தாவர உலகம் - தாவர செயலியல் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு

  (a)

  வேதிச் சார்பசைவு

  (b)

  நடுக்கமுறு வளைதல்

  (c)

  ஒளிச் சார்பசைவு

  (d)

  புவிஈர்ப்பு சார்பசைவு

 2. ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________

  (a)

  கார்பன் – டை ஆக்ஸைடு

  (b)

  ஆக்ஸிஜன்

  (c)

  ஹைட்ரஜன்

  (d)

  ஹீலியம்

 3. 3 x 1 = 3
 4. தூண்டலை  நோக்கி: ____________
  தூணெலுக்கு அப்போல்: எதிர் சார்பகைவு

  ()

  எதிர் சார்பசைவு

 5. சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____________ எனப்படும்

  ()

  ஒளி சார்பசைவு

 6. புவிஈர்ப்பு திசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ____________ எனப்படும்.

  ()

  நேர் புவிஈர்ப்பு சார்பசைவு

 7. 4 x 1 = 4
 8. நிலவு மலர்களில் (Moon Flower) இதழ்கள் காலையில் திறப்பதும் மாலையில் மூடிக்கொள்வதும், இந்த வகை ஒளியுறு வளைதல் எனப்படும்.

  (a) True
  (b) False
 9. ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.

  (a) True
  (b) False
 10. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

  (a) True
  (b) False
 11. தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது, நீர் இழப்பு ஏற்படும்.

  (a) True
  (b) False
 12. 3 x 2 = 6
 13. தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலின் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் என்ன? 

 14. ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.       

 15. நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் தருக? 

 16. 3 x 5 = 15
 17. நீர் சார்பசைவு - நிரூபிக்க ஒரு சோதனையை வடிவமைத்து விளக்கவும். 

 18. தாவரத்தில் பல்வேறு வகையான சார்பசைவிற்கான சோதனையை நிகழ்த்தும் போது, X என்று குறிக்கப்பட்டத் தாவரத்தின் வேர் வளைந்து A மற்றும் B என்ற இரண்டு தூண்டல்களை நோக்கி வளர்கிறது. ஆனால் C என்ற மூன்றாம் தூண்டலை விட்டு விலகி வளைந்து காணப்படுகிறது. எனினும் X தாவரத்தின் தண்டு தூண்டல் A மற்றும் B விற்கு விலகியும், ஆனால் தூண்டல் Cயினை நோக்கி வளைகிறது. புவி சார்ந்த தூண்டல் காரணமாக B யானது வேர்களைத் தூண்டுகிறது. இவை அனைத்தையும் மனதில் வைத்து பின்வரும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும்.
  அ) A என்பது எந்த வகை தூண்டலாக இருக்கும்?
  ஆ) B-ல் காணப்படும் தூண்டலைப் பெயரிடுக.
  இ) C என்பது எந்த வகையானத் தூண்டலாக இருக்கும்? 

 19. கற்பனை செய்து பாருங்கள். மாணவன் A ஒளிச்சேர்க்கைக்கு தேவையான சில முக்கிய காரணிகளை படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில், அத்தாவரத்தின் ஒரு இலையினை கருப்பு காகிதம் கொண்டு நடுப்பகுதியை மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்பு காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.
  அ) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது?
  ஆ) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது?
  இ) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்?
  ஈ) ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்ன?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - தாவர உலகம் - தாவர செயலியல் Book Back Questions ( 9th Science - Living World Of Plants - Plant Physiology Book Back Questions )

Write your Comment