2 மதிப்பெண் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 74
  1. SI அலகு-வரையறு.

  2. கணக்கிடுக: 300 கெல்வின் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக

  3. வானியல் அலகு என்றால் என்ன?

  4. தடையின்றி தானே கீழே விழும் பொருளுக்கான இயக்கச் சமன்பாடுகள் யாவை?

  5. i. மாய முக்கியக் குவியம்
    ii. மெய் முக்கியக் குவியம்
    இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது /எவை?

  6. குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது பிம்பம் எங்கே உருவாகும்?

  7. விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?

  8. டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?

  9. கொதிநிலை என்றால் என்ன?

  10. கொதிக்கும் நீர் அல்லது நீராவி ஆகியவற்றில் எது அதிகமான காயத்தை உருவாக்குகிறது? ஏன்?

  11. K மற்றும் Cl ஆகியவற்றின் எலக்ட்ரான் பகிர்வை எழுதுக.

  12. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

  13. பின்வரும் படங்களைப்  பார்த்து அட்டவணையை நிரப்பவும் தூண்டல் ஏற்படும் பகுதியை நோக்கி வளைந்தால் (+) என்ற குறியீடும், தூண்டல் ஏற்படும் பகுதியை விட்டு விலகினால் (-) என்ற குறியீடும் கொடுக்கவும்.

    தூண்டல்  ஒளி  புவிஈர்ப்பு 
    தண்டு  + -
    வேர்  ? +

  14. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
    6CO2 +______  __________ + 6O2 \(\uparrow\)

  15. குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?

  16. குளச் சூழ்நிலையை மண்டலத்தை பார்வையிட்டு நீ ஊற்றுநோக்கிய விலங்குகளின் பெயர்களை சேகரிக்கவும்.வரும் கேள்விகளுக்கு விடையளி
    அ) நீ குளத்தில் கண்டவற்றில் நீர்வாழ் மற்றும் நிலவாழ் விலங்குகளின் பெயர்களை பட்டியலிடுக.
    ஆ) அவற்றின் அதற்குரிய வகைப்பாட்டு குழுக்களில் ஒழுங்குபடுத்தி உன் பதிலை சமர்ப்பிக்கவும் 

  17. வேறுபடுத்துக : குவாசியயோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்

  18. வேறுபடுத்துக : மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்

  19. 0oC ல் இருக்கும் 2கிகி பனிக்கட்டியை 20oC நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றலைக் கணக்கிடு.(நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் = 334000 J/Kg,நீரின் தன் வெப்ப ஏற்பத் திறன் = 4200J/Kg/K).

  20. 25 கிராம் நீரை 0oC இருந்து 100oC க்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் கணக்கிடுக.அதனை கலோரியாக மாற்றுக.(நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் = 4.18 j/goC)

  21. 12\(\Omega\),6\(\Omega\) மின்தடை மதிப்புள்ள இரு மின் தடையங்கள் முதலில் தொடரிணைப்பிலும் பின்னர் பக்க இணைப்பிலும் இணைக்கப்படுகின்றன. அவற்றின் மின்னோட்ட - மின்னழுத்த வேறுபாடு வரைபடம் எக்கோட்டினால் குறிக்கப்படும்?

  22. நெகிழிச்சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,(அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?(ஆ)இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?

  23. மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.

  24. AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் 

  25. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

  26. சைலம் மற்றும் ஃபுளோயமின் கூறுகளின் பெயரை எழுதுக. 

  27. மூலையில் உள்ள திசுவின் பெயர் எழுது.

  28. இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரைப்பைநீரைச் சுரக்கிறது.இதனுடைய பணி என்ன?

  29. ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.

  30. காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?

  31. சுழற்சித் திசைவேகம் வரையறு.

  32. கார்பன் எத்தனை இணைதிறன் எலக்ட்ரான்களை கொண்டுள்ளது?

  33. நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

  34. வேதிச்சிகிச்சை என்றால் என்ன?

  35. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

  36. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பாக்டீரியோ ஃபேஜ்கள்

  37. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய் எதிர்ப்பு தடுப்பூசி

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் 2 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 2 Mark Important Questions )

Write your Comment