11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
Plus One Public Official Model Question 2019
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வேர் முடிச்சு மூலம் நைட்ரஜன் நிலைநிறுத்தம் பற்றி எழுதுக.
2.
சாறேற்றம் என்றால் என்ன?
3.
பாஸ்ட் நார்கள் அல்லது சைலத்திற்கு வெளியே அமைந்த நார்கள் பற்றி எழுதுக.
4.
பாலிமெர்கள் என்றால் என்ன?எ.கா தருக.
5.
கரப்பான் பூச்சியின் இதயத்தின் அமைப்பைக் கூறு.
6.
ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.
7.
எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?
8.
கீழ்கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் எந்தப்பணி இரத்தச் சிவப்பு அணுக்களால் மேற்கொள்ள இயலும் அல்லது இயலாது? உனது பதிலைச் சுருக்கமாக நியாயப்படுத்துக்க.
(அ) புரத உற்பத்தி
(ஆ) செல் பிரிதல்
(இ) லிப்பிட் உற்பத்தி
(ஈ) செயல்மிகு கடத்தல்
9.
குழல்களில் சுரத்தல் என்றால் என்ன?சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.
10.
கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக
11.
வாழ்நாள் முழுமையும் முட்டையிடுதலே இதன் முக்கிய பணியாகும்.
பணி பகிர்வு முறை
இராணி தேனீ
ஆண் தேனீ
கலவிப்பறப்பு
12.
இவ்வகை சட்டகம் முதுகு நாணற்ற உயிரிகளில் உறுதியானது.
சட்டக மண்டலம்
டென்டான்
நீர்மசட்டகம்
புறச்சட்டகம்
13.
மைட்டோகாண்ட்ரியத்தில் நிகழும் ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரண இணைவுச் செயலை கண்டறிந்தமைக்காக பீட்டர் மீட்செல் என்றன் இங்கிலாந்து உயிர் வேதியாலருக்கும் ________ வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1987
1878
1978
1985
14.
முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் _____ எனப்படும் பொருளால் அடைக்கப்பட்டுள்ளது.
கேலோஸ்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
15.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
| 1) மனிதச் சிறுநீர் | i) ஆக்சின் B |
| 2) மக்காச்சோள எண்ணெய் | ii) GA3 |
| 3) பூஞ்சைகள் | iii) அப்சிசிக் அமிலம் II |
| 4) ஹெர்ரிங் மீன் விந்து | iv) கைனடின் |
| 5) இளம் மக்காச்சோளம் | v ) ஆக்சின் A |
| 6) இளம் பருத்திக் காய் | vi) சியாடின் |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| iii | iv | v | vi | i | ii |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| v | i | ii | iv | vi | iii |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| iii | v | vi | i | ii | iv |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| ii | iii | v | vi | iv | i |
16.
ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்
Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்
17.
கிளைக்கோகேலிக்ஸ் இங்கு உருவாகிறது
செல்சுவர்
செல்சவ்வு
சைட்டோபிளாசம்
உட்கரு
18.
நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலம் இத்தொகுதியை சார்ந்த விலங்குகளில் காணப்படுகிறது
தொகுதி:துளையுடலிகள்
தொகுதி: நிடோரியா
தொகுதி: டினோஃபோரா
தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்
19.
இதயத்தைச் செல்களுக்கு இரத்தத்தை வழங்குவது எது?
பெருந்தமனி
நுரையீரல் தமனி
கரோனரி சிரை
கரோனரி தமனி
20.
ஃபாஜ் முன்னோடி என்பது செல்லின் _______ டன் இணைக்கப்பட்ட ஃபாஜ் DNA ஆகும்.
செல்சுவர்
குரோமோசோம்
DNA
உட்கரு
21.
எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ் முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.
நியூரோஹைபோபைஸிஸின் டென்ட்ரைட்டுகள்
நியூரோஹைபோபைஸிஸின் ஆக்ஸான்கள்
பெருமூளைப் பகுதியில் இருந்து வரும் வெண்மை இழைப் பட்டைகள்
ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு.
22.
போடோ சைட்டுகள் காணப்படுவது______.
பெளமானின் கிண்ண வெளிச்சுவரில்
பெளமானின் கிண்ண உட்சுவரில்
நெஃப்ரானின் கழுத்து பகுதியில்
கிளாமருலார் இரத்த நுண்நாளங்களின் சுவரில்
23.
சரியான இணைகளை உருவாக்குக
| வரிசை –I | வரிசை –II |
| P) சிறுகுடல் | i) 23 செ.மீ |
| Q) பெருகுடல் | ii) 4 மீட்டர் |
| R) உணவுக்குழல் | iii) 12.5 செ.மீ |
| S) தொண்டை | iv) 1.5 மீ |
| P | Q | R | S |
| iv | ii | i | iii |
| P | Q | R | S |
| ii | iv | i | iii |
| P | Q | R | S |
| i | iii | ii | iv |
| P | Q | R | S |
| iii | i | ii | iv |
24.
எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?
வகைப்பாட்டுத் திறவுகோல்
ஹெர்பேரியம்
தாவரம்
மோனோஃகிராப்
25.
குர்குமா அமாடா, குர்குமாடோமஸ்டிகா, அஸ்பரேகஸ், மராண்டா – ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு
கிழங்கு வேர்
வளைய வேர்
மணி வடிவ வேர்
முடிச்சு வேர்
26.
முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட் மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது
ஹோலோடைப்
நியோடைப்
ஐசோடைப்
பாராடைப்
27.
புற நரம்பு மண்டலம் பற்றி எழுதுக?
28.
மைட்டோகாண்ட்ரியத்தின் அமைப்பு படம் வரைந்து பாகங்களை குறிக்க?
29.
கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.
30.
சைகோமைசீட்ஸின் பண்புகள் யாவை?
31.
இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக
32.
நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது.இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?
33.
தற்போது வாழும் தாடைகளற்றளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக
34.
யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?
35.
ஓர் நடு நரம்பமைவுக்கும் பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை கூறு.
36.
கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
37.
ஒளி உணர் உறுப்பு -கண்பற்றி ஒரு குறிப்பு எழுதுக.
38.
நீள் பகல் தாவரம் என்றால் என்ன?
39.
மூலம் நோய் அல்லது ஹெமராய்டுகள் என்பது யாது?
40.
திரள் கனிகள் என்றால் என்ன? எ.கா தருக.
41.
ஆறு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார்?அதில் உள்ள பெரும் பிரிவுகளைக் கூறு.
42.
டாட்டோனைமி என்றால் என்ன?
43.
விதை அரக்கு என்றால் என்ன?
44.
சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் எது?
45.
சிறுநீர் கழிப்பு பயிற்சி எவ்வாறு சிறுநீர் கழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது?
46.
ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?
1.
(i) லெகூம் தாவரங்களின் வேர் முடுச்சுகளில் வாழும் ரைசோபியம் பாக்டீரியம் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்த உதவுகிறது.
(ii) இந்த வகையான கூட்டுயிர் வாழ்க்கையில் பாக்டீரியம் மற்றும் தாவரம் இரண்டுமே பயனடைகின்றன.
(iii) வேர்முடுச்சுக்கள் ரைசோபிய பாக்டீரிய தொற்றின் மூலம் ஏற்படுகிறது
2.
நீரானது வேர்கள் வழியாக சைலத்திற்குள் பக்கவாட்டு வழியில் செல்வதை கற்றோம்.
இப்படத்தில் தாவத்திற்குள் நீர் பகிர்ந்தளிக்கும் இயங்கு முறையினை கற்க உள்ளோம்.
கிளை நதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஓர் ஆற்றை உருவாக்குவது போல, இலட்சக்கணக்கிலான வேர்தூவிகள் துளித்துளியாக நீரை உறிஞ்சி நீர் கடத்தும் பெருவழிச் சாலையான சைலத்தில் ஒன்று சேர்க்கின்றன.
3.
பாஸ்ட் நார்கள் அல்லது சேலத்திற்கு வெளியே அமைந்த நார்கள் (Bast fibres or extra xylary fibres):
(i) இவ்வகை நார்கள் ஃபுளோயத்தில் காணப்படுகின்றன. இயற்கையான பாஸ்ட் நார்கள் வலிமையானவை.
(ii) செல்லுலோஸினால் ஆனவை. சணல் (Jute), புளிச்சக்கீரை, ஆளி விதைதாவரம் (flax), சணல்பை (hemp) போன்ற தாவரங்களில் ஃபுளோயம் அல்லது வெளிப்புறப் பட்டையிலிருந்து கிடைக்கிறது.
4.
பெருமூலக்கூறுகள் மானோமெர்கள் என்ற ஒத்த அலகுகளின் இணைவால் தோன்றும் பல்வேறு நீளமுடைய சங்கிலிகள் பாலிமெர்கள் எனப்படும்.
எ.கா
| வ.எண் | பாலிமெர்கள் | மானோமெர்கள் |
|---|---|---|
| 1. | கார்போ ஹைட்ரேட்டுகள் | ஒற்றை சர்க்கரைகள் |
| 2. | புரதங்கள் | அமினோ அமிலங்கள் |
| 3. | நியூக்ளிக் அமிலங்கள் | நியூக்ளியோடைடுகள் |
| 4. | லிப்பிடுகள் | மானோமெர்கள் கிடையாது |
5.
1. இதயம் தசையாலானது.
2. 13 அறைகளை கொண்ட குழல்வடிவமுடையது.
3. ஒவ்வொரு அறையின் இரண்டு புறங்களிலும் ஆஸ்டியா எனும் துளைகள் காணப்படுகிறது.
4. உடற்குழியில் உள்ள இரத்தம் ஆஸ்டியாவின் வழியாக இதயத்திற்குள் நுழைகிறது.
6.
இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேக்கை வீதத்தை ஒப்பிடுக.
பிரிவு அ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)400-450nm இடைப்பட்ட ஒளி அலைநீளம் நீல நிற ஒளி சேர்க்கை ஆகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் அதிகமாக உள்ளது.
பிரிவு ஆ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)500-550 இடைப்பட்ட ஒளி அலைநீளத்தில் பச்சை நிற ஒளி சேர்க்கை கதிர்வீச்சாகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் குறைவகவே நடைப்பெறுகின்றது. பச்சையம் உரிஞ்சப்படுவது இல்லை.
7.
(i) வசந்தக் காலத்தில் கேம்பியத்தின் அதிகமான செயல்பாடே அகன்ற உள்வெளி கொண்ட திக எண்ணிக்கை சைலக்கூறுகளையும் வெசல்கள்/டிராக்கீடுகள் கொண்ட அதிக அளவிலான சைலக்கூறுகளையும் தோற்றுவிக்கின்றன.
(ii) இவற்றில் சைலக்கூறுகள் மிகவும் மெல்லிய சுரவ் கொண்டவை. இந்தக் காலத்தில் உருவாகும் கட்டை வசந்தகாலக் கட்டை அல்லது முன்பருவக் கட்டை (spring wood or early wood) எனப்படும்.
(iii) குளிர் காலத்தில் கேம்பியத்தின் செயல்பாடு வெகுவாகக் குறைந்து, குறுகலான செல் உள்வெளி கொண்ட வெசல்கள்/டிராக்கீடுகளை பெற்ற, குறைந்த அளவிலான சைலக்கூறுகளைத் தோற்றுவிக்கின்றன.
(iv) இவற்றில் சைலக்கூறுகள் மிகவும் தடித்த சுவர் கொண்டவை. இந்தக் காலத்தின் உருவாகும் கட்டை குளிர்காலக் கட்டை அல்லது பின்பருவாக் கட்டை (autumn wood or late wood) எனப்படும்.
8.
(அ) புரத உற்பத்தி- இரத்தச் சிவப்பணுக்கள் புரோ கேரியோட் வகையைச் சார்ந்தது. இதில் புரத தொழிற்சாலையான ரைபோசோம் காணப்படததால், புரத உற்பத்தி கிடையாது.
(ஆ) செல் பிரிதல் - இரத்தச் சிவப்பணுக்கள் புரோகேரியோட் வகையைச் சார்ந்தது. இதில் உட்கரு காணப்படததால் செல்பிரிதலும் கணப்படவில்லை.
(இ) லிப்பிட் உற்பத்தி - இரத்தச் சிவப்பணுக்கள் புரோகேரியோட் வகையைச் சார்ந்தது. இதில் லிப்பிட் உற்பத்திக்கான வழுவழுப்பான எண்டோபிளாச வலை காணப்படவில்லை.
9.
குழலில் உள்ள வடிவத்திரவதில் வெளியிடப்படுகிற ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ஒரு சோடியம் அயனி, குழல் செல்களினால் உறிஞ்சப்படுகிறது.
இவ்வாறு சுரக்கப்பட்ட ஹைட்ரஜன் பை-காட்பனேட்டுகள், பை-பாஸ்பேட்டுகள் மற்றும் அம்மோனியா ஆகியவற்றுடன் இணைந்து கார்பானிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலமாக மாறுகிறது.
10.
| வ.எண் | திரள் கனி | கூட்டுக்கனி |
| 1 | ஓர் தனிமலரின் இணையாத சூலகங்கள் உருவாக்குகிறது. ஒவ்வொரு தனி சூல்கமும் ஒரு எளிய சிறு கனியாக மாறுகிறது. |
ஒரு முழு மஞ்சரியும் அதைத் தாங்கும் மஞ்சரிக் காம்பும் சேர்ந்து உருவாகும் |
| 2 | எ.கா: மக்னோலியா, ராஸ்பெர்ரி, அன்னோனா, பாலியால்தியா | எ.கா: அன்னாசி, பலா, மல்பெரி, ஃபைகஸ். |
11.
(b)
இராணி தேனீ
12.
(d)
புறச்சட்டகம்
13.
(c)
1978
14.
(a)
கேலோஸ்
15.
(b)
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| v | i | ii | iv | vi | iii |
16.
(a)
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
17.
(b)
செல்சவ்வு
18.
(a)
தொகுதி:துளையுடலிகள்
19.
(d)
கரோனரி தமனி
20.
(b)
குரோமோசோம்
21.
(d)
ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு.
22.
(b)
பெளமானின் கிண்ண உட்சுவரில்
23.
(a)
| P | Q | R | S |
| iv | ii | i | iii |
24.
(a)
வகைப்பாட்டுத் திறவுகோல்
25.
(d)
முடிச்சு வேர்
26.
(b)
நியோடைப்
27.
28.

29.
1. கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலத்தில்
i. உணவுக்குழல் மேல் நரம்புசெல் திரள், (மூளை)
ii. உணவுக்குழல் கீழ் நரம்புசெல் திரள்
iii. உணவுக்குழல் சூழ் நரம்பு வளையம்
iv. வயிற்றுப்புற இரட்டை நரம்புவடம் ஆகியவை உள்ளன.
2. மூளை உணர்ச்சி அறியும் உறுப்பாகவும் நாளமில்லச் சுரப்பி மையமாகவும் செயல்படுகிறது.
3. தொண்டை கீழ் நரம்பு செல் திரளானது வாய் உறுப்புகள், கால்கள் மற்றும் இறக்கைகளின் இயக்கங்களை கட்டுப்படுத்துகிறது.
4. அரைவைத்தாடை துருவத்தாடை மற்றும் கீழ்த்தட்டு கண்டங்களின் இணை நரம்புச் செல் திரள்கள் இணைத்து உணவுக் குழல் கீழ் நரம்புச் செல் திரளை உருவாக்குகிறது.
5. உணவுக்குழல் மேல் மற்றும் உணவுக்குழல் கீழ் நரம்பு செல் திரள்கள் ஆகிய இரண்டும் ஓரிணை நரம்பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.
6. இது உணவுக்குழல் சூழ் நரம்பிணைப்பு என்றழைக்கப்படுகிறது.
7. வயிற்றுப்புற மையக்கோட்டில் செல்லும் இரட்டை நரம்புவடமானது திடத்தன்மையுடையது.
8. நரம்புவதாம் 7வது வியிற்றுக் கண்டம் வரை நீண்டு காணப்படுகிறது.
9. மூன்று மார்புகாண்டங்களிலும் தலா ஒரு நரம்பு செல் திரளும், வயிற்று பகுதியில் 6 நரம்புச் செல் திரள்களும் உள்ளது.
30.
1.பெரும்பாலான சிற்றினங்கள், மட்குண்ணிகளாக மண்ணில் உள்ள அழுகிய தாவர, விலங்கின உடல்களின் மீது வாழ்கின்றன.சில ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தவை.(வீட்டு ஈக்களில் வாழும் எண்டமஃப்தேரா).
2ரொட்டி மீது வளரக் கூடியவை (மியூக்கர்,ரைசோபஸ்), சாணத்தில் வாழ்பவை (Coprophilous fungi)எ.கா: பைலோபோலஸ் இந்தத் தொகுப்பைச் சார்ந்தவைகளாகும்.
3.மைசீலியம் கிளைத்து பல்உட்கரு நிலையைப் பெற்றுள்ளது.
4.பாலிலா இனப்பெருக்கம் வித்தகங்களில் (sporangia) வித்துக்களைத் தோற்றுவிப்பதன் மூலம் நடைபெறுகிறது.
5.பாலினப்பெருக்கத்தின்போது கேமீட்டகங்கள் இணைந்து தடித்த சுவருடைய உறக்ககருமுட்டை(Zygospore) தோற்றுவிக்கின்றன.இவை நீண்ட காலம் ஓய்வு நிலையில் இருந்து குன்றல் பகுப்பிற்குப் பிறகு வித்துகளைத் தோற்றுவிக்கின்றன.
31.
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலை வேர் | ஒரு விதையிலை வேர் |
| 1. | பெரிசைக்கிள் | பக்கவேர்கள், பெல்லோஜென் மற்றும் வாஸ்குலக் கேம்பியத்தின் ஒரு பகுதி பெரிசைக்களிலிருந்து தோன்றுகின்றன. |
பக்கவேர்கள் மட்டும் தோன்றுகின்றன. |
| 2. | வாஸ்குலத் திசு | பெரும்பாலும் ஃபுளோயம் பட்டைகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. |
பெரும்பாலும் சைலம் ஃபுளோயம் பட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. |
| 3. | இணைப்புத் திசு | பாரங்கைமாவால் ஆனது. இந்தச் செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடடைகிறது. | பெரும்பாலும் ஸ்கிலிரங்கைமாவால் ஆனது. ஆனால் சில சமயங்களில் பாரங்கைமாவால் ஆனது. இந்த செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடு அடைவதில்லை. |
| 4. | கேம்பியம் | இரண்டாம் நிலை வளர்ச்சியின் பொது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவாக தோன்றுகிறது. | முற்றிலும் இல்லை. |
| 5. | சைலம் | நான்கு முனை கொண்டவை. | பொதுவாகப் பல முனை கொண்டவை |
32.
1. ஹைப்போதலாமஸில் உள்ள உள்ள ஓரிணை சிறிய உருண்டையான உறுப்பிற்கு மாமில்லரி உறுப்பு (Mammillary bodies) என்று பெயர். வாசனை சார்ந்த அனிச்சை செயல் மற்றும் அது தொடர்பான உணர்ச்சி வெளிப்பாடுகளில் இவ்வுறுப்பு பங்கேற்கிறது.
2. சுவை மற்றும் மணம் இவற்றிக்கான உணர்வேற்பிகள் வேதிவுணர்வேற்பிகள் (chemoreceptors) எனப்படுகின்றன.
3. காற்றில் கரையக்கூடிய வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணரவேற்பிகளைத் தூண்டுவதால் மனம் உணரப்படுகிறது.
நாசியறைகளின் குறைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறுத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய (ஒளபாக்டரி epithelium) திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.
4. நுகர்ச்சி மின்தூண்டல்கள் இங்கிருந்து மூளையின் முன்நெற்றி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணம் உணரப்படுகிறது.
5. மூளையின் முன்நெற்றி பகுதிக்குச் செல்லும் அதேநேரம் தூண்டல்கள் லிம்பிக்தொகுப்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
33.
| வ.எண் | குருத்தெலும்பு மீன்கள் | எலும்பு மீன்கள் |
|---|---|---|
| 1. | கடலில் வாழும் | கடல்நீர் மற்றும் தண்ணீரில் வாழும். |
| 2. | அகச்சட்டகம் குருத்தெலும்பால் ஆனது | அகச்சட்டகம் எலும்பால் ஆனது |
| 3. | பிளகாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது | கேனாய்டு, சைக்ளாய்டு அல்லது டீனாய்டு செதில்களால் தோல் மூடப்பட்டுள்ளது. |
| 4. | அக மற்றும் புற அமைப்பில் சமச்சீரற்ற தன்மை | கதிர் வடிவ உடல் அமைப்புடையது |
| 5. | இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. | நான்கு இணை இழைவடிவ செவுள்களால் சுவாசம் நடைபெறுகிறது. |
| 6. | செவுள்மூடி கிடையாது | செவுள்மூடி உண்டு |
| 7. | கழிவுப் பொருள்-யூரியா | அம்மோனியா |
| 8. | குட்டி ஈனக்கூடியவை | முட்டையிடுபவை |
| 9. | அகக்கருவுருவுதல் நடைபெறுகிறது | புறக்கருவுருவுதல் நடைபெறுகிறது |
| 10. | எ.கா. ஸ்கோலியோடான், ட்ரைகான் | லேபியா (ரோகு) கட்லா |
34.
1. காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் வாழிடம் அழிக்கப்படுகிறது.
2. காடுகள் அழிக்கப்படுவதால், உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
3. மழைபொழிவு மற்றும் நீர் ஆதாரங்கள் வறண்டு போவதால்
4. அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதால்
5. மனிதர்கள் காட்டுக்குள் சென்று அவைகளுக்கு இடையூறு செய்வதால்.
35.
| ஓர் நடு நரம்பமைவு | பல நடு நரம்பமைவு | |
| 1. | இவ்வகை நரம்பமைவில் இலையின் மையத்தில் ஒரே ஒரு மைய நரம்பு மட்டும் உள்ளது. |
இவ்வகை நரம்பமைவில், இலையின் ஒரு புள்ளியிலிருந்து இரண்டு அல்லது பல மைய நரம்புகள் தோன்றுகிறது. |
| 2. | இம் மைய நரம்பிலிருந்து பல கிளை நரம்புகள் தோன்றி ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகிறது. |
பல மைய நரம்புகள் இலையின் வெளிப்புறமாகவோ அல்லது மேற்புறமாகவோ செல்கிறது. |
| 3. | இதன் மறுபெயர் சிறகு வடிவ வலைப் பின்னல் நரம்பமைவு ஆகும். |
இதன் மறுபெயர் அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு ஆகும். |
| 4. | எ.கா: மாஞ்சிஃபெராபூ இண்டிகா, ஃபைகஸ் ரிலிஜியோஸா, நீரியம். |
எ.கா. குக்கர் பிட்டர் (பூசனி), லூஃபா(பீர்க்கங்காய்), காரிக்கா பப்பாயா (பப்பாளி), ஜிஜீஃபஸ் (இலந்தை), சின்னமோமம் (பிரிஞ்சிஇலை) |
36.
வளரியல்பு: பின்னுக் கொடி
வேர்: ஆணிவேர்த் தொகுப்பு கிளைத்து மற்றும் வேர்முண்டுகளுடன் கூடியது
தண்டு : நிலத்தின் மேல் காணப்படும் நலிந்த தண்டுடைய பின்னுக்கொடி
இலை: ஒற்றைப்படை ஒருமடிககூட்டிலை, மாற்றிலையடுக்கமைவு , இலையடிச் செதிலுடையது .வலைப் பின்னால் இலைக்காம்பும் சிற்றிலைக்காம்பும் அதைப்புடையன.
மஞ்சுரி ; கக்க மலர்
மலர் : பூவடிச்செதிலுடையது. புககாம்புச் செதிலுடையது . புககாம்புச் செதில்கள் அளவில் பெரியது,மலர்காம்புடையது.இரு பூவிதழடுக்குடையது.முழுமையானது, இருபால்மலர் , ஐந்தங்கமலர். இரு பக்கச்சிருடையது மற்றும் மேல்மட்டச் சூலகப்பையுடையது.
புல்லிவட்டம் ; புல்லிகள் 5,இணைந்த புல்லிகள் பசுமையானது, தொடு இதழமைவில் அமைத்துள்ளது .தனிப்புள்ளி மலரின் அச்சு நோக்கிக் காணப்படும் .
அல்லிவட்டம்: அல்லிகள் 5,வெண்மை அல்லது நீல நிறத்தாலானது.தனித்தது ,ஒழுங்கற்றவை , வண்ணத்துப் பூச்சி வடிவில் அமைந்தவை இறங்குதழுவு இதழமைவில் உள்ளன
மகர்ந்ததாள் வட்டம் : மகர்ந்ததாள் கள் 10 இருகற்றைகளில் அமைந்தது (9) +1, ஒன்பது மகர்ந்தக் கம்பிகள் இணைந்து ஒரு கற்றையாகவும் 10 வந்து தனித்து ஒரு கற்றையாகவும் உள்ளன.மகரந்தப்பை ஈரறையுடையது. தாள்அடி இணைந்தவை.நீள்வாக்கில் உட்புறமாக வெடிப்பவை.
சூலவட்டம் : ஒற்றச்சூலக இலையானது மேல்மட்டசூலகம், ஒரு சூலக அறை ,சூல்கள் பல விளிம்பு சூள் ஒட்டு முறையில் அமைத்துள்ளன.சூலகத்தண்டு தனித்தது உள்நோக்கி வளைந்தது , சூலக முடி தூவிகளுடையது கனி: இருபுற வெடிகனி
விதை :சிறுநீரக வடிவிலானது.கருவூன் அற்றது
37.
கண் பார்வை உறுப்பாகும். கண்ணானது மண்டையோட்டின் கண்கோள குழியினுள் கீழ்கணட ஆறு வெளியர்ந்த தசைகளால் பொருத்தப்பட்டுள்ளது. அவையாவன, மேற்புறத்தசைசைகள், கீழ்புறத்தசைகள், பக்கவாட்டுத் தசைகள், நாட்டுப்புற நேர்த்தசைகள், மேற்புறசாய்வு தசைகள் மற்றும் கீழ்ப்புற சாய்வு தசைகள் இத்தசைகள் கண்களின் இயக்கங்களுக்கு உதவுகின்றன.
38.
தீர்வுக்கட்ட ஒளிக்கால அளவைவிட மலர்தலுக்கு அதிக ஒளிக்காலம் தேவைப்படும் தாவரங்கள் நீள் பகல் தாவரங்கள் அல்லது குறு இருள் தாவரங்கள் என்படுகினற்ன,
எடுத்துக்காட்டு : பட்டாணி, பார்லி , ஓட்ஸ்.
39.
1. மலத்துகளை ஈரடுக்கு சுருக்குத் தசைகளால் ஆனது.
2. மலத்துளையைச் சுற்றியுள்ள கோழைப்படலம் பல செங்குத்தான மடிப்புகளால் ஆனது.
3. இம்மடிப்புகளில் தமனிகளும் சிரைகளும் உள்ளன.
4. இவ்விடத்தில் ஏற்படும் புடைப்புகளுக்கு மூலம் அல்லது ஹெமராய்டுகள் என்று பெயர்.
40.
இது இணையாச் சூலகங்கள் கொண்ட ஓர் தனி மலரில் இருந்து உருவாகும் கனியாகும். ஒவ்வொரு தனிச்சூலகமும் ஓர் எளிய சிறு கனியாக மாறுகிறது.
எ.கா: பாலியல்தியா.
41.
தாமஸ் கேவாலியர் - ஸ்மித் 1998 ஆம் ஆண்டு
1.ஆர்க்கிபாக்டீரியங்கள்
2.யுபாக்டீரியங்கள்
3.புரோட்டிஸ்டா
4.பூஞ்சைகள்
5.பிளாண்டே
6.அனிமேலியா
42.
பேரினப் பெயரும் சிற்றினப் பெயரும் ஒன்றாக இருக்கும் படியான பெயரிடும் முறைக்கு டாட்டோனைமி என்று பெயர்.
எ.கா. நாஜா நாஜா (இந்திய நாகப் பாம்பு).
43.
அரக்கினை அரைத்த பின் தேவையற்ற பொருட்களான தூசுகள் மற்ற நுண்ணிய பொருட்கள் போன்றவை நீக்கப்பட்டு உருவாக்கப்படும் அரக்கு வித்து அரக்கு எனப்படும்.
44.
சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்தக்குழாய் சிறுநீரக சிரை ஆகும்.
45.
சிறுநீர் கழிப்பு பயிற்சி சிறுநீர் கழிக்கும் சீராக வைத்திருக்க பயன்படுகிறது.
46.
கால்சியம் மற்றும் சிலிகான் முட்களாலோ அல்லது ஸ்பாஞ்சினாலோ அல்லது இரண்டும் கலந்தோ ஆன சட்டகம் உடலுக்கு உறுதுணையாக உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards