1 மதிப்பெண் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 64
  1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

    (b)

    மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

    (c)

    கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

    (d)

    மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

  2. சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?

    (a)

    கிலோ  மீட்டர்      

    (b)

    மீட்டர்

    (c)

    சென்டி மீட்டர்     

    (d)

    மில்லி மீட்டர்

  3. மைக்ரோ என்ற முன்னொட்டு எந்த காரணியை குறிக்கிறது?

    (a)

    10-6

    (b)

    10-3

    (c)

    10-9

  4. மிகச் சிறிய அளவுள்ள பொருட்களின் நீளம் மற்றும் தடிமனை அளவிட உதவும் கருவி ________ .

    (a)

    மீட்டர் அளவுகோல்

    (b)

    திருகு அளவுகோல் 

    (c)

    வெர்னியர் அளவி

  5. முடுக்கத்தின் அலகு

    (a)

    மீ / விநாடி

    (b)

    மீ / விநாடி2

    (c)

    மீ விநாடி

    (d)

    மீ விநாடி2

  6. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை

    (a)

    மையநோக்கு விசை

    (b)

    மையவிலக்கு விசை

    (c)

    புவிஈர்ப்பு விசை

    (d)

    நிலை மின்னியல் விசை

  7. 100 மிட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் முடிக்கும் புள்ளியை அடைய 10 விநாடி ஆனது. அவருடைய சராசரி வேகம் ____ மீ /  விநாடி

    (a)

    5

    (b)

    10

    (c)

    20

    (d)

    40

  8. ஸ்கேலார் அளவுகளுக்கு _____ மட்டும் உண்டு. 

    (a)

    திசை மட்டும் 

    (b)

    எண் மதிப்பு  மட்டும் 

    (c)

    எண் மதிப்பும் திசையும் 

  9. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______ 

    (a)

    குழியாடி

    (b)

    குவியாடி

    (c)

    சமதளஆடி

  10. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது, அது,

    (a)

    எதிரொளிக்கப்படுகி்றது

    (b)

    விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது

    (c)

    விலகல் மட்டும் அடைகிறது

  11. குவியாடிகள் எப்போதும்______பிம்பத்தையே உருவாக்குகின்றன.

    (a)

    மெய்

    (b)

    மாய

    (c)

    தலைகீழ்

  12. குழி ஆடியில் ஈரிலாத் தொலைவில் பொருள் வைக்கப்படும் போது பிம்பம் எந்த இடத்தில் கிடைக்கும்?

    (a)

    முதன்மை குவியத்தில்

    (b)

    ஈறிலியல்

    (c)

    ஆடிக்கு பின்னால்

  13. பின்னக் காய்ச்சி வடித்தலில் பயன்படும் தத்துவத்தில் ----------------------- உள்ள வேறுபாடு

    (a)

    கரைதிறன்

    (b)

    உருகுநிலை

    (c)

    கொதிநிலை

    (d)

    பரப்புக்கவர்ச்சி

  14. வடிகட்டுதல் என்பது ----------- கலவையைப் பிரித்தெடுக்கப் பயனுள்ள முறையாகும்

    (a)

    திண்மம் – திண்மம்

    (b)

    திண்மம் – திரவம்

    (c)

    திரவம் –திரவம் 

    (d)

    திரவம் – வாயு

  15. சோடியத்தின் கொதிநிலை மதிப்பு _________.

    (a)

    290C

    (b)

    890C

    (c)

    2900C

  16. நீர் மற்றும் உப்பு ஒரு ________ கலவை.

    (a)

    ஒருபடித்தான

    (b)

    பலபடித்தான

    (c)

    சேர்மம்

  17. நீயூக்ளியான் குறிப்பது

    (a)

    புரோட்டான் + எலக்ட்ரான்

    (b)

    நியூட்ரான் மட்டும்

    (c)

    எலக்ட்ரான் + நியூட்ரான்

    (d)

    புரோட்டான் + நியூட்ரான்

  18. \(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    80, 80, 35

    (b)

    35, 55,80

    (c)

    35, 35, 80

    (d)

    35, 45, 35

  19. ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.

    (a)

    ஐசோடோன்

    (b)

    ஐசோடோப்பு

    (c)

    ஐசோபார்

  20. கால்சியம் மற்றும் ஆர்கான் _________.

    (a)

    ஐசோடோப்பு

    (b)

    ஐசோபார்

    (c)

    ஐசோடோன்

  21. இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?

    (a)

    வேதிச் சார்பசைவு

    (b)

    நடுக்கமுறு வளைதல்

    (c)

    ஒளிச் சார்பசைவு

    (d)

    புவிஈர்ப்பு சார்பசைவு

  22. தாவரத்தின் வேர் ____________ ஆகும்
    I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
    II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
    III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
    IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு

    (a)

    I மற்றும் II

    (b)

    II மற்றும் III

    (c)

    III மற்றும் IV

    (d)

    I மற்றும் IV

  23. வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவது

    (a)

    என்டமீபா

    (b)

    யூக்ளினா

    (c)

    பிளாஸ்மோடியம்

    (d)

    பாரமீசியம்

  24. பின்வருவனவற்றில் இரு பக்கச் சமச்சீருடைய லார்வா ஆரச்சமச்சீருடைய முதிர் உயிரியாக மாறுவது எது ?

    (a)

    பைபின்னேரியா 

    (b)

    ட்ரோகோஃபோர்   

    (c)

    தலைபிரட்டை

    (d)

    பாலிப்

  25. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை

    (a)

    அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல் 

    (b)

    கதிர் வீச்சுமுறை 

    (c)

    உப்பினைச் சேர்த்தல் 

    (d)

    கலன்களில் அடைத்தல் 

  26. மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 

    (a)

    1964

    (b)

    1954

    (c)

    1950

    (d)

    1963

  27. தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?

    (a)

    குழலிப்பெருக்கி

    (b)

    தொலைக்காட்சி 

    (c)

    கணினி

    (d)

    வானொலி

  28. 1. அபாகஸ் கணினியின் முதல் படிநிலை
    2.இராணுவப்  பயன்பாட்டிற்காக  ENIAC பயன்படுத்தப்பட்டது

    (a)

    இரண்டும் சரி

    (b)

    கூற்று 1 தவறு, 2 சரி

    (c)

    கூற்று 1சரி, 2 தவறு

    (d)

    இரண்டும் தவறு

  29. கலோரி என்பது எதனுடைய அலகு?

    (a)

    வெப்பம் 

    (b)

    வேலை

    (c)

    வெப்பநிலை

    (d)

    உணவு

  30. ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2:1. இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்?

    (a)

    இரண்டும் 

    (b)

    கம்பி-2

    (c)

    கம்பி-1

    (d)

    எதுவும் இல்லை 

  31. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ____________ என அழைக்கப்படும்.

    (a)

    ஜூல் வெப்பமேறல்

    (b)

    கூலூம் வெப்பமேறல்

    (c)

    மின்னழுத்த வெப்பமேறல்

    (d)

    ஆம்பியர் வெப்பமேறல் 

  32. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?

    (a)

    வெப்ப விளைவு

    (b)

    வேதி விளைவு

    (c)

    பாய்வு விளைவு

    (d)

    காந்த விளைவு

  33. கீழ்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது.

    (a)

    AC இல் மட்டும்

    (b)

    DC இல் மட்டும்

    (c)

    AC மற்றும் DC

    (d)

    AC யை விட DC இல் அதிகமாக

  34. காந்தப் பாய அடர்த்தியின் அலகு

    (a)

    வெபர்

    (b)

    வெபர் /மீட்டர்

    (c)

    வெபர் / மீட்டர்2

    (d)

    வெபர் மீட்டர்2

  35. நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ___________ இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது. 

    (a)

    அணு எண்

    (b)

    அணு நிறை

    (c)

    ஒத்த தன்மை

    (d)

    முரண்பாடு

  36. நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் ___________ தொகுதி __________ தொடர்களாக அடுக்கப்பட்டுள்ளன.

    (a)

    7, 18

    (b)

    18, 7

    (c)

    17, 8

    (d)

    8, 17

  37. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை  

    (a)

    2

    (b)

    4

    (c)

    3

    (d)

    5

  38. அயனிச் சேர்மங்களின் பொதுவான பண்புகள் 

    (a)

    இவை அறை வெப்பநிலையில் வாயுக்கள்

    (b)

    இவை கடினமான மற்றும் நொறுங்கும் தன்மை கொண்டவை

    (c)

    இவை மூலக்கூறு வினைகளுக்குட்படுகிறது.

    (d)

    இவற்றின் உருகுநிலை குறைவு

  39. ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் ______

    (a)

    ஆக்ஸாலிக் அமிலம்

    (b)

    அஸ்கார்பிக் அமிலம்

  40. உலோகக் கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும் அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து ______ ஐ வெளியேற்றுகின்றன.

    (a)

    NO2

    (b)

    SO2

    (c)

    CO2

  41. நார்கள் கொண்டுள்ளது

    (a)

    பாரன்கைமா

    (b)

    ஸ்கிளிரன்கைமா

    (c)

    கோளன்கைமா

    (d)

    எதும் இல்லை 

  42. வரியில்லா தசை எதில் கண்டறியப்பட்டது?

    (a)

    இரத்த நாளங்கள்

    (b)

    இரைப்பை பாதை

    (c)

    சிறுநீர்ப்பை

    (d)

    இவை அனைத்திற்கும்

  43. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை _______ ஆகும்.

    (a)

    கார்போஹைட்ரேட்டுகள்

    (b)

    புரதங்கள்

    (c)

    கொழுப்பு

    (d)

    சுக்ரோஸ்

  44. கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?

    (a)

    யூரியா

    (b)

    புரதம்

    (c)

    நீர்

    (d)

    உப்பு

  45. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

    (a)

    சுட்டி

    (b)

    விசைப்பலகை

    (c)

    ஒலிபெருக்கி

    (d)

    விரலி

  46. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி

    (a)

    ஈதர்நெட்

    (b)

    விஜிஏ

    (c)

    எச்டிஎம்ஐ

    (d)

    யூஎஸ்பி 

  47. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு ____.

    (a)

    குறையும் 

    (b)

    அதிகரிக்கும்

    (c)

    அதே அளவில் இருக்கும்

    (d)

    குறையும் அல்லது அதிகரிக்கும்

  48. நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்பபோது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதனை கீழுள்ள வரைபடம் விளக்குகிறது. இதற்கான காரணம் என்ன?

    (a)

    அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது

    (b)

    அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது

    (c)

    ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது

    (d)

    மேலே கூறிய யாவும்.

  49. நான்கு வெவ்வேறு ஊடகத்தில் ஒலியின் வேகம் (மீ/வி) கொடுக்கப்பட்டுள்ளது, இவற்றுள், கடலுக்கடியில் வெகு தொலைவில் உள்ள இரு திமிங்கலங்கள் செய்யும் சமிஞ்சைகள் வேகமாக செ ல்வதற்கு ஏற்ற வேகம் எது?

    (a)

    5170

    (b)

    1280

    (c)

    340

    (d)

    1530

  50. P, Q, R, S என்ற நான்கு வெவ்வேறு ஊடகங்களில் ஒலியின் திசைவேகம் (கிமீ/ மணி) 1800, 0, 900 மற்றும் 1200 எனில் இவற்றுள் எது திரவ ஊடகமாக இருக்க வாய்ப்பு உள்ளது?

    (a)

    P

    (b)

    Q

    (c)

    R

    (d)

    S

  51. சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார் ?

    (a)

    டைக்கோ பிராஹே

    (b)

    ஆர்க்கிமிடிஸ்

    (c)

    நிகோலஸ் கோபர் நிக்கஸ் 

    (d)

    டாலமி

  52. A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தைவிட எத்தனை மடங்கு அதிகம்?

    (a)

    4

    (b)

    5

    (c)

    2

    (d)

    3

  53. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்

    (a)

    புறவேற்றுமை வடிவம் மாற்றியம்

    (b)

    நான்கு இணைதிறன்

    (c)

     சங்கிலி தொடராக்கம்

    (d)

    இவை அனைத்தும்

  54. நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?

    (a)

    பாலிஸ்டைரீன்

    (b)

    பி.வி.சி

    (c)

    பாலிபுரோப்பலீன்

    (d)

    எல்.டி.பி.இ

  55. பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி _______ லிருந்து பெறப்படுகிறது.

    (a)

    தாவரங்கள்

    (b)

    நுண்ணுயிரிகள்

    (c)

    விலங்குகள்

    (d)

    சூரிய ஒளி

  56. ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ________ நிகழும்.

    (a)

    ஆக்ஸிஜனேற்றம்

    (b)

    ஒடுக்கம்

    (c)

    நடுநிலையாக்கல்

    (d)

    சங்கிலி இணைப்பு

  57. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் _____என அழைக்கப்படுகின்றன.

    (a)

    உயிரியல் காரணங்கள்

    (b)

    உயிரற்ற காரணிகள்

    (c)

    உயிர்க்காரணிகள்

    (d)

    இயற்காரணிகள்

  58. தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக் டீரியாக்கள் நைட்ரஜன்  சுழற்சியில் _________ க்கு காரணமாக உள்ளன .

    (a)

    அமோனியாவாதல்

    (b)

    நிலைப்படுத்துதல்

    (c)

    நைட்ரேட்டாதல்

    (d)

    நைட்ரேட் வெளியேற்றம்

  59. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

    (a)

    ஜெர்சி

    (b)

    ஹோல்ஸ்டீன் – பிரிஸன்

    (c)

    ஷகிவால்

    (d)

    ப்ரெளன் சுவிஸ்

  60. தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?

    (a)

    கருவுறாத முட்டை

    (b)

    கருவுற்ற முட்டை

    (c)

    பார்த்தினோஜெனிஸிஸ்

    (d)

    ஆ மற்றும் இ

  61. கொசுவினால் பரவும் வைரஸ் நோய்

    (a)

    மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல்

    (b)

    டெங்கு மற்றும் சிக்கன்குனியா

    (c)

    யானைக்கால் நோய் மற்றும் டைஃபஸ்

    (d)

    காலா அசார் மற்றும் தொண்டை அழற்சி

  62. மூக்கின் வழியாக உடலினை அடையும்  நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________ தாக்கும்.

    (a)

    குடலினை

    (b)

    நுரையீரலினை

    (c)

    கல்லீரலினை 

    (d)

    நிணநீர் முனைகளை

  63. கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

    (a)

    இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

    (c)

    இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

    (d)

    இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

  64. ________ என்பது ஒரு இயங்குதளமாகும்.

    (a)

    ANDROID

    (b)

    Chrome

    (c)

    Internet

    (d)

    Pendrive

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் 1 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 1 Mark Important Questions )

Write your Comment