10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - கம்பராமாயணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - புதிய நம்பிக்கை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - திருவிளையாடற்புராணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - மொழிபெயர்ப்புக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - கோபல்லபுரத்து மக்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
அயற்கூற்றாக எழுதுக.
"கலைஞர், பழுமரக் கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.
3.
சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக
4.
கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
5.
"உறங்குகின்ற, கும்பகன்ன எழுந்திராய் எழுந்திராய்! காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய்” - கும்பகருணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
6.
7.
8.
சித்திரை, வைகாசி - எந்தப் பெரும்பொழுதிற்கு உரியது?
பின்பனி காலம்
இளவேனிற் காலம்
கார் காலம்
முதுவேனிற் காலம்
9.
| அ | குறிஞ்சி | 1 | கடலும் கடல் சார்ந்த இடமும் |
| ஆ | முல்லை | 2 | வயலும் வயல் சார்ந்த இடமும் |
| இ | மருதம் | 3 | மலையும் மலை சார்ந்த இடமும் |
| ஈ | நெய்தல் | 4 | காடும் காடு சார்ந்த இடமும் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
10.
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் _________ .
கம்பராமாயணம்
இராமாயணம்
இராமாவதாரம்
வால்மீகி இராமாயணம்
11.
குளிர் காலத்தைப் பொழுதாய்க் கொண்ட நிலங்கள் __________ .
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
12.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஊரில் விளைச்சல் இல்லாததால்
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
அங்கு வறுமை இல்லாததால்
13.
14.
இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் கவி எவ்வாறு காட்டுகிறது. (அல்லது) மருதம் எவ்வாறு வீற்றிருக்கிறது?
15.
'கடற்கரையில் உப்புக்காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் மலைப்பயிர்களும், நிலப்பகுதிகளில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன' - காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும் பண்டைத்தமிழரின் திணைநிலைத்தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும், அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
16.
17.
சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி... தண்டலை மயில்கள் ஆட...
இவ்வுரையைத் தொடர்க!
18.
"கம்பராமாயணம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'தண்டலை மயில்கள்' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக
19.
20.
கலைச்சொல் எழுதுக.
அ. Play wright
ஆ. Aesthetics
21.
அகராதியில் காண்க
அ. தால்
ஆ. உழுவை
22.
பொருத்தமானவற்றை எழுதுக.
மலைமுகட்டில் மேகம்............ - அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத்................
1.
2.
3.
4.
விடை: உழவர்கள் வயலில் உழுதனர்.
நெய்தற்பூவை பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
5.
(i) கும்பகருணனே எழுந்திரு, உடனே எழுந்திரு.
(ii) வில்லேந்திய இயம தூதர்களின் கையிலே இனிப் படுத்து உறங்குவாயாக! உறங்குவாயாக! என்று கூறி எழுப்புகிறார்கள்.
6.
(c)
7.
(d)
8.
(b)
இளவேனிற் காலம்
9.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
10.
(c)
இராமாவதாரம்
11.
(c)
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
12.
(d)
அங்கு வறுமை இல்லாததால்
13.
14.
(i) குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆடின.
(ii) விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்றின.
(iii) சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழுந்தன.
(iv) மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல் காட்சியளித்தன.
(v) நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிந்தன.
(vi) மகர யாழின் தேன் ஒத்த இசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருந்தது.
15.
(i) பண்டைத்தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ஐவகை நிலங்களாய்ப் பிரித்தனர்.
(ii) அவற்றுள் குறிஞ்சி, மருதம், நெய்தல், முல்லை ஆகிய நிலங்கள் முறையே மலை, வயல்,
(iii) கடல், காடு ஆகிய பகுதிகளைக் குறித்தன.
(iv) அன்று நடைபெற்ற அந்நிலத்தொழில்களே இன்றும் நடைபெறுகின்றன.
(v) காலநிலைக்கேற்பச் சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
(vi) மருதநிலத்தில் உழவுத்தொழில் நடைபெறுகிறது. அத்தொழிலுக்கான பல பணிகளுக்கு இன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(vii) நெய்தலில் அன்று கட்டுமரத்தில் சென்று மீன் பிடித்தனர். இன்று மோட்டார் படகுகளில் சென்று மீன் பிடிக்கின்றனர்.
(viii) இவ்வாறு நிலங்களுக்கேற்ற தொழில்களில் நவீனக்கருவிகள் பல பயன்படுத்தப்படுகின்றன.
16.
17.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி
தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க.
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்
வண்டுகளினிது பாட மருதம் வீற்றிருக்கும்மாதோ,
குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட விரி தாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேன் ஒத்த இசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது.
வண்மையில்லை யோர் வறுமை யின்மையால்
திண்மையில்லை நேர்செறுந ரின்மையால்
உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்
வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்
கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால், கொடைக்கு அங்கே இடமில்லை, நேருக்கு நேர் போர் புரியவர் இல்லாததால், உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை, பொய்மொழி இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை, பல வகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை.
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?
ஐயோ! இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்.
பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட, இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ? பச்சைநிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ? கார்மேகமோ? ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன். இராமனுடைய மாநிற மேனியை கம்பர் இவ்வாறு வருணிக்கிறார்.
”ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன்" என்று எனை ஏசாரோ?
ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றைக் கடந்து செல்வார்களா? யானைகள் கொண்ட சேனையைக் கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா? தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகாவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைப் பழிசொல்ல மாட்டார்களா?
உறங்குகின்ற கும்பகர்ணனே! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய் எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால் தூதர் கையிலே
உறங்குவாய்! உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!
உறங்குகின்ற கும்பகர்ணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!
18.
தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ.
வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையிளொடு மிளையானொடும் போனான்;
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்
19.
20.
21.
22.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - காசிக்காண்டம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - விருந்து போற்றுதும்! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின் ஓசை - கேட்கிறதா என் குரல்! Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards