11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/03/2019
11th Public Exam March 2019 Model Test
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு வண்டியின் மெர்குரியிலிருந்து தங்க விடப்பட்டுள்ள நீளம் 'L' கொண்ட தனி ஊசலின் அலைவுக் காலத்தைக் கண்டுபிடி. இது கீழாக ஒரு சாய்தள உள்ளமைப்பு \(\alpha \)ன் மீது உராய்வின்றி அலைவுறுகிறதது.
2.
வெப்ப இயக்கவியல் குறிப்பு வரைக.
3.
நீட்சீத் திரிபு என்பது யாது? அதன் வகைகளுடன் விளக்குக.
4.
பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?
5.
திசைவேகம் மற்றும் வேகத்தை வரையறு.
6.
1250 kg நிறையுள்ள ஒரு வாகனம் ஒரு சமமான நேர் சாலையில் 0.2 ms-2 முடுக்கத்துடன் 500 N என்ற எதிர்க்கும் புறவிசைக்கெதிராக இயக்கப்படுகிறது. வாகனத்தின் திசைவேகம் 30 m s-1 எனில் வாகனத்தின் இயந்திரம் வெளிப்படுத்தும் திறனைக் கணக்கிடுக.
7.
தூய உருளுதலுக்கான நிபந்தனை என்ன?
8.
400 g நிறை கொண்ட மாங்காய் ஒன்று மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தி மாங்காயைத் தாங்கியுள்ள காம்பின் இழுவிசையைக் காண்க.
9.
எந்திர படகு நீரில் உண்டாக்கும் அலைகள்
குருக்கலை
நெட்டலை
நிலையான அலைகள்
நெட்டலை மற்றும் குருக்கலை
10.
ஒரு வெப்ப மாற்றீடற்ற மாற்றத்தில் ஓரணு மூலக்கூறு வாயுவின் அழுத்தம் மற்றும் வெப்பநிலை PxTc,C என்பது
\(2\over 5\)
\(5\over 2\)
\(3\over 5\)
\(5\over 3\)
11.
கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?
f
\(f\over 2\)
\(f\over f +2\)
\(f+2\over f\)
12.
ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கம் பாகத்தின்(freezer) வெப்பநிலை -12oC. அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்ப நிலை என்ன?
50oC
45.2oC
40.2oC
37.5oC
13.
தடையுறு அலையியற்றியானது 100 அலைவுகளை முழுமைப்படுத்தும்பொழுது வீச்சானது அதன் ஆரம்பவீச்சின் 1/3 மடங்காக குறைகின்றது. 200 அலைவுகளை முழுமைப்படுத்தும்போது அதன் வீச்சின் மதிப்பு என்ன?
1/5
2/3
1/6
1/9
14.
இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்திகள், நீளங்கள் விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1 : 2, x : y, மற்றும் 4 : 1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x : y யின் மதிப்பு_______.
36:35
35:36
1:1
1:2
15.
ஒரே பொருளால் ஆன மூன்று கம்பிகளின் பளு - நீட்சி வரைப்படம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் தடிமனான கம்பி எது?
கம்பி 1
கம்பி 2
கம்பி 3
அனைத்தும் ஒரே தடிமன் கொண்டவை
16.
சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்று A,B மற்றும் C ஆகிய நிலைகளில் பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, KB மற்றும் KC ஆகும். இங்கு நெட்டச்சு AC மற்றும் SB யானது சூரியனின் நிலை S-ல் வரையப்படும் செங்குத்து எனில், _____.

KA > KB >KC
KB < KA < KC
KA < KB < KC
KB > KA > KC
17.
இயங்கும் பொருள் ஒன்றின் திசைவேகம் மற்றும் அதன் வேகம் சமமாக இருக்க, அது இயங்க வேண்டிய பாதை_____
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
18.
சூரியனுக்கும், புவிக்கும் இடையேயான தொலைவு r எனில், சூரியனைச் சுற்றும் புவியின் கோண உந்தம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?
r3
r
\(\sqrt {r}\)
r2
19.
பொருளொன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது, அப்பொருள் 4 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரமென்ன? ( காற்றுத்தடையைப் புறக்கணிக்க)
77.3 m
78.4 m
80.5 m
79.2 m
20.
ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை?
எப்போதும் எதிர்குறியுடையது
சுழி
எப்போதும் நேர்குறியுடையது
வரையறுக்கப்படாதது
21.
m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.
1
1 ஐ விடக் குறைவு
1 ஐ விட அதிகம்
மேற்கண்ட அனைத்தும்
22.
ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.
8%
2%
4%
6%
23.
M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.
5:7
2:3
2:5
7:5
24.
வரிச்சீர் ஓட்டத்தினை எடுத்துக்கட்டுடன் விவரி.
25.
பிரிவு 3.6.3 வெளி விளிம்பு உயர்த்தப்பட்ட சாலை உட்பிரிவில், சாலையின் பரப்பு காரின் டயர் மீது செலுத்தும் உராய்வு விசையைப் பற்றி நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. காரின் டயருக்கும், சாலையின் பரப்பிற்கும் இடையேயுள்ள ஓய்வுநிலை உராய்வுக்குணகம் எனக் கருதி, காரொன்று வளைவுச் சாலையில் சறுக்காமல் வளைவதற்கான பெருமத் திசைவேகத்தின் கோவையைப் பெறுக.
26.
ஒரு துப்பாக்கி குண்டின் நிறை 300 அது 500 ms-1 அளவேகத்தில் இயங்குகிறது. ஒரு நிலையான இலக்கினை 10 cm துளைத்துக் கொண்டு செல்கிறது. இலக்கினால் குண்டின் மீது செலுத்தப்படும் சராசரி விசையைக் கணக்கிடுக.
27.
பறக்கும் நேரம், கிடைத்தள நெடுக்கம் மற்றும் தொகுபயன் திசைவேகம்-இவற்றின் சமன்பாடுகளைத் தருவி.
28.
29.
அலைவுகளின் நான்கு வகைகளை விரிவாக விளக்குக.
30.
27°C வெப்பநிலை உள்ள அறை ஒன்றில் உள்ள சூடான நீர் 92°C லிருந்து 84°C வெப்பநிலைக்கு குளிர 3 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. அதே நீர் 65°C லிருந்து 60°C வெப்பநிலைக்குக் குறைய எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கிடுக.
31.
கடல் அலையின் மீது வாத்து பொம்மை ஒன்று உள்ளதை மனிதன் ஒருவன் பார்க்கிறான். வாத்து நிமிடத்திற்கு 15முறை மேலும் கீழும் இயங்குகிறது. தோராயமாக கடல் அலையின் அலைநீளம் 12m என அவர் அளக்கிறார். வாத்து ஒருமுறை மேலே வருவதற்கும் கீழே செல்வதற்கும் ஆகும் நேரத்தையும் கடல் அலையின் திசைவேகத்தையும் காண்க.
32.
சூரிய குடும்பத்தின் படம் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து புதன், புவி மற்றும் வியாழன் கோள்கள் மீதான சூரியனின் ஈர்ப்பியல் புலங்களின் தன்மையினை குறிப்பிடுக.

33.
34.
R ஆரமுடைய சீரான பரப்பு நிறை அடர்த்தி கொண்ட வட்டத்தட்டிலிருந்து \(\frac { R }{ 2 } \) ஆரமுடைய ஒரு சிறு தட்டு வடிவப் பகுதி படத்தில் காட்டியுள்ளவாறு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் நிறை மையத்தைக் கணக்கிடுக.
35.
அலைவுறு இயக்கம் அல்லது அதிர்வுறு இயக்கம் என்றால் என்ன?
36.
5 kg மற்றும் 20 kg நிறை கொண்ட இரண்டு பொருட்கள் தொடக்கத்தில் ஓய்வுநிலையில் உள்ளன. 100 N விசை அப்பொருட்களின் மீது 5 வினாடிகளுக்குச் செலுத்தப்படுகிறது.
A) 5 வினாடிகளுக்குப் பின்பு ஒவ்வொரு பொருளும் பெரும் உந்தத்தின் மதிப்பு என்ன?
B) 5 வினாடிகளுக்குப் பின்பு ஒவ்வொரு பொருளும் பெரும் வேகத்தின் மதிப்பு என்ன?
37.
வெப்ப இயக்கவியலின் சுழி விதியைக் கூறுக.
38.
டாப்ளர் விளைவை விளக்குக.
39.
நியூட்டனின் ஈர்ப்பியல் பொது விதியை தருக.
40.
விமானத்தில் உள்ள சூழல் விசிறிகள் பயன் என்ன?
41.
பரிமாணப் பகுப்பாய்வின் பயன்கள் யாவை?
42.
மோதல்கள் என்றால் என்ன? இதன் வகைகள் யாவை?
43.
துகளின் நிலை வெக்டர் \(\overrightarrow{r}=3{t}^{2}\hat{i}+5t\hat{j}+4\hat{k},\) இதிலிருந்து கீழ்க்கண்டவற்றைக் காண்க
அ) t = 3 வினாடியில் துகளின் திசை வேகம்
ஆ) t = 3 வினாடியில் துகளின் வேகம்
இ) t = 3 வினாடியில் துகளின் முடுக்கம்
1.
g'=g cos \(\alpha \)
T =\(2\pi \sqrt { \frac { l }{ cos\alpha } } =2\pi \sqrt { \frac { 1 }{ cos\alpha } } \)
2.
(i) வெப்ப இயக்கவியல் என்பது இயற்பியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவு வேலையை வெப்பமாகவும் மற்றும் வெப்பத்தை வேலையாகவும் மாற்றுவதில் உள்ள விதிகளை விவரிக்கிறது.
(ii) வெப்ப இயக்கவியல் விதிகள் பாயில், சாரலஸ், பெர்னூலி ஜூல், கிளாசியஸ், கெல்வின், கார்னோ மற்றும் ஹெல்ம்ஹோல்ட்ஸ் போன்ற அறிவியல் அறிஞர்களின் மூன்று நூற்றாண்டு கால ஆய்வுகளின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்டதாகும்.
(iii) அன்றாட வாழ்வில் நம்மைச்சுற்றி நடைபெறும் அனைத்து நிகழ்களும் ஏன் நமது உடலியக்க நிகழ்வுகள் கூட வெப்ப இயக்கவியல் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகின்றது எனக்கூறினால் அது மிகையாகாது. எனவே வெப்ப இயக்கவியல் என்பது இயற்பியலின் ஓர் இன்றியமையாத பிரிவாகும்.
3.
நீட்சீத் திரிபு: l என்ற நீளம் கொண்ட ஒரு கம்பியானது சமமான , எதிரெதிர் திசைகளில் செயல்படும்.
விசைகளால் இழுக்கப்படும்போது . அதன் நீட்சீத்திரிபு

நீட்சீத்திரிபு இரு வகைப்படுகிறது.
(i) இழுவிசைதிரிபு : இயல்பான அளவிலிருந்து நீளம் அதிகரிக்கப்பட்டால் அது இழுவிசைதிரிபு எனப்படும்.
(ii)அமுக்கத்திரிபு : இயல்பான அளவிலிருந்து நீளம் குறைக்கப்பட்டால் அது அமுக்கத்திரிபு எனப்படும்.
4.
பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள்:
(i) எண்கள் TT, e (ஆய்லா் எண்) போன்ற பரிமாணமற்ற மாறிலிகளின் மதிப்பை இம்முறையின் மூலம் பெற முடியாது.
(ii) கொடுக்கப்பட்டுள்ள அளவு வெக்டா் அளவா? அல்லது ஸ்கேலா் அளவா? என்பதை இம்முறை மூலம் தீா்மானிக்க முடியாது.
(iii) திரிகோணமிதி, அடுக்குக்குறி மற்றும் மடக்கை சாா்புகள் உள்ளடங்கிய சமன்பாடுகளின் தொடா்புகளைக் கண்டறிய இம்முறையில் இயலாது.
(iv) மூன்றுக்கு மேற்பட்ட இயற்பியல் அளவுகள் உள்ளடங்கிய சமன்பாடுகளுக்கு இம்முறையைப் பயன்படுத்த இயலாது.
(v) இம்முறையில் ஒரு சமன்பாடு பரிமாணமுறையில் சரியானதா, என்றே மெய்ப்பிக்க முடியும் அதன் உண்மையான சமன்பாட்டைக் கண்டறிய முடியாது.
(vi) எடுத்துக்காட்டாக, s = ut + 1/3 at2 என்பது பரிமாண முறைப்படி சரி. ஆனால் உண்மையான சமன்பாடு s = ut + 1/2 at2 ஆகும்.
5.
திசைவேகம்:
நேரத்தைப் பொருத்து பொருள் ஒன்றின் நிலை வெக்டா் மாறும் வீதம் திசைவேகம் எனப்படும். இது ஒரு வெக்டர் அளவு.
\(\vec{v}=\frac{d \vec{r}}{d t}\)
வேகம்:
திசைவேகத்தின் எண் மதிப்பு வேகம் எனப்படும்.
அதன் மதிப்பு \(v=\sqrt{v_x^2+v_y^2+v_z^2}\) இது ஒரு நோ்க்குறி ஸ்கேலாா் அளவு.
6.
வாகனத்தின் இயந்திரம், எதிர்க்கும் விசைக்கெதிராக வேலை செய்து வாகனத்தை ஒரு முடுக்கத்துடன் இயக்க வேண்டும். எனவே வாகனத்தின் இயந்திரம் வெளிப்படுத்தும் திறன்
P = (எதிர்க்கும் விசை + (நிறை × முடுக்கம்)) (திசைவேகம்)
\(\mathrm{P}=\overrightarrow{\mathrm{F}}_{\text {tot }} \cdot \overrightarrow{\mathrm{v}}=\left(\mathrm{F}_{\text {resistive }}+\mathrm{F}\right) \mathrm{v} \)
\(\mathrm{P}=\overrightarrow{\mathrm{F}}_{\text {tot }} \cdot \overrightarrow{\mathrm{V}}=\left(\mathrm{F}_{\text {resistive }}+\mathrm{ma}\right) \mathrm{V} \)
\(=(500+(1250 \times 0.2))(30)=22.5 \mathrm{~kW} \)
7.
தூய உருளுதலுக்கான நிபந்தனைகள்:
(i) நோ்க்கோட்டு இயக்க ஆற்றல் + சுழற்சி இயக்க ஆற்றல் = மொத்த இயக்க ஆற்றல்
(ii) தொடுபுள்ளியில், புள்ளியின் சார்பு இயக்கம் (உருளுதல்) இருக்காது
(iii) பொருளின் உருளுதலில், முடுக்கம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். திடீரென இந்த நிலை ஏற்பட்டால் பொருளானது நழுவலாம் அல்லது சறுக்கலாம்.
8.
1. பொருத்தமான நிலைமக்குறிப்பாயம் ஒன்றைக் கருத வேண்டும் பொதுவாக புவியினை ஒரு நிலைமக்குறிப்பாயமாகக் கருதலாம்.
2. நியூட்டன் விதிகளைப் பயன்படுத்தத் தேவையான அமைப்பைக் கண்டறிய வேண்டும். அவ்வமைப்பானது ஒரு பொருள் அமைப்பாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் சேர்ந்த அமைப்பாகவோ இருக்கலாம்.
3. பொருளின் மீது செயல்படும் விசைகளைக் கண்டறிந்து அவற்றைக் கொண்டு விசைப்படம் வரைய வேண்டும். பின்னர் நியூட்டனின் இரண்டாம் விதியை பயன்படுத்த வேண்டும். இடப்பக்கம் பொருளின் மீது செயல்படும் விசைகளை வெக்டர் வடிவில் குறிப்பிட வேண்டும். வலப்பக்கம் பொருளின் நிறை மாற்றம் அப்பொருள் முடுக்கம் இவற்றின் பெருக்கல்பலனை வெக்டர் வடிவில் குறிப்பிட வேண்டும். ஏனெனில் முடுக்கம் ஒரு வெக்டர் அளவாகும்.

4. முடுக்கம் கொடுக்கப்பட்டிருப்பின் விசையைக் கண்டறியலாம். அதே போல் விசை கொடுக்கப்பட்டிருப்பின் பொருளின் முடுக்கத்தைக் காணலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளின்படி படத்தில் காட்டியுள்ளவாறு தரையில் ஒரு நிலமைக் குறிப்பாயத்தைக் கருத வேண்டும்.
.jpg)
மாங்காயின் மீது பின்வரும் இரண்டு விசைகள் செயல்படுகின்றன.
i) மாங்காயின் மீது எதிர்க்குறி y அச்சுத்திசையில் கீழ் நோக்கி செயல்படும் புவியீர்ப்பு விசை, நேர்க்குறி y அச்சுத்திசையில் செயல்படும் மாங்காயைத் தாங்கியுள்ள காம்பு, மாங்காயின் மீது செலுத்தும் மேல் நோக்கிய இழுவிசை.
மாங்காயின் விசைப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது.
.jpg)
\(\overrightarrow { { F }_{ g } } mg\left( -\hat { j } \right) =-mg\hat { j } \)
இங்கு mg என்பது புவியீர்ப்பு விசையின் எண்மதிப்பு மற்றும் \(\left( -\hat { j } \right) \) என்பதை எதிர்குறி y அச்சுத்திசையைக் குறிக்கும் ஓரலகுவெக்டர்.
\(\vec{T}=T \hat{j}\)
இங்கு T என்பது மாங்காயின் மீது செயல்படும் இழுவிசை மற்றும் \((\hat{j})\) என்பது நேர்குறி y அச்சுத்திசையைக் குறிக்கும் ஓரலகு வெக்டர்
\(\vec{F}_{\text {net }}=\vec{F}_g+\vec{T }=-mg \hat{j }+T \hat{j}=(T-m g) \hat{j}\)
நியூட்டன் இரண்டாம் விதிப்படி, \(\vec{F}_{n e t}=m \vec{a}\)
நம்மைப்பொருத்து (நிலைமக்குறிப்பாயத்தை பொருத்து) மாங்காய் ஓய்வு நிலையில் உள்ளது. எனவே அதன் முடுக்கம் சுழி \((\vec{a}=0)\)
எனவே, \(\vec{F}_{n e t}=m \vec{a}=0\)
\((T-m g) \hat{j}=0\)
மேமே உள்ள சமன்பாட்டின் இரண்டுபக்கங்களின் வெக்டர் கூறுகளை ஒப்பிடும்போது T - mg = 0 எனக்கிடைக்கும்.
எனவே, மாங்காய்க் காம்பின் இழுவிசை T = mg
மாங்காயின் நிறை m = 400 g மேலும் \(\mathrm{g}=9.8 \mathrm{~ms}^{-2}\)
எனவே மாங்கையின் மீது செயல்படும் இழுவிசை T = 0.4 x 9.8 = 3.92 N.
9.
(d)
நெட்டலை மற்றும் குருக்கலை
10.
(b)
\(5\over 2\)
11.
(d)
\(f+2\over f\)
12.
(c)
40.2oC
13.
(d)
1/9
14.
(a)
36:35
15.
(a)
கம்பி 1
16.
(a)
KA > KB >KC
17.
(a)
நேர்கோடு
18.
(d)
r2
19.
தானாக விழும் பொருளிற்கு,
\(\mathrm{s}=\frac{1}{2} g t^2\)
அதாவது, \(\mathrm{H}=\frac{1}{2} \times 9.8 \times 4 \times 4=78.4 \mathrm{~m}\)
20.
சுழி
21.
(c)
1 ஐ விட அதிகம்
22.
ஆரத்தின் பிழை = 2 %
\(\Delta r=\frac{2}{100}=0.02\)
கோளத்தின் பருமன்
\(\mathrm{V} =\frac{4}{3} \pi r^3 \)
\(\frac{d V}{V} =\frac{4}{3} \pi \times 3 r^2 d r \)
\(=3 d r=3 \times(2 \%) \)
\(\frac{d V}{V} =6 \%\)
23.
சறுக்கலின்றி, உருளும் திண்ம
உருளையின் முடுக்கம்
\(a_1=\frac{g \sin \theta}{1+\frac{K^2}{r^2}}\)
கீழ்நோக்கி (சறுக்கும்போது, முடுக்கம் \(\mathrm{a}_2=\mathrm{g} \sin \theta\)
\(\therefore \frac{a_1}{a_2} =\frac{g \sin \theta /\left(1+K^2 / r^2\right)}{g \sin \theta} \)
\(=\frac{1}{1+\frac{K^2}{r^2}}\)
திண்மக் கோளத்திற்கு
\(\frac{K^2}{r^2}=\frac{2}{5}\)
∴ முடுக்கங்களின் தகவு
\(\frac{a_1}{a} =\frac{1}{1+\frac{2}{5}} \)
\(=\frac{1}{\frac{(5+2)}{5}}=\frac{1}{7 / 5} \)
\(=\frac{5}{7} \)
\(\therefore a_1: a_2 =5: 7\)
24.
(i)ஆற்றல் நடுப்பகுதியில் துகளின் திசைவேகம் வினாடிக்கு 4 மீட்டர் இருப்பதாகக் கருதுக. எனவே இந்தப் புள்ளியைக் கடக்கும் அனைத்துத் துகள்களின் திசைவேகங்களும் அதே மதிப்பைப் பெறும். இது போன்ற, கரை யோரத்தில் பாயும் நீர்மத் துகளின் திசைவேகம் வினாடிக்கு 0.5 மீட்டர் எனில் அதனைப் பின் தொடரும் அனைத்து நீர்மத் துகளின் திசைவேகங்களும் அதே மதிப்பைப் பெறும்.
(ii) ஒரு திரவ ஓட்டத்தில், ஒரு புள்ளியின் வழியே செல்லும் ஒவ்வொரு திரவத்துகளும் அதற்கு முன்னர் சென்ற துகள்களின் பாதையிலேயே அதே திசைவேகத்தில் இயங்கினால் அந்த திரவ ஓட்டமானது வரிச்சீர் ஓட்டம் எனப்படும்.
(iii) இதனை சீரான ஓட்டம் அல்லது அடுக்குமுறை ஓட்டம் (Laminar flow ) எனவும் குறிப்பிடலாம். இயங்கும் பாய்மத்துகள் மேற்கொள்ளும் வளைவான பாதை வரிச்சீர் எனப்படுகிறது. எந்த ஒரு புள்ளியிலும் அதன் தொடுகோடானது அந்தப் புள்ளியில் பாய்ம ஓட்டத்தின் திசையைக் கொடுக்கிறது. இதனை இவ்வாறு அழைப்பதற்குக் காரணம் இது ஒரு நீர் ஓடை அல்லது இலட்சிய நிலையில் உள்ள ஆற்றைப் போன்று உள்ளதே ஆகும்.

(iv) நீர்ம ஓட்டத்தின் திசைக்கு செங்குத்தான எந்த ஒரு குறுக்குவெட்டு பரப்பிலும் ஒரே திசை வேகத்தைக் கொண்ட சீரான வரிக் கற்றையைக் கருதினால் அந்த கற்றை குழாய் வடிவ ஓட்டம் (tube of flow) எனப்படும். குழாய் வடிவ ஓட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்மத் துகளும் அதன் இயக்கம் முழுவதற்கும் குழாயினுள்ளேயே எப்போதும் இருக்கும் மற்றும் மற்ற குழாய் திரவத்துடன் கலக்காது என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
(v) குழாய் வடிவ ஓட்டத்தின் அச்சு எப்போதும் வரிச்சீர் ஓட்டத்தை தரும். வரிச்சீர் ஓட்டங்கள் எப்போதும் பாய்மத் துகள்களின் இயக்கப் பாதைகளைக் குறுகிக்கின்றன. பாய்மத்தின் ஓட்டம் மறுநிலைத் திசைவேகம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட திசைவேகம் வரை வரீச்சீராக உள்ளது. இதன் பொருள், மறுநிலைத் திசைவேகத்திற்குக் குறைவான வேகத்தில் பாயும் போது வரிச்சீர் ஓட்டத்தைப் பெறலாம்.
25.
வெளிவிளிம்பு உயர்த்தப் பட்ட சாலையில் காரொன்று வளையும் போது, கீழ்கண்ட மூன்று விசைகள் காரின் மீது செயல்படுகின்றன.
1) கீழ் நோக்கிச் செயல்படும் ஈர்ப்புவிசை(mg)
2) சாலையின் பரப்பிற்கு செங்குத்தாகச் செயல்படும் செங்குத்துவிசை(N)
3) சாலையின் பரப்பு வழியே காரின் மீது செயல்படும் ஓய்வு நிலை உராய்வுவிசை (f) கிடைத்தள மற்றும் செங்குத்துத் திசைகளில் செயல்படும் விசைகளை பின்வரும் படம் காட்டுகிறது.

v என்ற வேகத்தில் கார் வளையும் போது, செங்குத்து விசையின் கிடைத்தளக் கூறு மற்றும் ஓய்வுநிலை உறைவுவிசை, மையநோக்கு விசையைக் கொடுக்கிறது. இதனைப் பின்வரும் சமன்பாடு காட்டுகிறது.
\(Nsin\theta +fcos\theta =\frac { { mv }^{ 2 } }{ r } (1)\)
செங்குத்துத் திசையில் எவ்வித முடுக்கமும் இல்லை. இது, மேல் நோக்கிச் செயல்படும் செங்குத்து விசையின் (N), செங்குத்துக்கூறு கீழ் நோக்கிச் செயல்படும் புவியீர்ப்பு விசையை சமன் செய்கிறது என்பதை உணர்த்துகிறது.
இதனை பின் வருமாறு எழுதலாம்
Ncos\(\theta\)=mg+fsin\(\theta\) அல்லது Ncos\(\theta\)-fsin\(\theta\)=mg
சமன்பாடு (1)ஐ (2) ஆல் வகுக்கும் போது
\(\frac { Nsin\theta +fcos\theta }{ Ncos\theta -fsin\theta } =\frac { { v }^{ 2 } }{ rg } \) ...(3)
சறுக்காமல் வளைவதற்கான பெருமத் திசைவேக நிபந்தனைக்கு ஓய்வுநிலை உராய்வுக் குணகத்தின் பெருமமதிப்பைப் பயன்படுத்த வேண்டும். இந் நிபந்தனையை சமன்பாடு (3) இல் பயன்படுத்தும்போது.
\(\frac { Nsin\theta +{ \mu }_{ s }Nfcos\theta }{ Ncos\theta -{ \mu }_{ s }Nfsin\theta } =\frac { { v }_{ max }^{ 2 } }{ rg } \)
n cos \(\theta\) வை சமன்பாட்டிலிருந்து வெளியே எடுக்கும் போது
\(\frac { Ncos\theta \left\{ \left( \frac { Nsin\theta }{ Ncos\theta + } \right) +{ \mu }_{ s } \right\} }{ Ncos\theta \left( 1-{ \mu }_{ s }\frac { Nsin\theta }{ Ncos\theta + } \right) } =\frac { { v }_{ max }^{ 2 } }{ rg } \)
\(\frac { \left( tan\theta +{ \mu }_{ s } \right) }{ 1-{ \mu }_{ s }tan\theta } =\frac { { v }_{ max }^{ 2 } }{ rg } \)
சறுக்காமல் வளைவதற்கான பெருமத் திசைவேகம்
\({ v }_{ max }=\sqrt { rg\frac { \left( tan\theta +{ \mu }_{ s } \right) }{ \left( 1-{ \mu }_{ s }tan\theta \right) } } \) ...(4)
நாம் உராய்வின் விளைவைப் புறக்கணிக்கும் போது \(({ \mu }_{ s }=0)\) நழுவாமல் வளைவதற்கான பெருமத் திசைவேகம்
\({ v }_{ max }=\sqrt { rgtan\theta } \quad (5)\)
நழுவாமல் வளைவதற்கான பெருமத் திசைவேகத்தை, உராய்வை அதிகரிப்பதன் மூலம் அதிகரிக்கலாம். (சமன்பாடு(4)). காரொன்று v
26.
துப்பாக்கிக் குண்டின் நிறை
\(m=\frac { 3 }{ 1000 } g=0.03kg\)
வேகம் v = 500 ms-1
தொடக்க இயக்க ஆற்றல் =\(\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }\)
\(=\frac { 1 }{ 2 } \times 0.03\times { (500) }^{ 2 }\)
\(=\frac { 1 }{ 2 } \times 0.03\times 250000\)
3750 J
இறுதி இயக்க ஆற்றல் = \(\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }=0\)
இயக்க ஆற்றலில் இழப்பு = 3750 J
F = துப்பாக்கிக்குண்டின் மீது கட்டியால் செலுத்தப்படும் விசை
S = இடப்பெயர்ச்சி \(\Rightarrow \) 10 கிம் = 0.10 m
வேலை - ஆற்றல் கொள்கையை பயன்படுத்த
W = \(\Delta k\)
Fs = \(\Delta k\)
\(F\times 10=3750;F=\frac { 3750 }{ 0.10 } =3.75\times { 10 }^{ 4 }N\)
27.
(i) பறக்கும் நேரம் எறிபொருள் தன்னுடைய பாதையை நிறைவு செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் பறக்கும் நேரம் எனப்படும்.
(ii) எடுத்துக்காட்டாக, கட்டிடத்தின் உயரம் h என்க. எறிபொருள் எறியப்பட்ட கணத்திலிருந்து அதன் பாதை வழியே தரையை அடைய நாம் அறிந்தபடி செங்குத்து இயக்கத்திற்கு
\({ s }_{ y }={ u }_{ y }t+\frac { 1 }{ 2 } { at }^{ 2 }\)
இங்கு sy =h, t =T , uy =O (ஆரம்ப செங்குத்துத் திசைவேகம் சுழி)
a =g (எறிபொருள் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக கீழே விழுகிறது)
\(h=\frac { 1 }{ 2 } { gt }^{ 2 }\)அல்லது \(T=\sqrt { \frac { 2h }{ g } } \)
(iii) எனவே, பறக்கும் நேரம் கட்டிடத்தின் உயரத்தைச் சார்ந்துள்ளது. ஆனால் அது கிடைத்தளத் திசைவேகத்தைச் சார்ந்ததல்ல. ஒரு பந்து செங்குத்தாக மேலிருந்து கீழ் நோக்கி விழுகிறது. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் பந்து ஒன்றை கிடைத்தளத்தில் வீசி எறியப்படுகிறது. இவ்விரண்டு பந்துகளும் ஒரே நேரத்தில் தலையை அடையும். இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

(iv) கிடைத்தள நெடுக்கும் எறியப்பட்ட புள்ளிக்கு நேர் கீழே கட்டிடத்தின் தரையிலிருந்து எறிபொருள் தலையை அடைந்த புள்ளி வரை உள்ள தொலைவு, கிடைத்தள நெடுக்கும் எனப்படும்.நாம் அறிந்தபடி கிடைத்தள இயக்கத்தில்
\({ s }_{ x }={ u }_{ x }t+\frac { 1 }{ 2 } { at }^{ 2 }\)
(v) இங்கு sx =R (கிடைத்தள நெடுக்கும்) ux =u, a =0 (கிடைத்தளத்திசையில் முடுக்கம் இல்லை) பறக்கும் நேரம் 'T' எனவே கிடைத்தள நெடுக்கும் =uT
நாம் அறிந்தபடி பறக்கும் நேரம்=\(\sqrt { \frac { 2h }{ g } } \)
எனவே கிடைத்தள நெடுக்கும் R =u \(\sqrt { \frac { 2h }{ g } } \)
(vi) மேற்கண்ட சமன்பாட்டிலிருந்து கிடைத்தள நெடுக்கும் ஆரம்பத் திசைவேகத்திற்கு (u) நேர்த்தகவிலும், புவியீர்ப்பு முடுக்கத்திற்கு (g) எதிர்த்தகவிலும் உள்ளதைக் காட்டுகிறது.
தொகுப்பயன் திசைவேகம் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எறிபொருள் திசைவேகம்)
(vii) ஒரு குறிப்பிட்ட நேரம் வரையிலும் எறிபொருளுக்கு x -அச்சு மற்றும் y -அச்சு ஆகிய இரண்டு அச்சுகளிலும் திசைவேகக் கூறுகள் உள்ளன. இவ்விரண்டு கூறுகளின் தொகுபயன் திசைவேகத்தைக் கொடுக்கும்.

படத்திலிருந்து கீழ்க்கண்டவாறு சமன்பாடுகளை எழுதலாம்.
கிடைத்தளத்திசையில் (x - அச்சில்)திசைவேகக்கூறு
vx = ux +ax t
இங்கு ux =u, ax =0 எனவே vx =u
(viii) செங்குத்துத்திசையில் (y அச்சில்) திசைவேகக்கூறு
vy =uy +ay t
இங்கு uy =0, ay =g எனவே vy =gt
எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் எறிபொருளின் திசைவேகம்
\(\overrightarrow { v } =u\widehat { i } +gt\widehat { j } \)
எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் எறிபொருளின் வேகம்
\(v=\sqrt { { v }_{ x }^{ 2 }+{ v }_{ y }^{ 2 } } \)
எறிபொருள் தரையைத் தொடும்போது அதன் வேகம்
\(v=\sqrt { { u }^{ 2 }+{ g }^{ 2 }{ t }^{ 2 } } \)
(ix) எறிபொருள் எறியப்பட்ட கணத்திலிருந்து தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
\(T=\sqrt { \frac { 2h }{ g } } \)
எறிபொருளின் கிடைத்தளத்திசை வேகக்கூறு மாறாதது அதாவது vx =u
T நேரத்தில் எறிபொருளின் செங்குத்துத் திசைவேகக்கூறு
\({ v }_{ x }=gT=g\sqrt { \frac { 2h }{ g } } =\sqrt { 2gh } \)
எனவே எறிபொருள் தரையைத் தொடும் போது அதன் வேகம்
\(v=\sqrt { { u }^{ 2 }+{ 2gh } } \)
28.
29.
(i) கட்டற்ற அலைவுகள்:
அலையியற்றிய அதன் சமநிலைப் புள்ளியிலிருந்து இடம் பெயரச் செய்து அலைவுறு செய்தால் அந்த அலைவுறும் அதிர்வெண்ணானது இயல்பு அதிர்வெண்ணிற்கு சமமாக இருக்கும். இவ்வகை அலைவுகள் அல்லது அதிர்வுகள் கட்டற்ற அலைவுகள் அல்லது கட்டற்ற அதிர்வுகள் எனப்படும்.
எடுத்துக்காட்டுகள்: இசைக் கலவையின் அதிர்வுகள், இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள், தனி ஊசலின் அலைவுகள்.
(ii)தடையுறு அலைவுகள் :
தனி ஊசல் அலைவுறும் போது (முந்தைய நிகழ்வில்) அலைவின் வீச்சானது மாறிலி எனவும்.அலையியற்றியின் மொத்த ஆற்றல் மாறாதது எனவும் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஊடகத்தின் உராய்வு மற்றும் காற்றின் இழுவையால் காலம் அதிகரிக்கும்போது வீச்சு குறைகின்றது. இதன் அலைவுகள் நிலைநிறுத்தப்படாமல் இருக்கும் மற்றும் சீரிசை அலையியற்றின் ஆற்றல் குறைகின்றது. இந்த ஆற்றல் இழப்பு அலையியற்றி சூழ்ந்துள்ள ஊடகம் உட்கவர்தலால் ஏற்படுகிறது. இந்த வகை அலை இயக்கம் தடையுறு அலைவுகள் என அழைக்கப்படுகின்றது.
எடுத்துக்காட்டுக்கள்:
1. தனி ஊசலின் அலைவுகள் (காற்றின் தடையுடன்) அல்லது எண்ணெய் நிரப்பப்பட்ட கலணிற்குள் தனி ஊசலின் அலைவுகள்.
2. தொட்டிச் சுற்றில் ஏற்படும் மின்காந்த அலைவுகள்.
3. கால்வனா மீட்டரில் ஏற்படும் தடையுறு அலைவு.
(iii) நிலைநிறுத்தப்பட்ட அலைவுகள்:
ஊசலில் ஆடிக் கொண்டிருக்கும் போது ஒரு சில அலைவுகளுக்கு பிறகு அலைவு நிறுத்தப்படும். இதற்கு காரணம் தடையுறு விசையாகும். இதனைத் தவிர்க்க தள்ளு விசையைச் செலுத்தி அலைவுகளானது நிலை நிறுத்தப்படுகிறது. புற மூலத்திலிருந்து ஆற்றலை பயன்படுத்தி அலையியற்றிக் அளிப்பதனால் அலைவுகளின் வீச்சு மாறாமல் இருக்கும். இவ்வகை அதிர்வுகளை நிலை நிறுத்தப்பட்ட அதிர்வுகள் என்கிறோம்.
எடுத்துக்காட்டு: அதிர்வுறும் இசைக்கவையின் ஆற்றலை மின்கல அடுக்கு அல்லது புறதிறன் மூலத்திலிருந்து பெறச் செய்தல்.
திணிப்பு அதிர்வுகள்: எந்த ஒரு அலையியற்றி, தான் இழந்த ஆற்றலை புறச்சீரலைவு அமைப்பினால் பெற்று தொடர்ந்து இயங்கிகிறோதோ அந்த அலையியற்றியை திணிப்பு அலையியற்றி அல்லது இயக்கப்பட்ட அலையியற்றி என அழைக்கின்றோம்.
இவவகை அதிர்வுகளில், பொருளானது ஆரம்பத்தில் இயல்பு அதிர்வெண்ணில் அதிர்வுறும் பின்னர் புற சீரலைவு விசையின் அதிர்வெண்ணில் அதிர்வுறும் என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு: இழுத்துக் கட்டப்பட்ட ஒலிப்பானிலிருந்து பெறப்படும் அதிர்வுகள்.
30.
3 நிமிடங்களில் சூடான நீரின் வெப்பநிலை 8°C குறைந்துள்ளது. 92°C மற்றும் 84°C இன் சராசரி வெப்பநிலை 88°C. இது அறை வெப்பநிலையைவிட 61°C அதிகமாக உள்ளது. சமன்பாடு (8.8)ஐப் பயன்படுத்தினால்
\(\frac { dT }{ T-{ T }_{ s } } =-\frac { a }{ ms } dt\) அல்லது =\(\frac { dT }{ dt } =-\frac { a }{ ms } (T-{ T }_{ s })\)
\(\frac { { 8 }^{ o }C }{ 3\quad min } =-\frac { a }{ ms } \)(61oC)
இதேபோன்று 65°C மற்றும் 60°C இன் சராசரி வெப்பநிலை 62.5°C ஆகும். இது அறை வெப்பநிலையைவிட 35.5°C அதிகமாக உள்ளது.
\(\frac { { 5 }^{ o }C }{ dt } =-\frac { a }{ ms } \)(35.5oC)
இவ்விரண்டு சமன்பாடுகளையும் வகுக்கும்போது.
\( \frac { \frac { { 8 }^{ o }C }{ 3\quad min } }{ \frac { { 5 }^{ o }C }{ dt } } =\frac { -\frac { a }{ ms } \left( { 61 }^{ 0 }C \right) }{ -\frac { a }{ ms } \left( 35.5^{ 0 }C \right) } \)
\(\frac { 8\times dt }{ 3\times 5 } =\frac { 61 }{ 35.5 } \)
\(dt=\frac { 61\times 15 }{ 35.5\times 8 } =\frac { 915 }{ 284 } =3.22\)நிமிடம்.
31.
கொடுக்கப்பட்டது:
1 நிமிடத்தில் வாத்துப்பொம்மை மேலும் கீழும் இயங்கும் இயக்கங்களின் எண்ணிக்கை = 15
இந்த தகவலில் இருந்து அதிர்வெண் கிடைக்கிறது (1 வினாடியில் வாத்து மேலும் கீழும் இயங்கும் எண்ணிக்கை)
ஒரு நிமிடம் என்பது 60s எனவே நேரத்தை வினாடியில் பொருத்த
\(f ={15\over 60}={1\over 4}=0.25Hz\)
ஒருமுறை வாத்து மேலும் கீழும் இயங்க ஆகும் நேரமே, அலைநேரமாகும். இது அதிர்வெண்ணுக்கு எதிர்த்தகவில் இருக்கும்.
\(T={1\over f }={1\over 0.25}=4s \)
கடல் அலையின் திசைவேகம்
v = ⋋f = 1.2 x 0.25 = 0.3ms-1
32.
தொலைவு அதிகரித்தால் ஈர்ப்பு புலம் குறையும். எனவே சூரியன் வியாழன் மீது ஏற்படுத்தும் ஈர்ப்பு புலம் குறைவாக இருக்கும். சூரியனுக்கு மிக அருகே உள்ள புதனின் மீது செயல்படும் ஈர்ப்பு புலம் அதிகமாக இருக்கும்.
33.
34.
வெட்டப்படாத வட்டத்தட்டின் நிறையானது M என எடுத்துக் கொள்க. இதனுடைய நிறை மையமானது வட்டத்தட்டின் வடிவியல் மையத்தில் அமையும். இப்புள்ளியிலேயே ஆதிப்புள்ளியும் ஒருங்கமைகிறது
வெட்டி எடுக்கப்பட்ட சிறு வட்டத்தட்டின் நிறை m என்க. (அதன் நிறை மையம் ஆதிப்புள்ளிக்கு) வலது புறத்தில் \(\frac { R }{ 2 } \) என்ற தொலைவில் படத்தில் காட்டியுள்ளவாறு அமைந்திருக்கும்.
எனவே வட்டத்தட்டின் மீதமுள்ள பகுதியின் நிறை மையம் ஆதிப்புள்ளிக்கு இடது புறத்தில் X தொலைவில் உள்ளதாக எடுத்துக் கொள்வோம். திருப்புத்திறன்களின் தத்துவத்திலிருந்து, கீழ்கண்டவாறு எழுத முடியும்.

(M - m)x = (m)\(\frac { R }{ 2 } \)
x =\(\left( \frac { m }{ M-m } \right) \frac { R }{ 2 } \)
பரப்பு நிறை அடர்த்தி \(\sigma =\frac { M }{ \pi { R }^{ 2 } } \) (\(\sigma \) என்பது ஓரலகு பரப்பின் நிறை) எனில், சிறிய வட்டத் தட்டின் நிறை (m) என்பது
m = பரப்பு நிறை அடர்த்தி x பரப்பு
m = \(\sigma \times \pi \left( \frac { R }{ 2 } \right) ^{ 2 }\)
m =\(\left( \frac { M }{ \pi { R }^{ 2 } } \right) \pi \left( \frac { R }{ 2 } \right) ^{ 2 }=\frac { M }{ \pi R^{ 2 } } \pi \frac { { R }^{ 2 } }{ 4 } =\frac { M }{ 4 } \)
x-ன் சமன்பாட்டில் m-ன் மதிப்பைப் பிரதியிட
x =\(\frac { \frac { M }{ 4 } }{ \left( M-\frac { M }{ 4 } \right) } \times \frac { R }{ 2 } =\frac { \frac { M }{ 4 } }{ \left( \frac { 3M }{ 4 } \right) } \times \frac { R }{ 2 } \)
x = \(\frac { R }{ 6 } \)
மீதமுள்ள வட்டத் தட்டின் நிறைமையமானது வட்டத் தட்டின் மையத்திற்கு இடப்புறம் \(\frac { R }{ 6 } \) தொலைவில் இருக்கும்.
35.
பொருளொன்று மையப்புள்ளியைப் பொருத்து மீண்டும் மீண்டும், முன்னும் பின்னுமான இயக்கத்தை மேற்கொள்ளுமானால் அது தலைவுறு இயக்கத்தில் உள்ளது எனப்படும்.
(எ.கா) கிடார் கம்பிகளின் அதிர்வுகள், தொலைபேசி மற்றும் ஒலிபெருக்கியில் உள்ள மெல்லேட்டின் அதிர்வுகள்.
36.
ஒவ்வொரு பொருளும் பெரும் இறுதி உந்தம்
\(\Delta\)P=F\(\Delta\)t=100x5=500kg ms-1
5 kg நிறை கொண்ட பொருளின் இறுதிவேகம்
5 kg = 500 /5 = 100 m s–1
20 kg நிறை கொண்ட பொருளின் இறுதிவேகம்
20 kg =500 /20 = 25 m s–1
5 வினாடிகளுக்குப்பின்பு ஒவ்வொரு பொருளின் உந்தமும் சம்மதிப்பினைப் பெற்றுள்ளன. ஆனால் திசைவேகம் 5 வினாடிகளுக்குப் பின்பு ஒரே மதிப்பைப் பெறவில்லை. கனமான பொருள் இலேசான பொருளை விட குறைந்த வேகத்தையேப் பெற்றுள்ளன.
37.
வெப்ப இயக்கவியலின் சுழி விதியின்படி A மற்றும் B என்ற இரண்டும் அமைப்புகள் C என்ற மூன்றாவது அமைப்புடன் வெப்பச் சமநிலையில் இருப்பின், A மற்றும் B என்ற இரண்டும் அமைப்புகளும் ஒன்றுக்கென்று வெப்பச்சமநிலையில் இருக்கும்.
38.
ஊடகத்தில் மூலமும் கேட்பவரும் சார்பு இயக்கத்தில் இருந்தால், கேட்பவர் உணரும் ஒலியின் அதிர்வெண் மூலத்தின் அதிர்வெண்ணிலிருந்து மாறி இருக்கும். இதுவே டாப்ளர் விளைவு எனப்படும்.
39.
M நிறையுடைய துகள், அண்டத்தில் உள்ள அனைத்து துகள்களையும் குறிப்பிட்ட விசையுடன் ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பு விசையின் வலிமையானது, அவற்றின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றுக்கு இடையேயான தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும் என்பதே நியூட்டனின் ஈர்ப்பியல் விதியாகும்.
கணிதவியல் வடிவில் ஈர்ப்பியல் விசையினை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
\(\vec { F } =\frac { G{ M }_{ 1 }{ M }_{ 2 } }{ { r }^{ 2 } } \hat { r } \)
40.
பறந்து செல்லும் திசையை மாற்றி அமைக்க உதவுகிறது.
கோண உந்தத்தை சீறாங்க வைக்க உதவுகிறது.
41.
1.இயற்பியல் அளவு ஒன்றைஒரு அலகிடும் முறையிலிருந்து மற்றொரு அலகிடும் முறைக்கு மாற்றலாம்.
2.கொடுக்கப்பட்ட சமன்பாடு,பரிமாண அடிப்படையில் சரியென சோதித்து அறியலாம்.
3.சமன்பாடு ஒன்றில் உள்ள வெவ்வேறு இயற்பியல் அளவுகளுக்கு இடையே தொடர்பினை பெறலாம்.
42.
1.இரு பொருள்கள் ஒன்றையொன்று உரசுவது (அ) ஒன்றின் பாதையை மற்றொன்று மாற்றுவது மோதல் எனப்படும்.
2. வகைகள்:மீட்சி மோதல், மீட்சியற்ற மோதல்.
43.
(அ) திசைவேகம் \(\overrightarrow{v}={d\overrightarrow{r}\over dr}={dx\over dt}\hat{i}+{dy \over dt}\hat{j}+{dz \over dt}\hat{k}\)
இங்கு, \(\overrightarrow{v}(t)=6t\hat{t}+5\hat{j}\)
திசைவேகம் இரண்டு கூறுகளை மட்டுமே பெற்றுள்ளது. அதாவது vx = 6t (நேரத்தைச் சார்ந்துள்ளது) மற்றும் vy = 5 (நேரத்தைச் சாராதது).
t = 3 வினாடியில் திசைவேகம்
\(\overrightarrow{v}(3)=18\hat{i}+5\hat{j}\)
(ஆ) t = 3 வினாடியில் துகளின்வேகம்
\(v=\sqrt{{18}^{2}+{5}^{2}}=\sqrt{349}\approx18.68\ m{s}^{-1}\)
(இ) முடுக்கம் \(=\overrightarrow{a}={d^2\overrightarrow{r}\over dt^2}=6\hat{i}\)
முடுக்கம் x- கூறினை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் இது நேரத்தைச் சாராதது. t = 3 வினாடியிலும் முடுக்கம் மாறாத மதிப்பான \(\overrightarrow{a}=6\hat{i}\) ஐ பெற்றிருக்கும் என்பதை கவனிக்க வேண்டும். மேலும் இந்நிகழ்வில் துகள் சீரற்ற திசை வேகத்தையும் சீரான முடுக்கத்தையும் பெற்றுள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards