11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/12/2018
Higher Secondary First Year Important Question
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
ஏற்றுமதி வணிகத்தின் முக்கிய இடைநிலையர்கள் பற்றி எழுதுக.
2.
இறக்குமதி வணிக நடைமுறைகளை விவரி.
3.
உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கைகளை விவரி
4.
பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிகளை குறிப்பிடுக.
5.
உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?
6.
பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கி எழுதுக.
7.
மடங்குக் கடைகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
8.
பண்டமாற்று வணிகத்தின் தடைகள் யாவை? விவரி?
9.
சில்லறை வியாபாரிகளின் வகைகளை விவரி
10.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுவின் தோற்றம், வளர்ச்சி பற்றி குறிப்பு வரைக.
11.
12.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சேமிப்பு எவ்வாறு உதவுகிறது என்பதை எடுத்துக்காட்டுக.
13.
தொழில் நிதியியலின் இயல்புகள் [தன்மைகள்] அல்லது பண்புகள் யாவை?
14.
இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?
15.
சட்டப்படி செல்லக்கூடிய ஒப்பந்த புள்ளியின் இன்றியமையாத கூறுகள் யாவை?
1.
கிழ்கண்ட இடைநிலையர்கள் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபடுகிறார்கள். அனுப்புகை ((Forwarding Agent), கழிவு முகவர் (Commission Agent), ஏற்றுமதி வணிக இல்லம் (Export Trading House)
(i) அனுப்புகை முகவர் (Forwarding Agent):
ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்புவது தொடர்பான சுங்க நடைமுறைகளை பின்பற்ற அனுப்புகை முகவரை நியமிக்கிறார். அனுப்புகை முகவர் ஏற்றுமதியாளருக்கு கீழ்கண்ட வழிகளில் உதவுகிறார்.
1. ஏற்றுமதியாளருக்கு ஏற்றுமதி தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளையும் தெரிவிக்கிறார்.
2. ஏற்றுமதியாளருக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுதல் தொடர்பான செலவுகள் பற்றிய தகவல் தருகிறார்.
3. சரக்கை கட்டுமம் செய்தல், குறியீடு செய்தல் போன்ற பணிகளில் ஏற்றுமதியாளருக்கு உதவுகிறார்.
4. ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்ப போக்குவரத்து வசதி செய்து உதவுகிறார்.
5. சுங்க நடைமுறைகளை பின்பற்றுவதில் உதவுகிறார்.
6. ஆவணங்களை தயாரித்தல் மற்றும் பெறுதல் ஆகியவற்றில் உதவுகிறார்.
7. போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சி குறித்த தகவலை ஏற்றுமதியாளருக்கு தருகிறார்.
(ii) கழிவு முகவர் (Commission Agent): கழிவு முகவர் அடிப்படையில் செயல்படும் பண்பாட்டு முகவர் ஆவார். எவர் தன் சொந்த பெயரில் செயல்படுகிறார். இவரின் சிறப்பு, விலை நிலவரம் பற்றிய தேர்ந்த அறிவு பெற்றிருப்பது இவரின் சிறப்பு ஆகும். இவர் தன்னுடைய இறக்குமதி வாடிக்கையாளருக்கு சரக்கை குறிப்பிட்ட விலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றுமதியாளர் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுப்பி வைக்கிறார். சரக்கை அனுப்பியதும் அவருக்கும் ஏற்றுமதியாளர்க்கும் உள்ள உறவு முடிந்து விடுகிறது. இது தற்காலிக உறவு முறை ஆகும். இந்த வியாபார நடவடிக்கை நிறைவு பெற்றதும் தனக்குரிய கழிவை பெற்றுக்கொள்கிறார்.
(iii) ஏற்றுமதி ஆணை நிலையம் (Export Indent Houses): இந்தியாவில் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உலக சந்தையை வலுவூட்டவும் ஏற்றுமதி வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு உதவிகளை செய்யவும், ஏற்றுமதி ஆணை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், வணிக நிறுவனங்கள், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் ஏற்றுமதி தொழில் மண்டலம் (எஸ்பியர்ட் Processing Zone) மின்னணு தொழில் பூங்கா ஆகியவை அடங்கும்.
2.
இறக்குமதி வணிக நடைமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. பின் வருவன இறக்குமதி வணிகத்திற்காக ஒரு பொதுவான நடைமுறையாகும்.
(i) இறக்குமதி உரிமம் பெறுதல்: இறக்குமதியாளர் இறக்குமதி உரிமத்தை அயல்நாட்டு வணிக பொது இயக்குநரிடமிருந்தோ அல்லது அனுமதி பெற்ற மண்டல அதிகாரியிடமிருந்தோ பெற வேண்டும்.
(ii) வியாபார தகவல் வினவல்:
இறக்குமதி உரிமத்தை பெட்ரா பிறகு, ஏற்றுமதியாளரிடமோ அல்லது அவரின் முகவரிடமோ வியாபார விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
(iii) அன்னியச் செலாவணி பெறுதல்: இறக்குமதியாளர் தான் இறக்குமதி செய்த சரக்கிற்குரிய தொகையை அயல்நாட்டு பண மதிப்பில் செலுத்த அன்னிய செலாவணியைப் பெற வேண்டும்.
(iv) சரக்காணை அனுப்புதல்: இறக்குமதியாளர் சரக்காணையை நேரடியாகவோ அல்லது சரக்காணையத்தின் மூலமாகவோ ஏற்றுமதியாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
(v) நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்தல்: அயல் நாடு ஏற்றுமதியாளர் இந்திய இறக்குமதியாளரை பற்றியும் அவரின் பணம் திருப்பி செலுத்தும் திறன் பற்றியும் அறிந்திருக்க ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரை தன் பெயரில் நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்து தருமாறு கோரா வேண்டும்.
(vi) கப்பலிடு ஆவணங்களை பெறுதல்:
இறக்குமதியாளர் அனைத்துக் கப்பலிடு ஆவணங்களையும் அறிவுரைக் குறிப்புடன் சேர்த்து ஏற்றுமதியாளரிடமிருந்து பெற வேண்டும்.
(vii) அகற்றீட்டு முகவரை நியமித்தல்: இறக்குமதி துறைமுகத்திலிருந்து சரக்கை அகற்றீடு செய்வதற்கு பல்வேறு சுங்க நடைமுறைகளை தன்னால் பின்பற்ற முடியாத நிலையில் சரக்கைத் துறைமுகத்திலிருந்து வெளியே கொணர்வதற்கு அகற்றீட்டு முகவரை நியமிக்க வேண்டும்.
(viii) சுங்க நடைமுறைகளைப் பூர்த்தி செய்தல்:
அகற்றீட்டு முகவர் இறக்குமதியாளர் சார்பாக இறக்குமதி செய்யப்பட்ட சரக்கை வெளியே கொணர்வதற்கு பின்வரும் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1. சரக்கை வெளியே கொணர்வதற்கு ஒப்புகை பெறுதல்.
2. துறைமுகக் கட்டணம் செலுத்துதல்
3. நுழைவுச் சீட்டு தயாரித்தல்
4. இறக்குமதி தீர்வை செலுத்துதல்
5. துறைமுகத்திலிருந்து சரக்கை வெளியே கொணர்தல்
7. இறக்குமதியாளருக்கு சரக்கை அனுப்புதல்
8. இறக்குமதியாளருக்கு குறிப்பு அனுப்புதல்
(ix) சரக்கைப் பெற்றுக் கொள்ளுதல்: இறக்குமதியாளர் உரிய இரயில் நிலையத்திலோ அல்லது லாரி நிறுவனத்திலோ இரயில் இரசீதைக் கொடுத்து சரக்கைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
(x) இறக்குமதிக்கான தொகையை செலுத்தி கணக்கைக் தீர்த்தல்:
இறக்குமதியாளர் கீழ்கண்ட வழிகளில் இறக்குமதிக்கான தொகையைச் செலுத்தலாம்.
1. இறக்குமதியாளர்தொகையை செலுத்திய பிறகு ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
2. இறக்குமதியாளர் மாற்றுச் சீட்டிற்கு தொகையை செலுத்திய பிறகு ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
3. இறக்குமதியாளர் மாற்றுச் சீட்டினை ஏற்றபிறகு ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
3.
(i) GATT ஒப்பந்தம்:GATT என்பது உலக வணிக அமைப்பு உடன்படிக்கைகளில் ஒரு முக்கிய பகுதியாகும்.இது கட்டணமில்லா கடைகளை சமாளிக்க சிறப்பு உடன்பாடு அடங்கியுள்ளது
(ii) ஜவுளி மற்றும் ஆடை ஒப்பந்தம் (Agreement of Textiles and Clothing): இந்த ஒப்பந்தம் வளர்ந்து வரும் நாடுகளால் ஜவுளி மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஒதுக்கீடு கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதற்கு உருவானது.இது முக்கியமாக வளரும் நாடுகள் தங்கள் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிகளை விரிவாக்க உதவுகிறது.
(iii) வேளாண் ஒப்பந்தம் (Agreement of Agriculture): விவசாயத்தில் இலவச மற்றும் நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்வதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த உடன்படிக்கை வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் தங்கள் இறக்குமதி மற்றும் மானியங்கள் மீதான சுங்கக் கடன்களை குறைக்கும்.ஆனால் வளரும் நாடுகளில் விவசாயம் மீது இந்த நாடுகளில் அதிக சார்பு இருப்பதை கருத்தில் கொண்டு பரஸ்பர சலுகையை வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
(iv)சேவை வணிகம் மீதான பொது ஒப்பந்தம் (General Agreement on Trade in Services): இந்த உடன்படிக்கையின் கீழ்,அணைத்து உறுப்பு நாடுகளும் சேவைகள் வர்த்தகத்தில் உள்ள கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்.இது வெளிநாட்டு சேவை வழங்குவர் மற்றும் உள்ளூர் சேவை வழங்குநருக்கு இடையில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கிறது.இந்த உடன்படிக்கை படி அணைத்து உறுப்பினர் நாடுகளும் சேவை வர்த்தகம் தொடர்பான அணைத்து சட்டங்களை வெளியிட வேண்டும்.
(v) அறிவுசார் சொத்து உரிமைகள் வாணிகத் தொடர்புடைய அம்சங்கள் மீதான உடன்படிக்கை (TRIPS ((Agreement of Trade -Related Aspects of Intellectual Property Rights): பதிப்புரிமை,வர்த்தக முத்திரை ,புவியியல் குறிப்பீடு,தொழில்துறை வடிவமைப்பு,காப்புரிமை ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் வெளிப்படுத்தப்படாத தகவல்களின் வடிவமைப்பு.
4.
பன்னாட்டு நாணய நிதியத்தின் செயல்பாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன
(i) இது பன்னாட்டு அளவில் குறுகிய கால் கடன் நிறுவனமாக செயல்படுகிறது
(ii) இது பரிமாற்ற விகிதங்களில் சாதாரண சரிக்கட்டுதல்களை செய்வதற்கு உதவுகிறது
(iii) இது உறுப்பு நாடுகளின் நாணயங்களை தன்னகத்தே வைத்துள்ளது.அதிலிருந்த்து கடன் வாங்க கூடிய உறுப்பினர் நாடுகள் நாணய மதிப்பை பெற்று கொள்ளலாம்
(iv) நல்ல வலுவான பொருளாதார மற்றும் நிதிக்கொள்கையை பின்பற்றும் நாடுகளுக்கு பொருளாதார நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது
(v) உறுப்பு நாடுகளின் பயனுள்ள கொள்கைகளை வலுப்படுத்தவும் செயல்படுத்தவும் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி அளிக்கிறது.வங்கியியல்,நிதி,நாணய மற்றும் பரிமாற்றக் கொள்கைகளை வடிவமைப்பதில் தொழில்நுட்ப உதவி வழங்கப்படுகிறது
(vi) உறுப்பினர் நாடுகளின் வாணிக சமநிலையில் ஏற்படும் சமமற்ற தன்மையை சரி செய்ய உதவுகிறது.
5.
உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) உறுப்பு நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
(ii) உறுப்பு நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு உலகின் பல்வேறு வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்துதல்
(iii) பன்னாட்டு வணிகத்தில் ஒரு ஒருங்கிணைந்த மேலும் நிறைவேற்றத்தக்க மற்றும் நீடித்த வர்த்தக முறையை ஊக்குவிக்கிறது
(iv) பன்னாட்டு அளவில் சரக்குகள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல்
(v) முழு வேலைவாய்ப்பு மற்றும் நீடித்த நிலையான வருமானம் ஆகியவற்றை உறுதி செய்தல்
(vi) சுற்றுசூழலை பாதுகாத்தல்
6.
(i) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி:
ஏற்றுமதி என்பது உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதாகும். அதே போன்று இறக்குமதி என்பது வெளிநாட்டிலிருந்து சரக்கு மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதாகும்.
(ii)ஒப்பந்த உற்பத்தி அல்லது புற ஒப்படைப்பு:
ஒரு நிறுவனம் அயல்நாட்டில் உள்ள ஒரு சில உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் ஒரு பொருளின் குறிப்பிட்ட உதிரிபாகங்களை குறிப்பிட்ட விரங்களுடன் தயாரிப்பதற்கு செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தமே ஒப்பந்த உற்பத்தி அல்லது புற ஒப்படைப்பு அல்லது புறதிறனீ ட்டல் என்று அழைக்கப்படுகிறது.
(iii) உரிமம் மற்றும் தனியுரிமை பெறல்:
ஒரு நிறுவனம் வெளிநாட்டில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு தன்னுடைய இயந்திரம், வியாபார இரகசியங்கள் அல்லது தொழில் நுட்பம் ஆகியவற்றை ஓரு குறிப்பிட்ட உரிமைத் தொகைக்காக பயன்படுத்திக் கொள்ள செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்த ஏற்பாடே உரிமம் ஆகும். உதாரணம் மெக்டனால்ட், பிஸாகட் போன்றவை.
(iv) இணை-வினை:
ஒன்றுக்கு மேற்பட்ட பல நிறுவனங்கள் இணைந்து நேர்மைப் பங்குகளை வாங்குவதன் மூலம் ஒரு நிறுவனத்தையோ அல்லது சொத்தையோ உருவாக்கி மேலும் அந்நிறுவனத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அதனுடைய வருவாய், செலவினங்கள் மற்றும் அதனுடைய வருவாய், செலவினங்கள் மற்றும் சொத்துகளில் பங்கீட்டு கொள்வது ஒரு வியாபார ஒப்பந்தமே இணை -வினையாகும்.
1. அயல்நாட்டு முதலீட்டாளர் உள்நாட்டு நிறுமத்தில் பங்குகளை வாங்குவது.
2. உள்நாட்டு நிறுமம் ஏற்கனவே செயல்படும் அயல்நாட்டு நிறுமத்தில் பங்குகளை வாங்குவது.
3. அயல்நாட்டு நிறுவனம் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்குவது.
7.
மடங்குக் கடைகளின் சிறப்பியல்புகளை பின்வருமாறு:
(i) அமைவிடம்: போதுமான அளவிற்கு வாடிக்கையாளர்கள் அணுகுவதற்கு ஏற்றவாறு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இக்கடைகள் அமைக்கப்படுகின்றன.
(ii) பொருட்களின் தன்மை: மடங்குக் கடைகள் ஒரே வகையான பொருட்களையும் மற்றும் சிறப்பீடுபாடு கொண்ட பொருள்களையும் அதாவது தரமான மற்றும் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய ஒரு சில வகையான பொருட்களை மட்டும் விற்பனை செய்கின்றன.
(iii) மைய மேலாண்மை: இக்கடைகளில் விற்கப்படும் பொருள்கள் யாவும் ஓரிடத்தில் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது தலைமை அலுவலகத்திலிருந்து மையக் கொள்முதல் செய்யப்பட்டதாகவோ இருக்கும்.
(v) விற்பனையாளரின் பணி: வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொருள்களைத் தேர்ந்தெடுத்து தெரிவு செய்து வாங்குவதற்கு முழு ஒத்துழைப்பையும் விற்பனையாளர்கள் செய்கின்றன.
8.
(i) இருவருடைய தேவைகள் உடன்பாடில்லாமல் இருத்தல்.
(ii) பொதுவான மதிப்பீட்டு அளவு இல்லாமை, உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்குமிடையில் நேரடித் தொடர்பின்மை.
(iii) உபரி இருப்பு வைக்க இயலாத நிலை: இருவருடைய தேவைகள் உடன்பாடில்லாமல் இருத்தல். இருவரில் முதலாவருடைய உபரி பொருட்கள் இரண்டாமவருக்குத் தேவையாகவும் இரண்டாமவருடைய உபரி பொருட்கள் முதலாமவருக்கு தேவையாகும் இருக்க வேண்டும். இல்லையெனில் பண்டமாற்றம் நிகழாது.
(iv) பொதுவான மதிப்பீட்டு அளவு இல்லாமை: ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி மதிப்பு உண்டு மதிப்பீட்டில் யாதொரு மதிப்பும் பின்பற்றப்படுவதில்லை. விலை மதிப்பிட்டின்மைக் காரணமாக பொருட்கள் மதிப்பீட்டு ஒப்புடையில் தடைகள் உள்ளன.
(v) உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்குமிடையில் நேரடித் தொடர்பின்மை: விற்போரும் வாங்குவோரும் எப்பொழுதும் நேரடித் தொடர்புகொள்ள வாய்ப்பு ஏற்படுவதில்லை. இம்முறையில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியது அவசியம்.
(vi) உபரி இருப்பு வைக்க இயலாத நிலை: இம்முறையில் பொருட்கள் தேவைக்கு அதிகமாக கையிருப்பு இல்லையெனில் வணிகம் நடைபெற வழி ஏற்படாது.
9.
சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சுற்றாடும் அல்லது சில்லறை வியாபாரிகள், நிலையிட பேரளவு சில்லறை வியாபார அமைப்புகள், இவற்றை ஒவ்வொன்றையும் மேலும் பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். அவையாவன:
(i) சுற்றாடும் /நடைபாதை வியாபாரிகள்: சுமை தூக்கி மற்றும் கூவி விற்கும் வியாபாரிகள், தெரு வியாபாரிகள், சந்தை வியாபாரிகள், இடம் பெயர் வியாபாரிகள்.
(ii) நிலையிட சிற்றளவு சில்லறை வியாபாரிகள்: தெருக்கடை வியாபாரிகள், பொதுப் பண்டக சாலைகள், குறிப்பிட்ட வகைப் பண்டக சாலைகள், சிறப்பு பண்டக சாலைகள், இரண்டம் தர பொருட்கள் விற்போர்.
(iii) நிலையிட பேரளவு சிலரை வியாபார அமைப்புகள்: துறைவாரிப் பண்டக சாலைகள் மடங்குக் கடைகள், சிறப்பங்காடிகள் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், வாடகைக் கொள்முதல் முறை மற்றும் தவணை விற்பனை முறை, அஞ்சல்வழி விற்பனை, தானியங்கி விற்பனை எந்திரங்கள், வணிக வளாகங்கள், தொலைத்தொடர்பு வழி சந்தை தளவிற்பனை.
10.
(i) இந்தியாவின் சுய உதவிக் குழுக்கள்: டிசம்பர் 2017 ன் படி இந்தியாவில் 45,67,090 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்தச் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 5,02,65,933 ஆகும், அடிப்படை அல்லது தொடக்க நிலையில் மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதில், சுய உதவிக்குழுக்களின் முக்கியத்துவத்தை அறிந்து, இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் இவற்றுக்கான முறையான அங்கீகாரம் அளித்துள்ளன.
(ii) தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுவின் தொடக்கம், வளர்ச்சி: பெண்களின் சமுதாய, பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஊரகப் பெண்களின் திறனை மேம்படுத்தும் நோக்குடன், தமிழ்நாட்டில் 1983ல் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக்கழகம் (வரையறுக்கப்பட்டது) என்ற நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு 1989 செம்படம்பரில் விவசாய முன்னேற்றத்திற்கான உலக நிதியத்தின் (International Fund for Agricultural Development) உதவியோடு தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிகுழுக்களை துவங்கி வைத்தது இத்திட்டத்தின் வெற்றியினால் "மகளிர் திட்டம்" என்ற திட்டம், 1997-98ல் மணிலா அரசின் நிதி உதவியோடு, பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்தச் சுய உதவிக்குழு மிகச் சக்தி வாய்ந்த இயக்கமாக செயல்பட்டு, இன்று மாநிலத்தில் பல வசதியற்ற மகளிரின் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் திட்டமாக செயல்பட்டு வருகிறது.
11.
12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தைத் தெளிவாக்குகின்றன.
(i) வைப்புக் கணக்கு, சிறு சேமிப்பு திட்டங்கள், பரஸ்பர நிதிகள், ஆயுள் காப்பீட்டுத்திட்ட ஆவணங்கள். அரசு நிறுமங்களின் பத்திரங்கள், பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும் பணம் ஒரே நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
(ii) வங்கி வைப்புகளில் முதலீடு செய்யப்படும் பணம் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பினைத் தோற்றுவிக்கவும், வறுமையைப் போக்கவும் உதவியாக இருக்கிறது.
(iii) வங்கி வைப்புகளில் முதலீடு செய்யப்படும் சேமிப்புகள், ஒரு நாட்டின் தொழில் மற்றும் வேளாண் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.
(iv) அரசு கடன் பத்திரங்கள் மற்றும் பலதரப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் சேமிப்புகள், ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், மற்றும் அவற்றை வலுப்படுத்தவும் பெரும் அளவில் பயன்படுகின்றன.
(v) அதிக அளவு சேமிப்பு என்பது, ஒரு நாட்டின் பலத்தைக் குறிக்கிறது. இது பொருளாதார மந்த காலத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களை எதிர்கொள்ள உதவுகிறது. சேமிப்பை அதிகரிப்பதால், பணவீக்கத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளை மிக எளிதாக எதிர்கொள்ள முடியும். அதன் விளைவாக அதிகரிக்கும் விலைவாசியினைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.
13.
(i) தொழில் நிதி என்பது தொழில் பயன்படுத்தப்படும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நிதிகளை உள்ளடக்கியதாகும். சிறிய, நடுத்தர மற்றும் பேரளவு நிறுவனங்கள் போன்ற அனைத்து வகை நிறுவனங்களுக்கும் நிதி தேவைப்படுகிறது
(ii) தொழில் நிதியின் அளவு வியாபார நிறுவனங்களின் தன்மை மற்றும் செயல்பாட்டின் அளவை பொறுத்து மாறுபடும். அதாவது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் குறைந்த அளவு நிதி ஆதாரம் போதுமானது. ஆனால் பேரளவு நிறுவனகட்கு அதிக நிதி தேவைப்படுகிறது.
(iii) தொழில் நிதியின் தேவை காலத்திற்கு ஏற்ப மாறுபடும். இதை வேறு வகையில் கூறுவதானால், தொழிலும் சுறுசுறுப்பாக இயங்கும். உச்சகட்டக் காலத்தில் தொழில் நிதி தேவை அதிக அளவிலும், மந்தமான காலங்களில் மிதித்த தேவை குறைவாகவும் இருக்கும்.
(iv) ஒரு நிறுவனத்தின் தொழில், நடவடிக்கைகளின் அளவு மற்றும் அதன் செயல்பாட்டு எல்லையை அந் நிறுவனத்தின் தொழில் நிதியின் அளவே தீர்மானிக்கிறது.
14.
(i) அரசின் வங்கியர் மற்றும் நிதி ஆலோசகராகச் செயல்படுதல்.
(ii) ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிடுவதில் முற்றுரிமை.
(iii) வங்கியர்களின் வங்கி.
(iv) கடன் மற்றும் பணப்புழக்கத்தின் கட்டுப்பாட்டாளர். ரொக்க இருப்புவீதம், சட்டப்படியான நீர்மைத் தன்மை விகிதம், திறந்த சந்தை செயல்பாடுகள், கடன் தரத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.
(v) இறுதிநிலைக் கடன் ஈட்டுவோர்.
(vi) தீர்வக அமைப்பு சேவைகள்
(vii) அந்நியச் செலாவணிகளின் பாதுகாப்பாளர்.
(viii) அந்நிய செலாவணி விகிதத்தின் பராமரிப்பு.
(ix) நம்பகத் தன்மையுள்ள தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீடு.
15.
சட்டப்படி செல்லக்கூடிய ஒப்பந்த புள்ளியின் இன்றியமையாத கூறுகள்(பிரிவு 38)
(i) ஒரு ஒப்பந்தப் புள்ளியில் கீழ்க்கண்ட இன்றியமையாத கூறுகள் கொண்டு இருக்க வேண்டும். அது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்.
(ii) ஒப்பந்தத்தின் முழுக்கடமையும் நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை மட்டும் நிறைவேற்றுவதாக இருக்கக்கூடாது.
(iii) ஒரு நபர் ஒப்பந்தத்தை நிறைவேற்ற விருப்பம் உடையவராகவும், நிறைவேற்றக்கூடிய நிலையிலும் இருக்க வேண்டும்.
(iv) இது சரியான நேரத்திலும் இடத்திலும் செய்யப்படுதல் வேண்டும்.
(v) இது சரியான வடிவத்தில் இருக்க வேண்டும்.
(vi) இது ஒரு சரியான நபரால் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது வாக்குறுதி பெறுபவருக்கு அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட முகவரால் செய்யப்படுதல் வேண்டும்.
(vii) ஒப்பந்த புள்ளிப்படி பொருட்களை பரிசோதிக்க வாக்குறுதி பெறுபவருக்கு ஒரு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்.
(viii) அது கூட்டாக வாக்குறுதி பெறுபவர்களுல்லாம் யாரேனும் ஒருவருக்கு செய்யப்படலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards