பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 3 - 2019 - 2020

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 75

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    12 x 1 = 12
  1. சுருள்வில் தராசு பொருட்களின் _____ கணக்கிட பயன்படுகிறது.

    (a)

    எடையை

    (b)

    நிறையை

    (c)

    அளவை

  2. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______ 

    (a)

    குழியாடி

    (b)

    குவியாடி

    (c)

    சமதளஆடி

  3. நியானின் இணைதிறன் _________.

    (a)

    2

    (b)

    4

    (c)

    0

  4. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்

    (a)

    நடுக்கமுறு வளைதல்

    (b)

    ஒளிச்சார்பசைவு

    (c)

    நீர்சார்பசைவு

    (d)

    ஒளியுறு வளைதல்

  5. குளிர் இரத்தப் பிராணிகள் எவை ?

    (a)

    மீன், தவளை, பல்லி, மனிதன்

    (b)

    மீன், தவளை, பல்லி, மாடு

    (c)

    மீன், தவளை, பல்லி, பாம்பு

    (d)

    மீன், தவளை, பல்லி, காகம்

  6. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 'ஸ்கர்வி' நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர் 

    (a)

    ஜேம்ஸ் லிண்ட் 

    (b)

    லூயிஸ் பாஸ்டர் 

    (c)

    சார்லஸ் டார்வின் 

    (d)

    ஐசக் நியூட்டின் 

  7. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?  

    (a)

    வெப்பக்கதிர்வீச்சு

    (b)

    வெப்பக்கடத்தல்

    (c)

    வெப்பச்சலனம்

    (d)

    b மற்றும் c

  8. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ____________ என அழைக்கப்படும்.

    (a)

    ஜூல் வெப்பமேறல்

    (b)

    கூலூம் வெப்பமேறல்

    (c)

    மின்னழுத்த வெப்பமேறல்

    (d)

    ஆம்பியர் வெப்பமேறல் 

  9. ஆக்ஸிஜனேற்றிகள் ____________ கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    எலக்ட்ரான் ஈனி

    (b)

    எலக்ட்ரான் ஏற்பி 

  10. கீழ்க்கண்டவற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும்?

    (a)

    நீர் மறுசுழற்சி

    (b)

    ஆழ்துளைக் கிணறுகளை அதிகப்படுத்துதல்

    (c)

    மேல்நிலை நீர்த்தேக்கத் தொடிகளை பெருமளவில் பயன்படுத்துதல்.

    (d)

    தாவரங்களுக்கு நீர் ஊற்றும்போது குழாய்களைப் பயன்படுத்துதல்.

  11. சிபிலிஸ் நோயை ஏற்படுத்துவது

    (a)

    டிரெப்போனியா பல்லிடம்

    (b)

    லெப்டோஸ்மிரா

    (c)

    பாஸ்டியுரெல்லா

    (d)

    விப்ரியோ காலரே

  12. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த _______ காரணமாகும்.

    (a)

    அடர்த்தி

    (b)

    அழுத்தம்

    (c)

    திசைவேகம்

    (d)

    நிறை


  13. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  14. மைய விலக்கு விசையின் பயன்பாடுகள்? 

  15. முதன்மை குவியம் என்றால் என்ன?

  16. திண்மங்கள் ஏன் நிலையான கன அளவை பெற்றுள்ளன?

  17. வேறுபடுத்துக : மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்

  18. மின்னோட்டம்-வரையறு அதன் அலகினைத் தருக.

  19. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

  20. இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரைப்பைநீரைச் சுரக்கிறது.இதனுடைய பணி என்ன?

  21. சுழற்சித் திசைவேகம் வரையறு.

  22. வேதிச்சிகிச்சை என்றால் என்ன?

  23. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய் எதிர்ப்பு தடுப்பூசி

  24. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 4 = 28
  25. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?

  26. மீத்தேன் ஆக்ஸிஜனில் எரிந்து கார்பன் டை ஆக்ஸைடையும் மற்றும் நீராவியையும் ஏற்படுத்துகிறது. இது பின்வரும் சமன்பாட்டின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
    CH4 (வா) + 2O2 (வா) →CO2 (வா) + 2 H2O (வா)
    கணக்கீடு : (i) 50 செ.மீ 3 மீத்தேன் எரிவதற்கு தேவைப்படும் ஆக்ஸிஜனின் பருமன் மற்றும்
    (ii) இந்த வினையில் உருவான கார்பன் டை ஆக்ஸைடின் பருமன்

  27. தட்டைப் புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக் கூறுக

  28. தன் வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.

  29. மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?

  30. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி,எவையேனும் மூன்றனை விளக்குக.

  31. ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்?

  32. தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?

  33. சாம்பல் நீர் என்றால் என்ன?

  34. காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    3 x 7 = 21
    1. மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக.

    2. கீழ்கண்ட படத்திலிருந்து மைட்டாசிஸின் எந்த நிலை என்று கண்டறிக.இந்த நிலையில் குரோமோசோம்களின் நிகழ்வுகளை பட்டியலிடுக.

    1. திரவமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை படத்துடன் விவரி.

    2. கைபேசியில் பயன்படுத்தும் மின்கலங்களை மறு ஊட்ட ம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.

    1. சிறு குறிப்பு வரைக .
      அ) பசுமை வீட்டின் முக்கியத்துவம்
      ஆ) உழவன் கைபேசி செயலி
      இ) முக்கிய மலரியல் மண்டலங்கள்
      ஈ) அஸோஸ்பை ரில்லம்

    2. புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் III - 2019 - 2020  ( 9th Science Annual Exam Model Question Paper III - 2019 - 2020 )

Write your Comment