11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 06/03/2019
+1 Public Official Model Question 2019
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் மாற்றி எழுதும் முறைக்கு _______ என்று பெயர்.
கூட்டுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்பு கட்டுதல்
எடுத்தெழுதுதல்
2.
ரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு.
ரூ 8,000
ரூ 8,500
ரூ 500
ரூ 16,500
3.
பிழைகளைக் கண்டறிந்து அவற்றைத் திருத்தும் வரை _______________ ஏடுகளில் இருக்கும்.
முதல் கணக்கு
பேரேட்டுக் கணக்கு
அனாமத்துக் கணக்கு
இவை எதுவுமில்லை
4.
______ பயனாளிக்கும் கணினி அமைப்புக்கும் இடையேயான ஒரு இடைமுகமாக அமைகின்றது.
நிரலாக்க மென்பொருள்
பயன்பாட்டு மென்பொருள்
இயக்கமுறைமை
செயல்பாட்டு மென்பொருள்
5.
1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.
ரூ 30,000
ரூ 5,00,000
ரூ 4,70,000
ரூ 5,30,000
6.
ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது
பற்றுத்தன்மை
வரவப்புதன்மை
ரொக்கத்தன்மை
இவற்றில் ஏதும் இல்லை
7.
_______________________ நிதிநிலை அறிக்கைகளான வியாபாரக் கணக்கு இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயாரிப்பதன் முடிவடைகிறது.
அடக்கவில்லைக் கணக்கியல்
நிதி ஆலோசகர்
வரி மேலாளர்
மேற்கூறிய அனைத்தும்
8.
முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.
இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
மேற்கண்ட இரண்டிலும்
மேற்கண்ட எதுவுமில்லை
9.
பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?
உள்ளீட்டு அலகு
வெளியீட்டு அலகு
தரவு
மையச் செயல்பாட்டு அலகு
10.
இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் ________
நிலையான சொத்து
நடப்புச் சொத்து
கற்பனைச் சொத்து
புலனாகாச் சொத்து
11.
வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்
வருவாயினச் செலவுகள்
முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்
நீள்பயன் வருவாயினச் செலவுகள்
முதலினச் செலவுகள்
12.
எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்
சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்
சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்
சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்
13.
இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்
விதிப்பிழைகள்
அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்
குறைவாகக் கூட்டுதல் பிழைகள்
பகுதி விடு பிழைகள்
14.
வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ.1,000. செலுத்திய காசோலை வங்கியால் இன்னும் வரவு வைக்கப்படாதது ரூ.2,000. ரொக்க ஏட்டில் வங்கிப்பத்தியின் இருப்பு எவ்வளவு?
3,000 மேல்வரைப்பற்று
3,000 சாதகமான இருப்பு
1,000 மேல்வரைப்பற்று
1,000 சாதகமான இருப்பு
15.
விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?
அனைத்து சரக்குகளின் விற்பனை
அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை
16.
17.
ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
கூட்டுதல்
எடுத்தெழுதுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்புக் கட்டுதல்
18.
19.
கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?
சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை
வங்கி எடுத்துக் கொண்ட வட்டி
20.
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு
21.
முதல் எனறால் என்ன?
22.
இருப்புநிலைகுறிப்பு வரையறு.
23.
கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றஉம் கணக்குப் பதிவியலுக்கான உறவுமுறையினை விளக்குக.
24.
கணக்குகள் குழுப்படுத்துதல் என்றால் என்ன?
25.
வருவாயினச் செலவு என்றால் என்ன?
26.
பிழைத் திருத்தம் என்றால் என்ன?
27.
கீழ்கண்ட தகவல்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க.
| இயந்திரம் வாங்கிய விலை | ரூ. 2,00,000 |
| மூலதனமாக்கப்பட வேண்டிய செலவுகள் | ரூ. 50,000 |
| எதிர்நோக்கும் இறுதி மதிப்பு | ரூ. 15,000 |
| எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் | 5 வருடங்கள் |
28.
உரிய குறிப்பேடு என்றால் என்ன?
29.
ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?
30.
இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன
31.
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு திரு.வேணுகோபால் அவர்களின் 2015 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| ரூ | |
|---|---|
| முதல் | 40,000 |
| எடுப்பு | 4,400 |
| கையிருப்பு ரொக்கம் | 360 |
| வங்கி இருப்பு ரொக்கம் | 7,200 |
| பொறி | 10,000 |
| பொதுக்காப்பு | 1,000 |
| கடனாளிகள் | 6,400 |
| கடனீ ந்தோர் | 4,200 |
| அறைகலன் | 3,700 |
| நிகர இலாபம் | 1,660 |
| இறுதிச் சரக்கிருப்பு | 14,800 |
32.
கணக்கியலின் நோக்கங்கள் யாவை?
33.
2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
(ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
(iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
(iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
(v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.
34.
ஒரு பக்கப் பிழைகள் மற்றும் இரு பக்கப் பிழைகள் பற்றிய குறிப்பு எழுதவும்
35.
பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.
| ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.62,000 |
| 3 | ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது | ரூ.12,000 |
| 10 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.10,000 |
| 12 | கூலி ரொக்கமாகச் செலுத்தியது | ரூ.4,000 |
| 25 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | ரூ.6,000 |
36.
1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.
37.
‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?
38.
கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.
39.
முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| விற்பனை | 35,000 | தணிக்கைக் கட்டணம் | 1,000 |
| வட்டி செலுத்தியது | 350 | நகர நுழைவு வரி | 8,000 |
| உள் திருப்பம் | 2,500 | நிலம் | 90,000 |
| தேய்மானம் | 2,400 | முதல் | 60,000 |
| அலுவலக வாடகை | 2,000 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 |
40.
சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் உண்டாகும் நன்மைகளை எழுதுக.
41.
திருமதி அமுதா அவர்களின் ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.
| ஜனவரி 2018 | ரூ | |
| 1 | திருமதி அமுதா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | 50,000 |
| 2 | ரொக்கக் கொள்முதல் செய்தது | 10,000 |
| 5 | மோகன் என்பவரிடமிருந்து கடனாக கொள்முதல் செய்தது | 6,000 |
| 7 | வங்கியில் செலுத்தியது | 5,000 |
| 10 | அறைகலன் வாங்கியது | 2,000 |
| 20 | சுரேஷிற்கு கடனாக விற்பனை செய்தது | 5,000 |
| 25 | ரொக்க விற்பனை | 3,500 |
| 26 | மோகனுக்குச் செலுத்தியது | 3,000 |
| 31 | ஊதியம் வழங்கியது | 2,800 |
42.
31.12.2007 ற்கான கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து திரு.கெளதம் அவர்களின் வங்கி சரிகட்டும் பட்டயலைத் தயாரிக்கவும்.
[அ] ரொக்க ஏட்டின்படி இருப்பு ரூ 12,500
[ஆ] அளித்த காசோலைகளில் இதுவரை செலுத்துகைக்கு முன்னிறுத்தப்படாதவை ரூ 1,900
[இ] வங்கியில் செலுத்திய காசோலைகளில் வசூலித்து வரவு வைக்கப்படாதவை ரூ 1,200
[ஈ] வங்கி செலுத்திய காப்பீட்டுக் கட்டணம் ரூ 500
[உ] வாடிக்கையாளர் நேரடியாக வங்கிக்கு செலுத்தியது ரூ 800
[ஊ] வங்கி வசூலித்த முதலீடு மீதான வட்டி ரூ 200
[எ] வங்கிக் கட்டணம் ரூ 100
43.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து, குமார் அவர்களின் 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| பற்று இருப்பு | ரூ | வரவு இருப்பு | ரூ |
|---|---|---|---|
| கொள்முதல் | 14,500 | விற்பனை | 20,100 |
| நிலக்கரி மற்றும் எரிபொருள் | 600 | செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 400 |
| உள்தூக்குக் கூலி | 750 | வாடகைப் பெற்றது | 2,500 |
| விளம்பரம் | 500 | கடனீந்தோர் | 2,000 |
| வெளித்தூக்குக் கூலி | 400 | முதல் | 5,000 |
| வங்கி | 1,200 | ||
| அறைகலன் | 8,000 | ||
| கடனாளிகள் | 2,250 | ||
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 300 | ||
| சரக்கிருப்பு (01.01.2017) | 1,500 | ||
| 30,000 | 30,000 |
சரிக்கட்டுதல்கள்:
(அ) 31.12.2017 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 3,900
(ஆ) முன்கூட்டிச் செலுத்திய உள்தூக்குக் கூலி ரூ 250
(இ) முன்கூட்டிப் பெற்ற வாடகை ரூ 100
(ஈ) மேலாளருக்கான கழிவு, அவரது கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 5% தரப்பட வேண்டும்.
44.
பின்வரும் சரண் என்பவரின் இருப்பாய்விலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.
31.12.2017 அன்றைய இறுதிச்சரக்கிருப்பு ரூ 2,50,000 என்று மதிப்பிடப்பட்டது.
| பற்று இருப்பு | ரூ | வரவு இருப்பு | ரூ |
|---|---|---|---|
| சரக்கிருப்பு (1.1.2017) | 2,00,000 | பற்பல கடனீந்தோர் | 12,000 |
| கொள்முதல் | 7,50,000 | கொள்முதல் திருப்பம் | 30,000 |
| உள்தூக்குக் கூலி | விற்பனை | ||
| கூலி | பெற்ற கழிவு | 53,000 | |
| சம்பளம் | முதல் | 33,00,000 | |
| பழுதுபார்ப்புச் செல்வுகள் | |||
| வாடகையும், வரியும் | |||
| கைரொக்கம் | |||
| நிலம் | |||
| எடுப்புகள் | |||
| வங்கி வைப்புகள் | |||
| 44,15,000 | 44,15,000 |
45.
சாரா நிறுவனம் கடன் அடிப்படையில் விற்பனையை மேற்கொள்கின்றது. காலக்கெடு முடிந்தவுடன் ஆண்டிற்கு 2% வட்டி விதிப்பது அவர்களின் கொள்கை. பின்வரும் தரவுகளிலிருந்து ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் பெற வேண்டிய தொகையினைக் கண்டுபிடிக்கவும். ஆண்டிற்கு 365 நாட்கள் எனக் கொள்ளவும்.
| Customer | Sales ரூ | Date of Sales | Period of Credit (days) | Date of Settlement |
|---|---|---|---|---|
| M | 25,000 | 10-04-2016 | 60 | 05-07-2016 |
| N | 14,000 | 28-05-2016 | 30 | 25-07-2016 |
| P | 28,000 | 14-07-2016 | 45 | 25-08-2016 |
| R | 54,000 | 03-08-2016 | 90 | 02-01-2017 |
46.
இராமனின் ஏடுகள் சமன்படவில்லை. இருப்பாய்வின் வித்தியாசத் தொகையாகிய ரூ.1,270-ஐ கணக்காளர் அனாமத்துக் கணக்கில் பற்று வைத்தார். பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்து அனாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும்.
(அ) உரிமையாளரால் சொந்த உபயோகத்திற்காக ரூ.75 மதிப்புள்ள சரக்கு எடுக்கப்பட்டது ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.
(ஆ) சண் சண்முகத்திற்கு கடனுக்கு ரூ.430 க்கு சரக்கு விற்றது அவர் கணக்கில் ரூ.340 என வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது
(இ) விவேக்கிடமிருந்து கடனுக்கு ரூ.400 க்கு சரக்கு வாங்கியது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்டது. ஆயினும், விவேக்கின் கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகைகை ரூ.300 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை
47.
ஜனவரி 1, 2016 அன்று ரூ. 25,000க்கு சொத்து ஒன்று வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட வேண்டும். அச்சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 1,000. கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கப்பெறுகின்றன. தேய்மான விகிதம் கணக்கிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
48.
பின்வருவனவற்றை முதலினம் அல்லது வருவாயினம் என வகைப்படுத்தவும்.
(i) இரயில்வேத் துறைக்கு, இரயில் தண்டவாளம் அமைக்க செலுத்திய தொகை ரூ 50,000.
(ii) பழைய அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம்.
(iii) சரக்கு விற்பனையின் பேரில் செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.
49.
பின்வரும் விவரங்களிலிருந்து குமார் என்பவரின் 2016 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
(அ) ரொக்க ஏட்டின் படி இருப்பு ரூ.7,130
(ஆ) செலுத்திய காசோலை வசூலாகாதது ரூ.1,000
(இ) வாடிக்கையாளர் நேரநேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ.800
50.
ரோகினி என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2016 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| முதல் | 60,000 | விற்பனை | 82,000 |
| பெற்றத் தள்ளுபடி | 3,250 | மின்கட்டணம் | 800 |
| கொள்முதல் | 58,000 | எடுப்புகள் | 5,250 |
| பொறி இயந்திரம் | 40,000 | வாகனச் செலவுகள் | 1,200 |
| விளம்பரச் செலவுகள் | 5,000 | மகிழுந்து | 35,000 |
51.
பின்வரும் நடவடிக்கைகளை இராஜா ஹோட்டலின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.
| ஜனவரி | ரூ | |
| 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | 3,00,000 |
| 2 | ராஜுவிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது | 1,00,000 |
| 3 | வங்கியில் ரொக்கம் செலுத்தியது | 2,00,000 |
| 20 | வங்கியில் கடன் பெற்றது | 1,00,000 |
| 22 | சொந்த உபயோகத்திற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது | 800 |
| 23 | ராஜுவிற்கு தேசிய மின்னனு பணப்பரிமாற்றம் மூலமாக ரொக்கம் செலுத்தி கணக்கு தீர்க்கப்பட்டது | 99,000 |
| 25 | உரிமையாளரின் சங்க உறுப்பினர் சந்தா காசோலை மூலம் செலுத்தியது | 200 |
| 26 | உரிமையாளரின் வீட்டிற்கான மின் கட்டணம் எடுப்பு அட்டை மூலம் செலுத்தியது | 2,000 |
| 31 | அறக்கட்டளை அமைப்பிற்கு மதிய உணவு இலவசமாக வழங்கியது | 1,000 |
| 31 | வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை | 1,000 |
52.
கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்
| 2015 மார்ச் 1 | சோமு என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது | ரூ.5,000 |
| 7 | ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | 300 |
| 15 | வட்டி பெற்றது | 1,800 |
53.
பின்வரும் நடவடிக்கைகளை வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் ஹரியின் கொள்முதல் திருப்ப ஏட்டில் பதிவு செய்து, அதனைப் பேரேட்டில் எழுத்தெழுதுக.
| 2017 | |
| ஜனவரி 5 | ஆணைப்படி இல்லாததால் ஆனந்திற்கு திருப்பியது 5 முகப்பு விளக்குகள் ஒன்று ` 200 வீதம் |
| ஜனவரி 14 | தரம் குறைவு காரணமாக சந்திரனுக்கு திருப்பியது 4 ஒலிப்பான்கள் ஒன்று ரூ. 200 வீதம் 10 கண்ணாடிகள் ஒன்று ரூ. 350 வீதம். |
54.
2017, மே மாதத்திற்காற்கான சேஷாத்ரி அவர்களின் பின்வரும் நடவடிக்கைகளை தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
| மே | ரூ | |
| 1 | கையிருப்பு ரொக்கம் | 40,000 |
| 5 | ஸ்வாதியிடமிருந்து பெற்ற ரொக்கம் | 4,000 |
| 7 | கூலி ரொக்கமாக கொடுத்தது | 2,000 |
| 10 | சசிகலாவிடமிருந்து ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது | 6,000 |
| 15 | ரொக்கத்திற்கு விற்பனை செய்த | 9,000 |
| 18 | கணிப்பொறி வாங்கியது | 15,000 |
| 22 | சபாபதிக்கு ரொக்கம் செலுத்தியது | 5,000 |
| 28 | சம்பளம் கொடுத்தது | 2,500 |
| 30 | வட்டிப் பெற்றது | 500 |
1.
(d)
எடுத்தெழுதுதல்
2.
(a)
ரூ 8,000
3.
(c)
அனாமத்துக் கணக்கு
4.
(c)
இயக்கமுறைமை
5.
(a)
ரூ 30,000
6.
(a)
பற்றுத்தன்மை
7.
(d)
மேற்கூறிய அனைத்தும்
8.
(c)
மேற்கண்ட இரண்டிலும்
9.
(c)
தரவு
10.
(b)
நடப்புச் சொத்து
11.
(d)
முதலினச் செலவுகள்
12.
(a)
சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
13.
(a)
விதிப்பிழைகள்
14.
(b)
3,000 சாதகமான இருப்பு
15.
(c)
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
16.
(c)
17.
(d)
இருப்புக் கட்டுதல்
18.
(b)
19.
(b)
அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
20.
(b)
பணியாளர்
21.
முதல் என்பது ஒரு நிறுவனத்தில் அதன் உரிமையாளர் செய்த முதலீட்டைக் குறிக்கும்.
22.
ஜே.ஆர் பாட்லி பாய் அவர்கள் கூற்றுப்படி. ''இருப்புநிலைக் குறிப்பு ஒரு குறிப்பிட்ட நாளில் நிறுவனத்தின் உண்மையான நிதி நிலையை அளவிடுவதற்காக தயாரிக்கப்படுகிறது''.
23.
1. கணக்கேடுகள் பராமரிப்பு (Book Keeping) என்பதும் கணக்கியலின் ஒரு பகுதியாகும்.இது கணக்கியலின் தொடக்க நிலை ஆகும்.இது நடவடிக்கைகளை கணக்கேடுக்களில் பதியும் ஒரு செயல் முறையாகும்.
2. கணக்கியல் (Accounting) என்பது கணக்குப்பதிவியலின் ஒரு பகுதியாகும். கணக்கியல் என்பது மிதித்த தகவல்களை பதிவு செய்தல், வகைப்படுத்துதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் உய்த்துணர்த்துதல் போன்ற செயல்களை கொண்டதாகும்.
3. கணக்குப் பதிவில் என்பது, கணக்கிடல் செயல்முறையின் முறையான அறிவு மற்றும் தரங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
24.
(i) எந்த ஒரு நிறுவனத்திலும், முதன்மை அலகு பல முக்கியத் தலைப்புகளாக வகைப்படுத்தப்பட்டு அவை மேலும் பல துணைத் தலைப்புகளாக பிரிக்கப்படுகின்றன.
(ii) கணக்குகளை முதன்மை மற்றும் துணை தலைப்பென்று பல்வேறு குழுக்களாக வகைப்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு கணக்கிற்கும் குறிமுறை ஒதுக்கியபின், இவைகள் கணினி அமைப்பில் நிரலாக்கம் செய்யப்படுகின்றன.
25.
(i) வணிக நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டிற்கான செலவும், வருவாய் ஈட்டும் திறனைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் செலவும் வருவாயினச் செலவு எனப்படும். இச்செலவு திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது.
(ii) வருவாயினச் செலவு வருவாயுடன் தொடர்புடையது அல்லது குறிப்பிட்ட கணக்காண்டோடு தொடர்புடையது.
(iii) உதாரணமாக, கொள்முதல் மீதானச் செலவு ஒரு வருவாயினச் செலவு.
26.
1. கணக்கு ஏடுகளிலுள்ள பிழைகளைத் திருத்துதல் என்பது தவறான எண்களையோ அல்லது எழுத்துகளையோ அடித்தாலோ, திருத்தி எழுதலோ அல்லது மேல் எழுதலோ அல்ல. ஏற்பட்டுள்ள பிழைகளைச் சரியாக மாற்றுவது திருத்தம் எனப்படும்.
2. உரிய கணக்குகளில் தகுந்த குறிப்பேட்டுப் பதிவுகளையோ அல்லது விளக்க குறிப்பையோ எழுதி பிள்ளைகளின் விளையை மட்டுப்படுதலே பிஸ்ளை திருத்தம் எனப்படும்.
27.

\(={2,50,000-15,000\over 5}={2,35,000\over 5}\)= ரூ. 47,000

\(={47,000\over 2,50,000}\times=18.8\% \)
28.
1. துணை ஏடுகளான ரொக்க ஏடு, கொள்முதல் ஏடு, விற்பனை ஏடு, கொள்முதல் திருப்ப ஏடு, விற்பனைத் திருப்ப ஏடு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு போன்ற ஏடுகளில் பதிய முடியாத எஞ்சிய பதிவுகள் உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகின்றது.
2. உரிய குறிப்பேட்டில் அல்லது பொதுக் குறிப்பேட்டில் வேறு எங்கும் எந்த துணைப்பிரிவிலும் பதிவுப்பெறாத நடவடிக்கைகளுக்கான குறிப்பேடுகள் பதிவு செய்யப்படுகின்றன.
29.
1. நிதி சார்ந்த நடவடிக்கைகளின் உண்மையான சான்றுகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள், ஆதார ஆவணங்கள் ஆகும்.
2. இந்த ஆவணங்கள் நடவடிக்கைகளின் தன்மை, தேதி, தொகை தொடர்புடைய நபர்கள் போன்ற விவரங்களை வெளிப்படுத்தும்.
3. ரொக்கச்சீட்டு, இடாப்பு, பற்றுக்குறிப்பு, வரவுக் குறிப்பு, செலுத்துச் சீட்டு, சம்பளப்பட்டியல், கூலிப்பட்டியல் காசோலைப் பட்டியல் போன்றவை ஆதார ஆவணங்களில் உள்ளடங்கும்.
30.
(i) இது ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளையுடைய ரொக்க ஏடு ஆகும்.தள்ளுபடி மற்றும் ரொக்கம் என்ற இரு பத்திகளை, பற்று மற்றும் வரவு என்ற இராணு பக்கங்களிலும் கொண்டிருப்பதால் இதனை ரொக்க ஏடு என்று அழைக்கிறோம்.
(ii) சாதாரண ரொக்க ஏடு தயாரிக்கப்படும் முறையிலேயே இருபத்தி ரொக்க ஏதும் தயாரிக்கப்படுகிறது. இதில் தள்ளுபடி பத்தி என்ற ஒரு பத்தி என்ற ஒரு பத்தி கூடுதலாகயிறு பக்கங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
31.
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 4,200 | கையிருப்பு ரொக்கம் | 360 | ||
| பொதுக் காப்பு | 1,000 | வங்கியிருப்பு ரொக்கம் | 7,200 | ||
| முதல் | 40,000 | பற்பல கடனாளிகள் | 6,400 | ||
| கூட்டுக : நிகர இலாபம் | 1,660 | இறுதி சரக்கிருப்பு | 14,800 | ||
| 41,660 | அறைகலன் | 3,700 | |||
| கழிக்க : எடுப்பு | 4,400 | 37,260 | பொறி | 10,000 | |
| 42,460 | 42,460 |
32.
கணக்கியலின் நோக்கங்கள் பின்வருமாறு:
நிதி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முறையான பதிவேடுகளை வைத்திருத்தல்.
வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.
வணிக நிறுவனத்தின் நிதி நிலையை அறிதல்.
பல்வேறு பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல்களை வழங்குதல்.
நிறுவனத்தின் கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீர்மைத் தன்மையை அறிதல்.
33.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017, டிச 31 | சம்பளக் க/கு கொடுபட வேண்டிய சம்பளக் க/கு (கொடுபட வேண் டிய சம்பளம் சரிக்கட்டப்பட்டது) |
ப | 1,200 | 1,200 | |
| டிச. 31 | வாடகைக் க/கு கொடுபட வேண்டிய வாடகை க/கு (கொடுபட வேண்டிய வாடகை சரிக்கட்டப்பட்டது) |
ப | 300 | 300 | |
| டிச. 31 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமக் க/கு காப்பீட்டு முனைமக் க/கு (முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு சரிக்கட்டப்பட்டது) |
ப | 450 | 450 | |
| டிச. 31 | முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி க/கு முதலீடுகள் மீதான வட்டி க/கு (முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி சரிக்கட்டப்பட்டது) |
ப | 400 | 400 | |
| டிச. 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 200 | 200 |
34.
அ) ஒரு பக்க பிழைகள்
இருபாய்வு தயாரிக்கும் முன் ஒருபக்கப் பிழைகள் கண்டறியப்பட்டால் அவற்றை திருத்தம் செய்ய கணக்கேடுகளில் குறிப்பிட்டு பதிவு தேவையில்லை. அவ்வாறான பிழைகளுக்கு பற்று அல்லது வரவு வைக்கப்படவேண்டிய கணக்கு பற்றி விளக்கக் குறிப்பு அளித்து அவை திருத்தப்படும்.
ஆ) இரு பக்க பிழைகள்
இருபக்க பிழையானது இருபாய்வு தாயரிக்கும் முன் கண்டறியப்பட்டால் அதை பகுப்பாய்வு செய்தபின் உரிய குறிப்பேட்டில் திருத்தப் பதிவு செய்வதன் மூலம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
35.
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | முதல் க/கு | 62,000 | 2018 ஜன 3 | கொள்முதல் க/கு | 12,000 | ||
| 10 | விற்பனை க/கு | 10,000 | 12 | கூலி க/கு | 4,000 | ||
| 25 | அறைகலன் க/கு | 6,000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 50,000 | |||||
| 72,000 | 72,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
36.
சொத்தின் அடக்க விலை = 9,000 + 1,000 = ரூ. 10,000
தேய்மான விகிதம் = 15%
சொத்தின் வாங்கிய நாள் = 1.1.2018
சொத்து பயன்படுத்திய மாதங்கள் = 1.1.2018 முதல் 31.3.2018 வரை 3 மாதங்கள்
தேய்மானத் தொகை = 10,000 மீது 15%, 3 மாதங்களுக்கு
= 10,000 × 15% × 3/12 = ரூ. 375
37.
வணிகம் காசோலை விடுக்கும் பொழுது வணிகம் அதனை உடனடியாக ரொக்க ஏட்டின் வரவு பக்கத்தில் பதிவு செய்யும். ஆனால், இந்நடவடிக்கை வங்கி அறிக்கையில் அதே நாளில் பதிவு செய்யப்படாமலிருக்கலாம். இது வங்கியில் முன்னிலைப்படுத்திய பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும், வங்கி அறிக்கையும் ரூ. 20,000 இருப்பைக் காட்டியது. 'X' நிறுவனமானது 'Y' என்ற நிறுமத்திற்கு 27 மார்ச் 2017 அன்று ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை விடுத்தது. அதனால் 27 மார்ச் 2017 அன்று 'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. ஆனால் காசோலையானது 2 ஏப்ரல் 2017ம் நாளன்று தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
38.
அ. முதல் அதிகரிக்கும் போது, சொத்து அதிகரித்தல்:
முருகன் ரூ.50,000/- முதல் போட்டு தொழில் தொடங்கினார்.
விளைவுகள்
ரொக்கம் உள்வருதல் - சொத்தின் மதிப்பு அதிகரிப்பு
முதல் போடப்பட்டது - முதல் அதிகரிப்பு
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
(ரொக்கம்) 50,000/- = 50,000(முதல்) பொறுப்புகள்
50,000/- = 50,000/-
ஆ. பொறுப்புகள் குறையும் போது, சொத்துக்களும் குறைதல்.
கடனீந்தோர்க்கு திருப்பிச் செலுத்திய தொகை ரூ.10,000/-
ரொக்கம் வெளிச்செல்லுதல் - சொத்தின் மதிப்பு குறைதல்
கடனீந்தோர் பணம் பெறுதல் - பொறுப்பின் மதிப்பு குறைதல்
முதல் பொறுப்புகள் - சொத்துக்கள்
பொறுப்புகள் (-10,000/-) = சொத்துக்கள் (-10,000/-)
-10,000/- = -10,000/-
39.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | விற்பனை | 35,000 | ||
| 2 | வட்டி செலுத்தியது | 350 | ||
| 3 | உள் திருப்பு | 2,500 | ||
| 4 | தேய்மானம் | 2,400 | ||
| 5 | அலுவலக வாடகை | 2,000 | ||
| 6 | தணிக்கை கட்டணம் | 1,000 | ||
| 7 | நகர நுழைவு வரி | 8,000 | ||
| 8 | நிலம் | 90,000 | ||
| 9 | முதல் | 60,000 | ||
| 10 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 | ||
| மொத்தம் | 1,06,250 | 1,06,250 |
40.
சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
1. செலவினங்களை நல்லமுறையில் கட்டுப்படுத்த முடியும்.
2. முதன்மை காசாளரின் நேரம் மிச்சமாகிறது.
3. சிறு செலவினங்களால் ரொக்க ஏட்டில் அதிக சுமை இல்லாமல் இருக்கும்.
4. ரொக்க யதிலிருந்து சில்லறை ரொக்க ரொக்க எட்டிலிருந்து பேரேட்டில் எடுத்தெழுதுவது மிகவும் சுலபமானது.
41.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 1 | ரொக்கக் க/கு | ப | 50,000 | ||
| முதல் க/கு | 50,000 | ||||
| (தொழில் முதல் போட்டது) | |||||
| 2 | கொள்முதல் க/கு | ப | 10,000 | ||
| ரொக்கக் க/கு | 10,000 | ||||
| (ரொக்கக் கொள்முதல் செய்தது) | |||||
| 5 | கொள்முதல் க/கு | ப | 6,000 | ||
| மோகன் க/கு | 6,000 | ||||
| (கடனாக கொள்முதல் செய்தது) | |||||
| 7 | வங்கிக் க/கு | ப | 5,000 | ||
| ரொக்கக் க/கு | 5,000 | ||||
| (வங்கியில் ரொக்கம் செலுத்தியது) | |||||
| 10 | அறைகலன் க/கு | ப | 2,000 | ||
| ரொக்கக் க/கு | 2,000 | ||||
| (அறைகலன் வாங்கியது) | |||||
| 20 | சுரேஷ் க/கு | ப | 5,000 | ||
| விற்பனை க/கு | 5,000 | ||||
| (கடனுக்கு விற்பனை செய்தது) | |||||
| 25 | ரொக்கக் க/கு | ப | 3,500 | ||
| விற்பனை க/கு | 3,500 | ||||
| (ரொக்க விற்பனை) | |||||
| 26 | மோகன் க/கு | ப | 3,000 | ||
| ரொக்கக் க/கு | 3,000 | ||||
| (மோகனுக்குச் செலுத்தியது) | |||||
| 31 | ஊதியக் க/கு | ப | 2,800 | ||
| ரொக்கக் க/கு | 2,800 | ||||
| (ஊதியம் வழங்கியது) |
42.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி இருப்பு | 12,500 | |
| கூட்டுக: | ||
| அளித்த காசோலைகளில் இதுவரை | ||
| செலுத்துகைக்கு முன்னிறுத்தப்படாதவை | 900 | |
| வாடிக்கையாளர் நேரடியாக வங்கியில் செலுத்தியது | 800 | |
| வங்கி வசூலித்த முதலீடு மீதான வட்டி | 200 | 1,900 |
| 14,400 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்திய காசோலைகளில் | ||
| வசூலித்து வரவு வைக்கப்படாதவை | 1,200 | |
| வங்கியில் செலுத்திய காப்பீட்டுக் கட்டணம் | 500 | |
| வங்கிக் கட்டணம் | 100 | 1,800 |
| செல்லேட்டின்படி வங்கி இருப்பு | 12,600 |
43.
| விவரம் | தொகை ரூ |
தொகை |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,500 | விற்பனை | 20,100 | ||
| கொள்முதல் | 14,500 | இறுதிச் சரக்கிருப்பு | 3,900 | ||
| நிலக்கரி மற்றும் எரிபொருள் | 600 | ||||
| உள்தூக்குக் கூலி | 750 | ||||
| கழிக்க: முன் கூட்டிச் செலுத்தியது | 250 | 500 | |||
| 6,900 | |||||
| மொத்த இலாபம் கீ/இ | 24,000 | 24,000 | |||
| விளம்பரம் | 500 | மொத்த இலாபம் கீ/கொ | 6,900 | ||
| வெளித்தூக்குக் கூலி | 400 | வாடகைப் பெற்றது | 2,500 | ||
| மேலாளருக்கான கழிவு | 400 | கழிக்க: முன் கூட்டிப் பெற்றது | 100 | 2,400 | |
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றுவது ) | 8,000 | ||||
| 9,300 | 9,300 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 400 | வஞ்சி | 1,200 | ||
| கடனீந்தோர் | 2,000 | அறைகலன் | 8,000 | ||
| முதல் | 5,000 | கடனாளிகள் | 2,,250 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 8,000 | 13,000 | பெருதற்குரிய மாற்றுச் சீட்டு | 300 | |
| முன் கூட்டிப் பெற்ற வாடகை | 100 | முன் கூட்டிச் செலுத்திய உள்தூக்குக் கூலி | 250 | ||
| மேலாளருக்கான கழிவு | 400 | இறுதிச் சரக்கிருப்பு | 3,900 | ||
| 15.000 | 15,000 |
44.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 2,00,000 | விற்பனை | 10,20,000 | ||
| கொள்முதல் | 7,50,000 | இறுதிச் சரக்கிருப்பு | 2,50,000 | ||
| கழிக்க: கொள்முதல் திருப்பம் | 30,000 | 7,20,0000 | மொத்த நட்டம் கீ/ இ | 90,000 | |
| உள்தூக்குக் கூலி | 75,000 | ||||
| கூலி | 3,65,000 | ||||
| 13,60,000 | 13,60,000 | ||||
| மொத்த நட்டம் கீ/கொ | 90,000 | பெற்ற கழிவு | 53,000 | ||
| சம்பளம் | 1,20,000 | நிகர நட்டம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
4,49,000 | ||
| பழுதுபார்ப்புச் செலவுகள் | 12,000 | ||||
| வாடகையும், வரியும் | 2,80,000 | ||||
| 5,02,000 | 5,02,000 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 33,00,000 | நிலம் | 21,50,000 | ||
| கழிக்க : நிகர நட்டம் | 4,49,000 | இறுதிச் சரக்கிருப்பு | 2,50,000 | ||
| 28,51,000 | வங்கி வைப்புகள் | 2,00,000 | |||
| கழிக்க: எடுப்புகள் | 1,66,000 | 26,85,000 | கைரொக்கம் | 97,000 | |
| பற்பல கடனீந்தோர் | 12,000 | ||||
| 26,97,000 | 26,97,000 |
45.
(i) MS-Excel ல் புதிய விரிதாளை திறக்கவும்
(ii) அட்டவனையின் தலைப்புகளாக கீழேகொ டுக்கப்பட்டுள்ளவைகளை வெவ்வேறு அறைகளில் உள்ளீடு செய்யவும்.
A1
Customer
B1
Sales (ரூ)
C1 Date of sales
D1 Period of credit (days)
E1 Date of settlement
F1 Credit period availed (days)
G1 Days of default
H1 Interest
I1 Amount collected
(iii) வாடிக்கையாளர்களின் பெயர்களை A2: A5 பரப்பில் உள்ளீடு செய்யவும்
(iv) விற்பனைத் தொகையை B2: B5 பரப்பில் உள்ளீடு செய்யவும்.
(v) விற்பனைத் தேதியினை C2:C5 பரப்பில் உள்ளீடு செய்யவும்.
(vi) கடன் காலத்தை D2:D5 பரப்பில் உள்ளீடு செய்யவும்.
(vii) கடன் தீர்த்த தேதியை E2:E5 பரப்பில் உள்ளீடு செய்யவும்.
(viii) அறை F2 ல் சூத்திரம் =E2-C2 உள்ளீடு செய்து பெற்ற கடன் காலத்தை நாட்களில் கணக்கிடவும்.
(ix) அறை G2 ல் காலக்கெடு தவறிய நாட்களைக் கணக்கிட கீழ்க்கண்ட சூத்திரத்தை உள்ளீடு செய்யவும்
=IF(F2-D2>0,F2-D2,0)
(தவணைத்தேதிக்கு முன்பாக செலுத்துவதனால் ஏற்படும் எதிர்மறை மதிப்பை தவிர்ப்ப்ப்பதற்காக IF செயற்கூறு பயன்படுத்தப்படுள்ளது.)
(x) அறை H2 ல் சூத்திரம் = ROUNDUP ((B2*2%)*(G2/365),0) உள்ளீடு செய்து காலக்கெடு தவறிய நாட்களுக்கு வட்டிக் கணக்கிட்டு அதை அருகிலுள்ள ரூபாய்க்கு முழுதாக்கல் செய்யவும்.
(xi) அறை I2 ல் = B2+H2 எனும் சூத்திரத்தை உள்ளீடு செய்து விற்பனைத் தொகையையும் வட்டியையும் கூட்டவும்.
(xii) அறைகள் F2 விலிருந்து I2 வரையிலான (F2:I2) பரப்பை தேர்வு செய்து அதை கடைசி வாடிக்கையாளர் வரை நகலெடுக்கவும்.
| Customer | Sales | Date of sales | Period of credit (days) | Date of settlement | Credit period availed | Days of default | Interest | Amount to be collected |
|---|---|---|---|---|---|---|---|---|
| M | 25,000 | 10-04-2016 | 60 | 05-07-2016 | 86 | 26 | 36 | 25,036 |
| N | 14,000 | 28-05-2016 | 30 | 25-07-2016 | 58 | 28 | 22 | 14,022 |
| P | 28,000 | 14-07-2016 | 45 | 25-08-2016 | 42 | 0 | 0 | 28,000 |
| R | 54,000 | 03-08-2016 | 90 | 02-01-2017 | 152 | 62 | 184 | 54,184 |
46.
| விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | எடுப்புகள் க/கு | ப | 75 | ||
| கொள்முதல் க/கு | 75 | ||||
| (உரிமையாளாரால் சொந்த உபயோகத்திற்காக ரூ.75 மதிப்புள்ள சரக்கு எடுக்கப்பட்டது பதிவு செய்யப்படாதது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஆ | சண்முகம் க/கு | ப | 90 | ||
| விற்பனை க/கு | 95 | ||||
| (சண்முகத்திற்கு கடனுக்கு ரூ.430க்கு சரக்கு விற்றது அவர் கணக்கில் ரூ.340 என வரவு வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| இ | கொள்முதல் க/கு | ப | 400 | ||
| விற்பனை க/கு | 400 | ||||
| விவேக் க/கு | 800 | ||||
| (விவேக்கிடம் சரக்கு கொள்முதல் செய்தது தவறாக விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்டது) | |||||
| ஈ | அனாமத்துக் க/கு | ப | 300 | ||
| கொள்முதல் திருப்ப க/கு | 300 | ||||
| (கொள்முதல் திருப்ப யத்தின் கூட்டுத்தொகை ரூ.300 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை திருத்தம் செயப்பட்டது) |
| விவரம் | தொகை ரூ | விவரம் | தொகை ரூ | ||
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | ப | 1,270 | கொள்முதல் | ப | 1,570 |
| பெற்ற தள்ளுபடி | 300 | ||||
| 1,570 | 1,570 |
47.

\(={25000-1000\over 10}={24000\over 10}\)
=ரூ. 2,400

\(={2400\over 25000}\times 100=\) 9.6%
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2016 ஜனவரி 1 | இயந்திரம் க/கு | ப | 25000 | ||
| வங்கி க/கு | 25000 | ||||
| (இயந்திரம் வாங்கியது ) | |||||
| டிசம் 31 | தேய்மானம் க/கு | ப | 2400 | ||
| இயந்திரம் க/கு | 2400 | ||||
| (தேய்மானம் நீக்கியது) | |||||
| டிசம் 31 | இலாபநட்டக் க/கு | ப | 2400 | ||
| தேய்மானம் க/கு | 2400 | ||||
| (தேய்மானம் இலாபநட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| 2017 டிசம் 31 | தேய்மானம் க/கு | ப | 2400 | ||
| இயந்திரம் க/கு | 2400 | ||||
| டிசம் 31 | இலாபநட்டம் க/கு | ப | 2400 | ||
| தேய்மானம் க/கு | 2400 | ||||
| (தேய்மானம் இலாபநட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
48.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | இரயில்வேத் துறைக்கு, இரயில் தண்டவாளம் அமைக்க செலுத்திய தொகை ரூ 50,000. | முதலினச் செலவு |
| (ii) | பழைய அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம். | வருவாயினச் செலவு |
| (iii) | சரக்கு விற்பனையின் பேரில் செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம். | வருவாயினச் செலவு |
49.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி இருப்பு | 7,130 | |
| கூட்டுக: | ||
| வாடிக்கையாளர் நேரடியாக வங்கியில் செலுத்தியது | 800 | |
| 7,930 | ||
| கழிக்க: | ||
| செலுத்திய காசோலை வசூலாகிறது | 1,000 | |
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 6,930 |
50.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | முதல் | 60,000 | ||
| 2. | பெற்றத் தள்ளுபடி | 3,250 | ||
| 3. | கொள்முதல் | 58,000 | ||
| 4. | பொறி இயந்திரம் | 40,000 | ||
| 5. | விளம்பரச் செலவுகள் | 5,000 | ||
| 6. | விற்பனை | 82,000 | ||
| 7. | மின்கட்டணம் | 800 | ||
| 8. | எடுப்புகள் | 5,250 | ||
| 9. | வாகனச் செலவுகள் | 1,200 | ||
| 10. | மகிழுந்து | 35,000 | ||
| மொத்தம் | 1,45,250 | 1,45,250 |
51.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| ஜனவரி 1 | ரொக்கக் க/கு | ப | 3,00,000 | ||
| இராஜா முதல் க/கு | 3,00,000 | ||||
| (ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) | |||||
| 2 | கொள்முதல் க/கு | ப | 1,00,000 | ||
| ராஜிவ் க/கு | 1,00,000 | ||||
| (கடனுக்கு கொள்முதல் செய்தது) | |||||
| 3 | வங்கி க/கு | ப | 2,00,000 | ||
| ரொக்கக் க/கு | 2,00,000 | ||||
| (வங்கியில் ரொக்கம் செலுத்தியது) | |||||
| 20 | ரொக்கக் க/கு | ப | 1,00,000 | ||
| வங்கிக் கடன் க/கு | 1,00,000 | ||||
| (வங்கியில் கடன் பெற்றது) | |||||
| 22 | எடுப்புகள் க/கு | ப | 800 | ||
| வங்கி க/கு | 800 | ||||
| (சொந்த உபயோகத்திற்க்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது) | |||||
| 23 | ராஜீவ் க/கு | ப | 1,00,000 | ||
| வங்கி க/கு | 99,000 | ||||
| பெற்ற தள்ளுபடி க/கு | 1,000 | ||||
| (ராஜீவ் கணக்கு தீர்க்கப்பட்டது) | |||||
| 25 | எடுப்புகள் க/கு | ப | 200 | ||
| வங்கி க/கு | 200 | ||||
| (உரிமையாளரின் சந்தா காசோலை மூலம் செலுத்தியது) | |||||
| 26 | எடுப்புகள் க/கு | ப | 2,000 | ||
| வங்கி க/கு | 2,000 | ||||
| (மின் கட்டணம் எடுப்பு அட்டை மூலம் செலுத்தியது) | |||||
| 31 | அறக்கட்டளை க/கு | ப | 1,000 | ||
| கொள்முதல் க/கு | 1,000 | ||||
| (உணவு இலவசமாக அறக்கட்டளை அமைப்பிற்கு வழங்கியது) | |||||
| 31 | பெட்டக வாடகை க/கு | ப | 1,000 | ||
| வங்கி க/கு | 1,000 | ||||
| (பெட்டக வாடகை செலுத்தியது) |
52.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2015 | சோமு க/கு | ப | 5,000 | ||
| மார்ச் 1 | விற்பனை க/கு (கடன் விற்பனை) |
5,000 | |||
| 7 | அறைகலன் க/கு | ப | 300 | ||
| ரொக்கக் க/கு (ரொக்கக் கொள்முதல்) | 300 | ||||
| 15 | ரொக்கக் க/கு | ப | 1,800 | ||
| பெற்ற வட்டி க/கு (வட்டி பெற்றது குறித்து) |
1,800 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 1 | விற்பனை க/கு | 5,000 | 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 15 | பெற்ற வட்டி க/கு | 1,800 | 2015 மார்ச் 7 | அறைகலன் கீ/இ | 300 | ||
| 31 | இருப்பு கீ/இ | 1,500 | |||||
| 1,800 | 1,800 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 5,000 | 2015 மார்ச் 1 | சோமு க/கு | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | ரொக்கக் க/கு | 300 | 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 300 | ||
| 300 | 300 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 300 | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 1,800 | 2015 மார்ச் 15 | ரொக்கக் க/கு | 1,800 | ||
| 1,800 | 1,800 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,800 |
53.
| நாள் | விவரம் | பே.ப.எ. | ப.கு.எ. | தொகைரூ | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | |||||
| 2017 | ||||||
| ஜனவரி 5 | ஆனந்த் | |||||
| 5 முகப்பு விளக்குகள் ஒன்று ரூ. 200 வீதம் | 1,000 | ஆணைக் கேற்ப இல்லை |
||||
| ஜனவரி 14 | சந்திரன் | |||||
| 4 ஒலிப்பான்கள் ஒன்று ரூ. 200 வீதம் | 800 | |||||
| 10 கண்ணாடிகள் ஒன்று ரூ. 350 வீதம் | 3,500 | 4,300 | தரம் குறைவு | |||
| கொள்முதல் திருப்பக் க/கு வ | 5,300 | |||||
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | |||||||
| ஜனவரி 31 | பற்பல கடனீந்தோர் க/கு | 5,300 | |||||
| (கொள்முதல் திருப்ப ஏட்டின் படி) |
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | கொள்முதல் | ||||||
| ஜனவரி 5 | திருப்பக் க/கு | 1,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
நாள் | விவரம் | கு.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | கொள்முதல் | ||||||
| ஜனவரி 5 | திருப்பக் க/கு | 4,300 |
54.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை ( ரூ ) | நாள் | செலுத்தல்கள் | சா.ப. எண் |
பே.ப. எண் |
தொகை ( ரூ ) |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2017 மே 1 |
இருப்பு கீ/கொ | 40,000 | 2017 மே 7 |
கூலி க/கு | 2,000 | ||||
| 5 | ஸ்வாதி க/கு | 4,000 | 10 | கொள்முதல் க/கு | 6,000 | ||||
| 15 | விற்பனை க/கு | 9,000 | 18 | கணிப்பொறி க/கு | 15,000 | ||||
| 30 | வட்டி க/கு | 500 | 22 | சபாபதி க/கு | 5,000 | ||||
| 28 | சம்பளம் க/கு | 2,500 | |||||||
| 31 | இருப்பு கீ/இ | 23,000 | |||||||
| 53,500 | 53,500 | ||||||||
| ஜூன் 1 | இருப்பு கீ/கொ | 23,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards