Entrance Exams | நீட் தமிழ் 2021

2022 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு நடைபெறும் நாள் : 12 செப்டம்பர் 

நீட் தேர்வு ( National Eligibility cum Entrance Test ) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956 இன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948 இன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது அகில இந்திய அளவிலான, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான ( அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக ) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) நடத்தப்பட்டு வந்தது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு ( All India Pre Medical Test ( AIPMT ) ) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வானது தேசிய தேர்வு முகமை (NTA) அமைப்பு  நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தது. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2020 இன் கீழ், எய்ம்ஸ் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியனவும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை "நீட்" தேர்வின் மூலம் தான் மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தமிழ் 2021

Subscribe Now