" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  14 x 1 = 14
 1. கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
  காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.

  (a)

  கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

  (b)

  கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

  (c)

  கூற்று சரி; காரணம் தவறு

  (d)

  கூற்றும் காரணமும் தவறானவை

 2. கூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
  காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

  (a)

  கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

  (b)

  கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி; காரணம் தவறு

  (d)

  கூற்றும் காரணமும் தவறானவை

 3. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

  (a)

  கரிகாலன்

  (b)

  முதலாம் இராஜராஜன்

  (c)

  குலோத்துங்கன்

  (d)

  முதலாம் இராஜேந்திரன்

 4. (i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள். 
  (ii) மெகஸ்தனிஸ் எழுதிய 'இண்டிகா' என்னும் வரலாற்றுக் குறிப்பு மெளரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமுகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது. 
  (iii) ஒரே பேரரசைக்  கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மெளரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.
  (iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார். 
   

  (a)

  (i)  சரி 

  (b)

  (ii) சரி 

  (c)

  (i) மற்றும் (ii) சரி 

  (d)

  (iii) மற்றும் (iv) சரி 

 5. புவித்தட்டுகளின் நகர்வு _____________ ஆற்றலை வெளிப்படுத்துகிறது

  (a)

  நீர் ஆற்றல்

  (b)

  வெப்ப ஆற்றல்

  (c)

   அலையாற்றல்

  (d)

  ஓத ஆற்றல்

 6. வாக்கியம் I: ஆறுகள் சமன்பன்படுத்துதலின் முக்கிய காரணியாகும்
  வாக்கியம் II: ஆறுகள் ஓடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கு

  (a)

  வாக்கியம் I தவறு II சரி

  (b)

  வாக்கியம் I மற்றும் II தவறு

  (c)

  வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு

  (d)

  வாக்கியம் I மற்றும் II சரி 

 7. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது

  (a)

  சமூகச் சமத்துவம்

  (b)

  பொருளாதார சமத்துவம்

  (c)

  அரசியல் சமத்துவம்

  (d)

  சட்ட சமத்துவம்

 8. அனல் மின் நிலையம் அதிக அளவிளான________ வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது

  (a)

  ஆக்சிஜன்

  (b)

  நைட்ரஜன்

  (c)

  கார்பன்

  (d)

  கார்பன் டை ஆக்சைடு

 9. பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?

  (a)

  முதன்மைத் துறை

  (b)

  இரண்டாம் துறை

  (c)

  சார்புத் துறை

  (d)

  பொதுத் துறை

 10. _____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.

  (a)

  டய்ம்யாஸ்

  (b)

  சோகன்

  (c)

  பியுஜிவாரா

  (d)

  தொகுகவா

 11. ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக்  குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.

  (a)

  நாகப்பட்டினம்

  (b)

  அஜந்தா

  (c)

  கோழிக்கோடு

  (d)

  ஜஹோல் 

 12. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?

  (a)

  வளைகுடா நீரோட்டம்-பசிபிக் பெருங்கடல் 

  (b)

  லேப்ரடார் கடல் நீரோட்டம்-வட அட்லாண்டிக் பெருங்கடல்

  (c)

  கேனரி கடல் நீரோட்டம்-மத்திய தரைக்கடல்

  (d)

  மொசாம்பிக் கடல்நிரோட்டம்-இந்தியப்பெருங்கடல்

 13. ________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை்கையின்படி அமெரிக்க சுதந்திரப் போர் முடிவுக்கு வந்தது.

  (a)

  1776

  (b)

  1779

  (c)

  1781

  (d)

  1783

 14. சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

  (a)

  எப்.டி. ரூஸ்வெல்ட்

  (b)

  ஆண்ட்ரூ ஜேக்சன்

  (c)

  வின்ஸ்டன் சர்ச்சில்

  (d)

  உட்ரோ வில்சன்

 15. பகுதி - II

  எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  10 x 2 = 20
 16. சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?

 17. எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக

 18. சுண்ணாம்பு பாறைப் பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?

 19. வெப்பத்தை அளக்கும் அளவைகள் யாவை?

 20. சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?

 21. உயிர்கோளம் என்றால் என்ன?

 22. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப் படுத்துகிறது. நியாயப்படுத்துக.

 23. பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?

 24. குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்

 25. வான்வழி புகைப்படங்கள் மற்றும்  செயற்கைக்கோள் பதிமங்கள் 

 26. ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.

 27. கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை? 

 28. விபத்தைத் தடுக்கும் வழிகள் யாவை?

 29. தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.

 30. பகுதி - III

  ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

  10 x 5 = 50
 31. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு

 32. சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?

 33. சூறாவளிகள் எவ்வாவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி

 34. இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?

 35. நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகளைப் பற்றி விவரி.

 36. கி.பி.(பொ.ஆ.) 1526 முதல் 1707 வரையிலான அரசியல் மாற்றங்களை விவாதி.

 37. மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின்  வருகையைப் பறை சாற்றின - விவாதி.

 38. காஸ்பியன் கடல் நிலத்தால் சூழப்பட்டிருந்த போதிலும் அதன் உவர்ப்பியத்தின் அளவு 14%-17% வரை உள்ளது. ஏன் அவ்வாறு உள்ளது?

 39. அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?

 40. ‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.

 41. அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.

 42. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.

 43. உங்களை நிலவரைபடவியலாளராக (cartographer) நினைத்துக் கொண்டு உங்கள் பகுதியின் வரைபடத்தை வரைக.

 44. சாலை விபத்துக்கான பல்வேறு காரணிகள் யாவை?

 45. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  2 x 8 = 16
  1. மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?

  2. ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

  1. சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?

  2. பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 9th Social Science Half Yearly Model Question Paper )

Write your Comment