11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/12/2018
+1 Full Test Question Model
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
Qd = Qs என்பது ________
சமநிலையின்மை
சமநிலை
குறைந்த புள்ளி
உயர்ந்த புள்ளி
2.
ஜிக்மே- சிங்யே-வாங்கக் என்பவர் "மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு"என்ற தொடரை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ______.
1970
1971
1972
1973
3.
விலைத் தேவை நெகிழ்ச்சி ________வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
4.
சிறந்த வாழ்வினை வாழ்வதற்கு _____ மிக முக்கியம்.
உடல்நலம்
தொழில்நுட்பம்
செல்வம்
மேற்காணும் அனைத்தும்
5.
"வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு" என்னும் நூல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _______.
1930
1936
1988
1990
6.
விலை மாற்றத்தினால் அளிப்பில் ஏற்படும் மாற்ற விகிதம் ______ எனப்படும்.
தேவை விதி
அளிப்பு நெகிழ்ச்சி
தேவை நெகிழ்ச்சி
உற்பத்தி
7.
2012-2013 களில் நடைமுறையில் இருந்த கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை _____________
5500
5600
5676
5675
8.
முதல் நிலை விலை பேதம் காட்டுதல் ______ எனவும் அழைக்கப்படுகிறது.
முழு பேதம் காட்டுதல்
நிறைகுறை பேதம் காட்டுதல்
இரண்டும்
எதுவுமில்லை
9.
MRP=_________.
MPP x MR
MPP \(\div \) MR
MPP - MR
MPP + MR
10.
நிலையான மதிப்பின் வகையீட்டுக்கெழு மதிப்பு ______________ ஆகும்.
ஒன்று
பூஜ்யம்
எண்ணிலி (infinity)
எண்ணிலியல்ல
11.
இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்
நிலம்
அமைப்பு
மூலதனம்
உழைப்பு
12.
1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
10
12
14
16
13.
எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?
சண்டிகர்
பாண்டிச்சேரி
இலட்சத்தீவு
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
14.
எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?
1965
1970
1975
1980
15.
நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக __________ துறைக்கானது.
காப்பீட்டுத் துறை
வங்கித்துறை
அ மற்றும் ஆ
போக்குவரத்துத் துறை
16.
விலையின் மற்றொரு பெயர்______
சராசரி வருவாய்
இறுதிநிலை வருவாய்
மொத்த வருவாய்
சராசரி செலவு
17.
உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.
உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு
உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு
18.
வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் ---------- செலவாகும்.
சமூக
பொருளாதார
பண
மாறா
19.
கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.
தேவை விரிவு மற்றும் சுருக்கம்
தேவை இடப்பெயர்வு
தேவை கூடுதல் மற்றும் குறைதல்
மேற்காண் அனைத்தும்
20.
மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்
ஆடம் ஸ்மித்
இலயனல் ராபின்ஸ்
ஆல்ஃபிரட் மார்ஷல்
சாமுவேல்சன்
21.
விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவுகள் யாவை?
22.
பொருளாதார சிக்கனங்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?
23.
பகிர்வுச் சார்பு என்றால் என்ன?
24.
நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்?
25.
தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.
26.
அளிப்புச் சார்பு கொடுக்கப்பட்டுள்ளபோது அளிப்பு நெகிழ்ச்சி கெழு காண சூத்திரம் என்ன?
27.
மற்ற முறைகளிலிருந்து நில உடைமை முறையை வேறுபடுத்துவதற்கான அம்சங்களைக் கூறு.
28.
தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் எவை?
29.
இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.
30.
பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக
31.
இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.
32.
சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.
33.
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
34.
பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.
35.
பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
[பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].
36.
ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதத்தின் மொத்தச் செலவுகளை தயாரிப்பாளர் ஒருவர் TC(Q) = 128 + 60Q + 8Q2 என மதிப்பிடுகிறார். இறுதிநிலை செலவு, சராசரி செலவு, மாறாச் செலவு, மாறும் செலவு, சராசரி மாறாச் செலவு, சராசரி மாறும் செலவு ஆகியவற்றைக் காண்க.
37.
38.
பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?
39.
ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க.
40.
இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அம்சங்களை விவரி.
41.
42.
அகச்சிக்கனக்ஙள் மற்றும் புறச்சிக்கனங்களை விவரி
43.
குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி
44.
45.
10x1 + 6x2 = 60
12 x1 - 4 x2 =16 என்ற அமைப்பின் தீர்வு காண்க.
46.
இந்தியாவில் உடல்நலம் பேனுதலின் பல முறைகளை விளக்குக.
47.
நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.
48.
1948 ன் தொழிற்கொள்கையின் தீர்மானம் பற்றி விவரி.
49.
மூலதனத்தின் சிறப்பியல்புகள் யாவை?
50.
தமிழ்நாடு துறைமுகங்கள் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.
51.
பிழைப்பு மட்டக் கூலிக் கோட்பாட்டை சுருக்கமாக விவரி.
52.
53.
54.
வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.
1.
(b)
சமநிலை
2.
(c)
1972
3.
(d)
ஐந்து
4.
(a)
உடல்நலம்
5.
(b)
1936
6.
(b)
அளிப்பு நெகிழ்ச்சி
7.
(c)
5676
8.
(a)
முழு பேதம் காட்டுதல்
9.
(a)
MPP x MR
10.
(b)
பூஜ்யம்
11.
(b)
அமைப்பு
12.
(c)
14
13.
(b)
பாண்டிச்சேரி
14.
(c)
1975
15.
(c)
அ மற்றும் ஆ
16.
(a)
சராசரி வருவாய்
17.
(c)
உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
18.
(b)
பொருளாதார
19.
(a)
தேவை விரிவு மற்றும் சுருக்கம்
20.
(c)
ஆல்ஃபிரட் மார்ஷல்
21.
1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை (EP=\(\alpha\))
2.முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை (EP=0)
3.மிகைத் தேவை நெகிழ்ச்சி (EP>1)
4.குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை (EP<1)
5. அலகுத் தேவை நெகிழ்ச்சி (EP=1)
22.
பொருளாதார சிக்கனங்கள் இரண்டு வகைப்படும் அவை,
1. அகச்சிக்கனங்கள்
2. புறச்சிக்கனங்கள்
23.
(i) உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, முதல் மற்றும் தொழில் முனையும் திறன் போன்றவை உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
(ii) இந்த உற்பத்திக் காரணிகளுக்கு விலையை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை பகிர்வுச் சார்பு கோட்பாடு விளக்குகிறது.
24.
நிறைகுறைப் போட்டி எனும் கருத்தை 1933-ல் இங்கிலாந்து நாட்டின் ஜோன்ராபின்சன் (John Robinson) மற்றும் அமெரிக்காவின் E.H.சேம்பர்லின் (Chamberlin) ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
25.
1191-ன் புதிய தொழிற் கொள்கையின் கீழ் தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டு வருதலாகும்.
26.
தீர்வு:
அளிப்பு நெழிச்சி கெழுவின் சூத்திரம்

27.
மற்ற முறைகளில் வசூலித்த நிலவருவாயை அப்படியே அரசுக்கு செலுத்த வேண்டும்.ஆனால் நில உடைமை முறையில் வசூலித்ததில் 10/11 பங்கு அரசுக்குச் செலுத்தப்பட்டு 1 பங்கு ஜமீன்தாருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.
28.
கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை தமிழ்நாட்டின் உள்ள முக்கிய அணுமின் நிலையங்களுக்கும்.
29.
இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு வேளாண்மையாகும்.
30.
பகுத்தாய்வு முறை என்பது முழுமை தொகுதியினை பற்றிய கருத்தின் அடிப்படையில் அதன் தனி அலகு ஒன்றினைப் பற்றி கருத்துக் கூறுவதாகும்.
31.
நம் நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். அவை.
1.காடு
2. நீர்
3. கனிம வளங்கள்
4.ஆற்றல் சக்திகள் போன்றவை ஆகும்.
1.இந்தியா பெருவாரியான ஏழை மக்களை கொண்டுள்ளது.
2. இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின்சக்தி, அதிக கனிம வளங்கள்,காடுகள் மற்றும் பல்வேறு மண் வளங்களை அளிக்கிறது.
மண் வளம்:
1.இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
2.உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
வன வளம்:
1.2007ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02%ஆகும்.
2.இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள்,ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்த வெளி காடுகள்.
முக்கியமான கனிம வளங்கள்:
(அ) இரும்புத்தாது:
1.இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமதமாக காணப்படுகிறது.
2.இருப்பு தாது 4630மில்லியன் டன் மற்றும் (மேக்னடைட் )இரும்புத்தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது நமது நாட்டில் இருப்பு உள்ளது.
3.ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
(ஆ)நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1.பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3.மேற்கு வாங்காளம், பீகார், மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
(இ)அலுமினியத்தாது(பாக்சைட்):
1.பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2.கிழக்கு கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதில் அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
(ஈ) மைக்கா:
1.மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2.இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
3.பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
(உ)சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1.இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், படர்பூர், நாகர்காட்டிகா,காசிம்பூர் பள்ளியரியா, ருத்ராபூர் சிவசாகர் மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா, அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள் ) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
(ஊ) தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3.கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்ச்சூரில் ஹிட்டி தங்க வயல் சுரங்கத்திலும்ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
(எ)வைரம்:
1.UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2.அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும்,ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுக்கையிலும் கிடைக்கிறது.
3. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியூபடா மற்றும் பார்கர் மாவட்டம்,மாத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
(ஏ)ஆற்றல்:
நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
32.
நுகர்வோர் சமநிலை:
1.நுகர்வார் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்கள் வாங்க செலவிடுவதன் மூலம் அதிலிருந்து அதிகபட்ச திருப்தியைப் பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும்.
2.சமநிலைக்கான நியதிகள்
\(\boxed{MRS_{xy}=P_x/P_y}\)

வரைபட விளக்கம்:
1.சமநோக்கு வளைகோட்டை அடி மட்டத்தில் வரவு செலவுக்கோடு தொடும் புள்ளியில் நுகர்வோர் சமநிலை அடைகிறார்.
2.AB என்ற வரவு செலவுக் கோடு IC3 என்னும் சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது.
3.இந்த IC3 வளைகோடே அதிக அளவு திருப்தியைத் தரும் வளைகோடாகும்.
4.இந்த சமநிலைப் புள்ளியில் IC யின் சாய்வு (slope)MRSxy யைக் குறிக்கிறது.
5.வரவு செலவுக் கோட்டின் சாய்வு X மற்றும் Y ன் விலை விகிதத்தை குறிக்கிறது \(({P_x / P_y})\)
6.ஆகவே \(MRS_{xy}=({P_x / P_y})\)
33.
கீழ்க்கண்ட நான்கு மூலங்களின் அடிப்படையில் கடன் நிதியின் அளிப்பு அமைகிறது. அவை,
(i) சேமிப்பு (Savings)S
(ii) வங்கிக்கடன் (Bank Credit) BC
(iii) பதுக்கியதை மீட்டல் (Dishoarding) DH
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(i) சேமிப்பு (Savings) S
சேமிப்பிலிருந்து கடன்நிதிகள் பெறப்படுகின்ற சேமிப்பு இரு வகைப்படும். அவை,
(1) தனிநபர்களின் திட்டமிட்ட சேமிப்பு "Ex-ante" சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) LIC பிரிமியம்
(2) திட்டமிடப்படாத சேமிப்பை "Expost" பின்னால் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(ii) வங்கிக்கடன் (Bank Credit) Bc
வணிக வங்கிகள் கடன் உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகளை அளிக்கின்றன.
(iii) பதுக்கியதை மீட்டல்(Dishoarding) DH
(1) பதுக்கிய பணத்தை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவது கடன் நிதிகளின் அளிப்பின் மறறொரு மூலமாகும்.
(2) இந்தியாவில் 1991ல் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் துறைக்கு மாற்றியதால், தனியாரிடமிருந்து நிதி இடம்பெயர்ந்து.
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(1) முதலீட்டிற்கு நேர் எதிரானதாகும்.
(2) உபகாரணங்கள் தேய்மானம் அடையும்போது அதற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் இருத்தல், முதலீடு செய்யாதிருத்தல் எனப்படும்.
முடிவுரை:
மேற்கூறிய நான்கு மூலங்களை கடன் நிதிகளின் அளிப்பு, வட்டி விகிதத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
34.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவைகளாவன,
ரொக்க இருப்பு வீதம்:
(i) 1991ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது.
(ii) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) CRR விகிதத்தையும் 4 ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வட்டி விகிதத் தளர்வு:
(i) வைப்புகளுக்கான வட்டி வீதம்.
(ii) வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தப்பட்டது.
(iii) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
(iv) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் தளர்த்தப்பட்டது.
(v) புதிய கிளைகள் மற்றும் சிறப்புகிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
(vi) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
(vii) வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
35.
(அ) (i) தேவைச்சார்பு என்பது Qt=f(Pt,Y,A,N,Pc)
(ii) தேவை தீர்மானிக்கும் காரணிகளானவன.
Y=குடும்பத்தின் சராசரி வருமானம்
A = பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு.
N = அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை
Pc= பதப்படுத்தப்பட்ட பாலின் விலை.
(ஆ) இம்மாறிகளில் சார்பற்ற மாறிகள் = A மற்றும் N.A என்பது விளம்பரச் செலவு N என்பது மக்களின் எண்ணிக்கை
(இ) குடும்பத்தின் சராசரி வருமானம் கூடும்பொழுது பதப்படுத்தப்படாத பாலின் தேவை அதிகரிக்கும்.
(ii) Pc- பதப்படத்தப்படாத பாலின் விளம்பரச் செலவு அதிகரித்தால் அப்பாலின் தேவை குறையும்.
(iii) அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பாலின் தேவை அதிகரிக்கும்.
(iv) பதப்படுத்தபட்ட பாலின் தேவை அதிகரித்தால் பதப்படுத்தப்படாத பாலின் தேவை குறையும்.
(v) ஆகையால் Qt=-a Pt+bY-cA+dN-e Pc) எனவே இதனை நேர்கோட்டு சார்பு எனலாம்.இங்கு சாய்வின் மதிப்பு எதிர்மறையாக இருப்பதால் இந்த சார்பு தேவைச் சார்பாக அமையும்.
36.
TC(Q) = 128 + 60Q + 8Q2 கொடுக்கப்பட்டுள்ளது.
TC = மாறாச் செலவு + மாறும் செலவு என்பதை அறிவோம்.
MC(Q)=\(\frac { d(TC) }{ dQ } \)
=0+60(I)Q1-1+8(2)Q2-1
=0+60Q0+16Q1(Since, Q0=1)
MC=60+16Q
சராசரி செலவு =\(\frac { TC }{ Q } \)
=\(\frac { 128+60Q+8Q^{ 2 } }{ Q } \)
AC=\(\frac { 128 }{ Q } \)+60+8Q2
மாறிலி மதிப்பினை மாறாச்செலவு என்கிறோம்
மாறாச் செலவு =128
FC =128
சராசரி மாறாச்செலவு =\(\frac { 128 }{ Q } \)
AFC=\(\frac { 128 }{ Q } \)
சராசரி மாறும் செலவு =60 + 8Q (மாறும் செலவினை Q ஆல் வகுக்க)
∴ AVC = 60 + 8Q
37.
38.
சிறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு ;
(i) சிறு தொழில்கள் அதிக தொழிலாளர்களைப் பயன்படுத்தும் துறையாக உள்ளன.
(ii) அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் துறையாக உள்ளது.
(iii) சிறுதொழில் உழைப்பு முதலீடு விகிதம் அதிகம்.
சிறுதொழில் சமமான மண்டல வளர்ச்சி:
(i) சிறு தொழில்கள் பெருபாலும் பின்தங்கிய பகுதிகளிலும் கிராமபுறப் பகுதிகளிலும் அமைவதால் இவற்றின் தாக்கம் பரந்துபட்ட வளர்ச்சியை அளிக்கிறது.
(ii) கிராம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சி வேற்றுமைகளை களைய உதவி செய்கிறது.
உள்ளூர் வளங்களை பயன்படுத்த சிறுதொழில் உதவி செய்கிறது:
(i) சிறு சேமிப்பு , தொழில் முனைவோர் திறமை போன்ற உள்ளூர் சார்ந்த வளங்கள் பயன்பாடற்று வீணாகாமல் அது வெளிப்படவும் , பலருக்கும் பயன்படவும் சிறு தொழில் காரணமாகிறது.
(ii) கைவினைப் பொருட்கள் தயாரிபோரின் பாரம்பரிய குடும்பத் திறன்களை வளர்ச்சியற சிறு தொழில் உதவுகிறது.
மூலதன பயன்பாடு முழுமை பெற சிறு தொழில் வழி வகிக்கிறது:
(i) சிறு தொழில் மூலதனத்தின் தேவை குறைவே இத்துறையில் செய்த முதலீட்டிற்கு காத்திறுப்புக் காலம் மிக குறைவாக இருக்குமாதலால் வருமானம் விரைவில் வர வாய்ப்பு உள்ளது.
(ii) அதிக வெளியிடு மூலதன விகிதத்தையும் அதிக வேலை வாய்ப்பு மூலதன விகிதத்தையும் நிலைப்படுத்தும் சக்தியாக சிறுதொழில் முறை உள்ளது.
சிறு தொழில் முறை ஏற்றுமதியை உருவாக்கிறது:
(i) சிறு தொழில்துறைக்கு அதிநவீன இயந்திரங்கள் தேவையில்லை.எனவே வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்ய அவசியமில்லை.
(ii) இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் சிறு தொழில்கள் கணிசமான அந்நிய செலவாணியை ஈட்டுகிறது.
பெரிய அளவிலான தொழில்களுக்கு சிறு தொழில் நிறுவனங்களின் பங்கு:
(i) சிறு தொழில் நிறுவனங்கள் பெரிய தொழில்களின் வாழ்ச்சிக்கு ஆதரவு தருகின்றன.
(ii) பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைத்துள்ள சிறு தொழில் நிறுவனங்கள் தேவையான அனைத்து பாகங்களையும் தயாரித்து வழங்கி உதவுகின்றன.
சிறுதொழில் நிறுவனங்கள் நுகர்வோர் தேவைகளை நிறைவேற்றுகின்றனர்:
இந்தியாவில் நுகர்வோருக்கு தேவையான பல்வேறு பொருட்களை சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கின்றன
சிறுதொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர்களை உருவாக்குகின்றன:
(i)சமூகத்தில் தொழில் முனைவோர் வர்க்கம் உருவாக சிறுதொழில் நிறுவனங்கள் உதவுகின்றன.
(ii) வேலை தேடுவோரை வேலை வாய்ப்பை வழங்குவோராக மாற்றுகின்றன.
(iii) மக்கள் சுயவேலை வாய்ப்பு மற்றும் தற்சார்பு நிலையை அடைய உதவுகின்றன.
39.
ஊரகக் கடன் சுமை:
ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஊரகக் கடன்களுக்கான காரணங்கள்:
விவசாயிகளின் ஏழ்மை நிலை:
வறுமைக்கொடும் சுழலானது நுகர்விற்காகவும், விவசாயத் தொழிலை மேற்கொள்வதற்காகவும் மற்றும் குடும்ப விழாக்களுக்காகவும், விவசாயிகளின் கடன் பெறத் தூண்டுகிறது.
பருவமழை பொய்த்தல்:
(i) அடிக்கடி பருவமழை பொய்த்துப் போவது விவசாயிகளுக்கு சாபமாக அமைகிறது.
(ii) விவசாயம் எப்போதும் சிறக்கும், கடன்களை அடைக்கலாமென அவர்களால் கணிக்க முடியவில்லை.
வழக்குகள்:
(i) நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், அதிக கடன் பெறுகிறார்கள்.
(ii) கல்வியறிவின்மையாலும், அறியாமையாலும் வழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகிறது.
வட்டிக்கு கடன் தருவோர் மற்றும் அதிக வட்டி வீதம்:
உள்ளூரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி வசூலித்தல் (ம) அசலுடன் வட்டியை சேர்த்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் விவசாயிகள் கடனிலேயே மூழ்கும் நிலை உளது.
40.
1. இந்தியப் பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரம்:
1. இந்தியப் பொருளாதாரம் கலப்பு பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2. தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரிய முறையில் செயல்படுவது. ஒரு புறம் மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் பொதுத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன.
2. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது:
1. இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
3. இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது.
3.வளர்ந்து வரும் சந்தை:
1. முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் சந்தை பிற நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
2.இந்தியா குறைந்த முதலீட்டில் குறைவான இடர்பாட்டு காரணிகளினால் அதிகமான வளர்ச்சி சாந்தியங்களைக் கொண்டுள்ளதால் நம் நாடு வேகமாக வளர்ந்து சந்தையாக மாறி இருக்கிறது.
4. வளர்ந்து வரும் பொருளாதாரம்:
விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.
5.வேகமாக வளரும் பொருளாதாரம்:
இந்தியப் பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சியினை கொண்டது.
6. வேகமாக வளரும் பணிகள் துறை:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பாகும்.
7. பேரளவு உள்நாட்டு வளர்ச்சி:
நமது நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதால் உள்நாட்டு நுகர்வு பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது.
8. நகரப் பகுதியின் விரைவான வளர்ச்சி:
பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளில் நகரமயமாதல் முக்கிய அறிகுறியாகும்.
9. நிலையான பேரளவு பொருளாதாரம்:
1. நாடுகளில் இந்திய ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2."நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம் "என்று குறிப்பிடுகிறது.
10. மக்கள்தொகை -பகுப்பு;
1. இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது.
2.இந்தியா அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
3.நாடு உச்ச வளர்ச்சி அடைவதற்கு மனிதவளம் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது.
4.வெளிநாட்டு முதலீட்டையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் ஈர்க்கிறது.
41.
42.
பொருளாதார சிக்கனம்:
பொருளாதார சிக்கனம் என்பது உற்பத்திக்காரணங்களை பயன்படுத்தும் விகிதம் மாறுபடுவதால் வரும் நன்மையாகும்.
பொருளாதார சிக்கனம் இரு வகைப்படும்:
1. அகச் சிக்கனங்கள்
2. புறச் சிக்கனங்கள்
1. அகச் சிக்கனங்கள்:
1. அகச்சிக்கனம் என்பது நிறுவனம் பொருளின் உற்பத்தி செலவினை குறைந்து பெறும் நன்மையினை குறிக்கும்.
2. நிறுவனமானது புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதாலும் புதிய முதலீட்டை உருவாக்குவதாலும் உற்பத்தி செலவினை குறைக்கிறது.
(அ) தொழில்நுட்ப சிக்கனங்கள்:
1. தொழில் நுட்ப சிக்கனங்கள் என்பது நிறுவனத்தின் பெரிய அளவாக இருப்பதால் கிடைக்கும் மூலதனமும் அதிகமாக இருக்கும்.
2. ஒரு நிறுவனம் நவீன நுட்பங்களை புகுத்த முடியும்.
(ஆ) நிதிச் சிக்கனங்கள்:
பெரிய நிறுவனங்கள் சந்தையில் பங்கு விற்பனை மூலம் மூலதன பெருக்கத்தை ஏற்படுத்தலாம்.
(இ) மேலாண்மை சிக்கனங்கள்:
பேரளவு உற்பத்தி வேலைப்பகுப்பு முறைக்கு உதவுகிறது. இதன் மூலம் சரியான வேலையாட்கள் சரியான துறையில் இருப்பார்கள்.
(ஈ) உழைப்புச் சிக்கனங்கள்:
பேரளவு உற்பத்தி வேலை பகுப்பு முறைக்கு வழிவகுக்கிறது. சிறப்பு உழைப்பு எனலாம்.
(உ)சந்தை சார்ந்த சிக்கனங்கள்:
1. பேரளவு உற்பத்தியின் காரணமாக மூலப்பொருட்கள் குறைந்த விலைக்கு வாங்க இயலும்.
2. தொலைதூர சந்தையில் பொருட்களை விற்க முடியும்.
(ஊ) சந்தையில் தொடர்ந்திருப்பதன் சிக்கனங்கள்:
1. பெரிய நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யலாம்.
2. உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருளின் சந்தையில் தோல்வியுற்று இழப்பு நட்ட மேற்பட்டாலும் வேறொரு பொருளின் இலாபத்தினால் இழப்பினை ஈடு செய்ய முடியும்.
2. புறச்சிக்கனங்கள்:
அ. புறச் சிக்கனங்கள் என்பது நிறுவனத்திற்கு வெளியே ஏற்படும் மாற்றங்களால் உற்பத்தியின் முறைகளில் ஏற்படும் மேம்பாடுகளைக் குறிக்கும்.
ஆ. ஒரு நிறுவனம் மட்டும் பெறும் நன்மை அல்லாது அனைத்து நிறுவனங்களும் பெறும் நன்மை அல்லாது அனைத்து நிறுவனங்களும் பெறும் பயனாகும்.
இ. மேம்பட்ட போக்குவரத்து வசதிகள்.
ஈ. வங்கி செயல்பாடு சார்ந்த வசதிகள்.
உ. நகரியல் வளர்ச்சி.
ஊ. தகவல் மற்றும் தொலை தொடர்பு வளர்ச்சி.
43.
மொத்த மாறாச் செலவு (TFC):
1. மாறாத உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மொத்த மாறாச் செலவாகும்.
2. மொத்த மாறாச் செலவு உற்பத்தி அதிகரித்தாலும், குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறுபடுவதில்லை.
மொத்த மாறும் செலவு (TVC):
1. மாறும் உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மாறும் செலவாகும்.
2.உற்பத்தி புஜ்ஜியமாக இருக்கும் போது மாறும் செலவு புஜ்ஜியமாக உள்ளது.
மொத்தச் செலவு(TC):
1. ஓர் உற்பத்தியில் ஏற்படுகின்ற பல்வேறு செலவுகளில் மொத்த கூடுதல் அந்நிறுவனத்தின் மொத்தச் செலவு எனப்படுகிறது.
2.

சராசரி மாறாச் செலவு (AFC):
1. சராசரி மாறாச் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறாச் செலவு என்பதாகும்.
2. சராசரி மாறாச் செலவு என்பது, மொத்த மாறாச் செலவை, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AFC={TFC\over Q}}\)

சராசரி மாறும் செலவு (AVC):
1. சராசரி மாறும் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறும் செலவைக் குறிக்கும்.
2. மொத்த மாறும் செலவை உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AVC={TVC \over Q}}\)

4.AVC- வளைகோடு 'U'வடிவத்தில் இருக்கும்.
சராசரி செலவு(AC):
1.சராசரி செலவு என்பது ஒரு பண்டத்திற்கான ஓர் அலகு செலவு ஆகும்.
2. (அ) \(\boxed{AC=AFC+AVC}\)
\(\boxed{AC={TC\over Q}}\)

| Q in unit | TFC in (Rs) | TVC in (Rs) | TC(TFC+TVC) in (Rs) | ATC TC/Q(in Rs) | AFC (TFC / Q )in (Rs) | AVC (TVC / Q)in (Rs) | ATC (AFC+AVC)(in Rs) |
| 0 | 1000 | 0 | 1000 | 1000/0=\(\alpha\) | 0 | 0 | 0+0=0 |
| 1 | 1000 | 200 | 1200 | 1200/1=1200 | 1000 | 200 | 1000+200=1200 |
| 2 | 1000 | 300 | 1300 | 1300/2=650 | 500 | 150 | 500+150=650 |
| 3 | 1000 | 400 | 1400 | 1400/3=466 | 333 | 133 | 333+133=466 |
| 4 | 1000 | 600 | 1600 | 1600/4=400 | 250 | 150 | 250+150=400 |
| 5 | 1000 | 900 | 1900 | 1900/5=380 | 200 | 180 | 200+180=380 |
இறுதிநிலைச் செலவு (MC):
1.கூடுதலாக ஓர் அலகுப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் மொத்த செலவில் ஏற்படுகின்ற கூடுதல் இறுதிநிலைச் செலவு எனப்படும்.
2.\(\boxed{MC=\triangle TC / \triangle Q}\) (or) \(\boxed{MC= TC_n-TC_{n-1}}\)

44.
45.
சமன்பாடுகளின் கெழு மற்றும் மாறிலி உறுப்புகள் பின்வருமாறு தரப்படுகின்றன.
\(\triangle =\)\(\begin{vmatrix} 10 & 6 \\ 12 & -4 \end{vmatrix}\)
=-40-72
=-112
\(\triangle x_1 =\)\(\begin{vmatrix} 60 & 6 \\ 16 & -4 \end{vmatrix}\)
=-240-96
\(\therefore \triangle x_1 =\) -336
\(\triangle x_2 =\)\(\begin{vmatrix} 10 & 60 \\ 12 & 16 \end{vmatrix}\)
=160-720
\(\boxed {\triangle x_2 =-560}\)
\(\triangle x_1 ={\triangle x_ 1\over \triangle}\)

\(\boxed {\therefore x_1 =3}\)
\( x_2 ={\triangle x_ 2\over \triangle}\)

x2=+5
\(\boxed {\therefore \triangle x_1 =3,x_=5}\)
46.
இந்தியாவில் உடல்நலம்:
1.இந்தியாவில் உடல்நலம் மாநில அரசின் பொறுப்பில் வருகிறது.
2.மத்திய சுகாதாரம் மற்றும் நலவாழ்வு கழகம் பல்வேறு நலக் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைபடுத்தி வருகிறது.
3.இந்தியாவில் உடல் நலம் பேனுதல் பல முறைகளில் (பல வடிவங்களில்).
4.ஆயுர்வேதம்,சித்தா, யுணானி,மூலிகை மருத்துவம், ஹோமியோபதி,ஆங்கில மருத்துவம்,யோகா போன்ற பல முறைகள் இங்குண்டு.
5.ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிகிச்சை முறைகள் மற்றும் சிறப்பு குணங்கள் உள்ளன.
6.இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நடுவன் நலதுறை அமைச்சகத்திடமிருந்து முறையான அனுமதி பெறவேண்டும்.
7.அனைத்து மருத்துவ நடைமுறைகளும் ஒரே அமைச்சகத்தின் கீழ் (ஆயுஷ்-ayush)தற்போது உள்ளன.
47.
1. ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது.
2. பொருளாதாரக் கொள்கைக்கான கருவியைத்தருகிறது.
3. பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
4. வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
5. பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
6. பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
7. வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
8.முன்கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
9. விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
48.
(i) இந்திய அரசு தொழில் மயமாதலில் குறிப்பிடதக்க பங்களிப்பை உணர்ந்தது
(ii) 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று முதல் தொழிற் கொள்கையை அறிவித்தது.
(iii) இதன் முக்கிய நோக்கம் இந்தியாவில் கலப்பு பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதாகும்.
(iv) இந்தியத் தொழில்கள் நான்கு வகைகளாப் பிரிக்கப்பட்டன. அவை பொதுத்துறை கட்டுப்படுத்த தனியார் துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்
(v) இக்கொள்கை குடிசைத் தொழில்கள் மற்றும் சிறிய அளவிலான தொழில்களை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டது
(vi) இருப்ப பாதைகள் இரும்புத்தாது முதலான கனிம வளங்களுக்கான பிரத்தியேக உரிமையில் மற்றும் மத்திய அரசுகள் ஏகபோகம் பெற்று இருந்தன
(vii) இந்திய அரசு பிற நாடுகளிருந்து கிடைக்கூடிய வெளிநாட்டு முதலீட்டின் முக்கியத்துவத்தை ஊக்குவித்தலும் அதன் முழுக் கட்டுப்பாடு இந்தியர்களின் கரங்களிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செயத்து
49.
1. மூலதனம் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது.
2. மூலதனம் மனிதனுக்கு மனிதன், இடத்திற்கு இடம்,இடம் பெயரக்கூடியது.
3.மூலதனம் செயலற்ற உற்பத்திக் காரணியாகும்.
4.மூலதனத்தின் அளிப்பு நெகிழும் தன்மையுடையது.
5.மூலதனத்தின் தேவை என்பது தருவிக்கப்பட்ட தேவையாகும்.
6. மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்.
50.
(i) சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும்.
(ii) நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகங்களாகும்.
(iii) மேலும் 23 சிறு துறைமுகங்களும் உள்ளன.
(iv) தற்போது ஆண்டுதோறும் 73 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டவை.
(v) 24% அனைத்து சிறிய துறைமுகங்களும் தமிழ்நாடு கடல்சார் மையத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
(vi) சென்னை துறைமுகம் கன்டெயினர்களைக் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கிய செயற்கைத் துறைமுகமாகும்.
(vii) இது 4,00,000 வாகனங்களைக் கையாளக்கூடிய அர்ப்பணிப்பு முனையமாக தற்போது மேம்படுத்தப்பட்டு அனைத்து விதமான நிலக்கரி மற்றும் கனிம போக்குவரத்துக்களை கையாள்கிறது.
51.
(i) கூலி கோட்பாடுகளில் மிகப் பழமையான ஒன்று பிழைப்பு மட்டக் கோட்பாடாகும் .
(ii) முதன் முதலில் பிரெஞ்சு பொருளியலாளர்களான இயற்கைவாதிகள் இதை விளக்கியுள்ளனர்.
(iii) ஓர் உழைப்பாளி மற்றும் அவர் குடும்பத்தின் அடிப்படைத்தேவைகளின் அளவிற்குச் சமமாக கூலி வழங்கப்பட வேண்டும் என்பது இக்கோட்பாட்டின் கருத்தாகும்.
(iv) உழைப்பாளிக்கு பிழைப்பு மட்ட அளவைவிட அதிக கூலி வழங்கினால் அவர் நல்ல நிலையையடைந்து அவரின் குடும்பம் பெரிய குடும்பமாக மாறிவிடும். எனவே மக்கள் தொகை பெருகிவிடும்.
(v) இக்கோட்பாடானது மால்தஸின் மக்கள்தொகை கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.
குறைபாடுகள்:
(i) தொழிற்சங்கத்தின் கூட்டு பேரம் பேசும் ஆற்றல் கவனத்தில் கொள்ளப்படவில்லை
(ii) பல்வேறு கூலி நிலைகளை விளக்க இக்கோட்பாடு தவறிவிட்டது.
(iii) குழந்தை பிறப்பை நிர்ணயிப்பது கூலி மட்டும் இல்லை கூலி விகிதம் கூடுவதால் மக்கள் தொகை கூடும் என்பது தற்போதைய சூழலில் பொருத்தமாக இல்லை.
52.
53.
54.
| வ.எண் | வெளியுறு செலவு | உள்ளுறு செலவு |
| 1. | உற்பத்திக் காரணிகளை வாங்கு மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும். | நிறுவனத்திற்குச் சொந்தமான உற்பத்தி வளங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளார்ந்த செலவு எனப்படும். |
| 2. | ஒரு நிறுவனம் தன்னுடைய உற்பத்திக்கு தேவையான காரணிகளை விலைக்கு வாங்கியோ அல்லது வாடகைக்கு அமர்த்தியோ உற்பத்தியை மேற்கொள்ளும் போது ஏற்படும் ஒட்டு மொத்த செலவு வெளிப்படையான செலவு. | நிறுவனத்திற்கு சொந்தமான வளங்கள் மற்றும் சுய உழைப்பிற்கான செலவுகள் உள்ளார்ந்த செலவுகள். |
| 3. | வெளிப்படையான செலவு என்பது கணக்கியல் செலவு அல்லது பணச் செலவு என்று அழைக்கப்படும். | உள்ளார்ந்த செலவு என்பது மறைந்திருக்கும் செலவு அல்லது எட்டுச் செலவு என்றழைக்கப்படும். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards