11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/12/2018
11th Model Revision Test
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் _______________ ஆகும்.
கோவா
டையூ
டாமன்
சூரத்
2.
________ தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் செளசாப் போரில் வெற்றி பெற்றார்.
பாபர்
ஹீமாயூன்
ஷெர்கான்
அக்பர்
3.
சமண மதத்திலிருந்த போது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார்.
அரிசேனா
தீர்த்தங்கரர்
சிவஞான சித்தியார்
தர்மசேனர்
4.
புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______
ருத்ராமன்
ருத்ரமறன்
ருத்ரதாசன்
ருத்ரதாமன்
5.
_____ என்ற நூலை கங்காதேவி எழுதினார்.
மனுசரித்ரா
ஆமுக்த மால்யதா
பாண்டுரங்க மகாத்மியம்
மதுரா விஜயம்
6.
தமிழகத்தில் "இருண்ட காலம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது _________________
சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்
வெளிர்கள் ஆட்சிக்கலாம்
பகல்வர் ஆட்சிக்கலாம்
களப்பிரகர் ஆட்சிக்கலாம்
7.
அலெக்ஸ்சாண்டரின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய போர்_____________எனப்படுகிறது.
ஜீலம்
பாரசீக
ஹைடாஸ்பஸ் போர்
தட்சசீல
8.
விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும் _____ எனப்பட்டார்கள்.
சூத்திரர்
ஷத்திரியர்
வணிகர்
கர்மகாரர்
9.
ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.
சார்லஸ் மேசன்
அலெக்ஸாண்டர் ப்ரன்ஸ்
சர் ஜான் மார்ஷ்ல்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
10.
சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------
மொக
ருத்ரதாமன்
அஸிஸ்
யசோவர்மன்
11.
அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________
முபாரக் ஷா
ஆலம் கான்
கிசர் கான்
துக்ரில் கான்
12.
_____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
மூன்றான்றாம் குலோத்துங்கன்
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் இராஜராஜன்
பராந்தகன்
13.
காம்போஜம் என்பது நவீன ………………
அஸ்லாம்
சுமத்ரா
ஆனம்
கம்போடியா
14.
பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
கிரகவர்மன்
தேவகுப்தர்
சசாங்கன்
புஷ்யபுத்திரர்
15.
_______என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்
சாகுந்தலம்
ரகுவம்சம்
குமாரசம்பவம்
மேகதூதம்
16.
17.
_____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
ராஜதரங்கிணி
முத்ரராட்சசம்
18.
அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பெளத்த நூல் _____________
சீவகசிந்தாமணி
அச்சரங்கசூத்திரம்
கல்பசூத்திரம்
சமண்ணப சுத்தம்
19.
கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை .
காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.
கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரியானது. காரணம் தவறானது
கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .
20.
எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்காலம்
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
21.
இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக
22.
அக்பர், பைராம்கானை எவ்வாறு கையாண்டார்?
23.
சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக.
24.
பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
25.
பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்.
அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்கள்
26.
கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்
27.
அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
28.
ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?
29.
30.
31.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
32.
சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.
33.
வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்?
34.
35.
"வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.
36.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?
37.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
38.
பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
(1) ஊரார் (2) சபையார் (3) நகரத்தார் (4) நாட்டார்
39.
பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.
40.
ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக
41.
பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
42.
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவுமலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?
43.
சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
44.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
45.
சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?
46.
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.
47.
ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலை களை விளக்குக
48.
வைகுண்ட சாமிகள்
49.
அக்பரது சித்தூர் முற்றுகை.
50.
காரன்வாலிஸின் நீதித்துறை சீர்திருத்தம்.
51.
தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக்கோயில்கள் யாவை?
52.
மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?
53.
மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
54.
எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக்கோயில்.
1.
(a)
கோவா
2.
(c)
ஷெர்கான்
3.
(d)
தர்மசேனர்
4.
(d)
ருத்ரதாமன்
5.
(d)
மதுரா விஜயம்
6.
(d)
களப்பிரகர் ஆட்சிக்கலாம்
7.
(d)
தட்சசீல
8.
(a)
சூத்திரர்
9.
(c)
சர் ஜான் மார்ஷ்ல்
10.
(b)
ருத்ரதாமன்
11.
(b)
ஆலம் கான்
12.
(b)
முதலாம் இராஜேந்திரன்
13.
(d)
கம்போடியா
14.
(a)
கிரகவர்மன்
15.
(a)
சாகுந்தலம்
16.
(d)
17.
(a)
அர்த்தசாஸ்திரம்
18.
(d)
சமண்ணப சுத்தம்
19.
(b)
கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
20.
(a)
வரலாற்றுக்கு முந்தைய காலம்
21.
1. இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா ஆவார்.
2. "நீல நீர்க் கொள்கை"யை அவர் அறிமுப் படுத்தினார். இக்கொள்கையின் மூலம் அவர் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுபடுத்தினார்.
22.
1. தன் சாதனைகளின் காரணமாய் பைராம்கான் தன்போன்ற ஏனைய பிரபுக்களிடம் ஏளனத்துடனும் இறுமாப்போடும் நடந்து கொள்ளத் துவங்கினார்.
2. இதனால் கோபம் கொண்ட அக்பர் பைராம்கானைப் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
3. இதன் விளைவாகப் பைராம்கான் கலகம் செய்ய அக்பர் அதைச் சாதுர்யமாகக் கையாண்டார்.
4. இறுதியில் அக்பர் முன் ஓப்படைக்கப்பட்ட பைராம்கான் மெக்காவுக்கு அக்பரின் அறிவுரையின்படி புறப்பட்டார்.
23.
1.பீஜப்பர் சுல்தான் சிவாஜியின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். அதற்காக நியமிக்கப்பட்டவர் அஃப்சல்கான்.
2. அவர் "மையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை" சங்கிலி கட்டி இழுத்துக் கொண்டு வருவதாக அப்சல்கான் சூளுரைத்தார்.
3. மலைப்பாங்கான பகுதியில் சண்டையிடுவது அவருக்கு சிரமமாக இருந்தால் சூழ்ச்சி மூலம் சிவாஜியை வீழ்த்த நினைத்த அப்சல் கான் தோல்வியை சந்தித்தார்.
24.
(i) இடங்களைக் கைப்பற்றுதல், கப்பம் வசூலித்தல், குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.
(ii) கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட வளம் மிக்க ரெய்ச்சூர் பகுதியை இணைத்துக் கொள்ளவும், மேலாதிக்கம் செலுத்தவும் இருவருமே விரும்பினர்.
(iii) சில வரலாற்று ஆய்வாளர்கள் இந்து விஜய நகரத்திற்கும், இஸ்லாமிய பாமினி அரசுகளுக்கு இடையே நிலவிய மதப் பகைமையே போர்களுக்கான அடிப்படைக் காரணமென்று கருதுகின்றனர்.
25.
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
இந்தியாவிலிருந்து ரோமுக்கு மிளகு, முத்துகல், தந்தம், பட்டுத்துணி, விளாமிச்சை வேர் தைலம், தாளிசபத்திரி என்ற நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு மற்றும் பருத்தி துணிகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன
இறக்குமதி பொருட்கள்
ரோமிலிருந்து இந்தியாவிற்கு நாணயங்கள், புஸ்பராசக்கல், அஞ்சனம், பவழம் கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
26.
(i) கஜினி முகமது இந்தியா வரும்போது கணிதவியலாளரும், தத்துவஞானியும் வானவியலருமான அல்-பெருனியை தன்னுடன் அழைத்து வந்தார்.
(ii) அல்பெருனி ஹிதாப் -இ-ஹிந்த் என்ற நூலை இயற்றினார்.
(iii) பாரசீக கவிஞரான பிர்தொளசி, ஷாநாமாவை இயற்றினார்.
(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி, சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
27.
(i) ஸ்ரீராமானுஜர், திருரங்கம் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கோவிலையும், மடத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
(ii) ராமானுஜர் கோவில் சடங்குகளை மாற்றி அமைத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி.
(iii) வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக்கொண்டார்.
(iv) ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடம் பக்தி கோட்பாட்டை பரப்புவதில் ஆர்வம் கொண்டார்.
(v) கோயில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரையும் ஆண்டிற்கு ஒரு முறையாவது கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார்.
இவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய மதமாகி வைணவத்தை மாற்றினார்.
28.
கன்னோசியின் அரசராக ஹர்ஷர்:
i) கன்னோசியின் முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரைப்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தார்
ii) தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகி தேஷ்வர போதிசத்வரின் அறிவுரைகளின்படி ராஜ்புத்திரர், சிலாத்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.
iii) ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தனேஸ்வரமும்ம் கன்னோசியும் ஒன்றாக இணைந்தன.
iv) பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரை கன்னோசிக்கு இடம் மாட்டிக்கொண்டார்.
29.
30.
31.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
32.
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் தக்காணத்தில் ஒரு வலுவான அரசை சாதவாகனர்கள் நிறுவினர். அதே காலகட்டத்தில் தமிழக பகுதியில் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கப்பட்ட மூவேந்தர்கள் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளாமான தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அவை முறையே.
தொல்பொருள்:
1. தொடக்க வரலாற்றுக் காலத்தை சார்ந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள்.
2. அரிக்கமேடு, கொடுமணல், ஆலங்குளம், உறையூர் போன்ற இடங்களில் காணப்பட்ட கட்டிட இடிபாட்டுத் தடயங்கள்.
3. துரைமுகங்கள், நகரங்கள் உள்ளிட்ட பழங்கால இடங்களில் அகழ்வாய்வின் மூலம் பெறப்பட்ட பொருள்கள்.
4. ஆந்திரா - கர்நாடகப் பகிதிகளில் அமைந்துள்ள ஸ்தூபிகளும், சைத்யங்களும்.
நாணயச் சான்றுகள்:
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமான பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்து.
33.
1. வங்காளத்திலிருந்து தப்பியோடிய மீர்காசிம் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாபான சூஜா உத்தெளலா ஆகியவர்களோடு கூட்டு சேர்ந்தார். தங்கள் உள் விவகாரங்களில் வணிகக்குழு தலையிடுவதால் அவர்களும் மனக்குறையோடு இருந்தனர்.
2.இம்மூவரும் வணிக்குழுவுக்கு எதிராகப் போர் அறிவுப்புச் செய்தனர். 1764 இல் பக்சார் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் இம்மூவரும் வீரத்துடன் போரிட்டனர். வணிகக்குழுவின் படைகள் சிறப்பு வாய்ந்ததாக இருந்தமையால் அவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
3. பக்சார் போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றி 1765 இல் அலகாபாத் உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. ராபர்ட் கிளைவும் இரண்டாம் ஷாஆலமும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
4.இவ்வுடன்படிக்கையின் மூலம் வணிகக்குழு வங்களாம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் திவானி (நிலவரி வசூலிக்கும் உரிமை) உரிமையைப் பெற்றது.
5.மேலும் வங்காளத்திலிருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களையும், கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றது.
6. ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.
34.
35.
1.ஷெர்ஷா தனது அரசை மையப்படுத்தப்பட்ட அரசாக மாற்றினார்.
2. நெகிழ்வுத் தன்மை கொண்ட வருவாய் முறையைப் பின்பற்றினார்.
3. நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு எவ்வாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
4. சில பகுதிகளில் ஜாகீர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன.
5. வேறுபல இடங்களில் மொத்த வேளாண் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வாரியாக வசூலிக்கப்பட்டது.
6. ஷெர்ஷா விவசாயிகளிடம் கொண்டிருந்த அதே அக்கறையை வர்த்தகர்களிடமும் கொண்டிருந்தார்.
7. வணிகத்தை ஊக்குவிப்பதற்காக வணிக வரிகளை எளிமைப்படுத்தினார்.
வணிகமும், வர்த்தகமும்:
1. வணிகத்தையும் வர்க்கத்தையும் மேம்படுத்தும் பொருட்டு உறுதியான சாலை வசதி முறையை ஷெர்ஷா பராமரித்தார்.
2. பழைய சாலைகள் புதுப்பிக்கபட்டதோடு புதிய சாலைகளும் அமைக்கப்பட்டன.
3. அனைத்துச் சாலைகளிலும் 'சராய்' எனப்படும் சாத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப் பட்டன.
4. இவ்வேற்பாடுகள் விறுவிறுப்பான வணிகத்திற்கு உத்தரவாதம் அளித்தன.
5. ஷெர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன.
6. இத்தகைய சராய்கள் தங்களுக்கு அருகே நகரங்கள் உருவாவதையும் உறுதி செய்தன.
7. மிகவும் புகழப்படும் அக்பர், தோடர்மால் ஆகியோரின் நிதிநிர்வாக முறை பெருமளவில் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையினை அடித்தளமாகக் கொண்டதாகும்.
36.
(i) பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க கூடியதாக இந்திய நிலமே விளங்கியது.ஆதனால் வேளாண் நிலத்தை விரிபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காக காடுகள் அழிக்கப்பட்டன.
(ii) jungle மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப் பட்டன.இந்நிலங்களின் பூர்விக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டன.
(iii) ஆகவே சந்தால் இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்ந்தார்கள்.ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது.ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை அழித்தார்கள்.
(iv) ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை.எனினும் விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்ட்ங்களை உருவாக்க முயன்று கொண்டே இருந்தார்கள்.இருப்புப் பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன.
(v) 1870 களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப்பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப்பயன்படுத்தப்பட்டன.
(vi) இந்திய மரங்களில் கால் , தேவதாரு , தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன.வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜுங்கிள் மஹல் காடுகளிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன.
(vii) இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும் பொருட்டு இந்துயாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன.இந்தியக் காடுகளின் செல்வ வளம் அழிக்க முடியாதது என்ற தொன்மைக் கூற்று உடைப்பட்டது.
(viii) இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865 இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களை பூர்விக குடிகள் பய்னபடுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியை பெற்றது.
(xi) அவர்களின் எதிர்ப்பையும் பிறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் 1871 இல் இயற்றப்பட்டது.காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராக கிளர்தெழுந்தனர்.
(x) காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
37.
1.நில வருவாய் தான் முக்கிய வருவாயாக இருந்தது.
2.நிலத்தின் உற்பத்தித்திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
3.சரியான புள்ளி விவரத்துடன் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.
4.செளத் மற்றும் சர்தேஷ்முகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்களாக இருந்தன.
5.சுங்கம், கலால் வரி, வனப் பொருட்களின் விற்பனை ஆகியன மூலமாகவும் வருவாய் கிடைத்தது.
6.தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
7.கிராம மக்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
8.கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
9.பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டு வரி.
10.எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்காக வருடாந்திர கட்டண வரி.
11. விதவைகள் நிலவரி, நதிக்கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி.
12. வாரிசு உரிமை வரி.
13.குதிரை விற்பதற்கான வரி மற்றும் பல.
14. மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளருக்கும் வரி விதித்தது.
15. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது.
38.
(1) ஊரார்
1. வேளாண் குடியிருப்புகளால் நிறைந்த கிராமப்பகுதி ஊர் எனப்பட்டது. இங்குள்ள நில உடமையாளர்கள் 'ஊரார்' எனப்படும் நிர்வாகப் பிரதிநிதியாகச் செயல்பட்டனர்.
2. கோயில் நிர்வாகம், குளங்களை பராமரித்தல், குளத்து நீரை மக்களின் தேவைக்கு வழங்குதல் வரிவசூல், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, அரசரின் கட்டளைகளை நிறைவேற்றுதல் போன்ற நிர்வாகப் பொறுப்புகளை இவர்கள் கவனித்தனர்.
(2) சபையார்
1. பிரம்மதேயம் எனப்படும் பிராமணர் குடியிருப்பின் மையமாக விளங்கிடும் கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களை நிர்வாகிப்பது சபையின் முக்கிய பணியாகும்.
2. மேலும் கோயில் நிலங்களில் காணப்படும் குளங்களை பராமரித்தல் மற்றும் நதி, நீதி, நிர்வாகம் சார்ந்த பணிகளையும் சபையார் மேற்கொண்டனர்.
(3) நகரத்தார்
1. வணிகர்களின் குடியிருப்பு பகுதி நகரம் எனப்பட்டது. சிறந்த கைவினைஞர்கள் இங்கு வசித்தனர்.
2. இதன் பிரதிநிதிகள் 'நகரத்தார்' எனப்பட்டனர்.
3. கோவில்களுக்கு நிதி உதவி வழங்குவதிலும் அதன் நிர்வாகத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். உள்நாட்டு மற்றும் கடல் கடந்த வாணிபத்தில் பெரும் பங்கு வகித்தனர். பட்டு, பீங்கான், கற்பூரம், கிராம்பு, சந்தனக் கட்டை, ஏலக்காய் போன்றவை முக்கிய வாணிபம் பொருட்களாகும்.
(4) நாட்டார்
1. உள்ளாட்சி அமைப்பின் மிக முக்கிய பொறுப்பு வகித்தோர் 'நாட்டார்' ஆவர். அரச கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக செயல்பட்டனர்.
2. அரசுக்கான நிதி, நீதி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டனர். வரி வசூலித்தல் முக்கியப் பொறுப்புகளாகும்.
3. மரியாதை செலுத்தும் வகையில் அரசுடையான் (நில உரிமையாளர்) அரையன் (வழி நடத்துவோர்) கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.
39.
சாதவாகன ஆட்சி:
i) இந்தியாவின் வடபகுதியில் நிகழ்ந்து வந்த அரசியல் மாறுதல்களினால் தென்னிந்தியா பாதிக்கப்படாமல் இருந்தது. பொ.ஆ.முதல் நூற்றாண்டின் நவீன ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களை உள்ளடக்கிய தக்காண பகுதியில் சாதவாகன ஆட்சி நிறுவப்பட்டது.
ii) இது மௌரிய ஆட்சியயை போன்று ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட்சியாக அமையவில்லை. சாதவாகன மாகாண ஆட்சியாளர்கள் பலம் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தனர்.
மூவேந்தர்கள்:
வாடா இந்தியாவில் அமைந்த பரந்த பேரரசுகள் போல் அல்லாமல் தென்னிந்தியாவின் தமிழ் பகுதியில் சிற்றரசர்கள் ஆட்சியில் இருந்தனர். அவர்கள் மூவேந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
i) மதுரையை தலைமையிடமாக கொண்டு பாண்டியர்கள்
ii) உறையூரை தலைமையிடமாகா கொண்டு சோழர்கள்
iii) வஞ்சியை தலைமையிடமாக கொண்டு சேரர்களும் ஆட்சி புரிந்தனர்.
மௌரியக் கால கல்வெட்டில்:
பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டிலே மௌரிய அரசர்கள் தமிழக மூவேந்தர்களை பற்றிய செய்திகளை தங்கள் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளார்கள்.
அசோகரின் 2வது கல்வெட்டு ஆணியில் தனது பேரரசின் எல்லையில் அமைந்த அரசுகளை பற்றி கூறியுள்ளார்கள்
மூவேந்தர்கள் மட்டும் தென்னிந்தியாவை ஆண்டனர் என கூற இயலாது. சிறிய பகுதிகளை ஆட்சி புரிந்த ஏராளமான சிற்றரசர்களும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை. இந்த சிற்றரசர்கள் அந்த காலத்தில் வேளிர் என அழைக்கப்பட்டனர்.
40.
முகமது பின் துக்ளக் இறந்த போது அவரது மகன் குழந்தையாக இருந்ததால் பெரோஸ் துக்ளக் ஆட்சி பொறுப்பை பெற்றுக் கொண்டார். இவரது ஆட்சியைப் பற்றி ஆராய்வோம்.
பிரபுக்களுடன் சமரசக் கொள்கை:
(i) பிரபுக்கள் வகுப்பாரிடமும், மதத்தலைவர்களிடமும் பெரோஸ் துக்ளக் சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
(ii) பிரிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
(iii) அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையே ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
(iv) பல வரிகளை குறைத்தனர். அதே நேரத்தில் அரசு நிதி வீணாக செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார்.
அடிமைகள் நலத்துறை:
(i) அடிமைகள் குறித்து ஃபெரோஸாக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது.
(ii) முந்திய ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார்.
(iii) அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத் துறையை உருவாக்கினார்.
(iv) 1,80,000 அடிமைகளின் நல் வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது.
(v) கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில் கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
போர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின் கொள்கை:
(i) ஃபெரோஸ் துக்ளக் போர்களை விரும்பவில்லை. ஆனால் கிளர்ச்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார்.
(ii) அவரது காலத்திய ஒரே பெரிய படையெடுப்பு 1362ல் சிந்துவின் மீது படையெடுப்பு எதிரிகளை வீழ்த்தி வெற்றி கண்டார்.
(iii) இவரது காலத்தில் நடைபெற்ற இரண்டு மங்கோலியத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
மதக் கொள்கை:
(i) வைதீக இசுலாமை ஆதரித்தார். தமது அரசை இசுலாமிய அரசாக அறிவித்தார்.
(ii) மத விரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்.
(iii) இசுலாமியர் அல்லாதவருக்கு 'ஜிஸியா' என்றும் வரியை விதித்தார்.
(iv) புதிய இந்துக் கோயில்கள் கட்டுவதை தடைசெய்யவில்லை.
(v) இசுலாமியர் -அல்லாதோர் உள்படக் கற்றறிந்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார்.
பொதுப்பணிகள்:
(i) பல பாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார்.
(ii) சட்லெஜ் நதியிலிருந்து ஹன்சிக்கு வெட்டிய கால்வாயும்,
(iii) யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப்பணி வளர்ச்சிக் கொள்கையை சுட்டுகின்றன.
இவரது ஆட்சி பல வகையில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், பிரபுக்களுடன் மேற்கொண்ட சமரசக் கொள்கை பரம்பரை உரிமை, பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் ஆகியவை ஃபெரோஸ் துக்ளக் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச் சென்றது.
41.
பாலர்களின் அரசு கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது. முதல் மன்னர் கோபாலர் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் தர்ம பாலர் (பொ.ஆ.770-815)
தர்மபாலரும் பௌத்தமும்:
பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார்
பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா என்னும் பௌத்த மடலாயத்தை நிறுவினார். அது பௌத்த மத கோட்பாட்டை போதிக்கும் சிறந்த மையமாக உருவானது
சோமபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றும் பீகார் - ஓடாண்டபுரியில் ஒரு பௌத்த மடலாயத்தையும் காட்டினார்
ஹரிஷபத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.
தேவபாலரும் பௌத்தமும்
பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராய் இருந்தார்
சுவரணதீப் அரசன் பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடலாயத்தை பராமரிப்பதற்காக 5 கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
இவரது ஆட்சியில் நாளாந்தா பௌத்தமதக் கொள்கையை போதிக்கும் முதன்மையான மையமாக திகழ்ந்தது.
பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானபிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார்
பாலர் வம்ச ஆட்சி காலத்தில் வங்காளம் பௌத்த மடலாயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.
42.
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?
அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள்:
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு, தீவிரமான அறிவு சார் கொந்தளிப்பின் காலமாகும்.
இவ்வெழுச்சிக்கான காரணங்கள்:
1. அரசு உருவாக்கமும், வேத மதத்தின் கடுமையும் சிந்தனை மற்றும் செயலுக்கான சுதந்திரத்தைக் காட்டுகிறது.
மத நடைமுறைகளுக்கு எதிரான கிளர்ச்சியாக அவைதீக மதங்கள் உருவாயின.
2. பிரதேச அடையாளங்களின் தோற்றம், சமூக பொருளாதார, அரசியல் மாற்றங்களை உந்தித் தள்ளியது.
அதிருப்ப்தியுடன் இருந்த மேட்டுக்குடி மக்கள் மகதம் அல்லது மத்திய கங்கைச் சமவெளியில் வளர்ந்து வந்த அவைதீக மதங்களை நோக்கி நகர்ந்தார்கள்.
3. வேத மதம் முழுமையாக சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கவில்லை.
எனவே புதிதாக உருவாகி வந்த மதங்களை பின்பற்றுவது மக்களுக்கு கடினமானதாக இல்லை.
4. நகரமயமாக்கம், வணிக விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக வணிகர்கள், சேத்கள் (seths) போன்ற வங்கியாளர்கள் என புதிய வர்க்கம் உருவானது.
5. ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கைமுறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும்.
அவ்வுரிமை தங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது சத்திரியர்களின் மனக்குறையை இருந்தது. மேற்குறிய காரணங்களால் பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டில் அறிவு மலர்ச்சி ஏற்பட்டது.
43.
அ) மட்பாண்டம் செய்தல்
1. ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட சுட்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
2. மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
3. அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நிரைச் சேர்த்து வைக்கும் கலர், துகளுடன் கூடிய கலன் கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை.
4. நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பல வகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
5. அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இவைகள், மீன் செதில்கள், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல் மாணலான கோடுகள் பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
6. ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றன.
ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கிய பங்கு வகித்தன.
1. ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியாவுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது. அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
2. சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன் பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன.
3. க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்ப்புகளைக் குறிப்பிடுகின்றன.
4. ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனிலும், ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள்,தயக்கட்டைகள் மணிகள் மெசபடோமியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5. கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவை ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி ஆயின.
6. ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளோடு தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
ஹரப்பா நாகரிக்கப்பகுதிகளில் கிடைக்கும் நிக்கல் பொருள்களும் மெசபடோமியாவுடன் இருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்.
இ) எடைக்கற்களும் அளவீடுகளும்
வணிக பரிவர்த்தனைக்கான ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அளவீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
1. ஹரப்பா நாகரிக்கப்பகுதியிலிருந்து படிகக் கல்லாலான, கன சதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
3. எடையின் விகிதம் இருமடங்காகும் படி 1:2:4:8:16:32 என பின்பற்றப்பட்டுள்ளது,
4. இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடைபோட பயன்பட்டிருக்கலாம்.
5. சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் =1.75 செ.மீ ஆகக் கொள்ளும் விகிதத்தில் அளவு கோலையும் பயன்படுத்திருக்கிறள்.
ஈ) முத்திரைகளும் எழுத்து முறையும்:
அ) முத்திரைகள்:
1. ஸ்டீட்டைட், செம்மண், சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிக்கப் பகுதிகளில் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியீட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம்.
3. பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டிருக்கலாம்.
ஆ) எழுத்துமுறை:
1. ஹரப்பா எழுத்துமுறையை இன்று வரைக்கும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
2. 5000 த்துக்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
3. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத் தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
44.
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
மட்பாண்டங்கள் :
பழுப்பு மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுகள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.
காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.
செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.
விளை பொருட்கள்;
நெல்லி, பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.
கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.
வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர்.
இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.
45.
நிலமானியம் வழங்குவது சாதவாகனர் காலத்தின் அம்சமாகும். இதன் பயனாளிகள் பெரும்பாலும் பௌத்தர்களும் பிராமணர்களும் ஆவர். பௌத்தத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை நனிகாட் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இவ்வாறு மதகுருமார்களைக் கொண்ட குழுக்கள் செல்வாக்குப் பெற்று உயரிடத்தை வகிக்கத் தொடங்கியதைக் காண முடிகிறது.
நிலங்களைக் கொடையாக வழங்கும் இம்முறை நிலங்களில் வேளாண்மை செய்யாமல், நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய ஒரு பிரிவினரை உருவாக்கியது.
இது காலப்போக்கில் நிலத்தை அடிப்டையாகக் கொண்ட சமூகப் படிநிலைகாலுகளும் பிரிவுகளும் உருவாவதற்கு இட்டுச் சென்றது.
46.
1. ஹரப்பா மக்களின் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
2. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டார்கள்.
3. வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது.
4. ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள். பாசனத்துக்கு கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
47.
ஹைதர் அலி தஞ்சாவூருக்கும், அங்கிருந்து கடலூருக்கும் படையெடுத்து முன்னேறிச் சென்றார்.
ஆங்கிலேயரின் மீதான இந்தத் தாக்குதலை ஹைதர் அலி நிறுத்த விரும்பவில்லை.
இருந்தபோதிலும், மராத்தியர் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சம் காரணமாக ஹைதர் ஆங்கிலேயருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்.
இதுவே மதராஸ் (சென்னை) உடன்படிக்கைக்கான சூழ்நிலையாகும்.
48.
(i) கன்னியாகுமரி மாவட்டத்தில் சாஸ்தா கோவில் (சாமிதோப்பு) எனும் சிறிய ஊரில் 1809-ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். முத்துக்குட்டி எனும் இயற்பெயர் கொண்டவர்.
(ii) திண்ணைப் பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களை கற்றார்.
(iii) தனது போதனைகளில் சாதிமுறையையும், அதிக வரி வசூல் முறையையும் கண்டித்தார்.
(iv) ஒடுக்கப்பட்ட மக்களிடையே மிகவும் பிரபலமான அவரை 'ஐயா வழி' என்ற நடைமுறையில் மக்கள் பின்பற்றினார்.
(v) சமத்துவச் சங்கத்தின் மூலம் பல சாதிகளை இணைத்து சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.
49.
1. மேவார், அரசரான ராணா உதய்சிங் சித்தூரை இழப்பதற்கு முன்னர் கடுமையாகப் போரிட்டார். ஆறுமாதகால முற்றுகைக்குப் பின்னர் சித்தூர் கைப்பற்றப்பட்டது.
2. ராணா உதய்சிங் குன்றுகளுக்குள் பின்வாங்க அவரின் தளபதிகளான ஜெய்மால், பட்டா ஆகியோர் போரைத் தொடர்ந்து நடத்தினர்.
3. இப்போரில் கொல்லப்பட்ட ஜெய்மால், பட்டா ஆகியோரின் துணிச்சலைக் கண்டு பெரும் வியப்படைந்தார் அக்பர்.
4. தளபதிகளை சிறப்பிக்கும் வகையில் ஆக்ரா கோட்டையின் பிரதான வாசலில் அவர்களின் சிலைகளை நிறுவினார்.
50.
(i) வரி வசூலிக்கும் பொறுப்பை பொது நிர்வாகத்திலிருந்தும் நிதித் துறையிலிருந்தும் பிரித்தார்.
(ii) ஆட்சியாளர்களை (collectors ) வரிவசூலிக்கும் பணிக்கு மட்டுமே பணித்து அவர்களை நீதி வழங்கும் பொறுப்பிலிருந்து விடுவித்தார்.
(iii) குற்றவியல் உரிமையியல் நீதிமன்றங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன.
(iv)கல்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது.அவற்றின் கீழ் நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், முர்சிதாபாத் , பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.
51.
(i) பிள்ளையார்பட்டி
(ii) திருமயம்
(iii) குன்றக்குடி
(iv) திருச்செந்தூர்
(v) கழுகுமலை
(vi) கன்னியாகுமரி
(vii) சித்தன்னவாசல்
ஆகிய இடங்களில் தொடக்க காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட குடைவரை கோயில்கள் காணப்படுகிறது.
52.
i) மீனத்தார், மிலித்தா என்றும் அழைக்கப்படுகிறார்.
ii) அவர் புத்த சமயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்.
iii) புத்த சமய துறவி நாகபாணருடன் அவர் உரையாடியது மிலிந்த பின்ஹோ என்ற பாலி மொழி நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.
iv) மீனாந்தர் புத்த சமயத்தை தழுவினார்
v) கிரேக்க தூதரான ஹீலியோடோரஸ் வைணவ சமயத்தை தழுவியதோடு பெஸ் நகரில் கருடத்தூணையும் நிறுவினார்.
53.
i) நாடெங்கும் கிடைத்த பருத்தியைக் கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபட்டன.
ii) ஆடை வணிகம் அதிகம் நடைபெற்றது.
iii) சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் முதல் அரசக் குடும்பத்தினர் வரை பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ராகங்களில் பருத்தி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
iv) காசி, வங்கம், காம்ரூபம், மதுரை போன்ற இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
v) சீனா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலிருந்து துணி, கம்பளி, பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
54.
(i) எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற கோவில் கைலாசர் கோவில், முதலாம் கிருஷ்ணர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.
(ii) மூலக்கோவில், நுழைவுவாயில், நந்திமண்டபம், வாடி முக மண்டபம் என நான்கு பகுதிகளுடைய இக்கோவில் 25அடி உயரமுள்ள மேடையில் கட்டப்பட்டுள்ளது.
(iii) மேடையின் முகப்பில் யானைகளும், சிங்கங்களும் மேடையைத் தாங்குவது போல் உள்ளது.
(iv) 16 சதுர தூண்கள் கொண்ட மண்டபம், துர்க்கை எருதுமுக அரக்கனை கொல்வது போன்ற சிற்பம், ராவணன் கைலாய மலையை தூக்க முயற்சிப்பது போன்று சிற்பங்கள் உள்ளன.
(v) அவர்களின் இராமாயணக்காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கைலாசர் கோவிலின் பொதுபண்பு திராவிட கலைப்பாணியைச் சேர்ந்தது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards