11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
XI Full Portion Model Question
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
குடிநீரில் உள்ள லெட் மாசுக்களின் அளவு எவ்வளவு இருப்பின் அது கல்லீரலை பாதிக்கிறது?
500 ppm க்கு மேல்
500 ppm க்கு மேல்
45 ppm க்கு மேல்
450 ppm க்கு மேல்
2.
உலர் அலுமினியம் குளோரைடு முன்னிலையில் பென்சீன் மீத்தைல் குளோரைடுடன் வினைப்பட்டு கிடைப்பது
குளோரோ பென்சீன்
டொலுவின்
பை பினைஸ்
இவற்றிள் எதுவுமில்லை
3.
நிலையான நிலைமை திண்மமாயிருப்பின், சேர்மங்களின் பிரிகை எவ்வகையில் நடைபெறும்?
பரப்புக் கவர்ச்சி
பங்கீட்டு முறை
(அ) மற்றும் (ஆ)
(அ) அல்லது (ஆ)
4.
மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சூழலுடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு
E
H
S
G
5.
தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி
அதிகரிக்கிறது
குறைகிறது
அதிகமாகிப் பின் குறைகிறது
குறைந்து பின் அதிகரிக்கிறது
6.
சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்கள் எவ்வரிசையில் நிரப்பப்பட வேண்டும் என்ற வினாவிற்கு உரிய விடையினைத் தருவது எது?
ஆஃபா தத்துவம்
பௌலியின் தவிர்க்கை விதி
ஹீண்ட் விதி
இவை அனைத்தும்
7.
பொட்டா சியம் அசிட்டேட் டின் நீர்க்கரைசலை மின்னாற்பகுக்கும் போது நேர்மின்வாயில் உருவாகும் சேர்மம்
CH4 மற்றும் H2
CH4 மற்றும் CO2
C2H6 மற்றும் CO2
C2H4 மற்றும் Cl2
8.
2A(g) ⇌ 2B(g) + C2(g) என்ற சமநிலையில், 400K வெப்பநிலையில் A, B மற்றும் C2வின்
சமநிலைச் செறிவுகள் முறையே 1 \(\times\) 10–4 M, 2.0 \(\times\) 10–3 M, 1.5 \(\times\) 10–4 M. 400K, வெப்பநிலையில் சமநிலையின் KC மதிப்பு யாது?
0.06
0.09
0.62
3 \(\times\) 10-2
9.
ClF3 இன் வடிவம்
முக்கோணசமதளம்
பிரமிடுவடிவம்
'T' வடிவம்
இவற்றில் ஏதுமில்லை
10.
பின்வரும் செறிவு அலகுகளில், வெப்பநிலையை சார்ந்து அமையாதவை எவை ?
மோலாலிட்டி
மோலாரிட்டி
மோல் பின்னம்
(அ) மற்றும் (இ)
11.
அதிக +I விளைவினை பெற்றுள்ள தொகுதி எது?
CH3-
CH3-CH2-
(CH3)2-CH-
(CH3)3-C-
12.
P,Q, R மற்றும் S என்ற நான்கு வாயுக்களின் b யின் மதிப்பு சமம் ஆனால் a யின் மதிப்பு Q < R < S < P a மற்றும் b வாண்டர் வால்ஸ் மாறிலிகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் நான்கு வாயுக்களுள் எளிதில் ஆவியாகும் வாயு
P
Q
R
S
13.
பின்வரும் சேர்மங்களில் எது கார உலோகங்களுடன் வினைப்பட்டு H2 வாயுவை வெளியேற்றுவதில்லை?
எத்தனாயிக் அமிலம்
எத்தனால்
பீனால்
இவற்றில் ஏதுமில்லை
14.
0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை
6.022 × 1026
6.022 × 1023
6.022 × 1020
9.9 × 1022
15.
பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?
புரோமின்
குளோரின்
அயோடின்
ஹைட்ரஜன்
16.
பிர்க் ஒடுக்கம் வினையை எழுதுக.
17.
பின்வரும் மூலக்கூறுகளுக்கு லூயிஸ் வடிவமைப்புகளை வரைக.
(i) SF6
(ii) PCl5
18.
ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்களை எழுதுக.
19.
KP மற்றும் KC க்கு இடையேயான தொடர்பினை வருவி.
20.
கரைதிறன் மீதான அழுத்தத்தின் விளைவை விளக்குக.
21.
CFC மூலக்கூறுகள், அடுக்குமண்டலத்தில் ஓசோன் படல சிதைவை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நிகழும் வினைகளின் அடிப்படையில் விளக்குக.
22.
பாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
23.
எது அதிகபட்ச மோல் எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் அணுக்களை கொண்டுள்ளது?
(i) 1 மோல் எத்தனால் (ii) 1 மோல் பார்மிக் அமிலம் (iii) 1 மோல் H2O
24.
அயனியாக்கும் ஆற்றலுக்கு கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் வரையறை சரியானதா? “ஒரு அணுவின் இணைதிற கூட்டில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவைப்படும் ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல்.”
25.
Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத் எவ்வாறு தீர்மானிப்பாய்?
26.
காட்டர்மான் வினையை எழுதுக.
27.
0.40g எடையுள்ள அயோடின் பதிலீடு செய்யப்பட்ட கரிம சேர்மம் 0.125g AgIயை காரியஸ் முறைப்படி தருகிறது எனில், அயோடினின் சதவீதத்தைக் காண்க.
28.
0.24 g வாயுவானது 1.5 atm அழுத்தத்தில் 1 லிட்டர் நீரில் கரைகிறது. மாறாத வெப்பநிலையில், அழுத்தத்தை 6 atm க்கு அதிகரிக்கும்போது கரைக்கப்படும் வாயுவின் எடையை கணக்கிடுக.
29.
பட்டியல் 1-ஐ பட்டியல் 2ல் கொடுக்கப்பட்டுள்ள விடைகளுடன் சரியாக பொருத்துக.
| பட்டியல் 1 | பட்டியல் 2 |
|---|---|
| (அ) 25 ஆர்பிட்டாலின் கோண உந்தம் | (i) 1/3 |
| (ஆ) நிச்சயமற்றக் கொள்கை | (ii) பூஜ்ஜியம் |
| (இ) Cr3+ | (iii) Hψ=Eψ |
(ஈ) ![]() |
(iv) ΔE.Δt≥\(\frac{h}{4\pi}\) |
| (v) \(\sqrt{l(l+1)}\frac{h}{4\pi}\) | |
| (vi) பாதி நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பு | |
| (vii) Δx.ΔP≤\(\frac{h}{4\pi}\) |
30.
இணையும் வினைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.
31.
298 K வெப்பநிலையில் :2A +B → C வினையின் ΔH=400 KJ mol-1, ΔS=0.2 KJK-1 mol-1 எனில் வினை தனிச்சசையாக நிகழ தேவையான வெப்பநிலையை கணக்கீடுக
32.
எவரெஸ்ட் மலையின் உச்சியின் மீதுள்ள ஒருவர் உறிஞ்சி கொண்டு நீரினை உறிஞ்சுவது எளிதா?
33.
கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
(அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
(i) KMnO4 + H2O2 →
(ii) CrCl3 + H2O →
(iii) CaO + H2O →
34.
எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை 5உடைய மூலக்கூறுகளை எழுதி, அவற்றின் பிணைப்பு எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை, தனித்த இரட்டை எலக்ட்ரான்கள் எண்ணிக்கை, வடிவம் மற்றும் மூலக்கூறு வடிவமைப்பை எழுதுக.
35.
பின்வருவனவற்றை விளக்குக.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு
36.
பின்வருவனவற்றை எடுத்துக்காட்டுன் விளக்குக
(i) +I விளைவு
(ii) -I விளைவு
37.
பின்வரும் வினையினைக் கருதுக.
Fe3+(aq) + SCN–(aq) ⇌ [Fe(SCN)]2+(aq)
Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x10-3m மற்றும் 8x10-4m என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2x10-4m சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக.
38.
மீத்தேனில் எறிதல் வினையினை கருத்திற் கொண்டு வேதிவினைக் கூறுவிகிதக் கணக்கீட்டை காண்க.
39.
12 M செறிவுடைய ஹைட்ரோகுளோரிக் அமில மாதிரிக் கரைசலின் அடர்த்தி 1.2 g L-1 . மோலாலிட்டியை கணக்கிடுக.
40.
C2H5OH(l)+3O2(g)\(\rightarrow \)2CO2(g)+ 3H2O(l) என்ற வினைக்கு திட்ட என்தால்பி மாற்ற மதிப்பை கணக்கிடுக.C2H5OH(l),2CO2(g) மற்றும் H2O(l) ஆகியவற்றின் திட்ட உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே 277,-393.5 மற்றும் -285.5kJ mol -1
41.
பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது
ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது
இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது
42.
பின்வரும் செயல்முறைக்கு தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.
He+ (g) → He2+ (g) + e-
சிறும ஆற்றல் நிலையில் உள்ள ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் -13.6 evatom-1.
43.
தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் இடத்தை நியாயப்படுத்துக
1.
(a)
500 ppm க்கு மேல்
2.
(b)
டொலுவின்
3.
(a)
பரப்புக் கவர்ச்சி
4.
(b)
H
5.
(a)
அதிகரிக்கிறது
6.
(c)
ஹீண்ட் விதி
7.
(c)
C2H6 மற்றும் CO2
8.
(a)
0.06
9.
(c)
'T' வடிவம்
10.
(d)
(அ) மற்றும் (இ)
11.
(d)
(CH3)3-C-
12.
(a)
P
13.
(d)
இவற்றில் ஏதுமில்லை
14.
(c)
6.022 × 1020
15.
(d)
ஹைட்ரஜன்
16.

17.
(i) SF6

(ii) PCl5

18.
1. நீரை சுத்திகரிக்கும் செயல்முறையில் மாசுக்களை ஆக்ஸிஜனேற்றம் அடைய செய்ய.
2. வீரியம் குறைந்த புரைத் தடுப்பானாக.
3. துணி, காகிதம், முடிபாதுகாப்பு தொழிற்சாலையில் வெளுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
19.
வினைபடு பொருட்கள் மற்றும் வினை விளை பொருட்கள் ஆகிய அனைத்தும் நல்லியல்பு வாயு நிலைமையில் உள்ள பின்வரும் பொதுவான வினை ஒன்றை நாம் கருதுவோம்.
\(xA+yB\rightleftharpoons IC+mD\)
சமநிலை மாறிலி KC ன் மதிப்பு
\({ K }_{ C }=\frac { \left[ C \right] ^{ 1 }\left[ D \right] ^{ m } }{ \left[ { A } \right] ^{ x }\left[ B \right] ^{ y } } ...(1)\)
மற்றும் Kp ன் மதிப்பு
\({ K }_{ p }=\frac { { P }_{ C }^{ 1 }\times { P }_{ D }^{ M } }{ { P }_{ A }^{ X }{ \times P }_{ B }^{ Y } } ...(2)\)
நல்லியல்பு வாயுச் சமன்பாட்டின் படி
PV =nRT
or
\(P=\frac { n }{ V } RT\)
எனவே,
பகுதி அழுத்தம் (P) = மோலார் செறிவு x (RT)
மேற்கண்டுள்ளதன் அடிப்படையில் வினைபடுபொருட்கள் மற்றும் வினை விளைப் பொருட்களின் பகுதி அழுத்தங்களை பின்வருமாறு எழுத இயலும்.
\({ P }_{ A }^{ X }=\left[ A \right] ^{ X }\left[ RT \right] ^{ X }\\ { P }_{ B }^{ Y }=\left[ B \right] ^{ Y }\left[ RT \right] ^{ Y }\\ { P }_{ C }^{ 1 }=\left[ C \right] ^{ 1 }\left[ RT \right] ^{ 1 }\\ { P }_{ D }^{ m }=\left[ D \right] ^{ m }\left[ RT \right] \)
சமன்பாடு (2) ல் பிரதியிட
\({ K }_{ p }=\frac { \left[ C \right] ^{ 1 }\left[ RT \right] ^{ 1 }\left[ D \right] ^{ m }\left[ RT \right] ^{ m } }{ \left[ A \right] ^{ X }\left[ RT \right] ^{ x }\left[ B \right] ^{ y }\left[ RT \right] ^{ y } } ..(3)\)
\({ K }_{ p }=\frac { \left[ C \right] ^{ 1 }\left[ D \right] ^{ m }\left[ RT \right] ^{ 1+m } }{ \left[ A \right] ^{ X }\left[ B \right] ^{ y }\left[ RT \right] ^{ x+y } } \)
\({ K }_{ p }=\frac { \left[ C \right] ^{ 1 }\left[ D \right] ^{ m } }{ \left[ A \right] ^{ X }\left[ B \right] ^{ y } } \left[ RT \right] ^{ 1+m-(x+y) }...(4)\)
சமன்பாபு (1) மற்றும் (4) ஐ ஒப்பிடும்போது
\({ K }_{ p }={ K }_{ C }(RT)^{ (\triangle n_{ g }) }...(5)\)
இங்கு,
\(\triangle n_{ g }\) என்பது வாயு நிலைமையில் உள்ள வினை விளைப் பொருள்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும், வினைபடுபொருள்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும் இடையேயான வேறுபாடாகும்.
20.
(i) பொதுவாக, அழுத்தத்தில் ஏற்படும் மாற்றமானது திண்மங்கள் மற்றும் நீர்மங்களின் கரைதிறனில் குறிப்பிடத்தகுந்த விளைவை உருவாக்குவதில்லை.
(ii) ஏனெனில் அவை அமுங்குவதில்லை. எனினும், வாயுக்களின் கரைதிறனானது, பொதுவாக அழுத்தம் அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது.
21.
மீத்தேன் மற்றும் ஈத்தேனில் குளோரோபுளூரோ பெறுதிகளானவை ஃபிரியான்கள் எனும் வணிகப் பெயரில் குறிக்கப்படுகின்றன.
இந்த CFC சேர்மங்கள் நிலைத்தன்மை அகற்றவை,அரிக்கும் தன்மையற்றவை, எளிதில் தீப்பற்றாதவை மற்றும் எளிதில் திரவமாகும் வாயுக்கள்.
மேலும் இவை குளிர்ப்பதனப் பெட்டிகள், குளூரூட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் நுரைப்புகள் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகின்றன.
உயிர்வளி மண்டல அடுக்குகளில் பயணிக்கும் சூப்பர்சானிக் ஜெட்விமானங்கள் மற்றும் ஜம்போஜெட்களிலிருந்து CFC வாயுக்கள் வெளிப்படுகின்றன.
இவை அடிவெளிப்பகுதியிலிருந்து மெதுவாக அடுக்கு மண்டலத்திற்கு செல்கின்றன.
அவைகள் 50 முதல் 100 ஆண்டுகள் வரை மிக நீண்ட களத்திற்கு நிலைத்து உள்ளன.
uv கதீரவேசின் முன்னிலையில் CFC வாயுக்கள் தனி உறுப்புகளாக சிதைக்கின்றன.
வினைச் சங்கிலியில் குளோரின் தனி உறுப்புகள் மீண்டும் உருவாகின்றன.குளோரின் தனி உறுப்புகளின் இந்தத்தொடர் தாக்குதலின் காரணமாக ஓசோன் படலம் மெலிந்து, ஓசோன் துளைகள் உருவாகின்றன.
22.
1.கார மண் உலோகங்களின் அணு ஆரம் சிறியது மற்றும் அதன் அடர்த்தி கார உலோகங்களை விட அதிகம்.
2.கால்சியம் சல்பேட்டின் ஹெமிஹைட்ரேட் பாரீஸ் சாந்து (CaS\O4.2H2) என ஆகும்.
3.393k வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தி பாரீஸ் சாந்து பெறப்படுகிறது.
\(2CaSO_{4}.2H_{2}O_{(s)} \rightarrow 2CaSO_{4}.H_{2}O+3H_{2}O\)
23.
| சேர்மம் | கொடுக்கப்பட்ட மோல்களின் எண்ணிக்கை | ஆக்சிஜன் அணுக்களின் எண்ணிக்கை |
| எத்தனால்- | 1 | 1 × 6.022 × 1023 |
| பார்மிக் அமிலம் | 1 | 2 × 6.022 × 1023 |
| நீர்-H2O | 1 | 1 × 6.022 × 1023 |
| விடை : பார்மிக் அமிலம் | ||
மேற்கண்ட அட்டவணையில் இருந்து ஃபார்மிக் அமிலம் அதிகபட்ச மோல் எண்ணிக்கையிலான ஆக்சிஜன் அணுக்களை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.
24.
(i) மேற்கண்ட வரையறை தவறானது
(ii) அடி ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலைத்தன்மை உடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிற கூட்டில் இருந்து இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எனப்படும்.
இதுவே சரியான வரையறை.
25.
Q = KC, எனும்போது வினை சமநிலையில் உள்ளது.
Q > KC, எனும்போது வினையானது பின்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
Q < KC, எனும்போது வினையானது முன்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
26.

27.
28.
Pகரைபொருள்=KH xகரைபொருள்
1.5 atm அழுத்தத்தில்
p1 = KH x1-----------(1)
6 atm அழுத்தத்தில்
p2 = KH x2------------(2)
சமன்பாடு (1) ஐ (2) ஆல் வகுக்க
p1/p2 = x1/x2
1.5/6.0 = 0.24/x2
எனவே x2 = 0.24 x 6.0/1.5 = 0.96 g/L.
29.
| பட்டியல் 1 | பட்டியல் 2 |
|---|---|
| (அ) 25 ஆர்பிட்டாலின் கோண உந்தம் | (v) \(\sqrt{l(l+1)}\frac{h}{4\pi}\) |
| (ஆ) நிச்சயமற்றக் கொள்கை | (vii) Δx.ΔP≤\(\frac{h}{4\pi}\) |
| (இ) Cr3+ | (vi) பாதி நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பு |
(ஈ)![]() |
(i) 1/3 |
30.
இரண்டு வினைப் பொருட்கள் வினைபுரிந்து ஒரு சேர்மத்தினைத் தரும் வினைகள், இணையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:

31.
T = 298 K
ΔH = 400 J mol−1 = 400 J mol−1
ΔS = 0.2 J K−1 mol−1
ΔG = ΔH − TΔS
if T = 2000 K
ΔG = 400 − (0.2 × 2000) = 0
if T > 2000 K
ΔG will be negative.
The reaction would be spontaneous only beyond 2000K
32.
1. மலையின் மீது உறிஞ்சி கொண்டு நீரினை உறிஞ்சுவது சற்று கடினம் ஏனெனில் குறைந்த வளிமண்டல அழுத்தம் காரணமாக நீரை மேலே உறிஞ்சுவதுகடினம்
2. உறிஞ்சியின் மூலம் நீரினை உறிஞ்சும்போது வாயில் உள்ள அழுத்தம் குறைகிறது.ஆகவே வளிமண்டல அழுத்தம் நீரினை மேலே வரச் செய்கிறது
3. ஆனால் மலையின் மீது குறைந்த அழுத்தம் உள்ளதால் உறிஞ்சயின் மூலம் நீரை உறிஞ்சுவது கடினம்
33.
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2+8H2O
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
இவற்றுள்
(அ) நீராற் பகுத்தல்
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
(ஆ) ஆக்ஸிஜனேற்ற வினை
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2 (அமில ஊடகத்தில்) + 8H2O
(இ) நீரேற்ற வினை -
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
34.
| எலக்ட்ரான் இரட்டைகளின் எண்ணிக்கை | மூலக்கூறு | பிணைப்பு இரட்டை எலக்ட்ரான்கள் எண்ணிக்கை | தனித்த இரட்டை எலக்ட்ரான்கள் எண்ணிக்கை | வடிவம் | மூலக்கூறு வடிவமைப்பு | எடுத்துக் காட்டுகள் |
| 5 | AB5 | 5 | - | ![]() |
![]() |
PCI5, ASF5, SOF4 |
| AB4L | 4 | 1 | ![]() |
![]() |
SF4, XeO2F2, IF4+, IO2F2- |
|
| AB3L2 | 3 | 2 | ![]() |
![]() |
BrF3, CIF3, |
|
| AB2L3 | 2 | 3 | ![]() |
![]() |
XeF2, I-3,IF2- |
35.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு:
1. ஒரு முப்பரிமாண வடிவமைப்பினை இரு பரிமாணத்தில் இம்முறை குறித்துக்காட்டுகிறது.
2.இம்முறையில் சீர்மையற்ற கார்பன் அணுக்கள் தாளின் தளத்தில் குறிக்கப்படுகின்றன.
3. கிடைமட்ட கொட்டினால் குறிக்கப்படும் பதிலிகள் உற்று நோக்குபவை நோக்கி அமையும்.
4.செங்குத்துக் கோட்டினால் குறிக்கப்படும் பதிலிகள் உற்று நோக்குபவரிடமிருந்து விலகி அமைகின்றன. டார்டாரிக் அமிலத்தின் பிஷர் அமைப்பு வாய்ப்பாடு பின்வருமாறு:

(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு :
1. இம்முறையில் இரு கார்பன் அணுக்களுக்கிடையே பிணைப்பானது முலை விட்டவாக்கில் சற்றே நீட்டமாக வரையப்படுகின்றது.
2. கீழ் இடது புறம் உள்ள கார்பன் முன்னோக்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
3.மேலும் மேல் வலது புற கார்பன் பின்னோக்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
4. இரு அடுத்தடுத்த அணுக்களுக்கு இடையே உள்ள தொகுதிகளின் புறவெளி அமைவிட தொடர்பை பிஷர் அமைப்பு வாய்ப்பாடு விளக்க இயலவில்லை.
5.சாஹார்ஸ் அமைப்பு தொகுதிகளுக்கு இடையேயான அமைவிடம் பற்றிய அறிவைத் தருகிறது.

(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு :
1.இம்முறையில் மூலக்கூறுகள் கார்பன்-கார்பன் \(\sigma \) பிணைப்பு அச்சின் வழியே நோக்கப்படுகிறது.
2.சிக்மா பிணைப்பை உருவாக்கும் இரு கார்பன்கள் இரு வட்டங்களால் குறிப்பிடப்படுகின்றன.
3. ஒன்று மற்றதன் பின்னால் அமைவதால் முன்புறமுள்ள கார்பன் மட்டுமே பார்க்க இயலும்.
4.கண்களுக்கு அருகில் உள்ள கார்பன் ஒரு புள்ளியாகவும், தொலைவில் உள்ள கார்பன் வட்டமாகவும் குறிக்கப்படுகின்றது.
5.எனவே முன்னால் உள்ள கார்பனின் C-H பிணைப்புகள் வட்டத்தின் மையப்புள்ளியிலிருந்து அதே நேரத்தில் பின்னால் உள்ள கார்பனின் C-H பிணைப்புகள் வட்டத்தின் சுற்றளவிலிருந்தும் குறித்துக்காட்டப்படுகின்றன.
6.இவற்றிக்குக்கிடையேயான கோணமதிப்பு 120o ஆகும்.

36.
(i) +I விளைவு:
1. அதிக எலக்ட்ரான் கவர்த் தன்மை கொண்ட அணுக்கள் மற்றும் எதிர் மின்சுமை கொண்ட அணுக்களைக் கொண்டுள்ள தொகுதிகள் எலக்ட்ரான் வழங்கும் +I தொகுதிகள் எனப்படும்.
2. எடுத்துக்காட்டு: கார உலோகங்கள், மீத்தைல், ஈத்தைல் போன்ற ஆல்கைல் தொகுதிகள், CH3O-, C2H5O-, COO- போன்ற எதிர்மின் சுமையுடைய தொகுதிகள் போன்றவை.
3. தனிமங்களின் எலக்ட்ரான்கவர் தன்மை குறைவாக இருப்பின் +I விளைவு அதிகமாக இருக்கும்.
(ii) -I விளைவு:
1. அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட அணுக்கள் மற்றும் நேர் மின்சுமை கொண்ட அணுக்களைக் கொண்டுள்ள தொகுதிகள் எலக்ட்ரான் கவரும் -I தொகுதிகள் எனப்படுகின்றன.
2. எடுத்துக்காட்டு: -F, -CI, -COOH, -NO2, NH2
3. பதிலீட்டு தொகுதியின் எலக்ட்ரான் கவர் தன்மை அதிகமாக இருப்பின், - I விளைவும் அதிகமாக இருக்கும்.
37.
38.
| வினைபடு பொருட்கள் | வினைவினை பொருட்கள் | |||
| CH4(g) | O2(g) | CO2(g) | H2O(g) | |
| வேதிவினைக் கூறு விகித குணகங்கள் | 1 | 2 | 1 | 2 |
| 1 மோல் -மோல் தொடர்பு | 1மோல் | 2 மோலகள் | 1மோலகள் | 2மோலகள் |
| நிறை - நிறை தொடர்பு= மோல்களின் எண்ணிக்கை x மோலார் நிறை | 1 mol x 16 g mol-1 16 g | 2 mol x 32 g mol-1 64 g | 1 mol x 44 g mol-1 44 g | 2 mol x 18 g mol-1 36 g |
| நிறை -கனஅளவு தொடர்பு வினைபாடு பொருட்களின் நிறை =மோல் x மோலார் நிறை & விளைபொருளின் கனஅளவு (273K மற்றும் 1atm அழுத்தத்தில் 1 மோல் அளவுடைய எந்த ஒரு வாயும் அடைத்துக் கொள்ளும் கனஅளவு 22.4 லிட்டர் ஆகும்). | 16g | 64g | 22.4L | 44.8L |
| கனஅளவு -கனஅளவு தொடர்பு | 1 x 22.4 L 22.4L |
2 x 22.4 L 44.8 L |
1 x 22.4 L 22.4 L |
2 x 22.4 L 44.8 L |
39.
கொடுக்கப்பட்டவை
மோலாரிட்டி = 12 M HCl
கரைசலின் அடர்த்தி = 1.2 g L–1
12M HCl-ல் 1 லிட்டர் கரைசலில் 12 மோல் HCl உள்ளது.
நீரின் நிறை கணக்கிடுதல்
1 லிட்டர் HCl நிறை = density × volume
= 1.2 gmL–1 × 1000 mL
= 1200 g
HCl நிறை = HCl மோல்களின் எண்ணிக்கை ×
HCl மோலார் நிறை
= 12 மோல் × 36.5g மோல்–1
= 438 g
நீரின் நிறை = HCl கரைசலின் நிறை – HCl நிறை
நீரின் நிறை = 1200 – 438 = 762 g
மோலாரிட்டி=\(\frac{12}{0.762}\)
=15.75 m
40.
வரையறையின்படி O2(g) ன் திட்ட உருவாதல் என்தால்பி மதிப்பு பூஜ்ஜியமாகும்.
\(\triangle { H }_{ r }^{ 0 }=\left\{ \left( \triangle { H }_{ f }^{ 0 } \right) _{ products }-\left( \triangle { H }_{ f }^{ 0 } \right) _{ reactants } \right\} \)
\(\triangle { H }_{ r }^{ 0 }=\left[ 2\left( \triangle { H }_{ f }^{ 0 } \right) _{ C{ O }_{ 2 } }+3\left( \triangle { H }_{ f }^{ 0 } \right) _{ { H }_{ 2 }O } \right] -\left[ 1\left( \triangle { H }_{ f }^{ 0 } \right) { C }_{ 2 }{ H }_{ 2 }OH+3\left( \triangle { H }_{ f }^{ 0 } \right) _{ { O }_{ 2 } } \right] \)
\(\triangle { H }_{ r }^{ 0 }=\left[ 2mol\left( -393.5 \right) kJ{ mol }^{ -1 } \\ +3mol\left( -285.5 \right) kJ{ mol }^{ -1 } \right] \)
\(-\left[ 1mol\left( -227 \right) kJ{ mol }^{ -1 }\\ +3mol\left( 0 \right) kJ{ mol }^{ -1 } \right] \)
=[-787-856.5]-[-277]
=-1643.5+277
\(\triangle { H }_{ r }^{ 0 }=-1366.5kJ\)
41.
42.
He+ → He2+ + e–
\(E_n=\frac{-13.6z^{2}}{n^{2}}\)
\(E_1=\frac{-13.6(2)^{2}}{(1)^{2}}=-54.4\)
\(E_\infty=\frac{-13.6(2)^{2}}{(\infty)^{2}}=0\)
∴கொடுக்கப்பட்டுள்ள செயல்முறை நிகழ தேவையான ஆற்றல் = E∞ – E1 = 0 – (– 54.4) = 54.4 ev
43.
1. ஹைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு 1S1 ஆகும்.
2. இதுகார உலோகங்களின் பொதுவான இணைதிறன் கூட்டு எலக்ட்ரான் அமைப்பான nS1 ஐ ஓத்திருக்கிறது.
3. மேலும், ஹைட்ரஜன் கார உலோகங்களின் பண்புகளையும் ஒத்துள்ளது.
(i) கார உலோகங்களைப் போன்றே ஒற்றை நோமின்சமை உடைய அயனியை (H+) உருவாக்குகிறது.
(ii) கார உலோகங்களைப் போன்றே ஹைட்ரஜனும் ஹேலைடு ஆக்சைடுகள் (H2O), பெராக்சைடுகள் (H2O2) மற்றும் சல்பைடுகளை (H2S) உருவாக்குகின்றன.
(iii) கார உலோகங்களைப் போன்றே, ஹைட்ரஜனும் ஒடுக்க வினைபொருளாகச் செயல்படுகிறது.
4. எனவே ஹைட்ரஜன் தனிம வரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards