11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
+1 Public Official Model Question 2019
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
அல்போன்ஸோ டி அல்புகர்க்
நீனோ டா குன்கா
ஆன்டோனியோ டி நாரான்கா
2.
________ தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் செளசாப் போரில் வெற்றி பெற்றார்.
பாபர்
ஹீமாயூன்
ஷெர்கான்
அக்பர்
3.
மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் _______ ஆவார்.
இராமானந்தர்
மீராபாய்
சூர்தாஸ்
துக்காராம்
4.
சோழமண்டலக் கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம்
முசிறி
தொண்டி
கொற்கை
புகார்
5.
_____ என்ற நூலை கங்காதேவி எழுதினார்.
மனுசரித்ரா
ஆமுக்த மால்யதா
பாண்டுரங்க மகாத்மியம்
மதுரா விஜயம்
6.
சந்திரகுப்தர்__________ல் மெளரிய பேரரசை அமைத்தார்.
பொ.அ.மு.297
பொ.அ.மு.272
பொ.அ.மு.321
பொ.அ.மு.231
7.
கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர் ________________
வசிஷ்டபுத்ர புலுமாவி
நாகபனா
கடம்பர்
யக்னஸ்ரீ சதகர்னி
8.
முதல் பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______
காஷ்மீர்
வைசாலி
பாடலிபுத்திரம்
ராஜகிருஹம்
9.
தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர் ________ என்று அழைக்கப்படுகிறார்.
நர்மதை மனிதன்
ஹோமினின்
ஹோமோ சேப்பியன்ஸ்
10.
பொருத்துக
(1) படை முகாம் – படை வீடு
(2) புறக்காவல் படைகள் – தண்டநாயகம்
(3) தலைவர் – நிலைப்படை
(4) படைத்தளபதி – படைமுதலி
1,3,4,2
4,2,1,3
2,1,3,4
2,3,1,4
11.
வழக்கமான தூதர்கள் மற்றும் கடிதப் பரிமாற்றம்
இந்தியாவிலிருந்து மேற்குக்கான வழக்கமான வணிகத்தைத்ப் பாதித்தது
இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
இந்தியாவிலிருந்து கிழக்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது
மேற்கூறிய எதுவுமில்லை
12.
8ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் ________ ஆவார்.
ஹஜ்ஜஜ்
முகமது-பின்-காஸிம்
ஜெய சிம்ஹ
தாகிர்
13.
கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி
விஷயம் - ராஷ்ட்டிரகூடர்
நம்மாழ்வார் - குருகூர்
14.
ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.
கிரகவர்மன்
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
பிரபாகரவர்த்தனர்
போனி
15.
கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?
உதயகிரி குகை (ஒடிசா )
அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா )
எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )
பாக் (மத்தியப் பிரதேசம்)
16.
_____________ராஜசூய யாகத்தை நடத்தினார்
பெருநற்கிள்ளி
முதுகுடுமிப் பெருவழுதி
சிமுகா
அதியமான்
17.
_____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
ராஜதரங்கிணி
முத்ரராட்சசம்
18.
பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.
பெளத்தம்
சமணம்
ஆசீவகம்
வேதம்
19.
மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருபாஞ்சாலம்
கங்கைச்சமவெளி
சிந்துவெளி
விதேகா
20.
எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்காலம்
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
21.
கைவினைப்பொருள்கள் உற்பத்தி பற்றி ஒரு குறிப்பு வரைக.
22.
23.
முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.
24.
பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
25.
பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.
26.
கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்
27.
அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
28.
ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?
29.
இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
30.
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.
31.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
32.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.
33.
கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?
34.
முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
35.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
36.
சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?
37.
பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
(1) ஊரார் (2) சபையார் (3) நகரத்தார் (4) நாட்டார்
38.
மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது. விவரிக்கவும்
39.
ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக
40.
ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?
41.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
42.
இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?
43.
'கருவித்தொழில்நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது'-தெளிவாக்குக.
44.
வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .
45.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?
46.
புதிய கற்கால புரட்சி - வரையறு:
47.
1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
48.
வைகுண்ட சாமிகள்
49.
கர்கானா
50.
இரட்டையாட்சி முறை
51.
இராஜராஜ சோழனின் கடல்வழிப் படையெடுப்புகள் குறித்து குறிப்பு வரைக.
52.
கிரேக்கருடனான இந்தியத் தொடர்பின் விளைவான பண்பாட்டுத் தாக்கத்தின் சிறப்புகளைக் கூறவும்.
53.
இந்தியா மற்றும் மேற்கு, மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
54.
சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.
1.
(a)
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
2.
(c)
ஷெர்கான்
3.
(d)
துக்காராம்
4.
(d)
புகார்
5.
(d)
மதுரா விஜயம்
6.
(c)
பொ.அ.மு.321
7.
(a)
வசிஷ்டபுத்ர புலுமாவி
8.
(d)
ராஜகிருஹம்
9.
(b)
ஹோமினின்
10.
(d)
2,3,1,4
11.
(b)
இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.
12.
(d)
தாகிர்
13.
(a)
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
14.
(b)
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
15.
(c)
எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )
16.
(a)
பெருநற்கிள்ளி
17.
(a)
அர்த்தசாஸ்திரம்
18.
(b)
சமணம்
19.
(a)
குருபாஞ்சாலம்
20.
(a)
வரலாற்றுக்கு முந்தைய காலம்
21.
1. கைவினைப் பொருட்கள் உற்பத்தி நகர்ப்புறம், கிராமப்புறம் ஆகிய இரண்டிலும் நடைபெற்றது.
2. ஆடம்பரத் தொழில்கள் (எடுத்துக்காட்டாக உலோக வேலைகள்) நகரங்கள் சார்ந்தனவாக இருந்தன.
22.
23.
1. தாஜ்மஹால் முகலாயக் கட்டடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும்.
2. அது இந்தியப் பாரசீக இஸ்லாமியக் கட்டடக் கலைகளின் கூட்டுக் கலவையாகும்.
3. தலைவாயில், தோட்டம், மசூதி, கல்லறைமாடம் (மினார் என்றழைக்கப்படும் நான்கு கோபுரங்கள்)ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனித்தன்மை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது.
4. ஏனைய கட்டடங்கள் 1643 இல் முடிவடைந்தன. அலங்கார வேலைகள் குறைந்தபட்சம் 1647 வரை தொடர்ந்து நடைபெற்றன.
24.
(i) இடங்களைக் கைப்பற்றுதல், கப்பம் வசூலித்தல், குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.
(ii) கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட வளம் மிக்க ரெய்ச்சூர் பகுதியை இணைத்துக் கொள்ளவும், மேலாதிக்கம் செலுத்தவும் இருவருமே விரும்பினர்.
(iii) சில வரலாற்று ஆய்வாளர்கள் இந்து விஜய நகரத்திற்கும், இஸ்லாமிய பாமினி அரசுகளுக்கு இடையே நிலவிய மதப் பகைமையே போர்களுக்கான அடிப்படைக் காரணமென்று கருதுகின்றனர்.
25.
i) வணிகம் பெருமளவு வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் பெருகி சமுதாயத்தில் முக்கியமானோர் ஆயினார்.
ii) கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.
iii) வெளிநாடுகளுடன் தரை வழியாகவும் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
iv) இந்த வளர்ச்சியானது விரிவடைந்து வரும் வணிக நடவடிக்கைகளுக்கு உதவியது.
v) எனவே வணிகம் விரிவடைந்து பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
26.
(i) கஜினி முகமது இந்தியா வரும்போது கணிதவியலாளரும், தத்துவஞானியும் வானவியலருமான அல்-பெருனியை தன்னுடன் அழைத்து வந்தார்.
(ii) அல்பெருனி ஹிதாப் -இ-ஹிந்த் என்ற நூலை இயற்றினார்.
(iii) பாரசீக கவிஞரான பிர்தொளசி, ஷாநாமாவை இயற்றினார்.
(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி, சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
27.
(i) ஸ்ரீராமானுஜர், திருரங்கம் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கோவிலையும், மடத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
(ii) ராமானுஜர் கோவில் சடங்குகளை மாற்றி அமைத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி.
(iii) வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக்கொண்டார்.
(iv) ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடம் பக்தி கோட்பாட்டை பரப்புவதில் ஆர்வம் கொண்டார்.
(v) கோயில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரையும் ஆண்டிற்கு ஒரு முறையாவது கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார்.
இவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய மதமாகி வைணவத்தை மாற்றினார்.
28.
கன்னோசியின் அரசராக ஹர்ஷர்:
i) கன்னோசியின் முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரைப்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தார்
ii) தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகி தேஷ்வர போதிசத்வரின் அறிவுரைகளின்படி ராஜ்புத்திரர், சிலாத்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.
iii) ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தனேஸ்வரமும்ம் கன்னோசியும் ஒன்றாக இணைந்தன.
iv) பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரை கன்னோசிக்கு இடம் மாட்டிக்கொண்டார்.
29.
(i) வாட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியன் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
(ii) சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(iii) இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை.அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
(iv) தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் பண்டகமாக உள்ளது.
30.
சிந்து நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
1. கால நிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தின் வீழ்ச்சி, தொடர் வறட்சியின் காரணங்களால் இந்நாகரீகம் வீழ்ச்சியுற்றது.
2. வெள்ளப்பெருக்கு, அவ்வப்போது ஏற்படும் நில நடுக்கம் போன்ற பேரிடர்களும் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
3. ஆசிரியர்கள் போன்ற அயலவர்களின் படையெடுப்பும் சிந்து நாகரீக வீழ்ச்சிக்கு காரணமியிருந்தது.
4. காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
5. இதன் காரணங்களைக் சிந்து நாகரீகமும் வீழ்ச்சியுற்றது.
31.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
32.
காரணங்கள்
நாடுகளை ஆக்கிரபித்தல்:
டல்ஹெளசி வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் மூலம் அவகத்தையும். ஜான்சியையும் இணைத்தார். இது நானா சகிப்புக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
முறையான உரிமம் இல்லாமல், குத்தகை இல்லாத நிலம் வைத்திருப்போர் பற்றி விசாரிக்க பம்பாய் அரசு நியமித்த இனாம் கமிஷனின் (1852) அறிக்கையின்படி 21,000 க்கு அதிகமான தோட்டங்கள் பரிமுதல் செய்யப்பட்டன.
அவகத்தில் அரச குடும்பத்தை நம்பி வேலை செய்யும் வேலையாட்கள், தொழில் புரிவோர் வேலையிழந்ததால் அவர்களும் கோபமுற்றனர்.
நியாயமற்ற நிலவருவாய் முறை:
ஆங்கில அரசுக்கு முன்னர் இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூல் செய்தனர்.
ஆனால் ஆங்கிலேயர் ஒரு வாடகையைப் போல், வரி வசூல் செய்தனர்.
எவ்வாறு என்றால் நிலத்தில் விவசாயம் செய்தலும் செய்யாவிட்டாலும் அதே அளவு வரி வசூல் செய்யப்பட்டன.
முஸ்லீம் உயர்குடியினர் மற்றும் கற்றறிந்தோர் நிலை:
முஸ்லிம்கள் பெரும்பாலும் அரசு பணியையே சார்ந்திருந்தனர்.
சில பேர் குதிரைப்படைத் தளபதிகளாக உயர்ந்த ஊதியம் பெற்று வந்தனர்.
ஆனால் கம்பெனியின் ஆட்சியில் அவர்கள் பலவாறு இன்னலுற்றனர்.
நீதிமன்றம் பொதுப் பணித்துறையில் பாரசீக மொழி ஒழிக்கப்பட்டது; முஸ்லிம்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.
மத உணர்வுகள்:
சதி ஒழிப்பு, விதவை மறுமணம், பெண் சிசு கொலை ஆகியவற்றிற்கு எதிரான சட்டங்கள் சமய நம்பிக்கையில் கம்பெனி அரசு தலையிடுவதாக கருதப்பட்டது.
1850- யில் இயற்றப்பட்ட லெக்ஸ் லோசி சட்டம் கிறித்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது.
இறுதியாக, இராணுவத்தில் புதிய என்பீல்டு துப்பாக்கி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தோட்டக்களில் பசுவின் கொழுப்பு, பன்றியின் கொழுப்பு தடவப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இது வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
விளைவுகள்:
இதுவரை கிழக்கிந்தியக் கம்பெனியால் ஆளப்பட்டு வந்த இந்தியா இனிமேல் ஆங்கிலேய முடியரசின் பெயரால் அரசு செயலாளர் மூலம் ஆளப்படும்.
வாரிசு உரிமை இழப்புக் கொள்ளையும், இணைப்புக் கொள்கையும் கைவிடப்படும்.
கல்வி, பொதுப்பணித்துறை சார்ந்த திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்.
கம்பெனியின் இயக்குநர் குழுவும், கட்டுப்பாட்டுக் ஒழிக்கப்பட்டன.
இந்திய அரசர்கள், மக்களின் உரிமைகளும், மற்றும் கண்ணியமும் காக்கப்படும்.
1861 - இல் அமைக்கப்படும் சட்டமன்றத்தில் இந்திய பிரதமர் நியமிக்கப்படுவர்.
33.
1. ஐரோப்பாவில் நடைபெற்ற அரசு வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசபதவியை ஏற்றார்.
2.மரிய தேரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகிதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தேரேசாவுக்கு எதிராகக் கைகோர்த்தது.
3. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
4. இப்பிரச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும்களம் கண்டது. ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட போர்களால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த இருநாட்டுக் குடியேற்றங்களிலும் போர்கள் ஏற்பட்டன.
5.போர் வெடித்தபோது புதுச்சேரியின் புதிய ஆளுநர் துய்ப்ளே, சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் ஐரோப்பாவில் இருவரிடையே போர்மூண்டாலும் இங்கே நடுநிலைமை காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
6. ஆனால் பார்னெட் என்பவரின் தலைமையிலான ஆங்கிலக் கடற்படை இந்தியக் பொருட்களை ஏற்றிச் சென்ற சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
7. இந்நிகழ்வால் அதிர்ச்சிக்குள்ளான துய்ப்ளே கர்நாடக நவாப் அன்வாருதீனின் உதவியை நாடி ஆங்கிலேயரோடு போர் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் சில காலம் அமைதி நிலவியது.
34.
1. முகலாயர் காலத்தில் இந்தியாவில் கட்டடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலககே கலையில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
2. கூண்டு வடிவிலான குமிழ்களைக் கொண்ட கவிகை மாடங்களாலும், ஒப்பனைகள் மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும், நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபி மாடங்களாலும், படங்கள் வரையப்பட்டு பதிக்கப்பட்ட ஓடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய வடிவங்களுக்கு முகாலயக் கட்டங்கள் பெயர் பெற்றவையாகும்.
3. சூர் வம்சத்து அரசர்கள், தில்லியில் புராணகிலா, பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் கட்டிய ஷெர்ஷா, இஸ்லாம் ஷா ஆகியோர் கண்களைக் கவரும் கட்டடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
4. அக்பர் ஆட்சிக் காலத்தில் ஹூமாயூனின் கல்லறை உயர்த்தப்பட்ட தளத்தின் மீது வைக்கப்பட்டது.
5. சுற்றிலும் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
6. பாரசீகக் கட்டடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கலைஞர்களால் கட்டப்பட்ட இக்கல்லறை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கு முன்மாதிரியைத் திகழ்ந்தது.
7. மணற்கற்பாறைகளால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டை ரஜபுத்திர பாணிகளை இணைத்துக் கட்டப்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது.
8. பதேப்பூர் சிக்ரியின் மலைப்பூட்டும் வாயிற் பகுதியும், அக்பர் சிகப்புநிற மற்றும் பளிங்குக் கற்களால் கட்டிய புலந்தர்வாஸாவும் நேர்த்தியான கட்டடக்கலையில் முகலாயரின் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.
9. தாஜ்மஹால், மோதிமசூதி, ஜும்மா மசூதி , செங்கோட்டை, பாதுஷாகி மசூதி, ரபீயா உத்தௌராணியின் பளிங்கிலான கல்லறையும் கட்டப்பட்டது முகலாயர் கால சிறப்பாகும்.
10. திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால், ஹூரம்ஹால் போன்ற பிரமிப்பூட்டும் கட்டங்களால் சூழப்பட்டுள்ள செங்கோட்டை ஷாஜகான் காலத்து கட்டடக்கலைத் திறன்களைப் பிரதிபலிக்கின்றன.
35.
(i) இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையுமே 1833 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் வலியுறுத்தியது.
(ii) ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை (Rhuggee) சடங்கு முறையாக கொள்ளையடிப்பதையும் கொலை செய்வதையும் வழக்கமாகத் கொண்டிருந்தவர்கள்)அழிக்கவும் சதி முறையை ஒழிக்கவும் , கல்வி மேம்பாட்டுக்காகப் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்கப் பாடுபட்டார்.
(iii) கல்கத்தா மருத்தவக் கல்லூரியை 1835 இல் துவக்கினார்.இக்கல்லூரியின் மாண்வர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844 ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பபட்டர்கள்.
(iv) 1845 இல் பம்பாயில் கிராண்ட் மருத்தவக் கல்லூரி நிறுவப்பட்டது.தாம்சன் பொறியியல் கல்லூரி 1947 ஆம் ஆண்டு ரூர்க்கியில் தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் 1849 இல் பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது.
(v) மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக 1835 ஆம் ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார்.அவர் கல்விக்குழுமத்தின் உள்நாட்டுக் கல்வி மீது மதிப்பிருக்கவில்லை.
(vii) மெக்காலே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்துப் பரிந்துரைத்தால் அரசு ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.
36.
1. சிவாஜியின் நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார். ஜாகிர் வழங்குவதையும் மரபு வழியாகச் செய்யப்படும் நியமனங்களையும் அவர் ஊக்கப்படுத்தவில்லை. படை வீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது.
2.காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை , ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
3. கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரிய போர் முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
4.ரெஜிமண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாப்படை பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்) தலைமை வகித்தார்.
5. ஒவ்வொரு படைப்பிரிவிலும் 25 குதிரைப் படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையான தகுதியில் ஹவில்தார் தலைமையின் கீழ் செயல்பட்டனர். ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்தார் செயல்பட்டனர். பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார்.
6. சாரிநெளத் குதிரைப்படையின் தலைமைத் தளபதி ஆவார்.
7.ஒவ்வொரு குதிரைப் படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பார்கிர்கள் என்றும், தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
8.இது தவிர நீர் கொண்டு செல்லலும் குதிரைப் பரட்டை வீரர்களும், லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.
37.
(1) ஊரார்
1. வேளாண் குடியிருப்புகளால் நிறைந்த கிராமப்பகுதி ஊர் எனப்பட்டது. இங்குள்ள நில உடமையாளர்கள் 'ஊரார்' எனப்படும் நிர்வாகப் பிரதிநிதியாகச் செயல்பட்டனர்.
2. கோயில் நிர்வாகம், குளங்களை பராமரித்தல், குளத்து நீரை மக்களின் தேவைக்கு வழங்குதல் வரிவசூல், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, அரசரின் கட்டளைகளை நிறைவேற்றுதல் போன்ற நிர்வாகப் பொறுப்புகளை இவர்கள் கவனித்தனர்.
(2) சபையார்
1. பிரம்மதேயம் எனப்படும் பிராமணர் குடியிருப்பின் மையமாக விளங்கிடும் கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களை நிர்வாகிப்பது சபையின் முக்கிய பணியாகும்.
2. மேலும் கோயில் நிலங்களில் காணப்படும் குளங்களை பராமரித்தல் மற்றும் நதி, நீதி, நிர்வாகம் சார்ந்த பணிகளையும் சபையார் மேற்கொண்டனர்.
(3) நகரத்தார்
1. வணிகர்களின் குடியிருப்பு பகுதி நகரம் எனப்பட்டது. சிறந்த கைவினைஞர்கள் இங்கு வசித்தனர்.
2. இதன் பிரதிநிதிகள் 'நகரத்தார்' எனப்பட்டனர்.
3. கோவில்களுக்கு நிதி உதவி வழங்குவதிலும் அதன் நிர்வாகத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். உள்நாட்டு மற்றும் கடல் கடந்த வாணிபத்தில் பெரும் பங்கு வகித்தனர். பட்டு, பீங்கான், கற்பூரம், கிராம்பு, சந்தனக் கட்டை, ஏலக்காய் போன்றவை முக்கிய வாணிபம் பொருட்களாகும்.
(4) நாட்டார்
1. உள்ளாட்சி அமைப்பின் மிக முக்கிய பொறுப்பு வகித்தோர் 'நாட்டார்' ஆவர். அரச கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக செயல்பட்டனர்.
2. அரசுக்கான நிதி, நீதி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டனர். வரி வசூலித்தல் முக்கியப் பொறுப்புகளாகும்.
3. மரியாதை செலுத்தும் வகையில் அரசுடையான் (நில உரிமையாளர்) அரையன் (வழி நடத்துவோர்) கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.
38.
அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீதுபடையெடுத்து பஞ்சாப் பகுதியை கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்திய தொடர்பு தொடங்கியது. அலெக்சாண்டருக்குப்பின் அவரது தளபதிகளில் ஒருவரான செல்யூகஸ் நிகேடர் இந்தியாவின் சிந்து பகுதி வரை ஆட்சி செய்தார்.
பின்னர் இந்தோ - கிரேக்க அரசர்களின் முக்கியமானவர்கள் "டெமெட்ரியஸ்", "மினான்ட்ர்", "ஆண்டியோல் சைடஸ்" போன்றோர் எழுச்சி பெற்றனர்.
நாணயங்கள்:
இந்தோ - கிரேக்க அரசர்களின் தனிச் சிறப்பு நேர்த்திமிக்க நாணயங்களை வெளியிடுவது ஆகும். மீனாள்டரின் நாணயங்கள் இந்தியாவில் உத்திரபிரதேசம் வரை கிடைத்துள்ளது. இதிலிருந்து இந்தோ - கிரேக்க உறவு எவ்விதம் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நினைவுச் சின்னங்கள்:
பாடலிபுத்திரத்தில் உற்ற நினைவுச் சின்னங்கள் இந்தோ - கிரேக்க கலவை பிரதிபலிக்கின்றன. மேலும் மௌரிய பேரரசின் விரிவான நிர்வாக அமைப்பு கிரேக்கர்களுடைய நிர்வாக அமைப்பை ஒத்து இருந்தன.
மேற்கு இந்தியாவில் இந்தோ - கிரேக்க அரசாட்சிகள் தோன்றியது ஒரு மாறுபட்ட பண்பாட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டிடக்கலையின் தனித்தன்மை கொண்ட போக்கை ஏற்படுத்தியது.
அசோகர் காலம்:
அசோகர் காலத்தில் ஏற்பட்ட மௌரிய பேரரசின் விரிவாக்கம் ஆப்கானிஸ்தான் வரை இருந்தது. இதனால் மேற்கே எகிப்து வரை முறையான வாணிபம் நடைபெறுவதற்கு உதவி புரிந்தது.
தரைவழி வணிகமானது வடமேற்கு ஆப்கானில் வழியாக நடைபெற்றது.
ஏற்றுமதி:
இந்தியாவிலிருந்து தந்தம், ஆமை ஓடுகள், முத்துக்கள், அவுரி, விளாமிச்சை, வேர்த்தைலம், தாளிசப்த்ரி மற்றும் அரியவகை மரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இவ்வாறாக இந்தோ - கிரேக்க வணிகம், பண்பாடு வலுப்படுத்தப்பட்டது.
39.
முகமது பின் துக்ளக் இறந்த போது அவரது மகன் குழந்தையாக இருந்ததால் பெரோஸ் துக்ளக் ஆட்சி பொறுப்பை பெற்றுக் கொண்டார். இவரது ஆட்சியைப் பற்றி ஆராய்வோம்.
பிரபுக்களுடன் சமரசக் கொள்கை:
(i) பிரபுக்கள் வகுப்பாரிடமும், மதத்தலைவர்களிடமும் பெரோஸ் துக்ளக் சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
(ii) பிரிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
(iii) அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையே ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
(iv) பல வரிகளை குறைத்தனர். அதே நேரத்தில் அரசு நிதி வீணாக செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார்.
அடிமைகள் நலத்துறை:
(i) அடிமைகள் குறித்து ஃபெரோஸாக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது.
(ii) முந்திய ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார்.
(iii) அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத் துறையை உருவாக்கினார்.
(iv) 1,80,000 அடிமைகளின் நல் வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது.
(v) கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில் கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
போர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின் கொள்கை:
(i) ஃபெரோஸ் துக்ளக் போர்களை விரும்பவில்லை. ஆனால் கிளர்ச்சிகளை வெற்றிகரமாக ஒடுக்கினார்.
(ii) அவரது காலத்திய ஒரே பெரிய படையெடுப்பு 1362ல் சிந்துவின் மீது படையெடுப்பு எதிரிகளை வீழ்த்தி வெற்றி கண்டார்.
(iii) இவரது காலத்தில் நடைபெற்ற இரண்டு மங்கோலியத் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
மதக் கொள்கை:
(i) வைதீக இசுலாமை ஆதரித்தார். தமது அரசை இசுலாமிய அரசாக அறிவித்தார்.
(ii) மத விரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்.
(iii) இசுலாமியர் அல்லாதவருக்கு 'ஜிஸியா' என்றும் வரியை விதித்தார்.
(iv) புதிய இந்துக் கோயில்கள் கட்டுவதை தடைசெய்யவில்லை.
(v) இசுலாமியர் -அல்லாதோர் உள்படக் கற்றறிந்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார்.
பொதுப்பணிகள்:
(i) பல பாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார்.
(ii) சட்லெஜ் நதியிலிருந்து ஹன்சிக்கு வெட்டிய கால்வாயும்,
(iii) யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப்பணி வளர்ச்சிக் கொள்கையை சுட்டுகின்றன.
இவரது ஆட்சி பல வகையில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், பிரபுக்களுடன் மேற்கொண்ட சமரசக் கொள்கை பரம்பரை உரிமை, பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் ஆகியவை ஃபெரோஸ் துக்ளக் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச் சென்றது.
40.
இராட்டிரகூட முதல் மன்னர் தந்தி கர்க்கர் இவருக்குப்பின் முதலாம் கிருஷ்ணர் மூன்றாம் கோவிந்தன் அமோகவர்ஷர் போன்ற சிறந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களது கால இலக்கியம், கலை கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்ததாகும்.
இலக்கியம்:
இவர்களது காலத்தில் நிலையம் மேம்பட்டு இருந்தது.
i) முதலாம் அமோகவர்ஷன் "கவிராஜா மங்களம்" என்னும் கன்னட நூலை இயற்றினார். இது கன்னடத்தில் இயற்றப்பட்ட மொழியியல் நூலாகும்.
ii) ஜுனசேனர் என்பவர் சமணர்களின் ஆதிபுராணத்தை இயற்றினார்
iii) மூன்றாம் கிருஷ்ணர் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட
கவிச்சக்கரவத்தி பொன்னா
ஆதிகவிபம்பா
கவிச்சக்கரவர்த்தி ரன்னா
ஆகியோர்களை ஆதரித்தார்
கட்டிடகலை:
ராஷ்டிர கூடர்கள் கட்டிடக் கலைக்கும் சிற்பக்கலைக்கு வியத்தகு பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, எலிஃபண்டா குடைவரைக் கோயில்கள் இவர்களது கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
எல்லோரா:
i) எல்லோரா குடைவரைக் கோயில் சமண, பௌத்த மற்றும் இந்து மத சின்னங்களுக்கான கலை நுட்பத்தை கொண்டுள்ளது.
ii) இங்கு முதலாம் அமோக வர்ஷர் கட்டிய ஐந்து சமணக்குகைக் கோயில்கள் உள்ளன.
iii) மேலும் இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாச நாதர் கோயில் நம் கண்ணைக் கவரும் அமைப்பாகும்.
எலிபண்டா:
i) எலிபண்டாவின் பிரதானக் கோயில் எல்லோரா கோயிலை விட சிறந்ததாகும்
ii) இங்குள்ள "மகேஷுமூர்த்தியின்" மூன்று முகங்கள் கொண்ட 25 ஆதி உயரமுள்ள மார்பளவு சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
இது போன்று இன்னும் ஏராளமாக உள்ளது. இவ்வாறு இராஷ்டிரக் கூடர்கள் கட்டிடக் கலைக்கு செய்த தொண்டு அளவிட முடியாததாகும்.
41.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
42.
இந்தியாவில் பெளத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:-
1. சமயப் பிரிவினை:
ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பெளத்தத்தின் உண்மைத் தன்மையை இழக்கச் செய்தன.
2. மொழி மாற்றம்:
பாலி, பிராஹிருதம் மொழியில் பரப்பப்பட்டு வந்த பெளத்தமதச் செய்திகள் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழியில் எடுத்துச் செல்லப்பட்டன. இது பாமர மக்களுக்கும் பெளத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
3. அரசு ஆதரவை இழத்தல்:
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப்பிறகு பெளத்தம் அரசு ஆதரவை இழந்தது. வேத மதம் அரசு ஆதரவை பெற்றது. பெளத்த சமயம் வீழ்ச்சிக்கு இது வழி வகுத்தது.
4. வட இந்தியாவில் பக்தி இயக்கம்:
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினார். இதனால் பெளத்தமதவளர்ச்சி பாதித்தது.
5. ஹீணர்கள் படையெடுப்பு:
ஹீண ஆட்சியாளர்களான தோராமானர் மிகுரகுலர் ஆகியோர் பெளத்தர்களின் மீது வெறுப்புற்றனர். வடமேற்கு இந்தியாவில் பெளத்த மதத்தினரை அழித்தனர்.
6. இராஜபுத்திரர்களின் எதிர்ப்பு:
இராஜபுத்திர மன்னர்கள் வேத மதத்தின் தீவர ஆதரவாளர்கள். ஆதலால் பெளத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொள்வதிலும் ஈடுபட்டனர். இத்துடன் பெளத்த மதம் காரணமாயிற்று.
7. அயலவர் படையெடுப்பு:
இறுதியாக அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பெளத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல வைத்தனர்.
இதன் விளைவாக, பெளத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.
43.
1. மனிதர்களின் அறிவாற்றல் திறன்களின் மேம்பட்டத்தன்மையை மேல் பழங்கற்கால மக்களிடம் காணமுடிகிறது.
2. கல்லில் வெட்டுக் கருவிகள் செய்யும் தொழிற் கூடங்கள் இக்கால கட்டத்தில் வளர்ச்சி பெற்றன.
3. கருவிகளுக்கான தொழில் நுட்பத்தில் புதுமையை புகுத்தினர்.
4. கற் கருவிகள், கத்தி, வாள்போல வெட்டுவாய் கொண்டவையாகவும் எலும்பால் ஆனவையாகவும் அமைந்திருந்தன.
5. மேல் பழங்கற்காலத்தில் சிறுகற்களில் செய்யப்பட்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
6. இவற்றை உருவாக்க சிலிக்கான் செறிந்த மூலப்பொருட்கள் வெவ்வேறு வகைகளில் பய்னபடுத்தப்பட்டன.
44.
(i) வேதகால அரசு முறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும்.
(ii) இனக்குழுவின் தலைவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) எனப்பட்டார்.
(iii) ராஜன் பல தூண்களைக் கொண்ட அரண்மனையில் வாழ்ந்தார். மதக்குருமார்களுக்கு கால்நடைகளையும், தேர்களையும், தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினார்.
(iv) ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவரானார்.
(v) அரசருடைய முக்கிய பணி இனக்குழுக்களை காப்பதாகும். மக்களின் சொத்துக்களை பாதுகாத்தார்.
(vi) நிலப்பரப்பின் மீதம், மக்களின் மீதும் அதிகாரம் இருந்தது.
(vii) சாதாரணமாக மக்களோடு நெருக்கமாய் இருந்தார். அவர்களோடு பொதுவில் உணவருந்தினார்.
நிர்வாகம்:
(i) வேத காலத்தில் சபா, சமிதி, விததா, கணா என்ற அமைப்புகள் காணப்பட்டுள்ளன.
(ii) சபா என்பது மூத்தோர் அல்லது செல்வார்கள் பங்கேற்ற அமைப்பு.
(iii) சமிதி என்பது மக்கள் கூடும் இடமாகும். விததா என்பது இணைக்க குழுக்களின் அமைப்பாகும். ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
(iv) அரசர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு சபா, சமிதி ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினார்.
(v) மதகுருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து தங்கள் செல்வாக்கைப் பெற்றனர்.
(vi) சேனானி என்பவர் படைத்தலைவர் ஆவார். 'பலி' எனப்பட்ட வரைமுறை தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தி பெறப்பட்டது.
(vii) நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர்களான குலபா அல்லது கிராமணி என்பவர்களுக்கு இவர் உதவி செய்வர். கிராமங்களின் தலைவரும் கிராமணியே ஆவார்.
45.
இலக்கியச் சான்றுகள்:
1. சங்கநூல்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும்.
2. பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம்.
3. ஆந்திரர் / சாதவாகனர் வம்சாவளி வரலாற்றினைக் குறிப்பிடும் புராணங்கள்.
4. மகாவம்வம் முதலான பௌத்த வரலாற்று நூல்கள்.
5. சாதவாகன அரசர் ஹால பிராகிருத மொழியில் எழுதிய காதாசப்தசதி.
46.
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்
1. ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
2. பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
3. பெரிய கிராமங்கள் தோன்றின.
4. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
5. நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமான 'புதிய கற்காலப் புரட்சி' எனப்படுகின்றன.
47.
விஜயநகரப் பேரரசின் கீழ் இயங்கி வந்த பாளையக்காரர்களில் நெற்கட்டும்செவல் பகுதியின் புலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சியின் கட்டபொம்மன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்க்கு கப்பம்கட்ட மறுக்கவே அவர்கள் மீது போர்தொடுத்து கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாளையக்கார படை வீரர்கள்: கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரை, சிவகங்கையின் மருது சகோதர்கள் ஆகியோர் 1801 ம் ஆண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதுவே 1801 ம் ஆண்டு கிளர்ச்சி ஆகும்.
48.
(i) கன்னியாகுமரி மாவட்டத்தில் சாஸ்தா கோவில் (சாமிதோப்பு) எனும் சிறிய ஊரில் 1809-ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். முத்துக்குட்டி எனும் இயற்பெயர் கொண்டவர்.
(ii) திண்ணைப் பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களை கற்றார்.
(iii) தனது போதனைகளில் சாதிமுறையையும், அதிக வரி வசூல் முறையையும் கண்டித்தார்.
(iv) ஒடுக்கப்பட்ட மக்களிடையே மிகவும் பிரபலமான அவரை 'ஐயா வழி' என்ற நடைமுறையில் மக்கள் பின்பற்றினார்.
(v) சமத்துவச் சங்கத்தின் மூலம் பல சாதிகளை இணைத்து சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.
49.
1. கர்கானா என்பவை தொழிற்கூடங்களாகும், கர்கானா என்னும் தொழிற்கூடங்களின் விலை உயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
2. அரச குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை அரண்மனையைச் சார்ந்த கர்கானாக்கள் உற்பத்தி செய்தன.
3. கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி செய்த ஆடம்பரப் பொருட்களை வர்த்தகர்கள் உள்ளூர மற்றும் தொலைதூரச் சந்தைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
50.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி உண்மையான முழு அதிகாரத்தையும் தன் வசம் தக்க வைத்துக் கொண்டு வெற்று நிர்வாகச் சுமையை மட்டுமே நவாபிடம் விட்டு வைத்தது.இத்தகைய நிர்வாக '' இரட்டைஆட்சி முறையே '' ஆகும்
51.
(i) சோழ அரசர்களில் சிறப்பானவர் முதலாம் இராஜராஜன் ஆவார்.
(ii) இவரது கடல் வழி படையெடுப்புகள் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த பெரிதும் உதவியது.
(iii) மேற்கு கடற்கரை சோழர் கட்டுப்பாட்டில் வந்தது.
(iv) இலங்கை வெற்றி மற்றும் மாலத்தீவுகளின் வெற்றி மிக முக்கியமானது.
52.
i) கிரேக்கர்களின் படையெடுப்பு பரஸ்பரஸ் பண்பாட்டு தாக்கம் ஏற்படுத்துவதற்கு இட்டுச் சென்றது.
ii) பாடபுத்தரத்தில் உள்ள நினைவு சின்னங்களில் கிரேக்க பண்பாட்டு தாக்கம் தெரிந்தது.
iii) மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்பு கிரேக்க நிர்வாக அமைப்பு முறையை ஒத்திருக்கிறது.
iv) மேற்கு இந்தியாவில் இந்தோ - கிரேக்க அரசாட்சியில் தோன்றியது. இந்திய வரலாற்றில் மாறுபட்ட பண்பாட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியது.
v) மேலும் மாறுபட்ட தனித்தன்மை கொண்ட களை சிந்தனையும், போக்கையும் இந்தியாவில் ஏற்படுத்தியது.
53.
i) அர்த்தசாஸ்திரம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் விற்கப்பட்ட பொருள்களின் விவசாயப் பொருட்களின் பட்டியலைத் தருகிறது.
ii) இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சீனா, இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் வந்த துணி கம்பளி, பட்டு, வாசனை மரக்கட்டை, விலங்குத்தோல், நவரத்தினக் கற்கள் அடங்கும்.
iii) அவுரி (சாயம்), தந்தம்? ஆமை ஓடு, முத்து, வாசனை திரவியங்கள், அபூர்வ மரக்கட்டைகள் ஆகியன எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
54.
(i) சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
(ii) விஜயபத்திரிக்கா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.
(iii) அரசிகள் நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை.
(iv) அவர்கள் பல கோயில்களை எழுப்பினார்கள். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர்.
(v) கோயில்களுக்கு கொடை வழங்கினர்.
(vi) ராஜசிம்மனின் அரசி ரங்க பதாகாவின் உருவம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards