Full Portion நான்கு மதிப்பெண்கள் வினாத்தாள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    15 x 4 = 60
  1. ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை யளி.
    ஹோமினிட் மற்றும் ஹோமினின்ஸ்     
    அ) ஹோமினிட் குறித்து என்போர் யாவர்?
    ஆ) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?
    இ) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?
    ஈ) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு.

  2. மனித முன்னோர்களின் தொடக்க காலக் கற்கருவிகளின் தொகுப்பு
    அ) அச்சூலியக் கருவிகள் கர்நாடகத்திலும் மத்தியப்பிரதேசத்திலும் எங்கு
    கண்டெடுக்கப்பட்டுள்ளன?
    ஆ) கல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
    இ) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?
    ஈ) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றைக் கூறுக.

  3. தொடக்க கால நாகரிகம்
    அ) நாகரிகம் என்றால் என்ன ?
    ஆ) தொடக்க கால நாகரிகங்களின் பெயர்களை எழுதுக.
    இ) பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தவை எவை?
    ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது என்ன நடந்தது?

  4. எகிப்திய நாகரிகத்தின் பண்புகள்
    அ) பிரமிடுகளை யார் கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்?
    ஆ) மம்மி உருவாக்க முறையைக் கூறு.
    இ) பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கைகளைப் பற்றிக் கூறு.
    ஈ) பெரிய ஸ்பிங்ஸின் முக்கியத்துவத்தைக் கூறு.

  5. நடு கற்கள்
    அ) மேய்ச்சல் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பொதுவான நடை முறை என்ன?
    ஆ) பகைவர்களின் கால்நடைச் செல்வத்தைக் கவர்ந்தவர்கள் யாவர்?
    இ) இறந்த வீரர்களை மக்கள் எவ்வாறு நினைவு கூர்ந்தனர்?
    ஈ) நடுகற்களை நிறுவுவதற்கான வழி முறைகளை விளக்கும் தமிழ் நூல் எது?

  6. தமிழ் அல்லாத சான்றுகள் (வெளிநாட்டவர் குறிப்புகள் )
    அ) தமிழ் அல்லாத சான்றுகள் மூலம் நாம் அறிந்துக கொள்வது என்ன?
    ஆ) பாண்டிய நாட் டிலிருந்து முத்தும் சங்கும் வந்ததைக் கூறும் மௌரியர் காலச் செவ்வியல் நூல் யாது?
    இ) காலவரிசையான வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன?
    ஈ) இந்தியாவுக்கும்ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக் கூறியவர் யார் ?

  7. இந்தியத் தொழில்துறைகள் மற்றும் சங்க காலக் கைவினைகள்
    அ) நகர மயமாக்கத்தின் முக்கியமான கூறுகளைக் கூறுக.
    ஆ) மட்கலம் செய்பவருக்கான இன்னொரு தமிழ் பெயர் என்ன?
    இ) பானை செய்தலின் வெவ்வேறு வகைகள் யாவை ?
    ஈ) விவசாயத்திலும் போரிலும் இரும்பின் பயன்பாடுகள் என்ன?

  8. ஜொராஸ்ட்ரியனிசம்
    அ) இதைத் தோற்றுவித்தவர் யார்?
    ஆ) அவர் ‘ஒளியின் கடவுள்’ என யாரைப் பிரகடனம் செய்தா ர்?
    இ) ஜொராஸ்ட்ரியர் எதனைப் போதித்தார்?
    ஈ) வழிபாட்டின் உயர்ந்த வடிவம் எது?

  9. கௌதம புத்தர்
    அ) புத்தரின் இயற்பெயர் என்ன?
    ஆ) புத்தர் பிறந்த ஊர் என்ன?
    இ) அவருக்கு எங்கே ஞானோதயம் ஏற்பட்டது?
    ஈ) புத்தர் முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்?

  10. டவுன்ஷெண்ன்ட் சட்டம்
    அ) இச்சட்டத்தை அறிமுகப்பப்படுத்தியவர் யார்?
    ஆ) எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது?
    இ) குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன் எதிர்த்தனர்?
    ஈ) பாஸ்டன் வணிகர்கர்கள் ஆங்கிலேய பொருட்களை ஏன் எதிர்த்தனர்?

  11. பிரான்ஸின் சமூக நிலைலை
    அ) பிரான்ஸில் திருச்சபை வசூலித்த வரியின் பெயர் என்ன?
    ஆ) டான்டன் என்பவர் யார்?
    இ) பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸின் கலைக்களஞ்சியச் சிந்தனையாளர்கள் யாவர்?
    ஈ) பொதுச் சாலைகளின் கட்டுமானத்திற்கான இலவச உழைப்பை வழங்கியவர் யார்?

  12. தொழிலாளர் இயக்கம்
    அ) தொழிலாளர் அமைப்புகள் உருவாவதைத் தடை செய்த சட்டம் எது?
    ஆ) சொத்துக்கள் உடைய மத்திய தரவர்க்கத்திற்கு வாக்குரிமை வழங்கிய மசோதாவின் பெயர் என்ன?
    இ) தொழிலாளர் இணைவதைத் தடை செய்யும் சட்டம் எந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது?
    ஈ) பாசனவாதிகளின் கோரிக்கைகள் யாவை?

  13. போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம்
    அ) இங்கிலாந்தில் முதன்முதலாகத் திறக்கபறக்கப்பட்ட இருப்புப்பாதை எது?
    ஆ) உற்பத்திப் பண்டங்கள் எவ்வாறு சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டன?
    இ) நீராவி இயந்திர ரயிலைக் கண்டுபிடித்தத்தவர் யார்
    ஈ) நியூயார்க்கிலிருந்து ஆல்பனி வரைரை சென்ற நீராவிப் படகின் பெயரினை எழுது.

  14. இந்தியாவில் காலனி ஆதிக்கம்
    அ) கிழக்கிந்தியக் கம்பெனி எப்போபோது நிலவரி வசூலிக்கும் உரிமையையைப் பெற்றது?
    ஆ) ஆங்கிலேயர் எப்போப்போது கூர்களை வென்றனர்?
    இ) இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைமுறை எப்பொழுது ஒழிக்கப்பட்டது?
    ஈ) கீழை உலகின் லங்காஷயர் என்னும் பெயரைப் பெற்றிருந்த நாடு எது?

  15. தென்னாப்பிரிக்கா
    அ) தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேலேயருக்குச் சொந்தமான  நாடுகள் எவை?
    ஆ) டச்சுக்கா்காரர் கைவசமிருந்த பகுதிகள் எவை?
    இ) கேப்காலனியின் பிரதம அமைச்சர் யார்?
    ஈ) போயர் போர்கள் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றன?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - Full Portion நான்கு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 9th Social Science - Full Portion Four Marks Question Paper )

Write your Comment