11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/07/2019
வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.
2.
இணையும் வினைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.
3.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?
4.
32 g மீத்தேன் எரிக்கப்படும் போது உருவாகும் நீரின் அளவினைக் கணக்கிடுக
5.
10 மோல் அம்மோனியாவை உருவாக்க எத்தனை மோல் ஹைட்ரஜன் தேவை?
6.
ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை என்ன?
1.66 u
2.016u
3.14u
4.56u
7.
பின்வருவனவற்றுள் 1amu க்கு சமமான மதிப்பு என்ன?
1.6605x 1027kg
1.6605x 10-27kg
0.16605x 1027kg
0.16605x 10-27kg
8.
சேர்மங்களின் பண்புகளை அவற்றில் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும். பின்வருவனவற்றுள் எது சேர்மம்?
சோடியம்
குளோரின்
கார்பன்டை ஆன்சைடு
அனைத்தும்
9.
பின்வரும் கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு
பருப்பொருட்களை அவற்றின் வேதித்தன்மை அடிப்படையில் தூயபொருட்கள் மற்றும் கலவைகள் என வகைப்படுத்தலாம்
கலவைகள் என்பவை எளிய அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டவை.
ஒரே ஒரு வகை அணுக்களை மட்டுமே உள்ளடக்கியவை தனிமம் எனப்படும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு தனிம அணுக்களை கொண்ட மூலக்கூறுகளை உள்ளடக்கியது சேர்மங்களாகும்.
10.
கீழ்கண்டவற்றைக் கவனி:
I. அழுத்தம் II. வெப்பநிலை
இவற்றுள், பருப்பொருளை அதன் ஓர் இயற் நிலைமையிலிருந்து மற்றோரு நிலைமைக்கு மாற்ற மேற்கண்ட எதை மாற்றியமைக்க வேண்டும்?
I. மட்டும்
II. மட்டும்
இரண்டும்
இரண்டும் இல்லை
11.
இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை
102 g
27 g
270 g
78 g
12.
கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?
கார்பன்
ஆக்ஸிஜன்
கார்பன் மற்றும் ஆக்ஸிஜன்
கார்பன், ஆக்ஸிஜன் இரண்டுமில்லை
13.
கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02x1022
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்க
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R)ஆனது கூற்று (A)க்கான சரியான விளக்கமல்ல
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு
14.
தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. 200X=90%, 199X = 8 %, 202X = 2 % இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு
201 u
202 u
199 u
200 u
15.
40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு
40 மி.லி CO2 வாயு
40 மி.லி CO2 மற்றும் 80 மி.லி H2O வாயு
60 மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு
120 மி.லி CO2 வாயு
16.
''சேர்மங்களின் பண்புகள் அவற்றின் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும்" இக்கூற்றை தகுந்த உதாரணத்துடன் விளக்குக.
17.
பருப்பொருள் - வரையறு.
18.
சமான நிறை வரையறு
19.
மோல் எனும் வார்த்தையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய்?
20.
ஒப்பு அணு நிறை வரையறு
21.
ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.
22.
மீத்தேனில் எறிதல் வினையினை கருத்திற் கொண்டு வேதிவினைக் கூறுவிகிதக் கணக்கீட்டை காண்க.
23.
அலுமினியத்திற்கும், பெர்ரிக் ஆக்ஸைடிற்கும் இடையே நிகழும் வினை 3273K அளவிற்கு வெப்பத்தை உருவாக்குகிறது, இது உலோகங்களை வெட்டவும், ஒட்டவும் பயன்படுகிறது. Alன் அணு நிறை = 27u, 0 னின் அணு நிறை = 16 u)
2Al + Fe2O3 → Al2O3 +2Fe; இந்த வினையில் 324 g அலுமினியத்தை 1.12 Kg பெர்ரிக் ஆக்ஸைடுடன் வினைப்படுத்தும்போது
i) உருவாகும் Al2O3 இன் நிறையைக் காண்க
ii) வினையின் முடிவில் வினைபுரியாமல் உள்ள "அதிகப்படியான வினைப்பொருள்" எவ்வளவு மீதமுள்ளது?
1.
1. ஒரு சேர்மம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளாக பிரிகையடையும் வினைகள் சிதைவடையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை வினைகளில், ஒரு சேர்மத்தில் உள்ள இரண்டு வெவ்வேறான தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண்களில் மாற்றம் ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டு:

2.
இரண்டு வினைப் பொருட்கள் வினைபுரிந்து ஒரு சேர்மத்தினைத் தரும் வினைகள், இணையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:

3.
சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
CaCO3 (s) \(\overset { \Delta }{ \longrightarrow } \) CaO(s) + CO2 (g)
மேற்கண்டுள்ள சமன்பாட்டின்படி
1 மோல் (100g) CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது 1 மோல் CO2 உருவாகிறது

திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துக் கொள்ளும்.
திட்ட வெப்ப அழுத்த நிலைகளில், 50 g CaCO3 ஐ வெப்பப்படுத்தும் போது

= 11.35 லிட்டர் of CO2 வைத் தருகிறது
4.
CH4(g) + 2O2(g) → CO2(g) + 2H2O(g)
சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டின் அடிப்படையில், 1 மோல் (16 g) CH4 எரிதலின் போது 2 மோல் (2 x 18 = 36 g) நீரினைத் தருகிறது.

32 g மீத்தேன் எரிதலின் போது

= 72 g நீரைத் தருகிறது.
5.
அம்மோனியா உருவாதலுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடு
N2(g) + 3 H2 (g) → 2 NH3 (g)
மேற்கண்டுள்ள சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டின் அடிப்படையில்,
2 மோல் அம்மோனியாவை உருவாக்க 3 மோல் ஹைட்ரஜன் தேவைப்படுகிறது.
10 மோல் அம்மோனியாவை உருவாக்க

= 15 மோல் ஹைட்ரஜன் தேவை
6.
(b)
2.016u
7.
(b)
1.6605x 10-27kg
8.
(c)
கார்பன்டை ஆன்சைடு
9.
(b)
கலவைகள் என்பவை எளிய அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டவை.
10.
(c)
இரண்டும்
11.
(a)
102 g
12.
(b)
ஆக்ஸிஜன்
13.
(c)
கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) தவறு
14.
(d)
200 u
15.
(a)
40 மி.லி CO2 வாயு
16.
1. சோடியம் ஒரு பளபளப்பான உலோகம்
2. குளோரின் ஓர் எரிச்சலூட்டும் வாயு.
3. ஆனால் இந்த இரண்டு தனிமங்களில் இருந்து உருவாகும் சேர்மமான சோடியம் குளோரைடு, படிக்கத் தன்மையுடைய திண்மமாகும்.
4. இச்சேர்மம் உயிரியல் செயல்பாடுகளுக்கு முக்கியமானதாகும்.
17.
1. நிறையுள்ள, இடத்தை அடைத்துக் கொள்ளும் தன்மையுடைய அனைத்தும் பருப்பொருட்கள் என வரையறுக்கப்படுகின்றன.
2. பருப்பொருட்களும் அணுக்களால் ஆக்கப்பட்டவை.
18.
1.008 kg ஹைட்ரஜன் அல்லது 8g ஆக்சிஜன் அல்லது 35.5g குளோரின் இவற்றோடு சேரக்கூடிய அல்லது இவற்றை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு தனிமம் அல்லது சேர்மம் அல்லது அயனியின் நிறையே, அதன் கிராம் சமான என வரையறுக்கப்படுகிறது.
19.
பொருளின் அளவை குறிப்பிட நாம் மோல் எனும் அலகைப் பயன்படுத்தலாம்.
12g கார்பன் - 12 ஐசோடோப்பில் காணப்படும் கார்பன் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அடிப்படைத் துகள்களை பெற்றுள்ள பொருளின் அளவு ஒரு 'மோல்'.
20.
ஒரு அனுவின் சராசரி அணுநிறைக்கும், ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறைக்கும் இடையேயான விகிதம்.
ஒப்பு அணு நிறை (Ar) = அனுவின் சராசரி நிறை / ஒருமைப்படுத்தப்பட்ட அணு நிறை
21.
(i) ஒரு தனித்த தனிமத்தின் (அதவாது வேறெந்த தனிமத்துடனும் பிணைத்துக்காத நிலையில்) ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
எடுத்துக்காட்டு: H2, C12, Na, S8 ஆகியவற்றில் காணப்படும் அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்யமாகும்.
(ii) ஓரணுவினைக் கொண்ட அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை என்பது அந்த அயனியின் மீதுள்ள நிகர் மின்சுமைக்குச் சமம்.
எடுத்துக்காட்டு:
Na+ அயனியில் உள்ள சோடியத்தின் ஆக்சிஜனேற்ற எண் +1 ஆகும்.
Cl- அயனியில் உள்ள குளோரின் ஆக்சிஜனேற்ற எண் -1
(iii) ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து உள்ள அனைத்து அணுக்களின் ஆக்சிஜனேற்ற எண்களின் கூடுதல் பூஜ்யமாகும். அயனிகளைப் பொறுத்தவரையில் இக் கூடுதல் மதிப்பு அயனியின் மீதுள்ள நிகர மின்சுமைச் சமம்.
எடுத்துக்காட்டு:
H2SO4 ல் , (2 X H -ன் ஆக்சிஜனேற்ற எண்) +(S- ஆக்சிஜனேற்ற எண்) +(4x ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்)=0
\({ SO }_{ 4 }^{ 2- }\)ல் (1 X S-ன் ஆக்சிஜனேற்ற எண்)+(4 X O-ன் ஆக்சிஜனேற்ற எண்) =-2
(iv) உலோக ஹைட்ரைடுகளைத் தவிர பிற அனைத்துச் சேர்மங்களிலும் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1, உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டு:
ஹைட்ரஜன் குளோரைடில் (HCl), ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் +1
சோடியம் ஹைட்ரைடில் (NaH) ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் -1
(V) அனைத்துச் சேர்மங்களிலும் புளூரினானது -1 ஆக்சிஜனேற்ற நிலையினைக் கொண்டுள்ளது.
(Vi) பெரும்பாலான சேர்மங்களில் ஆக்சிஜன் -2 ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ளது. பெராக்சைடுகள், சூப்பர் ஆக்சைடுகள், புளூரினின் சேர்மங்கள் ஆகியன இதற்கு விதிவிலக்காக அமைகின்றன.
எடுத்துக்காட்டுகள்: ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்
நீரில் (H2O) -2 [2 (+ 1)+ x = 0; x = -2]
ஹைட்ரஜன் பெராக்ஸைடில் (H2O2)
H2O2
2 (+ 1) + 2x = 0;
⇒2x =-2;
⇒x =-1
KO2 போன்ற சூப்பர் ஆக்சைடுகளில் -\(\frac {1}{2}\)+1 + 2x = 0·,
2X =-1; X=--\(\frac {1}{2}\)
ஆக்சிஜனின் டைபுளூரைடில் (OF2) + 2.
x + 2 (-1) = 0; x = + 2
(vii) அனைத்துச் சேர்மங்களிலும், கார உலோகங்கள் +1 ஆக்சிஜனேற்ற நிலையினையும், காரமண் உலோகங்கள் +2 ஆக்சிஜனேற்ற நிலையினையும்,பெற்றுள்ளன.
22.
| வினைபடு பொருட்கள் | வினைவினை பொருட்கள் | |||
| CH4(g) | O2(g) | CO2(g) | H2O(g) | |
| வேதிவினைக் கூறு விகித குணகங்கள் | 1 | 2 | 1 | 2 |
| 1 மோல் -மோல் தொடர்பு | 1மோல் | 2 மோலகள் | 1மோலகள் | 2மோலகள் |
| நிறை - நிறை தொடர்பு= மோல்களின் எண்ணிக்கை x மோலார் நிறை | 1 mol x 16 g mol-1 16 g | 2 mol x 32 g mol-1 64 g | 1 mol x 44 g mol-1 44 g | 2 mol x 18 g mol-1 36 g |
| நிறை -கனஅளவு தொடர்பு வினைபாடு பொருட்களின் நிறை =மோல் x மோலார் நிறை & விளைபொருளின் கனஅளவு (273K மற்றும் 1atm அழுத்தத்தில் 1 மோல் அளவுடைய எந்த ஒரு வாயும் அடைத்துக் கொள்ளும் கனஅளவு 22.4 லிட்டர் ஆகும்). | 16g | 64g | 22.4L | 44.8L |
| கனஅளவு -கனஅளவு தொடர்பு | 1 x 22.4 L 22.4L |
2 x 22.4 L 44.8 L |
1 x 22.4 L 22.4 L |
2 x 22.4 L 44.8 L |
23.
| வினைபடு பொருட்கள் | வினைவிளை பொருட்கள் | |||
| Al | Fe2O3 | Al2O3 | Fe | |
| வினைபுரிய அனுமதிக்கப்பட்ட வினைபடுபொருளின் அளவு | 324g | 1.12 kg | ||
| வினைபுரிய அனுமதிக்கப்பட்ட மோல்களின் எண்ணிக்கை | \(\frac{324}{27}\)=12 mol | \(\frac{1.12\times10^{23}}{160}\)=7 mol | ||
| வேதிவினைக் கூறு விகித குணகம் | 2 | 1 | 1 | 2 |
| வினையின் பொழுது வினைபட்ட மோல்களின் எண்ணிக்கை | 12 mol | 6 mol | - | - |
| வினைபுரியாமல் எஞ்சியுள்ள வினைபடு பொருட்களின் மோல்களின் எண்ணிக்கை மற்றும் உருவான வினை பொருட்களின் மோல்களின் எண்ணிக்கை | - | 1 mol | 6 mol | 12 mol |
உருவான Al2O3 ன் மோலார் நிறை
= 6 mol × 102 g mol–1 \(\left[ \begin{matrix} { Al }_{ 2 }{ O }_{ 3 } \\ \left( 2\times 27 \right) +3\left( \times 16 \right) \\ 54+48=102 \end{matrix} \right] \)=612g
வினைபுரியாமல் உள்ள அதிகப்படியான வினைப்பொருள்=Fe2O3
வினையின் இறுதியில் வினைபுரியாமல் உள்ள அதிகப்படியான வினைப்பொருளின் அளவு
= 1 mol × 160 g mol–1
= 160 g
\(\left[ \begin{matrix} { Fe }_{ 2 }{ O }_{ 3 } \\ \left( 2\times 56 \right) +\left( 3\times 16 \right) \\ 112+48=160 \end{matrix} \right] \)=160g
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards