11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. SI முறையில் ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு GSI = 6.6 × 10-11 Nm2 kg−2, எனில் CGS முறையில் அதன் மதிப்பைக் கணக்கிடுக?

  2. y = x2 என்ற சார்பினைக் கருதுக. "சார்பு எல்லை" கருத்தைப் பயன்படுத்தி x = 2 என்ற புள்ளியில் அதன் வகைக்கெழு \({dy\over dx}\) ஐக் காண்க.

  3. உராய்வு எவ்வாறு தோன்றுகிறது என்பதை விவரி. சாய்தளம் ஒன்றில் உராய்வுக் கோணம், சறுக்குக் கோணத்திற்குச் சமம் எனக் காட்டுக.

  4. வேலை ஆற்றல் தத்துவத்தை கூறி விளக்குக.அதற்கு ஏதேனும் மூன்று உதாரணங்களை கூறுக 

  5. R ஆரமுடைய சீரான பரப்பு நிறை அடர்த்தி கொண்ட வட்டத்தட்டிலிருந்து \(\frac { R }{ 2 } \) ஆரமுடைய ஒரு சிறு தட்டு வடிவப் பகுதி படத்தில் காட்டியுள்ளவாறு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் நிறை மையத்தைக் கணக்கிடுக.

  6. ஒழுங்கற்ற வடிவமுடைய பொருட்களின் நிறை மையம் காணும் முறையை விளக்குக.

  7. குன்றின்  உச்சியிலிருந்து அருவி (நீர்) கீழ்நோக்கி பாய்வது ஏன்?

  8.  நுண்புழை நுழைவு என்றால் என்ன? நுண்புழையேற்ற முறையில் நீர்மம் ஒன்றின் பரப்பு இழுவிசைக்கான  கோவையைத் தருவி.

  9. a. இந்த ஏரியில் அதிக மழை உள்ளது.
    b. குவளையில் உள்ள சூடான தேநீரில்  அதிக வெப்பம் உள்ளது.
    இவ்விரண்டு கூற்றுகளில் உள்ள தவறு என்ன?

  10. அறை ஒன்றினுள் 3:1 விகிதத்தில் அக்ஸிஜன்  மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் உள்ளன. அறையின் வெப்பநிலை 270C அக்ஸிஜன் (O2) மற்றும் ஹைட்ரஜன் (H2) இவற்றின் மூலக்கூறு நிறைகள் முறையே 32 g mol-1 மற்றும் 2 g mol-1 ஆகும். வாயு மாறிலி R = 8.32 J mol-1 K-1 எனில் பின்வருவனவற்றைக் கணக்கிடுக. 
    a) ஆக்ஸிஜன்  மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் சராசரி இருமுடி மூலவேகம்.
    b) ஆக்ஸிஜன்  மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்.
    c) ஆக்ஸிஜன்  மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலின் விகிதம்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment