5 மதிப்பெண் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 245
  1. ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிகோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்க.

  2. கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து அளவீடு தொடர்பான குறைந்தது பத்து வார்த்தைகளைக் கண்டுபிடிக்க

  3. ஒரு பந்தய மகிழுந்து 4 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது. புறப்பட்ட 10 விநாடியில் அது கடந்த தூரம் என்ன?

  4. கீழ்க்காணும் வரைபடம் ஒரு பொருளின் திசைவேகம்-காலம் வரைபடம் ஆகும். எந்த நேர இடைவெளியில் அது முடுக்கப்பட்டது? பகுதி ‘a’ வில் கொடுக்கப்பட்டுள்ள கால இடைவெளியில் அதன் முடுக்கம் என்ன? அதே கால இடைவெளியில் அப்பொருள் கடந்த தூரம் எவ்வளவு?

  5. காற்றிலிருந்து 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடிப் பாளத்திற்கு ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் வேகம் என்ன? (வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 \(\times\) 108 மீ/வி)

  6. நீரில் ஒளியின் வேகம் 2.25 \(\times\)108மீ/வி வெற்றிடத்தில் ஒளியின் வேவேகம் 3 \(\times\)10மீ/வி எனில், நீரின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக

  7. தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.

  8. டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரைபடத்துடன் விளக்குக.

  9. போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.

  10. 20cm3 பருமன் அளவுள்ள மீத்தேன் முற்றிலும் எரிவதற்கு தேவைப்படும் ஆக்சிஜனின் பருமனளவை கணக்கிடுக.

  11. தாவரத்தில் பல்வேறு வகையான சார்பசைவிற்கான சோதனையை நிகழ்த்தும் போது, X என்று குறிக்கப்பட்டத் தாவரத்தின் வேர் வளைந்து A மற்றும் B என்ற இரண்டு தூண்டல்களை நோக்கி வளர்கிறது. ஆனால் C என்ற மூன்றாம் தூண்டலை விட்டு விலகி வளைந்து காணப்படுகிறது. எனினும் X தாவரத்தின் தண்டு தூண்டல் A மற்றும் B விற்கு விலகியும், ஆனால் தூண்டல் Cயினை நோக்கி வளைகிறது. புவி சார்ந்த தூண்டல் காரணமாக B யானது வேர்களைத் தூண்டுகிறது. இவை அனைத்தையும் மனதில் வைத்து பின்வரும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும்.
    அ) A என்பது எந்த வகை தூண்டலாக இருக்கும்?
    ஆ) B-ல் காணப்படும் தூண்டலைப் பெயரிடுக.
    இ) C என்பது எந்த வகையானத் தூண்டலாக இருக்கும்? 

  12. உயிரினம் Aயினால் ஓர் இடம் விட்டு ஓரிடம் நகரமுடியாது. சுற்றுச்சூழலில் கிடைக்கும், C மற்றும் D யினைக் கொண்டு B என்ற எளிமையான உணவு உருவாக்குகிறது. இந்த உணவு G என்ற நிகழ்வினால் சூரிய ஒளியின் முன்னிலையில் F உறுப்புகளில் காணப்படும். E என்ற பச்சை நிறமுள்ளப் பொருளின் முன்னிலையில் உருவாக்கப்படுகின்றது. சில B எளிய உணவு சேமிப்பு நோக்கத்திற்காக கடினமான H-ஆக மாற்றப்படுகிறது, H அயோடின் கரைசல் உடன் சேர்த்தால் கருநீல நிறமாக மாறுகிறது.
    அ)  i) A உயிரினம் (ii) உணவு B மற்றும் உணவு H ஆகியன யாவை?
    ஆ) C மற்றும் D ஆகியன யாவை?
    இ) பெயரிடு: பச்சைநிறமுள்ள E மற்றும் உறுப்பு F
    ஈ) நிகழ்வு G ன் பெயர் என்ன?

  13. முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.

  14. தொகுதி கணுக்காலிகள் பற்றி எழுதுக.

  15. நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறை பாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.

  16. இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.

  17. தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?

  18. கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து

  19. நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக 

  20. நீரானது வெப்பத்தை அரிதாகக் கடத்தக் கூடியது என்பதை எவ்வாறு சோதனை மூலம் நிருபிக்கலாம்? சமைக்கும் போது நீரை எவ்வாறு எளிதாகச் சூடுபடுத்தலாம்? 

  21. 2\(\Omega \) மற்றும் 5\(\Omega \) மின் தடைகள் கொண்ட இரு மின் தடையங்கள் தொடரிணைப்பில் உள்ளவாறு மின்சுற்று ஒன்றை வரைக. அதனுடன் பக்க இணைப்பில் உள்ளவாறு ஒரு 3\(\Omega \) மின்தடை கொண்ட மின்தடையத்தை இணைக்கவும்.

  22. வீட்டு உபயோக மின் பொருள்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன? தொடரிணைப்பிலா? பக்க இணைப்பிலா? காரணங்கள் தருக.

  23. DC மோட்டாரின் தத்துவம் ,அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.

  24. ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.

  25. நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக 

  26. அயனிச் சேர்மங்களுக்கும் சகப்பிணைப்புச் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

  27. தவறானக கூற்றைக் கண்டறிந்து சரி செய்க.
    அ. சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே, ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களும் மின் சுமை கொண்ட (அயனிகள்) துகள்களைப் பெற்றுள்ளன. எனவே அவை நல்ல மின்கடத்திகள்
    ஆ. ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும் போது அயனிப் பிணைப்பு வலிமை குறைந்த பிணைப்பு ஆகும்.
    இ. அயனிப் பிணைப்பு எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது.
    ஈ. எலக்ட்ரான் இழப்பு ஆக்ஸிஜனேற்றம் என்றும், எலக்ட்ரான் ஏற்பு ஒடுக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
    உ. பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான்களை இணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம்.

  28. A,B,C,D மற்றும் E யில்  உள்ள கரைசல்களை பொது நிறங்காட்டியைக் கொண்டு சோதனை செய்ததில் அதன் PH மதிப்பு முறையே 4,1,11,7 மற்றும் 9 ஆகும்.மேற்கண்ட கரைசல்களில் எந்த கரைசல்,
    i.நடுநிலைத் தன்மை உடையது 
    ii.வலிமை மிகு காரத்தன்மை உடையது 
    iii.வலிமை மிகு அமிலத் தன்மை உடையது 
    iv.வலிமை குறைந்த அமிலத் தன்மை உடையது 
    v.வலிமை குறைந்த காரத் தன்மை உடையது.

  29. உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுக.

  30. கீழே கொடுக்கப்பட்ட படத்தில் பாகங்களைக் கண்டறியவும்.

    (a)a,b,c பாகம் குறிக்கவும் 
    (b)திசுவின் வேதிக் கூட்டுப் பொருட்கள் எவை?
    (c)பாகம் c-யின் செயல் என்ன?

  31. செல் A ஒரு மைட்டாசிஸ் பகுப்பை பெற்றுவிட்டது மற்றும் மற்றொரு செல் B அதனுடைய மியாஸிஸ் பகுப்பை பூர்த்தி செய்துள்ளது எனில் A மற்றும் B எத்தனை செல்களை உற்பத்தி செய்திருக்கும் 
    செல் A : செல் B:

  32. மனிதனின் உணவுப் பாதையை விவரி 

  33. சிறுநீரகத்தின் அமைப்பினையும்,சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.

  34. திரவமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை படத்துடன் விவரி.

  35. அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?

  36. ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.

  37. SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக

  38. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.

  39. பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவாதி.

  40. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

  41. யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?

  42. கைபேசியில் பயன்படுத்தும் மின்கலங்களை மறு ஊட்ட ம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.

  43. சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?

  44. வரைபடம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி. 

  45. வாழிடத்திற்கு ஏற்றாற்போல். வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?

  46. மண்ணில்லா நீர்ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?

  47. சிறு குறிப்பு வரைக .
    அ) பசுமை வீட்டின் முக்கியத்துவம்
    ஆ) உழவன் கைபேசி செயலி
    இ) முக்கிய மலரியல் மண்டலங்கள்
    ஈ) அஸோஸ்பை ரில்லம்

  48. புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?

  49. சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம் பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளைணுக்கள் குறைவுபடுகின்றன.
    அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
    ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
    இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத் தொடர்பு கொள்கிறது?
    ஈ. இவ்வாறான நோய் பரவலைத்தடுப்பதற்கான மூன்று முறைகளை பரிந்துரை செய்க.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் 5 மதிப்பெண் முக்கிய வினாக்கள்  ( 9th Standard Science 5 Mark Important Questions )

Write your Comment