பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 - 2019 - 2020

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 75

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    12 x 1 = 12
  1. மாற்றுக : 300K = _________ 0

    (a)

    230 C

    (b)

    2730 C

    (c)

    270 C

  2. முழு அக எதிரொளிப்பைப் பற்றிய சரியான கூற்று எது _________ ?

    (a)

    படுகோணம் மாறுநிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்

    (b)

    அதிக ஒளிவிலகல் எண் ஊடகத்திலிருந்து குறைந்த ஒளிவிலகல் எண் கொண்ட ஊடகத்திற்கு ஒளி செல்ல வேண்டும்.

    (c)

    (அ) மற்றும் (ஆ) இரண்டும்

  3. ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.

    (a)

    ஐசோடோன்

    (b)

    ஐசோடோப்பு

    (c)

    ஐசோபார்

  4. காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது. ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில் தொடர்பு கொண்டுள்ளன. விழுந்த மரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது. இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால் நடைபெறுகின்றது.

    (a)

    ஒளி மற்றும் நீர்

    (b)

    நீர் மற்றும் ஊட்டப்பொருள்

    (c)

    நீர் மற்றும் ஈர்ப்பு விசை

    (d)

    ஒளி மற்றும் ஈர்ப்பு விசை

  5. குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது எது ? 

    (a)

    ஹைடிரா

    (b)

    மண்புழு

    (c)

    நட்சத்திர மீன்

    (d)

    அஸ்காரிஸ் (உருளைப்புழு)

  6. மனித உடலின் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து 

    (a)

    கார்போஹைட்ரேடடுகள்

    (b)

    புரோட்டீன்

    (c)

    வைட்டமின் 

    (d)

    கொழுப்பு 

  7. கலோரி என்பது எதனுடைய அலகு?

    (a)

    வெப்பம் 

    (b)

    வேலை

    (c)

    வெப்பநிலை

    (d)

    உணவு

  8. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ____________ என அழைக்கப்படும்.

    (a)

    ஜூல் வெப்பமேறல்

    (b)

    கூலூம் வெப்பமேறல்

    (c)

    மின்னழுத்த வெப்பமேறல்

    (d)

    ஆம்பியர் வெப்பமேறல் 

  9. ஆக்ஸிஜனேற்றிகள் ____________ கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    எலக்ட்ரான் ஈனி

    (b)

    எலக்ட்ரான் ஏற்பி 

  10. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (CO2 ) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ______ எனப்படும்.

    (a)

    ஒளிச்சேர்க்கை

    (b)

    உட்கிரகித்தல்

    (c)

    சுவாசித்தல்

    (d)

    சிதைத்தல்

  11. கீழ்காணும் நோய்களுள் எவை வைரஸ் நோய்கள் ஆகும்?

    (a)

    யானைக்கால்நோய், எய்ட்ஸ்

    (b)

    சாதாரண சளி, எய்ட்ஸ்

    (c)

    வயிற்றுப்போக்கு, சாதாரண சளி 

    (d)

    டைபாய்டு, காசநோய்

  12. மெசானா என்ப து ஒரு _________ இனம்.

    (a)

    மாடு

    (b)

    எருமை

    (c)

    வெள்ளாடு

    (d)

    செம்மறி ஆடு


  13. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  14. மைய விலக்கு விசையின் பயன்பாடுகள்? 

  15. முதன்மை குவியம் என்றால் என்ன?

  16. பரப்பு கவர்தல் என்றால் என்ன?

  17. வேறுபடுத்துக : மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்

  18. சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமா? கலந்தாய்வு செய்க.

  19. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

  20. கீழ்காணும் செரிமான செயல்முறையின் ஐந்து படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக.
    செரிமானம்,தன்மயமாதல்,உட்கொள்ளுதல்,வெளியேற்றுதல்,உறிஞ்சுதல்.

  21. சூரிய மண்டலம் என்றால் என்ன ?

  22. மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  23. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய் எதிர்ப்பு தடுப்பூசி

  24. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 4 = 28
  25. SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை ?

  26. ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.

  27. குழியுடலிகளின் உடற் சுவர் எவ்வாறு அமைந்துள்ளது?

  28. வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.

  29. நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?

  30. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி,எவையேனும் மூன்றனை விளக்குக.

  31. அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி எவ்வாறு நமது செவிகளை வந்தடைகிறது?

  32. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?

  33. உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?

  34. காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    3 x 7 = 21
    1. கீழே கொடுக்கப்பட்ட படத்தில் பாகங்களைக் கண்டறியவும்.

      (a)a,b,c பாகம் குறிக்கவும் 
      (b)திசுவின் வேதிக் கூட்டுப் பொருட்கள் எவை?
      (c)பாகம் c-யின் செயல் என்ன?

    2. ஓரு  பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

    1. சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம் பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளைணுக்கள் குறைவுபடுகின்றன.
      அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
      ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
      இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத் தொடர்பு கொள்கிறது?
      ஈ. இவ்வாறான நோய் பரவலைத்தடுப்பதற்கான மூன்று முறைகளை பரிந்துரை செய்க.

    2. வளிமண்டல அழுத்தம் 98.6 கிலோ பாஸ்கல் அளவு இருக்கும்பொழுது பாதரச காற்றழுத்தமானியின் பாதரசத்தின் உயரம் எவ்வளவு இருக்கும்?

    1. கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.

    2. மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் II - 2019 - 2020  ( 9th Science Annual Exam Model Question Paper II - 2019 - 2020 )

Write your Comment