10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - பாய்ச்சல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - கம்பராமாயணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - புதிய நம்பிக்கை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - திருவிளையாடற்புராணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - மொழிபெயர்ப்புக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
'முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே' என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் கூறக் காரணம் யாது?
2.
(i) புதியதாய் வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும், அதில் தலைவைக்கத் திண்டும் அமைத்தனர்.
(ii) திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து, அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்துக் கருத்துகளை எழுதுக.
3.
உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் என முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப்பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப்பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
4.
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாய்ப் பாவலரேறு சுட்டுவன யாவை?
5.
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினர்களுக்குச் செய்த விருந்தோம்பலை விவரித்து எழுதுக.
6.
“மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலைஅன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர்கண்டு
பொலிந்த தமிழ்மன்றமே."
கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
7.
மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும், பெருஞ்சித்திரனாரின் தமிழ்வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
8.
பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?
பாவியக்கொத்து
கனிச்சாறு
திருக்குறள் மெய்ப்பொருளுரை
உலகியல் நூறு
9.
'அன்னை மொழியே' என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர்
சுந்தரனார்
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
பாவாணர்
10.
11.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க
| அ | கொண்டல் | 1 | மேற்கு |
| ஆ | கோடை | 2 | தெற்கு |
| இ | வாடை | 3 | கிழக்கு |
| ஈ | தென்றல் | 4 | வடக்கு |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
12.
“இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே!”
- இவ்வடியில் சுட்டப்படும் மொத்த நூல்கள் எத்தனை?
13.
தமிழ் எவற்றின் காரணமாகத் தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்?
14.
பதினெண் மேற்கணக்கு நூல்கள் எவை?
15.
'நமக்கு உயிர், காற்று.
காற்றுக்கு வரம், மரம்
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
16.
தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.
உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
17.
தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.
வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.
1.
(i) செழுமை மிகுந்த தமிழே! என்னுயிரே! சொல்லுவதற்கு அரிதான உன்னுடைய பெருமைகளை என் தமிழ் நாக்கு எவ்வாறு தான் விரித்துரைக்கும்.
(ii) பழம்பெருமை, தமக்கெனத் தனிச்சிறப்பு, இலக்கிய வளம் கொண்ட தமிழே!
(iii) உன்னுடைய நிலைத்த தன்மையும் வேற்றுமொழி பேசுபவர்கள் உன்னைப் பற்றிக் கூறிய புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன.
| “செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி” |
(iv) என் தனித்தமிழே! வண்டு செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போல நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.
2.
1. விருந்தோம்பலில் சிறந்த தமிழர்கள் போக்குவரத்து வசதியும் உணவகங்களும் இல்லாத பண்டைய நாளில், அறிமுகமற்றோருக்கு உணவளித்து, வீட்டுத் திண்ணையில் தங்கச் செய்தனர்.
2. காலப்போக்கில், நம்பிக்கையின்மையும் திருட்டுப்பயமும் அதிகரித்தன; இப்பண்பாடு சிதைந்தது.
3. திருவிழாக்காலங்களில் அறிமுகமற்றோருக்கும் உணவிடும் பழக்கம் சில ஊர்களில் இன்றும் உள்ளது.
4. பசியறிந்து, புதியோருக்கு உணவிடும் நிலை மாறி, உறவினருக்கு உணவளிப்பதே இன்று 'விருந்து' எனப்படுகிறது.
3.
1. வான்மழை நான்
2. நானின்றி உலகில்லை
3. வேளாண்மைக்கு முதல்வன் நான்.
4. நான் இன்றி உயிரினம் இல்லை.
5. அணைக்குள் இருந்தாலும் நானே அரசியலும் ஆவேன்.
6. என்னைத் தூய்மையாக்கி உன்னைக் காத்துக்கொள்.
4.
1. தமிழ் தோன்றிய காலத்தை வரையறுக்க முடியாத தொன்மை வாய்ந்தது.
2. அன்றைய குமரிக்கண்டத்தில் பாண்டிய மன்னர்கள் இருதமிழ்ச்சங்கங்களைத் தோற்றுவித்துத் தமிழை வளர்த்தனர்.
3. அப்போது உலகமொழிகளுக்கெல்லாம் பேரரசியாய் விளங்கியது, தமிழ்.
4. சங்ககாலத்தில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் தோன்றின.
5. சங்கம் மருவிய காலத்தில் ஐம்பெருங்காப்பியங்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் தோன்றின.
இவையே பாவலரேறு தமிழன்னையை வாழ்த்தக் காரணங்கள்
5.
1. எங்கள் வீட்டிற்கு அடிக்கடி உறவினர் வருவர்.
2. என் அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் உறவினரை அன்புடன் வரவேற்று மகிழ்வர்.
3. காலையில் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டி அளிப்பர்.
4. மதியம் தலைவாரை இலையில் பலவகைக் காய்களோடு உணவளிப்பர்.
5. உறவினர்களோடு எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கலகலப்பாகப் பேசி மகிழ்வோம்.
6. உறவினர்களுக்கு இங்கிருந்து ஊர் திரும்ப மனமிராது; எங்களுக்கும் அவர்கள் பிரிவு வருத்தம் தரும்.
7. விருந்தினர்கள் ஊர் திரும்பும் போது, அவர்களுக்கு அம்மாவும் பாட்டியும் தாங்கள் செய்த ஊறுகாய், வற்றல் போன்றவற்றைக் கொடுத்தனுப்புவர்.
8. காலத்திற்கேற்ற வகையில் வீட்டில் காய்த்த மாங்காய், கொய்யா, எலுமிச்சை போன்றவற்றையும் தவறாது கொடுத்தனுப்புவர்.
9. திருவிழாக்காலங்களில் விருந்து இன்னும் தடபுடலாய் இருக்கும்.
10. வேளைக்கு ஓர் இனிப்பு வகையும், வடை, பணியாரம் போன்றவையும் தவறாது இடம் பெறும்.
11. முன்பின் அறிமுகமில்லாதவருக்கும் திருவிழாக்காலங்களில் விருந்தளித்து மகிழ்வோம்.
12. திருவிழாவிற்கு வந்த விருந்தினர்களுக்குத் 'திருவிழாக் காசாக' அப்பா ரூபாய் கொடுப்பார்.
13. எல்லாக் காலங்களிலும் உறவினர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று உபசரிப்பதே எங்கள் வழக்கம்.
6.
இந்நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த கவிஞர்களுள் ஒருவர், கவிஞர் கண்ணதாசன். அவர் எளிமையும் இனிமையும் வளமையும் அமைந்த பல பாடல்களைப் படைத்துள்ளார். அவற்றுள் ஒன்று “மலர்ந்தும் மலராத" எனத் தொடங்கும் கவிதை.
1. அண்மையில் பிறந்த அழகான குழந்தையை இவ்வாறு பாடித் தமிழைச் செழுமைப் படுத்துகிறார். அக்குழந்தையைக் காலைப்பொழுதாகவும், சற்றே விரிந்த மலராகவும், இளந்தென்றலாகவும், தமிழாகவும் உவமை, உருவகங்களாய்க் குறிப்பிடுவது சிறப்பு.
2. அண்மையில் பிறந்த குழந்தை இமைகளை முற்றிலும் விரித்துப் பார்க்காது; பாதியளவிற்கே விரித்துப் பார்க்கும். இதற்கு உவமையாய் முற்றிலும் இதழ்களை விரித்திடாத பூவின் இரண்டாம் பருவமான 'போது' எனும் பருவத்தைக் குறிப்பிடுகிறார். இதனையே “மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழிவண்ணமே!" என்று மலரை உவமைப்படுத்துகிறார்.
3. விடிகாலைப்பொழுது என்பது இருள் விலகி ஒளி மெல்ல வெளிவரும் நேரம். உயிரினங்களின் உடலுக்குப் புத்துணர்ச்சியும் உள்ளத்திற்கு மறுமலர்ச்சியும் அளிக்கும் காலம், புள்ளினங்கள் பூபாளம் பாடிப் பறக்கத் தொடங்கும். இத்தகைய உற்சாகம் ஊற்றெடுக்கும் இளங்காலைப்பொழுது இன்பம் தருவது. இதனைக் கவிஞர், "விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே” என உருவகித்துப் பாடுகிறார்.
4. தென்றல் தவழ்ந்து வருகையில் மரம், செடி, கொடி, மலை முதலியவற்றை உரசியும் தழுவியும் கடந்து செல்லும். மேலும், தென்றல் நதியில் விளையாடி, பூக்களின் தேன், மகரந்தம் ஆகியவற்றைக் கவர்ந்து செல்லும். எனவே கவிஞர், "நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே," என்று குழந்தையை உருவகப்பொலிவோடு பாடுகிறார்.
5. அகத்திய முனிவர் பொதிகைமலையில் வாழ்ந்து தமிழை வளர்த்தார். எனவே, பொதிகை மலையில் தோன்றி, மதுரையில் பாண்டிய மன்னர்கள் அமைத்த சங்கங்களில் செழிப்புடன் வளர்ந்தது, தமிழ். இதனைப் "பொதிகை மலைதோன்றி மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ்மன்றமே" என்று இலக்கியநயத்தோடு குழந்தையைப் போற்றிப் பாடுகிறார், கண்ணதாசன். இவ்வாறு கவிஞர், குழந்தையை மலரோடு ஒப்பிட்டு, விடிகாலைப்பொழுது, தென்றல், தமிழ் ஆகியவையாய் உருவகப்படுத்திப் பாடியுள்ளார்.
7.
அன்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே! ஆன்றோரே! தாய்மாரே! பணிவான வணக்கத்தை முதலில் இயம்புகிறேன்.
சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து :
அன்னைத்தமிழுக்கு அணிசேர்த்தவருள் ஒருவர், பேராசிரியர் சுந்தரனார் ஆவார். 1891ஆம் ஆண்டு அவர் ‘மனோன்மணீயம்’ எனும் சிறந்த நாடக நூலைப் படைத்தார். அந்நாடகத்தின் தலையணியாய் விளங்குவது, தமிழ்த்தெய்வ வணக்கப்பகுதியாகும்.
சுந்தரனார் அப்பகுதியில், நிலத்தைப் பெண்ணாகவும், பாரத நாட்டை அப்பெண்ணின் முகமாகவும். தென்னிந்தியாவை அப்பெண்ணின் நெற்றியாகவும், திராவிடநாட்டை அந்நெற்றியில் உள்ள திலகமாகவும், தமிழை அத்திலகத்தின் நறுமணமாகவும் உருவகித்துக் காட்டியுள்ளார்.
திராவிட மொழிகள் என்னும் குங்குமத்திலிருந்து தமிழ் எழுந்து, உலகமெங்கும் பரவித் தன் இலக்கிய இலக்கண மணத்தை நுகரும் எல்லாரையும் மகிழச்செய்கிறது என்கிறார், சுந்தரனார். இவ்வாறு போற்றிய சுந்தரனார், சிறப்புக்குன்றா செந்தமிழை, "நின் சீரிளமைத் திறம் வியந்து வாழ்த்துதுமே" எனப் பாடி நிறைவு செய்கிறார்.
பெருஞ்சித்திரனாரின் தமிழ்வாழ்த்து :
தமிழ்மொழி என்று, எங்கு, எப்படித் தோன்றியது என்னும் வினாக்களுக்குப் பெருஞ்சித்திரனார் முதல் பாட்டின்மூலம் விடை கூறுகிறார். 'இந்த நூற்றாண்டில் தோன்றியது' என்று கூற இயலாது என்பதை, “முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!" என்கிறார், பாவலரேறு. கடலால் கொள்ளப்பட்ட இலெமூரியாக் கண்டத்தில், பாண்டிய மன்னர்கள், இரு சங்கங்களைத் தோற்றுவித்து, தமிழினை உலக மொழிகளுக்குப் பேரரசியாய் இலங்கச்செய்தனர்.
சங்ககாலத்தில் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தோன்றின. சங்கம் மருவிய காலத்தில் ஐம்பெருங்காப்பியங்களும் பதினெண்கீழ்க்கணக்கும் தோன்றின. வேற்று இனத்தவர் ஆட்சியில் தமிழ் வளர்ச்சி தளர்வுற்றது என்றாலும், அது வீழாது நிலைத்து நின்றது. பிறநாட்டினரின் புகழுரைகள் எழுச்சி கொள்ள வைக்கின்றன என்கிறார், பாவலரேறு.
நிறைவாய், 'செந்தாமரைப்பூவில் தேனைப் பருகி, அழகிய சிறகை விரித்துப் பறந்து பண்ணிசைக்கும் வண்டினைப் போல நாங்களும் உம் புகழை முழக்கிப் பரப்பிட முன் வந்தோம்' என்கிறார் பெருஞ்சித்திரனார்.
பாடும் முறையில் கவிஞர்கள் இருவரும் வேறுபட்டாலும் தமிழைப் பரவி வாழ்த்துவதில் ஒன்றுபடுகின்றனர்.
நன்றி.
8.
(c)
திருக்குறள் மெய்ப்பொருளுரை
9.
(c)
பெருஞ்சித்திரனார்
10.
(c)
11.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
12.
| பாப்பத்து | பத்துப்பாட்டு | 10 |
| எண் தொகை | எட்டுத்தொகை | 8 |
| நற்கணக்கு | பதினெண்கீழ்க்கணக்கு | 18 |
| மொத்த நூல்களின் எண்ணிக்கை | 36 | |
13.
(i) பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டது தமிழ்.
(ii) நீண்ட நிலைத்த தன்மை உடையது.
(iii) வேற்றுமொழியார் தமிழைக் குறித்து உரைத்த புகழ்மொழிகள்.
ஆகிய இவையே தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்.
14.
(i) எட்டுத்தொகை
(ii) பத்துப்பாட்டு
15.
1. மரங்களை நடுவோம்; வளி, நீர் காப்போம்!
2. கண்டவற்றை எரிக்காதே, காற்றை மாசுபடுத்தாதே!
16.
வையகத்தில் வாழும் மனிதருள் சிலர், பழமிருக்கக் காய் உண்பதைப் போல, இன்சொல் இருக்கக் கடுஞ்சொல் பேசித் துன்பப்படுகின்றனர்
17.
வள்ளல் குமணன், இல்லாமையால் வாடிவந்த கவிஞருக்குத் தனது தலையை அளித்து மங்காக் கீர்த்தி பெற்றான்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - கோபல்லபுரத்து மக்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - காசிக்காண்டம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - விருந்து போற்றுதும்! Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards