Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. ஒரு இரப்பர் பந்தின் விட்டத்தை அளவிடும்போ து முதன்மை அளவுகோலின் அளவு 7 செ.மீ, வெர்னியர் ஒன்றிப்பு 6 எனில் அதன் ஆரத்தினைக் கணக்கிடுக

  2. கீழ்க்காணும் படத்திலிருந்து நேர் சுழிப்பிழை மற்றும் எதிர்சுழிப்பிழையை க் கணக்கிடுக

  3. ஒரு தடகள வீரர் 200 மீட்டர் விட்டம் உடைய வட்டப் பாதையை 40 விநாடியில் கடக்கிறார். 2 நிமிடம் 20 விநாடிக்குப் பிறகு அவர் கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி எவ்வளவு?

  4. கீழ்வரும் அட்டவணையிலிருந்து கிடைக்கும் வரைபடத்தைச் சரிபார்க்கவும்.

    நேரம் (விநாடி) 0 2 4 6 8 10 12
    திசைவேகம் (மீ/விநாடி) 0 20 40 40 40 20 0
  5. பின்வரும் நிகழ்வுகளில் ஒளிவிலகல் நடைபெறும் விதத்தைப் படங்கள் வரைந்து விளக்குக.
    அ) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு
    ஆ) அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு
    இ) இரு ஊடகங்களைப் பிரிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக

  6. இரும்பு, ஃபெர்ரஸ் மற்றும் ஃபெர்ரிக் குளோரைடு ஆகிய இரண்டு குளோரைடுகளை உருவாக்கும். ஒவ்வொரு குளோரைடும் 2கி இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்டது. 4.538 கிராம் ஃபெர்ரஸ்குளோரைடு மற்றும் 5.804 கிராம் ஃபெர்ரிக்குளோரைடு உருவாகின்றது. இது பெருக்கல் விகித விதியைப் பொருத்தது என்பதை காட்டுக

  7. A, B மற்றும் C என்று மூன்று தாவங்கள் உள்ளன. A தாவரத்தில் உள்ள மலரின் இதழ்கள் பகல் நேரத்தில் பிரகாசமான ஒளியில் திறக்கும். ஆனால் ஒளி மங்கும்போது இருளில் மூடிக்கொள்ளும். தாவரம் B ல் உள்ள மலர்களின் இதழ்கள் இரவு நேரத்தில் திறந்த நிலையில் இருக்கும். ஆனால் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் மூடிக்கொள்ளும். தாவரம் C யில் உள்ள இலைகளை விரல்களால் தொட்டால் அல்லது திடப் பொருள் ஏதும் அதன் மீது பட்டால் மூடிக்கொள்ளும்.
    அ) தாவரம் A மற்றும் B யின் மலர்களில் நிகழும் நிகழ்வினைப் பெயரிடுக.
    ஆ) தாவரம் A மற்றும் B யின் மலர்களின் பெயரினை எழுதுக.
    இ) தாவரம் C யின் இலைகளில் ஏற்படும் நிகழ்வினைப் பெயரிடுக
    ஈ) தாவரம் C யின் இலைகளில் நிகழும் நடத்தை போன்று வேறு ஒரு தாவரத்தின் பெயரினை எழுதுக

  8. கற்பனை செய்து பாருங்கள். மாணவன் A ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான சில முக்கிய காரணிகளைப் படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில் அத்தாவரத்தின் ஒரு இலையின் நடுப்பகுதியை கருப்புக் காகிதம் கொண்டு மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்புக் காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.
    அ) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது?
    ஆ) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது?
    இ) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்?
    ஈ) ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் என்ன?

  9. நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறை பாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.

  10. தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?

  11. நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக 

  12. கீழ்கண்ட படத்திலிருந்து மைட்டாசிஸின் எந்த நிலை என்று கண்டறிக.இந்த நிலையில் குரோமோசோம்களின் நிகழ்வுகளை பட்டியலிடுக.

  13. மிதத்தல் விதிகளைக் கூறு.

  14. ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.

  15. பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவாதி.

  16. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

  17. பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.

  18. கீழ்க்கண்டவற்றை  வே றுபடுத்துக 
    அ) அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
    ஆ) மகரந்தம் மற்றும் தேன் ரசம் 
    இ) கூனி இறால் மற்றும் இறால்
    ஈ) துடுப்பு மீன் மற்றும் ஓடு மீன்
    உ) தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு

  19. மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?

  20. சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம் பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளைணுக்கள் குறைவுபடுகின்றன.
    அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
    ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
    இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத் தொடர்பு கொள்கிறது?
    ஈ. இவ்வாறான நோய் பரவலைத்தடுப்பதற்கான மூன்று முறைகளை பரிந்துரை செய்க.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 9th Science - Full Portion Five Marks Question Paper )

Write your Comment