11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
+1 Full Test Exam
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
_________________ "தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை " என்று அழைக்கப்படுகிறார்.
அருட்தந்தை இராபர்டோ டி நொபிலி
அல்போன்சோ டி அல்புகர்க்
அருட்தந்தை ஹென்ரிக்ஸ்
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
2.
1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ________ யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.
காலாப் படை
குதிரைப் படை
பீரங்கிப் படை
யானைப் படை
3.
மாதாவாச்சாரியார் ______ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்.
துவைதம்
அத்வைதம்
விசிஸ்டா த்வைதம்
புஷ்டி மார்க்கம்
4.
புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ________
வசுமித்ரர்
அஸ்வகோசர்
யுவான் சுவாங்
ஹர்சர்
5.
விஜயநகர அரசின் அரசு முத்திரை _______
பன்றி
புலி
மீன்
வில்
6.
_______________ அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார்.
சேர
சோழ
பாண்டிய
சாதவாகன
7.
மகதத்தின் தலைநகரம்________________.
ராஜகிருகம்
உஜ்ஜயினி
கோசலகம்
கோசாம்பி
8.
வேளாண் நிலத்தின் மீதான வரி _______ எனப்பட்டது.
சுரா
சுல்கா
பலி
பாகா
9.
ஹரப்பா மக்கள் ________ அறிந்திருக்கவில்லை.
செம்மை
இரும்பை
வெண்கலத்தை
தங்கத்தை
10.
அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர்----------
செலியுகஸ் நிகேடர்
அன்டிகோனஸ்
அண்டியோகஸ்
டெமெட்ரியஸ்
11.
மம்லுக் என்ற பெயர் ஒரு _____ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்
அடிமை
அரசர்
இராணி
படைவீரர்
12.
முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது
நாட்டார்
மாநகரம்
நகரத்தார்
ஊரார்
13.
கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி
விஷயம் - ராஷ்ட்டிரகூடர்
நம்மாழ்வார் - குருகூர்
14.
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
தர்மபாலர் சோமபுரியில் பெரியதொரு பெளத்த விகாரையைக் கட்டினார்.
இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்
மகிபாலர் கீதங்கள் வங்காளத் தின் கிராமப்பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன.
கெளடபாடர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்.
15.
_______என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண் டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக
இட்சிங்
யுவான்-சுவாங்
பாஹியான்
வாங்-யுவான்-சீ
16.
இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்
ஆந்திரா-கர்நாடகா
ஒடிசா
தக்காணப் பகுதி
பனவாசி
17.
அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் _____________
மகாபாபத்ம நந்தர்
தன நந்தர்
பிந்துசாரர்
பிம்பிசாரர்
18.
19.
கீழ்காணும் இணைகளை கவனிக்கவும்.
| (i) சேனானி | படைத்தளபதி |
| (ii) கிராமணி | கிராமத்தலைவர் |
| (iii) பாலி | தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது |
| (iv) புரோகிதர் | ஆளுநர் |
மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
i
ii
iii
iv
20.
எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்காலம்
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
21.
ஆங்கிலேயர் மதராஸில் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?
22.
“முகலாயர் ஓவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.
23.
24.
முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
25.
”நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்பப்படுகிறது.” விவரிக்கவும்.
26.
கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்
27.
திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?
28.
பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.
29.
30.
பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.
31.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
32.
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்
33.
கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?
34.
அக்பரின் மதக் கொள்கை எவ்வா று ஔரங்க சீப்பின் மதக்கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது?
35.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
36.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
37.
கோயில் -ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக
38.
மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.
39.
ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக
40.
வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை ?
41.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
42.
இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?
43.
சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
44.
வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .
45.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
46.
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.
47.
1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
48.
எம்.ஜி. ரானடே
49.
தாராஷூகோ.
50.
ஒப்பந்தக் கூலிமுறை
51.
சோழர் காலத்தில் இருந்த வணிகக்கக்குழுக்களின் பங்களிப்பு குறித்து எழுதுக
52.
டெமெட்ரியஸுடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.
53.
மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
54.
தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.
1.
(b)
அல்போன்சோ டி அல்புகர்க்
2.
(c)
பீரங்கிப் படை
3.
(a)
துவைதம்
4.
(b)
அஸ்வகோசர்
5.
(a)
பன்றி
6.
(d)
சாதவாகன
7.
(a)
ராஜகிருகம்
8.
(c)
பலி
9.
(b)
இரும்பை
10.
(a)
செலியுகஸ் நிகேடர்
11.
(a)
அடிமை
12.
(b)
மாநகரம்
13.
(a)
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
14.
(b)
இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்
15.
(c)
பாஹியான்
16.
(a)
ஆந்திரா-கர்நாடகா
17.
(b)
தன நந்தர்
18.
(c)
19.
(d)
iv
20.
(a)
வரலாற்றுக்கு முந்தைய காலம்
21.
1. தமர்லா வேங்கடாத்திரிநாய்க்கர் என்பவரிடமிருந்து நிலத்தைப் பெற்ற ஆங்கிலேயர் அங்கு 1639ல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர்.
2. இவ்வாறாக ஆங்கிலேய வணிகத் தளங்கள் சென்னையில் நிறுவப்பட்டு காலப்போக்கில் வளர்ந்து, மதராஸ் அதன் மாகாணத் தலைநகரமானது.
22.
1. முகலாயர் கால ஓவியம் பன்னாட்டு அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது.
2. முகலாயரின் நுண் ஓவியங்கள் உலகத்தின் பல அருங்காட்சியகங்களின் முக்கிய இடம் வகிக்கின்றன.
3. குஜராத், மாளவம் ஆகிய பகுதிகளில் உயிர்ப்புடன் செயல்பாட்டிலிருந்த இந்திய ஓவிய மரபுகள், மேற்காசிய ஓவிய மரபுகளின் செல்வாக்கோடு இணைந்து ஓவியக் கலையின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
4. மத்திய ஆசியாவிலிருந்து ஹுமாயூனோடு இந்தியா வந்த நுண் ஓவியகே கலைஞர்களான அப்துல் சமத், மீர் சையத் அலி ஆகியோரிடமிருந்து இந்திய ஓவியர்கள் ஊக்கம் பெற்றனர்.
5. முகலாய நுண்ணோவியங்கள் டச்சு நாட்டின் தலைசிறந்த ஓவியரான ரெம்பிராண்ட் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
23.
24.
(i) பாமன்ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகம்மது. விஜயநகர அரசுடன் நீண்டகாலப் போர்களை அவர் மேற்கொண்டார்.
(ii) 1363 இல் வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.
(iii) கோல்கொண்டா கோட்டையை அவர் கைப்பற்றினார்.
(iv) அங்கிருந்த ரத்தினச் சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனமாயிற்று.
25.
i) இந்தோ - கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவரான மினாண்டர். (சுமார் பொ.மு.ஆ. 165/ 145-130) நாட்டின் வடமேற்கில் ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாக தெரிகிறது.
ii) அவரது நாணயங்கள், காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளிலிருந்து மேற்கு உத்திரபிரதேசம் வரையிலுமான விரிந்து பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
26.
(i) இந்தியாவில் இசுலாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுப்படுத்த சபுக்தஜின் நடவடிக்கை எடுத்தார்.
(ii) ஆப்கன் அரசர் ஜெயபாலைத் தோற்கடித்து அங்கு தனது மூத்த மகன் மாமூதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.
(iii) 997ல் சபுக்தாஜின் இறந்தபோது மாமுது 7 குரசனில் இருந்ததால் இளையமகன் இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
(iv) பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து ஏழு வயதில் கஜினியின் அரசராக மாமுது ஆட்சியில் அமர்ந்தார்.
(v) பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து ஏழு வயதில் கஜினியின் அரசராகமாமுது ஆட்சியில் அமர்ந்தார்.
27.
(i) பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரனின் ஆட்சியின் போது (670-700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார்
(ii) முதலாம் பரமேஸ்வரன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்து போரிட்டார். இதன் விளைவாக தெற்கில் பல்லவருக்கும், பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.
(iii) பொ.ஆ. 885ல் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள திருபுறம்பியம் எனும் இடத்தில் பல்லவ மன்னன் அபராஜீத வர்மனுக்கும், பாண்டிய மன்னன் வரகுணனுக்குமிடையே இப்போர் நடைபெற்றது.
(iv) போரில் பல்லவ வெற்றிபெற்றார்
v) சில வருடங்கள் கழித்து நடந்த போரில் சோழர்கள் வெற்றிபெற்றனர். பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
28.
1. பாலர் வம்ச ஆட்சியினர் பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராக விளங்கினார்.
2. சுவர்ண தீபத்தை ஆண்ட சைசேந்திர வம்சத்து அரசரான பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடயாளத்தைப் பராபரிப்பதற்காக ஐந்து கிராமனைகளை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
3. அவரது ஆட்சியில் நாளாந்த பௌத்த மதக் கொள்கைகளை போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.
29.
30.
1. மொக்ஞ்சாதாரோவின் சிறப்புக்குரிய பொது இடம் முற்றத்துடன் கூடிய பெரிய குளியல் குளமாகும்.
2. குளத்தில் நான்கு பக்கங்களிலும் நடை பாதை மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
3. உடைகள் மாற்றும் அறைகள், மற்றும் தண்ணீர் உள்ளே வர, கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி இருந்தது.
4. இக்குளம் சடங்குகளின்போது குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கலாம்.
31.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
32.
வேலூர் கலகத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை:
ஆங்கிலேயர் தங்கள் படைப்பிரிவில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கு ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகம் செய்தார்.
தலைப்பாகையின் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் சிப்பாய்களுக்கு அருவருப்பைத் தந்தது.
ஏனெனில் அது மிருகத்தோலில் செய்யப் பட்டிருந்தது.
வெறுப்பின் உச்சகட்டமாக சீருடையின் முன் பக்கத்தின் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
மீசை, சாதி அடையாளங்கள், கடுக்கன் ஆகியவை அணியக் கூடாது என்று ஆணையிட்டனர். இது சிப்பாய்களை கோபமுறச் செய்தது.
புரட்சியின் போக்கு:
முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் வேலூரில் 4 ஆம் ரெஜிமண்டிள் 2-ஆம் படைப் பிரிவினர் தலைப்பாகை அணிய மறுத்தனர்.
இந்தப் பிரச்சனையின் வீரர்கள் தண்டிக்கப்பட்டனர்.
இந்த புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜமாலுதீன். இவர் திப்புவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரே வேலூர் கோட்டையிலுள்ள வீரர்களிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஜூலை 10-ஆம் நாள் காலை 2 மணி அளவில் வீரர்கள் புரட்சிக்கு வித்திட்டனர்.
புரட்சியாளர்கள் ஒரே நேரத்தில் ஐரோப்பியர்கள், மற்றும் ஐரோப்பியர்கள் குடியிருப்புகள் என அனைத்தையும் தாக்கினர்.
இதில் 13 அதிகாரிகள் 82 கீழ் நிலை இராணுவ வீரர்கள் இறந்தனர். 91 - பேர் காயமடைந்தனர்.
கோட்டைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு ஆற்காட்டிலிருந்த கில்லஸ்பிக்கு கடிதம் அனுப்பினார்.
வேலூர் கோட்டைக்கு காலை 9 மணிக்கு வந்தடைந்தார் கில்லஸ்பி.
பீரங்கியால் கோட்டைக் கதவு தகர்க்கப்பட்டு உள்ளே நுழைந்தனர். இதில் கில்லஸ்பி காயமடைந்தார்.
கில்லஸ்பியின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் புரட்சியாளர் சிலர் தப்பியோடினர்; சிலர் சரணடைந்தனர்.
பல கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இவ்வாறு வேலூர் புரட்சி ஒரு முடிவுக்கு வந்தாலும் அது 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு வித்திட்டுச் சென்றது.
33.
1. ஐரோப்பாவில் நடைபெற்ற அரசு வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசபதவியை ஏற்றார்.
2.மரிய தேரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகிதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தேரேசாவுக்கு எதிராகக் கைகோர்த்தது.
3. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
4. இப்பிரச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும்களம் கண்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த இருநாட்டுக் குடியேற்றங்களிலும் போர்கள் ஏற்பட்டன.
5.போர் வெடித்தபோது புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்ளே, சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் ஐரோப்பாவில் இருவரிடையே போர்மூண்டாலும் இங்கே நடுநிலைமை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
6. ஆனால் பார்னெட் என்பவரின் தலைமையிலான ஆங்கிலக் கடற்படை இந்தியக் பொருட்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
7. இந்நிகழ்வால் அதிர்ச்சிக்குள்ளான துய்ப்ளே கர்நாடக நவாப் அன்வாருதீனின் உதவியை நாடி ஆங்கிலேயரோடு போர் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் சில காலம் அமைதி நிலவியது.
34.
மாறுபட்ட மதக்கொள்கைகள்
| அக்பர் | ஒளரங்கசீப் |
| 1. இவர் பிற மதங்கள் தொடர்பான கோட்பாடுகளை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர். |
இவர் பிற மதங்கள் மீதான கோட்பாடுகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. |
| 2. அனைவருக்கும் அனுமதி என்னும் தத்துவத்தை பரப்புரை செய்தார் |
ஒளரங்கசீப் 'ஜிஸியா' வரியை மீண்டும் விதித்தார் |
| 3. அக்பர் இபாதத் கானா என்னும் வழிப்பாட்டுக் கூடத்தை நிறுவினார். |
புதிய கோவில்கள் கட்டப்படக்கூடாது என ஆணைகள் பிறப்பித்தார். |
| 4.இபாதத் கானாவில் கூடி ஆன்மீக விசயங்கள் குறித்து அனைத்து மதத்தினரும் விவாத்திக்க அனுமத்தித்தார். |
கோவில்கள் தொடர்பான ஒளரங்கசீப்பின் சட்டங்களும் பழமையானதாகவே இருந்தது. |
| 5. அக்பரின் உண்மையான நோக்கம் மதசார்பற்ற கோட்பாடுகளை பல்வேறு நம்பிக்கைகளை சார்ந்தவர்களுக்கு சமமான சகிப்புத்தன்மையும் மதிப்பையும் உருவாக்குவதாகும். |
பழைய கோவில்களில் பழுது நீக்கும் பணிகள் அனுமதிக்கப்பட்டன. இந்நடவடிக்கைகள் அவருடைய மத நம்பிக்கைகளில் மட்டும் வேர் கொண்டு இருக்கவில்லை; மாறாக அரசியல் நிர்பந்தங்களும் அவை வேர்கொண்டிருந்தன. |
35.
(i) இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையுமே 1833 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் வலியுறுத்தியது.
(ii) ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை (Rhuggee) சடங்கு முறையாக கொள்ளையடிப்பதையும் கொலை செய்வதையும் வழக்கமாகத் கொண்டிருந்தவர்கள்)அழிக்கவும் சதி முறையை ஒழிக்கவும் , கல்வி மேம்பாட்டுக்காகப் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்கப் பாடுபட்டார்.
(iii) கல்கத்தா மருத்தவக் கல்லூரியை 1835 இல் துவக்கினார்.இக்கல்லூரியின் மாண்வர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844 ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பபட்டர்கள்.
(iv) 1845 இல் பம்பாயில் கிராண்ட் மருத்தவக் கல்லூரி நிறுவப்பட்டது.தாம்சன் பொறியியல் கல்லூரி 1947 ஆம் ஆண்டு ரூர்க்கியில் தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் 1849 இல் பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது.
(v) மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக 1835 ஆம் ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார்.அவர் கல்விக்குழுமத்தின் உள்நாட்டுக் கல்வி மீது மதிப்பிருக்கவில்லை.
(vii) மெக்காலே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்துப் பரிந்துரைத்தால் அரசு ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.
36.
1.நில வருவாய் தான் முக்கிய வருவாயாக இருந்தது.
2.நிலத்தின் உற்பத்தித்திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
3.சரியான புள்ளி விவரத்துடன் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.
4.செளத் மற்றும் சர்தேஷ்முகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்களாக இருந்தன.
5.சுங்கம், கலால் வரி, வனப் பொருட்களின் விற்பனை ஆகியன மூலமாகவும் வருவாய் கிடைத்தது.
6.தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
7.கிராம மக்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
8.கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
9.பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டு வரி.
10.எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்காக வருடாந்திர கட்டண வரி.
11. விதவைகள் நிலவரி, நதிக்கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி.
12. வாரிசு உரிமை வரி.
13.குதிரை விற்பதற்கான வரி மற்றும் பல.
14. மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளருக்கும் வரி விதித்தது.
15. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது.
37.
சோழர் காலத்தில் கோயில்கள் சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு நடவடிக்கைகளுக்கான மையங்களாகக் கோயில்கள் விளங்கின.
கோயில் நிர்வாகம்:
கோயிராமர் -கோயில் கணக்கு, தேவகன்னி, ஸ்ரீவைஷ்ணவர், கண்டேசர் மற்றும் பிறர் முதல் நிலை கோயில் அதிகாரிகள் ஆவார். கோயில் கணக்கு என்பவரால் அதன் வரவு, செலவுகள் நிர்வகிக்கப்பட்டது.
சமூகப்பணி:
கோயில்கள் சமூகத்திருவிழாக் கூடமாக மாறியது. சித்திரைத்திருவிழா, கார்த்திகை, ஐப்பசி விழா ஆகியவை கொண்டாடப்பட்டண. திருவிழாக்கள் இராஜ இராஜனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் இராஜ இராஜ நாடகம் தஞ்சாவூர் கோயிலில் நடத்தப்பட்டது.
கல்விப்பணி:
கோயில்களில் பாடப்பட்ட வழிப்பாடல்கள் வாய்மொழி கல்வியை வளர்த்ததாக கூறப்படுகிறது.
வேதம், இசை, கலைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்தால் கோயில் ஒரு கல்வி நிறுவனமாகவும் விளங்கியது.
மக்களின் தொண்டு:
மேய்ச்சலை தொழிலாகக் கொண்டவர்கள் அணையா விளக்குக்கு கால்நடைகளை தானமாக வழங்கினார்.
எண்ணெய் ஆட்டுபவர்கள் எண்ணெய் வழங்கி கோயில் அன்றாட நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்.
எண்ணெய் ஆட்டுபவர்கள் சங்கபாடியவர் என அழைக்கப்பட்டனர். பஞ்ச காலங்களில் கோயில்களில் தங்களை தாங்களே அடிமைகளாக உற்றுக்கொண்டனர்.
வங்கிகள்:
கடன் வழங்குதல், அறக்கொடைகளையும், நன் கொடிகளையும் வழங்குதல், பெறுதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் கோயில்கள் வங்கிகள் போன்று செயல்பட்டன.
மேற்கண்ட செய்திகளின் மூலம் கோவில்கள் வழிபாட்டுத்தலமாக மட்டும் அல்லாமல் சமூக நிறுவனமாகவும் விளங்கியது என்பது தெளிவாகிறது.
38.
ரோம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முக்கியமான வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வாணிபத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பொ.ஆ.மு கடைசி நூற்றாண்டின் முடிவில் கிரேக்க அரசுகளை அகற்றி விட்டு மத்திய தரைக்கடல் உலகின் வல்லரசாக ரோம் எழுந்தது.
மேலும் பொ.ஆ.மு.27ல் பேரரசர் அகஸ்டின் கீழ் ஒரு பேரரசாக ரோம் உருவெடுத்தது.
வெற்றியும் செல்வக்குவிப்பும்:
ஐரோப்பாவிலும் வாடஆப்பிரிக்காவிலும் பெட்ரா வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப் பெரிய செல்வங்களை ரோம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இச்செல்வங்கள் ரோமின் புகழை உலகறியச் செய்தன அன்றைய காலகட்டத்தில் ரோம் தான் உலகிலேயே மிகப் பெரியதும் செல்வா செழிப்பு மிக்க நகரமாகும்.
குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் அணிவகைகளின் தேவை ரோமுக்கு அவசியமாயிற்று. இந்த அவசியம் ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹிப்பாலஸ் காலக்கணிப்பு:
பொ.ஆ.முதலாம் நூற்றாண்டில் எகிப்தின் கடலோடி "ஹிப்பாலஸ்" என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலத்தை கணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் மத்திய தரைக்கடல் வாணிபத்திற்கு உதவியது.
இதுவரை அரேபியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய தரைக்கடல் வாணிபம் மெல்ல மெல்ல ரோமாபுரியின் கைகளுக்கு மாறின.
மேலும் இதுவரை அரேபியருக்கு ஏகபோகமாய் இருந்த இரகசியங்கள் வெளியுலகத்திற்கு வெட்ட வெளிச்சமாயின.
நேரடிக் கடல் வழி:
ரோமானிய கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை நோக்கி நேரடியாக பயணிக்க தொடங்கின. பயம் நிறைந்த கடல் வழிகளையும் தரை வழி வாணிபத்தையும் ரோமானியர்கள் தவிர்த்தனர்.
இதன்மூலம் அவர்களுக்கு பயணப்பாதுகாப்பு எட்டியது. இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் ரோமானிய கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஆணுக்கு 20 கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஓரு கப்பல் என்று அதிகரித்தது.
இவ்வாறு மத்தியத் தரைக்கடல் உலகின் தனிப்பெரும் ஆதியாக ரோமானிய அரசு உருவெடுத்தது.
39.
முகமது பின் துக்ளக் இறந்த போது அவரது மகன் குழந்தையாக இருந்ததால் பெரோஸ் துக்ளக் ஆட்சி பொறுப்பை பெற்றுக் கொண்டார். இவரது ஆட்சியைப் பற்றி ஆராய்வோம்.
பிரபுக்களுடன் சமரசக் கொள்கை:
(i) பிரபுக்கள் வகுப்பாரிடமும், மதத்தலைவர்களிடமும் பெரோஸ் துக்ளக் சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
(ii) பிரிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
(iii) அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையே ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
(iv) பல வரிகளை குறைத்தனர். அதே நேரத்தில் அரசு நிதி வீணாக செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார்.
அடிமைகள் நலத்துறை:
(i) அடிமைகள் குறித்து ஃபெரோஸாக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது.
(ii) முந்திய ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார்.
(iii) அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத் துறையை உருவாக்கினார்.
(iv) 1,80,000 அடிமைகளின் நல் வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது.
(v) கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில் கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
போர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின் கொள்கை:
(i) ஃபெரோஸ் துக்ளக் போர்களை விரும்பவில்லை. ஆனால் கிளர்ச்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார்.
(ii) அவரது காலத்திய ஒரே பெரிய படையெடுப்பு 1362ல் சிந்துவின் மீது படையெடுப்பு எதிரிகளை வீழ்த்தி வெற்றி கண்டார்.
(iii) இவரது காலத்தில் நடைபெற்ற இரண்டு மங்கோலியத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
மதக் கொள்கை:
(i) வைதீக இசுலாமை ஆதரித்தார். தமது அரசை இசுலாமிய அரசாக அறிவித்தார்.
(ii) மத விரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்.
(iii) இசுலாமியர் அல்லாதவருக்கு 'ஜிஸியா' என்றும் வரியை விதித்தார்.
(iv) புதிய இந்துக் கோயில்கள் கட்டுவதை தடைசெய்யவில்லை.
(v) இசுலாமியர் -அல்லாதோர் உள்படக் கற்றறிந்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார்.
பொதுப்பணிகள்:
(i) பல பாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார்.
(ii) சட்லெஜ் நதியிலிருந்து ஹன்சிக்கு வெட்டிய கால்வாயும்,
(iii) யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப்பணி வளர்ச்சிக் கொள்கையை சுட்டுகின்றன.
இவரது ஆட்சி பல வகையில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், பிரபுக்களுடன் மேற்கொண்ட சமரசக் கொள்கை பரம்பரை உரிமை, பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் ஆகியவை ஃபெரோஸ் துக்ளக் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச் சென்றது.
40.
ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த யுவான் - சுவாங் தனது குறிப்புகளில் வட இந்தியாவின் நிலையையே குறித்து தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்
1. சாதி அமைப்பு முறை
2. பெண்கள் நிலை
3. மக்களின் வாழ்க்கைமுறை
4. உணவுப் பழக்கங்கள்
5. கல்வி
1. சாதி அமைப்பு முறை:
இந்து சமூகத்தில் சாதி முறை வலுவாக காலூன்றியிருந்தது.
யுவான் சுவாங்கின் கூற்றுப்படி சமுதாயத்தில் நான்கு பிரிவினர்கள் தொழில்கள் முற்காலத்தில் இருந்தது போலவே தோன்றின.
மக்கள் பிறரை வஞ்சிக்காமல் நேர்மையுடன் நடந்து கொண்டனர்.
பல்வேறு சாதி அமைப்பு காணப்பட்ட போதிலும் சமுதாய பிரிவினர்களிடையே மோதல்கள் எதுவும் நிகழவில்லை.
2. பெண்கள் நிலை
பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது. எனினும் வகுப்பினர் மத்தியில் முகத்திரை அணியும் வழக்கம் காணப்படவில்லை என யுவான் சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்
உடன்கட்டை ஏறும் வழக்கம். (சதி) இருந்திருக்கிறது. பிரபாகரவர்தனரின் மனைவி யசோமதிதேவி தன் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார்.
3. வாழ்க்கைமுறை
மக்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். பருத்தி பாட்டினாலான வண்ண வண்ண ஆடைகளை அணிந்தனர்.
மெல்லிய ஏக துணிகளை தயாரிக்கும் காலை செம்மை பெற்றிருந்தது. ஆண்கள் பெண்கள் என இருசாராரும் தங்கம் வெள்ளி அணிகலனை பயன்படுத்தினார்.
மோதிரங்கள், கப்புகள், பதக்கங்கள் அணியும் பழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் அழகுசாதன பொருட்களை பயன்படுத்தினர்.
4. உணவுப் பழக்கங்கள்
இந்தியாவிலும் மரக்கறி உணவுப் பழக்கத்தை கொண்டிருந்ததாக யுவான் - சுவாங் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
உணவு தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது.
சில நேரங்களில் மீனும் ஆட்டிறைச்சியும் உண்டனர்.
5. கல்வி
மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது.
கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது
வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை
ஒழுக்கமும் அறிவுத் திறனும் கொண்ட சாதுக்களையும் பிட்சுகளையும் மக்கள் பெரிதும் மதித்தனர். யுவான் சுவாங் மேற்கண்டவாறு வட இந்தியாவின் நிலை குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
41.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
42.
இந்தியாவில் பெளத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:-
1. சமயப் பிரிவினை:
ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பெளத்தத்தின் உண்மைத் தன்மையை இழக்கச் செய்தன.
2. மொழி மாற்றம்:
பாலி, பிராஹிருதம் மொழியில் பரப்பப்பட்டு வந்த பெளத்தமதச் செய்திகள் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழியில் எடுத்துச் செல்லப்பட்டன. இது பாமர மக்களுக்கும் பெளத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
3. அரசு ஆதரவை இழத்தல்:
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப்பிறகு பெளத்தம் அரசு ஆதரவை இழந்தது. வேத மதம் அரசு ஆதரவை பெற்றது. பெளத்த சமயம் வீழ்ச்சிக்கு இது வழி வகுத்தது.
4. வட இந்தியாவில் பக்தி இயக்கம்:
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினார். இதனால் பெளத்தமதவளர்ச்சி பாதித்தது.
5. ஹீணர்கள் படையெடுப்பு:
ஹீண ஆட்சியாளர்களான தோராமானர் மிகுரகுலர் ஆகியோர் பெளத்தர்களின் மீது வெறுப்புற்றனர். வடமேற்கு இந்தியாவில் பெளத்த மதத்தினரை அழித்தனர்.
6. இராஜபுத்திரர்களின் எதிர்ப்பு:
இராஜபுத்திர மன்னர்கள் வேத மதத்தின் தீவர ஆதரவாளர்கள். ஆதலால் பெளத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொள்வதிலும் ஈடுபட்டனர். இத்துடன் பெளத்த மதம் காரணமாயிற்று.
7. அயலவர் படையெடுப்பு:
இறுதியாக அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பெளத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல வைத்தனர்.
இதன் விளைவாக, பெளத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.
43.
அ) மட்பாண்டம் செய்தல்
1. ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட சுட்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
2. மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
3. அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நிரைச் சேர்த்து வைக்கும் கலர், துகளுடன் கூடிய கலன் கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை.
4. நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பல வகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
5. அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இவைகள், மீன் செதில்கள், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல் மாணலான கோடுகள் பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
6. ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றன.
ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கிய பங்கு வகித்தன.
1. ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியாவுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது. அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
2. சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன் பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன.
3. க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்ப்புகளைக் குறிப்பிடுகின்றன.
4. ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனிலும், ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள்,தயக்கட்டைகள் மணிகள் மெசபடோமியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5. கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவை ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி ஆயின.
6. ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளோடு தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
ஹரப்பா நாகரிக்கப்பகுதிகளில் கிடைக்கும் நிக்கல் பொருள்களும் மெசபடோமியாவுடன் இருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்.
இ) எடைக்கற்களும் அளவீடுகளும்
வணிக பரிவர்த்தனைக்கான ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அளவீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
1. ஹரப்பா நாகரிக்கப்பகுதியிலிருந்து படிகக் கல்லாலான, கன சதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
3. எடையின் விகிதம் இருமடங்காகும் படி 1:2:4:8:16:32 என பின்பற்றப்பட்டுள்ளது,
4. இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடைபோட பயன்பட்டிருக்கலாம்.
5. சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் =1.75 செ.மீ ஆகக் கொள்ளும் விகிதத்தில் அளவு கோலையும் பயன்படுத்திருக்கிறள்.
ஈ) முத்திரைகளும் எழுத்து முறையும்:
அ) முத்திரைகள்:
1. ஸ்டீட்டைட், செம்மண், சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிக்கப் பகுதிகளில் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியீட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம்.
3. பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டிருக்கலாம்.
ஆ) எழுத்துமுறை:
1. ஹரப்பா எழுத்துமுறையை இன்று வரைக்கும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
2. 5000 த்துக்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
3. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத் தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
44.
(i) வேதகால அரசு முறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும்.
(ii) இனக்குழுவின் தலைவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) எனப்பட்டார்.
(iii) ராஜன் பல தூண்களைக் கொண்ட அரண்மனையில் வாழ்ந்தார். மதக்குருமார்களுக்கு கால்நடைகளையும், தேர்களையும், தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினார்.
(iv) ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவரானார்.
(v) அரசருடைய முக்கிய பணி இனக்குழுக்களை காப்பதாகும். மக்களின் சொத்துக்களை பாதுகாத்தார்.
(vi) நிலப்பரப்பின் மீதம், மக்களின் மீதும் அதிகாரம் இருந்தது.
(vii) சாதாரணமாக மக்களோடு நெருக்கமாய் இருந்தார். அவர்களோடு பொதுவில் உணவருந்தினார்.
நிர்வாகம்:
(i) வேத காலத்தில் சபா, சமிதி, விததா, கணா என்ற அமைப்புகள் காணப்பட்டுள்ளன.
(ii) சபா என்பது மூத்தோர் அல்லது செல்வார்கள் பங்கேற்ற அமைப்பு.
(iii) சமிதி என்பது மக்கள் கூடும் இடமாகும். விததா என்பது இணைக்க குழுக்களின் அமைப்பாகும். ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
(iv) அரசர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு சபா, சமிதி ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினார்.
(v) மதகுருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து தங்கள் செல்வாக்கைப் பெற்றனர்.
(vi) சேனானி என்பவர் படைத்தலைவர் ஆவார். 'பலி' எனப்பட்ட வரைமுறை தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தி பெறப்பட்டது.
(vii) நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர்களான குலபா அல்லது கிராமணி என்பவர்களுக்கு இவர் உதவி செய்வர். கிராமங்களின் தலைவரும் கிராமணியே ஆவார்.
45.
தமிழ்ச்செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
46.
1. ஹரப்பா மக்களின் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
2. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டார்கள்.
3. வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது.
4. ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள். பாசனத்துக்கு கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
47.
விஜயநகரப் பேரரசின் கீழ் இயங்கி வந்த பாளையக்காரர்களில் நெற்கட்டும்செவல் பகுதியின் புலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சியின் கட்டபொம்மன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்க்கு கப்பம்கட்ட மறுக்கவே அவர்கள் மீது போர்தொடுத்து கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாளையக்கார படை வீரர்கள்: கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரை, சிவகங்கையின் மருது சகோதர்கள் ஆகியோர் 1801 ம் ஆண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதுவே 1801 ம் ஆண்டு கிளர்ச்சி ஆகும்.
48.
(i) எம்.ஜி.ரானடே அவர்கள் பண்டித ராமபாயின் சமூக சீர்திருத்த இயக்கங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
(ii) ரமாபாய், ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்கள் இணைந்து ஆரியமகிளா சமாஜ் என்ற அமைப்பை நிறுவினர்.
(iii) இதில் 300 பெண்கள் வரை கல்வி கற்றனர்.
(iv) அதேபோல் விதவைகளுக்காக சாரதா சதன் (வீடற்றவர்களுக்கான இல்லம்) என்ற அமைப்பையும் அமைத்தனர்.
(v) இவ்வாறாக, ரானடே அவர்கள் சமூக நீதிக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்க்காகவும் அரும்பாடுபட்டார்.
49.
1. தாராஷுகோ ஷாஜகானின் மூத்த மகன் ஆவார்.
2. தில்லி அரியணைக்கான வாரிசுரிமைப் போரில் ஒளரங்கசீப்பிடம் தோற்றுப்போன தாராஷுகோ தத்துவஞான இளவரசர் என அறியப்பட்டார்.
3. பல்வேறு பண்பாடுகளை உரையாடலுக்கு உட்படுத்திய அவர் இந்து மதத்திற்கும், இஸ்லாத்துக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதை கண்டறிந்தார்.
4. சம்ஸ்கிருத மொழியிலமைந்த உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
50.
(i) இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர் திட்டதிற்கு முற்றிலும் மாறான தண்டனைக்குரிய ஒப்பந்தமாகும்.
(ii) இம்முறையின்படி கூலி (ஒப்பந்த தொழிலாளரை அழைக்கும் முறை ) சிறைசாலை போன்ற சுழலில் பணி செய்ய வேண்டும்.
(iii) பணியில் அல்டசியம் காட்டினாலோ அல்லது பணி செய்ய மறுத்தாலோ , மிடுக்காக திரிந்தாலோ , உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தாலோ , ஒப்பந்த காலம் முடியும் முன் பணியை விட்டு விலகினாலோ கூலியை மறுக்கவோ அல்லது சிறை தண்டனை வழங்கவோ முடியும்.
(iv) ஒரு அர்ப்ப பிரச்சினைக்காகக்கூட சட்டச் சரத்துக்களை காட்டி தோட்ட உரிமையாளர் , தொழிலாளர்களின் சம்பளத்தை மறுக்கவோ அல்லது அவர்களை சிறையில் அடைக்கவோ செய்தனர்.
51.
(i) இருவரும் இணைந்து ஐநூற்றுவர். திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர் போன்ற பெயர்களில் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
(ii) உள்நாட்டு வாணிபத்தை பணிக்கிராமத்தார் மேற்கொண்டார்.
(iii) வெளிநாட்டு வாணிபத்திற்கு அஞ்சு வண்ணத்தார் என்னும் மேற்கு ஆசிரியர் குழு காணப்பட்டது.
(iv) முக்கிய ஏற்றுமதி பொருட்கள் சந்தனம் அகில், மிளகு, விலையுயர்ந்த ரத்தினங்கள், நெல், உப்பு ஆகும்.
(v) கற்பூரம், செம்பு, தகரம், பாதரசம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
52.
i) இந்தோ - கிரேக்க அரசர்களில் அறியப்பட்ட முதல் அரசர் டெமெட்ரியஸ் ஆவார்.
ii) இந்தோ - கிரேக்கர்கள் நேர்த்தி மிக நாணயங்களை வெளியிட்டனர்.
iii) இந்நாணயங்கள் அவர்களின் ஆட்சியை வேறுபடுத்தி காட்டுகின்ற அம்சங்களோடு வெளியிடப்பட்டன
iv) நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற அரசரின் உருவமும், பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
v) அரசர்கள் பலவிதமான தலைக்கவசங்களோடு இருப்பது தனிசிறப்பு.
vi) இந்நாணயங்கள் தனிமுக மற்றும் உடல் கூறுகளையும் கொண்ட அரசரின் தோற்றத்தை காட்டுகின்றன.
53.
i) நாடெங்கும் கிடைத்த பருத்தியைக் கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபட்டன.
ii) ஆடை வணிகம் அதிகம் நடைபெற்றது.
iii) சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் முதல் அரசக் குடும்பத்தினர் வரை பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ராகங்களில் பருத்தி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
iv) காசி, வங்கம், காம்ரூபம், மதுரை போன்ற இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
v) சீனா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலிருந்து துணி, கம்பளி, பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
54.
(i) ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினார்.
(ii) ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் நாலாயிரதிவ்யபிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.
(iii) வைதீக இந்துக்களை ஒன்றிணைந்தார்.
(iv) பிராமணர் அல்லாதோரையும் ஆழ்வார்கள் வைணவத்தில் இணைத்துக் கொண்டனர்.
(v) வைதீக சடங்குகளும், நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு வைணவம் தமிழகத்தில் பரவியது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards