பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 4 - 2019 - 2020

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 75

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    12 x 1 = 12
  1. ஒரு வானியல் அலகு என்பது

    (a)

    1.496 x 1011 மீ

    (b)

    9.46 x 1015 மீ

    (c)

    1.496 x 10-11 மீ

  2. குழியாடியின் குவியத்தொலைவு 5 செ.மீ எனில் அதன் வளைவு ஆரம்

    (a)

    5 செ.மீ

    (b)

    10 செ.மீ

    (c)

    2.5 செ.மீ

  3. நியூட்ரான்களின் மின்சுமை _________.

    (a)

    நேர்

    (b)

    எதிர்

    (c)

    சுழி

  4. இலையில் காணப்படும் பச்சையம் ____________ க்கு தேவைப்படும்

    (a)

    ஒளிச்சேர்க்கை

    (b)

    நீராவிப்போக்கு

    (c)

    சார்பசைவு

    (d)

    திசைசாரா தூண்டல் அசைவு

  5. மீசோகிளியா காணப்படுவது

    (a)

    துளையுடலிகள்

    (b)

    குழியுடலிகள்

    (c)

    வளைதசையுடலிகள்

    (d)

    கணுக்காலிகள்

  6. உணவு கெட்டுபோவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது 

    (a)

    மெழுகுப் பூச்சு 

    (b)

    சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள் 

    (c)

    உணவின் ஈரத்தன்மை 

    (d)

    செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருள்கள் 

  7. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?  

    (a)

    வெப்பக்கதிர்வீச்சு

    (b)

    வெப்பக்கடத்தல்

    (c)

    வெப்பச்சலனம்

    (d)

    b மற்றும் c

  8. இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் ____________ 

    (a)

    220 Hz

    (b)

    50 Hz

    (c)

    5 Hz

    (d)

    100 Hz

  9. ____________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை

    (a)

    சகப்பிணைப்பு 

    (b)

    ஈதல் சகப்பிணைப்பு

    (c)

    அயனிப் பிணைப்பு

  10. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு ____.

    (a)

    குறையும் 

    (b)

    அதிகரிக்கும்

    (c)

    அதே அளவில் இருக்கும்

    (d)

    குறையும் அல்லது அதிகரிக்கும்

  11. கீழ்க்கண்டவற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும்?

    (a)

    நீர் மறுசுழற்சி

    (b)

    ஆழ்துளைக் கிணறுகளை அதிகப்படுத்துதல்

    (c)

    மேல்நிலை நீர்த்தேக்கத் தொடிகளை பெருமளவில் பயன்படுத்துதல்.

    (d)

    தாவரங்களுக்கு நீர் ஊற்றும்போது குழாய்களைப் பயன்படுத்துதல்.

  12. மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை

    (a)

    தும்மல்

    (b)

    இருமல்

    (c)

    கடத்திகள்

    (d)

    துளிர்தொற்று முறை


  13. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  14. இயக்கத்தின் வகைகள் யாவை?

  15. சமதள ஆடியில் ஒருவரின் முழு உருவம் தெரிய வேண்டுமெனில் சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?

  16. வாயுக்கள் ஏன் நிலையான கன அளவை பெற்றிருக்கவில்லை?

  17. இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார் அவ்வாறு அவர் சொல்வதற்குள் காரணம் என்ன?

  18. பின்வரும் மின் தடைய அமைப்பில், புள்ளிகள் a மற்றும் b ஆகியவற்றுக்கிடையே பயனுறு மின் தடை எவ்வளவு?

  19. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

  20. உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?

  21. சூரிய மண்டலம் என்றால் என்ன ?

  22. வேதிச்சிகிச்சை என்றால் என்ன?

  23. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பிளாஸ்மிடு 

  24. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 4 = 28
  25. நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.

  26. ஓர் அணு 11 புரோட்டான்கள், 11 எலக்ட்ரான்கள் மற்றும் 12 நியூட்ரான்களையும் பெற்றுள்ளது. அதன் அணு எண் யாது? அத்தனிமத்தின் பெயரினை எழுதுக?

  27. தட்டைப் புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக் கூறுக

  28. 90oC ல் இருக்கும் 100 கி நீரையும் 20oC ல் இருக்கும் 600 கி நீரையும் கலக்கும் போது கிடைக்கும் கலவையின் இறுதி வெப்பநிலை எவ்வளவு?

  29. நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?

  30. உள்ளீ ட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.

  31. எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.

  32. தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?

  33. ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?

  34. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    3 x 7 = 21
    1. 10 \(\Omega \) மின் தடை கொண்ட கம்பி ஒன்று வட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன் விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள A மற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில் காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.

    2. சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.

    1. வளிமண்டல அழுத்தம் 98.6 கிலோ பாஸ்கல் அளவு இருக்கும்பொழுது பாதரச காற்றழுத்தமானியின் பாதரசத்தின் உயரம் எவ்வளவு இருக்கும்?

    2. டேனியல் மின்கலத்தின் படம் வரை ந்து அதன் செயல்பாட்டை விளக்குக?

    1. மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?

    2. பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய  வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் IV - 2019 - 2020  ( 9th Science Annual Exam Model Question Paper IV - 2019 - 2020 )

Write your Comment