11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/12/2018
அலகுத் தேர்வு
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
துகள் பொருள் மாசுபடுத்திகளின் தீய விளைவுகள் பட்டியலிடு.
2.
சல்பரின் ஆக்ஸைடுகள் எவ்வாறு உருவாகின்றன?அவற்றினால் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படும் தீய விளைவுகளை எழுது.
3.
ஒப்பு ஆவிஅழுத்தம் குறைவிலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் சமைப்பாட்டை வருவி.
4.
PCI5 சிதைவடைதலுக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிடு
5.
திரவத்தில் திரவத்தை கொண்ட இருகூறுக் கரைசலின் ஆவி அழுத்தம் கண்டறியும் சமன்பாட்டை வருவி.
6.
கார்பன் டை ஆக்ஸைடிற்கான சாத்தியமான இருவடிவங்களை வரைந்து, எந்த ஒரு வடிவத்தில் எலக்ட்ரான்களின் பங்கீடு சீராக அமைந்துள்ளது எனக் கூறுக.
7.
பின்வருவனவற்றை விளக்குக.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு
8.
0.2346 g எடையுள்ள கரிமச்சேர்மம் C மற்றும் H மற்றும் O வினைக் கொடுத்தது. 0.2754 g நீர் மற்றும் 0.4488 g CO2 யை அளித்தது எனில் % இயைபினைக் காண். [C =52.17, H=13.04, O=34.79]
9.
+E விளைவு மற்றும் -E விளைவு தக்க சான்றுடன் விளக்குக.
10.
தூண்டல் விளைவின் காரணமாக கரிம சேர்மத்தின் பின்வரும் பண்புகளில் ஏற்படும் மாற்றத்தினை விளக்குக.
(i) வினைதிறன்
(ii) கார்பாக்சிலிக் அமிலங்களின் அமிலத்தன்மை.
11.
ஈத்தேனின் வச அமைப்புகளை எழுதுக.
12.
0.26g நிறையுள்ள கரிமசேர்மம் 0.039g நீரிரனையும், 0.245g கார்பன் டை ஆக்சைடினையும் எரிதலின் மூலம் தருகிறது. C மற்றும் H ன் சதவீதத்தினை கணக்கிடுக.
13.
20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.
14.
1L மூடிய கலனில் 28g N2 மற்றும் 6g H2 கலக்கப்படுகிறது. சமநிலையில் 17g NH3 உருவாகிறது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனின் எடையினை சமநிலையில்கணக்கிடுக.
15.
பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக
1) CH3–CH=CH–CH=CH–C≡C–CH3
2) \({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ \underset { \overset { I }{ { CH }_{ 3 } } }{ C } } -\overset { \underset { | }{ { C }{ H }_{ 3 } } }{ \underset { \overset { I }{ { H } } }{ C } } -C\equiv C-{ CH }_{ 3 }\)
3) (CH3)3 C – C ≡ C – CH (CH3)2
4) எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலீன்
5) CH ≡ C – C ≡ C – C ≡ CH
1.
1.தூசு, மூடுபனி, கரும்புகை போன்றவை ஆகியவை காற்றில் பரவும் துகள்களாகும். இவை மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிப்பவையாகும். 5 மைக்ரான் அளவைவிட பெரிய துகள் மாசுபடுத்திகள் சுவாச பாதையில் படிந்துவிடுகின்றன. ஆனால் 10 மைக்ரான் அளவுள்ள துகள்கள் எளிதாக நுரையீரலினுள் நுழைந்து நுரையீரலின் புறணியில் தழும்புகள் அல்லது இழை இணைப்பு திசுக்களை உருவாக்குகின்றன. நிலக்கரிச் சுரங்க தொழிலாளர்கள் கருமை நுரையீரல் நோயால் பாதிக்கப்படலாம். நூற்பாலை தொழிலாளர்கள் வெண்மை நுரையீரல் நோயால் பாதிக்கப்படலாம்.
2.லெட் துகள்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கின்றன.இரத்த சிவப்பணுக்களின் முதிர்ச்சி அடைதலில் இடையிடுகின்றன.மேலும் புற்று நோயையும் உருவாக்குகின்றன.
3.வழிமணடலத்தில் உள்ள துகள் பொருள்கள் சூரிய ஒளியை எதிரொளித்தல் மற்றும் உறுஞ்சுவதன் மூலம் பார்க்கும் திறனை குறைக்கிறது.இது வானூர்திகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது.
2.
உருவாதல் :
சல்பரை கொண்டுள்ள புதைப்படிம பொருள்களை எரித்தல், மற்றும் சல்பைடு தாதுக்களை வறுத்தல் ஆகிய காரணங்களால் சல்பர்டையாக்சைடு மற்றும் சல்பர்ட்ரையாக்சைடு வாயுக்கள் உருவாக்கப்படுகின்றன.
தீய விளைவுகள்:
1. சல்பர் டையாக்சைடு வாயுவானது விலங்குகள் மற்றும் தாவரங்கள் இரண்டிற்கும் நச்சுத்தன்மையை உருவாக்குகிறது.
2. சல்பர் டையாக்சைடு வாயுவானது கண் எரிச்சல், இருமல் மற்றும் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி போன்ற சுவாச நோய்களை உருவாக்குகிறது.
3. சல்பர் டையாக்சைடு வாயுவானது மாசுபட்ட காற்றில் காணப்படும் துகள்மாசுப் பொருட்களால் அதிக நச்சுத்தன்மையடைய சல்பர் ட்ரையாக்சைடாக ஆக்ஸிஜனேற்றமடைகிறது.
4. மேற்கண்ட வினையானது SO3 மற்றும் H2SO4 ஆகியவற்றால் ஊக்கப்படுத்தப்படுகிறது.
5.SO3 ஆனது காற்று மண்டலத்திலுள்ள நீராவியுடன் இணைந்து H2SO4 ஐ உருவாக்குகிறது. இது அமிலமழையாக பொழிகிறது.
3.
(i) ஒப்பு ஆவிஅழுத்தக் குறைவு அளவீடுகளை, எளிதில் ஆவியாகாத கரைபொருளின் மோலார் நிறையை நிர்ணயிக்க பயன்படுத்த முடியும்.
(ii) இந்த நோக்கத்திற்காக, நிறை தெரிந்த ஒரு கரைபொருளானது, ஒரு குறிப்பிட்ட அளவு நிறையுள்ள கரைப்பானில் கரைக்கப்படுகிறது.
(iii) ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவானது சோதனை மூலம் அளவிடப்படுகிறது.
(iv) ரெளல்ட் விதிப்படி ஒப்பு ஆவி அழுத்தக்குறைவானது,

(v) கரைப்பான் மற்றும் கரைபொருளின் எடைகள் முறையே WA மற்றும் WB என்க. மேலும் அவற்றின் மோலார் நிறைகள் முறையை MA மற்றும் MB, எனில்,கரைபொருளின் மோல் பின்னம் XB
\({ x }_{ B }=\frac { { n }_{ B } }{ { n }_{ A }+{ n }_{ B } } \)
(vi) இங்கு \({ n }_{ A }\) & \({ n }_{ B }\) என்பன முறையே கரைப்பான் மற்றும் கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை. நீர்த்த கரைசல்களுக்கு. \({ n }_{ A }\) >> \({ n }_{ B }\) என்வே \({ n }_{ A }\) + \({ n }_{ B }\) = \({ n }_{ A }\). இப்போது
\({ x }_{ B }=\frac { { n }_{ B } }{ { n }_{ A } } \)
\({ n }_{ A }=\frac { { W }_{ A } }{ { M }_{ A } } ,\quad { n }_{ B }=\frac { { W }_{ B } }{ { M }_{ B } } \)
எனவே \({ x }_{ B }=\frac { \frac { { W }_{ B } }{ { M }_{ B } } }{ \frac { { W }_{ A } }{ { M }_{ A } } } \)
அதாவது,
ஒப்பு ஆவி அழுத்தகுறைவு = \(\frac { \frac { { W }_{ B } }{ { M }_{ B } } }{ \frac { { W }_{ A } }{ { M }_{ A } } } \)
ஒப்பு ஆவி அழுத்தக்குறைவு = \(\frac { { W }_{ B }\times { M }_{ A } }{ { W }_{ A }\times { M }_{ B } } \)
(vii) wA, wB, MA போன்ற தெரிந்த மதிப்புகளையும், அளவிடப்பட்ட ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவு மதிப்பையும் பயன்படுத்தி கரைபொருளின் மோலார் நிறையை MB கணக்கிட முடியும்.
4.
'V ' கனஅளவுள்ள ஒரு கலனில் 'a' மோல் PC15 எடுத்துக்கொள்ளப்படுவதாகக் கருதுவோம்.
'x' மோல் PC15 சிதைவடைந்து x மோல் PC13 மற்றும் x மோல் C12 வைத் தருகிறது என்க. \({ PC1 }_{ 5 }(g)\rightleftharpoons { PC1 }_{ 3 }(g)+{ C1 }_{ 2 }(g)\)
| PC12 | PC12 | C12 | |
| ஆரம்பத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a | 0 | 0 |
| சிதைவடைந்த மோல்களின் எண்ணிக்கை | x | 0 | 0 |
| சமநிலையில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a -x | x | x |
| சமநிலையில் மோலார் செறிவு | \(\frac { a-x }{ V } \) | \(\frac { x }{ V } \) |
\(\frac { x }{ V } \) |
நிறைதாக்க விதியைப் பயன்படுத்த,
\({ K }_{ C }=\frac { \left[ { PC }1_{ 3 } \right] \left[ C1_{ 2 } \right] }{ \left[ PC1_{ 5 } \right] } \)
\(=\frac { \left( \frac { x }{ V } \right) \left( \frac { x }{ V } \right) }{ \left( \frac { a-x }{ V } \right) } =\frac { { x }^{ 2 } }{ (a-x)V } \)
KP ன் மதிப்பினை பின்வருமாறு கணக்கிடலாம்.
KP க்கும் KC க்குமானத் தொடர்பினை நாம் அறிவோம்.
\({ K }_{ P }={ K }_{ C }(RT)^{ { \triangle n }_{ g } }\)
இங்கு \(\triangle n(g)={ n }_{ P }-{ n }_{ r }=2-1=1\)
எனவே \({ K }_{ p }={ K }_{ C }(RT);PV=nRT\)
\(RT=\frac { PV }{ n } \)
5.
(i) தற்போது ஒரு மூடிய கலனில், 'A' எனும் திரவ கரைபொருளை, 'B' எனும் தூய கரைப்பானில் கரைத்து, இருகூறுக்கரைசல் தயாரிக்கப்படுவதில்லைக் கருதுவோம்.
(ii) கரைசலில் உள்ள A மற்றும் B ஆகிய இரண்டு கூறுகளும் ஆவியாகக் கூடியவை, மேலும் A மற்றும் B ஆகிய கூறுகளின், திரவ மற்றும் ஆவி நிலைமைகளுக்கிடையே ஒரு சமநிலை உருவாக்கப்படும்.
(iii) ரெளல்ட் எனும் பிரான்சு வேதியியலாளர், A மற்றும் B ஆகிய கூறுகளின் பகுதி அழுத்தங்கள் மற்றும் மோல் பின்னங்களுக்கிடையேயான ஒரு அளவியலான தொடர்பை முன்மொழித்தார். அது ரெளல்ட் விதி என அறியப்படுகிறது.
(iv) இவ்விதிப்படி எளிதில் ஆவியாகும் திரவங்களைக் கொண்ட கரைசல்களில், கரைசலிலுள்ள ஒவ்வொரு கூறின் (A & B) பகுதி ஆவி அழுத்தமும், அதன் மோல் பின்னத்துடன் நேர் விகிதத்திலிருக்கும்
ரெளல்ட் விதிப்படி,
pA ∝ xA .........(1)
pA = kxA
when xA = 1, எனும் போது k = p0A
இங்கு p0A என்பது அதே வெப்பநிலையில், தூயநிலையில் உள்ள கூறு A யின் ஆவி அழுத்தம்.
எனவே,
pA = p0A xA ....(2)
இதே பூல் கூறு B க்கு
pB = p0B xB .............(3)
XA மற்றும் XB ஆகியன முறையே கூறுகள் A மற்றும் B ஆகியவற்றின் மோல் பின்னகளாகும். டால்டனின் பகுதி அழுத்த விதிப்படி, ஒரு மூடிய கலனின் மொத்த அழுத்தமானது, அதிலுள்ள தனித்தனிக் கூறுகளின் பகுதி அழுத்தங்களின் கூடுதலுக்குச் சமமாக அமையும்.
ஆதலால்
Pமொத்தம் = pA + pB ...........(4)
சமன்பாடுகள் (2) மற்றும் (3) லிருந்து pA மற்றும் pB மதிப்புகளை மேற்காண் சமன்பாட்டில், பிரதியிட
Pமொத்தம் = xAp0A + xBp0B ........(5)
xA + xB = 1 அல்லது xA = 1 - xB என நம் அறிவோம்.
ஆகையால்
Pமொத்தம் = ( 1 - xB) p0A + xBp0B ...(6)
Pமொத்தம் = p0A + xB (p0B - p0A) .....(7)
மேற்காண் சமன்பாடானது, y = mx + c வடிவிலுள்ள நேர்க்கோட்டுச் சமன்பாடாகும், xB க்கு எதிராக Ptotal ஐக் கொண்டு வரையப்படும் வரைபடமானது, p0B - p0A ஐ சைவாகவும், p0A ஐ y அச்சு வெட்டவும் கொண்ட ஒரு நேர்க்கோட்டை தரும்.
6.
(i) எட்டு எலக்ட்ரான் விதியினை நிறைவு செய்யும் பொருட்டு ஒவ்வொரு ஆக்ஸிஜன் அணுவிலிருந்து ஒரு தனித்த இரட்டை எலக்ட்ரானைப் பயன்படுத்தியோ அல்லது ஒரு ஆக்ஸிஜன் அணுவிலிருந்து இரண்டு எலக்ட்ரான் இரட்டைகளைப் பயன்படுத்தியோ கார்பனுடன் ஒன்றிற்கு மேற்பட்ட பிணைப்புகளை உருவாக்குவதன் மூலம் பின்வரும் இரு வடிவங்கள் சாத்தியமாகின்றன.

(ii) CO2 -ன் இரு வடிவங்களில் எந்த ஒரு வடிவத்தில் எலக்ட்ரானின் பங்கீடு சீராக அமைந்துள்ளது என தெரிந்து கொள்ள லூயிஸ் அமைப்பில் உள்ள ஒவ்வொரு அனுவின் மீதமுள்ள முறைசார் மின்சுமையை நாம் அறிய வேண்டும்.
(iii) ஒரு மூலக்கூறில் உள்ள தனித்த அணு ஒன்றின் இணைதிறன் எலக்ட்ரான்களின், எண்ணிக்கையும், லூயிஸ் அமைப்பில் அந்த அணுவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும் இடையேயான மின்சுமை வேறுபாடே அம்மூலக்கூறில் அந்த அணுவின் முறைசார் மின்சுமை எனப்படுகிறது.
(iv) ஒரு அணுவின் முறைசார் மின்சுமை
=Nv =\(\left( { N }_{ l }+\frac { { N }_{ b } }{ 2 } \right) \)
இங்கு,
Nv =தனித்த நிலையில் உள்ள அணு ஒன்றின் இணைத்திறன் எலக்ட்ரான்கள்
Nl =லூயி அமைப்பில் அணுவினைச் சுற்றி தனித்த இரட்டைகளாகக் காணப்படும் எலக்ட்ரானின் எண்ணிக்கை
Nb =லூயி அமைப்பில் அணுவினைச் சுற்றியுள்ள பிணைப்பு இரட்டை எலக்ட்ரானின் எண்ணிக்கை.
(v) வடிவமைப்பு 1-ற்கு
கார்பனின் மீதான முறைசார் மின்சுமை
=4-\(\left( 0+\frac { 8 }{ 2 } \right) \)=0
ஆக்ஸிஜன் மீதான முறைசார் மின்சுமை
=6-\(\left( 4+\frac { 4 }{ 2 } \right) \)=0
(vi) வடிவமைப்பு 2-ற்கு
கார்பனின் மீதான முறைசார் மின்சுமை
=4-\(\left( 0+\frac { 8 }{ 2 } \right) \)=0
ஆக்ஸிஜன் மீதான முறைசார் மின்சுமை
=6-\(\left( 6+\frac { 2 }{ 2 } \right) \)=-1
மும்மை பிணைப்புக் கொண்ட ஆக்ஸிஜன் மீதான முறைசார் மின்சுமை =6-\(\left( 2+\frac { 6 }{ 2 } \right) \)=+1
(vii) கார்பன் டை ஆக்ஸைடின் வடிவமைப்புகளில், வடிவமைப்பு 1ல் அனைத்து மின்சுமை மதிப்புகளும் பூஜ்யம் என்பதால் இவ்வமைப்பு 2ஐ காட்டிலும் முன்னுரிமை அதிகம் உடையது.
7.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு:
1. ஒரு முப்பரிமாண வடிவமைப்பினை இரு பரிமாணத்தில் இம்முறை குறித்துக்காட்டுகிறது.
2.இம்முறையில் சீர்மையற்ற கார்பன் அணுக்கள் தாளின் தளத்தில் குறிக்கப்படுகின்றன.
3. கிடைமட்ட கொட்டினால் குறிக்கப்படும் பதிலிகள் உற்று நோக்குபவை நோக்கி அமையும்.
4.செங்குத்துக் கோட்டினால் குறிக்கப்படும் பதிலிகள் உற்று நோக்குபவரிடமிருந்து விலகி அமைகின்றன. டார்டாரிக் அமிலத்தின் பிஷர் அமைப்பு வாய்ப்பாடு பின்வருமாறு:

(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு :
1. இம்முறையில் இரு கார்பன் அணுக்களுக்கிடையே பிணைப்பானது முலை விட்டவாக்கில் சற்றே நீட்டமாக வரையப்படுகின்றது.
2. கீழ் இடது புறம் உள்ள கார்பன் முன்னோக்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
3.மேலும் மேல் வலது புற கார்பன் பின்னோக்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
4. இரு அடுத்தடுத்த அணுக்களுக்கு இடையே உள்ள தொகுதிகளின் புறவெளி அமைவிட தொடர்பை பிஷர் அமைப்பு வாய்ப்பாடு விளக்க இயலவில்லை.
5.சாஹார்ஸ் அமைப்பு தொகுதிகளுக்கு இடையேயான அமைவிடம் பற்றிய அறிவைத் தருகிறது.

(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு :
1.இம்முறையில் மூலக்கூறுகள் கார்பன்-கார்பன் \(\sigma \) பிணைப்பு அச்சின் வழியே நோக்கப்படுகிறது.
2.சிக்மா பிணைப்பை உருவாக்கும் இரு கார்பன்கள் இரு வட்டங்களால் குறிப்பிடப்படுகின்றன.
3. ஒன்று மற்றதன் பின்னால் அமைவதால் முன்புறமுள்ள கார்பன் மட்டுமே பார்க்க இயலும்.
4.கண்களுக்கு அருகில் உள்ள கார்பன் ஒரு புள்ளியாகவும், தொலைவில் உள்ள கார்பன் வட்டமாகவும் குறிக்கப்படுகின்றது.
5.எனவே முன்னால் உள்ள கார்பனின் C-H பிணைப்புகள் வட்டத்தின் மையப்புள்ளியிலிருந்து அதே நேரத்தில் பின்னால் உள்ள கார்பனின் C-H பிணைப்புகள் வட்டத்தின் சுற்றளவிலிருந்தும் குறித்துக்காட்டப்படுகின்றன.
6.இவற்றிக்குக்கிடையேயான கோணமதிப்பு 120o ஆகும்.

8.
கரிமச் சேர்மத்தின் நிறை w =0.2346 g
நீரின் நிறை (x)=0.2754 g
CO2-ன் நிறை (y)=0.4488 g
கார்பனின் சதவீதம் =\(\frac{12}{44}\times \frac{y}{w} \times 100\)
=\(\frac{12}{44}\times \frac{0.4488}{0.2346}\times 100\)
=52.17 %
ஹைட்ரஜனின் சதவீதம் =\(\frac{2}{18} \times \frac{x}{w}\times 100\)
=\(\frac{2}{18}\times \frac{0.2754}{0.2346}\times 100\)
=13.04 %
ஆக்சிஜனின் சதவீதம் =[100-(52.17+13.04)]
=100-65.21
=34.79 %
9.
(i) +E விளைவு:
1. தாக்கும் வினைக் காரணியை நோக்கி \(\pi\) எலக்ட்ரான் மாற்றப்பட்டால் அவ்விளைவு +E விளைவு எனப்படும்.

2. மேற்கண்டுள்ள ஆல்கீனுடன் H+ சேர்த்தல் +E விளைவுக்கு ஒரு உதாரணமாகும்.
(ii) +E விளைவு:
1. தாக்கும் காரணியிலிருந்து அதற்கு அப்பால் எலக்ட்ரான்கள் மாற்றப்படின் அவ்விளைவு -E விளைவு எனப்படும்.

2. மேலே தரப்பட்டுள்ள சயனைடு அயனி கார்பனைல் கார்பனை தாக்குதல் -E விளைவுக்கு எடுத்துக்காட்டாகும்.
10.
(i) வினைதிறன்:
1. ஹாலஜன்களைப் போன்ற அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடைய அணு ஒரு கார்பனுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அது C-X பிணைப்பினை முனைவுள்ளதாக்குகிறது.
2. இத்தகைய நேர்வுகளில் வினையின் போது உள்வரும் கருக்கவர் பொருளானது முனைவுற்ற கார்பனை தாக்குவதற்கு சாதகமான சூழலை ஹாலஜனின் - I விளைவு ஏற்படுத்துகிறது.
3. எனவே வினைத்திறன் அதிகரிக்கின்றது.

4. கார்பனைல் கார்பனுக்கு அருகில் - I தொகுதி இணைக்கப்பட்டுருப்பின், அத்தொகுதி, கார்பனைல் கார்பன் மீதான எலக்ட்ரான் அடர்த்தியினைக் குறைக்கிறது.
5. எனவே கருக்கவர் சேர்க்கைவினையின் வேகம் அதிகரிக்கின்றது.
(ii) கார்பாக்சிலிக் அமிலங்களின் அமிலத்தன்மை:
1. கார்பாக்சிலிக் அமிலத் தொகுதிக்கு அருகில் உள்ள கார்பனுடன் ஹாலஜன் இணைக்கப்படும் போது, ஹாலஜனின் - I விளைவின் காரணமாக பிணைப்பு எலக்ட்ரான்களை தன்னை நோக்கி கவர்வதால் H+ அயனியாதல் எளிதாகிறது.
2. குளோரோ அசிட்டிக் அமிலங்களின் வலிமையின் வரிசை.
3. CCI3 COOH > CHCI2 COOH > CH2 CICOOH > CH3 COOH என அமைகிறது.

4. கார்பாக்சில் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதியின் - I விளைவு அதிகரிக்க, அதிகரிக்க அமிலத்தின் வலிமையும் அதிகரிக்கின்றது.
11.
இரண்டு நான்முகி மெத்தில் தொகுதிகள் கார்பன் - கார்பன் பிணைப்பு அச்சின் வழியே சுழற்சிக்கு உட்பட்டு வச அமைப்புகள் எனப்படும் எண்ணற்ற அமைப்புகளைத் தருகின்றன.இதில் எதிரெதிர் மற்றும் மறைத்தல் வச அமைப்புகள் மிக முக்கியமானவையாகும்.இவ்விரண்டு அமைப்புகளுக்கு இடையே எண்ணற்ற அமைப்புகள் இருக்கலாம்.அவைகள் சாய்வு அமைப்புகள் எனப்படுகின்றன

இவ்வச அமைப்பில் ஒரு கார்பனின் ஹைட்ரஜன் அணுவானது மற்றொரு கார்பனின் ஹைட்ரஜனிற்கு நேர் பின்னால் அமைந்துள்ளது.
இவ்வமைப்பில் அணுக்களுக்கிடையேயான விலக்கு விசை அதிகபட்சமாக அமையும் மேலும் இது குறைவான நிலைப்புத்தன்மையுடைய வச அமைப்பாகும்.
எதிரெதிர் வச அமைப்பு

இவ்வச அமைப்பில் இரு கார்பன் அணுக்களின் ஹைட்ரஜன்களும் ஒன்றிற்கொன்று அதிகபட்சமாக எவ்வளவு தூரம் விலகியிருக்கின்றன.
இவ்வமைப்பில் அணுக்களுக்குக்கிடையேயான விலக்கு விசை குறைந்த பட்சமாக உள்ளது. மேலும் இது அதிக நிலைப்புத் தன்மையுடைய வச அமைப்பாகும்.
சாய்வு அமைப்புகள் :
மேற்குறிய இரண்டு முக்கிய வச அமைப்புகளுக்கிடையே அமையும் உருவாகிய எண்ணற்ற இடைநிலை வச அமைப்புகளே சாய்வு வச அமைப்புகள் எனப்படுகின்றன
12.
கரிம சேர்மத்தின் எடை=0.26 கி g
நீரின் எடை=0.039g
CO2 ன் எடை=0.245g
ஹைட்ரஜனின் சதவீதம்
18 g நீரில் உள்ள ஹைட்ரஜனின் எடை=2g
0.039 நீரில் உள்ள ஹைட்ரஜனின் எடை=\({2\over 18}\times {0.039\over 0.26}\)
ஹைட்ரஜனின் சதவீதம்=\({0.039\over 0.26}\times {2\over 18}\times 100=1.66\%\)
கார்பனின் சதவீதம்
44g CO2ல் உள்ள Cன் எடை=12
0.245 g of CO2 ல் உள்ள ன் எடை
\({12\over 44}\times {0.245\over 0.26}\)g
C ன் சதவீம்=\({12\over 44}\times {0.245\over 0.26}\times 100=25.69\%\)
13.
மொத்த அழுத்தம் = 1 atm
PN2 = \(\left( \frac { 80 }{ 100 } \right) \\ \) x அதிக அழுத்தம்
= \(\frac { 80 }{ 100 } \) x 1 atm
= 0.8 atm
PO2 = \(\left( \frac { 20 }{ 100 } \right) \) x 1
= 0.2 atm
ஹென்றி விதிப்படி,
Pகரைபொருள் = KH x கரைசலின் கரைபொருள்
PN2 = (KH)நைட்ரஜன் x கரைசலின் நைட்ரஜன் மோல் பின்னம்
⇒ \(\frac { 0.8 }{ 8.5\times { 10 }^{ 4 } } ={ X }_{ { N }_{ 2 } }\\ \)
⇒ \({ X }_{ { N }_{ 2 } }\\ \) = 9.4 x 10-6
இதைப்போலவே
\({ X }_{ { O }_{ 2 } }=\frac { 0.2 }{ 4.6\times { 10 }^{ 4 } } \)
= 4.3 x 10-6
14.
கொடுக்கப்பட்டவை \(m_{N_{2}}=28g \ m_{H_{2}}=6g\)
V = 1 L
\((n_{N_{2}})_{initial}=\frac{28}{28}=1\ mol\)
\((n_{H_{2}})_{initial}=\frac{6}{2}=3\ mol\)
N2(g) + 3H2(g) ⇌ 2 NH3(g)
| N2(g) | H2(g) | NH3(g) | |
| ஆரம்ப செறிவு | 1 | 3 | - |
| வினைப்பட்டது | 0.5 | 1.5 | - |
| சமநிலை செறிவு | 0.5 | 1.5 | 1 |
\([NH_{3}]=(\frac{17}{17})=1\ mol=1\ mol\)
N2-ன் நிறை = (N2-ன் மோல்களின் எண்ணிக்கை) × N2-ன் மோலார் நிறை
= 0.5 × 28 = 14 g
H2-ன் நிறை = (H2-ன் மோல்களின் எண்ணிக்கை) × H2-ன் மோலார் நிறை
= 1.5 × 2 = 3 g
15.
| அமைப்பு | IUPAC பெயர் | |
|---|---|---|
| 1. | CH3 - CH = CH - CH = CH -C = C - CH3 | ஆக்டா - 2, 4 - டையீன் - 6 - ஜன் |
| 2. | \({ CH }_{ 3 }-\overset { \overset { { CH }_{ 3 } }{ | } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ c } } -\overset { \overset { { CH }_{ 3 } }{ | } }{ \underset { \overset { | }{ { H } } }{ c } } -C\equiv C-{ CH }_{ 3 }\) | 4 - மெத்தில் - 5 - எத்தில் - 5 - மெத்தில் ஹெக்ஸ் - 2 - ஜன் |
| 3. | (CH3)3 C - C \(\equiv \) C - CH (CH)32 | 2 - மீத்தைல் - 5,5 - டைமீத்தைல் ஹெக்பொ - 3 - யீன் |
| 4 | எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலின் கண்டறி | 2 - மெத்தில் - 3 - ஹெக்சைன் (அ) - 2 - மெத்தில் ஹெக்ஸ் - 3 - ஜன் |
| 5. | CH \(\equiv \) C - C \(\equiv \) C - C \(\equiv \) CH | ஹெக்ஸ் - 1,3,5 - டீரையின் |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards