11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/12/2018
HSC First Year Important 5 Marks Question
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஒரு மர வியாபாரி மேசை, நாற்காலி ஆகிய இரு பொருள்களை மட்டுமே வியாபாரம் செய்கிறார். அவரிடம் முதலீடு ரூ10,000/- உள்ளது. மேலும் 60 எண்ணிக்கையிலான பொருள்களை மட்டுமே வைப்பதற்கான இடவசதியும் உள்ளது. ஒரு மேசையின் விலை ரூ 500/- மற்றும் ஒரு நாற்காலியின் விலை ரூ 200/- ஆகும். அவர் வாங்குகின்ற எல்லாப் பொருள்களையும் விற்றுவிடுவார். ஒரு மேசையிலிருந்து ரூ50 இலாபமும், ஒரு நாற்காலியிருந்து ரூ 15 இலாபமும் பெறுகிறார் எனில், அவர் மீப்பெரு இலாபம் பெறுவதற்கான நேரியல் திட்டமிடல் கணக்கினை வடிவாக்குக.
2.
f(x)=2x3+9x2+12x+1 என்ற சார்பின் தேக்கநிலைப் புள்ளி மற்றும் தேக்கநிலை மதிப்பினைக் காண்க
3.
4.
4x+3y=10,3x-4y=-5 மற்றும் 5x+y=7 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் என நிறுவுக.
5.
பின்வருவனவற்றிற்கு வரைபடம் வரைக.
f(x)=e2x
6.
நேர்மாறு அணி முறையில் தீர்க்க :
2x+5y=1
3x+2y=7
7.
f(x) = x2- 5 என்ற சார்பின் வரைபடம் வரைக
8.
\(\left| \begin{matrix} 3 & 1 & 2 \\ 2 & 2 & 5 \\ 4 & 1 & 0 \end{matrix} \right| \)என்ற அணிக்கோவையின் ஒவ்வொரு உறுப்பின் சிற்றணிக்கோவை மற்றும் இணைக்காரணிகள் காண்க.
9.
ஒரு திட்டத்தின் கால அட்டவணை பின்வருமாறு
| செயல் | 1-2 | 2-3 | 2-4 | 3-5 | 4-6 | 5-6 |
| கால அளவு (நாட்களில்) | 6 | 8 | 4 | 9 | 2 | 7 |
இதற்கான வலையமைப்பை வரைக. மேலும் எல்லா திட்ட செயலுக்கும் முந்தைய தொடக்க காலம் (EST), முந்தைய முடிவு காலம் (EFT), சமீபத்திய தொடக்க காலம் (LST) மற்றும் சமீபத்திய முடிவு காலம் (LFT) காண்க. தீர்வுக்கு உகந்த பாதையையும், திட்டம் முடிவடைய ஆகும் காலத்தையும் காண்க
10.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள எல்லா திட்ட செயலுக்கும் முந்தைய தொடக்க காலம் (EST), முந்தைய முடிவு காலம்(EFT), சமீபத்திய தொடக்க காலம் (LST) மற்றும் சமீபத்திய முடிவு காலம் (LFT) காண்க. தீர்வுக்கு உகந்த பாதையையும், திட்டம் முடிவடைய ஆகும் காலத்தையும் காண்க.
| செயல் | 1-2 | 1-3 | 1-5 | 2-3 | 2-4 | 3-4 | 3-5 | 3-6 | 4-6 | 5-6 |
| காலம்(வாரங்களில்) | 8 | 7 | 12 | 4 | 10 | 3 | 5 | 10 | 7 | 4 |
11.
கீழ்கண்ட நேரியத் திட்டமிடல் கணக்கை (LPP) தீர்க்க x1 + 4x2 \(\le \) 24, 3x1 + x2 \(\le \) 21 x1 + x2 \(\le \) 9 மற்றும் x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z =2 x1 + 5x2 - ன் மீப்பெரு மதிப்பைக் காண்க.
12.
தந்தையர் மற்றும் அவர்தம் மகன்களின் உயரங்கள் (செ.மீ-ல்) கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
| தந்தையின் உயரம்: | 158 | 166 | 163 | 165 | 167 | 170 | 167 | 172 | 177 | 181 |
| அவர்தம் மகனின் உயரம் | 163 | 158 | 167 | 170 | 160 | 180 | 170 | 175 | 172 | 175 |
இவற்றிக்கான தொடர்புப் போக்குக் கோடுகளைக் காண்க. மேலும் தந்தையின் உயரம் 164 செ.மீ எனும்போது மகனின் உயரத்தை மதிப்பிடுக.
13.
ஒரு புத்தகத்திலுள்ள கணக்குகளில் A என்பவர் 90% கணக்குகளையும் மற்றும் B என்பவர் 70% கணக்குகளையும் தீர்க்க முடியும். சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவு என்ன?
14.
பின்வரும் விவரங்களுக்கு கால்மானம் மற்றும் கால்மான விலக்கக்கெழுவைக் காண்க.
| வயது (வருடங்களில்): | 20 | 30 | 40 | 50 | 60 | 70 | 80 |
| நபர்களின் எண்ணிக்கை: | 13 | 61 | 47 | 15 | 10 | 18 | 36 |
15.
ரூ.27,000-க்கு பங்கில் முதலீடு செய்ய விஜய் அவர்கள் விரும்புகிறார்.பின்வரும் நிறுவங்களின் பங்குகள் அவருக்கு கிடைக்கின்றன.சம மதிப்பில் நிறுவனம் A இன் பங்கில் விலை ரூ.100.அதிக விலை ரூ.25 உடைய நிறுவனம் B ல் பங்கின் விலை ரூ.100 கழிவு ரூ.10 .உடைய C ன் பங்குகள் ரூ.100.அதிக விலை 20% உடைய நிறுவனம் D இல் பங்கின் விலை ரூ.50 எனில் (i)A (ii) B (iii) C (iv) D ஆகிய நிறுவங்களில் அவர் பங்குகளை வாங்கினால் எத்தனை பங்குகள் கிடைக்கும்
16.
u=x3+y3+3xy2 என்ற சார்பிற்கு ஆய்லரின் தேற்றத்தைச் சரி பார்க்க
17.
p = 50-3x என்ற தேவை விதியைக் கொண்டு தேவை நெகிழ்ச்சி,சராசரி வருவாய் மற்றும் இறுதிநிலை வருவாய்க்கு இடையேயுள்ள தொடர்பினைச் சரிபார்
18.
\(cos(a+\beta )=\frac { 4 }{ 5 } \) எனில் \(sin(a-\beta )=\frac { 5 }{ 13 } \) இங்கு \(a+\beta \) மற்றும் \(\alpha+\beta\) குறுங்கோணங்கள் எனில் tan2a ஐக் காண்க.
19.
கணிதத் தொகுத்தறிதல் மூலம் அனைத்து n∈N க்கும் கீழ்க்கண்டவற்றை நிறுவுக n(n + 1) (n+2)என்பது 6 ஆல் வகுபடும்.
20.
கணிதத் தொகுத்தறிதல் மூலம் அனைத்து n∈N க்கும் கீழ்க்கண்டவற்றை நிறுவுக 1.2 + 2.3 + 3.4 +… + n(n + 1) =\(\frac{n(n+1)(n+2)}{3}\).
21.
A மற்றும் B என்ற இரு தொழிற்சாலைகளின் பொருளாதார அமைப்பின் விவரங்கள் (ரூபாய் கோடிகளில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| உற்பத்தியாளர் | உபயோகிப்போர் A B |
இறுதித் தேவை | மொத்த உற்பத்தி |
| A | 50 75 | 75 | 200 |
| B | 100 50 | 50 | 200 |
A ன் இறுதித் தேவை 300 ஆகவும் B இன் இறுதித் தேவை 600 ஆகவும் மாறும்போது அவற்றின் உற்பத்தி அளவுகளைக் காண்க
22.
கீழ்வரும் சார்புகளுக்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ள புள்ளியில் சார்புகளின் தெடர்ச்சித் தன்மையை ஆராய்க.
f(x)=\(=\begin{cases}{x^2-4\over x-4},\ ,x\neq 2 \\0,\ \ \ ,x =2 \end{cases}\)எனில் x = 2-ல்
23.
A=\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 3 & 4 & 7 \\ 1 & -1 & 1 \end{matrix} \right| \) எனில் A(adjA)=(adjA)(A)=|A|I3 என சரிபார்க்க.
24.
cos 200 cos400 cos800 = \(\frac { 1 }{ 2 } \) என நிறுவுக
25.
நிறுவுக: \(\frac { \sin { \left( { 180 }^{ o }+A \right) } \cos { \left( { 90 }^{ o }-A \right) } \tan { \left( { 270 }^{ o }-A \right) } }{ \sin { \left( { 540 }^{ o }-A \right) } \cos { \left( { 360 }^{ o }+A \right) } \csc { \left( { 270 }^{ o }+A \right) } } =-\sin { A } \cos ^{ 2 }{ A } \)
26.
A மற்றும் B ஆகிய இரு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது 0.4 டன் A மற்றும் 0.7 டன் B ஆகியவைகள் 1 டன் A உற்பத்தி செய்ய தேவைப்படுகிறது. அதேபோன்று 0.1 டன் A மற்றும் 0.7 டன் B ஆகியவைகள் 1 டன் B உற்பத்தி செய்ய தேவைப்படுகிறது. தொழில் நுட்ப அணியை எழுதவும். 68 டன்கள் A மற்றும் 10.2 டன்கள் B ஆகியவை தேவைப்படும் எனில் இரண்டையும் உற்பத்தி செய்வதற்கு தேவையான மொத்த அளவு காண்க
27.
மூன்று எண்களின் கூடுதல் 20. முதல் எண்ணை 2 ஆல் பெருக்கி, இரண்டாவது எண்ணைக் கூட்டி, மூன்றாவது எண்ணைக் கழிக்க, கிடைக்கும் மதிப்பு 23 ஆகும். முதல் எண்ணை மூன்றால் பெருக்கி வரும் மதிப்புடன் இரண்டு மற்றும் மூன்றாம் எண்களைக் கூட்ட கிடைக்கும் மதிப்பு 46 எனில் அந்த எண்களை நேர்மாறு அணிமுறையில் காண்க.
28.
நேர்மாறு அணிமுறையில் தீர்க்க : x – y + 2z = 3 ; 2x + z = 1 ; 3x + 2y + z = 4.
29.
\(A=\left[ \begin{matrix} 1 & 3 & 7 \\ 4 & 2 & 3 \\ 1 & 2 & 1 \end{matrix} \right] \)மற்றும் \(B=\left[ \begin{matrix} \frac { -4 }{ 35 } & \frac { 11 }{ 35 } & \frac { -5 }{ 35 } \\ \frac { -1 }{ 35 } & \frac { -6 }{ 35 } & \frac { 25 }{ 35 } \\ \frac { 6 }{ 35 } & \frac { 1 }{ 35 } & \frac { -10 }{ 35 } \end{matrix} \right] \) என்ற அணிகள் ஒன்றுக்கொன்று நேர்மாறு எனக்காட்டுக.
30.
\(A=\left[ \begin{matrix} 2 & 4 & 4 \\ 2 & 5 & 4 \\ 2 & 5 & 3 \end{matrix} \right] \) எனில் A-1 காண்க.
31.
2x2+7xy+3y2+5x+5y+2 =0 என்பது இரட்டை நேர்க்கோடுகளைக் குறிக்கும் எனக் காட்டுக.மேலும் இக்கோடுகளின் தனித்தனிச் சமன்பாடுகளையும் காண்க.
32.
\(\frac{2x+1}{(x+1)(x^2+1)}\)என்பதனை பகுதி பின்னமாக பிரிக்க
33.
\(\frac { x }{ (x+4){ (x+1) }^{ 2 } } =\frac { A }{ x-1 } +\frac { B }{ x+1 } =\frac { C }{ { \left( x+1 \right) }^{ 2 } } \)எனில் A, B மற்றும் C ன் மதிப்புகளைக் காண்க.
34.
இரண்டு சிறுமிகள் சேர்ந்து அமராதவாறு, 5 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகளை ஒரு வரிசையில் எத்தனை வழிகளில் அமரவைக்கலாம்
1.
(i) மாறிகள்
(ii) x1, x2 முறையே மேசை மற்றும் நாற்காலிகளின் எண்ணிக்கை என்க.
(iii) குறிக்கோள் சார்பு
x1 மேசைகளின் இலாபம் = 50 x1
x2 நாற்காலிகளின் இலாபம் = 15 x1
மொத்த இலாபம் = 50 x1 + 15x2
இதனை Z=50x1 + 15x2, என எழுதலாம் மீப்பெரு இலாபம் பெற Z=50x1 + 15x2,-ஐ மீப்பெரிதாக்க வேண்டும்.
(iv) கட்டுப்பாடுகள்
வியாபாரியிடம் அதிக பட்சமாக 60 பொருள்களை வைப்பதற்கான இடவசதி உள்ளது.
x1 + x2 \(\le \) 60
x1 மேசைகளின் விலை = ரூ 500 x1
x2 நாற்காலிகளின் விலை =ரூ 200 x2
மொத்த விலை = 500x1 + 200 x2,
மொத்த விலை 10000க்கு மேல் இருக்கக் கூடாது.
500x1 + 200 x2 \(\le \) 10000
5x1 + 2x2 \(\le \) 100
(v) குறை குறியற்ற நிபந்தனைகள்:
மேசை மற்றும் நாற்காலிகளின் எண்ணிக்கை குறை குறியற்றவை என்பதால் x1 \(\ge \) 0, x2 \(\ge \)0 ஆகும்.
எனவே நேரியல் திட்டமிடல் கணக்கு (I.P.P) கீழ்க்கண்ட வடிவத்தைப் பெறுகிறது.
x1 + x2 \(\le \) 60
5x1 + 2x2 \(\le \) 100
x1, x2 \(\ge \)0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க,
Z=50x1 + 15x2 -ன் மீப்பெருமதிப்பைக் காண்க.
2.
f(x)=2x3+9x2+12x+1
x-ஐ பொறுத்து வகைப்படுத்தும் போது நாம் பெறுவது
f(x)= 6x2+18x+12
= 6(x2+3x+2)
= 6(x+2)(x+1)
f'(x) = 0 ⇒ 6 (x+2)(x+1) = 0
⇒ x + 2 = 0 (அ) x + 1 = 0
x =-2 (அ) x=-1
x =-2 மற்றும் x=-1 ல் f(x)ஆனது தேக்கநிலைப் புள்ளிகளை பெறுகிறது
x =-2 மற்றும் x=-1 என f(x) இல் பிரதியிடும் போது தேக்கநிலை மதிப்புகள் கிடைக்கிறது
x =-2 எனில்
f(–2) = 2(–8)+9(4)+12(–2)+1 = -3
x = -1எனில்
f(–1) = 2(–1)+9(1)+12(–1)+1
= -4
தேக்கநிலைப் புள்ளிகள் (-2,-3) மற்றும் (-1,-4) ஆகும்
3.
4.
5.

6.
\(\left[ \begin{matrix} 2 & 5 \\ 3 & 2 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 \\ 7 \end{matrix} \right] \)என எழுதலாம்
AX = B
X = A–1B
\(A=\left[ \begin{matrix} 2 & 5 \\ 3 & 2 \end {matrix} \right] ,X=\left [ \begin{matrix} x \\ y \end {matrix} \right] \) மற்றும் \(B=\left [ \begin{matrix} 1 \\ 7 \end{matrix} \right] \)
\(|A|=\left[ \begin{matrix} 2 & 5 \\ 3 & 2 \end{matrix} \right] \)
=-11≠0
A–1 யைக் காணஇயலும்
\(adj\quad A=\left[ \begin{matrix} 2 & -5 \\ -3 & 2 \end{matrix} \right] \)
\(A^{-1}=\frac{1}{|A|}adjA\)
\(=\frac{1}{-11}\left[ \begin{matrix} 2 & -5 \\ -3 & 2 \end{matrix} \right] \)
X=A-1B
\(=\frac{1}{-11}\left[ \begin{matrix} 2 & -5 \\ -3 & 2 \end{matrix} \right] \quad \left[ \begin{matrix} 1 \\ 7 \end{matrix} \right] \)
\(=\frac{1}{-11}\left[ \begin{matrix} -33 \\ 11 \end{matrix} \right] \left[ \begin{matrix} 3 \\ -1 \end{matrix} \right] \)
\(\left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] =\left[ \begin{matrix} 3 \\ -1 \end{matrix} \right] \)
x=3, y=-1.
7.
y = f(x) = x2- 5 என்க.
x க்கு சில உகந்த மதிப்புகளை தெரிவு செய்து y இன் மதிப்புகளை கணக்கிடுக.
இவ்வாறாக கீழ்கண்ட அட்டவணையை நாம் பெறுகிறோம்.
| x | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| y | 4 | -1 | -4 | -5 | -4 | -1 | 4 |
(-3, 4), (-2, -1), (-1, -4), (0, -5), (1, -4), (2, -1), (3, 4) ஆகிய புள்ளிகளை வரைபடத்தில் குறித்து மென்மையான வளைவரையால் இணைக்கவும்.
f(x) இன் வரைபடமானது படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

8.
3 இன் சிற்றணிக்கோவை M11 =\(\left| \begin{matrix} 2 & 5 \\ 1 & 0 \end{matrix} \right| \)=0-5=-5
1 இன் சிற்றணிக்கோவை M12 =\(\left| \begin{matrix} 2 & 5 \\ 4 & 0 \end{matrix} \right| \)=0-20=-20
2 இன் சிற்றணிக்கோவை M13 =\(\left| \begin{matrix} 2 & 2 \\ 4 & 1 \end{matrix} \right| \)=2-8=-6
2 இன் சிற்றணிக்கோவை M21 =\(\left| \begin{matrix} 1 & 2 \\ 1 & 0 \end{matrix} \right| \)=0-2=-2
2 இன் சிற்றணிக்கோவை M22 =\(\left| \begin{matrix} 3 & 2 \\ 4 & 0 \end{matrix} \right| \)=0-8=-8
5 இன் சிற்றணிக்கோவை M23 = \(\left| \begin{matrix} 3 & 1 \\ 4 & 1 \end{matrix} \right|\)=3-4=-1
4 இன் சிற்றணிக்கோவை M31 = \(\left| \begin{matrix} 1 & 2 \\ 2 & 5 \end{matrix} \right| \)=5-4=1
1 இன் சிற்றணிக்கோவை M32 = \(\left| \begin{matrix} 3 & 2 \\ 2 & 5 \end{matrix} \right| \)=15-4=11
0 இன் சிற்றணிக்கோவை M33 =\(\left| \begin{matrix} 3 & 1 \\ 2 & 2 \end{matrix} \right| \)=6-2=4
3 இன் இணைக்காரணி A11 =(-1)1+1M11=M11=-5
1 இன் இணைக்காரணி A12 =(-1)1+2 M12=-M12=20
2 இன் இணைக்காரணி A13 =(-1)1+3M13=M13=-6
2 இன் இணைக்காரணி A21 =(-1)2+1M21=-M21=2
2 இன் இணைக்காரணி A22 =(-1)2+2M22=M22=-8
5 இன் இணைக்காரணி A23 =(-1)2+3M23=-M23=1
4 இன் இணைக்காரணி A31 =(-1)3+1M31=M31=1
1 இன் இணைக்காரணி A32 =(-1)3+2M32=-M32=-11
0 இன் இணைக்காரணி A33 =(-1)3+3M33=M33=4
9.

தீர்வுக்கு உகந்த பாதை 1-2-3-5-6 மற்றும் திட்டம் நிறைவு செய்யும் காலம் 30 நாட்கள்
10.

| செயல் | காலம்(வாரங்களில்) | EST | EFT | LST | LFT |
|---|---|---|---|---|---|
| 1-2 | 8 | 0 | 8 | 0 | 8 |
| 1-3 | 7 | 0 | 7 | 8 | 15 |
| 1-5 | 12 | 0 | 12 | 9 | 21 |
| 2-3 | 4 | 8 | 12 | 11 | 15 |
| 2-4 | 10 | 8 | 18 | 8 | 18 |
| 3-4 | 3 | 12 | 15 | 15 | 18 |
| 3-5 | 5 | 12 | 17 | 16 | 21 |
| 3-6 | 10 | 12 | 22 | 15 | 25 |
| 4-6 | 7 | 18 | 25 | 18 | 25 |
| 5-6 | 4 | 17 | 21 | 21 | 25 |
தீர்வுக்கு உகந்த பாதை 1-2-4-6 மற்றும் திட்டம் நிறைவு செய்யும் காலம் 25 வாரங்கள்
11.
முதலில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஏற்புடைய பகுதியைக் காண்க.
இரண்டு பொதுவான தீர்மான மாறிகள் x1 மற்றும் x2 குறை குறியற்றவையாக (x1, x2 \(\ge \) 0) இருப்பதால் ஏற்புடையப் பகுதி காலமானப் பகுதியில் அமையும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் சமன்பாடு வடிவில் எழுதுக.
x1 + 4x2 = 24
3x1 + x2 = 21
x1 + x2 = 9
x1 + 4x2 = 24 என்ற நேர்க்கோடானது (0, 6) மற்றும் (24, 0) என்றப் புள்ளிகள் வழியாகச் செல்லும்.
[x1 + 4x2 = 24 இல் x1 = 0 எனப் பிரதியிட x2 = 6 எனக் கிடைக்கும்.
அதேபோல் x2 = 0 எனப் பிரதியிட x1 = 24 எனக் கிடைக்கும்.]
x1 + 4x2 = 24 என்ற கோட்டின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வரும் புள்ளிகள் x1 + 4x2 \(\le \) 24 கட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யும்.
3x1 + x2 = 21 என்ற நேர்க்கோடானது (0, 21) மற்றும் (7, 0) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும்.
3x1 + x2 = 21 என்ற கோட்டின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வரும் புள்ளிகள் 3x1 + x2 \(\le \) 21 என்ற கட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யும்.
x1 + x2 = 9 என்ற நேர்கோடானது (0, 9) மற்றும் (9, 0 ) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும்.
x1 + x2 = 9 என்ற கோட்டின் மீதோ அல்லது அதற்குக் கீழோ வரும் புள்ளிகள் x1 + x2 \(\le \) 9 கட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யும்.

கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளக் கட்டுப்பாட்டிற்கிணங்க வரையப்பட்டுள்ளது. நிழலிடப்பட்ட OABCD என்ற பகுதியே தீர்வுச் பகுதியின் முனைப்புள்ளிகள் முறையே O(0,0) A(7,0); B(6,3) [x1 + x2 = 9 மற்றும் 3 x1 + x2 = 21 என்ற வெட்டும் புள்ளி B ஆகும்)];C(4,5) x1 + x2 = 9 மற்றும் x1 + 4x2 = 24] என்ற கோடுகள் வெட்டும் புள்ளி C ஆகும்) D(0, 6).
| முனைப்புள்ளிகள் | Z=2x1 + 5x2 |
|---|---|
| O (0, 0) | 0 |
| A(7, 0) | 14 |
| B(6, 3) | 27 |
| C(4, 5) | 33 |
| D(0, 6) | 30 |
குறிக்கோள் சார்பின் பெரும மதிப்பானது C என்ற புள்ளியில் கிடைக்கிறது. எனவே x1 = 4, x2 = 5, Z -ன் பெரும மதிப்பு = 33.
12.
Y=0.6102X + 66.12; X=0.556Y + 74.62 மக னின் உயரம் = 166.19
13.
A என்பவர் கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவு =\(\frac { 90 }{ 100 } =\frac { 9 }{ 10 } \) மற்றும் B என்பவர் கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவு =\(\frac { 70 }{ 100 } =\frac { 7 }{ 10 } \)
அதாவது P(A)=\(\frac{9}{10}\) மற்றும் P(B)=\(\frac{7}{10}\)
P(\(\bar { A } \))=1-P(A)=\(\frac { 9 }{ 10 } =\frac { 1 }{ 10 } \)
இதேப் போன்று P(\(\bar { B } \))=\(\frac { 7 }{ 10 } =\frac { 3 }{ 10 } \)
P(குறைந்தபட்சம் ஒரு நபர் கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவு)=P(A\(\cup \)B)
=\(1-P(\overline { A\cup B) } =1-P(\bar { A } \cap \bar { B } )\)
=\(1-P(\bar { A } ).P(\bar { B } )\)
=\(1-\frac { 3 }{ 100 } =\frac { 97 }{ 100 } \)
கணக்கை குறைந்த பட்சம் அவர்களில் ஒருவர் தீர்ப்பதற்கான நிகழ்தகவு =\(\frac { 97 }{ 100 } \).
14.
Q1 = 30, Q3 = 70, QD = 20 , QD -ன் கெழு = 0.4
15.
16.
17.
p = 50 - 3x
\(\frac { dp }{ dx } =-3\)
∴ \(\frac { dx }{ dp } =-\frac { 1 }{ 3 } \)
தேவை நெகிழ்ச்சி \(\eta _{ d }=-\frac { p }{ x } .\frac { dx }{ dp } \)
= \(-\frac { 50-3x }{ x } \left( -\frac { 1 }{ 3 } \right) \)
=\(\frac { 50-3x }{ 3x } \) .......(1)
இப்போது வருவாய் R = px
= (50-3x) x
= 50x-3x2
சராசரி வருவாய் AR=p
= 50-3x
இறுதிநிலை வருவாய் MR=\(\frac { dR }{ dx } \)
= 50-6x
∴ \(\frac { AR }{ AR-MR } =\frac { 50-3x }{ (50-3x)-(50-6x) } \)
=\(\frac { 50-3x }{ 3x } \) ..(2)
(1) மற்றும் (2) லிருந்து நாம் பெறுவது
\(\eta _{ d }=\frac { AR }{ AR-MR } \)
எனவே சரி,பார்க்கப்பட்டது
18.
\(\frac { 56 }{ 33 } \)
19.
P(n) என்ற கூற்று கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பக்கப்படுகிறது n (n + 1) (n + 2) (6 ஆல் வகுபடும் எண்)
படி 1: n = 1 என பிரதியிட
1(1 + 1)(1 + 2) = 6 (6 ஆல் வகுபடும் எண்)
i.e., P(1) உண்மை ஆகும்.
படி 2: n = k என்பதற்கு மேற்கண்டகூற்று உண்மை என்க.
i.e. k (k + 1) (k + 2) (6 ஆல் வகுபடும் எண்)
⇒ k(k + 1)(k + 2) = 6m
படி 3: P( + 1) உண்மை என நிரூபிக்க வேண்டும்
(k + 1) : (k + 1)(k + 2)(k + 3).
= (k + 1)(k + 2)(k) + 3 (k + 1)(k + 2)
= 6λ+3(k+1)(k+2)
வழக்கு (1) : k என்பது ஒற்றைப்படை என்றால், k + 1 சமமாக இருப்பதால், இரண்டாவது சொல் 6 இன் பெருக்கமாக இருக்கும்
வழக்கு (2): k என்பது k + 2 சமமாக இருந்தால், இரண்டாவது சொல் 6 இன் பெருக்கமாக இருக்கும்
(k + 1) (6 ஆல் வகுபடும் எண்)
எனவே, P (k +1) ம் உண்மை ஆகிறது.
கணிதத் தொகுத்தறிதல் விதிப்படி P(k) உண்மை எனில் P (k +1) ம் உண்மை ஆகிறது.
∴ n ன் அனைத்து இயல் மதிப்புகளுக்கும் P (n) உண்மை ஆகிறது.
20.
P(n) என்பது குறிக்கும் கூற்று : 1.2 + 2.3 + 3.4 + ..... + (n + 1) = \(\frac { n(n+1)(n+2) }{ 3 } \)
n = 1 என பிரதியிட
LHS = 1 (2) = 2
\(=\frac { 1(2)(3) }{ 3 } \Rightarrow 2=2\)
LHS = RHS
∴ P(1) என்பது உண்மையாகும். i.e, to P.T. 1.2 + 2.3 + 3.4 + ...... + k(k + 1)
= \(\frac { k(k+1)(k+2) }{ 3 } \) ......(1)
P(k + 1) ன்
P.T. 1.2 + 2.3 + 3.4 + .... + k(k + 1) + (k + 1)(k + 2)
= \(\frac { k(k+2)(k+2) }{ 3 } \) + (k + 1)(k + 2)
\(=\frac{k(k+1)(k+2)+3(k+1)(k+2)}{3}\)
\(=\frac { (k+1)(k+2)(k+3) }{ 3 } \) = RHS
∴ P(k) உண்மையென்றால் P(k + 1) உண்மையாகும்
∴ அனைத்து இயல் மதிப்பிற்கும் P(n) உண்மையாகும்.
21.
a11 = 50, a12 = 75, x1 = 200
a21 = 100, a22 = 50, x2 = 200
\({b}_{11}={{{a}_{11}}\over{{x}_{1}}}={{50}\over{200}}={{1}\over{4}};{b}_{12}=\frac{{a}_{12}}{{x}_{12}}=\frac{75}{200}=\frac{3}{8}\)
\({b}_{21}=\frac{{a}_{11}}{x_1}{{100}\over{200}}={{1}\over{2}};{b}_{22}={{{a}_{22}}\over{{x}_2{}}}={{50}\over{200}}={{1}\over{4}}\)
\(\therefore\) B \(=\begin{bmatrix} \frac{1}{4}&\frac{3}{8}\\\frac{1}{2}&\frac{1}{4} \end{bmatrix}\)
\(I-B=\begin{bmatrix}1&0\\0&1 \end{bmatrix}-\begin{bmatrix} \frac{1}{4} &\frac{3}{8}\\ \frac{1}{2}& \frac{1}{4} \end{bmatrix}=\begin{bmatrix} {{3}\over{4}}&{{-3}\over{8}}\\ -{{1}\over{2}} &{{3}\over{4}} \end{bmatrix}\)
\(|I-B| ={{9}\over{16}}-{{3}\over{16}}={{6}\over{16}}={{3}\over{8}}>0 \)
X = (I - B)-1 D இங்கு D \(=\begin{bmatrix} 300 \\ 600 \end{bmatrix}\)
\(X=\frac{8}{3}\left(\begin{array}{ll} \frac{1}{4} & \frac{3}{8} \\ \frac{1}{2} & \frac{1}{4} \end{array}\right)\left(\begin{array}{l} 300 \\ 600 \end{array}\right)\)
\(=\frac{8}{3}\left(\begin{array}{c} 75+225 \\ 150+150 \end{array}\right)=\left(\begin{array}{l} 800 \\ 800 \end{array}\right)\)
22.
x = 2 –ல் தொடர்ச்சியற்ற சார்பாகும்.
23.
A \(=\begin{bmatrix} 1&1&1\\3&4&7\\1&-1&1 \end{bmatrix}\)
\(=(4+7)-1(3-7)+1(-3-4)\)
\(=11+4-7=8\)
\(=\left(\begin{array}{ccc} 11 & 4 & -7 \\ -2 & 0 & +2 \\ 3 & -4 & 1 \end{array}\right)\)
\(\operatorname{adj} A=\left(\begin{array}{ccc} 11 & -2 & 3 \\ 4 & 0 & -4 \\ -7 & 2 & 1 \end{array}\right)\)
\(\mathrm{A}(\operatorname{adj} A)=\left(\begin{array}{ccc} 1 & 1 & 1 \\ 3 & 4 & 7 \\ 1 & -1 & 1 \end{array}\right)\left(\begin{array}{ccc} 11 & -2 & 3 \\ 4 & 0 & -4 \\ -7 & 2 & 1 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{ccc} 11+4-7 & -2+0+2 & 3-4+1 \\ 33+16-49 & -6+0+14 & 9-16+7 \\ 11-4-7 & -2+0+2 & 3+4+1 \end{array}\right)\)
\(=\left(\begin{array}{lll} 8 & 0 & 0 \\ 0 & 8 & 0 \\ 0 & 0 & 8 \end{array}\right)=8\left(\begin{array}{lll} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{array}\right)=|A| I_3\)
\((adj\ A)\ A=\begin{bmatrix}11&-2&3\\4&0&-4\\-7&2&1\end{bmatrix}\begin{bmatrix} 1&1&1\\3&4&7\\1&-1&1 \end{bmatrix}\)
\(=\begin{bmatrix} 11-6+3&11-8-3&11-14+3\\4+0-4&4+0+4&4+0-4\\-7+6+1&-7+8-1&-7+14+1 \end{bmatrix}=\begin{bmatrix} 8&0&0\\0&8&0\\0&0&8 \end{bmatrix}\) ...(2)
\(|A|.{I}_{3}=8\begin{bmatrix}1&0&0\\0&1&0\\0&0&1 \end{bmatrix}=\begin{bmatrix} 8&0&0\\0&8&0\\0&0&8\end{bmatrix}\) ...(3)
A (adj A) = (adj A) A = |A|I3.
24.
25.
26.
| A | B | மொத்த அளவு | |
| A | 0.4 | 0.1 | 6.8 |
| B | 0.7 | 0.7 | 10.2 |
B =\(\begin{bmatrix} 0.4 & 0.1 \\ 0.7 & 0.7 \end{bmatrix}\)
I - B =\(\begin{bmatrix} 1 & 0 \\ 0 & 1 \end{bmatrix}-\begin{bmatrix} 0.4 & 0.1 \\ 0.7 & 0.7 \end{bmatrix}=\begin{bmatrix} 0.6 & -0.1 \\ -0.7 & 0.3 \end{bmatrix}\)
|I - B| = \(\begin{bmatrix} 0.6 & -0.1 \\ -0.7 & 0.3 \end{bmatrix}\)
|I - B| = 0.18 - 0.07 = 0.11 > 0
\(\therefore \) ( I - B)-1 = \(\frac { 1 }{ |I-B| } adj(I-B)=\frac { 1 }{ 0.11 } \begin{bmatrix} 0.3 & 0.1 \\ 0.7 & 0.6 \end{bmatrix}\)
இதனை X = (I - B)-1 D இங்கு D = \(\left[ \frac { 6.8 }{ 10.2 } \right] \)
X = \(\frac { 1 }{ 0.11 } \begin{bmatrix} 0.3 & 0.1 \\ 0.7 & 0.6 \end{bmatrix}\left[ \frac { 6.8 }{ 10.2 } \right] =\frac { 1 }{ 0.11 } \left[ \frac { 0.3\times6.8+0.1\times10.2 }{ 0.7\times6.8+0.6\times10.2 } \right] \)
=\(\frac { 1 }{ 0.11 } \left[ \frac { 2.04+1.02 }{ 4.76+6.12 } \right] =\frac { 1 }{ 0.11 } \left[ \frac { 3.06 }{ 10.88 } \right] =\left[ \frac { 27.81 }{ 98.90 } \right] \)
A = 250.36 டன்கள் B = 62.44 டன்கள்
27.
x + y + z = 20
2x + y - z = 23
3x+ y + z = 46
\(\begin{bmatrix} 1&1&1\\2&1&-1\\3&1&1 \end{bmatrix}\begin{bmatrix} x\\y\\z \end{bmatrix}=\begin{bmatrix} 20\\23\\46 \end{bmatrix}\)
\(\Rightarrow\) \(A X=B \Rightarrow X=A^{-1} B\)
\(A=\begin{bmatrix} 1&1& 1\\2&1&-1\\3&1&1 \end{bmatrix},X=\begin{bmatrix} x\\y\\z \end{bmatrix},B=\begin{bmatrix} 20\\23\\46 \end{bmatrix}\)
= 1 ( 1 + 1 ) - 1 ( 2 + 3 ) + 1 ( 2 - 3)
= 2 - 5 - 1 = 2 - 6 = - 4 \(\neq \) 0
\(\therefore\) A–1 யைக் காணஇயலும்.
\(=\left(\begin{array}{ccc} 2 & -5 & -1 \\ 0 & -2 & 2 \\ -2 & 3 & -1 \end{array}\right)\)
\(\therefore{A}^{-1}={{1}\over{|A|}}adj\ A={{-1}\over{4}}\begin{bmatrix} 2&0&-2\\-5&-2&3\\-1&2&-1 \end{bmatrix}\)
\(X={A}^{-1}B={{-1}\over{4}}\begin{bmatrix}2&0&-2\\5&-2&3\\-1&2&-1 \end{bmatrix}\begin{bmatrix} 20\\23\\46 \end{bmatrix}\)
\(= \begin{bmatrix} x\\y\\z \end{bmatrix},={{-1}\over{4}}\begin{bmatrix} 40+0-92\\-100-46+138\\-20+46-46 \end{bmatrix}={{-1}\over{4}}\begin{bmatrix} -5\\-8\\-20 \end{bmatrix}\)
\(X=\begin{bmatrix} 13\\2\\5 \end{bmatrix}\)
\(x=13, y=2, z=5\)
28.
x - y + 2z = 3, 2x + z = 1 and 3x + 2y +z = 4.
\(\begin{bmatrix} 1&-1&2\\2&0&1\\3&2&1 \end{bmatrix}\begin{bmatrix} x\\y\\z \end{bmatrix}=\begin{bmatrix} 3\\1\\4 \end{bmatrix}\)
\(A X=B \Rightarrow X=A^{-1} B\)
இங்கு
\( A=\left(\begin{array}{ccc} 1 & -1 & 2 \\ 2 & 0 & 1 \\ 3 & 2 & 1 \end{array}\right), X=\left(\begin{array}{l} x \\ y \\ z \end{array}\right)\)
\(B=\left(\begin{array}{l} 3 \\ 1 \\ 4 \end{array}\right)\)
\(|A|=1(0-2)+1(2-3)+2(4-0)\)
\(=-2-1+8=5 \neq 0\)
A–1 யைக் காணஇயலும்.
\(=\left(\begin{array}{ccc} -2 & 1 & 4 \\ 5 & -5 & -5 \\ -1 & 3 & 2 \end{array}\right)\)
\(\mathrm{A}^{-1}=\frac{1}{|A|} \operatorname{adj} \mathrm{A}=\frac{1}{5}\left(\begin{array}{ccc} -2 & 5 & -1 \\ 1 & -5 & 3 \\ 4 & -5 & 2 \end{array}\right)\)
\(\mathrm{X}=\mathrm{A}^{-1} \mathrm{~B}\)
\(={{1}\over{5}}\begin{bmatrix} -2&5&-1\\1&-5&3\\4&-5&2 \end{bmatrix}\begin{bmatrix} 3\\1\\4 \end{bmatrix}={{1}\over{5}}\begin{bmatrix} -6+5-4\\3-5+12\\12-5+8 \end{bmatrix}={{1}\over{5}}\begin{bmatrix} -5\\10\\15 \end{bmatrix}=\begin{bmatrix} -1\\2\\3 \end{bmatrix}\)
\(\left(\begin{array}{l} x \\ y \\ z \end{array}\right)=\left(\begin{array}{c} -1 \\ 2 \\ 3 \end{array}\right)\)
\(x=-1, y=2, z=3\)
29.
\(AB=\left[ \begin{matrix} 1 & 3 & 7 \\ 4 & 2 & 3 \\ 1 & 2 & 1 \end{matrix} \right] \left[ \begin{matrix} \frac { -4 }{ 35 } & \frac { 11 }{ 35 } & \frac { -5 }{ 35 } \\ \frac { -1 }{ 35 } & \frac { -6 }{ 35 } & \frac { 25 }{ 35 } \\ \frac { 6 }{ 35 } & \frac { 1 }{ 35 } & \frac { -10 }{ 35 } \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 1 & 3 & 7 \\ 4 & 2 & 3 \\ 1 & 2 & 1 \end{matrix} \right] \frac { 1 }{ 35 } \left[ \begin{matrix} -4 & 11 & -5 \\ -1 & -6 & 25 \\ 6 & 1 & -10 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 35 } \left[ \begin{matrix} 35 & 0 & 0 \\ 0 & 35 & 0 \\ 0 & 0 & 35 \end{matrix} \right] \)
\(=\frac { 35 }{ 35 } \left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] =I\)
\(BA=\left[ \begin{matrix} \frac { -4 }{ 35 } & \frac { 11 }{ 35 } & \frac { -5 }{ 35 } \\ \frac { -1 }{ 35 } & \frac { -6 }{ 35 } & \frac { 25 }{ 35 } \\ \frac { 6 }{ 35 } & \frac { 1 }{ 35 } & \frac { -10 }{ 35 } \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 3 & 7 \\ 4 & 2 & 3 \\ 1 & 2 & 1 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 35 } \left[ \begin{matrix} -4 & 11 & -5 \\ -1 & -6 & 25 \\ 6 & 1 & -10 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 3 & 7 \\ 4 & 2 & 3 \\ 1 & 2 & 1 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 35 } \left[ \begin{matrix} 35 & 0 & 0 \\ 0 & 35 & 0 \\ 0 & 0 & 35 \end{matrix} \right] =\frac { 35 }{ 35 } \left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] =I\)
AB = BA = I
ஆகையால் A மற்றும் B அணிகள் ஒன்றுக்கொன்று நேர்மாறு ஆகும்.
30.
\(\left| A \right| =\left| \begin{matrix} 2 & 4 & 4 \\ 2 & 5 & 4 \\ 2 & 5 & 3 \end{matrix} \right| =2\left| \begin{matrix} 5 & 4 \\ 5 & 3 \end{matrix} \right| -4\left| \begin{matrix} 2 & 4 \\ 2 & 3 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 2 & 5 \\ 2 & 5 \end{matrix} \right| \)
=2(15-20)-4(6-8)+4(10-10)
=2(-5)-4(-2)+4(0)
=-10+8+0=-2≠0
A என்பது பூச்சியமற்ற கோவை அணி ஆகையால்,A-1யைக் காணஇயலும்
A11=-5; A21=8;A31=-4
A12=2; A22=-2; A32=0
A13=0; A23=-2; A33=2
\(\left[ { A }_{ ij } \right] =\left[ \begin{matrix} -5 & 2 & 0 \\ 8 & -2 & -2 \\ -4 & 0 & 2 \end{matrix} \right] \)
\(adj\quad A=\left[ \begin{matrix} -5 & 8 & -4 \\ 2 & -2 & 0 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ \left| A \right| } adj\quad A=\frac { 1 }{ -2 } \left[ \begin{matrix} -5 & 8 & -4 \\ 2 & -2 & 0 \\ 0 & -2 & 2 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} \frac { 5 }{ 2 } & -4 & 2 \\ -1 & 1 & 0 \\ 0 & 1 & -1 \end{matrix} \right] \)
31.
கொடுக்கப்பட்ட சமன்பாடு 2x2+7xy+3y2+5x+5y+2 =0 இதனை ax2+2hxy+by2+gxy+2fy+c = 0 உடன் ஒப்பிடும்போது a=2,b=3, h=\(\frac { 7 }{ 2 } \) ,g=\(\frac { 5 }{ 2 } \) ,f =\(\frac { 5 }{ 2 } \) ,c =2
i.e \(\left| \begin{matrix} a & h & g \\ h & b & f \\ g & f & c \end{matrix} \right| =\left| \begin{matrix} 2 & \frac { 7 }{ 2 } & \frac { 5 }{ 2 } \\ \frac { 7 }{ 2 } & 3 & \frac { 5 }{ 2 } \\ \frac { 5 }{ 2 } & \frac { 5 }{ 2 } & 2 \end{matrix} \right| \)
= \(2\left( 6-\frac { 25 }{ 4 } \right) -\frac { 7 }{ 2 } \left( 9-\frac { 25 }{ 4 } \right) +\frac { 5 }{ 2 } \left( \frac { 35 }{ 4 } -\frac { 15 }{ 2 } \right) \)
= \(2\left( -\frac { 1 }{ 4 } \right) -\frac { 7 }{ 2 } .\frac { 3 }{ 4 } +\frac { 5 }{ 2 } .\frac { 5 }{ 4 } \)
= \(-\frac { 1 }{ 2 } -\frac { 21 }{ 8 } +\frac { 25 }{ 8 } =0\)
எனவே கொடுக்கப்பட்ட சமன்பாடு இரட்டை நேர்க்கோடுகளைக் குறிக்கும்
2x2+7xy+3y2 = 2x2+6xy+xy+3y2
=2x(x+3y)+y(x+3y)
= (x+3y)(2x+y)
2x2+7xy+3y2+5x+5y+2 = (x+3y+l)(2x+y+m) என்க.
x-ன் கெழுக்களை சமன்படுத்த 2l+m = 5 (1)
y-ன் கெழுக்களை சமன்படுத்த l+3m =5 (2)
(1) மற்றும் (2) ஐ தீர்க்க நமக்கு கிடைப்பது m =1 மற்றும் l =2
எனவே, இரட்டை நேர்க்கோடுகளின் தனித்தனி சமன்பாடு
x+3y+2 = 0 மற்றும் 2x+y+1 = 0
32.
\(\frac{2x+1}{(x+1)(x^2+1)}=\frac{A }{x-1}+\frac{Bx+C}{{x}^2+1}\)என்க ......(1)
இருபுறமும் (x - 1)(x2 + 1) ஆல் பெருக்குக
2x+1 = A(x2 + 1)+(Bx + C)(x - 1) ... (2)
x = 1 என (2) ல் பிரதியிட
2+1 = A(1 + 1)+ 0
\(\therefore A=\frac{3}{2}\)
x = 0 என (2) ல் பிரதியிட
0+1 = A(0 + 1)+(0 + C)(-1)
1 = A – C
\(\therefore C =\frac{1}{2}\)
x2 இன் கெழுக்களை சமன்பாடு (2) இன் இருபுறமும் சமன்படுத்த,
A + B = 0
B = -A
\(\therefore B =\frac{-3}{2}\)
A, B மற்றும் C ன் மதிப்புகளை (1) ல் பிரதியிட
\(\frac{2x+1}{(x+1)(x^2+1)}=\frac{\frac{3}{2} }{x-1}+\frac{\frac{-3}{2}x+\frac{1}{2}}{{x}^2+1}\)
\(=\frac{3 }{x-1}+\frac{3x-1}{2({x}^2+1)}\)
33.
\(\frac { x }{ (x+1){ (x+1) }^{ 2 } } =\frac { A }{ x-1 } +\frac { B }{ x+1 } =\frac { C }{ { \left( x+1 \right) }^{ 2 } } \)
x = A(x + 1)2 + B(x - 1)(x + 1)+ C(x - 1) ... (1)
x = 1 என (1) ல் பிரதியிட
\(1=A{ (1+1) }^{ 2 }+B(0)+C(0)\)
\(\therefore \quad A=\frac { 1 }{ 4 } \)
x = –1 என (1) –ல் பிரதியிட
1=A(0)+B(0)+C(-1-1)
\(\therefore C=\frac { 1 }{ 2 } \)
சமன்பா டு (1) ல் மாறிலிகளின் கெழுக்களை சமன்படுத்த
A-B-C=0
\(\Rightarrow B=A-C\)
\(\therefore B=-\frac { 1 }{ 4 } \)
34.
5 சிறுவர்கள் 5P5 = 5! இல் ஒரு வரிசையில் அமரலாம் ஏற்பாடு பின்வருமாறு இருக்க முடியும்.
GB GB GB GB GB GB
இரண்டு பெண்களும் ஒன்றுசேரக்கூடாது என்பதால், நாங்கள் 3 பெண்களை 6 இடங்களில் ஏற்பாடு செய்யலாம், அதை 6P3 வழிகளில் செய்யலாம்.
மொத்த எண். இருக்கை ஏற்பாடு
\(=5 ! \times 6 P_3=5 \times 4 \times 3 \times 2 \times 1 \times 6 \times 5 \times 4\)
= 14400
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards