11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/12/2018
Volume1-Slip Test
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்றால் என்ன?
2.
இயக்க அமைப்பு என்றால் என்ன?
3.
ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியிலிருந்து எவ்வாறு நீக்குவாய்?
4.
சுட்டியின் வலது பொத்தனைப் பயன்படுத்தி கோப்பு அல்லது மறுபெயரிடுவாய்?
5.
உரையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எவ்வாறு நகலெடுப்பாய்?
6.
நானோ தொழில்நுட்பம் என்றால் என்ன?
7.
கால்க்-ல் செயற்கூறைச் செருக, செயற்கூறு வழிகாட்டியை எவ்வாறு பெறலாம்?
8.
தமிழில் தட்டச்சு செய்யப் பயன்படு தமிழ் இடை முகத்தின் நன்மைகள் யாவை?
9.
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.
10.
இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்களின் பயன் யாது?
11.
சுட்டியின் சில செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
12.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் உள்ள பல்வேறு வகையானச் செயற்குறிகளைப் பட்டியலிடு.
13.
பணிப்பலகத்தில் உள்ள தனிப்பயன் அசைவுப்படம் (Custom Animation) பகுதியின் பயன் யாது?
14.
முதன்மைப் பக்கம் பற்றி எழுதுக.
15.
கணிப்பொறியின் பகுதிகள் யாவை?
16.
சொற்செயலி என்றால் என்ன?
17.
பைட் என்றால் என்ன?
18.
கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
19.
பல் பணியாக்கம் என்றால் என்ன?
20.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்றால் என்ன?
21.
எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.
22.
தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.
23.
சில்லுவின் அமைப்பால் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?
24.
நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?
25.
அட்டவணையில் சிற்றறைகளை எவ்வாறு இணைப்பாய்?
26.
இயக்க அமைப்பில் பல பணி (Multi tasking) தேவைப்படுவதற்கான ஒரு காரணத்தை விளக்குக.
27.
இயக்க அமைப்பு நினைவக மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகை செயல்களுக்கு பொறுப்பாகும்?
28.
ASCII குறிப்பு வரைக.
29.
அட்டவணைச் செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசைகளைச் சேர்த்தல் / அழித்தல் சாத்தியமா?
30.
தானியங்கு நிரப்பு வசதி என்றால் என்ன? அதைப் பயன்படுத்தி எவ்வாறு நகலெடுப்பாய்?
31.
மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?
32.
வெட்டுதல் மற்றும் ஓட்டுதல் முறையில் கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகர்த்துவாய்?
33.
Paste Special தேர்வின் பயன் யாது?
34.
Handout View ஐ எவ்வாறு அச்சிடுவாய்?
35.
பணிப்பலக்கத்தில் உள்ள சில்லுகள் பரிமாற்றம் (Slide Transition) பக்கத்தின் பயன் யாது?
36.
தனி உரிமை ஆதார மற்றும் திறந்த மூல சொற்செயலிகளைப் பட்டியலிடு.
37.
முதல் இழக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.
38.
Windows மற்றும் Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
39.
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?
40.
CD மற்றும் DVD வேறுபடுத்துக.
41.
ISCII குறிப்பு வரைக.
42.
ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக
43.
Impress-ல் திறம்பட விளக்கத்தை உருவாக்குவது எப்படி சில்லு மாற்று (transistion effect) விளைவுகளுக்கு உதவுகிறது?
44.
Backspace மற்றும் Delete பொத்தான்களை பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.
45.
அட்டவணையில் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு சேர்க்கலாம்?
1.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்:
மைக்ரோ சாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட தனியுரிம இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும்.
இது முதன்மையாக இன்டெல் மற்றும் AMD கட்டமைப்பு அடிப்படையிலான கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது.
2.
1.இயக்க அமைப்பு என்பது கணிப்பொறிக்கும், பயனருக்கும் இடைமுகமாக செயல்படும் ஒரு அமைப்பு மென்பொருள் ஆகும்.
2. இது உள்ளீடு வெளியீடு மற்றும் கணிப்பொறி வெளிப்புற சாதனங்களாகிய வட்டு இயக்கி (Disk Drive), அச்சுப்பொறி (Printer) மற்றும் பிற மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
எ.கா: Windows, லினக்ஸ், யூனிக்ஸ்.
3.
ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியில் இருந்து மறு சுழற்சி தொட்டியில் தங்காமல் நீக்க SHIFT விசையுடன் Delete விசையும் சேர்த்து அழுத்த வேண்டும்.
4.
படி 1:மறுபெயரிட விரும்பும் கோப்பு அல்லது கோப்புறையைத் தேர்வு செய்யவும்.
படி 2:கோப்பு அல்லது கொப்புறையின் கிளிக் செய்யவும்.
படி 3:மேல் மீட்புப் பட்டித் தோன்றும். அதில் Rename என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
படி 4:புதிய பெயரை தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்தவும்
5.
1. நகலெடுக்கத் தேவையான உரையை தேர்வு செய்ய வேண்டும்.
2. Ctrl + C அல்லது copy பனிக்குறி அல்லது Edit \(\rightarrow \) copy கிளிக் செய்ய வேண்டும்.
3. நகலெடுக்கப்பட்ட உரை பிடிப்பலகையில் சேர்க்கப்படும்.
4. நகலெடுக்கப்பட்ட உரை எங்கு நகலெடுக்க வேண்டுமோ அங்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
5. Ctrl + V அல்லது paste பனிக்குறி அல்லது Edit \(\rightarrow \) paste கிளிக் செய்யவும்
6.
நானோ தொழில்நுட்பம் என்பது இயந்திரங்களை உருவாக்க அல்லது 100 நானோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான ஓர் அணு அல்லது ஒரு மூலக்கூறில் வேலை செயய உதவும் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகும்.
7.
செயற்கூறு வழிகாட்டியை
1. வாய்ப்பாட்டு பட்டையிலுள்ள Function Wizard பொத்தானை கிளிக் செய்தோ அல்லது
2. Ctrl + F2 விசைப்பலகை குறுக்குவழிச் சாவி சேர்மானத்தை பயன்படுத்தியோ (அல்லது)
3.Insert ➝ Function கட்டளை மூலம் பெறலாம்.
8.
1.தமிழில் தட்டச்சு இடைமுகம் முறையில் unicode தொழில் நுட்பம் பின்பற்றுவதால் , தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
2. எந்த ஒரு செயலியிலும் எளிதாக ஆவணத்தை தமிழில் தட்டச்சு செய்யலாம்.
3. '' Arial unicode '' போன்ற unicode எழுத்துகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமில்லாத மற்ற இந்திய மொழிகளிலும் அந்தமொழியின் இடைமுகமாக ஆதரவளிக்கும்.
9.
| முதன்மை நினைவகம் | இரண்டாம் நிலை நினைவகம் |
| 1. குறைந்த அளவு, விலை உயர்ந்தது. | அதிக அளவு, விலை குறைந்தது. |
| 2. அழியும் வகை நினைவகம். | அழியாவகை நினைவகம். |
10.
(i) இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்களில் தரவு மற்றும் நிரல்கள் நிரந்தரமாக சேமித்து வைக்கப்படும்.
(ii) இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் இயல்பாக அழியா நிலையில் இருப்பதால் அவை முதன்மை நினைவகத்திற்கு ஒரு இணை சேமிப்பு சாதனமாகப் பணியாற்றுகிறது.
(iii) இதனால் இரண்டாம் நிலை சேமிப்பு "காப்பு சேமிப்பு" (Backup Stroage) என்றழைக்கப்படுகிறது.
11.
1. கிளிக்
2. இரட்டை கிளிக்
3. வலது கிளிக்
4. இழத்து விடுதல்
5. நகர்த்தல்
12.
1. எண்கணித செயற்குறிகள்
2. ஒப்பீட்டு செயற்குறிகள்
3. பார்வையிடு செயற்குறிகள்
4. உரை செயற்குறிகள்.
13.
1.சில்லுக்களின் கூறுகளுக்கானப் பல்வேறு அசைவுப் படங்கள் தனிப்பயன் அசைவுப் படப் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ளன.
2.அசைவுப்பட விளைவுகளைச் சேர்க்கவோ. மாற்றவோ அல்லது நீக்கவோ இயலும்.
14.
1.நிகழ்த்துதலின் பக்க அமைவை வரையறுக்க முதன்மைப் பக்கம் பயன்படுகிறது.
2.impress-ல் முன்னரே வரையறுக்கப்பட்ட முதன்மைப் பக்கங்கள் இருக்கும்.
3. கொடாநிலை பக்கம் வெற்றிடம் ஆகும்.
4.மற்றவை குறிப்பிட்ட பின்னணி உடையவை.
15.
1.கணிப்பொறி என்பது வன்பொருள் மற்றும் மென்பொருளின் கலவையாகும்.
2. வன்பொருள் என்பது கணிப்பொறியில் உள்ள பருபொருள்களான மதர்போர்ட் (motherboard), நினைவகம் (memory), திரையகம் (monitor) மற்றும் விசைப்பலகை.
3. மென்பொருள்என்பது கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளை அல்லது கட்டளைகளின் தொகுப்பு ஆகும்.
16.
ஒரு உரை ஆவணத்தை உருவாக்குதல், மதிப்பித்தல், கையாளுதல், பரிமாற்றம் செய்தல், சேமித்தல் மற்றும் திரும்ப எடுத்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்யவும் கணிப்பொறி மென்பொருள் '' சொற்செயலி '' ஆகும்.
17.
பைட் (Byte) என்பது 8 பிட்டுகளின் தொகுதி, கணிப்பொறியியல் நினைவகத்தை அளவிடுவதற்கான அடிப்படை அழகு பைட் ஆகும்.
18.
| கோப்பு | கோப்புறை |
|---|---|
| 1. கோப்புத்தரவுகளைக் கொண்டிருக்கும் | கோப்பறை என்பது கோப்பு மற்றும் உள்கோப்புறைகளின் திரட்டு ஆகும். |
| 2. கோப்புகள் சில பைட்டுகள் முதல் கிகா பைட்டுகள் வரையிலான நினைவகத்தை எடுத்துக் கொள்ளும். | கோப்புறைகள் வன்வட்டில் தமக்கென எந்த இடத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. |
19.
பல் பணியாக்கம் என்பது இயக்க அமைப்பு அம்சங்களில் ஒன்றாகும்.பல செயலாக்க செயல்முறை (வேலை) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டுள்ளது.செயலாக்கம் இணையாக செயல்படுவதால் இது இணையாக்க செயலி ஆகும்.
20.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்பது ஒளிக்காட்சி கட்டுப்படுத்தயிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம், LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
21.
எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான பல்வேறு குறியீட்டு முறைகள்
1.BCD -Binary Coded Decimal
2.EBCDIC -Extended Binary Coded Decimal Interchange Code.
3.ASCII -American Standard Code for Information Interchange.
4.ISCII - Indian Standard Code for Information Interchange.
5.Unicode
22.
| தரவு | தகவல் |
|---|---|
| 1. பல்வேறு வகைகளிலும் திரட்டப்படும் அடிப்படைச் செய்தித்துணுக்கு தரவு எனப்படும். இது தொடர்ப்பு கொள்வதற்கும். விளக்குவதற்கும் அல்லது செயலாக்கம் செய்வதற்கும் ஏற்றது. | தகவல் என்பது முடிவுகளை எடுக்கக்கூடிய உண்மைகளின் தொகுப்பாகும். |
| 2. அர்த்தமற்றவை. | அர்த்தமுள்ளவை. |
| எ.கா: 16, 'Arun', 'c' | எ.கா:அருண் வயது 16 |
23.
முன்னரே தொகுக்கபட்ட Layout காட்டப்பட்டுள்ளது. இதில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தி மாற்றம் செய்து தனித் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது custom layout உருவாக சாத்தியம் இல்லை.
24.
| செயல் | குறுக்குவழிச் சாவிச் சேர்மானம் |
| நகலெடுத்தல் | Ctrl + C |
|
வெட்டுதல் |
Ctrl + X |
| ஓட்டுதல் | Ctrl +V |
25.
1. ஒன்றாக இணைக்கப்பட வேண்டிய சிற்றறைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. வலது கிளிக் செய்து அதில் cell \(\rightarrow \) Merge தேர்வு செய்யலாம் அல்லது பட்டி பட்டையிலுள்ள Table \(\rightarrow \) Merge cells என்ற கட்டளையைத் தேர்ந்தெடுக்கலாம்.
26.
1. பல பணி முறையில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளைக் கணிப்பொறிச் செய்ய அனுமதிக்கிறது.
2. பல செயல்கள் இணையாக நிறைவேற்றப்படுவதால், இந்த அம்சமானது அதிகபட்ச இயக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
3. மேலும் கணினிப் பணியின் திறனை மேம்படுத்துகிறது.
27.
1. நினைவகத்தில் எந்தப் பகுதியை தற்போது யார் பயன்படுத்துகிறார்கள் என்று தொடர்ந்து கண்காணித்தல்.
2. நினைவகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நகரும் செயல்முறை மற்றும் தரவுகளைத் தீர்மானித்தல்.
3. முதன்மை நினைவகத்தில், நிரல்களுக்குத் தேவையான நினைவகத் தொகுதிகளை ஒதுக்கிடுதல் மற்றும் நீக்கம் செய்தல் (பயனற்ற தரவுகளின் தொகுப்பு)
28.
1.அமெரிக்க ஐக்கிய நாட்டின் (USA) அங்கீகாரம் பெற்ற மிகவு பிரபலமான ஒரு குறியீட்டு முறையாகும்.
2. பெரும்பாலான கணிப்பொறிகளில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த குறியீட்டு முறை ஆங்கில மொழி எழுத்துருக்களை கையாளும் திறன் பெற்றது. அதாவது, இத முறையில் ஒவ்வொரு எழுத்துருவுக்கும் ஒரு குறிப்பிட்ட எண் வழங்கப்பட்டுள்ளது.
3.ASCII-8 என்ற புதிய பாதிப்பு, 28 பிட் முறையில் 256 எழுத்துருக்களைக் கையாளும் திறன் 0 முதல் 255 வரை குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
4.ஆங்கில பெரிய எழுத்துரு A க்கு நிகரான ASCII குறியீட்டு எண் 65. இதற்கான நிகரான 7 பிட் ASCII யின் இருநிலை மதிப்பு 1000001 ஆகும். ASCII-8 ன் இருநிலை மதிப்பு 01000001.
29.
(i) வரிசை மற்றும் நெடுவரிசைகளைச் சேர்த்தலோ அல்லது அழித்தலோ சாத்தியமில்லை. அனைத்து அட்டவணைச் செயலிகளும் , குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரிசை மாற்றும் நெடுவரிசைகளைக் கொண்டிருக்கும்.
(ii) கூடுதலாக வரிசையையோ, நெடுவரிசையையோ நுண்ணறைகளையோ சேர்க்க முடியாது. நாம் நெடுவரிசையோ அல்லது வரிசையைச் சேர்க்கும் போது, நெடு வரிசை அல்லது வரிசையின் உள்ளடக்கம் அடுத்த நெடு வரிசைக்கோ அல்லது வரிசைக்கு மாற்றப்படும்.
(iii) ஒரு வரிசை அல்லது நெடுவரிசை அளிக்கப்படும் போது, அதில் உள்ள அனைத்துத் தரவுகள், வாய்ப்பாடுகள் மற்றும் வடிவூட்டல்கள் அழிக்கப்படுகின்றது.
(iv) ஆனால், பார்வைக்கு அந்த வரிசை அல்லது நெடுவரிசை அழிக்கப்பட்டது பூல் தோன்றும்.
30.
1. ஒரு நுண்ணறையிலுள்ள தரவுகளையும் வாய்ப்பாடுகளையும் நகலெடுத்து, மற்ற நுண்ணறைகளைத் தேர்வு செய்து அதில் ஓட்டுவதற்கான மாற்று வசதி தானியங்கு நிரப்பு வசதி எனப்படும்.
2. தானியங்கு நிரப்பு வசதியின் மூலம், ஒரு நுண்ணறையில் உள்ள தரவுகள் அல்லது வைப்பாடுகளை, மற்ற நுண்ணறைகளில் நிரப்ப, வாய்ப்ப்டு உள்ளிடப்பட்ட நுஉணர்கையில் நுண்ணறைச் சுட்டியை இருத்தி, அதன் "Drag fill handle" என்றழைக்கப்படும் பகுதியை மற்ற நுண்ணறைகளின் மீது மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து வளமாகவோ இழுக்க வேண்டும்.

31.
1. திரைமுகப்பிலிருந்து, மறுசுழற்சித் தொட்டியைத் திறக்கவும்.
2. அதில், அழிக்கப்பட்ட கோப்புகள் அல்லது கோப்புறைகள் தோன்றும்,மீட்டெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையின் மீது வலது கிளிக் செய்யவும், அப்போது தோன்றும் மேல்மீட்புப் பெட்டியிலிருந்து Restore தேர்வைக் கிளிக் செய்யவும்.
3.மறுசுழற்சித் தொட்டியிலுள்ள அனைத்து கோப்பு அல்லது கோப்புறைகளையும் மீட்டெடுக்க, Restore all என்ற பணிக்குறியை கிளிக் செய்யவும்.
32.
1.ஒரு கோப்பு அல்லது ஒரு கோப்புறையை நகர்த்துவதற்கு முதலில் தேர்ந்தெக்க வேண்டும். பிறகு கீழ் வரும் வழி முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்யவும்.
2.Edit → Cut அல்லது Ctrl + X அல்லது வலது சுட்டி பொத்தானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித் தோன்றும். அதில் Cut என்பதை தேர்வு செய்யவும்.
3.கோப்பு அல்லது கோப்புறையை புதிய இடத்திற்கு நகர்த்துவதற்கு Edit → Paste அல்லது வலது சுட்டி பொத்தானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித் தோன்றும். அதில் Paste என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் கோப்பு புதிய இடத்திற்கு நகர்த்தப்படும்.
33.
தரவுகளில் உள்ள சில அம்சங்களான வடிவூட்டல் அல்லது மதிப்பு போன்றவற்றை மட்டும் அல்லது நகலெடுக்க Paste Special தேர்வை உபயோகிக்க வேண்டும்.
1. நகர்த்த அல்லது நகலெடுக்க வேண்டிய உரையைத் தேர்வு செய்தபின் அது எங்கு தோன்றவேண்டுமோ அந்த இடத்திற்கு பெருகும் புள்ளியைக் கொண்டு சென்று Edit Paste Special அல்லது Ctrl + shift + V அல்லது Alt + E + S கிளிக் செய்தால் Paste special உரையாடல் பேட்டி தோன்றும்.
2. ஓட்டப்பட வேண்டிய உரையின் மூலம் மற்றும் வடிவூட்டலுக்கு ஏற்றவாறு Paste Special பட்டிப்பட்டையின் தோற்றம் மாறும்.
3. Paste Special உரையாடல் பெட்டிலிருந்து DDE (Dynamic Data Expression ) link யை தேர்வு செய்ய வேண்டும்
4. தேவையான பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து Ok பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
5. ஆவணத்தில் நகலெடுத்து ஒட்டப்பட்ட தரவானது , மூல ஆவணத்திற்கும் நகலெடுத்து ஒட்டப்பட்ட ஆவணத்திற்கும் இணைப்பாகச் (link) செயல்படும்
34.
1.Slide Sorter -ஐ ப் பையன்படுத்தி சில்லுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2.அச்சிடும் உரையாடல் பெட்டியைத் திறப்பதற்கு File⟶Print அல்லது Ctrl+P ஐத் தேர்ந்தெடுக்கவும்.
3. அச்சு உரையாடல் பெட்டியின் கீழ் இடது மூலையில், தேவையான விருப்பங்களைத் (Options) தேர்ந்தெடுக்கவும்.
4.உள்ளடக்க பிரிவில் Handouts-ஐச் சரிபார்த்த பின் , OK என்பதைக் கிளிக் செய்யவும்.
5. அச்சு உரையாடல் பெட்டியை மூட OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
35.
1.சில்லுகளின் பரிமாற்றம் பக்கத்தில், சில்லு பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. No Transition என்ற வசதியும் உள்ளது.
2. பரிமாற்றத்தின் வேகத்தை (Slow, Medium, Fast) மாற்றலாம்.
3.தானியங்கியாகவோ சில்லு திரையில் நிற்க வேண்டும் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.
36.
தனியுரிமை ஆதார சொற்செயலிகள்
| மென்பொருள் தொகுப்பு | உருவாக்கியவர் |
|---|---|
| 1. மைக்ரோ சாஃ ப்ட் வேர்டு (Microsoft word) | மைக்ரோ சாஃ ப்ட் கார்ப்பரேசன் (Microsoft corporation ) |
| 2. WPS வேர்டு | கிங் சாப்ட் (Kingsoft ) |
| 3.வேர்டுப்ரோ (wordpro) | லோட்டஸ் கார்ப்பரேசன் |
திறந்த மூல சொற்செயலிகள்
| 1.ஓபன்ஆஃபீஸ் ரைட்டர் (Open office Witer) | அப்பாச்சி (Apache ) |
|---|---|
| 2. லிபரே ஆஃபீஸ் ரைட்டர் (Libre Office Writer ) | தி டாக்குமென்ட் பெளண்டேசன் (The Document foundation ) |
| 3. அபிவேர்டு (abiword) | அபி ஸோர்ஸ் (abisource) |
37.
1. ENIAC (Electronic Numerical Integrator and Calculator)-ஐ ஜே. பிரெஸ்பர் எகெர்ட் மற்றும் ஜான் மெளச்சிலி ஆகிய இருவர் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் 1943ம் ஆண்டின் தொடக்கத்தில் வடிவமைக்கத் தொடங்கினர்.
2. ENIAC 1800 சதுர அடி இடப்பரப்பில் சுமார் 18000 வெற்றிடக்குழல்களுடன் 50டன் எடையில் வடிவமைக்கப்பட்டது.
3. ENIAC ஒரு கணிப்பொறிக்கான அனைத்து அம்சங்கள் கொண்டதாகவும், செயல்படும் விதத்திலும் இருந்ததால், இதுவே முதல் கணிப்பொறியாகக் கருதப்படுகிறது.
38.
| Windows | Ubuntu |
| 1. மூடிய மூல இயக்க அமைப்பாகும். | ஒரு திறந்த மூல இயக்க அமைப்பாகும் |
| 2. Windows இயக்க அமைப்பைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும். | விலையில்லாமல் கிடைக்கிறது. |
| 3.இது நிறுவனம் சார்ந்தது. | சமூகம் சார்ந்தது. |
| 4. ஒரே ஒரு திரை முகப்பைக் கொண்டது. | ஒன்றுக்கும் மேற்பட்ட திரை முகப்பைக் கொண்டது. |
| 5.தானமைவாக Internet Explorer ஐ உலவியாகக் கொண்டுள்ளது. | தானமைவாக Firefox ஐ உலவியாகக் கொண்டுள்ளது. |
| 6. இயங்குநிலைக் கோப்புகளை (executable files)ஆதரிக்கும். | இயங்குநிலைக் கோப்புகளை (executable files)ஐ ஆதரிக்காது. எனவே நச்சு நிரல் தாக்குதல்கள் இல்லை. |
39.
| விண்டோஸ் | லினக்ஸ் |
| 1. ஒரு வணிக தனி உரிமம் பெற்ற இயக்க அமைப்பாகும். | திறந்த- மூல இயக்க அமைப்பாகும். |
| 2. தனிப்பயனாக்கம் செய்வது எளிதல்ல. | . தனிப்பயனாக்கம் செய்வது எளிது. |
| 3. Microsoft நிறுவனத்தால் மட்டுமே வெளியிடப்படுகிறது. | பல்வேறு லினக்ஸ் விநியோகங்கள் உள்ளன. |
40.
| CD | DVD |
| 1. ஒரு சாதாரண CDன் கொள்ளளவு 700MB ஆகும். |
DVD-4.7GB வரை தரவுகள் சேமிக்கும். இந்த அளவு 6-CD க்களின் கொள்ளளவுக்குச் சமமாகும். |
| 2. தரவு எழுதும்/படிக்கும் வேகம் குறைவு. | தரவு எழுதும்/படிக்கும் வேகம் அதிகம். |
| 3. CD-Drive மற்றும் DVD Drive களில் இயக்க முடியும். |
DVD-Drive களில் மட்டுமே இயக்க முடியும். |
| 4. இது பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனது. |
இது கண்ணாடியிழை வட்டு ஆகும். |
41.
1. இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தருக்களை மட்டும் கையாளும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஓர் முறை ISCII ஆகும்.
2.இதுவும் 8 பிட் குறியீட்டு முறையாகும். எனவே இந்த முறையில் 256 எழுத்தருக்களை கையாள முடியும்.
3. இந்திய அரசின் மின்னணு துரையின் (Department of Electronics) கீழ் அமைக்கப்பட்ட தரநிர்ணயக் குழுவால் 1986-88 ஆண்டு வாக்கில் இந்த முறை உருவாக்கப்பட்டு இந்திய தரநிர்ணயக் குழுமத்தால் (Bureau of Indian Standards-BIS) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
4. தற்போது இந்த குறியீட்டு முறை யுனிகோட் முறையில் இணைந்து விட்டது.
42.
| ஒளியியல் சுட்டி | லேசர் சுட்டி |
|---|---|
| 1. ஒளிப் பயன்படுத்தப்படுகிறது. | அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது. |
| 2. இதில் மூன்று பொத்தான்கள் உள்ளன. | அதிகளவாக 12 பொத்தான்கள் வரை இருக்கும். பயனர் தனக்கேற்ற வகையில் அவைகளை நிரலாக்கம் செய்து கொள்ள முடியும். |
| 3. குறைவான உணர்திறன் கொண்டது. | மிகுந்த உணர்திறன் கொண்டது. |
| 4.கடினமான மேற்பரப்பில் செயல்படாது. | எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
43.
1. சில்லுக்காட்சியில் ஒரு சில்லுவைக் காண்பிக்கும் போது தோன்றும் சிறப்பு விளைவுகளே சில்லு மாற்று விளைவுகள் எனப்படும்.
2. நடப்புச் சில்லு மறைவதற்கு பின்பும் அடுத்த சில்லு தோன்றுவதற்கு முன்பும் மாற்று விளைவுகள் தோன்றும்.
3. சில்லுகளுக்கிடையேயான மாற்று விளைவுகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி ஆகும்.
4.இவ்விளைவுகள் சில்லுகளின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
44.
| Backspace | Delete |
| Backspace பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
Delete பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
| இது காட்டிக்கு (cursor) இடப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும் |
இது காட்டிக்கு வலப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும். |
45.
1. வரிசை மற்றும் நெடுவரிசைகளை உருவாக்க அட்டவனையில் தேவையான இடத்தில வலது கிளிக் செய்யவும்.
2. வரிசையை உருவாக்க Row \(\rightarrow \) insert கிளிக் செய்யவும்அல்லது நெடு வரிசையை உருவாக்க Column \(\rightarrow \) insert ஐக் கிளிக் செய்யவும். ஒரு உரையாடல் பேட்டி தோன்றும். இதில் பயனருக்குத் தேவையான வரிசை அல்லது நெடுவரிசைகளின் எண்ணிக்கைகள் சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்கப்படும் வரிசை அல்லது நெடுவரிசைகளை நடப்பு சிற்றரைக்கு முன் அல்லது பின் புதிய வரிசைகளாக அல்லது நெடுவரிசைகளாக சேர்க்க முடியம்.
3. OK பொத்தானைக் கிளிக் செய்தால் உரையாடல் பெட்டி மூடப்படும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards