அரையாண்டு மாதிரி வினாத்தாள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  12 x 1 = 12
 1. அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

  (a)

  நிறை

  (b)

  எடை

  (c)

  காலம்

  (d)

  நீளம்

 2. முழு அக எதிரொலிப்பு நிகழ ஒளியானது_____லிருந்து _____க்கு செல்லவேண்டும்

  (a)

  அடர்மிகு;அடர்குறை

  (b)

  அடர்குறை:அடர்குறை

  (c)

  அடர்மிகு;அடர்மிகு

 3. அணுக்கரு குறிப்பது

  (a)

  புரோட்டான் + எலக்ட்ரான்

  (b)

  நியூட்ரான் மட்டும்

  (c)

  எலக்ட்ரான்+நியூட்ரான்

  (d)

  புரோட்டான்+நியூட்ரான்

 4. காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது. ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில் தொடர்பு கொண்டுள்ளன. விழுந்த மரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது. இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால் நடைபெறுகின்றது.

  (a)

  ஒளி மற்றும் நீர்

  (b)

  நீர் மற்றும் ஊட்டப்பொருள்

  (c)

  நீர் மற்றும் ஈர்ப்பு விசை

  (d)

  ஒளி மற்றும் ஈர்ப்பு விசை

 5. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை

  (a)

  அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல் 

  (b)

  கதிர் வீச்சுமுறை 

  (c)

  உப்பினைச் சேர்த்தல் 

  (d)

  கலன்களில் அடைத்தல் 

 6. தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?

  (a)

  குழலிப்பெருக்கி

  (b)

  தொலைக்காட்சி 

  (c)

  கணினி

  (d)

  வானொலி

 7. காந்தப் பாய அடர்த்தியின் அலகு

  (a)

  வெபர்

  (b)

  வெபர் /மீட்டர்

  (c)

  வெபர் / மீட்டர்2

  (d)

  வெபர் மீட்டர்2

 8. ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது 

  (a)

  பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்.

  (b)

  முதிர்ந்த செல்கள்

  (c)

  உயிரற்ற செல்கள்

  (d)

  ஸ்கிளிரன்கைமா செல்கள்

 9. கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?

  (a)

  யூரியா

  (b)

  புரதம்

  (c)

  நீர்

  (d)

  உப்பு

 10. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி

  (a)

  ஈதர்நெட்

  (b)

  விஜிஏ

  (c)

  எச்டிஎம்ஐ

  (d)

  யூஎஸ்பி 

 11. அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம், அதனுடைய

  (a)

  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது

  (b)

  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

  (c)

  குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது

  (d)

  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது

 12. ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்

  (a)

  நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை

  (b)

  தாக்கப்பட்ட உறுப்பு

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  ஏதுமில்லை

 13. பகுதி - II

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  7 x 2 = 14
 14. புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?

 15. மைய விலக்கு விசையின் பயன்பாடுகள்? 

 16. அடர்குறை (ஊடகம் 1) ஊடகத்திலிருந்து அடர்மிகு (ஊடகம் 2) ஊடகத்திற்கு ஒளி செல்கிறது.படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 45o ,30o எனில் முதல் ஊடகத்தைப் பொறுத்து 2-வது ஊடகத்தின் ஒளிவிலகல் கணக்கிடுக. 
  படுகோணம் i =45o
  விலகு கோணம் = r =30o

 17. பருப்பொருளின் எந்த நிலை மிக அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது

 18. ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.       

 19. மண்டையோடற்றவை (ஏகிரேனியா) என்றால் என்ன

 20. 12\(\Omega\),6\(\Omega\) மின்தடை மதிப்புள்ள இரு மின் தடையங்கள் முதலில் தொடரிணைப்பிலும் பின்னர் பக்க இணைப்பிலும் இணைக்கப்படுகின்றன. அவற்றின் மின்னோட்ட - மின்னழுத்த வேறுபாடு வரைபடம் எக்கோட்டினால் குறிக்கப்படும்?

 21. AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் 

 22. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

 23. செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?

 24. பகுதி - III

  ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

  7 x 4 = 28
 25. தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியை வேறுபடுத்துக?

 26. கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக.அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.

 27. கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.i) ஒன்றாக கலக்கும் திரவங்கள் ii) ஒன்றாக கலவாதத் திரவங்கள்

 28. மீத்தேன் ஆக்ஸிஜனில் எரிந்து கார்பன் டை ஆக்ஸைடையும் மற்றும் நீராவியையும் ஏற்படுத்துகிறது. இது பின்வரும் சமன்பாட்டின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
  CH4 (வா) + 2O2 (வா) →CO2 (வா) + 2 H2O (வா)
  கணக்கீடு : (i) 50 செ.மீ 3 மீத்தேன் எரிவதற்கு தேவைப்படும் ஆக்ஸிஜனின் பருமன் மற்றும்
  (ii) இந்த வினையில் உருவான கார்பன் டை ஆக்ஸைடின் பருமன்

 29. கீழக்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒருகாரணத்தைக் கூறுக 
  அ) உணவுப் பாதுகாப்பு பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்____ 
  ஆ) காலாவதி தேதி முடிவடைத்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது ஏனெனில்____ 
  இ) கால்சியம் சத்துக் குறைப்பட்டால் எலும்புகளில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது ஏனெனில்____ 

 30. கீழ்க்கண்ட வினைகள் ஆக்ஸிஜனேற்ற/ஒடுக்க வினைகளா எனக் காண்க.
  அ Na\(\rightarrow\) Na++e-
  ஆ Fe3++2e-\(\rightarrow\) Fe+

 31. தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை? 

 32. கணினியின் கூறுகள் யாவை?

 33. பாதரசத்தின் அடர்த் தி 13600 கிகி மீ-3 எனில் ஒப்படர்த் தியைக் கணக்கிடுக

 34. மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும்
  சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.

 35. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  3 x 7 = 21
  1. மின்மாற்றியின் இரு வகைகளை விளக்கவும் 

  2. காரங்களின் பயன்கள் நான்கினை எழுதுக.

  1. பொருத்தமான படங்களுடன் வேறுபட்ட முன்முதுகு நாணிகளின் சிறப்புப் பண்புகளை விவரிக்க.

  2. கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து

  1. ஒரு இரப்பர் பந்தின் விட்டத்தை அளவிடும்போ து முதன்மை அளவுகோலின் அளவு 7 செ.மீ, வெர்னியர் ஒன்றிப்பு 6 எனில் அதன் ஆரத்தினைக் கணக்கிடுக

  2. ஹைட்ரஜன் சல்பைடில் (H2S) 94.11 % சல்ஃபரும், நீரில் ( H2O) 11.11 % ஹைட்ஜனும் மற்றும் சல்ஃபர் டை  ஆக்ஸைடு (SO2) ல் 50 % ஆக்ஸிஜனும் உள்ளன. இதன் முடிவுகள் தலைகீழ் விகித விதியுடன் ஒத்துப்போகின்றது  என்று காட்டுக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 9th Science Half Yearly Model Question Paper )

Write your Comment