(iii) விவரப்பத்தியில் குறிப்பேட்டில் வரவு வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரைப் பதிய வேண்டும்.
(iv) குறிப்பேட்டில் பற்றுத் தொகை பத்தியில் உள்ள இக்கணக்கிற்குரிய தொகையினை, தொகை பத்தியில் பதிய வேண்டும்.
(v) குறிப்பேட்டில் வரவு வைக்கப்டுள்ள கணக்கை கண்டறியவும். அவ்வாறு இல்லை என்றால் அக்கணக்கை பேரேட்டில் புதிதாக துவங்க வேண்டும். கணக்கின் பெயரை மேல் பகுதியின் நடுவில் எழுத வேண்டும்.
(vi) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரை விவரப்பத்தியில் எடுத்து எழுத வேண்டும். அதற்குரிய தொகையை தொகைப் பத்தியில் எழுத வேண்டும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards