11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 02/01/2019
XI Model Question
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
CGI –ன் விரிவாக்கம்
common Gateway Interface
Complex Gateway Information
Common Gateway Information
Complex Gateway Interface
2.
கீழ்கண்டவற்றுள் எது தானே பெருக்கிக் கொள்வும் மற்றும் இணைத்துக் கொள்ளவும் கணிப்பொறி நிரல்கள் தேவையிலாதது?
நச்சுநிரல்
வார்ம்ஸ்
ஸ்லைவேர்
ட்ரோஜன்
3.
கீழேயுள்ள நிரல் தொகுதியின் வெளியீடு என்ன?
For (var n=0; n<10; n+1)
{
if (n==3)
{
break;
}
document write (n+" < br > " );
}
0 1 2
0 1 2 3
0 1 2 3 4
0, 1, 3
4.
CSS – ன அறிவிப்பு தொகுதி எந்த குறியால் சூழப்பட்டுள்ளது?
( )
[ ]
{ }
<>
5.
ஒரு HTML ஆவணத்தில், கீழ்விரிப் பட்டியல் பெட்டியை உருவாக்கப் பயன்படும் ஒட்டு
< dropdown >
< select >
< listbox >
< input >
6.
இணைய உலாவி ஜன்னல் திரையில் எந்த பகுதியானது ஆவணத்தின் பிரதான உள்ளடக்கத்தை காட்டும்?
Head
Body
Title
Heading
7.
வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுகிறது.
புரவலர் (host)
சேவையகம் (server)
பணிநிலையம் (workstation)
முனையம்
8.
விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.
My document
My picture
Document and settings
My Computer
9.
பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?
விண்டோஸ் 7
லினக்ஸ்
பாஸ்
iOS
10.
ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?
4.7 GB
5.5 GB
7.8GB
2.2 GB
11.
கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
645
234
876
123
12.
வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.
விசைப்பலகை
நினைவகம்
திரையகம்
சுட்டி
13.
ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?
F6
F9
F5
F10
14.
+ A1 ∧ B2 என்ற வாய்பாட்டுகான வெளியீட்டு மதிப்பு எது? (A1 = 5, B2 = 2 என்க)
7
25
10
52
15.
ஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?
Ctrl + E
Ctrl + U
Ctrl + Z
Ctrl + n
16.
ASCII குறிப்பு வரைக.
17.
மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?
18.
சில்லுகளை எவ்வாறு நீக்குவாய்?
19.
< form > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கிய பண்புக்கூறுகளை விவரி
20.
HTML ல் கோப்புகளை சேமிக்கும் வழிமுறைகள் யாவை?
21.
தனிநபர் வலையமைப்பு (PAN) மற்றும் வளாக பகுதி வலையமைப்பு (CAN) வேறுபடுத்துக.
22.
கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
23.
தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
24.
பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?
25.
விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகலெடுப்பதற்கான வழிகளை விவரி.
26.
Impress-ல் உள்ள வரைதல் (Drawing) கருவிப்பட்டையை விவரி.
27.
10 எண்களின் கூட்டலைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் நிரல் எழுதுக.
28.
கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக
29.
கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?
30.
10 எண்களை வெளியீடு செய்வதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை எழுதுக
31.
32.
பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக மேலும் அதன் பயன்பாடுகள் யாவை ?
33.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
34.
பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்.
| A | B | C | D | E | |
| 1 | Year | Chennai | Madurai | Tirichi | Coimbatore |
| 2 | 2012 | 1500 | 1250 | 1000 | 50 |
| 3 | 2013 | 1600 | 1000 | 950 | 350 |
| 4 | 2014 | 1900 | 1320 | 750 | 300 |
| 5 | 2015 | 1850 | 1415 | 820 | 200 |
| 6 | 2016 | 1950 | 1240 | 920 | 250 |
2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், பின்வருவனவற்றுக்கு வாய்பாடுகளை எழுதுக.
(1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
(2) 2012 முதல் 2016 வரை கோயம்புத்தூரின் மொத்த விற்பனை.
(3) 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில், மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
(4) 2012 முதல் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை.
(5) கோவையை ஒப்பிடுகையில், சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யப்பட்டது.
35.
ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக.
36.
பக்கத்தின் அமைவை எவ்வாறு மாற்றுவாய்?
37.
நீக்கக் கூடிய வட்டிலிருந்து (Removable disk)அல்லது ஒரு வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க வழிகள் யாவை?
38.
விழித்திரை வருடி (Retinal Scanner) என்றால் என்ன?
39.
Slide Master ஐ எவ்வாறு தோன்ற செய்யலாம்? எத்தனை வடிவங்களில் அதைக் காணலாம்?
40.
ஜாவாஸ்கிரிப்ட்டில் மாறியின் பங்கு பற்றி எழுதுக
41.
Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக
42.
< mark > ஒட்டின் பயன் யாது?
43.
ICANN - அமைப்பின் பணி யாது?
44.
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை?
45.
“Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?
1.
(a)
common Gateway Interface
2.
(b)
வார்ம்ஸ்
3.
(a)
0 1 2
4.
(c)
{ }
5.
(b)
< select >
6.
(b)
Body
7.
(a)
புரவலர் (host)
8.
(a)
My document
9.
(a)
விண்டோஸ் 7
10.
(a)
4.7 GB
11.
(c)
876
12.
(c)
திரையகம்
13.
(c)
F5
14.
(b)
25
15.
(c)
Ctrl + Z
16.
1.அமெரிக்க ஐக்கிய நாட்டின் (USA) அங்கீகாரம் பெற்ற மிகவு பிரபலமான ஒரு குறியீட்டு முறையாகும்.
2. பெரும்பாலான கணிப்பொறிகளில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த குறியீட்டு முறை ஆங்கில மொழி எழுத்துருக்களை கையாளும் திறன் பெற்றது. அதாவது, இத முறையில் ஒவ்வொரு எழுத்துருவுக்கும் ஒரு குறிப்பிட்ட எண் வழங்கப்பட்டுள்ளது.
3.ASCII-8 என்ற புதிய பாதிப்பு, 28 பிட் முறையில் 256 எழுத்துருக்களைக் கையாளும் திறன் 0 முதல் 255 வரை குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
4.ஆங்கில பெரிய எழுத்துரு A க்கு நிகரான ASCII குறியீட்டு எண் 65. இதற்கான நிகரான 7 பிட் ASCII யின் இருநிலை மதிப்பு 1000001 ஆகும். ASCII-8 ன் இருநிலை மதிப்பு 01000001.
17.
1. திரைமுகப்பிலிருந்து, மறுசுழற்சித் தொட்டியைத் திறக்கவும்.
2. அதில், அழிக்கப்பட்ட கோப்புகள் அல்லது கோப்புறைகள் தோன்றும்,மீட்டெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையின் மீது வலது கிளிக் செய்யவும், அப்போது தோன்றும் மேல்மீட்புப் பெட்டியிலிருந்து Restore தேர்வைக் கிளிக் செய்யவும்.
3.மறுசுழற்சித் தொட்டியிலுள்ள அனைத்து கோப்பு அல்லது கோப்புறைகளையும் மீட்டெடுக்க, Restore all என்ற பணிக்குறியை கிளிக் செய்யவும்.
18.
1.நீக்க விரும்பும் சிலுவை தேர்ந்தெடுக்கவும்.
2.Edit⟶DeleteSlide என்ற கட்டளை மூலம்,
3.அல்லது சில்லின் மீது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தி வரும் மேல் மீட்புப் பட்டியில் Delete Slide என்பதைத் தேர்வு செய்து நீக்க வேண்டும்.
19.
< form > ஒட்டுடன் method மற்றும் action என்னும் முக்கியமான பண்புக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
Method :
method பண்புக்கூறு, படிவ உறுப்புகளின் பெயர்களும், மதிப்புகளும் சேவையகத்திற்கு எவ்வாறு அனுப்பப்படும் என்கிற வழிமுறையைக் குறிப்பிடுகின்றன.
get வழிமுறை, படிவ உறுப்புகளின் பெயர்களையும், மதிப்புகளையும் URLன் பின் இணைகின்றன.
post வழிமுறை பெயர்களையும், மதிப்புகளையும் தகவல் பொட்டலங்களாக அனுப்பி வைக்கின்றன.
Action :
action பண்புக்கூறு, படிவ விவரங்களைச் செயலாக்கும் சேவையகத்திலுள்ள நிரல் அல்லது உரைநிலை கண்டறிகிறது. பொது நுழைவு இடைமுக நிரலின் பெயரை உணர்த்துகிறது. இத்தகைய நிரல்கள் போல், ஜாவா (செர்வ்லெட்).Active பாக்ஸ் (ASP) போன்ற மொழிகளில் எழுதப்படுகின்றன.
20.
படி 1: File \(\rightarrow\)Save என்ற வரிசையில் சுட்டியை இயக்க வேண்டும். அல்லது Ctrl+S என்ற சாவிச்சேர்மானத்தை அழுத்த வேண்டும்.
படி 2:Save as உரையாடல் பெட்டியானது திரையில் தோன்றும். File Name என்ற உரையாடல் பெட்டியில் கோப்பின் பெயருடன். htm or .html என கொடுக்க வேண்டும்.Save as Type என்பதில் All Files என்பதை தேர்வு செய்ய வேண்டும்.Save பொத்தானை Click செய்ய வேண்டும்.

21.
| தன்மைகள் | தனிப்பட்ட பகுதி வலையமைப்பு Personal Area Network (PAN) |
வளாகப் பகுதி வலையமைப்பு Campus Area Network (CAN) |
| வரம்பு | 100 Mts வரை | 5 Mts வரை |
| அமைவு | ஒரு கட்டிடத்திற்குள் தனிநபரால் நிர்வகிக்கக் கூடியது. மிகக் குறைந்த தூரத்தை உள்ளடக்கி இருக்கும் |
குறும்பரப்பு வலையமைப்பை விட பெரிதாகவும் இருக்கும் எ,கா: பல்கலைக்கழகம், பள்ளிக்கூடம், சிறிய தொழில் நிறுவனங்கள். |
| வேகம் | 250 kbps வரை | 40 KB/s முதல் 1 MB/s வரை |
| நன்மைகள் | திறன் மிக்கது, செலவு குறைவானது, வசதியானது. தனிநபரால் கட்டுப்படுத்தக் கூடியது. 8 சாதனங்கள் வரை இணைக்க இயலும் (Hotspot). |
விலை குறைவானது, கம்பி (or) கம்பியில்லா இணைப்பு, அதிக அலைக்கற்றையுடன் கூடிய பல துறை வலை அமைப்புகளை அமைக்கும் வசதி. |
| குறைபாடுகள் | மிகக் குறைந்த இடத்தை (10 mts வரை மட்டும்) உள்ளடக்குதல், தரவு செல்லும் வேகம் மற்ற வலையமைப்புடன் ஒப்பிடுகையில் குறைவு. |
நிர்வகிப்பது கடினம். |
22.
| கணிப்பொறி அமைப்பு | கணிப்பொறி கட்டமைப்பு |
| கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இது நிரலருக்கு வன்பொருள் கூறுகளை வெளிப்படையாக விளக்குகிறது. |
கணிப்பொறி கட்டமைப்பு என்பது கணிப்பொறி வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளை உள்ளடக்கியது. |
(i) கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இதில் உள்ளீட்டு / வெளியீட்டு சாதனங்கள், மையச் செயலகம் (CPU), சேமிப்பு சாதனங்கள் மற்றும் முதன்மை நினைவகம் ஆகியவை அடங்கும்.
(ii) இது கணினியின் பல்வேறு பாகங்களை எப்படி செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது. இது ஒரு கணினியின் அனைத்து வன்சாதனங்களும் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றியும், மேலும் பல்வேறு பாகங்களின் இணைப்பு பற்றியும் விளக்குகிறது.
(iii) கணினியின் கட்டமைப்பு என்பதும் கணிப்பொறியின் அமைப்பு என்பதும் ஒன்றே. ஆனால் கணிப்பொறியை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளுடன் கணினி கட்டமைப்பு உள்ளடக்கியது. அதே நேரத்தில் கணினி அமைப்பானது, நிரலருக்கு வன்பொருள் கூறுகளை வெளிப்படையாக விளக்குகிறது.
23.
1. இந்த வகையில் ஒரு சிறு கம்பி, மை நாடா மீது தட்டி ஒரு புள்ளியை ஏற்படுத்தும் அல்லது ஒரு முழு எழுத்தை தட்டி அந்த எழுத்தை ஏற்படுத்தும்.
2. இந்த அச்சுப்பொறிகள் இயந்திர அழுத்தத்தைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் பல படிகள் எடுக்க வகை செய்கிறது.
எ.கா: வரி அச்சுப்பொறி மற்றும் வரிபுள்ளி அச்சுப்பொறி.
3. புள்ளி அச்சுப்பொறி ஒரு குறிப்பட்ட எண்ணிக்கையிலான செருகி அல்லது கம்பிகளைப் பயன்படுத்தி அச்சிடுகிறது.
4. ஒவ்வொரு புள்ளியும் ஒரு சிறிய உலோகக் கம்பி மூலம் உருவாக்கப்படுகிறது.
5. இதில் பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு வரி உரையே மட்டுமே அச்சிட முடியும்.
6. விரிபுள்ளி அச்சுப்பொறிகள் நிலையான அச்சுத் தலையை அச்சிடப் பயன்படுத்துகிறது.|
7. இந்த அச்சுப்பொறிகளின், அச்சிடும் வேகம் 30 முதல் 1550 சிபிஎஸ் (CPS - Character Per Second) வரை வேறுபடுகிறது.
8. அடிப்படையில், இது ஒரு பக்க அளவிலான புள்ளிகளை அச்சிடுகிறது.
9. வரி அச்சுப்பொறிகள் வினாடிக்கு 1000 க்கு மேற்பட்ட வரிகளை அச்சிடும் திறன் கொண்டது.
24.
இரு வகையான பக்க அமைவுகள் உள்ளன.
பக்கவாக்கு மூலம் (Landscape):
1. ஆவணத்தின் அகலம் அதன் நீளத்தை விட பெரியதாக இருந்தால் பக்கவாட்டு வடிவம் எனப்படும்.
2. தொழில் முறை புகைப்படங்கள் அழைப்பிதழ்கள் போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
நீளவாக்கு வடிவம் (Portrait):
1. கொடாநிலையாக ஒரு ஆவணத்தின் பக்க அமைவானது நீளவாக்கில் இருக்கும்.
2. இந்த அமைவில் ஆவணத்தின் நீளம் அதன் அகலத்தை விட பெரியதாக இருக்கும். புத்தகங்கள் , செய்தித்தாள்கள் இந்த வடிவத்தில் அச்சிடப்படும்.
25.
நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் மூலம்:
1. நகலெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையைத் தேர்வு செய்யவும்.
2.Edit → Copyஅல்லது Ctrl + C அல்லது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தினால் மேல் மீட்புப் பட்டித் தோன்றும் அதில் Copy என்ற கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. புதிய இடத்தில் கோப்புறையை ஓட்டுவதற்கு Edit →Paste அல்லது Ctrl + V யைக் கிளிக் செய்ய வேண்டும்.அல்லது சுட்டியின் வலது பொத்தானை அழுத்தினால் மேல்மீட்புப் பட்டித் தோன்றும். அதில் Paste என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
இழுத்து விடுதல் மூலம்:
1.வலது சாளரப் பகுதியில் நகலெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. தேர்வு செய்த கோப்பு அல்லது கோப்புறையை,இடது சாளரப் பகுதியில் கோப்புறைப்பட்டியில் இழுத்து விட வேண்டும்.
26.
வரைகலை (Drawing) கருவிப்பட்டையில் வரைகலை படங்களை உருவாக்கப் பயன்படும் கருவிகள் உள்ளன. இக்கருவிப்பட்டை காட்டப்படவில்லை எனில், முதன்மை பட்டியில் View⟶Toolbars⟶Drawing என தேர்ந்தெடுக்கவும்.
1.Select : குறிப்பிட்ட பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம். சுட்டி இழுப்பதன் மூலம் பல பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2.Line :ஒரு நேர்க்கோட்டை வரைகிறது.
3.Arrow : ஒரு அம்புக்குறியைக் கொடு முடியும் ஒரு நேர்க்கோட்டை வரைகிறது.
4.Rectangle : ஒரு செவ்வகத்தை வரைகிறது. ஒரு சதுரத்தை வரைய shift பொத்தானை அழுத்தவும்.
5.Ellipse :ஒரு நீள்வட்டம் வரைகிறது. வட்டத்தை வரைவதற்கு shift பொத்தானை அழுத்தவும்.
6.Text: ஒரு உரைப் பெட்டி, கிடைமட்டமாக சீரமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.
7.Vertical Text : ஒரு உரைப்பெட்டி, செங்குத்தாக சீரமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது
8.Curve :ஒரு வளைவை, வரைகிறது.
9.Connectors: இரண்டு புள்ளிகளுக்கு இடையே ஒரு இணைப்பு வரியை வரைகிறது. கூடுதல் இணைப்பிகளுக்கு கருப்பு முக்கோணத்தை கிளிக் செய்யவும்.
27.
/ / - >
< /script >
< body >
< /body >
< /html >
OUTPUT
Enter initial value :1
Enter final value: 10
Function for sum of 10 numbers Initial No:1
Final No: 10
The result: 55



28.
கணித செயற்குறிகள் (Arithmetic Operators)கூட்டல் (+), கழித்தல் (-), பெருக்கல் (*), வகுத்தல்(/) மற்றும் வகுமீதி (%) போன்ற அடிப்படை கணிதசெயற்குறிகள் எல்லாவற்றையும் ஜாவாஸ்கிரிப்ட் ஆதரிக்கும்.
| கணித செயற்குறி | பொருள் | எடுத்துக்காட்டு | விளைவு |
| + | கூட்டல் | var sum = 20+120 |
Variable sum = 140 |
| - | கழித்தல் | var diff - 20-120 |
Variable diff - 100 |
| * | பெருக்கல் |
var prod = 10*100 |
Variable prod = 1000 |
| / | வகுத்தல் |
var res = 100/522 |
Variables = 5.22 |
| % | வகுமீது | var rem = 100%522 |
Variable rem = 22 |
குறுக்குவழி கணித செயற்குறிகள்
Output:
29.
| வ.எண் | குற்றம் | செயல்பாடுகள் |
| 1. | சைபர் தீவிரவாதம்(Cyber terrorism) |
ஒரு நபரையோ அல்லது வணிகத்தையோ திருடுதல், மிரட்டுதல் மற்றும் அச்சுறுத்தலாகும். |
| 2. | இணையத் தொந்தரவு(Cyber stalking) | இணையத்தின் மூலம் நெருக்கடி கொடுத்தல் |
| 3. | தீம்பொருள் (Malware) | இணையவழி தொந்தரவு பல்வேறு செயல்களான திருடுதல், மறையாக்கம் அல்லது முக்கியமான தரவுகளை நீக்கம் செய்தல், எச்சரிக்கை அல்லது கணிப்பொறி செயல்பாடுகளை நடத்துதல், செயல்பாடுகளை பயனர் அனுமதி இல்லாமல் கண்காணித்தல், |
| 4. | சேவை தாக்குதல்களின் மறுப்பு (Denial of service attack) |
போலி கோரிக்கைகள் மூலம் அளவுக்கதிகமான கணிப்பொறி அமைப்பினால் சாதாரண சட்டவிரோத கோரிக்கைகள் பணியாற்ற இயலாத நிலை. |
| 5. | மோசடி (Fraud) | தரவுகளை தவறாக கையாளுதல், உதாரணமாக வங்கி பதிவுகளை மாற்றுவதன் மூலம் அங்கீகாரமில்லாத வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனையில் மோசடி செய்தல், |
| 6. | அரண் உடைத்தல் (Harvesting) |
சட்டவிரோதமாக அடுத்த பயனரின் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை சேகரித்து, பயனரின் கணக்குகளில் நுழைந்து பயனடைதல். |
| 7. | அடையாளத் திருட்டு (Identity theft) |
நிதி ஆதாயத்திற்காக, தனி நபரின் அடையாளத்தை குற்றவாளிகள் பயன்படுத்துதல், |
| 8. | அறிவுசார் சொத்து திருட்டு (Intellectual property theft) |
ஒரு நிறுவனத்தால், தனி நபரால் உருவாக்கப்பட்ட நடைமுறை அல்லது கருத்தியல் தகவலை திருடுதல்) |
| 9. | சலாமி ஸ்லைசிங் ( (Salami slicing) |
இணைய பண பரிவர்த்தனையில் சிறிய அளவாக பணம் திருடுதல், |
| 10. | ஊழல் (Scam) | உண்மை இல்லாத ஒன்றை, மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது. |
| 11. | ஏமாற்றுதல் (spoofing) | அறியப்படாத மூலத்திலிருந்து பெறுபவர் அறியப்பட்ட ஆதாரத்தை அனுப்பி தீங்கிழைக்கும் நடைமுறையாகும். |
| 12. | ஸ்பேம்(Spam) | தேவையற்ற மின்னஞ்சலை அதிக எண்ணிக்கையில் இணைய தளபயனர்களுக்கு அனுப்புதல். |
30.
< Html >
< Head >
< Title > Program-To display 10 natural numbers < /Title >
< /Head >
< Body >
< script language="Javascript" type="text/ Javascript" >
document.write("< h2 >The First 10 natural
Numbers< /h2 >");
var n=1;
while (n< =10)
{
document.write(n+"< br >");
n= n + 1;
}
< /script >
< /Body >
< /Html >
31.
32.
பரவல் இயக்க அமைப்பு :
டிஜிட்டல் பிணையும் (இணைய தளம் / உள்வலை வழியாக உலகெங்கிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்பட்ட தரவு மற்றும் பயன்பாட்டுகளை இந்த அம்சம் கவனித்து கொள்கிறது.
பரவல் இயக்க அமைப்பானது உலகெங்கிலும் உள்ள எந்த கணினியில் இருக்கும் கோப்புகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பயனர் வெவ்வேறு இடங்களில் இருந்து தரவைக் கையாள முடியம். பயனர்கள் தங்கள் சொந்தக் கணினியில் உள்ள கோப்புகளைக் கையாளுவதைப் போன்று உணருவர்.
பரவல் இயக்க அமைப்பின் நன்மைகள்:
1. ஒரே இடத்தில் உள்ள ஒரு பயனர். வலைப்பின்னல் உள்ள மற்றொரு இடத்திலுள்ள எல்லா வளங்களையும் பயன்படுத்தலாம்.
2. பல கணினி வளங்களை வலைப்பின்னலில் எளிதாக இணைக்க முடியும்.
3. வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துகிறது.
4. புரவலன்/புரவலர் (Host) கணினியில் உள்ள சுமையைக் குறைக்கிறது.
33.
| கணிப்பொறியின் தலைமுறை | காலம் | பயன்படுத்திய முதன்மை பொருள் | நிறை/குறை |
|---|---|---|---|
| முதலாம் தலைமுறை | 1942-55 | வெற்றிடக் குழல் (Vaccum tubes) | 1. அளவில் பெரியது 2. அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. 3. அதிக வெப்பம் காரணமாகச் செயலிழக்கும். 4. இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது. eg: ENIAC, EDVAC, UNIVACI |
| இரண்டாம் தலைமுறை | 1955-64 | திரிதடையகம் (Transistors) | 1. முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. 2. குறைந்த வெப்பத்தை உருவாக்கியது. 3. துளையிட்ட அட்டை உள்ளீட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. 4. முதல் இயக்க அமைப்பான தொகுப்பு செயலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. 5. இயந்திர மொழி மற்றும் அசெம்பளி மொழி பயன்படுத்தப்பட்டது eg: IBM 1620, UNIVAC 1108, IBM 1401 |
| மூன்றாம் தலைமுறை | 1964-75 | ஒருங்கிணைந்த சுற்றுகள் Integrated Circuits (IC) | 1. கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மையுடையது. 2. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. 3. உயர் நிலை மொழி பயன்படுத்தபட்டது. |
| நான்காம் தலைமுறை | 1975-80 | நுண் செயலி (மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI) |
1.சிறியது மற்றும் வேகமானது 2. IBM மற்றும் APPLE போன்ற நுண்கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது. 4. கையடக்க கணிப்பொறிகள் அறிமுகமாயின. |
| ஐந்தாம் தலைமுறை | 1980-இன்று வரை |
மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் |
1. இணைச் செயலாக்கம் 2. மீ-கடத்தி 3. கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது. 4. நிழற்படங்கள் மற்றும் வரைபடங்களைப் புரிந்து கொள்ளும் திறன் 5. செயற்கை நுண்ணறிவு மற்றும் நிபுணர் அமைப்பு (Expert system) அறிமுகம். 6. தீர்மானித்தல் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல். |
| ஆறாவது தலைமுறை | எதிர் காலத்தில் | செயற்கை அறிவு |
1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு. |
34.
1. 2015 ம் ஆண்டின் மொத்த விற்பனையைக் கணக்கிடப் பயன்படும் வாய்ப்பாடு = SUM (B5 : E5) = 4285
2. 2012 முதல் 2016 வரை கோயம்புத்தூரின் மொத்த விற்பனையைக் கணக்கிடப் பயன்படும் வாய்ப்பாடு = SUM (E2 : E6) = 1600
3. 2015 மற்றும் 2016 ஆண்டுகளில், மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை = SUM (C5 : D6) = 4395
4. 2012 மற்றும் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை = AVERAGE (B2 : B6) = 1760
5. கோவையை ஒப்பிடுகையில், சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டது = B6 - E6 = 1700
35.
சொற்செயலியின் ஒரு முக்கிய பணி பக்க வடிவூட்டலாகும். பக்க வடிவூட்டல் என்பது பக்கத்தின் ஓரம், பக்க எண், பக்க அமைப்பு, தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு போன்ற பக்கத்தின் பண்புகளை வடிவூட்டல் செய்வதாகும். வடிவூட்டல் செய்யப்பட்ட பக்கங்கள் படிப்பதற்கு எளிமையாகவும் ஆர்வமூட்டுவதாகவும் அமையும்.
பக்க அளவை மாற்ற : ரைட்டரில் ஒரு பக்க அளவு A4 அச்சிடும் தாளின் அளவான 8.5x11” கொடாநிலையாக இருக்கும். பலவகையான ஆவணத்தின் அளவிற்கேற்ப பக்க அளவை பயனர் மாற்றிக் கொள்ளலாம். பக்க அளவை மாற்ற:
1. பக்க அளவை மாற்றுவதற்கான பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
2. Select Format → Page, என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page Style உரையாடல் பெட்டி தோன்றும்.
3. Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Paper format குழுவில் A4, Legal போன்ற வடிவூட்டல் தேர்வுகளிலிருந்தோ அல்லது width மற்றும் Height என்ற விருப்பத்தை பயன்படுத்தி பக்க அளவை மாற்றலாம்.
பக்கத்தின் ஓரங்களை மாற்ற :
பக்க ஓரம் என்பது, ஒரு பக்கத்தின் மேல், கீழ், இடது மற்றும் வலது ஓரங்களில் உள்ள வெற்றிடத்தை குறிக்கும். ஒரு பக்கத்தின் உரையில் மேல் ஓரம், தொடங்குமிடம், தட்டச்சு செய்யும் போது கீழ் ஓரம் முடிந்தால் அடுத்த பக்கத்திற்கு செல்ல, இடது ஓரத்திலிருந்து துவங்கி வலது ஓரம் வந்தவுடன், அடுத்த வரிக்கு செல்ல இவையனைத்தும் ரைட்டரின் ஓரங்கள் தீர்மானிக்கும்.
பக்கத்தின் ஓரங்களை மாற்ற அல்லது அமைக்க ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் இரு வழிகள் உள்ளன:
1. ஓரத்தின் அளவுகள் சரியாகத் தெரியாத பொழுது ரூலர்கள் கொண்டு விரைவாகவும் மற்றும் எளிதாகவும் மாற்றலாம்.
2. ஓரத்தின் அளவுகள் சரியாகத் தெரிந்தால் Page style உரையாடல் பெட்டி கொண்டு ஓரங்களை மாற்றலாம்.
36.
1. பக்க அளவை மாற்றுவதற்கான பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. Format \(\rightarrow \) Page என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் Page Style உரையாடல் பெட்டி தோன்றும்.
3. Page தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Page Format குழுவில் A4. Legal போன்ற வடிவூட்டல் தேர்வுகளிலிருந்தோ அல்லது width மற்றும் ஹெயிட் என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி பக்க அளவை மாற்றலாம்.
37.
நீக்கக் கூடிய வட்டிலிருந்து அல்லது ஒரு வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க உள்ள வழிகள்:
1. நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல்
2. Send To தேர்வு மூலம்.
38.
1. விழித்திரை வருடி என்பது ஒரு உயிரளவையியல் (biometric) நுட்பத்தில் செயல்படும் கருவி ஆகும்.
2. இது ஒரு நபரின் விழித்திரை இரத்த நாளங்களின் தனிப்பட்ட வடிவங்களைப் பயன்படுத்துகிறது.
39.
View Master Slide Master என்பதைக் கிளி செய்வதன் மூலம் Slide Master ஐ தோன்றச் செய்யலாம்.
Master Slide கல் இரண்டு வடிவங்களில் காணலாம்.
1. Slide Master 2.Notes Master
40.
மாறிகள் என்பவை மதிப்பு தங்கியுள்ள நினைவக இருப்பிடத்தைக் குறிக்கும். மாறி என்பது மதிப்பிற்கான குறியீட்டு பெயர். Var என்ற சிறப்பு சொல் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்டில் மாறிகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு மாறிக்கும் ஒரு பெயரிடப்படும். அதை குறிப்பெயர் என்பர்.
ஒவ்வொரு மாறியும் ஒரு தரவின அடிப்படையில் அமையும். அது அந்த எந்த வகை தரவை ஏற்கும் என்பதைக் குறிக்கும். சரங்கள், எண்கள் மற்றும் பூலியன் என்பவை ஜாவாஸ்கிரிப்டின் அடிப்படை தரவினங்களாகும்.
41.
Switch கட்டமைப்பின் கட்டளை அமைப்பு
Switch (expression)
{
case label 1:
statements 1;
break;
case label 2 :
statement 2;
break;
case label n;
statement-N;
break;
default:
statement;
}
42.
HTML-ல் உரையை உயர்த்திக் காட்டுவதற்கு < mark > என்ற ஒட்டானது பயன்படுகிறது.இது ஒரு அடைவு ஒட்டாகும். < mark > மற்றும் < /mark > என்ற ஓட்டுகளுக்குள் குறிப்பிடப்படும். அனைத்தும் கொடாநிலை நிறத்தில் (மஞ்சள்) உயர்த்தி காட்டப்படும்.
< html >
< head >
< tittle >Highlighting text < /tittle >
< head >
< body >
A computer is an < mark >electronic
< /mark > device
< /body >
< /html >

43.
1. இணைய சமூகம் என்ற தன்னார்வ உறுப்பினர் அமைப்பானது இணைத்தல் உலகிளாவிய தகவல்களை பரிமாறிக் கொள்வதில் பொறுப்பு எடுத்துக்கொள்கிறது.
2. ஐகான் (Internet Corporation For Assigned Names and Numbers) என்ற அமைப்பு இந்த முகவரி பதிவை நிர்வகிக்கிறது.
3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெயர் மீண்டும் பதிவு செய்யப்பட்ட பெயர் மீண்டும் பதிவு செய்யப்படாமல் இருக்க உதவுகிறது.
44.
கணிப்பொறி பயன்படுத்தும் முக்கிய இயக்க அமைப்புகள் பின்வருமாறு:
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்
3. லினக்ஸ்
4. iOS
5. அண்ட்ராய்டு
45.
"Insert Cells" உரையாடல் பெட்டியில் உள்ள நான்கு விருப்பத் தேர்வுகள்:
1.Shift cells down
2. Shift cells right
3. Entire row
4. Entire Column
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards