4 மதிப்பெண் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 50
  1. நிலையான அலகு முறையின் தேவை என்ன?

  2. நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?

  3. சூர்யா 90 மீட்டர் நீளமுடைய குளத்தில் நீச்சல் அடிக்கிறார். அவர் ஒரு  நேர் கோட்டில் குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் நீந்திச் சென்று மீண்டும் அதே பக்கம் வர எடுத்துக்கொண்ட காலம் 60 விநாடி, கடந்த தொலைவு 180 மீட்டர். சூர்யாவின் சராசரி வேகம் மற்றும் சராசரி திசை வேகத்தைக் கண்டுபிடிக்க.

  4. சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது ? மற்றும் எது தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும்?

  5. அ) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழியாடியின் பொருளின் பிம்பம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என வரைந்து காட்டுக.
    ஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும் 

  6. உருப்பெருக்கம் என்றால் என்ன? அதன் சமன்பாட்டை எழுதுக. மெய் பிம்பம் மற்றும் மாய பிம்பம் ஆகியவற்றிற்கு அதன் குறியீடு என்ன?

  7. பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன ?

  8. மரத்தூள். இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?

  9. பெருக்கல் விகித விதியினை வரையறு

  10. ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.

  11. தொகுதி முதுகு நாணிகளின் (கார்டேட்டா) வழிமுறைப்படத்தினை தருக.

  12. பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?

  13. ஏதேனும் இரண்டு உணவுப்  பாதுகாப்பு முறைகளை விவரி

  14. சஞ்சனா ஒரு மளிகை கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டை குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேணடும் 

  15. தரவு-தகவல் வேறுபடுத்துக

  16. தரவு செயலாக்கம் என்றால் என்ன?

  17. தன் வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.

  18. உருகுதலின் உள்ளுறை வெப்பம் - வரையறு.

  19. ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

  20. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5V. 0.5 C மின்னூட்டத்தை அந்த மின்சுற்றை சுற்றி அனுப்பத் தேவைப்படும் ஆற்றல் எவ்வளவு?

  21. ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளைத் தருக. 

  22. ஒரு மின்மாற்றியின் முதன்மை சுருளில் 800 சுற்றுகள் உள்ளன, துனைச் சுருள் 8 சுருள்களை கொண்டுள்ளது. இது ஒரு 220V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?

  23. நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?

  24. மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?

  25. CCl4 நீரில் கரைவதில்லை. ஆனால் NaCl நீரில் கரைகிறது. காரணம் கூறு.

  26. கொடுக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில் சேர்மங்களின் வகையைக் கண்டறிக (அயனி /சக / ஈதல் சகப்பிணைப்பு)
    அ. முனைவற்ற கரைப்பான்களில் கரையும் 
    ஆ. வினையின் வேகம் மிக அதிகம் 
    இ. மின்சாரத்தைக் கடத்துவதில்லை 
    ஈ. அறை வெப்பநிலையில் திண்மங்கள் 

  27. விவசாயத்தில் மண்ணின் pH மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும் மண்ணின் தன்மையை எழுதவும்.

  28. பொருந்தாததை கண்டுபிடி 
    எலுமிச்சை சாறு,தக்காளிச் சாறு,வீட்டு உபயோக அம்மோனியா,காபி 

  29. பாலினப் பெருக்கத்தின்போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?

  30. ஏன் மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றும் மற்றும் மைட்டாஸிஸ் சமபிளத்தல் என்றும் அழைக்கப்படுகின்றன?

  31. முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.

  32. பெண் இனப்பொருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?

  33. கணினியின் கூறுகள் யாவை?

  34. உள்ளீ ட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.

  35. கடல் நீரில் நீந்துவது ஆற்று நீரில் நீந்துவதைவிட எளிதாக இருப்பது ஏன்?

  36. பாஸ்கல் விதியைக் கூறு.

  37. எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.

  38. சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?

  39. ‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.

  40. ககன்யான்-குறிப்பு வரைக.

  41. தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?

  42. கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?

  43. கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

  44. மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?

  45. AYUSH பற்றி நீ அறிவது என்ன?

  46. காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?

  47. ஒரு பகுதியிலிலுள்ள குழந்தைகளுள் ஒரு குழந்தை மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணங்களெல்லாம் இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?

  48. மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்தவகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.

  49. வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.

  50. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன?  இரண்டு உதாரணங்கள் தருக

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் 4 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 4 Mark Important Questions )

Write your Comment