11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
Higher Secondary First Year Model Exam
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
முரளிக் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது _________________
ஆள்சார் கணக்கு
சொத்துக் கணக்கு
பெயரளவுக்கு கணக்கு
இவை எதுவுமில்லை
2.
பழைய சீருந்தை புதுப்பிக்கச் செலவு செய்தது_______________
நீள்பயன் வருவாயினச் செலவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
முதலின வரவு
3.
கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே ________________ எனப்படும்.
விடுபிழை
பகுதி விடுபிழை
முழுவிடுபிழை
இருமுறை பதிந்தபிழை
4.
பேரேட்டுக் கணக்குகளின் சரித்தன்மையை உறுதி செய்ய,அதன் இருப்புகளைக் கொண்டு தயாரிப்பது ஆகும்.
இருப்பாய்வு
இருப்பு நிலைக் குறிப்பு
குறிப்பேடு
பேரேடு
5.
கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________.
உரிமையாளர்
பணியாளர்கள்
பயனாளிகள்
இவை எதுவுமில்லை
6.
31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________.
ரூ 5,40,000
ரூ 40,000
ரூ 10,000
ரூ 5,10,000
7.
நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.
கணக்கு
நடவடிக்கை
சான்றுச்சீட்டு
இடாப்பு
8.
முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.
இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
மேற்கண்ட இரண்டிலும்
மேற்கண்ட எதுவுமில்லை
9.
10.
இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்
கொள்முதலோடு கூட்டப்படும்
கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்
முதலோடு கூட்டப்படும்
முதலிலிருந்து கழிக்கப்படும்
11.
வங்கி வைப்புகள் மீதான வட்டி
முதலின வரவு
வருவாயின வரவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
12.
தேய்மான விகிதமானது சமமாக இருக்கும் போது நேர்கோட்டு முறைப்படி உள்ள தேயமானத் தொகை மற்றும் குறைந்து செல் இருப்பு முறையுடன் ஒப்பிடும் போது
எல்லா ஆண்டுகளிலும் சமமாசமமாக இருக்கும்.
முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும்
முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் குறைவாகவும் இருக்கும்.
முதலாண்டில் குறைவாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் சமமாகவும் இருக்கும்.
13.
அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
கொள்ள்முதல் கணக்கு
அறைகலன் கணக்கு
அதியமான் கணக்கு
இவை ஏதுமில்லை
14.
பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது
வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
16.
பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்
குறிப்பேடு
நாளேடு
இருப்பாய்வு
இருப்பு நிலைக் குறிப்பு
17.
பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
கூட்டுதல்
எடுத்தெழுதுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்புக் கட்டுதல்
18.
இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு
முக்கியத்துவ மரபு
பண மதிப்பீட்டுக் கருத்து
முன்னெச்சரிக்கை மரபு
நிகழ்வு தீர்வு / கருத்து
19.
ரொக்க ஏடு பதிவு செய்வது
அனைத்து ரொக்கப் பெறுதல்கள்
அனைத்து ரொக்கச் செலுத்தல்கள்
(அ), (ஆ) ஆகிய இரண்டும்
அனைத்து கடன் நடவடிக்கைகள்
20.
பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது
நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
21.
சான்றுச்சீட்டு என்றால் என்ன?
22.
கணக்கியல் காலக் கருத்து - குறிப்பு வரைக.
23.
நிலைச் சொத்துகள் என்றால் என்ன?
24.
25.
இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளை திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்:
(அ) விற்பனை ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) ரூ.500 கூலி செலுத்தியது தவறாக இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
26.
முதலினச் செலவு என்றால் என்ன?
27.
ஒரு நிறுவனம், 1.1.2017 அன்று ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் 10 ஆண்டுகள், மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 10,000. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அதன் தேய்மானத் தொகையை நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவும்.
28.
கொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன?
29.
பெயரளவு கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக.
30.
முப்பத்தி ரொக்க ஏடு என்றால் என்ன?
31.
பொறுப்புகளின் வகைகளை எழுதுக..
32.
கணக்கியல் சுழலின் படிநிலைகளை விளக்குக.
33.
இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?
34.
பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பைக் கண்டறிக
| விவரம் | ரூ | |
|---|---|---|
| (i) | வங்கி அறிக்கையின் படி இருப்பு | 6,000 |
| (ii) | டிசம்பர் 28, 2017 அன்று வங்கியில் செலுத்திய காச�ோலை இன்னும் வரவு வைக்கப்பட்டவில் | 2,000 |
| (iii) | டிசம்பர் 20, 2017 அன்று விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தபடவில்லை | 3,000 |
| (iv) | வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 4,000 |
| (v) | கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது | 1,000 |
| (vi) | வங்கியால் தவறுதலாலாக வரவு வைக்கப்பட்ட தொகை | 500 |
35.
நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் கணக்கிடுதலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?
36.
அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்
37.
38.
குறிப்பேட்டில் பதிவு செய்யும் படிநிலைகளை விவரி.
39.
பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.
40.
ரொக்க ஏட்டில் தள்ளுபடியைப் பதிவு செய்வது பற்றி குறிப்பு வரைக
41.
கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.
| அ] | ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது | ரூ 25,000 |
| ஆ] | சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது | ரூ 20,000 |
| இ] | அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது | ரூ 25,000 |
| ஈ] | ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது | ரூ 5,000 |
42.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
[அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
[ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
[ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
[உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
43.
கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விபரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்தம் இலாபம் | 50,000 | வட்டி பெற்றது | 2,000 |
| அலுவலக வாடகை | 10,000 | தள்ளுபடி பெற்றது | 3,000 |
| அலுவலக சொத்துகள் மீதான தேய்மானம் | 8,000 | வெளிதூக்குக் கூலி | 2,500 |
| தள்ளுபடி கொடுத்தது | 12,000 | அலுவலக கட்டடம் மீதான காப்பீடு | 3,500 |
| விளம்பரம் | 4,000 | பொதுச் செலவுகள் | 3,000 |
| தணிக்கைக் கட்டணம் | 1,000 | உள் ஏற்றிச் செல் செலவு | 1,000 |
44.
கீழ்க்கண்ட விவரங்கள் இருபாய்விலிருந்து பெறப்பட்டபெறப்பட்டன
| விவரம் | பற்று ரூ | வரவு ரூ |
|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 50,000 | |
| ஐயக்கடன் ஒதுக்கு | 5,000 | |
| வாராக்கடன் | 3,000 |
கூடுதல் தகவல்கள்:
(அ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000
(ஆ) பற்பல கடனாளிகள் மீது 10% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தந்து இவ்விவரம் எவ்வாறு இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் தோன்றும் எனக் காட்டவும்.
45.
டெக் நிறுவனத்தின் 2016-2017 க்கான மொத்தத்த விற்பனைத் தொகை (பொருட்கள் வாரியாக) கீழே கொக்கப்பட்டுள்ளன
| Product | Sales ரூ |
|---|---|
| Toothpaste | 22,000 |
| Toothbrush | 11,000 |
| Hair Oil | 9,000 |
| Shampoo | 13,000 |
| Toilet Soap | 9500 |
| Bath Soap | 6500 |
(அ) தரவுகளை தூண் விளக்கப்படத்தில் வழங்கவும்.
(ஆ) தூண் வரைபடத்திலிருந்து வரி விளக்கப்படத்திற்கு மாற்றவும்
46.
ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தி மற்றும் வங்கி அறிக்கையிலுள்ள பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 2017 அக்டோபர் 31 -ஆம் நாளன்றைய வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க
| நாள் | விவரம் | ரூ | நாள் | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2017 அக். 1 | இருப்பு கீ/கொ | 20,525 | 2017 அக். 8 |
கமலா க/கு | 12,000 |
| 18 | ராம் க/கு | 6,943 | 26 | மகேஷ் க/கு | 9,740 |
| 19 | விற்பனை க/கு (ரவி) | 450 | 28 | மாலா க/கு | 11,780 |
| 20 | கழிவு க/கு (கலா) | 200 | 30 | சம்பளம் க/கு | 720 |
| 20 | நிர்மலா க/கு | 7,810 | 31 | இருப்பு கீ/இ | 1,688 |
| 35.928 | 35,928 | ||||
| நவ. 1 | இருப்பு கீ/கொ | 1,688 |
| நாள் | விவரம் | பற்று எடுப்புகள் | வரவு வைப்புகள் | இருப்பு பற்று / வரவு |
|---|---|---|---|---|
| 1.10.17 | இருப்பு கீ/கொ | 20525 வ | ||
| 9.10.17 | கமலா | 12,000 | 8525 வ | |
| 19.10.17 | ராம் | 6943 | 15468 வ | |
| 25.10.17 | ரவி | 450 | 15918 வ | |
| 26.10.17 | மகேஷ் | 9,740 | 6178 வ | |
| 27.10.17 | கலா | 200 | 6378 வ | |
| 28.10.17 | ராஜன் (சம்பளம்) | 720 | 5658 வ | |
| 30.10.17 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | 25658 வ | |
| முதலீடுகள் மீதான வட்டி | 1,820 | 27478 வ | ||
| 31.10.17 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 4,000 | 23478 வ |
47.
பின்வரும் பிழைகளை கணக்காளர் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறிந்தார். அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரூ.3,000-த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) பெற்றெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) தமிழ்ச்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) ரூ.300-க்கு பழைய அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(உ) செளந்தரபாண்டியனிடமிருந்து கடனுக்கு ரூ.800 மதிப்புள்ள சரக்கு வாங்கியது
ஏடுகளில் பதிவுசெய்யப்படவில்லை
48.
இலக்குமி போக்குவரத்து நிறுவனம், அக்டோபர் 1, 2014 அன்று ரூ. 8,00,000க்கு கனரக வாகனம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 15% தேய்மானம் நீக்கவேண்டும். 31 மார்ச் 2017ல் அக்கனரக வாகனம் ரூ. 5,00,000க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. விற்ற வாகனத்திற்கான இலாபம் அல்லது நட்டத்தினைக் கணக்கிடவும்.
49.
பின்வரும் செலவுகளை முதலினம் அல்லது வருவாயினம் எனக் கூறவும்.
(i) கட்டடம் கட்டியதற்கான தொகை ரூ 10,00,000.
(ii) அறைகலன் பழுதுபார்த்தது ரூ 50,000.
(iii) கட்டடத்தை வெள்ளை அடிப்பதற்கானச் செலவு ரூ 80,000.
(iv) பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டியது ரூ 4,00,000.
50.
கீழ்கண்ட நடவடிக்கைகளைக் கொண்டு குணசேகரன் அவர்களின் முப்பத்தி ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.
| 2017 ஜன | ரூ | |
| 1 | ரொக்க இருப்பு | 50,000 |
| 1 | வங்கி இருப்பு | 90,000 |
| 2 | ரோகினி என்பவருக்கு கடனுக்குச் சரக்கு விற்றது | 15,000 |
| 5 | ரோகினியிடமிருந்து ரூ 14,500 க்கான காசோலைப் பெறப்பட்டு அவர் கணக்கு தீர்க்கப்பட்டது. அக்காசோலை உடனே வங்கியில் செலுத்தப்பட்டது |
|
| 6 | ரொக்கம் வைப்பு இயந்திரத்தின் மூலம் வங்கியில் பணம் செலுத்தியது | 18,000 |
| 7 | ஸ்ரீதருக்கு விற்ற சரக்கு ரூ12,000. அவர் ரூ 11,800 எடுப்பு அட்டை மூலம் செலுத்தி கணக்கு தீர்த்துக்கொண்டார். அவர் பெற்ற தள்ளுபடி ரூ 200. |
|
| 10 | வங்கியிலிருந்து அலுவலகச் செலவுகளுக்காக பணம் எடுத்தது | 2,000 |
| 12 | ராஜா என்பவரிடமிருந்து சரக்சரக்கு வாங்கியது ரூ10,000 ரூ 9,800 கடன் அட்டை மூலம் செலுத்தப்பட்டு கணக்குத் தீர்க்கப்பட்டது. அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி ரூ 200. |
|
| 14 | நதியா தேசிய மின்னணு பணப்பணப் பரிமாற்றம்மூலம் அனுப்பியது | 18,000 |
| 27 | ரோகினியின் காசோலை மறுக்கப்பட்டது. |
51.
52.
பின்வரும் நடவடிக்கைகளை எழுது பொருள் வியாபாரம் செய்யும் இராம் நிறுவனத்தின் விற்பனை ஏட்டில் பதிவு செய்க.
| 2017 | |
| ஜனவரி 1 | அன்புவிற்கு கடனுக்கு விற்றது ரீம் ஒன்று ரூ. 150 வீதம் 20 ரீம்கள் வெள்ளைத்தாள். |
| ஜனவரி 2 | ஜெகதீஷ் நிறுவனத்திற்கு ஒரு டஜன் ரூ. 360 வீதம் 6 டஜன்கள் எழுதுகோல் கடனுக்கு விற்றது. |
| ஜனவரி 10 | பழைய செய்தித்தாளை ரொக்கத்திற்கு விற்றது ரூ. 620 |
| ஜனவரி 15 | இளங்கோவிற்கு கடனுக்கு விற்றது ஒன்று ரூ. 170 வீதம் 10 வரைவு அட்டைகள் |
| ஜனவரி 20 | கனி விற்பனையகத்திற்கு ஒன்று ரூ. 1,520 வீதம் 4 எழுது மேசைகளை ரொக்கத்திற்கு விற்றது |
53.
கார்த்திக் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளிலிருந்து கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயாரிக்கவும்.
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| வாடகை மற்றும் வரிகள் |
5,000 | வாடகை | 6,000 |
| அளித்த தள்ளுபடி | 350 | பொதுச் செலவுகள் | 3,100 |
| முதல் | 10,000 | சட்டச் செலவுகள் | 2,000 |
| காப்பீட்டு முனைமம் | 4,000 | கொள்முதல் | 40,000 |
| எடுப்புகள் | 5,000 | விற்பனை | 55,350 |
54.
வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.
| (i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள் | ரூ 20,000 |
| (ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு | ரூ 5,000 |
| (iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது | ரூ 2,000 |
| (iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு | ரூ 500 |
| (v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது | ரூ 1,500 |
| (vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது | ரூ 1,000 |
| (vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது | ரூ 100 |
1.
(a)
ஆள்சார் கணக்கு
2.
(c)
வருவாயினச் செலவு
3.
(a)
விடுபிழை
4.
(a)
இருப்பாய்வு
5.
(c)
பயனாளிகள்
6.
(c)
ரூ 10,000
7.
(c)
சான்றுச்சீட்டு
8.
(c)
மேற்கண்ட இரண்டிலும்
9.
(d)
10.
(d)
முதலிலிருந்து கழிக்கப்படும்
11.
(b)
வருவாயின வரவு
12.
(b)
முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும்
13.
(c)
அதியமான் கணக்கு
14.
(d)
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
(b)
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
16.
(c)
இருப்பாய்வு
17.
(b)
எடுத்தெழுதுதல்
18.
(c)
முன்னெச்சரிக்கை மரபு
19.
(c)
(அ), (ஆ) ஆகிய இரண்டும்
20.
(d)
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
21.
1) ஒரு வணிக நடவடிக்கைக்கு ஆதாரமான எழுத்து வடிவிலான அல்லது அச்சிடப்பட்ட ஆவணம் சான்றுச் சீட்டு ஆகும்.
(2) எடுத்துக்காட்டுகள்:
ரொக்க ரசீது, இடாப்பு, வங்கிச் செலுத்துச் சீட்டு.
22.
1. கணக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தயாரிப்பதை இக்கருத்துக்கு குறிக்கிறது.
2. உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள், கடனீந்தோர், பணியாளர்கள் மற்றும் அரசு ஆகியோர் அவ்வபோது நிறுவனங்களின் செயல்திறனை அறிந்து கொள்ள ஆர்வம் கொள்வதால் கணக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொதுவாக ஒரு ஆண்டிற்கு தயாரிக்கப்பட வேண்டும்.
3. இக்கருத்து, உரிமையாளர்களுக்கு வணிகத்தின் வருமானத்தை பகிர்ந்தளிக்கவும் மற்றும் வெவ்வேறு காலங்களில் நிறுவனத்திறனை ஒப்பிட்டு பார்க்கவும், மதிப்பீடு செய்யவும் உதவுகிறது.
23.
வணிகத்தில் தொடர்ந்து பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட சொத்துகள் நிலைச் சொத்துகள் ஆகும். இவை பல வருடங்களுக்கு பயன் தரக்கூடிய சொத்துகள். உதாரணமாக, நிலம் மற்றும் கட்டடம், பொறி மற்றும் இயந்திரம், மோட்டார் வாகனங்கள், அறைகலன் முதலியன.
24.
25.
| வ.எண் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | அனாமத்துக் க/கு | ப | 1,000 | ||
| விற்பனை க/கு | 1,000 | ||||
| (விற்பனை ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டது திருத்தியது) | |||||
| ஆ | கூலி க/கு | ப | 500 | ||
| இயந்திரம் க/கு | 500 | ||||
| (ரூ.500 கூலி செலுத்தியது தவறாக எடுத்து எழுதப்பட்டது திருத்தியது) |
26.
(i) ஒரு கணக்காண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவின் பயனானது எதிர்வரும் ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கிடைக்குமானால் அச்செலவு முதலினச் செலவு ஆகும்.
(ii) இச்செலவு ஏதேனும் ஒரு நிலைச்சொத்து வாங்குவதற்கோ, வியாபார நிறுவனத்தின் இலாபம் ஈட்டும் திறனை அதிகரிப்பதற்கோ மேற்கொள்ளப்படலாம். இது திரும்பத் திரும்ப நிகழாத தன்மையுடையது.
27.

\({1,90,000-15,000\over 5}={1,75,000\over 5}=\) ரூ. 35,000
28.
1. கொள்முதல் திருப்ப ஏடு ஒரு துணை ஏடாகும். இதில், ஏற்கனவே கொள்முதல் செய்து பெறப்பட்ட சரக்குகளை, ரொக்கம் உடனடியாக பெறாமல் சரக்கு அளித்தவருக்கே திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.
2. சரக்குகள் அளித்தவருக்கே திரும்பச் செல்வதால், வெளித்திருப்பம் எனப்படுகின்றன.
3. இந்த ஏடு வெளித்திருப்ப ஏடு அல்லது வெளிச்செல் திருப்ப குறிப்பேடு என்று அழைக்கப்படுகிறது.
29.
1. செலவிற்கும் நட்டத்திற்கும் - பற்று வை.
2. வருமானத்திற்கும் ஆதாயத்திற்கும் - வரவு வை.
30.
(1) ரொக்கம், வங்கி மற்றும் தள்ளுபடி என்ற மூன்று தொகைப்பதிகளைக் கொண்டிருக்கும் ஏடு முப்பத்தி ரொக்க ஏடு ஆகும்.
(2) சாதாரண ரொக்க ஏடு மற்றும் இருபத்தி ரொக்க ஏடுகள் தயாரிக்கும் அதே முறையில்தான் இந்த ரொக்க ஏதும் தயாரிக்கப்படுகிறது.
31.
பொறுப்புகள் அல்லது உரிமையாளர் பங்குகள் வணிக நிறுவனத்தின் மீது கோரப்பட்ட உரிமைகள் ஆகும்.இவை வணிக நிறுவனம் வெளியாட்கள் (புற நிதி)மற்றும் உரிமையாளர்களுக்கு (உடமையாளர் நிதி/அக நிதி)கொடுக்க வேண்டிய தொகையை குறிக்கிறது.
பொறுப்புகள் அதன் தன்மையைப் பொறுத்து கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
(அ)நிலை அல்லது நீண்ட காலப் பொறுப்புகள்.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேலான காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டிய பொறுப்புகள் நீண்டகாலப் பொறுப்புகள் எனப்படும்.
(ஆ) நடப்பு அல்லது குறுகிய கலாப் பொறுப்புகள்
ஒரு இயக்க சுழற்சிக்குள் அல்லது ஒரு வருட காலத்திற்குள் செலுத்த எதிர்பார்க்கும் செலவுகள் நடப்பு அல்லது குறுகிய காலப் பொறுப்புகள் ஆகும்.இவற்றில் வங்கி மேல்வரைப்பற்று , கடனீந்தோர், செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு,கொடுப்பட வேண்டிய செலவுகள் முதலியன உள்ளடங்கும்.
(இ) நிகழ்வடையாப் பொறுப்புகள்
இவ்வகைப் பொறுப்புகள் இருப்புநிலைக் குறிப்பு தயாரிப்பின் போது பொறுப்புகளாக உறுதிப்படுத்தப்படாதவை ஆகும்.இவ்வகை பொறுப்புகள் நிகழாம் அல்லது நிகழாமல் இருக்கலாம்
32.
கணக்கியல் சுழலின் படிநிலைகள் பின்வருமாறு:
(i) நடவடிக்கைகளை இனம் கண்டு குறிப்பேட்டில் பதிவு செய்தல்:
(1) கணக்கியலின் முதல் படிநிலையானது வணிகத்தின் நிதி நடவடிக்கைகளை அடையாளம் காண்பதாகும்.
(2) அனைத்து பணமதிப்பிலான நடவடிக்கைகள் தோற்றப்பதிவேடுகளில் (குறிப்பேடு) பதிவு செய்யப்படுகிறது.
(ii) எடுத்தெழுதுதல் மற்றும் இருப்புக் கட்டுதல்:
(1) பதிவுகளைக் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு மாற்றுவது எடுத்தெழுதுதல் எனப்படும்.
(2) பதிவுகள் பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தப்பட்டு, பேரேட்டில் ஒவ்வொரு கணக்கிலும் எடுத்தெழுதப்படுகின்றன.
(iii) இருப்பாய்வு தயாரித்தல்:
(1) பேரேட்டு இருப்புகளின் பட்டியல் அதாவது இருப்பாய்வு தயாரித்தல், அடுத்த படிநிலையாகும்.
(2) இருப்பாய்வின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.
(iv) வியாபாரக் கணக்கு தயாரித்தல்:
(1) குறிப்பிட்ட கணக்காண்டிற்குறிய வியாபாரக் கணக்கு தயாரிப்பதே கணக்கியல் சுழலின் அடுத்த படிநிலையாகும்.
(2) அனைத்து நேரடிச் செலவுகள் மற்றும் நேரடி வருவாய்கள் வியாபாரக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றன.
(v) இலாப நட்டக் கணக்கு தயாரித்தல்:
(1) குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயார் செய்வது கணக்கியல் சுழலின் அடுத்த படிநிலையாகும்.
(2) மொத்த இலாபத்துடன் அல்லது மொத்த நட்டத்துடன் அனைத்து மறைமுக வருவாய்கள் மற்றும் மறைமுகச் செலவுகள் இலாபநட்டக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றன.
(vi) இருப்பு நிலைக்குறிப்பு தயாரித்தல்:
(1) கணக்கியல் சுழலில் இருப்புநிலைக்குறிப்பு தயார் செய்வது இறுதி படிநிலையாகும்.
(2) இருப்புநிலைக்குறிப்பு, சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் இருப்புகளைக் காட்டும் ஒரு அறிக்கை.
33.
(i) இறுதிக் கணக்குகளின் முதன்மைப் பணியானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொழிலின் உண்மையான மற்றும் நியாயமான இலாபத் தன்மை மற்றும் நிதிநிலை ஆகியவற்றை வெளிக்காட்டுவதாகும்.
(ii) இருப்பாய்வில் தோன்றக் கூடிய, ஒரு குறிப்பிட்ட கணக்கியல் காலத்தின் முழுமைக்குமான பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகளை அடிப்படையாகக் கொண்டு இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
(iii) இறுதிக்கணக்குகளை தயாரிக்கும் பொழுது முழுமையான ஒரு கணக்கியல் காலத்திற்குரிய செலவுகளையும் வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
34.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 6,000 | |
| கூட்டுக: செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படவில்லை | 2,000 | |
| கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது | 1,000 | 3,000 |
| கழிக்க: | 9,000 | |
| விடுத்த காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தப்படவில்லை | 3,000 | |
| கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்டது | 4,000 | |
| வங்கியால் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகை | 500 | 7,500 |
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 1,500 |
35.
நேர்கோட்டு தேய்மான முறையின் நன்மைகள் பின்வருமாறு:
(அ) புரிந்து கொள்வதற்கு எளிது மற்றும் சுலபம்
இம்முறையில் தேய்மானக் கணக்கீடு புரிந்துக் கொள்வதற்கு எளிமையாகவும், சுலபமாகவும் உள்ளது.
(ஆ) சமமான தேய்மான தாக்கம்
1. இம்முறையில் ஆண்டுதோறும் சமமான தேய்மானத் தொகை இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
2. ஆகையால், இலாபத்தின் மீதான தேய்மான தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் சமமாக உள்ளது.
(இ) சொத்தின் மதிப்பு முழுவதும் நீக்கப்படுகிறது
இம்முறையில், இறுதி மதிப்பு இல்லா நிலையில் சொத்தின் ஏட்டு மதிப்பானது பூஜ்ஜியத்திற்கும் அல்லது சொத்தின் பயனளிப்பு காலம் முடிவில் இறுதி மதிப்பளவிற்கும் குறைக்கப்படுகிறது.
குறைபாடுகள்
நேர்கோட்டு முறையின் குறைபாடுகள் பின்வருமாறு:
(அ) சொத்தின் உண்மை பயன்பாட்டினை எடுத்துக் கொள்வது இல்லை
1. சொத்தின் ஆரம்ப அடக்கவிலை மீது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தேய்மான விகிதம் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தேய்மானத் தொகை ஒதுக்கப்படுகிறது.
2. ஆகையால் தேய்மானம் கணக்கிடப்படும் போது சொத்தின் உண்மையான பயன்பாடு எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை.
(ஆ) வட்டி காரணியை எடுத்துக்கொள்வது இல்லை
1. சொத்திற்காக முதலீடு செய்வதால் ஏற்படும் வட்டி இழப்பை இம்முறை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை.
2. இந்தத் தொகை வணிக நிறுவனத்திற்கு வெளியே முதலீடு செய்திருந்தால் வட்டி ஈட்டப்பட்டிருக்கும் என்பதைக் கருத்தில் கொள்வது இல்லை.
(இ) இறுதி மதிப்பினை தீர்மானிப்பது கடினம்
சொத்தினை நிறுவும் பொழுதே, நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர், சொத்தின் நிகர இறுதி மதிப்பினை தீர்மானிப்பது மிகவும் கடினம்.
36.
1. இருபாய்வு சமநிலையடையாத பொது வேறுபாட்டு தொகையை அனாமத்துக் கணக்கு என்ற தற்காலிகக் கணக்கில் பற்று அல்லது வரவு வைக்க வேண்டும்.
2. பற்று உறுப்புகளின் கூட்டுத் தொகையை காட்டிலும் வரவு இருப்புகளின் கூட்டுத் தொகையை மிகையாக இருக்கும் பொது பற்று வைக்கப்படும்.
3. மாறாக வரவு இருப்புகளின் கூட்டுத் தொகை பற்று இருப்புகளின் கூட்டுத் தொகையை வீடாக குறைவாக இருப்பின் வரவு வைக்க வேண்டும்
37.
38.
1. நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதிலுள்ள கணக்குகளை (தன்மையின் அடிப்படையில்) அடையாளம் காண வேண்டும்.
2. மேலே அடையாளம் கண்டா கணக்குகளை ஆள்சார் க/கு, சொத்துக் க/கு அல்லது பெயரளவுக் க/கு என்று பாகுபடுத்தி வேண்டும்.
3. மேலே பாகுபடுத்தப்பட்ட (ஒரு நடவடிக்கைக்கு தேவையான) இரண்டு கணக்குகளுக்கும் பற்று, வரவு விதிகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
4. இரட்டைப் பதிவு முறையின் விதிகளைப் பயன்படுத்தி எந்த கணக்கினைப் பற்று வைக்க வேண்டும், எந்த கணக்கினை வரவு வைக்க வேண்டும் என கண்டறிய வேண்டும்.
5. நடவடிக்கை நடந்த நாளினை, நாள் பத்தியில் பதிவு செய்திட வேண்டும்.
6. பற்று வைக்க வேண்டிய கணக்கின் பெயரை விவரப் பத்தியின் இடது பக்கத்தில் மிகவும் நெருக்கமாக எழுத ஆரம்பித்து, இறுதியில் "ப" என்று பதிவு செய்ய வேண்டும். இதற்கு எதிரான அதே வரியில் பற்று பத்தியில் பற்று வைக்கும் தொகையினை பதிவு செய்திட வேண்டும்.
7. வரவு வைக்க வேண்டிய கணக்கின் பெயரை இரண்டாவது வரியில் பக்க ஓரத்திலிருந்து சிறிது இஅடைவேளி விட்டு, விவர பத்தியில் எழுத வேண்டும்.அதே வரியில் எதிராக உலா வரவு பத்தியில் வரவு வைக்கும் தொகையினை பதிவு செய்திட வேண்டும்.
8. அடுத்த வரியில் விவரப் பத்தியில் சிறு விளக்கத்தினை பிறை அடைப்பில் கொடுக்க வேண்டும்.
39.
கணக்குகளை இருப்புகட்டுவதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
(i) பற்று பக்கத்தில்க் உள்ள தொகை புத்தியையும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள தொகைபத்தியையும் தனித்தனியாக கூட்ட வேண்டும்.
(ii) இரண்டு பக்கங்களில் கிடைக்கப்பெற்ற மொத்த தொகைகள் வித்தியாசதை கணக்கிட வேண்டும்.
(iii) இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை, குறைவாக மொத்தத் தொகை உடைய பக்கத்தில் விவரப்பத்தியில் 'இருப்பு கீ/இ' என எழுதி, அந்த தொகையை தொகை பத்தியிலும், அதன் எதிரே நாள் பத்தியில் அந்த மாதத்தின் கடைசி நாளையும் குறிப்பிட வேண்டும்.
(iv) இப்போது பற்ற மற்றும் வரவு என்ற இருபத்திகளையும் கூட்ட வேண்டும். அவை சமமாக இருக்கும். இரு பக்கங்களின் அக்கூட்டுத் தொகையினை ஒரே கோட்டில் கிடைமட்டமாக பதிய வேண்டும்.
(v) வித்தியாசத்தி தொகையை கூட்டுத் தொகைக்கு கீழே எதிர்பக்கத்தில் கீழ் கொண்டு வரவேண்டும். விவரப்பத்தியில் கீழே கொணரப்பட்ட அவ்வித்தியாசத் தொகையினை எதிரே 'இருப்பு கீ/கொ' என எழுதப்பட்டு, நாள் பத்தியில் அடுத்த கணக்கியல் காலத்தின் முதல் நாழிகை குறிப்பிட வேண்டும்.
(vi) ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால் அதன் இருப்புத்தொகை பற்று இருப்பு ஆகும். ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத்தொகை வரவு இருப்பு ஆகும். இரண்டு பக்கங்களும் சமமாக இருந்தால் அக்கணக்கு எந்த இருப்பையும் காட்டாது.
40.
1. ரொக்கப் பத்திகள் வழங்கும் போல இருப்புக் கட்டப்பட்டு அத்யு அடுத்த நாள் அல்லது காலத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
2. இருந்த போதிலும் தள்ளுபடி பத்திகள் இருப்புக்கட்டப்படமாட்டாது.அவைகள் பற்றுப் பக்கம் தனியாகவும் மற்றும் வரவு பக்கம் தனியாகவும் கூட்டப்பட்ட வேண்டும்
3. பற்றுப்பக்கத்தில் உள்ள தள்ளுபடி பத்தியின் மொத்தம் வாடிக்கையாளர்களுக்கு அளித்த தள்ளுபடியைக் காட்டுகிறது.இத்தொகை அளித்த தள்ளுபடி கணக்கில் பற்று செய்யப்பட வேண்டும்.
4. வரவு பக்கத்தில் உள்ள தள்ளுபடியில் மொத்தம் பெட்ரா தள்ளுபடியை காட்டுகிறது. இத்தொகை பெட்ரா தள்ளுபடி கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.
தள்ளுபடி பத்திகளில் பருவகால மொத்தம் கீழ்கண்டவாறு எடுத்துக் எழுதப்படுகிறது.
அளித்த தள்ளுபடி கணக்கில் பற்று பக்கத்தில் 'ரொக்க ஏடின்படி பற்பல கணக்கு'என்று பற்று செய்யப்படும்.
பெட்ரா தள்ளுபடி பத்தியின் பருவ கால மொத்தம் பெட்ரா தள்ளுபடி கணக்கில் வரவுப் பக்கத்தில் 'ரொக்க ஏட்டின் படி பற்பல கணக்கு' என்று வரவு செய்யப்படும்.
41.
| வ.எண் | நடவடிக்கை | ரொக்கம் ரூ | சரக்கிருப்பு ரூ | கானாளிகள் ரூ | மொத்த சொத்துகள் ரூ | = | மொத்த பொறுப்புகள் ரூ | முதல் ரூ | கடனீந்தோர் ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| அ ) | ரம்யா தொழில் தொடங்கியது | +25,000 | +25,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +25,000 | |||||||
| சமன்பாடு | +25,000 | = | +25000 | ||||||
| ஆ) | கடன் கொள்முதல் செய்தது | +20,000 | +20,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +20,000 | +25,000 | +20,000 | |||||
| சமன்பாடு | +45,000 | = | +45,000 | ||||||
| இ) | கடன் விற்பனை | -18,000 | +25,000 | +7,000 | |||||
| இருப்புகள் | +25,000 | +2,000 | +25,000 | +32,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +52,000 | = | +52,000 | ||||||
| ஈ) | சொந்த செலவுக்கு எடுத்தது | -5,000 | -5,000 | ||||||
| இருப்புகள் | +20,000 | +2,000 | +25,000 | +27,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +47,000 | = | +47,000 |
42.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| செல்லோட்டின் வங்கி இருப்பு (வரவிருப்பு சாதகமான இருப்பு) |
2,500 | |
| கூட்டுக: | ||
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியாதது |
60 | |
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 1,000 | |
| காசோலை அவமதிக்கப்பட்டு ரொக்க ஏட்டில் பதியாதது | 600 | 1,600 |
| 4,160 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் முன்னிலைக்கப்படுத்தாதவை | 700 | |
| வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் |
400 | 1,100 |
| ரொக்க ஏட்டின் படி வங்கி இருப்பு | 3,060 |
43.
| விவரம் | தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|
| அலுவலக வாடகை | 10,000 | மொத்த இலாபம் | 50,000 |
| அலுவலக சொத்துகள் மீதான தேய்மானம் | 8,000 | வட்டி பெற்றது | 2,000 |
| தள்ளுபடி கொடுத்தது | 12,000 | தள்ளுபடி பெற்றது | 3,000 |
| விளம்பரம் | 4,000 | ||
| தணிக்கை கட்டணம் | 1,000 | ||
| வெளிதுக்குக் கூலி | 2,500 | ||
| அலுவலக கட்டடம் மீதான காப்பீடு | 3,500 | ||
| பொது ச் செலவுகள் | 3,000 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றுவது ) | 11,000 | ||
| 55,000 | 55,000 |
44.
Rs
பற்பல கடனாளிகள் = 50,000
கழிக்க : கூடுதல் வாராக்கடன் = 3,000
________
47,000
_________
வாராஜயக்கடன் ஒதுக்கு \([47,000 \times \frac {10}{100}]= Rs , 4,700\)
சரிக்கட்டுப் பதிவு
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ |
|---|---|---|---|---|
| வாராக்கடன் க/கு ப | 3,000 | |||
| பற்பலகடனாளிகள் க/கு | 3,000 | |||
| (வாராக்கடன் போக்கெழுதியது) | ||||
| வாராஐயக்கடன் ஒதுக்கு க/கு ப | 6,000 | |||
| வாராக்கடன் க/கு | 6,000 | |||
| (வாராக்கடன்,வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
||||
| இலாப நட்டம் க/கு ப | 5,700 | |||
| வாராஐயக்கடன் ஒதுக்கு க/கு | 5,700 | |||
| (வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்பட்டது ) |
| விவரம் | தொகை ரூ | தொகை ரூ | விவரம் | தொகை ரூ | தொகை ரூ |
| வார ஐயக்கடன் | |||||
| ஒதுக்கு (இறுதி) | 5,000 | ||||
| கூட்டுக: | |||||
| வாராக்கடன் | 3,000 | ||||
| 8,000 | |||||
| கூட்டுக: | |||||
| கூடுதல் வாராக்கடன் | 3,000 | ||||
| 10,700 | |||||
| கழிக்க: | |||||
| வாராஐயக்கடன் | |||||
| ஒதுக்கு(தொடக்கம்) | 5,000 | 5,700 |
| பொறுப்புகள் | தொகை Rs | தொகை ரூ | சொத்துக்கள் | தொகை ரூ | தொகை ரூ |
| பற்பல | |||||
| கடனாளிகள் | 50,000 | ||||
| கழிக்க: | |||||
| வாராக்கடன் | 3,000 | ||||
| 47,000 | |||||
| கழிக்க: | |||||
| வாராஐயக்கடன் | |||||
| ஒதுக்கு | 4,700 | 42.300 |
45.
செயல்முறை
(அ) தூண் விளக்கப்படம்
(i) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை புதிய விரிதாளில் உள்ளீடு செய்யவும்.
(ii) அறை A1 முதல் B7 வரையிலான தரவு பரப்பைத் தேர்வு செய்யசெய்யவும்
(iii) Insert Menu சென்று Column Chart (3D) யை தேர்வு செய்யவும்
(iv) தூண் விளக்கப்படத்தை right click செய்து ‘Add Data Labels’ ஐ தேர்வு செய்யசெய்யவும்
(v) Layout - Chart Tools ஐ தேர்வு செய்யவும்
(vi) Axis Title தேர்வு செய்து அதற்கு பெயரிடவும்.

(ஆ) வரி விளக்கப்பக்கப்படம்
(i) அறை A1 முதல் B7 வரையிலான தரவு பரப்பைத் தேர்வு செய்யசெய்யவும்
(ii) Insert Menu சென்று Line Chart (2D) தேர்வு செய்யவும்
(iii) வரி விளக்கப்படத்தை right click செய்து ‘Add Data Labels’ ஐ தேர்வு செய்யவும்
(iv) Layout - Chart Tools – தேர்வு செய்யவும்
(v) Axis Title தேர்வு செய்து அதற்குப் பெயரிடவும்.

46.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 1,688 | |
| கூட்டுக: பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு வசூலிக்கப்பட்டது ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 20,000 | |
| முதலீடுகள் மீதான வட்டி வசூலிக்கப்பட்டது ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 1,820 | |
| விடுத்த காசோலை செலுத்துகைக்கு முன்னிலைபடுத்தப்படவில்லை – மாலா | 11,780 | 33,600 |
| 35,288 | ||
| கழிக்க: வங்கியில் செலுத்திய காசோலை இன்னும் வசூலாகாதது -நிர்மலா | 7,810 | |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு செலுத்தியது ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 4,000 | 11,810 |
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 23,478 |
47.
| வ.எண் | விவரம் | பே. ப. எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | இயந்திரம் க/கு | ப | 3,000 | ||
| கொள்முதல் க/கு | 3,000 | ||||
| (ரூ.3,000 த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது | |||||
| ஆ | தரகு க/கு | ப | 200 | ||
| பெற்ற வட்டி க/கு | 200 | ||||
| (பெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| இ | சம்பளம் க/கு | ப | 1,000 | ||
| தமிழ்ச்செல்வன் க/கு | 1,000 | ||||
| ( தமிழ்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| ஈ | விற்பனை க/கு | ப | 500 | ||
| அறைகலன் க/கு | 500 | ||||
| (பழைய அறைகலன் விற்றது விற்பனை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| உ | கொள்முதல் க/கு | ப | 800 | ||
| சௌந்தர பாண்டியன் க/கு | 800 | ||||
| (சௌந்தர பாண்டியனிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது திருத்தியது) |
48.
| விவரம் | தொகை ரூ |
|---|---|
| கனரக வாகனத்தின் விலை | 8,00,000 |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (8,00,000 x \({5\over 100}\times {6\over 12}\)) | 6,000 |
| 7,40,000 | |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (7,40,000 x \({15\over 100}\)) | 1,11,000 |
| 6,29,000 | |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (6,29,000 x \({15\over 100}\)) | 94.350 |
| எட்டு மதிப்பு | 5,34,650 |
| விற்ற விலை | 5,00,000 |
| விற்ற பொருளின் மீது நட்டம் | 34,650 |
49.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | கட்டடம் கட்டியதற்கான தொகை ரூ 10,00,000 | முதலினச் செலவு |
| (ii) | அறைகலன் பழுதுபார்த்தது ரூ 50,000. | வருவாயினச் செலவு |
| (iii) | கட்டடத்தை வெள்ளை அடிப்பதற்கானச் செலவு ரூ 80,000. | வருவாயினச் செலவு |
| (iv) | பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டியது ரூ 4,00,000. | முதலினச் செலவு |
50.
குணசேகரனின் ஏடுகளில்
| நாள் | விவரம் | இ.எ. | பே.ப.எ. | தொகை ரூ | நாள் | விவரம் | சா.சீ.எ. | பே.ப.எ. | தொகை ரூ | ||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| அளித்த தள்ளுபடி | ரொக்கம் | வங்கி | பெற்ற தள்ளுபடி | ரொக்கம் | வங்கி | ||||||||
| 2017 ஜன | 2017 மார்ச் | ||||||||||||
| 1 | இருப்பு கீ/கொ | - | 50,000 | 90,000 | 6 | வங்கி க/கு | எ | - | 18,000 | - | |||
| 2 | ரோகினி க/கு | 500 | - | 14,500 | 10 | ரொக்க க/கு | எ | - | - | 2,000 | |||
| 6 | ரொக்கக் க/கு | எ | - | - | 18,000 | 12 | கொள்முதல் க/கு | 200 | - | 9,800 | |||
| 7 | விற்பனை க/கு | 200 | - | 11,800 | 27 | ரோகினி க/கு | - | - | 14,500 | ||||
| 10 | வங்கி க/கு | எ | - | 2,000 | - | 31 | இருப்பு கீ/இ | - | 34,000 | 1,26,000 | |||
| 14 | நதியா க/கு | - | - | 18,000 | |||||||||
| 700 | 52,000 | 1,52,300 | 200 | 52,000 | 1,52,300 | ||||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 34,000 | 1,26,000 | ||||||||||
51.
52.
| நாள் | விவரம் | உள்வரு இடாப்பு எண் |
பே.ப.எண் | தொகை | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 மே 2 | வாசு | ||||
| 100 மூட்டைகள் அரசி ரூ 800 வீதம் | 80,000 | ||||
| 8 | செய்யாறு சர்க்கரை ஆலை | ||||
| 20 மூட்டைகள் சர்க்கரை ரூ 2,600 வீதம் | 52,000 | ||||
| 10 | இராம் மாவு உற்பத்தி ஆலை | ||||
| 10 மூட்டைகள் கோதுமை மாவு ரூ 750 வீதம் | 7,500 | ||||
| 15 | நீலகிரி தேயிலை தோட்டம் | ||||
| 15 பெட்டிகள் தேயிலைத் தூள் | 13,500 | ||||
| 25 | சாய்ராம் காபித்தூள் நிறுவனம் | ||||
| 100 கிலோ காபித்தூள் ரூ 190 வீதம் | 19,000 | ||||
| கொள்முதல் க/கு | 1,72,000 | ||||
53.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | வாடகை மாற்று வரிகள் | 5,000 | ||
| 2. | அளித்த தள்ளுபடி | 350 | ||
| 3. | முதல் | 10,000 | ||
| 4. | காப்பீட்டு முனையம் | 4,000 | ||
| 5. | எடுப்புகள் | 5,000 | ||
| 6. | வாடகை | 6,000 | ||
| 7. | பொதுச் செலவுகள் | 3,000 | ||
| 8. | சட்டச் செலவுகள் | 2,000 | ||
| 9. | கொள்முதல் | 40,000 | ||
| 10 | விற்பனை | 55,350 | ||
| மொத்தம் | 65,350 | 65,350 |
54.
| நடவடிக்கைகள் | சொத்துக்கள் | வங்கிக்கடன் ரூ |
முதல் ரூ |
(பொ) | ||||
|---|---|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
வங்கி ரூ |
சரக்கிருப்பு ரூ |
கடனாளிகள் ரூ |
முன்கூட்டி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ |
||||
| இருப்பு கீ/கொ | +20,000 | +70,000 | +15,000 | +1,05,000 | ||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +15,000 | +1,05,000 | ||||
| (i) கடன் கொள்முதல் | +20,000 | +20,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +35,000 | +1,05,000 | +20,000 | |||
| (ii) திருப்பிய சரக்கு ரொக்கம் பெறவில்லை | -5,000 | -5,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +30,000 | +1,05,000 | +15,000 | |||
| (iii) கடனுக்கு சரக்கு விற்றது | -1,600 | +2,000 | +400 | |||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +28,400 | +2,000 | +1,05,000 | +15,000 | ||
| (iv) விற்பனைத் திருப்பம் ரூ 400 ரொக்கம் செலுத்தவில்லை | +400 | -500 | -100 | |||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +28,800 | +1,500 | +1,05,300 | +15,000 | ||
| (v) வாடிக்கையாளர் பணம் வைப்பு இயந்திரம் மூலம் பணம் செலுத்தியது | +1,500 | -1,500 | ||||||
| சமன்பாடு | +20,000 | +71,500 | +28,800 | +1,05,000 | +15,000 | |||
| (vi) இணைய வங்கி மூலம் காப்பீட்டு முனைமம் செலுத்தியது | -1,000 | -1,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,500 | +28,800 | +1,04,300 | +15,000 | |||
| (vii) முன்கூட்டி செலுத்திய காப்பீடு | +100 | |||||||
| சமன்பாடு | +20,000 | +70,500 | +28,800 | +1,04,400 | +15,000 | |||
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards